Sunday, August 25, 2013

அகப்பாடு-1 சீன் படம் வாயிலாக ஞான ரகசியம்

” பிட் படம் பார்க்கணுனு அலைஞ்சியே,, இமாலாயா தியேட்டர்ல கன்னிப்பெண்ணின் காம வெறி போட்டு இருக்காய்ங்க ,, வறீயாடா நாயே “  ஜேம்ஸ் இப்படி கேட்டதுமே எனக்கு கொட்டி விட்டது  , மேலும் பொங்கி வடிந்து விட்டது கோபம். அவன் சொன்ன விஷ்யம் குஜால்தான் என்றாலும் அவன் நாய் என அழைத்தது அவ்வளவாக பிடிக்கவில்லை., ஆனாலும் கோபத்தை காட்டவும் முடியாது.

 இப்படித்தான்  நேற்று கஷ்டப்பட்டு கரக்ட் செய்ய முயன்ற கயல்விழியுடன் பேசிக்கொண்டு இருந்தேன்.  எனக்கு ஏலக்காய் பற்றி தெரியுமே தவிர அப்போதெல்லாம் இலக்கியம் பற்றி தெரியாது.
ஆனாலும் அவள் இலக்கிய ஆர்வலர் என்று என் துப்பறியும் இலாகா கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் சில இலக்கிய வார்த்தைகளை கஷ்டப்பட்டு படித்து வைத்து இருந்தேன்.  மீயதார்த்த வாதம் , மேஜிக்கல் ரியலிசம் , க்யூபிசம், நிகர்னிலை யதார்த்தம், தப்பித்தலியல் , இருத்தலியல்  என தப்பும் தவறுமாக சில வார்த்தைகளை உதிர்த்து அவளை ஒரு மாதிரி இம்ப்ரஸ் செய்து இருந்தேன்.

அப்படி பேசும்போது ஜேம்சை வர சொல்லி இருந்தேன் .என்ன சொல்ல வேண்டும் என்றும் சொல்லிக்கொடுத்து இருந்தேன்.

“ ஏமான் ,  அக்கா கல்யாணம்.. சேட்டிடம் நகை அடகு வைக்கணும்.. என் மூஞ்சியை பார்த்தா தர மாட்டான். நீங்க உயர் சாதி என முகத்தை தெரிந்து கொண்டு காசு கொடுப்பான் “ என அவன் சொல்ல வேண்டும்.

” ஏமான் என்றெல்லாம் சொல்லகூடாது, பெயர் சொல்லியே கூப்பிடலாம் “ என பெருந்தன்மையாக சொல்லி விட்டு அவன் கூட போவதாக திட்டம்.

திட்டமிட்ட படி கயலுடன் கச்சிதமாக பேசிக்கொண்டு இருந்த போது , அவன் வந்து விட்டான். பெருந்தன்மையுடன் பேச ஆயத்தமானேன்.

“ என்னடா நாயே.  செம்ஸ்டர்ல எல்லா பேப்பரும் ஊத்திக்கிச்சாம்.சொல்லவே இல்லை “ என்றான் ஒத்திகையை மறந்தவனாக.

கயல் “ களுக் “ என அந்த கால நாவல்களில் சிரிப்பது போல சிரித்தது கூட என வருத்தம் இல்லை. அவனைப்பார்த்து அவள் சினேகமாக சிரித்தது வருத்தம் அளித்தது.

அவனை தனியாக அழைத்து சென்றேன்

” என்னடா இப்படி பண்ணிட்ட “ என்றேன்,

“ டேய். அது என்னடா ஏமான்...எனக்கு அந்த வார்த்தையே தெரியாது.அதனால்தான் சொல்ல முடியல.  நல்ல வேளை..ரைமிங்கா இன்னொரு வார்த்தை வாய் வரை வந்துடுச்சு,,அவ முன்னாடி சொல்லாம போனேனே,,அதை நெனச்சி சந்தோஷப்பட்டுக்க “ என்றான்.

அப்படி எல்லாம் டார்ச்சர் செய்தாலும் , அவனால் கிடைக்கும் சில உபகாரங்கள் கருதி அவனை பகைத்து கொள்ள முடியவில்லை.

மறுனாள் வந்தான்.
” சோமான்,..தியேட்டர் வேண்டாம். வீடியோ கேசட் கெடச்சு இருக்கு, உன் ரூமில் வைத்து பார்க்கலாமா “ என்றான்.

அப்போதெல்லாம் வீடியோ கேசட்தான். என் அறையில் மட்டும்தான் கேசட் பார்க்கும் வசதி இருந்தது,
ஆனால் இப்படி மற்றவர்கள் வந்து படம் பார்த்தால் வீட்டு ஓனர் சண்டைக்கு வருவார்.

“ கவலைப்படாதே..அவரையும் படம் பார்க்க அழைப்போம் ..அவரையும் கைக்குள் போட்டு கொள்வோம் “ என்றான்.

 நல்ல ஐடியா..

முதலில் அவர் ஒப்புக்கொள்ளவில்லை/

அவர் பெண்ணாசையே இல்லாதவர் என்றால் அது மிகை இல்லை. 40 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் வசித்து வந்தார். வீட்டில் எந்த பெண்ணின் படமும் இருக்காது. எந்த பெண்ணையும் தவ்றாக பார்க்க மாட்டார்.
 எங்களுக்கெல்லாம் அவரைப்பார்த்து பிரமிப்பாக இருக்கும்.
சரி..இந்த படம் பார்த்தாலாவது பெண்ணாசை ஏற்பட்டு திருமணம் செய்தால் நல்லதுதானே என்ற நல்லெண்னத்தோடும் , நண்பர்களுடன் படம் பார்க்கும் திட்டதுடனும் அவரை அழைத்து சம்மதிக்க வைத்தோம்.

அந்த சின்ன அறையில் ஜேம்ஸ், வீட்டு ஓனர் , நான் உட்பட பத்து பேர்.

எல்லோரும் தரையில்தான் அமர்ந்து இருந்தோம். அவருக்கு மட்டும் நாற்காலி கொடுத்தோம்.அவர் மறுத்து விட்டு எங்களுடன் தரையில் அமர்ந்தார்.

கொஞ்ச நேரத்திலேயே தூக்கம் வர ஆரம்பித்து விட்டது. சீன் படம் என்றால் , கொஞ்சம் கொஞ்சமாக சூடேற்றி கடைசியில் நிர்வாண நிலை அடைந்தால்தான் அக விழிப்பு, புற விழிப்பு ,  மெய்ஞானம் எல்லாம் கிடைக்கும். இந்த படத்தில் ஆரம்பத்திலேயே சீன் காட்சி. அதன் பின் துரோகம் செய்த பெண்ணின் சோகங்கள்...யாருக்காக துரோகம் செய்தாளோ அவனே துரோகம் செய்தது..அவர்களை கணவன் மன்னிப்பது என்பது போல மிச்சபடம்.
ஹீரோ ஓரியண்டட் படம்

எல்லோருமே பாதியில் தூங்கி விட்டார்கள்..பாவம் , ஓனர் மட்டும் பார்த்து கொண்டு இருந்தார்.

பாவம்..அவரது முதல் பிட் அனுபவம் இப்படி ஆகி விட்டதே என வருத்தமாக இருந்தது.

திடீரென ஏதோ சத்தம் கேட்கவே அவரைப்பார்த்தேன்.

” இப்படிப்பட்ட படங்கள் பார்க்காமல் என் வாழ்க்கையை வீணாக்கி விட்டேனே... ஹீரோ என்ன கலர்..என்ன உடல் கட்டு,,,ம்ம்ம் “ முனகினார் ஓனர்.

நான் திடுக்கிட்டு மற்றவர்களை பார்த்தேன்.

ஓனர் தனியாக அமர்ந்து என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்பதை அவர்களும் பார்த்து விட்டார்கள் என்பதை அவர்களின் உடல்கள் விறைப்படைவதிலிருந்து, ஆர்வமற்றவர்கள்போல வேறெங்கோ பார்ப்பதிலிருந்து அறிந்தேன்.




Sunday, August 18, 2013

திரை உலகை திசை மாற்றிய இரு திரைப்படங்கள்

ஜெயகாந்தன் படைப்புகளில் மறக்க முடியாத ஒரு குறு நாவல்தான் ஊருக்கு நூறு பேர்.
மறக்க முடியாத நாவல் என சம்பிரதாயமாக சொல்ல வில்லை. உண்மையில் என் அனுபவத்தை சொல்கிறேன் . பள்ளி வயதில் ஒரே ஒரு முறைதான் இதைப் படித்தேன். மலையாண்டி காவலரை கிண்டல் செய்வதற்காக தான் வைத்து இருக்கும் கார்ல் மார்க்ஸ் படத்தை தன் தாத்தா என சொல்லி அவனை நம்ப வைப்பது , கவலைப்படாமால் தூக்கு மேடை ஏறுவது என பல விஷயங்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன

தொடர்ந்து படிக்க

திரை உலகை திசை மாற்றிய இரு திரைப்படங்கள்

இயக்குனர் அம்ஷன் குமாருடன் சிறப்பு பேட்டி

மீபத்தில் லீனா மணிமேகலையின் குறும்பட திரையிடலுக்கு சென்று இருந்தேன். திரையிடல் முடிந்ததும் கலந்துரையாடல், விவாதங்கள் நடந்தன.
பெரும்பாலும் பாராட்டி பேசினாலும் ஒரு பெண் ஆவேசமாக எதிர் குரல் எழுப்பினார். இன்னும் எத்தனை காலத்துக்கு தலித்துகளை பரிதாபத்துக்குரியவர்களாகவே காட்டப்போகிறீர்கள். அவர்களிடம் பாசிடிவ் அம்சங்களே இல்லையா என்பது அவர் பேச்சின் சாராம்சம்.
அதன் பின் லீனா அதற்கு பதில் அளித்தார் என்பது வேறு விஷ்யம். இந்த கட்டுரை லீனாவைப் பற்றியது அல்ல.
அந்த பெண் பேசிய கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. தலித்துகள் சொல்லவொண்ணா கொடுமைகள் அனுபவிப்பது உண்மைதான். அதை கவனத்துக்கு கொண்டு வருவதும் ஏற்கத்தக்கதே,
ஆனால் அவர்களை பாசிட்டிவாக காட்டுவதும் , அவர்களிடம் இருக்கும் பாசிட்டிவ் அம்சங்களை காட்டுவதும் , அவர்கள் வாழ்க்கையில் இருக்கும் அழகியல் , நட்பு, காதல் , அன்பு போன்றவற்றை காட்டுவதும் அவசியம்தானே. ஆனால் பெரும்பாலும் யாரும் இதை செய்வதில்லை.
அம்ஷன் குமாரின் ஒருத்தி திரைப்படம், தலித் பெண் ஒருத்தியைப் பற்றிய படம் என கேள்விப்பட்டபோது, அவரும் இப்படித்தான் எடுத்து இருப்பார் என நினைத்தேன். ஆனால் அந்த படம் கிரா அவர்களின் கிடை குறுநாவலை தழுவி எடுக்கப்பட்டது என தெரியவந்தபோது லேசான ஆர்வம் வந்தது. கிரா என்றாலே கரிசல் மண்ணின் அழகியல் , நுட்பமான சித்திரிப்பு , நகைச்சுவை போன்றவைதான் நினைவுக்கு வரும்.

மேலும் படிக்க ....

Thursday, August 15, 2013

கேமராவை பற்றி பேசுவது குழந்தைத்தனமானது- லீனா பரிசளிப்பு விழாவில் இயக்குனர் பாலு மகேந்திரா ருசிகரம்





சினிமாவில் கேமராவைப் பற்றி பேசுவது , எழுத்தைப் பற்றி பேசாமல் பேனாவைப் பற்றியும் பேப்பரைப் பற்றியும் பேசுவது போன்றது என இயக்குனர் பாலு மகேந்திரா பேசினார்.

லீனா மணிமேகலைக்கு தமிழ் ஸ்டுடியோ சார்பில் லெனின் விருது வழங்கும் விழா  சென்னையில் நடந்தது. மழை தூறிய மாலை வேளையிலும் அரங்கு நிரம்பி வழிந்தது. இயக்குனர் ஹரிஹரன் , பாலாஜி சக்தி வேல் , லெனின் , பாலு மகேந்திரா, பத்திரிக்கையாளர் அசோகன் , நடிகர் சார்லி , அழகிய பெரியவன் , சிவகாமி ஐ ஏ எஸ் போன்றோர் ஆழமான , செறிவான உரைகள் வழங்கினர். ஒரு விஷ்யத்தை உண்மையான ஆர்வத்துடன் பேசினால் , எத்தனை கடினமான மேட்டர் என்றாலும் கூட்டம் அமைதியாக கேட்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் கிட்டத்தட்ட இரவு பத்து மணி வரை கூட்டம் கொஞ்சமும் கலையவில்லை. இன்னும் கொஞ்சம் பேச மாட்டாரா என நினைக்கையில் லெனின் சார் அவராகவே போதும் என நிறுத்தி விட்டார்.

போலியான அலங்காரப்பாராட்டாக இல்லாமல் , ஒவ்வொருவரும் மனதில் இருந்து பேசினார்கள். மாற்று கருத்தையும் முன் வைத்தார்கள்.

லீனா மணிமேகலையை திமிர் பிடித்த , சும்மா பரபரப்புக்கு எழுதும் எழுதும் ”பெண்ணீய”  எழுத்தாளர் என்றே ஒரு காலத்தில் நினைத்து வந்தேன். அதன்பின் அவர் எழுத்துகளை படிக்க்க ஆரம்பித்ததும் அவர் மீது ஒரு மரியாதை வந்தது.

அதன் பின் அவ்வ்வபோது அவர் பேச்சுகளை கேட்பதுண்டு. கணீர் என பேசுவார். ஆனால் இன்றுதான் முதன் முதலாக அவர் நெகிழ்ந்து போய் , குரல் தடுமாறி பேசியதை கேட்டேன்.

முதலில் பேசிய இயக்குனர் ஹரிஹரன் டிஜிட்டல் யுகத்தின் சாத்தியங்களை பேசினார். இனிமேல் இண்டர் ஆக்டிவ் சினிமாக்கள் வரும். பார்வையாளனும் படத்தில் பங்கு பெற முடியும், ஒரு காட்சியை நிறுத்தி, அந்த காட்சி நடக்கும் இடத்தை எக்ஸ்பாண்ட் செய்து பார்க்க முடியும், இப்படி பல வசதிகள் கிடைக்கும். அந்த வகையில் இரண்டு மணி நேர படத்தை இரண்டு மாதங்கள்கூட பார்க்கலாம் என்றார்.

சிவகாமி அய் ஏ எஸ் தன் அனுபவங்கள் சிலவற்றை கூறி லீனாவின் ஆவணப்படங்களைப் பற்றி பேசினார். கவிதைகள் குறித்தும் சொன்னார்.


பாலாஜி சக்திவேல் பேசுகையில் லீனாவின் தேவதைகள் படத்தை சிலாகித்து பேசினார். ஒத்திகை பார்த்து நடிப்பதை ஷூட் செய்வதை விட , டிஸ்கவரி சானலில் சிங்க வேட்டையை காத்திருந்து பதிவு செய்வது போல ஷூட் செய்யும் சினிமாக்கள் இனி தமிழில் அதிகம் வரும் என்றார்.

காமடி நடிகராக நாம் அறிந்த சார்லியின் இன்னொரு முகத்தை இன்று பார்த்தேன்,. சிறப்பான ஓர் உரையை வழங்கினார். அவர் திறமையை தமிழ் சினிமா இன்னும் சரியாக பயன்படுத்தவில்லை என தோன்றியது.

எனக்கு மாற்று சினிமா தெரியாது. சோற்று சினிமாதான் தெரியும் என ஆரம்பித்து அவர் பேசிய ஒவ்வொர் வார்த்தைக்கும் கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது. நோவா கதை சொல்லி அட்டகாசமாக பேச்சை முடித்தார்.


அழகிய பெரியவன் அடுத்து பேசினார். ஒவ்வொரு வார்த்தையும் கணீர் என இருந்தது.

மேல்னிலையாக்கல் என்பதைப் பற்றி தீர்க்கமான ஓர் உரை வழங்கினார்.

மதுரை வீரன் கதை ஒடுக்கப்பட்ட ஒருவன் பற்றிய கதை. அதை எப்படி மேல் நிலை ஆக்குக்கிறார்கள். அவன் தேவ லோகத்தில் செய்த தவறு காரணமாக , ஒரு சாபத்தால் ஒடுக்கப்பட்டவனாக பிறந்தான் என கதை கட்டி உள்ளதை உள்ளபடி பார்க்க முடியாமல் செய்கிறார்கள்.

இந்த மேல் நிலையாக்கத்தை லீனாவின் படங்கள் உடைக்கின்றன என்றார்.


பாலு மகேந்திரா பேசுகையில் லீனா தன் கேமிராவை தூரிகையாக பயன்படுத்தி மாடர்ன் ஆர்ட் வரைகிறார் என்றார்.

 நான் இரவு நேர சென்னையை பார்த்து அசந்து போனேன். பகல் நேர சென்னையை விட முற்றிலும் மாறு பட்டு இருந்தது. அதை படமாக்க முடிவு செய்தேன். இரவு சென்னையை சும்மா ஷூட் செய்வதில் பயன் இல்லை. இரவு சென்னையை நான் பார்த்தபோது அடைந்த உணர்வை படமாக்க வேண்டும்., அதாவது கேமிராவை தூரிகை ஆக்கி , நான் விரும்பும் ஓவியம் தீட்டினேன்.

மெஷின்கள் ஒரு போதும் படம் எடுக்காது.படைப்பாளிதான் முக்கியம். எனவே தயவு செய்து கேமிராக்கள் பற்றி என்னிடம் பேசாதீர்கள். ஒரு கவிஞனிடம் போய் பேனாவைப்பற்றியும் , பேப்பர் பற்றியுமா பேசுவீர்கள்.?

ஒவ்வொரு படைப்புக்கும் பணம் , புகழ் என்பது போன்ற ஒரு நோக்கம் இருக்கும், நான் இப்போது எடுத்து வரும் படத்துக்கு ஒரு நோக்கம் உண்டு. நான் இறந்த பின்பும் பல ஆண்டுகள் அந்த படம் பேசப்பட வேண்டும். அதுதான் அதை படைத்ன் நோக்கம் என்றார்.


லீனா சற்றே உணர்ச்சி வசப்பட்ட நிலையில் ஏற்புரை வழங்கினார்.

கடைசியாக பேசிய லெனின் ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் பேசினார். அவர் பேசியவற்றை அப்படியே வெளியிட்டால் ,ஒன்று அவருக்கு பிரச்சினை வரும். இல்லை என்றால் எனக்கு பிரச்சினை வரும்.

என் வாழ் நாளில் கேட்ட மிகச்சிறந்த உரைகளில் ஒன்று.

தன் அனுபவத்தை சாறாக்க்கி அவர் புகட்டிய தமிழ் விருந்து இரவு முழுதும் நீடித்து இருந்தாலும் கேட்பதற்கு அனைவரும் தயாராகவே இருந்தனர்.

ஆனால் அவர் ஒரு பாடலுடன் பேச்சை முடித்து ஏமாற்றம் அளித்தார். இன்னும் ஒரு மணி நேரம் பேசி இருக்கலாம்.

சிறப்பான ஒரு நிகழ்ச்சியில் , மேதைகள் பேச்சைக் கேட்ட நிறைவுடன் கிளம்பினேன்,

















Wednesday, August 14, 2013

பெண்களை ஊருக்கு நேர்ந்து விடும் தமிழக கிராமம்- வெட்கம் கெட்டு சுதந்திரம் கொண்டாடும் ”படித்தவர்கள்”


 அந்த காலத்தில் சுதந்திர தினம் என்றால் மிட்டாய் வாங்குவதற்காக பள்ளி சென்ற அனுபவம் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது
வீட்டுப்பாடமோ, படிப்போ இல்லாமல் சும்மா பள்ளிக்கு செல்வது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்

அதன் பின் கொஞ்ச  நாள் உண்மையிலேயே நாட்டுப் பற்று எல்லாம் இருந்தது. தேச விடுதலை வரலாறு , தேசத்தலைவர்கள் பற்றியெல்லாம் தேடி தேடி படித்தேன்.

ஆனால் யதார்த்த வாழ்வை சந்தித்த பின் , சுதந்திர நாள் மீது வெறுப்போ விருப்போ இல்லாமல் போய்விட்டது
என்னை பொறுத்தவரை அது ஒரு விடுமுறை தினம்  மட்டுமே.

இன்றும் ஒரு விடுமுறை தினமாக சாதாரணமாக போய் இருக்கும். ஆனால் காலையில் பார்த்த சுகி சிவம் பேச்சு என்னை எரிச்சல் அடைய வைத்து விட்டது.  ஒரு மிடில் கிளாஸ் மன நிலையை அவர் பிரதிபலித்தார். நம் நாட்டில் நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தை வேறு பல நாடுகளில் மக்கள் அனுபவிப்பதில்லை என பேசினார்.
இவர் சொல்லும் “ நாம் “ யார் என புரிந்து கொள்வது இன்றைய தேவை.

இவரைப் போலத்தான் நானும் நினைத்து வந்தேன்.

ஆனால் சமீப காலமாக நான் சந்தித்த மனிதர்கள், பார்த்த படங்கள் , சென்ற ஊர்கள் , விவாதங்கள் எல்லாம் என் மனதை மாற்றி விட்டன.

அந்த காலத்தில் நம் அறிவு ஜீவிகள் சில நாடுகளுக்கு போய் விட்டு வந்து அந்த நாடு பூலோக சொர்க்கம் என எழுதுவார்கள். அப்படி சொல்பவர்கள் யாரும் பொய் சொல்வதில்லை. அங்கு சந்தித்த சிலருடன் பேசி அப்படி எழுதுவார்கள்.

ஆனால் சில ஆண்டுகளில் அந்த நாடுகளில் புரட்சி ஏற்பட்டு ஆட்சியாளர்கள்
தூக்கி எறியப்பட்டதை பார்த்தோம். அந்த நாடுகளில் நிலவிய அவலம் பிறகுதான் தெரிய வந்தது

 நம் ஆட்களும் பொய் சொல்லவில்லை. அவர்கள் சந்தித்தவர்களும் பொய் சொல்லவில்லை. பின் ஏன் உண்மை நிலையை அவர்களால் எழுத முடியாமல் போயிற்று ?

அந்த நாடுகளில் உயர் பதவியில் இருந்தவர்களை இவர்களால் சந்திக்க முடியவில்லை. ஏழைகளுடன் உரையாடும் மொழியோ தெரியவில்லை.

எனவே குமாஸ்தாவாக இருந்த மிடில் கிளாஸ் மக்களையே சந்தித்து பேசினார்கள். அந்த நாட்டு கொடுங்கோல் ஆட்சியின் கொடுமைகளை அவர்கள் அனுபவிக்காததால் அல்லது தெரியாததால், அந்த நாட்டு ஆட்சியாளர்களை பாராட்டி பேட்டி கொடுத்தனர். நம் ஆட்கள் அதை நம்பி இங்கே எழுதி விட்டார்கள்.

அதன் பின் மக்கள் புரட்சி ஏற்பட்ட பின் தான், அந்த நாட்டின் கொடுமைகள் அந்த குமாஸ்தாக்களுக்கே தெரிய வந்தது.

சுகி சிவம் சொல்லும் நாம் என்பது இந்த குமாஸ்தாக்க்ளைத்தான்,

என்ன வேண்டுமானாலும் ஃபேஸ் புக்கில் எழுத முடிகிறது. எங்கு வேண்டிமானாலும் ஊர் சுற்ற முடிகிறது..எந்த இடத்துக்கும் வேலை தேடி செல்ல முடிகிறது என்பதையே நம் குமாஸ்தாக்கள் சுதந்திரம் என நினைத்து கொள்கிறார்கள்.

இந்த வசதி எல்லோருக்கும் கிடைக்கவில்லை என்பது இவர்களுக்கு தெரியாது. இன்னும் பல ஊர்களில் சிலர் கோயில்களுக்கு போக முடியவில்லை/ டீக்கடைகளில் எல்லொரும் போல டீ சாப்பிட முடியவில்லை.
அவர்கள் எப்படி போனால் என்ன ,, நான் சுதந்திரமாக இருக்கிறேனே என சொலவ்து அற ரீதியாக மட்டும் தவறல்ல.. சுய நல ரீதியாக பார்த்தாலும் , தவறுதான்.

பொறுமை இழந்து அவர்கள் போராட தொடங்கினால் நமக்கும் சேர்த்துதான் அடி விழும்.

சமீபத்தில் லீனா மணிமேகலையின் மாத்தம்மா என்ற ஆவணப்படம் ஒன்று பார்த்தேன்.

தமிழ கிராமம் ஒன்றில் ஒரு கொடூரமான பழக்கம். ஏதாவது பிரச்சினை என்றால் அவர்கள் வீட்டு பெண் குழந்தையை மாத்தம்மா எனும் கடவுளுக்கு நேர்ந்து விட்டு விடுவார்கள் , ஒரு வேண்டுதலாக.

அதன் பின் அந்த பெண் குழந்தை ஊருக்கு பொது சொத்தாகி விடும். நடனம் ஆடி மக்களை மகிழ்வித்து தன் காலத்தை ஓட்ட வேண்டும்.

பருவம் அடைந்ததும் திருமணம் செய்ய முடியாது. செய்யவும் கூடாது. அவள் ஊருக்கு பொது சொத்து .திருமணம் இன்றி யாருடனாவது சேர்ந்து குடும்பம் நடத்தலாம். ஆனால் எந்த சட்ட பாதுகாப்பும் இல்லை.  கூட வாழ்பவன் எப்போது வேண்டுமானாலும் போய் விடுவான்.

அவளுக்கு என்ன சுதந்திரம் கிடைத்து விட்டது..இப்படி ஓர் ஊர் இருப்பது நம் அதிகாரிகளுக்கு தெரியாதா?

இப்படி நம்மை சுற்றி ஆயிரம் பேர் இருக்கையில் நாம் ஆனந்த சுதந்திரம் கொண்டாடினால் நம்மை வருங்கால சமுதாயம் காறித்துப்பி விடும்.

படிக்காத மக்கள் யாரும் ஆனந்த சுதந்திரம் கொண்டாடுவதில்லை. பெரும் பணக்காரர்களும் கொண்டாடுவது இல்லை
மற்றவர்களுக்கு நல்ல கருத்துகளை எடுத்து போய் சேர்க்க வேண்டிய படித்தவர்கள்தான் இந்த குழந்தைத்தனமான செயலை செய்து வருகிறார்கள்.

அனைவருக்கும் வெட்கம் கெட்ட சுரணை கெட்ட அற்பத்தனமான சுதந்திர தின வாழ்த்துகள்
ஜெய் ஹிந்த்



Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா