Showing posts with label பதிவர் ஆன்மீகம் நாத்திகம். Show all posts
Showing posts with label பதிவர் ஆன்மீகம் நாத்திகம். Show all posts

Thursday, February 3, 2011

கேள்வி கேளுங்கள் - ஆஷிக் அஹ்மத் .. யாரை ? எதற்கு ? எப்படி ? 




சாமி கும்பிடுவன் என்றால் அவன் ஆட்டு மந்தை கூட்டத்தை சேர்ந்தவன்,  அந்த மதத்தை சேர்ந்தவன் என்றால் வன்முறையாளன் , இந்த மதத்தை சேர்ந்தவன் என்றால் பேராசைக்காரன், இந்த இனத்தை சேர்ந்தவன் சூழ்ச்சிக்காரன், நாத்திகன் என்றால் அறிவாளி என்றெல்லாம் பொதுப்புத்தியுடன் சிந்திப்பது தமிழர்களின் தனி குணம்..

Tuesday, February 1, 2011

நாத்திகவாதமும் ஆட்டுமந்தை சிந்தனையும்- நண்பர் ஆதி தந்த அதிர்ச்சி

 

நிறுவனமயமாதல் என்று வந்து விட்டால் அது ஆபத்துக்கு அறிகுறி என்பதை காலம் காலமாக பார்த்து வருகிறோம்..

நல்ல விஷ்யமும் கூட விஷமாவது இதனால்தான்..

விளக்கமாக சொல்கிறேன்..

உங்களுக்கு ரோஜா பூ பிடிக்கிறது என வைத்து கொள்ளுங்கள்.. அது உங்கள் ரசனை சார்ந்த விஷயம்.. வீட்டில் விதமாக பூக்கள் வளர்த்து ரசிக்கலாம்..

ஆனால் ரோஜா பூ ரசிகர்கள் எல்லாம் சேர்ந்து சிந்திக்க ஆரம்பிக்கிறீர்கள் என வைத்து ஆரம்பிக்கிறீர்கள் என வைத்து கொள்ளுங்கள்…

வம்பு ஆரம்பம் என அர்த்தம்…

நாம் vs அவர்கள் என்ற சிந்தனை உருவாக ஆரம்பிக்கும்.. ரோஜாவை ரசிக்காத அனைவரும் ரசனை இல்லாதவர்கள் என நினைக்க ஆரம்பிப்பீர்கள்.

காலப்போக்கில் ரோஜா மீது இருக்கும் ஆர்வத்தை விட நீங்கள் உருவாக்கிய ரோஜா ரசிகர் சங்கம்  மீதான ஆர்வம் அதிகரிக்க ஆரம்பிக்கும்…

ரோஜாவையே பார்த்திராத சிலர் கூட இந்த சங்கத்தில் சேர்ந்த்து , நாம் எல்லாம் எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறோம்.. உலகம் ஏன் ரோஜாவின் அருமையை புரிந்து கொள்ளாமல் அறியாமையில் இருக்கிறது என வருந்த ஆரம்பிப்பார்கள்..

 

ஆன்மீகம் , நாத்திகம் என்று எல்லாமே இது போலத்தான் ஆகி விட்டன..

உதாரணமாக பெரியாரை எடுத்து கொண்டால், அவர் மக்கள் மேல் பேரன்பு கொண்டவர்.. மக்கள் கஷ்டத்துக்கு காரணம் கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தி சிலர் அவர்களை ஏமாற்றுவதாக நினைத்தார்… எனவே கடவுள் நம்பிக்கையை எதிர்த்தார்..

அவர் புத்தகங்கள் அனைத்தையும் படித்தால் தெரியும்.. அவர் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற ஆராய்ச்சியில் மட்டுமே இயங்கவில்லை..

பெண் விடுதலை, சமூக நீதி, சமத்துவம், சமுதாய மாற்றம் என பல தளங்களில் இயங்கி இருக்கிறார்..

இந்த மாற்றங்களுக்கு கடவுள் தேவை இல்லை என்பது அவர் ஆராய்ந்து கண்ட முடிவு..…

ஆனால் இது போன்ற ஆய்வு பார்வையோ, சமுதாய பார்வையோ இல்லாமல் ,  நாத்திகன் என சொல்லி கொள்வதில் கிடைக்கும் ஒரு ”கிக்” கிற்காக அப்படி சொல்லி கொள்பவர்களே அதிகம்..

இது குழு மனப்பான்மை…

ஒரு குழுவுடன் தன்னை அடையாள படுத்தி கொள்ளும் ஆர்வம்..

சினிமா நடிகர் ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் மனதில் செயல்படுவது இதுதான்..

அதே போல சாமியார் பக்தர்கள்..

சத் குரு, மகா குரு என்றெல்லாம் படம் காட்டுவார்கள்.. அந்த குருவை விட இவர் சூப்பர் என்பார்கள்..

இதுவும் குழு மனப்பான்மைதான்…

சமீபத்தில் நண்பர் ஆதியின் இடுகை ஒன்றை படித்தேன்..

எழுதியது அவர்தானா என மீண்டும் மீண்டும் படிக்க வேண்டி இருந்தது…

ஏன் என்றால் , அவர் எழுத்தில் என்றுமே பண்பை கடைபிடிக்க கூடியவர்.. யாரையும் புண்படுத்தாதவர்…

அன் பார்லிமெண்ட்ரி வார்த்தைகள் மறந்தும் அவர் எழுத்தில் வராது.. அது மட்டும் அல்ல… மிக மிக சாதாரண நெகடிவ் வார்தைகள் கூட வந்து விட கூடாது என்பதில் கவனமாக இருப்பார்..

அப்படிப்ப்பட்ட அவர், நாத்திகவாதிகள் என்ற குழுவில் இல்லாத அனைவரும் ஆட்டு மந்தை கூட்டத்தை சேர்ந்தவர்கள்  என்பது போல எழுதி இருந்ததை பார்த்து ஆச்சர்யமாக இருந்தது…

“ நம்ம குரு எவ்வளவு உன்மத்தமானவர் .. இவரை இந்த உலகம் புரிந்து கொள்ளாமல் கிண்டல் செய்கிறதே..” என அங்கலாய்க்கும் சராசரி சீடன் போல பேசுகிறாரே என ஆச்சர்யமாக இருந்தது..

ஆனால் குழு மனப்பான்மையில் சிக்கினால் , ஒரு குழுவுடன் அடையாள படுத்தி கொண்டால் , மற்றவர்களை கிண்டல் செய்வது இயல்புதான் ..

“ எங்கள் அணியில் நீ இல்லை என்றால், நீ குற்றவாளிகள் அணியை சேர்ந்தவன் “ என்று புஷ் சொன்னது இதனால்தான்..

 

சரி விடுங்கள்..

நாம் குழு மனப்பான்மையில் சிக்காத குழுவை சேர்ந்தவர்கள்… மற்றவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்..

நாம் மட்டும் வித்தியாசமாக சிந்திக்கிறோம் என்கிறீர்களா?

ம்ம்.. என்ன சொல்வது?

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா