Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Tuesday, July 5, 2016

தவளையின் சங்கீதம்

மன அமைதிக்காக தியானம் செய்கிறேன் என்றான் சீடன்.. அட கேப் வெண்டை... அமைதியின்மைதான் மனதின் இயல்பு..அதை ஒரு போதும் அமைதியாக்க முடியாது... மனமே இல்லாமல் ஆகும் நிலை என்பது வேறு.. நீ எந்த அளவுக்கு தியானம் செய்ய முயல்கிறாயோ அந்த அளவுக்கு மனம் மென்மேலும் செழித்து வளரும்.. அது இல்லாமல் போகாது என்றார் குரு.
சீடன் கேட்கவில்லை... தியானம் , மூச்சுப்பயிற்சி என தொடர்ந்தான்.
ஓர் அதிகாலை... இனிய காற்று, பறவைகள் சங்கீதம் என லயித்தபடி கண்மூடி அமர்ந்தவாறு தியானம் செய்வதாக நினைத்துக்கொண்டிருந்தவன் ஏதோ சப்தம் கேட்டு கண் விழித்தான்
குரு ஒரு செங்கலை தரையில் தேய்த்துக்கொண்டிருந்தார்
யோவ் குரு நாதா... என்ன செய்கிறீர் என் கத்தினான் சீடன்
செங்கலை தரையில் தேய்த்து கண்ணாடியாக்கப்போகிறேன் என்றார் குரு
உம்மை ஒரு கேப் வெண்டை என ரொம்ப நாள் சந்தேகப்பட்டேன்... அது உண்மையாகி விட்டது.. என்னதான் முயன்றாலும் செங்கல் செங்கலாகத்தான் இருக்கும்.. கண்ணாடி ஆகாது என்றான்
ரொம்ப நாள் கழித்து இப்பதான் அறிவுப்பூர்வமாக பேசுகிறாய்... எதுவும் தன் இயல்புப்படிதான் இருக்கும்... தியானம் செய்வதன் மூலம் மனம் இல்லாமல் போகாது என சொல்லி விட்டு செங்கலை பக்கத்தில் இருந்த குளத்தில் வீசினார்.
தியானம் செய்து செய்து மழுங்கிப்போய் இருந்த சீடன் முதல் முறையாக விழிப்புடன் அந்த சத்தத்தை கேட்டான்.. மனம் அங்கே அழிந்தது
----
பழங்கால குளம்
குதிக்கிறது தவளை
அந்த சப்தம்

Wednesday, February 11, 2015

சூப்பர் ஸ்டார் அஜித்... ஆன்மிக விழாவில் விவேக் பரபரப்பு பேச்சு


 சென்னை மீனம்பாக்கத்தில் நடந்த ஆன்மிக கண்காட்சியில் விவேக் கலந்து கொண்டார்.  மரம் நடு விழாவில் கலந்து கொண்ட அவர் , ஆன்மிகம் குறித்தும் இந்திய ஞான மரபு குறித்தும் சுவையாக பேசினார்.

அஜீத் பெயரை அவர் சொன்னபோதெல்லாம் அரங்கில் கைதட்டல் கேட்டது.... அதனால் மகிழ்ந்த அவர் அஜித்துக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கி பேசினார்...

சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது டாக்டர் பட்டம் போல ஆகி விட்டாலும் அவர் பேச்சு சுவையாகவே இருந்தது..

இரண்டு வருடங்களாக ஏன் நடிக்கவில்லை...என்னை அறிந்தல் படம் , குரு என்பதன் அர்த்தம் என விரிவாக பேசினார்..


Monday, December 30, 2013

சில முஸ்லீம்களின் கண்டிக்கத்தக்க செயல் - ஒரு விவாதம்



குட் மார்னிங் , குட் ஈவ்னிங் என்பதை GM , GE என எழுதுகிறார்கள்..ஓகே.. ஆனால் இஸ்லாமியர்கள் சிலர் இந்த பாணியில் , தம் முகமன்களை சுருக்கி எழுகிறார்களே... இஸ்லாம் அறிஞர்கள் இதை ஏற்கிறார்களா... சுருக்கி எழுதினாலும் படிப்பவர் , அதை முழுதாகப்படிப்பார்.. எனவே ஏற்கலாம் என்கிறார்களா.. அல்லது சுருக்க கூடாது என்கிறார்களா

sallallahu alayhi wasallam என்பதை SAW , Peace be upon him என்பதை PBUH என்றெல்லாம் எழுதுவது நியாயமா.




( மற்ற மதங்களுக்கான பிரத்தியேக முகமன்கள் இல்லை..அவர்களுக்கு இது பொருந்தாது என்பதால்தான் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மட்டும் இந்த கேள்வி )

**********************************************
ரஃபீக் அகமது 


ஒருவரை ஒருவர் சந்திக்கையில் முகமன் கூறுவது பற்றி இஸ்லாம் ஒரு சக சகோதரரை சந்திக்க/உரையாட நேர்ந்தால் "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ" என்று கூறுங்கள் என்று அறிவுறுத்துகிறது. இதற்கு "தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!" என்கிற அழகான பொருள் பொதிந்திருக்கும் வாழ்த்தைக் காணலாம்.

ஸலாம்' எனும் வார்த்தை 'ஸலெம' எனும் மூல வார்த்தையிலிருந்து வருகிறது. இதற்கு, தீய மற்றும் கேடானவற்றை விட்டு ஒருவர் தன்னை வேறுபடுத்திக் கொள்வது என்று பொருள் வரும். ஆக, நாம் ஒருவரை மற்றொருவர் வாழ்த்தும் போது, "உனக்கு எவ்வித தீங்குகளும் என்புறத்திலிருந்து வராது; உனக்கு எந்த கேடானதும் வரக்கூடாது; உனக்கு எந்த தீங்கும் ஏற்படக்கூடாது;" என்ற பிரார்த்தனையாக இது மாறுகிறது.




இதைவிட வருந்ததக்க விஷயம் என்னவென்றால்... முஸ்லிம்களில் சிலர் ஸலாத்தினை முறையாக சொல்ல, உச்சரிக்கவும் அறியாதவர்களாக உள்ளதுதான்.
சிலர் இதற்கான பதிலை 'ஸ்லாமலைகும்' /'ஸ்லாமகும்' / ஸ்லாம் என்று அவசரமாக ஏதெனும், ஒரே மூச்சில் முனகி முடித்துவிடுகின்றனர் .இன்னும் சிலர் சந்திக்கும் போது பதில் கூறுவதைப் பற்றி பெரிதாக கருதாமல் இருந்து விடுகின்றனர்... இன்னும் சிலர் அதற்கு கையால் சைகை காட்டி முடித்து விடுகின்றனர்.

மேலும் ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்லிக் கொள்பவர்களிலும் கூட தயக்கத்தையும், கஞ்சத்தனத்தை கடைபிடிப்பதையும் காணமுடிகிறது.அப்படி முகமனை சுருக்கி கூறுவது முற்றிலும் கண்டிக்கப்படவேண்டிய தவறான செயல்


Sunday, July 28, 2013

சொர்ணமால்யாவும் தேவதாசி முறையும் -- என் பார்வையில்

சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியின் நாட்டியத் துறை  ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. 

அதில் சொர்ண்மால்யா பேசினார். 

இவர்  தேவதாசிகள் குறித்தான ஆய்வை செய்து அதில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். அவர் பேசுகையில் அது கடவுளுக்கான அர்ப்பணிப்பு  தேவதாசிகள் அதை மனமுவந்து செய்தார்கள். நாட்டியத்தில் ஈடுபாடுள்ள பல சாதி பெண்களும் தாங்களாகவே முன்வந்து தேவதாசிகளானார்கள்  எல்லா சாதியிலிருந்தும் பெண்கள் வந்தனர்


 என்பது போன்று பேசினார்.

இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சில நண்பர்களுடன் பேசியபோது என் கருத்தையும் கேட்டார்கள். அப்போது சொன்னதை இங்கும் பகிர்கிறேன்.

தேவதாசி முறையை ஏற்கிறோமா இல்லையா என்பதை அந்த சொல்லுக்க்கு என்ன அர்த்தம் கொடுக்கிறோம் என்பதை வைத்தே முடிவு செய்ய முடியும்.

தேவதாசிகள் என்றால் சிறிய வயதில் இருந்தே பாலியல் தொழிலுக்கு தயார் செய்யப்படும் என்று வைத்து கொண்டால் இந்த முறையை யார் ஆதரித்து பேசினாலும் கண்டிக்கத்தக்கதே.

சிலரை இப்படி பாலியர் ரீதியாக கொடுமைப்படுத்தினார்கள் என்பது உண்மை.  பெரியார், முத்துலட்சுமி ரெட்டியார் போன்றோரின் கடும் உழைப்பால் இந்த முறை ஒழிக்கபட்டது என்பது வரலாறு.

ஆனால் பண்டைய தமிழகத்தில் இந்த நிலை இருந்ததா? பண்பாட்டில் சிறந்து விளங்கிய தமிழ் மண்ணில் இப்படி ஒரு நிலை இருந்ததா? உலகுக்கே வழிகாட்டும் ராஜராஜசோழன் ஆட்சிக்காலத்தில் இதை அனுமதித்து இருப்பாரா...

ஆராய்ந்து பார்த்தால் பண்டை தமிழகத்தில் தேவதாசி முறை என்பது பிறப்பின் அடிப்படையில் இல்லை 
அது பாலியல் சார்ந்த்தும் இல்லை என சிலர் கூறுகிறார்கள்.

 நான் கடவுள் படத்தில் ஆர்யா இறைத்தேடலில் தன் குடும்ப வாழ்வை துறப்பாரே..அது போல இறைதேடலில் குடும்ப வாழ்வை துறக்கும் பெண்கள் தேவ அடியார்கள் என அழைக்க்பட்டார்களாம். சிலர் முழுக்க முழுக்க துறவு வாழ்க்கையில் இருப்பார்கள்..சிலரோ கலை, ஆடல், பாடலில் தம்மை ஈடுபடுத்தி கொள்வார்கள். இவர்களில் சிலர் யாரையேனும் மணந்து கொள்வதும் உண்டு.

ஆனால் ஒரு போதும் பாலியல் தொழில் செய்ய வேண்டிய நிலை இருந்தது இல்லை. அரசனுக்கே ஆலோசனை சொல்லும் நிலையில் கூட இருந்து இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் , நாம் வழிபடும் சில கோயில்கள் இவர்கள் கொடுத்த பணத்தினால்தன் உருவானது.



ஆனால் தமிழர்கள் ஆட்சி அழிந்து, வேற்று கலாச்சார ஆட்சிகள் ஆங்கிலேயர் ஆட்சி போன்றவற்றால் அவர்களுக்கு செல்வாக்கு இல்லாமல் போகவே, சில உயர் சாதியினர் அவர்களை பாலியல் தொழிலில் தள்ளினார்கள். இன்னொரு கொடுமையாக , தேவரடியார் என தனியாக ஒரு சாதியை பிறப்பின் அடிப்படையில் உருவாக்கி , பாலியல் சுரண்டலை ஆரம்பித்தார்கள்.

இந்த நிலையில்தான் பெரியார் போன்றோரின் பணியால் இந்த இழி நிலை மாற்றப்பட்டது.

ஆகவே சொர்ணமால்யா கருத்தை ஏற்பதா இல்லையா என ஒரே வரியில் சொல்ல முடியாது.

பிறப்பின் அடிப்ப்படையிலான , பாலியல் சார்ந்த , பெரியாரால் எதிர்க்கப்பட்ட ஒரு முறையை தேவதாசி முறை என அழைத்த்தால் , அதை ஆதரித்து பேசுவது தவறு.

பண்டையை தமிழ் முறைப்படி அமைந்த , தமிழ் கலாச்சாரத்துக்கு உட்பட்ட, பாலியல் இல்லாத , பெண்ணுரிமையை மீறாத ஒரு முறையை தேவதாசி முறை என அவர் சொல்லி இருந்தால் அதை தவறு என சொல்ல முடியாது.


Wednesday, July 24, 2013

கவிதை எழுவதில் விஞ்சி நிற்கும் நாத்திகம். உதவுவதில் விஞ்சி நிற்கும் இஸ்லாம் - டைம்ஸ் வெளியிட்ட அதிரடி ஆய்வு

அதீத உணர்ச்சிவசப்படுதலை மட்டுமே தன் ஒரே பலமாக கருதும் ஓர் இனம் உலகில் உண்டு என்றால் அது நம் தமிழ் சமூகம்தான்.

நெட் மூலம் குற்றங்கள் என செய்தி வருகிறதா ? நெட்டை தடை செய் என ரெண்டு நாள் உணர்ச்சி வசப்பட்டு டீக்கடை விவாதங்கள் நடக்கும்.

எங்காவது ஜாதி சண்டை என செய்தியா , ஜாதி ஒழிந்தால்தான்யா நாடு உருப்படும் என தீர்வு சொல்லி விட்டு வழக்கமான வேலையை தொடர்வார்கள்.

இந்த உணர்ச்சிவசப்படுதலால் கிடைக்கும் மனரீதியான அனுகூலம் என்ன ?  நாம் எந்த விதத்திலும் மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது . என்றோ ஒரு புதிய உலகம் உருவாகபோகிறது..அப்போது எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கையில் வழக்கம்போல சிங்கம் பட பார்த்து சும்மா இருக்கலாம். இப்படி சும்மா இருக்கும் குற்ற உணர்ச்சியை மறைக்கத்தான் உணர்ச்சிவசப்படல்.

இதற்கெல்லாம் முக்கிய காரணம் பலருக்கு அன்றாட வாழ்வில் தொடர்பு இல்லை. பக்கத்து வீட்டுக்காரர் பெயர் கூட தெரியாத நகர வாழ்க்கை.

டிவி மூலமும் பேப்பர் மூலமும்தான் உலகம் அறிமுகம் ஆகிறது. இந்த அறிவைக்கொண்டு உலகை அணுகுவதால் , அந்த போலியான பொது அறிவு மேலும் மனதில் வலுப்பெறுகிறது.

 நல்ல வேளையாக எனக்கு இத்தகைய நகர வாழ்க்கையில் இள வயது அமையவில்லை. பக்கத்தில் இருந்த இஸ்லாமியர்கள் வீடுகளுக்கு சென்றுதான் விளையாடிக்கொண்டு இருப்பேன். அவர்கள் இஸ்லாமியர்கள் , நான் ஹிந்து என்பதெல்லாம் இப்போது யோசித்தால்தான் தெரிகிறது. அந்த வீட்டில் இருந்த இஸ்லாமிய தாய்மார்கள் , சகோதரிகள் எந்த வேறுபாடும் இல்லாமல் அன்பாக பழகுவார்கள். குறிப்பிட்ட நேரம் ஆனதும் சிலர் பாய் விரித்து தொழுகை நடத்துவது அந்த வயதில் ஆச்சர்யமாக இருக்கும். என்னவோ சாமி கும்பிடுகிறார்கள் என நினைத்து கொள்வேன்.

அவர்கள் என்ன செய்கிறார்கள் என விளக்கி அவர்கள் மத மாண்புகளை சொல்லித்தர முயன்றதே இல்லை.

அதே போல நான் படித்த கிறிஸ்தவ பள்ளியிலும் , அங்கிருந்த மதர், சிஸ்டர்கள் அவ்வளவு அன்பாக இருப்பார்கள். அவர்களும் தம் மதம் குறித்து என்னிடம் சொல்லியது இல்லை.

ஆக மதம் குறித்த பிரஞ்ஞையே எனக்கு சிறிய வயதில் இல்லை , மத ஈடுபாடுகொண்டோர் மத்தியில் வாழ்ந்த போதிலும்.

அதே போல நோன்பு கஞ்சி வாங்கி குடித்ததும் இனிய நினைவுகளாக உள்ளது. சிலர் வீட்டுக்கே வந்து தருவார்கள். ஆனால் எனக்கு அதில் கிக் இல்லை. வீட்டில் ஒரு பாத்திரம் எடுத்து கொண்டு , சின்ன பசங்களுடன் சேர்ந்து போய் வரிசையில் நின்று வாங்கி , வீட்டுக்கு கொண்டு வருவது பெருமையாக இருக்கும். செம சூடாக இருக்கும். நீராவி பட்டு பாத்திர மூடி வியர்ப்பது ஆச்சர்யமாக இருக்கும்.

அலுவலகங்களில் சிலர் கொண்டு வந்து தருவார்கள். ஆனால் அன்று பெற்ற உணர்வு  இனி ஒரு போதும் வராது.

இத்தகைய அனுபவங்கள் ஏதும் இல்லாமல் , ஃபேஸ்புக் மூலம் உலகை காணும் சிலர் மொக்கை கவிதைகள் சிலவற்றை வைத்து ம்தம் சார்ந்த தம் பார்வையை அமைத்து கொள்கின்றனர்.

ம்தம்தான் உலகின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என்பது போலவும் , மதம் இல்லாவிட்டால் எல்லா பிரச்சினையும் தீர்ந்து விடும் என்பது போலவும் ஓர் எண்ணத்தை இணையத்தை மட்டுமே  வாழும் அப்பாவிகள் மனதில் பதிக்கிறார்கள்.

கீழ்காணும் சில கவிதைகளை ( ?? !! ) பாருங்கள்.

 நான் ஓர் ஆத்திகன் தான்.
ஆனால்
ஏழையின் இறுதி யாத்திரைக்கு காசு இல்லாதபோது
மெக்கா யாத்திரை செல்லும் அளவுக்கு கொடூரமானவன் அல்ல

உணவு வேண்டும் என பிரார்த்தித்தான் ஒருவன்.
உன் தேவையை நீ சொல்லி அறிய வேண்டிய
கடவுள் தேவையேயில்லை என்றேன் நான்.

தேவாலய பராபமரிப்புக்கு காசு கொடுக்காமல்
ஏழைக்கிழவியின் வீட்டை கட்டி கொடுத்தேன்
அவள் சிரிப்பை விட கடவுள் ஒன்றும் உயர்ந்தவர் அல்லர்.

அழும் குழந்தையை தவிக்க விட்டு
பாலாபிஷேகத்தால் மகிழும் கடவுள்
கடவுள்தானா?




இந்த பாணி கவிதைகளை ( ?? !! ) படிக்கும் அப்பாவிகள் மனதில் இயல்பாகவே நினைப்பார்கள்.  ” மத நம்பிக்கை கொண்டவர்களைவிட நாத்திகவாதிகள்தான் உதவிகள் செய்வார்கள் , அள்ளி அள்ளி கொடுப்பார்கள் போல ”

ஆனால் உலகளவில் பிரபலமான ஊடகம் டைம்ஸ் மேற்கொண்ட ஆய்வு முற்றிலும் மாறுபட்ட சித்திரத்தை அளிக்கிறது.

பிரிட்டனில்  யார் அதிகம் அறக்கொடை அளிக்கிறார்கள் என்ற ஆய்வுக்கு கிடைத்த பதில் ஆச்சர்யம் அளித்தது.

நன்கொடை கொடுப்பவர்கள் பட்டியல் கீழ்கண்டவாறு அமைந்தது.. ஒவ்வொரு தனி மனிதனும் சராசரியாக அளித்த நன்கொடை 

இஸ்லாமியர் - 371 யூரோக்கள் 
யூதர்கள் - 270 யூரோக்கள் 
ப்ரோடஸ்டன்ஸ் கிருத்துவர்கள் - 202 யூரோக்கள் 
கத்தோலிக்க கிருத்துவர்கள் - 178 யூரோக்களுக்கு சற்று அதிகம்
மற்ற கிருத்துவர்கள் - 178 யூரோக்களுக்கு சற்று குறைவு 
நாத்திகர்கள் - 116 யூரோக்கள்

வாழ்க்க்கையில் நன்கொடையே கொடுக்காதவர்கள் பட்டியலும் எடுத்தார்கள். அதில் முதலிடம் பெறுவது நாத்திகர்களும் , யூதர்களும்தான். 

நாத்திகர்கள் கவிதை எழுதி ஊருக்கு உபதேசம் செய்வதுடன் நின்று விட, இஸ்லாம் ஏன் விஞ்சி நிற்கிறது என்றால் அதில் இருக்கும் கடுமையான சட்டங்கள் , வழிகாட்டுதல்கள்.

தன் வருமானத்தில் இத்தனை சதவிகிதம் தானம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையே உண்டு.

எல்லா மனிதர்களிடமும் இருக்கும் தனி நபர் ஒழுக்க கேடு இஸ்லாம் மதத்திலும் இருக்க கூடும். ஆனால் ஒட்டு மொத்தமாக பார்த்தால் , அந்த மத கோட்பாடுகளால் நன்மையே ஏற்படுகிறது என்கிறது ஆய்வு.


ஒரு சிலர் மதங்களை தவறாக பயன்படுத்தினாலும் ஒட்டு மொத்தமாக நன்மை செய்கிறது.

( பெரியார் போன்ற ) ஒரு சிலர் நாத்திகத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினாலும் , ஒட்டுமொத்தமாக அது திண்ணைபேச்சுக்கே பயன்படுகிறது என்கிறது ஆய்வு. 





Sunday, June 2, 2013

உழைப்பை, கருணையை போதித்த நபிகள் நாயகம்- அழகு தமிழில் அருமையான புத்தகம்


    இஸ்லாம் பற்றி அறிந்து கொள்ள பல நூல்கள் கிடைக்கின்றன. இணையத்திலும் தேவையான தகவல் தர பல நல்ல குழுமங்கள் செயல்பட்டு வருகின்றன.

குர் ஆன் வசனத்தை தினம் தோறும் ஒவ்வொன்றாக தரும் வலைத்தளங்கள் உள்ளன.

ஆனால் இவ்வளவு இருந்தும் என்னை போன்றவர்கள் நபிகள் நாயகத்தைப் பற்றி சரியாக தெரிந்து கொள்ளவில்லை என்பது வலம்புரி ஜானின் “ நாயகம் எங்கள் தாயகம் “ என்ற நூலைப்படிக்கையில் தெரிந்தது.

நபிகள் நாயகம் ஓர் இறைத்தூதர் என்பது போன்ற அடிப்படை விஷயங்கள் தெரியுமே தவிர அவர் இளமை பருவம் , இளமையில் சந்தித்த சோதனைகள். திருமணம் , அவரது தொழில் , போர்கள் , குர் ஆன் அருளப்பட்டது , அவர் குடும்பம், தியாகம் என எத்தனையோ பல விஷ்யங்களை இந்த நூலில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.

    அதீதமாக உணர்ச்சி வசப்படுவது நம் இந்திய பண்பு, ஒரு கிரிக்கெட் பிளேயர் சென்சுரி அடித்தால் அவரை கிரிக்கெட் கடவுளாக்குவோம். நடிகனுக்கு கோயில் கட்டுவோம்.

நபிகள் மட்டும் உறுதியான வழிகாட்டுதல் காட்டாமல் போய் இருந்தால் , கண்டிப்பாக அவரையும் நம் ஆட்கள் கடவுளாக்கி அவரது அடிப்படை கொள்கைகளுக்கே ஊறு விளைவித்து இருப்பார்கள். அப்படி நடக்காமல் பார்த்து கொண்டது அவரது சிறப்புகளில் ஒன்றாகும்.

காரணம் அவர் வாழ்க்கையை படிக்க படிக்க அவர் மீது ஓர் இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படுகிறது. இந்திய மனப்பான்மை கொண்ட ஒருவர் மனதில் இந்த ஈர்ப்பு அவர் மீது பக்தியாக மாறும் வாய்ப்பு 100% உண்டு,

இஸ்லாமை பொருத்தவரை அல்லாவை மட்டுமே வணங்க வேண்டும். நபி ஓர் இறைத்தூதர். அவரை உயிரினும் மேலாக மதிக்கலாம். ஆனால் கடவுளாக்கி விடக்கூடாது.

இந்த நிலை இன்று வரை உறுதியாக கடைபிடிக்கபடுகிறது என்றால் அதற்கு காரணம் நபிகள் போட்டு சென்ற பாதைதான்,

இவரது வாழ்க்கை வரலாறு வெறும் ஆன்மீகம் என்பதாக மட்டும் இருக்காது. குடும்பம் , வியாபாரம் , பிரச்சினைகளை தீர்க்கும் சாதுர்யம் , கருணை, மன்னித்தல், சமூக நீதி ,பெண்ணுரிமை , உழைப்புக்கு மரியாதை என பல அம்சங்களும் கலந்த ஒரு விறு விறுப்ப்பான நாவல் போல இருக்கும்.

அதிலும் இந்த நூல் அழகு தமிழில் , கவிதை நடையில் இருப்பதால்  , எடுத்தால் கீழே வைக்க முடியாதபடி பரபர என செல்கிறது.

சில சாம்பிள்களை பாருங்கள்..

*********************************************\

ஹலீமா வந்த போது

மக்கா நகரத்துக்குள்

விரல்கள் இருந்தன.

வீணைகள் இல்லை

----------------------

பாலைவனக் கப்பல்கள்

ஈச்ச மரங்களை பிடுங்கி

மணல் வெளி முழுதும்

இரங்கற் கவிதை இழைத்தன
மறைந்தாள் ஆமினா

------------------------------------

சில இளைஞர்கள்

பனைமரங்களை விட உயரமாக வளர்ந்தார்கள். ஆனால்

தென்னை மரங்களை விட கோணலாகி விட்டார்கள்.

இவர்கள் மத்தியில்

நபிகள் நாயகம்

ஆல மரமாய் அணி வகுத்தார்கள்

-----------------------

அம்சா என்ற வாணிபர்
நபிகளிடம்
குறித்த இடத்துக்கு வருவதாக சொன்னார்.

சொன்னதை மறந்து போனார்

மூன்று நாள் கழித்து நினைவு வந்து

பதறி அடித்து ஓடினார்.

விழிப் புருவங்கள் வியப்பால் வளைந்தன.

மூன்று நாட்களாக அதே இடத்தில்

முகமது என்ற தேயாத நிலவு

தேங்கி கிடந்தது

--------------------------------------


கதீஜா-

கைகால் முளைத்த கனவு

மண்ணில் தெரிந்த

மதுர நிலவு ..


-------------------------


நாணல்கள் நடுவில் நாதஸ்வரம் போல

நிமிர்ந்து நின்றார் நபிகள் நாயக்ம்

----------------------

வேரினை தொடர்ந்து செல்லும்

நீரினை போல அண்ணல்

வானவர் ஓத ஓத

வண்ணமாய் ஓதினார்கள்

-----------------------------
தீபத்தை அணைக்க வந்த சூறாவளி

இஸ்லாத்தை

தீப்பந்தமாக ஆக்கியது

----------------------

ஒட்டகத்தில் பால் கறப்பது முதல்

ஒட்டடை அடிப்பது வரை

நபிகளே செய்தார்

**************************************

வல்லினமும்

மெல்லினமும்கூட தள்ளிவைத்த

இந்த இடையினத்தை

மெய்யெழுத்தாய்

உத்தம நபி மாற்றினார்

--------------------------

தீர்க்க தரிசிக்ளுக்கு

பன்னீர் மரங்களின்

பச்சை நிழலா பந்தல் அமைத்தது

கற்பூர நெருப்பல்லவா

களம் அமைத்தது

-------------------------

மைல்கல்லும்
கடவுளாகும் நாட்டில்கூட
நபிகள் இறைவனாக நகரவில்லை
இது நாயனின் ஏற்பாடா
இல்லை
நாயன்வழி நபிகள்
நட்டுவைத்த நோன்பா

*******************************************************************


இப்படி நபிகள் நாயகம் அவர்களின் உன்னதமான வாழ்க்கையை அழகு தமிழில் படிப்பது சுகமாக இருக்கிறது.

கதீஜா, பாத்திமா,. அபூபக்கர் என பலரைப்பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது


மத நம்பிக்கையே இல்லாதவர்கள் கூட நபிகள் நாயகத்தின் வரலாறை தெரிந்து கொள்வது அவசியம். மன்னிப்பு , கருணை போன்றவைதான் அவர் செய்தியாக இருந்தது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டால் , பூமியே சொர்க்கம் ஆகிவிடும்...

--------------------------------------------------

நாயகம் எங்கள் தாயகம் - நழுவ விடக்கூடாத நூல்

******************************************

படைப்பு - வலம்புரி ஜான்

ஆசாத் பதிப்பகம்





Tuesday, May 7, 2013

பெண் வாசகிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகளும் ஆணாதிக்கமும் - ஜெயமோகன் அறிவிப்பில் அக்கப்போர்


   சொற்சிக்கனம் என்றால் நம் நினைவுக்கு வருபவர் எழுத்தாளர் சுஜாதா.  தேவையில்லாத ஒரு வார்த்தைகூட அவர் எழுத்தில் இருக்காது.

  ஆனால் தினத்தாள்கள் , சம கால எழுத்துகளை பார்த்தால் ஏமாற்றமே எஞ்சுகிறது. சொல்லப்படும் கருத்துகளில் உடன்பாடு இருக்கலாம் , இல்லாமல் போகலாம் .அது வேறு.

ஆனால் சொல்லப்படும் விதம் சுருக்கமாக நறுக் என இருக்க வேண்டும்.

கடந்த 17ம் தேதி என எழுதுகிறார்கள்.

ஏன் என்றால் வெறுமனே 17ந்தேதி என எழுதினால் , அடுத்த மாதம் வரப்போகும் 17 ஆ, சென்ற ஆண்டு ஜனவரி 17ஆ என்றெல்லாம் குழப்பம் ஏற்படும்.

ஆனால் கடந்த 2010ம் ஆண்டு பதவி ஏற்றார் என்பதில் ”கடந்த”  தேவை இல்லை.

இன்னொரு 2010 வரப்போவதில்லை. சும்மா 2010 என எழுதினாலே போதும்.

இன்று ஜெயமோகனின் வலைத்தளத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இலக்கிய சந்திப்பு நடத்துகிறாராம். ஓகே , வாழ்த்துகள்.


பெண் வாசகிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படுமாம்..  நல்லதுதான்,.

வசதி செய்து தருவதில் பிரச்சினை இல்லை. ஆனால் பெண் வாசகி என்று சீனியர் எழுத்தாளர் ஒருவர் எழுதலாமா என்பதே என் வருத்தம்.

வாசகி என்றால் அவர் பெண் தான்..பிறகு என்ன பெண் வாசகி? ஆண் வாசகி என தமிழில் இருக்கிறதா. வாசகி என்றால் போதுமே.

சரி..இது மொழி சார்ந்த விஷ்யம்.

ஆணாதிக்க கோணத்திலும் இதை பார்க்க வேண்டும். பலரும் விஷ்யம் புரியாமல் தவறாகவே நடந்து கொள்கிறோம்.

வாசகன் ஆண் பால்.. வாசகி பெண் பால்.. சரியா?

வாசகர் என்பது பன்மை அல்லது மரியாதையாக சொல்ல பயன்படுத்தும் சொல்.

ஆனால் நடைமுறையில் , ஆண்களை வாசகர் என்றே மரியாதையாக சொல்கிறோம்.

என்னை சந்திக்க ஓர் ஆண் வாசகன் வந்தான் என யாரும் சொல்வதில்லை. வாசகர் வந்தார் என்றே சொல்கிறோம்.

பெண்களையும் வாசகர் என்றே சொல்ல வேண்டும்.  சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் பெண் என்பதை குறிப்பிட வேண்டுமானால் பெண் வாசகர் என்று சொல்லலாம்.

வாசகி , ஆசிரியை போன்றவை எல்லாம் மரியாதைக்குறைவான சொற்கள்..  பெண் வாசகி என்ற சொற் பிரயோகம் தவறு.

*************************************************

பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக புனித பைபிளில் மறைந்து போன சில சுவிசேஷங்களின் தமிழ் வடிவை வெளியிடலாமா என கேட்டு இருந்தேன். நண்பர்கள் கருத்து சொல்லி வருகிறார்கள்.

விளையாட்டாக கூட யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என வள்ளுவர் சொல்லி இருப்பார். எனவே இந்த சென்சிட்டிவ் விஷயத்தில் மற்றவர்கள் கருத்தின் அடிப்படையில் - குறிப்பாக கிறிஸ்தவ சகோதரர்களின் உணர்வுகளின் அடிப்படையிலே - முடிவு எடுக்க வேண்டும்.

இதில் கிறிஸ்துவ நண்பர்கள் ஒன்றை கவனித்து முடிவெடுக்க வேண்டும்.

மறைந்து போன சுவிசேஷங்கள் என்ற விஷ்யம் குறித்து ஆங்கிலத்தில் நிறைய எழுதி இருக்கிறார்கள்.

தமிழிலும் தருமி , சார்வாகன் போன்றோர் வலைப்பதிவுகளில் எழுதி இருப்பதாக நண்பர் இக்பால் செல்வன் சொல்லி இருந்தார்.

உண்மைதான்.

ஆனால் அவை சமூக அரசியல் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டவை.  உதாரணமாக பெண் உரிமை, இயேசு வாழ்ந்த கால கட்டம் போன்றவற்றையெல்லாம் அலச முனைகிறார்கள்.

நான் விரும்புவது அதை அன்று. விமர்சனம் ஏதும் இன்றி, என் விருப்பு வெறுப்பு ஏதும் இன்றி ,  உள்ளதை உள்ளபடி அப்படியே மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என விரும்பிகிறேன். அதன் மூலம் இயேசு நாதரை இன்னும் அணுக்கமாக உணர முடியும் என நினைக்கிறேன்.

யோசித்து உங்கள் முடிவை சொல்லுங்கள். உங்கள் முடிவே இறுதியானது.

அதே போல தருமி போன்ற விஷ்யம் தெரிந்தவர்களுடன் ஆரோக்கிமான விவாதத்துக்கும் வழி வகுக்கும் என கருதுகிறேன்.

*****************************************

புனித குர் ஆன் குறித்து நிறைய எழுதலாமே . அது அள்ள அள்ள குறையாத செல்வமாயிற்றே என சகோதரர் அப்துல் ஜபார் சொல்லி இருந்தார்.

உண்மைதான். வெறும் வம்புக்கும் , பொழுது போக்குக்குமாக மட்டும் இணையம் பயன்படுவது தவறு. நல்ல விஷ்யங்களை பேசினால்தான் , விவாதித்தால்தான் ஓர் ஆரோக்கியமான சூழல் ஏற்படும்.

   குர் ஆன் குறித்து பலர் எழுதுகிறார்கள். அதை எல்லாம் ஒரு மாணவன் போல ஆழ்ந்து படித்து வருகிறேன். சில இஸ்லாமிய இணைய குழுமங்களில் இதற்காக சேர்ந்து இருக்கிறேன்.

       இணையம் மட்டும் அன்றி அனைத்து மீடியாக்கள் மீது எனக்கு ஓர் ஆதங்கம் உண்டு.

பல இஸ்லாமிய தலைவர்கள் , ஞானிகள் குறித்து போதிய தகவல்கள் பகிரப்படவில்லை.

இஸ்லாமிய ஞானிகளை ஒரு சிலர் கடவுள் போல போற்றுவதால் , அவர்களைப்பற்றி பேச இஸ்லாமியர்களும் விரும்புவதில்லை.பிறகு யார்தான் அவர்களைப் பற்றி பேசுவது , எழுதுவது.

ஓர் இஸ்லாமிய மகான் குறித்து அடுத்து எழுதுகிறேன். அவர் சொற்பொழிவுகள், கருத்துகளை பாருங்கள். கொஞ்சம் கூட இஸ்லாமிய கருத்துகளுக்கு விரோதமாக இருக்காது.

சிலர் அவரை கடவுளாக போற்றுவது , அவர்கள் மன நிலையே தவிர அந்த மகானின் நிலை அல்ல.

பொறுத்து இருந்து பாருங்கள்.

*****************************************************



Monday, October 1, 2012

திருவண்ணாமலை கிரிவலம் ரிப்போர்ட்- சீசன் 2

திருவண்ணாமலைக்கு வேறு சில விஷ்யங்களுக்காக சில முறை சென்று இருந்தாலும் , கிரி வலம் சமீபத்தில்தான் சென்றேன்.  கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஓர் அனுபவத்துக்காக சென்றேன். அந்த அனுபவம் மகிழ்ச்சிகரமாக அமைந்து இருந்தது. அதை குறித்த என் அனுபவங்களை இதில் காணலாம்.

திருவண்ணாமலை கிரிவலம் - விசிட் ரிப்போர்ட்- சீசன் 1


அதன் பின் , அங்கு செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த சனி அன்று மீண்டும் ஒரு விசிட். என் முதல் அனுபவங்களை கேட்ட சில நண்பர்கள் , இந்த முறை தாமும் கூட வருவதாக சொன்னார்கள் . கூட்டமாக செல்வதில் சில சந்தோஷங்கள் , சிக்கல்கள் இருக்கின்றன. தனியாக செல்வதிலும் ப்ள்ஸ் மைனஸ் இருக்கின்றன. எனவே எதுவாக இருந்தாலும் சந்தோஷம் என்பதே என் மன நிலையாக இருந்தது.

சாமி இருக்கிறார் அல்லது இல்லை என்ற அக்கப்போரை கடந்து , ஏதாவது ஒரு காரணத்தை வைத்து ,( அல்லது எந்த காரணமும் இல்லாமலேயே கூட )  ஏதாவது ஓர் இடம் சென்று வருவது புத்துணர்வூட்டுவதை இந்த பயணத்திலும் உணர்ந்தேன்.

மலையை சுற்றி வந்தால் முக்தி கிடைக்கும் , பணக்காரன் ஆகலாம் என்றெல்லாம் இல்லாமல் , அந்த இரவை முழுக்க உள் வாங்க வேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. ஒவ்வொரு இடத்தையும் ரசித்து பார்த்தேன். குறிப்பாக ஒரு குறுகிய இடம் வழியாக வெளியேறும் அமைப்புள்ள இடுக்கு பிள்ளையார் என்னை கவர்ந்தது.

உணவில் டிகிரி காஃபியும் , கோலி சோடாவும் கவர்ந்தது. நித்தியானந்தா ஆசிரமத்தில் அந்த நள்ளிரவிலும் அன்ன தானம் நடக்கிறது..

கோயிலை சுற்று எட்டு லிங்கங்கள் அமைந்துள்ளன.

இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், மற்றும் ஈசான்ய லிங்கம் என அவற்றுக்கு பெயர்.

முதலில் வருவது இந்திர லிங்கம். அதன் பின் வினாயகர் கோயில்கள் உள்ளன. இவற்றை தவிர சிறிய கோயில்கள் ஏராளம் உள்ளன.

அதன் பின் அக்னி லிங்கம். இன்னும் கொஞ்ச நேரத்தில் சேஷாத்திரி ஸ்வாமிகள் ஆசிரமம். இவரைப் பற்றி பாலகுமாரன் ஒரு நாவல் எழுதி இருக்கிறார்.

அதன் பின் வருவது எம லிங்கம். இந்த லிங்கங்களை வணங்கினால் , ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு என்கிறார்கள் .

அதன் பின் ஆதி பராசக்தி சக்தி பீடமும் , நிருதி லிங்கமும் வருகின்றன.

அதன் பின் வருவதுதான் ஹை லைட். ஆமாம் . நித்தியானந்தர் ஆசிரமம் அடுத்து வருகிறது. ஏதாவது நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. தூங்கவே மாட்டார்கள் போல.

அதன் பின் வருவது வர்ண லிங்கம் மற்றும் ஷீர்டி பாபா ஆலயம்.

வர்ண லிங்கத்துக்கு அடுத்து வாயு லிங்கம். பின் பஞ்ச முக தரிசன பகுதி.
இவற்றை எல்லாம் விட கூட்டம் குவிவது ஓர் இடத்தில். என்ன இடம் ?

குபேர லிங்கம். செல்வம் அளிப்பார் என நம்பிக்கை. பிறகு பிள்ளையார் கோயில் , ஈசான்ய லிங்கம் . பிறகு கிளைமேக்சாக ராஜ கோபுரம்.

இதைத்தவிர அமிர்தானதமயி ஆஸ்ரம் போன்ற பல்வேறு அமைப்பினரின் ஸ்டால்களில் பல்வேறு ஆன்மீகம் சார்ந்த பொருட்கள் விற்பனை ஆகின்றன. தேவையானவர்கள் வாங்கி செல்கிறார்கள்.

தவிர , உணவு விடுதிகள் , குளிர் பான கடைகள் , மூலிகை சூப் கடைகள் என பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கின்றன.

எந்த எதிர்பார்ப்புகளும் , வேண்டுதல்களும் இல்லாமல் , சும்மா போய் வந்தால் , கிடைக்கும் அனுபவம் அலாதி என்பது என் கருத்து.







Thursday, November 25, 2010

தேவே கவுடாவை குழப்பிய சாய் பாபா- சுவையான தகவல்கள்



த்ய சாய் பாபாவின் 85 ஆவது  பிறந்த நாளை முன்னிட்டு, தினமணி சிறப்பு இதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது..
அதிலிருந்து சில சுவையான பகுதிகள் உங்கள் பார்வைக்கு..

( இவை என் கருத்துக்கள் அல்ல... என் கருத்துக்களை பிரதிபலிப்பவையும் அல்ல..  ஒரு பார்வையாளனாக நான் பார்த்ததை பகிர்ந்து கொள்கிறேன் )

***********************************************************************
பிரதமரா , முதலமச்சரா ?  



பெங்களூரில் ஒரு விழா. கர்நாடக முதல்வர் தேவே கவுடா உள்ளிட்ட பிரமுகர்கள் மேடையில் இருந்தார்கள்.. பாபா அருளாசி வழங்க தன பேச்சை ஆரம்பித்தார்..

Friday, March 19, 2010

மெரினாவில் ஆராய்ச்சி நடத்திய நித்தியானந்தா

எல்லோரும் ஆன்மீகம் ஆன்மீகம் என பேசுவதால் , எனக்கு அதன் மேல் ஒரு வித ஆர்வம் ஏற்பட தொடங்கியது... குறிப்பாக, பகுத்தறிவு வலை பதிவுகள் தான் , சாமிகளை பற்றி அதிகம் பேசி , என் ஆன்மீக வெறியை தூண்டி விட்டன...

ஆன்மீக தத்துவம் பற்றி அறிய , ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர் தான் சிறந்தவர் என ஒருவர் வழி காட்டினார் ....

அவர் சொன்ன எழுத்தாளரின் வலை பக்கத்துக்கு சென்றேன்... தத்துவ தரிசனம் , படிவங்கள், தொன்மங்கள் என படித்து கொண்டு இருந்தவன் , என்னை அறியாமல் தூங்கி விட்டேன்.... சரி... இதை புரிந்து கொள்ளும் சக்தி நமக்கில்லை என புரிந்து கொண்டு, ஒரு புத்தகம் படித்தேன்..அதில், குண்டலினி சக்தி, முக்தி , மந்திரம் என்றெல்லாம் விளக்கி, தியானம் செய்ய சொன்னார்கள்...
இதுதான் மேட்டரா , என சந்தோஷ பட்ட நான் , அடுத்த நாள் அதி காலை , மெரீனா கிளம்பினேன்...

புத்தகத்தில் சொன்ன படி, தியானம செய்ய தொடங்கிய, பத்து நிமிஷத்திலேயே, நெற்றியில் சிவப்பு ஒழி தோன்றியது...ஆச்சர்யத்துடன் கவனித்தேன், .. அது ஒரு சின்ன பையன், விளையாட்டாக அடித்த டார்ச் லைட் என தெரிந்ததும் சற்று வருத்தம்....
சிறிது நேரத்தில், முதுகு தண்டில், குண்டலினி சக்தி வேலை செய்ய ஆரம்பித்தது... ஏதோ ஒரு , சொல்லுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி, மூலாதாரத்தில் இருந்து புறப்பட்டு, மேல் நோக்கி நகர ஆரம்பித்தது....
யாரோ தலையை தொடுவது போல் இருந்தது....

" என்ன தம்பி... முதுகுல ஏதோ பூச்சி ஊருது.. கவனிக்காம தூங்குறீங்களே " ஒரு பெரியவர் விழிப்புணரவு ஏற்படுத்தினார் ...
வெறுப்புடன் எழுந்து, படகில் உட்கார சென்ற நான் , திடுக்கிட்டு நின்றேன்....
என் கண்ணை என்னாலேயே, நம்ப முடியவில்லை... சுவாமி நித்யானந்தர் , ஒரு துணை நடிகை யுடன் , ஏதோ சுவையாக பேசி கொண்டு இருந்தார்.... சற்று முன்பே வராமல் போய் விட்டோமே , என ஏமாற்றமாக இருந்தாலும், இவர் எப்படி, போலீஸ் கண்ணில் மண்ணை தூவி விட்டு இங்கே வந்தார், என குழப்பமாக இருந்தது...
என் நண்பன் ஜேம்சுக்கு போன் போட்டேன்.... அவனுக்கு இது போன்ற விஷயங்களில் அனுபவம் அதிகம்... அவன் எனக்கு ஒரு ஹிந்தி நடிகை போன் நம்பர் தந்தான்....

நடிகைக்கு போன் போட்டேன்.... "சாமி என் கூட , வட இந்தியாவில் பத்திரமா இருக்கார்... இப்ப பார்க்க முடியாது " என்றார் நடிகை.... :"அவரை , சென்னையில் பர்த்து கொண்டுதான் இருக்கிறேன் " என்றேன் நான்....

"அதுதான் சாமியின் மகிமை" என்று சொல்லி லைனை கட் செய்தார் நடிகை..பணிவிடை செய்யும் அவசரம்....

நித்தி வட இந்தியாவில் இருக்கும் போது, இங்கே எப்படி ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறார் ..ஒரு வேலை பிரமை யோ என நினைத்தேன்.... ஆனால், அங்கு வந்து விட்ட , ஜேம்சும் அவர் நித்தி தான் என உறுதி படுத்தினான்....

ஒரு வித பரவச நிலை யோடு , ஆட்டோவில் ஏறினோம்.... வழியில் ஒரு பெண் லிப்ட் கேட்டதால் , அவரையும் ஏற்றி கொண்டோம்....
வீடு வந்தது..... காசு எதுவும் வேண்டாம் என்றார் ஆட்டோ ட்ரைவர்... அப்போதுதான் , டிரைவர் முகத்தை பார்த்தேன்.... அட .... அவரும் நித்தி தான்...
ஆட்டோ வேகமாக புறப்பட்டு சென்றது..... அந்த இடத்தில இறங்க வேண்டிய பெண் , இறங்காமலே சென்று விட்டதை தாமத மாகத்தான் உணர்ந்தேன்..

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா