Showing posts with label பேட்ட. Show all posts
Showing posts with label பேட்ட. Show all posts

Saturday, January 11, 2020

தர்பார் பேட்ட ஒப்பீடு

1 இரண்டுமே ரஜினிபடம் போல இருந்தாலும் அந்தந்த இயக்குனர்களின் முத்திரைகளைக் கொண்டவை

2 பேட்ட திரைக்கதை நுட்பமான வித்தைகளைக் கொண்டது. தர்பார் திரைக்கதை விறுவிறுப்பு

3 இரண்டிலும் பின்னணி இசை வேறு லெவல்

4 இரண்டிலும் திருநங்கைகள் கவுரவப்படூத்தப்படுகின்றனர்

5 தர்பாரில் பெண் கதாபாத்திரங்கள் உருவாக்கம் அருமை

6 வில்லனுக்கான பில்ட் அப் தர்பாரில் அதிகம்

7 பேட்ட கிளைமேக்ஸ் தனித்துவமான சிறுகதை. தர்பார் கிளைமேக்ஸ் ஒட்டு மொத்த பயணத்தின் உச்சம்

8 துணை பாத்திரங்கள் உருவாக்கம் தர்பாரில் சிறப்பு. 

9 இடைவேளை இரண்டிலுமே சூப்பர்

10 ரஜினியையே கேலி செய்யும் கவுண்டமணி பாணி காமெடி தர்பாரில் செம



Friday, March 15, 2019

பேட்ட நாகரிகம் , பெண்கள் விஷயத்திலும் தேவை





பேட்ட படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று அதன் அட்டகாசமான கிளைமேக்ஸ்,..

படம் முடிந்து விட்டது என நினைத்து , சீட்டிலிருந்து எழுந்து கொண்டிருக்கும் ரசிகனை மீண்டும் உட்கார வைத்து ஒரு ட்விஸ்ட்டுடன் படம் முடியும்..

இதில் என்ன ஒரு குறிப்பிடத்தக்க விஷ்யம் என்றால் , படம் குறித்து இணையத்தில் எழுதிய யாருமே - ஒருவர் கூட - அந்த சஸ்பென்சை வெளிப்படையாக இங்கே எழுதாமல் ரகசியம் காத்தனர்

ரஜினியை திட்டியவர்கள் , பேட்ட படத்தை பிடிக்காதவர்கள் எழுதும்போதுகூட சஸ்பென்சை உடைக்கவில்லை

சஸ்பென்சை இங்கு உடைத்தால் படம் தோல்வி அடையப்போவதில்லை.. ஆனாலும் ஒரு நாகரிகம் கருதி அதை யாரும் செய்யவில்லை

அரசின் மிரட்டல்களோ , சட்டங்களோ செய்ய முடியாததை இயல்பாக உருவாகி வந்த ஒரு நாகரிகம் சாதித்தது..

இது போன்ற நாகரிகத்தை பெண்கள் பாதிக்கப்படும் விஷயங்களில் கடைபிடிக்க வேண்டும்

நம் சகோதரி ஒருவர் , சில மிருககங்களால் பாதிகப்பட்டால் , கிராமத்தை பெண்ணை நாசமாக்கிய சம்பவம் ... பெண்ணை சீரழித்தனர் என்றோ எழுதக்கூடாது

  நாசமாய் போனது நம் சமூகம்தான்.. சீரழிந்தது ஆண் வர்க்கம்தான் ..

அந்த பெண்ணின் புனிதம் கெட்டு விட்டது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது போல எழுதக்கூடாது

கற்பழிப்பு விவகாரம்.. புதிய வீடியோ ரிலீஸ் என்றெல்லாம் யாரேனும் வாட்சப் அனுப்பினால் உடனடியாக அவர்கள் நட்பை துண்டிக்க வேண்டும்

கற்பை வேறு யாரும் அழிக்க முடியாது... கற்பு என்பது அவரவர் மனம் சார்ந்தது....

பெண்களை புண்படுத்தும் வார்த்தைகளை தவிர்ப்போம்

Friday, January 18, 2019

டொரண்டினோ+ரஜினி ரசிகன் = பேட்ட


பேட்ட படம் டைட்டில்கள் ஓடத் தொடங்கின.. ரஜினி பெயருக்கு கிடைத்த கைதட்டலுக்கு நிகராக விஜய் சேதுபதி பெயருக்கும் கிடைத்தது.. முதன் முதலில் அவர் திரையில் தோன்றும்போது அவருக்கு கிடைத்த கைதட்டல் ரஜினியை விடவும் விஞ்சி நின்றது.,,   ஓர் இயக்குனராக கார்த்திக் சுப்புராஜ் வென்று விட்டார் என்பதை உணர்ந்த கணம் இது.,  காரணம் பேட்ட படம் ரஜினி ரசிகர்களை தாண்டி அனைவரையுமே திரையரங்கிற்குள் ஈர்த்துள்ளது,,,,  அதற்கு காரணம் ரஜினியை முழுமையாக பயன்படுத்தியது மட்டுமல்ல,,, ரஜினியை மட்டுமே நம்பியிராமல் திரைக்கதையை வலுவாக அமைத்திருப்பதே வெற்றிக்கு காரணம்

இந்தெ வெற்றியில் இருந்து பாடம் கற்க பலர் விரும்பவில்லை... சில தோல்விப் படங்களை முன்னுதாரணமாக காட்டி இது போல ஏன் எடுக்கவில்லை என விமர்சிக்கிறார்கள்...  தோல்விப்படம் எடுப்பது எப்படி என அவருக்கு பாடம் எடுக்கிறார்கள்.

 நமக்கு தோல்வியாளர்கள் குறித்து கவலை இல்லை... ஆனால் வெற்றியை குறித்தும் அதற்குப்பின் இருக்கும் உழைப்பு , அர்ப்பணிப்பு , பேரார்வம் போன்றவை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்...

கார்த்திக் சுப்புராஜ் ஒரே நாளில் உருவான அற்புதம் அல்ல... குறும்படங்கள் மூலம் தன்னை பட்டை தீட்டிக்கொண்டவர்...

சில திரையிடல்களில் நான் கலந்து கொண்டிருக்கிறேன்.. ரஜினியை இயக்கும் அளவுக்கு பெரிய ஆள் ஆவார் என அப்போதே கணித்தேன் என சொல்ல விரும்பவில்லை...

பீட்சா படம் எனக்கு பிடித்தாலும்கூட அவரை முழுமையாக நான் உணர்ந்தது ஜிகர்தண்டா படத்தில்தான்.. அப்போதுதான் முதல் முறையாக ரஜினியுடன் அவர் இணைவது குறித்து பலருக்குமே ஓர் ஆர்வம் ஏற்பட்டது... அந்த அளவுக்கு நேர்த்தியாக எடுத்திருந்தார்

இப்போது பேட்ட..    ப்ழைய ரஜினியை மீண்டும் பார்க்கிறோம் என பலர் மகிழ்கிறார்கள்

ஆனால் இதுவரை பார்க்காத ரஜினியையும் பல இடங்களில் அற்புதமாக காட்டி இருக்கிறார்.. ஃபேஸ் ஆஃப் , ஜாங்கோ அன்செய்ண்ட் போன்ற  படங்களை பார்த்த பல ரஜினி ரசிகர்களுக்கு இந்த கேரக்டர் ரஜினிக்கு செமய்யா சூட் ஆகுமே என நினைத்திருப்பார்கள்... அந்த ஆசையை ஒரு ரசிகனாக நிறைவேற்றி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்

குவெண்டின் டொரண்டினோ ஒரு தமிழ் படத்தை இயக்கினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது பேட்ட

தமிழ் படங்களிலேயே உழன்று கொண்டிருக்கும் நம் விமர்சகர்கள் பலருக்க்கு இந்த நுட்பம் பிடிபடவில்லை...

அவர்கள் பல ஹாலிவுட் படங்களைப் பார்ப்பது உண்மைதான்... ஆனால் அதை தமிழ் ரசிக மனோபாவத்துடன் பார்க்கிறார்கள்


அதனால்தான் பேட்ட படத்தின் முழு வீச்சை பலர் உணரவில்லை

கண்டிப்பாக பேட்ட  ஒரு டிட்ரண்ட் செட்டர் என்பதை வரும் ஆண்டுகள் நிரூப்பிக்கும்


Sunday, January 13, 2019

திமுக ,பிஜேபி ... சகல கட்சிகளையும் கலாய்க்கும் “ பேட்ட “


பேட்ட படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வெற்றிகரமாக ஓடுகிறது என்றால் அதற்கு ரஜினியின் சிறப்பம்சங்களை முழுமையாக படத்தில் கொண்டு வந்த கார்த்திக் சுப்புராஜை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

ரஜினி படம் என்றால் கண்டிப்பாக ஓடி விடும் என மிதப்பில் இல்லாமல் திரைக்கதை , வசனம் , ஒளிப்பதிவு , இசை என அனைத்து துறைகளுமே சிறப்பாக செயல்பட்டிருப்ப்பதற்கும் இயக்குனரை பாராட்டலாம்..

Rajinikanth’s ‘Petta’ comes on the heels of his blockbuster ‘2.0’. Photo: PTI

வழக்கமான தமிழ் படங்களில் படம் முடிய பதினைந்து நிமிடங்களுக்கு முன்பே முடிவு தெரிந்து விடும். ரசிகர்கள் கிளம்ப ஆயத்தமாகி விடுவார்கள்

எஸ் பாலச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் வெளியான அந்த நாள் ,தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் போன்ற வெகு சில படங்களில்தான் கடைசி ஷாட்டில் படம் முடியும்,,,

ரஜினி படத்தில் இப்படி ஒரு கிளைமேக்சைப் பார்ப்பது இதுதான் முதல் முறை

படம் முழுக்க விரவி இருக்கும் பிளாக் ஹ்யூமர் படத்தின் மிகப்பெரிய பலம்... படம் முடியும் வரை திரையரங்கு ரசிகர்களின் சிரிப்பொலியால் அதிர்ந்து கொண்டே இருக்கிறது

எந்த பாரபட்சமும் இன்றி அனைத்து கட்சிகளையும் கலாய்த்திருக்கிறார்கள்

பிஜேபி , சிவசேனா போன்ற கட்சிகளை விமர்சித்து இருப்பது ஒரு பக்கம் என்றால் எமர்ஜென்சியை கொண்டு வந்த காங்கிரஸ் , மிசா கொடுமைகளை மறந்து சமரசமான திமுகவையும் கேலி செய்திருப்பது ஆச்சரயம்.. சன் குழுமம் இவற்றை அனுமதித்து இருப்பது பேராச்சர்யம்

கலாச்சார காவல் , பசு பக்தி என பிஜேபியை .. ஆணவ கொலை என சாதிய கட்சிகளை  இப்படி கட்சிசார்பு நிலை எடுக்காமல் விமர்சித்து இருப்பது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா