Saturday, June 9, 2018

காலா - இந்துத்துவ தலித் விரோத சக்திகளுக்கு காலன்


காலாவில் ஒரு காட்சி ... தன் முன்னாள் காதலியை சந்திக்க யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அவள் வீட்டுக்கு செல்கிறார் ரஜினி..  அதை தெரிந்து கொண்ட வில்லன் கோஷ்டி அவரை சுற்றி வளைக்கிறது.

தன்னந்தனியாக மாட்டிக்கொள்ளும் ரஜினி வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு சண்டைக்கு ஆயத்தமாகிறார்...

காலம் காலமாக நாம் பார்த்து வந்த ஹீரோயிச சண்டையை ( ஒரு வித அலுப்புடன் ) பார்க்க ஆயத்தமாகிறோம்... ஒரே ஆள் நூறு பேரை சமாளிக்கும் சண்டையை எத்தனை முறை பார்த்திருப்போம்...

ஆனால் அங்குதான் ஒரு இனிய ஆச்சர்யம். அந்த டிபிக்கல் சண்டை நடப்பதில்லை... ரஜினியின்  மகன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் புயலாக புறப்பட்டு வந்து எதிரிகளை பந்தாடுகிறார்கள் .  அது இயல்பாக இருந்தாலும் , யாருக்கும் தெரியாமல் ரஜினி வந்தது அவர்களுக்கு எப்படி தெரியவந்தது ?

அதுதான் ஒரு சிறுகதையாக மிளிர்கிறது.. ஒரு பெண்ணால் , அவள் காதலால் ரஜினி காப்பாற்றப்படுகிறார் என்பது ஒரு சின்ன குறும்படமாக அட சொல்ல வைக்கிறது... கபாலியில் மகளால் காப்பாற்றப்படுவதை விட இந்த காட்சிக்கோர்வை மிக பிரமாதம்.

இப்படி ஒரு ஒவ்வொரு காட்சியாக ரசிக்க வைக்கிறது காலா

அறிமுகப்பாடல் , ரசிகர்களை பார்த்து கும்பிட்ட்ட படி கண் சிமிட்டியபடி அறிமுக ஆவது பாசிட்டிவான ஒரு வசனததுடன் அறிமுகம் ஆவது போன்ற காட்சிகள் ரஜினியால் பிரபலமடைந்து இன்று  போதும் போதும் என்ற அளவுக்கு எல்லா படங்களிலும் இடம் பெற்று வருகின்றன..
\
தக்காளி  போதும்டா .. திருந்துங்கடா என சொல்லும் விதத்தில் சற்றும் எதிர்பாராத ஒரு அறிமுக காட்சி ., செம தில் ,திமிர் அல்லது தன்னம்பிக்கை தேவைப்படும் காட்சி..
\
வில்லன்களால் சூழப்பட்டத்தை குறிப்பால் அறிந்து அவரை காப்பாற்ற முயலும் பைக் இளைஞன் , ஒன் லைனர்களால் திரையரங்கை அதிரச்செய்யும் சமுத்திர கனி , எதிர் கருத்தை துணிச்சலாக முன் வைக்கும் இளைய மகன் , தந்தையை மிஞ்சும் மூத்த மகன் , போராளி மருமகள் , கொல்ல விரும்பும் எதிரி என்றாலும் அவனை வீட்டுக்குள் அனுமதிக்க தன் அறம் சார்ந்து ஒரு காரணத்தை சொல்லும் வில்லன் , மனைவி , காதலி என ஒவ்வொரு பாத்திரமுமே செதுக்கி உருவாக்கப்பட்டுள்ளன...

இசை , ஒளிப்பதிவு , எடிட்டிங் என ஒவ்வொருவரும் மிகச்சிறப்ப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்..


படம் என்ற வித்த்தில் கிளாஸ்.. சரி ? உள்ளட்டக்கம்?

ரஜினி இந்து மத கடவுளை அவமதித்து விட்டார் என ஒரு இந்துத்துவ நாளிதழ் புலம்பி இருந்தது.//

அற்ப மனிதனின் கடவுளும் அற்பமாகவே இருக்கும் என்பார் ஜே கிருஷ்ண மூர்த்தி...     மகாத்மா காந்தி வணங்கும் ராமனும் கந்து வட்டிக்காரன் ஒருவன் வணங்கும் ராமனும் ஒரே ராமனாக இருக்க முடியாது அல்லவா ?  அந்த கந்து வட்டிக்காரன் வணங்கும் ராமன்  கண்டிப்பாக அறத்தை போதிப்பவனாக இருக்க முடியாது...

இந்த படம் முழுக்க முழுக்க புத்தர் ஒரு கதாபாத்திரமாக வருகிறார்.. இதில் வரும் புத்தர் போற்றத்தக்கவர்.. ஆனால் இலங்கையில் தமிழனை கொன்று புத்த ஆலயம் கட்டினால் அதை ஏற்க முடியுமா ? இலங்கையில் தமிழ் கைதிகளை கொன்று புத்தர் சிலைக்கு படையல் வைத்த சிங்களர்களை ஏற்க முடியுமா ?

கடவுளை யார் எந்த அர்த்தத்தில் முன் வைக்கிறார்கள் என்பதே முக்கியம்..

இந்த படத்தில் வெகு தெளிவாக இதை கையாண்டு இருக்கிறார்கள்...\

ஒரு காட்சியில் பெண் போராளியை சில போலிசார் அவள் ஆடையை களைந்து மான பங்கம் ( ??? !! ) செய்கின்றனர்...

மானம் போனதும் தற்கொலை செய்யும் பெண்களை தமிழ் சினிமாக்களில் பார்த்துள்ளோம்// என்னை ஒன்னும் செய்யாதே என கெஞ்சும் பெண்களை பார்த்துள்ளோம்..

இந்த போராளி வலியுடன் தன் ஆடையை நோக்கி செல்கிறாள்.. ஆடையை எடுத்துக்கொண்டு அழுது கொண்டு வீட்டுக்கு செல்லப்போகிறாள் என சராசரி ரசிகன் நினைக்கிறான்..
ஆனால் அவள் எடுப்பது ஆடையை அல்ல... எதிரிகளுக்கு பதிலடி கொடுக்கும் ஆயுதம் ஒன்றை.

ஒரு பெண்னை நிர்வாணமாகவோ அரை குறை ஆடையுடனோ பார்த்து விட்டால் அது அவள் கற்புக்குதான் இழுக்கு என இது வரை உருவாக்கப்பட்ட கற்பிதங்களை உடைத்து எறிகிறது காலா///

நாயகன் படத்தில் மும்பையில் வளர்ந்து ஆளான ஹீரோ கடைசி வரை மொழி பெயர்ப்பாளர் துணையுடன் தான் பேசுவார்//

இதில் நாயகன் ஹிந்தியிலும் மராட்டியிலும் புகுந்து விளையாடுகிறார்..

மக்களின் விருப்பம் முன்னோர்கள் சொல் அதுதான் என்னை வழி நடத்தும் ஆணை என கம்பீரமாக ஹிந்தியில் சொல்வது செம

பல காட்சிகளில் பாட்ஷா  மற்றும் படையப்பாவை மிஞ்சிக்காட்டி இருக்கிறார் ரஞ்சித்

மரண மிரட்டல் விடுத்து விட்டு கிளம்பும் வில்லனிடம் , உன்னை நான் இன்னும் கிளம்ப சொல்லலயே என கேலியாக சொல்வதும் அதை அலட்சியம் செய்து விட்டு வில்லன் கிளம்புவதும் அதை தொடரும் காட்சியும் ரஜினி படங்களின் சிகரங்களுள் ஒன்று


ரகுவரனுக்குப்பிறகு சிறப்பான வில்லன்.. பல காட்சிகளில் ரஜினியையே மிஞ்சி இருக்கிறார்..

இப்படி ஒரு சமூக நீதிக்கான படம் இதுவரை வந்ததில்லை..  அம்பேத்கர் உள்ளிட்ட புரட்சியாளர்கள் அயோத்திதாச பண்டிதர் இரட்டைமலை சீனி வாசன் போன்ற பலர் குறித்து  மற்றவர்கள் பேசி இருந்தால் டிரையாக அல்லது பிரச்சார தொனியுடன் இருந்திருக்கும்.. கமெர்ஷியலாக ஒரு கனமான விஷ்யத்தை ரஞ்சித் வெற்றி பெற்றுள்ளார்

தலித்துகளின் சோகங்களை தோல்விகளை சொன்னால் அரசியல் கட்சியினர் ரசிப்பார்கள்/.////   ஆனால் தலித்துகளை வெற்றியாளர்களாக தலைவர்களாக காட்டினால் தமிழக கட்சியினர் ரசிப்பதில்லை///   கடவுள் எதிர்ப்பை இந்த்துதுவ கட்சியினர் விரும்புவதில்லை//  இந்த இரு தரப்பையும் பகைத்துக்கொண்டு படம் எடுக்க அசாத்திய துணிச்சல் தேவை

சிஸ்டம் சரியில்லை என ரஜினி சொன்னது இந்தியா முழுமைக்கானதும்தான் என தன் காசில் படம் எடுத்து சொன்ன தயாரிப்பாளர் தனுஷ் பாராட்டுக்குரியவர்////

காலா - இன்னும் பல காலம் விவாதிக்கப்பட இருக்கும் கலைப்படைப்பு


------------------------------------------------------                           2 comments:

  1. மகாத்மா காந்தி வணங்கும் ராமனும் கந்து வட்டிக்காரன் ஒருவன் வணங்கும் ராமனும் ஒரே ராமனாக இருக்க முடியாது அல்லவா ? அந்த கந்து வட்டிக்காரன் வணங்கும் ராமன் கண்டிப்பாக அறத்தை போதிப்பவனாக இருக்க முடியாது...

    இந்த படம் முழுக்க முழுக்க புத்தர் ஒரு கதாபாத்திரமாக வருகிறார்.. இதில் வரும் புத்தர் போற்றத்தக்கவர்.. ஆனால் இலங்கையில் தமிழனை கொன்று புத்த ஆலயம் கட்டினால் அதை ஏற்க முடியுமா ? ////.
    .
    அப்போ காந்தி வணங்கிய ஏற்க்கத்தகுந்த ராமன் பற்றி ஏன் பேசவில்லை?ஏற்க இயலாத சிங்கள பவுத்தர்கள் பற்றியும் பேசவில்லை.முகலாயர்கள் இஸ்லாம் பெயரில்தான் இங்குள்ள புத்த ஸ்தூபிகளையும் மடாலங்களையும் பவுத்த துறவிகளையும் அழித்தார்கள்!அந்த இஸ்லாம் பற்றியும் இவர் பேசுவாரா?

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா