Showing posts with label புதிய தலைமுறை ஏணி சிறுகதை. Show all posts
Showing posts with label புதிய தலைமுறை ஏணி சிறுகதை. Show all posts

Sunday, April 4, 2010

புதிய தலைமுறை


" டேய்... சேத்துலையும் , சகதிலயும் புரண்டு சம்பாதிக்கிறேன்.... உன்னை படிக்க வைக்க... காசை வீணா செலவழிக்கதே" அப்பாவின் அறிவுரை என் காதில் ஏறவில்லை.... "என்ன சொன்னாலும் கேட்க மாட்டியா? என கஷ்டம் என்னோட முடியனும் டா.. அடுத்து வர்ற புதிய தலைமுறை, நல்ல வரணும், "

ஓய்வெடுக்க போனார் அப்பா...

காலையில் நடந்த சம்பவத்தை, அவர் மறந்து விட்டார் போலும்.... நான் மறக்கவில்லை..

நானும் அவரும், அக்க கல்யாண பத்திர்க்கை கொடுக்க, முதலாளி வீடு சென்றோம்.... வயலில், மற்றவர்களுக்கு கொடுத்து விட்டு அங்கு செல்ல கொஞ்சம் தாமதம் ஆகி விட்டது.... கூட, நம்ம நண்பன் ரத்னா வேலு...

" அய்யா " குரல் கொடுத்தோம்.... " ஹே ஹே அங்கேயே நில்லு.... படிச்சா பியன் தானே நீ... சகதியோட , வீட்டுக்குள் கலை வைப்பது, பாவம் அப்படீன்னு வள்ளுவர் சொல்லி இருக்காரு ..தெரியாத " என அரை குறை படிப்பறிவை காட்டினான, முதலை மகன் ரவி....

அவனிடம் பத்திரிகை கொடுத்து விட்டு நடை கட்டினோம்....

" டேய் ரத்னா வேலு... உன் டைரில குறிச்சு வைச்சுக்க... நானும் பெரிய ஆள் ஆகி, இதே மாதிரி வீடு கட்டுவேன்..... அந்த வீடு முன்னாடி, தோட்டம் போடுவேன்.... சக்தி காலோட வர்றவனுக்கும் உள்ளே அனுமதி "
சூளுரைதேன் ...

" டேய்... நம்ம கூட்டத்துல நல்ல படிக்றவன் நீதான்... கண்டிப்பா பெரிய ஆள் aava டா ... நான் பாகத்தான் போறேன்.. உனக்கு என்ன வேணுமோ, என்ன்னால முடிஞ்சுது பண்றேண்டா " கண்ணீருடன் ரத்னா வேல்....

**********************************************

.. " அம்மா..முதலாலி பய்யன் ரவி அவன் வீட்டுக்கு வர சொன்னான்... பார்த்துட்டு வந்துடறேன்... ரத்னா வேல் வந்த அங்கே அனுப்பு.... " சொல்லி விட்டு சைக்கிளை மிதித்தேன்.... " என்ன ரவி... வர சொன்னியம்? "

"ஆமாண்டா... வீட்ல எல்லோரும் வெளியே போறோம்.... வர லேட் ஆகும்.... வீட்ல இருந்து பார்த்துக்க... உனக்கு போர் அடிக்காம இருக்க, டிவி, vcd எல்லாம் இருக்கு... ஓகே வ "

அவன் AC யை தட்டி விட , இதம்மான குளிர் பரவியது.... வீட்டில் எல்லாமே பளிச் என சுத்தமாக இருந்தது....
பையா படத்தில் தமன்னா டான்ஸ் ஆடி கொண்டு இருந்தார்....

" உட்கார்ந்து பாருடா" அவன் சொல்லி விட்டு கிளம்ப ஆயத்தமானான்...

காலிங் பெல்... வாசலில் ரத்னா வேலு மற்றும் இன்னொரு நண்பன் ..... ரவி வரவேற்றான்... "வாடா .. குமார பார்கனுமா... உள்ளே வா "

" ஹே... ரத்னா வேலு... என்னடா விஷயம்... அங்கேயே நின்னு சொல்லுடா... "

" உள்ளே வந்து சொல்லட்டும் டா " என்றான் ரவி..

" வேண்டாம் ரவி... அவன் கால் ல பாரு ..ஒரே சக்தி... இவனுங்களை உள்ளே விட்ட நாஸ்தி பண்ணிரூவாங்க.... நாலடியார் ல என்ன சொல்லி இருக்கு தெரியுமா"

" சரி உன் இஷ்டம்" கிளம்பி போனான் ரவி....

அழுவாச்சி ரத்னா வேல் மூஞ்சியை பார்த்து அலுத்த போன எனக்கு, ரவியின் வாளிப்பான முகத்தை பார்ப்பது, தேசிய நெடுஞ்சாலையில் , 120 கி மீ வேகத்தில்பறப்பது போன்ற உற்சாகத்தை தந்தது.... அவன் கிளம்பி போவதும், ரத்னா வேல் வருவதும் , இரட்டை துன்பமாக இருந்தது

" என்ன டா ரத்னா வேலு... விஷயத்த சொல்லிட்டு கிளம்பு "

" நேத்து உன்கிட்ட வாங்குன ஏணியை, உன் வீட்டு வாசலில் வச்சுட்டேன்... மறக்காம எடுத்து உள்ளே வச்சுரு..அதை சொல்லத்தான் வந்தேன்" சற்று நிறுத்திய ரத்னா வேல், " ஏணிய மறந்துடாதே" அழுத்தி சொல்லி விட்டு கிளம்பினான்..

அவன் கண்கள் கலங்கி இருந்தது போல் தோன்றியது...

தூசி பட்டு இருக்கலாம் ...


a short story by pichaikaaran

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா