Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Sunday, January 27, 2019

பிச்சைஃபைட் என்றால் என்ன ? எடுத்துக்காட்டுடன் விளக்குக



பிச்சைஃபைட்... (pichaified)

பன்னாட்டு நிறுவனத்தில்   மேலதிகரியாக பணி புரியும் ஒரு நண்பனை சந்தித்தேன்.,., இணைய நண்பர்களையே அதிகம் சந்திக்கும் சூழலில் , ” நேரடி “ நண்பனை இப்படி சந்தித்து வெகு நாட்கள் ஆகி விட்டன


இல்லத்தில் சந்திப்பதோ ஹோட்டல் அறையில் சந்திப்பதோ உவப்பாக இல்லை... பேசுவதற்காகவே ஒரு ரயில் பயணம் மேற்கொண்டோம்... பிளாட்ஃபாரத்தில் தேநீர் அருந்தியபடி பல விஷயங்களை விவாதித்தோம்..

ஸ்டார் ஹோட்டலில் செமினார் தலைமை ஏற்று நடத்துவதற்காக சென்னை வந்துள்ள அவன் , பிளாட்ஃபார்ம் விவாதத்திலும் உற்சாகமாக கலந்து கொண்டது மகிழ்வளித்தது...

இலக்கியம் , கிரிக்கெட், சினிமா என பல திசைகளில் விவாதம் சிறகடித்தது


  • இங்கிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்வளிப்பது
  • ஆஸ்திரேலியாவை இந்தியா வெல்ல முக்கிய காரணம் புஜாரா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோரின் அபார ஆட்டமாகும்... சுவாரஸ்ய நிகழ்வாக இவர்கள் இருவரும் எதிரெதிர் அணிகளில் ஆடும் சூழல் உருவானது.. ரஞ்சிக்கோப்பையின் முக்கியமான ஆட்டம் ஒன்றில் கர்னாடக சௌராஷ்ட்ர அணிகள் மோதின,, ஆட்டம் சூடு பறந்தது....  முடிவை கடைசி வரை கணிக்க முடியவில்லை... அகர்வால் , புஜாரா என இருவருமே அவரவர் அணிகளுக்கு சிறப்பான பங்களிப்பை அளித்தனர்.. 20 -20 போன்ற தமாஷ்களை விட இது போன்ற ஆடடங்களில்தான் வீரர்களின் கேரக்டர் வெளிப்படுகிறது

  • அபூர்வ ஆலயங்கள் குறித்த நூல் ஒன்று கிடைத்தது... அதை அடிப்படையாக கொண்டு கிராமங்களுக்கு சென்றேன்.... பண்டைய சிவாலயம் ஒன்றைக் கண்டு மகிழ்ந்தேன்...பூட்டப்பட்டு இருந்தது..அக்கம்பக்கத்தார் என் மீது பரிவு கொண்டு பூசாரியை வரவழைத்து , கோயிலை திறந்து சாமி தரிசனம் செய்ய வைத்தனர்... அவர்கள் அன்பில் ஆண்டவனைக் கண்டேன் 


  • கண்ணில் கட்டி வந்து செம வலி.. வலியை மறக்க நிம்மதியாக தூங்கினேன்... காஃபி அருந்த சென்ற போது , கருவாட்டு கூடைக்கார பெண்மணி , கண்ணில் என்னப்பா தம்பி என்றார்... அவர் என் சம வயதினராக இருக்கலாம்... சின்னவராக இருக்கலாம்.. பெரியவராக இருக்கலாம்... அவர் தம்பி என்பது சார் என அழைப்பது போல ஒரு வழ்க்குச்சொல் என நினைத்துக்கொண்டேன்... அல்லது அந்தச்சொல் பரிவை , ஒரு விலகலுடன் கூடிய அன்பை , உரிமையை , தன் உயர்வை காட்டுவதாகவும் இருக்கலாம்...  கண்கட்டி, நாமக்க்ட்டியை அரைத்து பூசி இருக்கிறேன் என்றேன்.. அது சரிப்படாது என சொல்லி விட்டு , ஒரு மருத்துவ டிப்ஸ் கொடுத்தார்... இரவில் அதை செய்தேன்..காலையில். அறவே குணமாகி விட்டது
அவருக்கு நன்றி சொல்ல தேடுகிறேன்.., நாம் நன்றி சொல்ல நினைக்கும் பலரை பார்க்கவே முடிவதில்லை... அவர்கள் நமக்கு செய்தது பிறர்க்கு நாம் செய்வதுதான் நன்றிக்கடன் என நினைத்துக்கொண்டேன்


 

Wednesday, January 23, 2019

பதில் கிடைக்காத கடிதங்கள்


இணையம் அறிமுகம் ஆன ஆரம்ப காலங்களில் ஈமெயில் என்பது மிகப்பெரிய ஆச்சர்ய்மாக இருந்தது... 

ஒரு நொடியில் உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் தகவல் தெரிவிக்கலாம் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி...

ஆனால் என்ன சிக்கல் என்றால் நம் நண்பர்கள் உறவினர்கள் என் யாருக்குமே அப்போது மெயில் ஐ டி இராது...    யாருக்கு மெயில் அனுப்புவது என் தெரியாது...   யாராவது வெகு சிலர் மட்டுமே மெயில் ஐடி உருவாக்கி இருப்பார்கள்

அவர்களுக்கு மெயில் அனுப்புவோம்.. ஆனால் அப்போது கம்ப்யூட்டர் பரவலாக இல்லை என்பதால் உடனடியாக மெயில் பார்க்க மாட்டார்கள்... ஃபோனும்கூட அதிகம் இல்லை என்பதால் லெட்டர் எழுதி , மெயில் அனுப்பிய விபரத்தை சொல்ல வேண்டும்...   அந்த லெட்டர் கிடைத்து விஷ்யம் தெரிந்து அவர்கள் மெயில் பார்த்து நமக்கு பதில் கிடைக்க 10 நாட்கள் ஆகும்

அதன் டெக்னாலஜி வளர்ந்து விட்டது...அனைவரும் தினம் தோறும் அல்ல... ஒவ்வொரு நிமிடமும் மெயில் பார்த்தனர். உடனடியாக பதில் கிடைத்தது

அதன் பின் இன்னும் அதிகமாக டெக்னாலஜி வளர்ந்தது... மீண்டும் பழைய நிலை உருவாகிவிட்டது.. பத்து நாட்கள் கழித்துதான் ரிப்ளை வருகிறது

வாட்சப் போன்ற வசதிகள் வந்து விட்டதால் பலர் மெயில் பார்ப்பதே இல்லை..   மெயில் அனுப்பிவிட்டு லெட்டர் போடும் பழைய கலாச்சாரம் மீண்டும் உருவாகி விட்டது.


ஓகே ,,,,மு மேத்தாவின் கவிதை ஒன்று


முகவரி எழுதிய 

அவன் கையெழுத்து சரியில்லை

கடிதம் ஒன்று

அனாதையாகிவிட்டது


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா