Monday, January 21, 2019

ரஞ்சித் பாலச்சந்தர் ஷங்கர் - ரஜினி இயக்குனர்கள் -2



ரஜினியை வைத்து 3 உலகளாவிய ஹிட் கொடுத்த ஷங்கர் உன் குருட்டுக் கண்களுக்கு தெரியவில்லையா என ஒரு நண்பர் பின்னூட்டம் இட்டு இருந்தார்


ரஜினியை அறிமுகம் செய்த பாலச்சந்தர்  , ரஜினியின் சமூக அக்கறைய வெளிக்கொணர்ந்த ரஞ்சித் , ரஜினியின் உலகாளவிய புகழை நிரூபித்த ஷங்கர் ஆகியோரை தனியாக பட்டியலிட விரும்பியே அதில் சேர்க்கவில்லை

இப்போது இவர்களைப் பார்ப்போம்

கே பாலச்சந்தர்

மிகச் சிறந்த இயக்குனர்.. பேர் சொல்லும் அளவுக்கு பல படங்கள் எடுத்துள்ளார்.. ஒரு பல்கலைக்கழகம் இவர்

கமல்தான் இவருக்கு நெருக்கமாக இருந்திருக்க வேண்டும்.. ஆனால் ரஜினி மீது அவர் ஆரம்ப காலத்தில் பரிவும் அக்கறையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பை மட்டுமே காட்டுகிறது... சினிமாத்துறையின் பல கலைகள் அறிந்த , சிவப்பு நிறமுள்ள , சொந்த சாதியைச் சேர்ந்த கமல் என்ற ஒருவர் இருக்கும்போது ரஜினி மீது ஏன் அவ்வளவு அக்கறை காட்டினார் என்பது மனதை நெகிழச்செய்கிறது...

ஒரு அளவுக்கு மேல் ரஜினியை வளர்த்த பின்  , இனி அவரை தன்னால் கையாள முடியாது  என உணர்ந்து எஸ் பி எம் , கே எஸ் ரவிகுமார் என பிற இயக்குனர்களை இயக்கச்செய்து படம் தயாரித்த இவர் பெருந்தன்மையை சினிமா உலகம் மட்டுமல்ல,,, பொதுவான வரலாறும் மறக்காது...


கமலையும் ரஜினியையும் ஒன்றுபோல நேசித்த இவர் , தன் படங்களில் இருவரையும் பேலன்ஸ் செய்து நடிக்க வைத்திருப்பார்...

இப்படி இரு சிகரங்களை உருவாக்கிய இவர் சாதனையை இனி யாருமே செய்ய முடியாது


ரஞ்சித்


முள்ளும் மலரும் படத்துக்குப் பின் ரஜினியின் யதார்த்த நடிப்பை கபாலி படத்தில் வெளிக்கொணர்ந்தவர் இவர்... ஹீரோயிசமும் இயல்பாக அமைந்திருக்கும்,,,  ரஜினிக்கு புதிதாக ரசிகர்களை சேர்த்து தந்த படம் கபாலி

படத்துக்கு கிடைத்த வரவேற்பால் மீண்டும் காலா படத்தில் இணைந்தனர்...

 நிலம் எங்கள் உரிமை என அழுத்தமாக சொன்ன படம்...  வெகு நாட்களுக்குப்பின் தமிழ் சினிமா ஒரு ஆழமான வில்லனைப் பார்த்தது...  சமூக அக்கறை கொண்ட ஒரு படத்தில் ஒரு முன்னணி நாயகன் நடிப்பது இதுவே முதல் முறை.. அதை முன்னுதாரணமாகக்கொண்டு மேலும் பல படங்கள் வர வேண்டும்/

புத்தம் குறித்த லேசான அறிமுகம் கொடுத்த படம்... ( புத்தம் குறித்து பிறகு விரிவாக எழுதுவேன் )

இந்த காம்பினேஷனை மீண்டும் காண ஆசை

ஷ்ங்கர்

சிவாஜி படத்தில் வரும் அதிரடிக்காரன் பாடல் இன்னும் அடிக்கடி கேட்கும் பாடலாக உள்ளது

குழந்தை ரசிகர்களை மீண்டும் ரஜினியிடம் ஈர்த்தவை ஷங்கர் படங்கள்..  எந்திரன் படமெல்லாம் உலகளவில் ஹிட் ஆன படம்

அந்த பட கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு முற்றிலும் வேறுபட்ட ஒரு கதையை  ( 2.0 )கொடுத்தது ஷங்கரின் கிரியேட்டிவிட்டி

வில்லன் என்றால் அவனை வெறுக்கும் காட்சியமைப்புகள் தேவை என ஃபார்முலாவை அடித்து நொறுக்கிய படம்... வில்லனை நாம் இந்த அளவுக்கு நேசிக்கும் ஒரே படம் இதுவாகவே இருக்கும்... இலக்கியவாதிகளின் பங்களிப்பு எந்த அளவுக்கு ஆக்கப்பூர்வ விளைவை ஏற்படுத்தும் என்பதை ஜெயமோகன் காட்டி இருந்தார்


சுஜாதா , ஜெயமோகன் , பாலகுமாரன் என அறிவார்தவர்களை அருகில் வைத்திருப்பது ஷங்கரின் பலம்’’

3.0 படம் வர வேண்டும் என்பது பலரின் விருப்பம்

ரஜினி இயக்குனர்கள் அலசல் - 1

( அடுத்த பதிவு - மகேந்திரனும் ரஜினியும் )

பி வாசு , கே எஸ் ரவிகுமார், சுரேஷ் கிருஷ்ணா - ரஜினி இயக்குனர்கள். ஓர் அலசல்


இப்படி ஒரு மெயில் எனக்கு வந்திருந்தது..

அன்புள்ள பிச்சை..

ஒப்பிடுக.... ராஜசேகர்  , கே எஸ் ரவிகுமார் , பி வாசு , எஸ் பி முத்துராமன் , சுரேஷ் கிருஷ்ணா , கார்த்திக் சுப்புராஜ்

---------------------------------------------

அனைவருமே சிறந்த ரஜினி பட இயக்குனர்கள்தான்.. கலைப்படம் , திகில் படம் , மசாலா படம் என்ற வகைகள் இருப்பது போல ரஜினி படம் என்றொரு வகை இருக்கிறது... அதில் மேற்கண்ட இயக்குனர்கள் அனைவருமே கில்லாடிகள்தான் என்றாலும் அவரர்களுக்கு என சில தனித்தன்மைகள் உள்ளன

எஸ் பி முத்துராமன்

ரஜினியை உருவாக்கியவர் இவர்...  மசாலா படங்கள் மட்டுமன்றி ஸ்ரீ ராகவேந்திரர் உட்பட வித்தியாசமான படங்கள் பல எடுத்தவர்.. ராகவேந்திரர் படமெல்லாம் சினிமா என்பதைக் கடந்து ஆலயங்களில்கூட பார்க்கும் ஆவணப்படம் ஆகி விட்டது..என்றும் அவருக்கு புகழ் சேர்க்கும் படம் அது...

புவனா ஒரு கேள்விக் குறி படத்தில் ரஜினியை ஹீரோ ஆக்கினார்..ஆறிலிருந்து அறுபது வரை  , எங்கேயோ கேட்ட குரல் என ரஜினியின் நடிப்பின்மீது நம்பிக்கை வைத்து வித்தியாசமான படங்களைத்தந்தார்

மனிதன், முரட்டுக்காளை , ராஜா சின்ன ராஜா, குரு சிஷ்யன் , அதிசயப் பிறவி என ரஜினி என்றால் நினைவுக்கு வரும் பல படங்களைக் கொடுத்தவர் எஸ் பி எம்..

இவ்வளவு பெரிய இயக்குனரான இவர் , அந்த பந்தா சற்றும் இன்றி , பல பொது நிகழ்ச்சிகளில் ஓர் இளைஞன் போல ஓடியாடி வேலை செய்வதை பார்த்தால் பிரமிப்பாக இருக்கும்,, ஒரு இலக்கிய மேடையை சினிமா செட் போல அழகாக வடிவமைத்து இருந்ததை பார்த்து பிரமித்து இருக்கிறேன்,,

கமல்ஹாசனுக்கும் வேண்டியவர் இவர்... ஒரே கால கட்டத்தில் ரஜினி கமல் என இருவருடன் பணியாற்றிய சாதனைக்குரிய்வர்

அந்த சந்தர்ப்பங்களில் சில நேரங்களில் வாய்தவறி ரஜினியை கமல் என்றும் கமலை ரஜினி என்றும் அழைத்து விடுவாராம்

எப்ப பாரு,, கமல் நினைப்புதானா என ரஜினி கேலி செய்வாராம்

ரஜினிதான் உங்கள் செல்லப்பிள்ளை என கமல் கேலி செய்வாராம்

இது போன்ற பல அனுபவங்களை அவர் பேசிக் கேட்பது தனி அனுபவம்


ராஜசேகர்

அதிரடிப்பட நாயகனாக இருந்த ரஜினியின் நகைச்சுவை நடிப்பை வெளிக்கொணர்ந்தவர் இவர்...  தம்பிக்கு எந்த ஊரு படத்தின் பாப்பா போட்ட தாப்பாவை யாரும் மறக்க முடியாது..   இளைஞர்களின் நடிகராக இருந்த ரஜினியை பெண்களிடமும் குழந்தைகளிடமும் கொண்டு சேர்த்தவர் இவர்..,, சத்யராஜின் நடிப்பை சிறப்பாக வெளிக்கொணர்ந்த பெருமையும் இவருக்கு உண்டு ( காக்கிச் சட்டை)

விக்ரம் , காக்கிச்சட்டை என கமலுக்கும் நெருக்கமானவர் என்றாலும் ரஜினியுடன் தான் அதிகம் பணியாற்றி இருக்க்கிறார்.. தர்மதுரை படத்தின் நூறாவது நாள் கொண்டாட்ட கால கட்டத்தில் இவர் அகால மரணம் அடைந்தது சினிமாவுக்கு பேரிழப்பு

அம்மா.. நீங்க தமிழ் நாட்டுக்கு ராணி மாதிரி,,, நான் தமிழ் நாட்டுக்கே.... சரி வேண்டாம்,,, அதை நானே சொல்லக்கூடாது என அந்த காலத்திலேயே எழுதி கைதட்டல் வாங்கியதை மறக்க முடியாது

பி வாசு

கண்ணா , நான் நினைச்சா உன் இடத்துக்கு... அதாவது தலைவன் என்ற இடத்துக்கு - சுலபமா வந்துற முடியும்.. ஆனால் எனக்கு தேவையும் இல்லை... விருப்பமும் இல்ல... நான் எப்பவுமே வேலைக்காரன் தான் என பஞ்ச் எழுதியவர்,, பணக்காரன்  உழைப்பாளி இவற்றை எல்லாம் விட சந்திரமுகி இவர் புகழை என்றும் பேசும்

கே எஸ் ரவிகுமார்


முக்கியமான ஒரு காலகட்டத்தில் முத்து படத்தை இவர் இயக்குகிறார் என்ற செய்தி பலருக்கும் ஆச்சர்யம் அளித்தது.,,, ஆனால் எந்த நெருக்கடிகளும் இல்லாமல் வெகு நேர்த்தியாக படம் எடுத்து மாபெரும் வெற்றி ஈட்டினார்.. ரகுமானிடம் வெகு சிறப்பான இசையை வாங்கினார்,,  படையப்பாவில் சிவாஜியை பயன் படுத்திய அழகும் மரியாதையும் நெகிழ வைப்பது..  லிங்காவில் சற்று ஏமாற்றி விட்டார்

ஆனாலும் ரஜினி ரசிகர்களுக்கு மனதளவில் நெருக்கமானவர் இவர்

சுரேஷ் கிருஷ்ணா

 மேற்சொன்ன அனைவருக்குமே ரஜினியை நீண்ட நாட்கள் தெரியும்... ஆனால் இவர் திடீரென உள்ளே வந்தவர்... வசந்த் இயக்க மறுத்ததால் அண்ணாமலை பொறுப்பை ஏற்றவர்,,, அந்த பொறுப்பை அவர் திறம்பட செய்த விதம் பிரமிக்கத்தக்கது...அவர் உருவாக்கிய டைட்டில் கார்ட் இன்றுவரை நிற்கிறது...  பாட்ஷா படம் எல்லாம் வேறு லெவல்... பாபா படமுமேகூட ஒரு டிரண்ட் செட்டர்தான்....  மீண்டும் இவர் இயக்க்கத்தில் ரஜினியை பார்க்கும் ஆவல் பலருக்கும் உண்டு...


கார்த்திக் சுப்புராஜ்


ராஜாதிராஜா , சிவா , ஊர்க்காவலன் , அருணாச்சலம் இயக்குனர்களை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை.. ராஜாதிராஜாவெல்லாம் மிகப்பெரிய ஹிட் .. ஆனால் அந்த இயக்குனர்  ( ஆர் சுந்தர்ராஜன் ) ஒரே ஒரு ரஜினி  படம்தான் எடுத்தார் என்பதால் இதில் சேர்க்கவில்லை

ஆனால் கார்த்திக் சுப்புராஜ் ஒரே ஒரு ரஜினி படம் எடுத்தாலும்  ,  தன் ரத்தம் சதை நரம்பு எல்லாம் ரஜினியிசம் கலந்து இருப்பதை நிரூபித்து விட்டார்...

மேற்சொன்ன அனைத்து படங்களின் சிறப்பம்சத்துடன் , தன் முத்திரையையும் பதித்த இவர் , கண்டிப்பாக மீண்டும் ஒரு படத்தில் ரஜினியுடன் இணைய வேண்டும்


ரஞ்சித , ஷங்கர் , பாலச்சந்தர்



Friday, January 18, 2019

டொரண்டினோ+ரஜினி ரசிகன் = பேட்ட


பேட்ட படம் டைட்டில்கள் ஓடத் தொடங்கின.. ரஜினி பெயருக்கு கிடைத்த கைதட்டலுக்கு நிகராக விஜய் சேதுபதி பெயருக்கும் கிடைத்தது.. முதன் முதலில் அவர் திரையில் தோன்றும்போது அவருக்கு கிடைத்த கைதட்டல் ரஜினியை விடவும் விஞ்சி நின்றது.,,   ஓர் இயக்குனராக கார்த்திக் சுப்புராஜ் வென்று விட்டார் என்பதை உணர்ந்த கணம் இது.,  காரணம் பேட்ட படம் ரஜினி ரசிகர்களை தாண்டி அனைவரையுமே திரையரங்கிற்குள் ஈர்த்துள்ளது,,,,  அதற்கு காரணம் ரஜினியை முழுமையாக பயன்படுத்தியது மட்டுமல்ல,,, ரஜினியை மட்டுமே நம்பியிராமல் திரைக்கதையை வலுவாக அமைத்திருப்பதே வெற்றிக்கு காரணம்

இந்தெ வெற்றியில் இருந்து பாடம் கற்க பலர் விரும்பவில்லை... சில தோல்விப் படங்களை முன்னுதாரணமாக காட்டி இது போல ஏன் எடுக்கவில்லை என விமர்சிக்கிறார்கள்...  தோல்விப்படம் எடுப்பது எப்படி என அவருக்கு பாடம் எடுக்கிறார்கள்.

 நமக்கு தோல்வியாளர்கள் குறித்து கவலை இல்லை... ஆனால் வெற்றியை குறித்தும் அதற்குப்பின் இருக்கும் உழைப்பு , அர்ப்பணிப்பு , பேரார்வம் போன்றவை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்...

கார்த்திக் சுப்புராஜ் ஒரே நாளில் உருவான அற்புதம் அல்ல... குறும்படங்கள் மூலம் தன்னை பட்டை தீட்டிக்கொண்டவர்...

சில திரையிடல்களில் நான் கலந்து கொண்டிருக்கிறேன்.. ரஜினியை இயக்கும் அளவுக்கு பெரிய ஆள் ஆவார் என அப்போதே கணித்தேன் என சொல்ல விரும்பவில்லை...

பீட்சா படம் எனக்கு பிடித்தாலும்கூட அவரை முழுமையாக நான் உணர்ந்தது ஜிகர்தண்டா படத்தில்தான்.. அப்போதுதான் முதல் முறையாக ரஜினியுடன் அவர் இணைவது குறித்து பலருக்குமே ஓர் ஆர்வம் ஏற்பட்டது... அந்த அளவுக்கு நேர்த்தியாக எடுத்திருந்தார்

இப்போது பேட்ட..    ப்ழைய ரஜினியை மீண்டும் பார்க்கிறோம் என பலர் மகிழ்கிறார்கள்

ஆனால் இதுவரை பார்க்காத ரஜினியையும் பல இடங்களில் அற்புதமாக காட்டி இருக்கிறார்.. ஃபேஸ் ஆஃப் , ஜாங்கோ அன்செய்ண்ட் போன்ற  படங்களை பார்த்த பல ரஜினி ரசிகர்களுக்கு இந்த கேரக்டர் ரஜினிக்கு செமய்யா சூட் ஆகுமே என நினைத்திருப்பார்கள்... அந்த ஆசையை ஒரு ரசிகனாக நிறைவேற்றி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்

குவெண்டின் டொரண்டினோ ஒரு தமிழ் படத்தை இயக்கினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது பேட்ட

தமிழ் படங்களிலேயே உழன்று கொண்டிருக்கும் நம் விமர்சகர்கள் பலருக்க்கு இந்த நுட்பம் பிடிபடவில்லை...

அவர்கள் பல ஹாலிவுட் படங்களைப் பார்ப்பது உண்மைதான்... ஆனால் அதை தமிழ் ரசிக மனோபாவத்துடன் பார்க்கிறார்கள்


அதனால்தான் பேட்ட படத்தின் முழு வீச்சை பலர் உணரவில்லை

கண்டிப்பாக பேட்ட  ஒரு டிட்ரண்ட் செட்டர் என்பதை வரும் ஆண்டுகள் நிரூப்பிக்கும்


Sunday, January 13, 2019

திமுக ,பிஜேபி ... சகல கட்சிகளையும் கலாய்க்கும் “ பேட்ட “


பேட்ட படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வெற்றிகரமாக ஓடுகிறது என்றால் அதற்கு ரஜினியின் சிறப்பம்சங்களை முழுமையாக படத்தில் கொண்டு வந்த கார்த்திக் சுப்புராஜை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

ரஜினி படம் என்றால் கண்டிப்பாக ஓடி விடும் என மிதப்பில் இல்லாமல் திரைக்கதை , வசனம் , ஒளிப்பதிவு , இசை என அனைத்து துறைகளுமே சிறப்பாக செயல்பட்டிருப்ப்பதற்கும் இயக்குனரை பாராட்டலாம்..

Rajinikanth’s ‘Petta’ comes on the heels of his blockbuster ‘2.0’. Photo: PTI

வழக்கமான தமிழ் படங்களில் படம் முடிய பதினைந்து நிமிடங்களுக்கு முன்பே முடிவு தெரிந்து விடும். ரசிகர்கள் கிளம்ப ஆயத்தமாகி விடுவார்கள்

எஸ் பாலச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் வெளியான அந்த நாள் ,தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் போன்ற வெகு சில படங்களில்தான் கடைசி ஷாட்டில் படம் முடியும்,,,

ரஜினி படத்தில் இப்படி ஒரு கிளைமேக்சைப் பார்ப்பது இதுதான் முதல் முறை

படம் முழுக்க விரவி இருக்கும் பிளாக் ஹ்யூமர் படத்தின் மிகப்பெரிய பலம்... படம் முடியும் வரை திரையரங்கு ரசிகர்களின் சிரிப்பொலியால் அதிர்ந்து கொண்டே இருக்கிறது

எந்த பாரபட்சமும் இன்றி அனைத்து கட்சிகளையும் கலாய்த்திருக்கிறார்கள்

பிஜேபி , சிவசேனா போன்ற கட்சிகளை விமர்சித்து இருப்பது ஒரு பக்கம் என்றால் எமர்ஜென்சியை கொண்டு வந்த காங்கிரஸ் , மிசா கொடுமைகளை மறந்து சமரசமான திமுகவையும் கேலி செய்திருப்பது ஆச்சரயம்.. சன் குழுமம் இவற்றை அனுமதித்து இருப்பது பேராச்சர்யம்

கலாச்சார காவல் , பசு பக்தி என பிஜேபியை .. ஆணவ கொலை என சாதிய கட்சிகளை  இப்படி கட்சிசார்பு நிலை எடுக்காமல் விமர்சித்து இருப்பது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது


Tuesday, January 1, 2019

ஷங்கரின் கார்.. ரஜினியின் தலைமை

படித்தவற்றில் பிடித்தவை


 நடு நிலையாக இருக்க வேண்டிய ஊடகவியலரான நீங்கள் ரஜினியை தலைவர் என அழைத்தது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறதே?

ரங்கராஜ் பாண்டே :  கருணா நிதியை பலர் கலைஞர் என அழைக்கிறார்கள்... ஜெயலலிதாவை அம்மா என அழைக்கிறார்கள்.. அதுபோலத்தான் ரஜினியை தலைவர் என அழைப்பதும்.. இதனால் நடு நிலை பாதிக்கப்படாது... எல்லாவற்றுக்கும் மேல் நான் ஒரு ரஜினி ரசிகன்


------

இயக்குனர். வெங்கடேஷ்

ஒரு நாள் இயக்குனர் ஷங்கர் என்னை தன் இல்லத்துக்கு அழைத்தார்... சூரியன் படத்தில் இருவரும் துணை இயக்குனர்களாக பணியாற்றினோம்.. ஜெண்டில்மேன் படத்தில் இணை இயக்குனராக அவரிடம் பணியாற்றினேன்.. அதனால் பழக்கம் உண்டு.. ஏன் அழைக்கிறார் என தெரியாமல் அவர் வீட்டுக்குப் போனேன்..

போனதும் உங்க காரை அனுப்பிச்சுருங்க... நாம பேசி முடிக்க நேரமாகும். நானே டிராப் செய்கிறேன் என்றார்..

 நேரம் போவது தெரியாமல் பேசினோம்.. கடைசியில் என் வீட்டில் தன் காரில் டிராப் செய்தார்

அதற்கு அழைத்தார் என கேட்கவேயில்லையே என நினைவுக்கு வந்தது... அவரிடமே கேட்டேன்... “ நீங்க சொல்ல் வந்த விஷ்யத்தை சொல்ல விடாமல் நானே பேசிட்டேன் போலயே “ என்றேன் நகைச்சுவையாக

அவர் தன் காரை காட்டினார்...புத்தம் புதிய ரோல்ஸ் ராய்ஸ்

விலை உயர்ந்த கார்... எல்லோரும் வாங்க முடியாது... சமூக அந்தஸ்து இருப்போரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மட்டுமே விற்பார்கள்

” ரொம்ப மகிழ்ச்சி ஷங்கர் என்றேன்

நீங்கள் மகிழ்வீர்கள் என அறிவேன்..அதனால்தான் அழைத்தேன் என சொல்லி விட்டு புறப்பட்டார்

துணை இயக்குனர்களாக இருந்தபோது என்னிடம் சொன்னார்.. : ஒரு நாள் கண்டிப்பாக புகழ் பெற்ற இயக்குனர் ஆவேன்...ரோல்ஸ் ராய்ஸ் வாங்குவேன் என்றேன்

அவர் கனவு பலித்தது மகிழ்ச்சி...அதை பழைய நண்பனான என்னை நினைவு வைத்து பகிர்ந்தது கூடுதல் ம்கிழ்ச்சி

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா