Showing posts with label தர்மன். Show all posts
Showing posts with label தர்மன். Show all posts

Friday, September 4, 2020

சோ தர்மனின் சூல்.. சுயநலத்தால் அழியும் இயற்கை

 நமது கிராம நிர்வாக முறை − குறிப்பாக நீர் மேலாண்மை − வெகு அற்புதமானது.

ஊருணிகள் , ஏரிகள் , குளங்கள் , கண்மாய்கள் என வடிவமைத்து , தலை,போகிற வேலை என்றாலும் அதை,விட்டுவிட்டு , ஆண்டுக்கொரு முறை கிராமத்து மக்கள் அனைவரும் சாதி , பொருளாதார வித்தியாசமின்றி ஒன்றுகூடி கண்மாயை தூர்வாரும் ஊர்க்கட்டளை என மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வயிராற உண்டவர்கள் நாம்

கண்மாய்களை சீரழித்தால் குடும்பத்தில் ஊமைக்குழமை பிறக்கும் என்ற ""மூடநம்பிக்கை " கொண்ட முன்னோர்கள் காலத்தில் வறட்சி கிடையாது

இதெல்லாம் மூடநம்பிக்கை ,  ஏரிகளை மூடி கட்டிடங்கள் கட்டினால் காசு கிடைக்கும் என்று தெரிந்து கொண்ட அறிவாளிகள் அதிகாரம் பெற்றதும் நீர் நிலைகள் அழிய ஆரம்பித்தன

கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஏராளமான கண்மாய்கள் ஏரிகள் அழிக்கப்பட்டு தமிழகம் பாலைவனமாகி வருகிறது

இது குறித்து ஆய்வுகள் செய்து சோ. தர்மன் எழுதியுள்ள நாவல் "சூலி"


எப்படி,ஒரு தாய் ஓர் உயிரை பூமிக்கு கொணர்கிறாளோ அதுபோல ஒரு கண்மாய் உலகுக்கு எத்தனைஎத்தனை உயிர்களை புவிக்கு அளிக்கின்றன


ஆரா, உளுவை, கெண்டை, பாம்புக்கெண்டை, கூனக்கெண்டை, அயிரை, கெளுறு, கொரவை, விலாங்கு, விரால், ஊளி, தேழி என எத்தனை மீன்கள் , அவற்றை நாடி வரும் பறவைகள் , அதைச்சுற்றி வாழும் தாவரங்கள் என வாழ வைக்கும் தாய்தான் கண்மாய்


மனசாட்சியின்றி இதை அழித்த கட்சியினரை நோவதா , அழிவது நம் குழந்தைகள்தான் என தெரிந்தும் அழிவுக்கு துணைபோகும் மக்களை நோவதா ?


அரசர் காலத்தில் நீர்நிலை பராமரிப்புக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை அழகாக சித்தரித்துள்ளார் தர்மன்

உருளைக்குடி கிராமத்துக்கு தாயாக விளங்கிய கண்மாயை அரசாங்கங்கள் அழிப்பதை கண்முன் காட்டுகிறார்


ரத்தமும் சதையுமான பாத்திரங்கள் ,  பறவைகள் மரங்கள் பற்றிய சுவையான தகவல்கள் , சுவாரஸ்யமான சம்பவங்கள் என நல்ல வாசிப்பனுவம் தருகிறது சூலி







Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா