அது என்ன அர்மினியா ? அதன் வரலாறு என்ன ?
அதற்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு?
உலகின் முதல் கிறிஸ்தவ நாடு எது போன்ற பல சுவையான , வரலாற்று தகவலை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் , Mrinzo நிர்மல் ..
இவர் நம் பிலாக்கில் எழுதிய சிரோ டிகிரி விமர்சனம் , டி டெக்ஸ்ட் போன்றவை பரவலானா வரவேற்பு பெற்றன... எனவே தொடர்ந்து எழுதுமாறு கேட்டு கொண்டேன்..
எனக்கோ விஷமம் தெரியும்..ஆனால் விஷயம் தெரியாது.. விஷயம் தெரிந்தவர் எழுதும் கட்டுரையும் இதில் இடம் பெறட்டுமே என்ற எண்ணமே அவரை எழுத காரணம்..
சரி, அவர் கட்டுரை இதோ உங்கள் பார்வைக்கு.
*********************************************************
வரலாற்று பார்வை
அர்மினியா என்ற ஒரு நாடு இருக்கிறது, அது ரஷ்ய federation இல் இருந்த ஒரு நாடு, இப்போது அது ஒரு சுதந்திர நாடு.
இந்த அர்மினியாவிற்கும் Genocide கும் , நமக்கு தெரியாத ஒரு கொடூர சம்பந்தம் உண்டு, 18 ஆம் நுற்றாண்டில் நடந்த ottaman மன்னர்களால் இந்த அர்மேனியர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யபட்டார்கள்.
இந்த அர்மினியர்கள்தான் உலகில் தங்களை முதல் கிறிஸ்துவ நாடு என்று தங்களை பிரகடனபடுத்தி கொண்டவர்கள் அதாவது முதலாவது நுற்றாண்டில்.
இது ரோமர்கள் கிறிஸ்துவத்தை தழுவதற்கும் முன்பு.
மதத்தின் பெயரால் நடந்த 18 ஆம் நுற்றாண்டு படுகொலை இன்றும் தொடர்கிறது. அன்றைய Ottaman empire இன்றைய Turky எனப்படும் நாடு. இந்த மனித படுகொலைகளை பற்றி எழுதி கொண்டே போகலாம்,
இந்த அர்மினியாவுகும் சென்னைக்கும் எதாவது சம்பந்தம் உண்டா?
இந்த அர்மேனியர்கள் பல நுற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார்கள், அதாவது Vasko da Gamma இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு.
சென்னையிலுள்ள "St Thomas Mount" ஒரு அர்மேனியார்தான் என்ற ஒரு மாற்று செய்தி உண்டு, மேலும் கணிசமான அர்மேனியர்கள் வாழ்ந்து வந்துள்ளனர்,
அர்மேனியர்கள் தெரு என்ற ஒரு தெரு இருக்கிறது, அங்கு St Mary;s church என்ற ஒரு 240 வருட பழைய தேவாலயம் ஒன்றும் உள்ளது,

Kojah Petrus Woskan என்ற சென்னை வாழ் அர்மினியார்த்தன் சைதாபேட்டை Marmalong பாலம் ( அந்த பாலத்தை மறைமலை அடிகள் பாலம் என சிலர் "தமிழ்" படுத்தி இருக்கின்றனர்..ஆனால் வரலாற்று காரணம் கூறும் கல் வெட்டு பக்கத்திலேயே இருக்கிறது - பதிப்பாசிரியர் )
மற்றும் St Thomas மௌண்டின் 164படிக்கட்டை கட்டியவர்.
ராயபுரதிலுள்ள Arthoon Road எனபது ஒரு அர்மேனியர் பெயரால் இன்றும் அழைக்கப்படுகிறதாம் அடுத்த முறை சென்னை வரும்போது இந்த இடங்களுக்கு செல்லவேண்டும்.
Mrinzo நிர்மல்
