Showing posts with label சுஜாதா. Show all posts
Showing posts with label சுஜாதா. Show all posts

Saturday, April 11, 2020

சுஜாதா தேசிகனின் அபுனைவுகள்


கல்லூரி ஹாஸ்டலில்தான் , முதன்முதலாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சகவயதினருடன் பழகும் வாய்ப்பு பெரும்பாலானோர்க்கு கிடைக்கும்.

அங்கிட்டு, இங்கிட்டு , ஏனுங்க ,கீது என்பது போன்ற வட்டாரச் சொற்கள் மற்ற பகுதியினருக்கு வேடிக்கையாகத் தோன்றும். விளையாட்டாக கேலிகள் நடக்கும்.  காலப்போக்கில் ஒருவரிடம் இருந்து இன்னொருவர் பல சொற்களை கற்றுவிடுவார்கள். ஒருவரது வட்டார வழக்கத்தை இன்னொருவர் ரசிப்பார்கள்

இன்றைய தகவல் தொடர்பு,வளர்ச்சியில் வட்டார சொற்களை பயன்படுத்துவதை தகுதிக்குறைவு என நினைத்து பலரும் பொது தமிழையே முயல்கின்றனர். இதன்விளைவாக பல்வேறு அழகிய தமிழ்ச்சொற்கள் புழக்கத்தில் இருந்து மறைகின்றன

யார் எழுத்தைப் படித்தாலும் எந்த வேறுபாடும் தெரிவதில்லை. அதே அரசியல் , அதே சினிமா கிசுகிசு , அதே பாலியல் சீண்டல்கள் என ஒரு நபரின் நகலாகவே பலரும் எழுதுகின்றனர்.

இதில் பிராமணர்கள் சற்று வேறுபட்டவர்கள்.  தாங்கள் பிராமணர்கள் இல்லை என காட்டிக் கொள்வதே அவர்களது முழு நேரம் வேளையாக இருக்கும். நானெல்லாம் மூணு,வேளையும் கறி தின்பவன் , அந்த தள்ளுவண்டில பீப் பிரை போடுவான். என்ன டேஸ்ட் தெரியுமா என்றெல்லாம் பேசி தமது அடையாளத்தை மறைக்க முயல்வார்கள்

இவையெல்லாம் தேவையேயில்லை. நம் பிறப்பு என்பது நம் சாதனை அன்று. அது குறித்து பெருமிதம் அடையவோ அதை மறைக்க முயல்வதோ அவசியமற்றது.

நாம் யார் என நேர்மையாக அடையாளப்படுத்திக் கொள்வதுதான் வலுவான சொல்லாடலின் முதல் படி என்கிறார் அரிஸ்டாட்டில்

சுஜாதா தேசிகனின் என் பெயர் ஆண்டாள் என்ற நூலின் முன்னுரையில் எழுத்துலக பிதாமகரான கடுகு இதை குறிப்பிட்டுள்ளார்.  எழுத்தின் நடை நூலாசிரியர் ஒரு கணிப்பொறியாளர் என்பதைக் காட்டிக கொடுக்கிறது என்கிறார் அவர்  ;

இதை எழுத்தாளனின் முத்திரையாகப் பார்க்க வேண்டும். அவரது ஆன்மிக தேடல் , தொழில் சார்ந்து கிடைக்கும் பரந்துபட்ட அனுபவம் , தமிழார்வம் , சுஜாதா மீதான காதல் , பிரபந்த அறிவு , அறிவியல் வேட்கை , நகைச்சுவை உணர்வு என அனைத்தும் கலந்து நல்லதொரு வாசிப்பனுபவம் அளிக்கிறது.

 நண்பர் தேசிகன் என சுஜாதா எழுதியதை படித்தபோது அந்தப்பெயரையும் , சுஜாதா நண்பர் என்பதையும் வைத்து , சுஜாதாவின் சமவயதினர்போல என்றுதான் நினைத்தேன்.

இது இயல்புதான். பெயர் உருவாக்கும் மனச்சித்திரம் குறித்து ஒரு கட்டுரை இருக்கிறது.  அட ஆமால , என வியக்க வைக்கும் கட்டுரை.  எழுத்து அந்தரத்தில் தொங்ககூடாது. மண்ணில் நடக்க வேண்டும் என்பார் சுஜாதா.   அதற்கு நல்ல உதாரணம் இதில் உள்ள கட்டுரைகள்

பையனுக்கு பெயர் வைக்க யோசிக்கும்போது , வேதாந்த் என்று வைக்கலாம் என மனைவி யோசனை கூறுகிறார். வேதாந்த தேசிகன் என புகழ் பெற வாய்ப்பிருக்கிறது என்று சொல்லி அசர வைத்தார் என்ற வரியைப்படித்து வாய்விட்டு சிரித்து விட்டேன்
இப்படி ஆங்காங்கு மிளிரும் நகைச்சுவை , எதிர்பாரா திருப்பங்கள் போன்றவை வெகு அழகு

நடக்கும்போது பூக்களைப் பார்த்தேன். ஆனால் பறிக்கவில்லை என்று படிக்கும்போது , இயற்கை நேசர் போல என மனம் ஒரு நொடியில் அதை புரிந்து கொள்கிறது. பறிக்காததற்கு காரணம் அவை எட்டாத தூரம் என அடுத்த வரியை படிக்கையில் புன்னகையை தவிர்க்க முடியாது

லைட் ரீடீங் என்றால் கள்ளக்காதல் , கிசுகிசு போன்ற தரமற்ற எழுத்து என சிலர் புரிந்து வைத்துக்கொண்டு எழுதுகிறார்கள்

லைட் ரீடிங் என்பது உயர்ந்த விஷயங்களை இலகுவான நடையில் சொல்வது

பல்வேறு பிரபந்தங்களை அதன்  தமிழ்ச்சுவையை தமிழ்ச்சொற்களை எளிதாக இந்நூல் நமக்கு கற்பித்து விடுகிறது.  பொழுதுபோக்கு நடையில் இப்படி எஜுகேட் செய்வது பெரிய விஷயம்

அவரது கதையில் ஒரு மறக்க முடியாத கதை.  அருமையான குறும்படம்
பையன் காப்பி அடித்து மாட்டிக் கொள்கிறான். அப்பாவை அழைத்து வந்து டிசி வாங்கிச் செல் என கண்டிப்பாக சொல்கிறார்.

அடுத்த நாள் பையனும் அப்பாவும் செல்கின்றனர். தலைமையாசியரிடம் தனியாக ஏதோ பேசுகிறார் தந்தை. அதன்பின்  பிரச்சனை சால்வ்,ஆகிறது
பையனை உணவகம் அழைத்து சென்று அவனுக்கு தோசையும் தனக்கு இட்லியும் ஆர்டர் செய்கிறார். தோசை விற்கும்விலையில் அதை சாப்பிட தன் சம்பாத்தியம் இடமளிக்கவில்லை. நன்றாக படித்தால்தான் சம்பாதிக்கமுடியும் என்கிறார்
ஆண்டுகள் செல்கின்றன. அப்பா ஓய்வு பெற்றுவிட்டார். பையன் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டான்.
அதே ஹோட்டல் செல்கின்றனர். இப்போது தனக்கு தோசை ஆர்டர் செய்துகொள்கிறார் அப்பா
அன்னிக்கு தலைமைஆசிரியரிடம் என்ன சொல்லி சமாளிச்சீங்க கேட்கிறான் பையன்
ஒரே ஒரு பொய் சொன்னேன் என்கிறார் அப்பா

அழுத்தமான அற்புதமான கதை

தனது ஒரு,மாத சம்பளத்தின் கணிசமான பகுதியை பையனின் ஓவிய ஆர்வத்துக்காக , உபகரணங்கள் வாங்க அவனையே எடுத்துக் கொள்ளும் சம்பவம் குறித்த கட்டுரை நெகிழ வைத்தது.  அந்த கதை அற்புதமாக அமைந்த காரணம் புரிந்தது

ஆலயங்கள் பற்றிய கட்டுரைகள் அனைத்தும் நேரில் சென்ற அனுபவம் அளித்தன.  உடல் நலம் , தேச நிலை எல்லாம் சாதகமாக இருக்கும்போதே பார்த்தால்தான் உண்டு என்ற உணர்வு ஏற்பட்டது

ஸ்டெம் செல் குறித்த கட்டுரை வெகு அளிமையாக விஷயத்தை விளக்கியது

நமக்கு கிடைத்திருப்பது ஒரு வாழ்க்கை. எழுத்தின் மூலம் மட்டுமே பல வாழ்க்கைகளை அறிய முடியும். அதுதான் எழுத்தின் சிறப்பு.

ஆனால் பிற சாதியினர் பற்றிய ஒரு சித்திரம் எழுத்தில் வருவது அரிதாக மாறி வருகிறது. சாதிப்பெருமிதமோ , சாதி குறித்தான தன்னிரக்கமோ இல்லாமல் இயல்பான ஒரு சித்திரத்தை அளிப்பது அவசியமான அறிவியக்க செயல்பாடுகளில் உண்டு.

அந்தவகையில் இந்த நூலின் பல விஷயங்கள் வெகு இயல்பாக இன்பர்மட்டிவாக இருந்தன

நூலாசிரியர் பணி நிமித்தம்வெளிநாடு
செல்கிறார். அந்த நிறுவனத்தின் பெண் ஊழியர் தேவையான உதவிகளை பணிவுடன் செய்கிறார். பணி முடிந்து கிளம்பும்போதுதான் அவர் யாரென தெரிகிறது. அந்த கடைசி வரி ஒரு சிறுகதைத்தன்மையை அற்புதமான அனுபத்தை அளிக்கிறது

சுஜாதா பற்றிய கட்டுரைகள் அனைத்தும் அரிய ஆவணங்கள்.

மொத்தத்தில் கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய நூல்

குறை என்று பாரத்தால் இவ்வளவு அற்புதமான தமிழாளுமை கொண்ட நூல்களில் ஆங்காங்கு ஒருமை பன்மை பிழைகள். தட்டச்சும்போது ஏற்படும் கவனப்பிழை.  நூலின் மதிப்பை இதை பாதிக்காது என்றாலும் பல பத்திரிக்கைகளே எழுத்துப்பிழைகளை பொருட்டாக நினைப்பதில்லை என்றாலும் சுஜாதா மாணவர் என்ற முறையில் , ப்ரூப் பார்ப்பதில் கவனம் தேவை
பெங்களூர் பெண்களைப் பார்க்கையில் வைரமுத்துவின் பாடல்வரி ( வெளியில் சொல்லமுடியாத வரி)மனதில் ரீங்காரமிட்டது என்ற வாக்கியம் ஒட்டுமொத்த நூலின் தொனிக்கு சம்பந்தமற்று துருத்துகிறது

காம்ப்ரமைஸ்கள் செய்து கொண்டிருந்தால் , இலக்கியவிழாக்கள் , மேடைகள் என பதினைந்து நிமிட புகழ் பெற்றிருக்கலாம்

சமரசமற்ற தேசிகன் எழுத்து அற்ப புகழை நாடாமல் நீண்ட நெடிய தமிழ் எழுத்து பாரம்பர்யத்தில் இடம் பெற விழைகிறது.









Wednesday, March 4, 2020

சுஜாதா , இளையராஜா.அனைவருடனும் மோதிய சு.சமுத்திரம்

சு. சமுத்திரம் அவர்களின் நாவல் ஒன்று திரைப்படமாக்கப்பட்டது.

அதற்கு இசை இளையராஜா.

சமுத்திரம் பற்றிக் கேள்விப்பட்டிருந்த இளையராஜா , அவரை சந்திக்க விரும்பினார். சந்திப்பு ஏற்பாடானது;
வெறும் பத்துப் பிரதிகள் விற்கும் பத்திரிக்கையில் எழுத வாய்ப்பு அல்லது டிவி வாய்ப்பு போன்ற அல்ப லாபங்களுக்காக சமரசங்கள் செய்வது அதற்கேற்ற அரசியல் நிலைப்பாடுகள் எடுக்கும் மக்களைப் பார்ப்பவர்கள் நான்

சமுத்திரத்திற்கு சினிமாவில் பாட்டெழுத ஆர்வம் இருந்தது.  அவர் மட்டும் சற்று நீக்குப்போக்காக இணைய மொண்ணைகள் பார்முலாவை பயன்படுத்தி இருந்தால் அவர் இளையராஜா இசையில் பாடல் வாய்ப்பு பெற்றிருக்கலாம்.

ஆனால் அவர் இளையராஜாவுக்கு ஜால்ரா அடிக்கவில்லை. கலை என்பது கலைக்காகவே என்ற ராஜாவின் பார்வையை எதிர்த்து வாதிட்டார். அடித்தட்டு மக்களுக்குப் போராட தான் எழுத்தை பயன்படுத்துவதுபோல ராஜா இசையை பயன்படுத்த வேண்டும் என்றார். கலையின் நோக்கம் பிரச்சாரம் அல்ல என்றார் ராஜா. அந்த விதம் கடும் சண்டையாக மாறி , பிறர் வந்து சமாதானப்படுத்த வேண்டியதாயிற்று;

அந்த அளவுக்கு தன் கொள்கையில் உறுதியாக இருந்தவர் அவர்

அதனால்தான் அவரால் விமர்சிக்கப்பட்ட கலைஞர் , அவர் நூலை வெளியிட்டுப் பேச ஒப்புக் கொண்டார்.

சமுத்திரம் என்னை முழுமையாக ஆதரிப்பவர் அல்லர். ஆனால் அவர் எழுத்தை மதிக்கும்பொருட்டு இதில் கலந்து கொள்கிறேன் என்றார்;

சமுத்திரத்தின் சோற்றுப்பட்டாளம் , வாடாமல்லி போன்ற பல நாவல்கள் புகழ் பெற்றவை

என்னளவில் அவர் நூல்களில் எனக்குப் பிடித்தது அவரது  " எனது கதைகளின் கதை " என்ற நூல்

கதைக்கான கருக்கள் எப்படி கிடைக்கின்றன ,  அவை எப்படி கதையாக மாறுகின்றன என அழகாக விவரிக்கிறார்

இண்டர்நெட்டிதேடி , உலகப்படங்கள் பார்த்து கதைக்கருவை பிடிக்கும் தேவை அவருக்கு இருந்ததில்லை. அவர் வகித்த"உயரிய பதவி , ஓய்வு பெற்ற பின்னும் அவர் ஈடுபட்ட சமூக சேவை ஆகியவற்றாலும் அவரது முன்கோபம்", சமசரசமற்ற தன்மையாலும் ஏராளமான நேரடி அனுபவங்கள் பெற்றார். அவற்றை இந்நூலில் பகிர்கிறார்

குடித்து விட்டு மனைவியை கொடுமைப்படுத்துகிறவனை கண்டிக்கிறார். குடியை கைவிட்டால் தொழில் ரீதியாக உதவுவதாக சொல்கிறார். அவன் ஏற்கிறான். கொஞ்ச நாள் கழித்து அவன் குடிப்பதை பார்த்து,அதிர்கிறார். விசாரித்தால் அவனை குடிக்கச்,சொன்னது மனைவிதான். ஏன் என்பது சுவாரஸ்யம்

தான் கறுப்பு என்ற தாழ்வு மனப்பான்மையில் இருப்பவரை , செல்லமாக " மூஞ்சியப்பாரு . " என"கேலியாக சொல்கிறாள் ஒரு பெண். அதில் இருக்கும் காதலை புரிந்து கொள்ளாமல் அவளை இழந்து விட்டதை பிற்கால சந்திப்பில் உணர்கிறார்
ஒரு ஏழைத்தாய் கிடைக்கும் உணவை குழந்தைக்கு தராமல் தானே உண்கிறாள். ஏன் என்பது மனதை உருக்குகிறது

அவருக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்ததை கணையாழி கேலியாக எழுதியது.

அது சாதிய வெறி என விட்டுவிடலாம். ஆனால் சுஜாதாவுமேகூட கேலியாக எழுதினார். சுஜாதாவின் அந்த காழ்புணர்ச்சிக்கு என்ன காரணம் என்பதற்கு ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது இப்படி பக்கத்துக்கு பக்கம் சுவாரஸ்யம்.

படியுங்கள்

பிகு...  சமுத்திரத்தை கேலி செய்த சுஜாதா அதே கட்டுரையில் ஜெயமோகனையும் சீண்டியிருந்தார்






Thursday, December 19, 2013

தமிழை அழித்த எழுத்தாளர் சுஜாதா



நமக்கு தமிழ் ஆளுமை இல்லாமை போனதற்கு தெரிந்தோ தெரியாமலோ சுஜாதா காரணமாகி விட்டார்... உதாரணமாக இந்த பாடலை பாருங்கள்

"வாரார் ஆயினும் வரினும் அவர் நமக்கு
யார் ஆகியரோ? தோழி! நீர
நீரப் பைம்போது உளரி, புதல
பீலி ஒண்பொறிக் கருவிளை ஆட்டி
நுண்முள் ஈங்கைச் செவ்வரும்பு ஊழ்த்த
வண்ணத்துய்ம்மலர் உதிர, தண்ணென்று
இன்னாது எளிதரும் வாடையொடு
என் ஆயினாள் கொல் என்னா தோரே?"

இதற்கு அவர் பாணி விளக்க உரை இப்படி இருக்கும் - தாமதமான காதல் , இல்லாத காதலுக்கு சமம்.

அட அஞ்சு வார்த்தையில் சொல்லி விட்டாரே என நாம் மகிழ்ந்து கொள்வோம்... அதன் பின் தூய தமிழ் விளக்க உரைகளை படித்தால் எரிச்ச்சலாக இருப்பதாக தோன்றும்..ஆக நம் தமிழ் சொற்கள் ஆளுமை இல்லாமலேயே போய் விடும்.. யோசித்தால் கஷ்டமாக இருக்கிறது

எளிமையே சிறப்பு ( அதாவது குறைந்த சொற்களை வைத்து சமாளிப்பதே சிறப்பு ) என்ற மன நிலை நமக்குள் பரவி விட்டது... இங்ஙனம் , ஐயன்மீர் , கூறானின்றான், இஃதிங்ஙனம் என்றெல்லாம் எழுதுவதில்லைகொடுத்தான் என சொல்லுங்கள்.. நல்கினான்..ஈந்தான் வேண்டாம் என அவர் சொல்லியதால் , வேறு யார் இப்படி எழுதினால் கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டோம்... ஆகவே இந்த சொற்கள் எல்லாம் அழிந்தே விட்டன.. கிட்டத்தட்ட 100 சொற்களை வைத்தே தமிழை எழுதி வருகிறோம்... ஆங்கிலத்தில் இந்த நிலை இல்லை...


ஆங்கில நாளிதழ் இண்டர்வியூவுக்கு போகிறீர்கள்..உங்களை ஒரு கட்டுரை எழுதி காட்ட சொல்கிறார்கள்..Go , come, give போன்ற நூறு அடிப்படை வார்த்தைகளை வைத்து  மட்டும் கட்டுரை எழுதினால் நீங்கள் ரிஜக்டட்... தமிழ் நாளிதழுக்கு போகிறீர்கள்.... இங்ஙனம். இவ்வாறே , அஃது , வேட்டற்பொருட்டு என அன்றாட நூறு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு எழுதினால் நீங்கள் ரிஜக்டட்

Tuesday, June 4, 2013

சுஜாதா மனைவி பேட்டியும், எல்லை கடந்த பிராமணீயமும்


  நான் சுஜாதா எழுத்துகளை இன்று நேற்றல்ல. வெகு நாட்களாகவே படித்து கொண்டு இருக்கிறேன். இன்று பலர் எழுத்துகளை படிக்கும்போது , என்னைப்ப்போலவே பலரும் அவரால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.

யார் என்ன சொன்னாலும் அவர் எழுத்துகள் மீதான மரியாதை குறையப்போவதில்லை. அவர் நூல்க்ளை அவ்வப்போது வாங்குவதும் குறையப்போவதில்லை.


எழுத்தாளர் என்பதற்கு அப்பாற்பட்டு , அவர் ஒரு மனிதராக எப்படி வாழ்ந்தார் என்பதை ஓரளவுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது அவர் மனைவியின் பேட்டி.

அந்த பேட்டியை விட அதற்கான நம் மக்களின் எதிர்வினைதான் சுவாரஸ்யமாக இருந்தது.

      அவர் மனைவியின் முக்கிய குற்றச்சாட்டு என்ன?


” நான் கொஞ்சம் முற்போக்கான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். பெண்கள் படிக்க வேண்டும் , உலக அறிவு பெற்றிருக்க வேண்டும்  என நினைக்கும் குடும்பம்.  என் அம்மாவுக்கு பிரத்தியேகமாக ஆங்கிலோ இந்திய டீச்சரை நியமித்து ஆங்கிலம் கற்பித்தார்கள்.

ஆனால் கல்யாணத்துக்கு பின் முற்றிலும் எதிர்மாறான சூழல். சுஜாதா ஜாதி உணர்வு மிக்க பிற்போக்காளாராக இருந்தார். நான் புத்தகம் படிப்பது அவருக்கு பிடிக்காது.  நான் அவருக்கு அடங்கியே இருக்க வேண்டும் என நினைத்தார்.

இப்படிப்பட்ட ஒருவருடன் வாழ பிடிக்காமல் கதறி இருக்கிறேன். பிறந்த வீட்டுக்கே வந்து விடுகிறேன் என அம்மாவிடம் அழுது இருக்கிறேன். ஆனால் அன்றைய சூழலின் என்னால் தைரியமாக வெளியே வர முடியவில்லை. அதுவே இன்றைய சூழலாக இருந்தால் , அம்மாவிடம் புலம்பாமல் , நானே முடிவெடுத்து அவரை விட்டு விலகி இருப்பேன்”

இப்படி சொல்லி இருக்கிறார் அவர்.

நினைவில் கொள்ளுங்கள் , அவர் சொன்னதன் வீரியத்தை , கடுமையை குறைத்துதான் பேட்டியை வெளியிட்டு இருக்கிறார்கள். அதுவே இப்படி இருக்கிறது.

இதை தமிழ் சமுதாயம் எப்படி பார்க்க போகிறது என ஒரு பார்வையாளனாக கவனித்தேன்.

எல்லோருமே சொல்லி வைத்தது போல ஒரே மாதிரிதான் எதிர்வினை ஆற்றி இருந்தார்கள்.

ஜாதி உணர்வு, பெண்ணை அடிமையாக நினைத்தல் போன்றவற்றை பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை.

வெளியே வர நினைத்து முடியாமல் போனதால் , காம்ப்ரமைஸ் ஆகி வாழ ஆரம்பித்தார் அல்லவா. அப்போது ஏற்பட்ட சில ஏமாற்றங்களை சொல்லி இருந்தார் அவர். குடும்பத்தை கவனிப்பதில்லை என்பது போன்ற சராசரி மனைவியனரின் ஏமாற்றங்கள்.

 நம் ஆட்கள் இதை மட்டும் பிடித்து கொண்டு விட்டார்கள்.

ஜாதி வெறி , பெண்ணடிமைத்தனம் போன்றவற்றை மறந்து விட்டார்கள்.

” அவங்க என்ன பெரிசா சொல்லிட்டாங்க... குடும்பத்தை கவனிக்கல... சேலை வாங்கி கொடுக்கல... இது எல்லோரும் சொல்லும் குற்றச்சாட்டுதானே “

“ ஆம்பிளைனா கொஞ்சம் பிசியாத்தான் இருப்பான்,., பொம்பளைதான் அட்ஜ்ஸ்ட் செஞ்சு போகணும்”

“ ஓர் எழுத்தாளனுக்காக கொஞ்சம் விட்டு கொடுப்பதில் தவறில்லை”

“ பாவம்,, அவர் மனைவி சோகம் , வெறுமை காரணமாக இப்படி பேசுகிறார்”

இப்படி எல்லாம் மெயின் மேட்டருக்கு சம்பந்தம் இல்லாமல் பேசி அவரை “ காப்பாற்றுகிறார்களாம்”

ஆனால் இதிலுமே வலுவான வாதம் இல்லை என்கிறார் ஞாநி

அவர் சொல்லி இருப்பதாவது



இப்படி இருப்பதுதானே சகஜமானது என்று சராசரி ஆண் மனம் நினைக்கிறது. இதை ஏற்றுக் கொண்டு வாழ்வதுதானே பெண்ணுக்கும் சகஜமானது என்று ஆண் மனம் நினைக்கிறது. ஏற்க மறுக்கும் பெண் மனம் அதை வெளிப்படுத்தும்போது ஆண்கள் அதிர்ச்சியடைகிறார்கள். தங்கள் நிலையை நியாயப்படுத்த பல உத்திகளை கையாளுகிறார்கள். எழுத்தாளனும் சராசரி ஆண்தான் என்று ஒப்புக் கொள்ள மறுத்து சராசரிப் பெண்ணாக இருக்க மறுக்கும் எழுத்தாளன் மனைவியை உளவியல் ஆய்வுக்கு உட்படுத்துவதுவது அதில் ஓர் உத்தி.




ஆனால் இவருமே கூட மெயின் மேட்டரை தொடவில்லை.

ஒரு பத்திரிக்கையில் சுஜாதாவிடம் வாசகர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். கேள்வியும் சுஜாதாவின் பதிலும்
” இருபது வயதில் கம்யூனிசம் பேசாதவனும் இல்லை.  நாற்பதில் ஆன்மீகம் பேசாதவனும் இல்லை என்கிறார்களே? “
“ இருக்கிறேனே “



கடவுளை நம்புவது நம்பாதது அவரவர் உரிமை.. ஆனால் தன்னை முற்போக்குவாதியாக காட்டிகொள்ளும் பொருட்டு , கடவுளை நம்பாதவர் போல அந்த காலத்தில் முன் நிறுத்தி வந்தார், ஒரு கட்டத்தில் பிராம்ண சங்க கூட்டம் , ஆன்மீகம் என்றெல்லாம் வெளிப்படையாக இறங்கினார்,

ஆனால் ஆரம்பம் முதலே பிற்போக்குவாதியாகவும் ஜாதி உணர்வு மிக்கவராகவும் இருந்தார் என்கிறார் திருமதி சுஜாதா;

ஒரு நல்ல எழுத்தாளன் , நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.ஒரு நல்ல மனிதன் , ஒரு நல்ல எழுத்தாளனாக இருக்க வேண்டும் என்பதும் இல்லை.

அது வேறு. இது வேறு.

யார் வந்து என்ன சொன்னாலும் சுஜாதாவின் எழுத்து சாதனைகளை யாரும் மறைக்க முடியாது.

உண்மைகளை மறைத்துதான் சுஜாதாவின் பெயரை காப்பாற்ற வேண்டும் என நினைப்பவர்கள் உண்மையில் சுஜாதாவிற்கு அவப்பெயரையை சேர்க்கிறார்கள்...

ஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும். இப்படி சுஜாதாவை “ காப்பாற்ற “ முயல்பவர்கள் , பிராமணர்கள் மட்டும் அல்ல.. பிராமணர்கள் அல்லாதவர்களும் கூட.

இன்னும் சொல்லப்போனால் பிராமணர்களில் பலர் முற்போக்கு சிந்தனைகளுடன் வாழ்கின்றனர்.

ஆக , பிராமணீயம் என்பது பிராமண சமுதாயத்தின் எல்லை கடந்து பரவுவதையே இந்த எதிர் வினைகள் காட்டுகின்றன.




Saturday, June 1, 2013

எழுத்தாளர் சுஜாதாவின் ஜாதி உணர்வும் , பெரியாரின் தீர்க்க தரிசனமும்


” எழுத்தாளர் சுஜாதாவுக்கு பெண்கள் புத்தகம் படித்தால் பிடிக்காது ”

“ கடைசி வரை ஓர் அக்ரஹாரத்து சிறுவன் மன நிலையிலேயே இருந்தார் “

” அவருடன் வாழப்பிடிக்காமல் என் அம்மாவிடம் கதறியிருக்கிறேன். ஆனால் அன்றைய நிலையில் வேறு வழியில்லாமல் அவருடன் வாழ்ந்தேன். இன்றைய கால கட்டமாக இருந்திருந்தால் அவரை தூக்கி எறிந்து இருப்பேன் “

இப்படி எல்லாம் சுஜாதாவின் மனைவி பேட்டி அளித்துள்ளார்.

ஓர் எழுத்தாளனை அவன் எழுத்தை வைத்து மட்டுமே விமர்சிக்க வேண்டும்.

அவன் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி நமக்கு கவலை இல்லை. அதனால் சுஜாதாவைப்பற்றிய , திறமையை பற்றிய நம் மதிப்பீடு இந்த ஒரு பேட்டியால் மாறிவிடப்போவதில்லை.

ஆனால் பெரியார் சொன்ன ஒரு விஷ்யம் சமுதாயம் சம்பதப்பட்டது . அதை மட்டும் பார்ப்பது அவசியம்.

“ பார்ப்பானுக்கு எந்த கொள்கையும் கிடையாது. எது லாபமோ அதை செய்வது மட்டுமே அவன் கொள்கை. நாளைக்கே அசைவம் சாப்பிடுவதுதான் லாபம் என்ற நிலை வந்தால் , அசைவம் சாப்பிட ஆரம்பிப்பான். அது மட்டுமல்ல. மீனின் நடுத்துண்டு தனக்குத்தான் தரப்பட வேண்டும் என்ற ஒரு புதிய ஆச்சாரத்தை உருவாக்கி கொள்வான் “ என்கிறார் பெரியார்.

மனதளவில் பிற்போக்கானவர்களாக இருந்தாலும் , பெண் விடுதலை , நாத்திகம் போன்றவை ஃபேஷனாக இருந்தால் , அதிலும் புகுந்து அவர்களே முன்னணியில் இருப்பதை கொஞ்சம் கவனித்தால் புரிந்து கொள்ள முடியும்.

அவாள் தலைமையில்தான் பெண் உரிமை , நாத்திகம் , சினிமா , இலக்கியம் என எல்லாவற்றையும் தம் கைக்குள் எப்படியோ கொண்டு வந்து விடுகிறார்கள்.

 வெகு குறைவாக எண்ணிகையில் இருக்கும் பிராமணர்களா உங்கள் எதிரிகள் . இதில் லாஜிக்கே இல்லையே என அண்ணாவிடம் கேட்டார்கள்.

எங்களுக்கு பிராமணர்கள் எதிரிகள் அல்ல.. பிராமணீயமே எதிரி என்றார் அவர்.

இந்த பிராமணீயம்தான் அவர்களுக்கு எல்லா துறையிலும் ஆதிக்கத்தை தருகிறது என்றார் அவர்.

ஒரு பிற்போக்கு மனிதராக வாழ்ந்த சுஜாதா , தமிழ் எழுத்தின் அடையாளமாக கொஞ்ச நாட்கள் இருந்தது இதையே நினைவு படுத்தியது.

 நானும் சுஜாதா ரசிகன் என்பதை கொஞ்சம் வெட்கத்துடன் ஒப்புக்கொள்கிறேன்.


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா