Showing posts with label ஆங்கில நூல். Show all posts
Showing posts with label ஆங்கில நூல். Show all posts

Sunday, December 20, 2015

மானுடவியல் நிபுணர் ஆகுங்கள் - மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு டிப்ஸ்- ரிச்சர்ட் கார்ல்சன்


மானுடவியல் என்பது மனிதனையும் அவன் ஆதிகால தோற்றத்தையும் ஆராயும் அறிவியலாகும்.  நாம் இப்போது பார்க்கப்போகும் டிப்சில் ஒரு வசதிக்காக இப்படி வரையறுத்துக்கொள்ளலாம்.  மானுடவியல் என்பது , எப்படி வாழ்வது எப்படி நடந்து கொள்வது என்பதை  மக்கள் எப்படி தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள் என்பதை விருப்பு வெறுப்பின்றி ஆர்வமாக கவனித்தலாகும்.

இப்படி செய்தால் நம் இரக்கமும் புரிந்துகொள்ளலும் மேலோங்கி அமைதி ஏற்படும். விருப்பு வெறுப்பின்றி ஒருவர் செயலை கவனிக்கும்போது அவர் செயல்கள் நம்மை கோபப்படுத்த வாய்ப்பில்லை.

 நமக்கு அன்னியமான காரியங்களை சிலர் செய்கையில், இப்படியுமா மனிதர்கள் இருப்பார்கள் என அலுத்துக்கொள்ளாமல் , அட சுவையாக இருக்கிறதே. அவருக்கு இப்படி வாழ்வதுதான் பிடித்திருக்கிறதுபோல என சொல்லிக்கொள்ளுங்கள். கவனம் தேவை,,, ஆர்வமாக கவனிப்பது வேறு. உன்னிப்பாக கவனித்து விமர்சிப்பது வேறு.

ஒரு முறை நானும் என் ஆறு வயது மகளும் வணிக வளாகம்  போய் இருந்தோம். அப்போது சில இளைஞர்கள் தம் முடியை பல  ஆரஞ்சு நிறமாக மாற்றிக்கொண்டு , உடல் முழுதும் பச்சை குத்திக்கொண்டு எங்களை கடந்து சென்றனர், “ அப்பா ,, யார் இவர்கள் ..ஏன் இப்படி இருக்கிறார்கள்..ஏதேனும் மாறு வேடப்போட்டியா என கேட்டாள் மகள்..   இவர்கள் செய்வது அநாகரிகம்.. ஆடை ஒழுக்கம் முக்கியம் என சொல்லி இருப்பேன். ஆனால் இப்போது மானுடவியல் நிபுணன் ஆயிற்றே, எனவே இப்படி சொன்னேன்.. ஏன் இப்படி இருக்கிறார்கள் என தெரியவில்லை.. ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பது சுவராஸ்யமாக இருக்கிறது அல்லவா என்றேன்

ஆமா.. ஆனா எனக்கு என் இயற்கையான முடிதான் பிடித்து இருக்கிறது என்றாள் அவள். மற்றவர்களை பற்றி விவாதித்து எங்கள் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்காமல் அத்துடன் அதை விட்டு விட்டு எங்கள் நேரத்தை மகிழ்ச்சியுடன் செலவிட்டோம்.

மற்றவர் செயலை ஆர்வமாக கவனிப்பது என்பது அவர்கள் செயலை ஏற்கிறோம் என்பது அல்ல,  முடியை விரித்துபோட்டுக்கொண்டு , கலர் அடித்துக்கொண்டு செல்வதை நான் செய்ய மாட்டேன். மற்றவர்களுக்கு சிபாரிசு செய்யவும் மாட்டேன். ஆனால் அதை விமர்சிக்கவும் மாட்டேன்.

மற்றவர்கள் தவறுகளை விமர்சிப்பது என்பது நம் சக்தியை வீணடிக்கும். நம் இலக்கை அடைவதை தடை செய்யும் என்பதை எப்போதும் மனதில் கொள்ளவேண்டும்

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா