Friday, April 30, 2010

"சார்...மனித வாழ்வின் நோக்கம் என்ன?"




கடவுளை நம்பியும் பார்த்திட்டோம், திட்டியும் பார்த்துட்டோம், - காசையும் பார்த்துட்டோம், கஷ்டத்தையும் பார்த்துட்டோம்,,ஆனாலும் வாழ்க்கைல ஒன்னு குறையுது... வாழ்க்கைனா என்ன.. வாழ்கையின் நோக்கம் என்ன ?

ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் சில இளைஞர்கள் உரையாடுகிறார்கள்,,, தயவு செய்து கவனமாக படிக்கவும் ( அடைப்பு குறியில் நம்ம விளக்கம் ..பிடிக்கவில்ல்லை என்றால், எடுத்து விடுகிறேன் )


******************************************************

" சார்.. சுத்தி வளைக்காம கேட்குறேன். எங்க கேள்வி ரொம்ப எளிமையானது..எளிமையா ஒரு பதில் சொல்லுங்க... மனித வாழ்வின் நோக்கம் என்ன? " ( பிறக்குறோம்.. சாபிட்றோம்..தூங்குறோம்..லவ் பண்றோம்... சண்டை போடறோம், குழந்தை பெத்துகுறோம் .. .. இயக்கம் ,கட்சி, இதேல சேர்ந்து பாக்குறோம்..கடவுளை நம்புறோம்... கடவுளை நம்ப மறுக்குறோம்..அனாலும் என்ன ..கடைசியில் ஒரு நாள் சாகுறோம்

என்ன வாழ்கை இது? வாழ்வின் நோக்கம்தான் என்ன ?)

இதை ஏன் கேட்குறீங்க? யாரவது இதுதான் வாழ்வின் நோக்கம் னு சொன்னால் அதை அப்படியே எத்துக்கிட்டு, அதுக்கு தகுந்த மாதிரி வாழ்வை அமைச்சுக்கலாம்.. அப்படிதானே ? "

" இதை ஏன் கேட்குறோம்னா , நாங்க ரொம்ப குழம்பி போய் இருக்கோம்... யாரவது ஒருவர் கிட்ட இதை பத்தி பேசணும்னு தோனுச்சு... சில பேரு எல்லாம் தெரிஞ்ச மாதிரியும், எங்களுக்கு ஒன்னும் தெரியாத மாதிரியும் , அறிவுரை குடுக்றாங்க,,, இதெல்லாம் வேலைக்கு ஆகாது.. சாதாரணமா பேசும் ஒருத்தர் கிட்ட பேசணும் னு தோனுச்சு... அதான் உங்க கிட்ட கேட்குறோம்.. "

" அர்த்தமுள்ள வாழ்வு வாழ ஆசை படறோம்..அதே சமயம் , எதாவது கட்சி, இயக்கம், ஆன்மிகம் , கடவுள் இதெல்லாம் ஒரே மாதிரித்தான் இருக்கு... இங்கே வந்த்டோம்.. நீங்க என்ன சொல்ல போறீங்க ?"

சரி.. யாரவது ஒருவர் இதுதான் வாழ்வின் நோக்கம் னு , உங்களுக்கு பிடிக்ற மாதிரி சொல்லிட்டா ஏத்துக்கேவீங்களா ?

" ஆமா .. அது உண்மை னு தோணுச்சுனா , ஏத்துக்குவோம் "

அப்படியா?

"ஆனா, வந்து... இதை புரிஞ்சுக்ற தகுதி எங்களுக்கு இருக்கா-ணு தெரியல"

அதுதான் விஷயம்... எல்லோரும் குழப்பத்துல இருக்றதா சொன்னீங்க... மனசு குழப்பமா இருந்தா, அதை வைச்சு , இது போன்ற பெரிய விஷயங்களை புரிந்து கொள்ள முடியுமா

" ஏன் முடியாது.. ஆமா.. நாங்க குழம்பி போய் இருக்கோம்... மறுக்கல..ஆனா, குழம்பி போனவன் ஒன்னும் கத்துக்க முடியாதுனு சொன்னா, நாங்க என்னதான் பண்றது... "

என்னதான் முயன்றாலும், குழப்பத்தோட ஒரு கேள்வியை அணுகினால், விடையும் குழப்பமாகத்தானே கிடைக்கும் ?

" என்ன தான் சார் சொல்ல வர்றீங்க ? "

எந்த முடிவையும் வற்புறுத்த, நாம இப்ப பேசல.. ஒன்னு ஒன்ணா , நிதானமா விவாதிப்போம்... மனசு குழப்பமா , தெளிவில்லாம இருந்தா, அதை வச்சு தெளிவா சிந்திக்க முடியுமா ? இதை முதலில் கண்டு பிடிப்போம்...

" உண்மைதான் சார்.. தெளிவில்லாத மனதின் சிந்தனையும் தெளிவு இல்லாமல்தான் இருக்கும்''

தெளிவில்லாத ஒரு மனம் ஒரு குருவை தேடினால், கிடைக்கும குரு அதற்கேற்பத்தானே இருப்பார் ( மனதில் ஆயிரம் ஆசைகளை வைத்து கொண்டு தேடினால், நித்யானந்தா, ஓஷோ , பிரேமானந்தா போன்றவர்கள்தானே கிடைப்பார்கள் !! ) .. தலைவர்களும் அப்படித்தான் இருப்பார்கள் ( ஒரு முட்டாள் தலைவனை தேர்ந்தெடுத்தால், அந்த முடிவு முட்டாள்தனமாகத்தான் இருக்கும் )

" இதை ஒத்துகொள்ள கஷ்டமா இருக்கு "

உண்மைதான்,என்ன, நாம் எல்லோரும் நம்மை புத்திசாலிகள், உலக பிரச்சினையை தீர்க்க நம்ம கிட்ட தேர்வு இருக்கு... நாம் நல்லாத்தான் இருக்கோம்..உலகம் தான், என்ன செய்யனும்னு தெரியாம இருக்கு னு நினைக்றோம்.. நம்ம கிட்ட என்ன தவறு இருக்குனு யாரும் பார்ப்பது இல்ல

" எத்தனையோ பேரு பேசி கேட்டு இருக்கேன்... நீங்க சொல்றதுதான் கரக்ட் னு தோணுது "

தெளிவு இல்லாதவர்கள் தான் இப்படி சொல்வார்கள்

" என்ன சார், இப்படி சொல்லீட்டீங்க..பல கருத்துக்களை கேட்டு, அதில் சிறந்ததை தேர்ந்து எடுத்தால்தானே தெளிவு பிறக்கும் "

உங்களுக்கு தெளிவு இருந்துச்சுனா , இப்படி தேர்ந்தெடுக்க மாட்டீர்கள்

" ஆஹா.. உங்க பாயிண்ட் புரியுது .. சார் என்ன சொல்றார்னா, நீ ஒரு பொண்ண உண்மையில் லவ் செஞ்சா, எந்த குழப்பமும் இல்லாம அவளை கல்யாணம் செஞ்சுக்குவ... தேர்ந்தெடுப்பு என்ற கேள்வியே இல்லை.. நீதான் தெளிவா இருக்கியே... காதல் என்பது இல்லைனாத்தான், யாரை கல்யாணம் பண்ணலாம், நம்ம காதல் தப்பா அப்படீன்னு ஆயிரம் கேள்வி... ஒரு வகைல, தெளிவுக்கு இன்னொரு பெயர் காதல்.. என்ன்ன நான் சொல்றது? "

" காதல் னு நீங்க எதை சொல்றீங்க னு தெரியல.. அதை பத்தி இப்ப பேச வேண்டாம்.. நீங்க இங்கே வரும்போது, வாழ்கையின் நோக்கம் என்ன அப்படீன்னு ஒரு விஷயத்தை ஷாப்பிங் செய்ய வந்தீங்க .. இல்லியா... இதே போல பலர் கிட்ட கேட்டு இருப்பீங்க,,, அந்த பதில்கள் உங்களுக்கு திருப்தி தரல.. ஒரு கடைல பொருள் பிடிக்கலேன்னா அடுத்த கடைக்கு போற மாதிரி, இன்னொரு கருத்தை வாங்க வந்து இருக்கீங்க.. உங்களுக்கு குழப்பம்.. அதுனாலதான், எதாவது ஒன்னை உறுதியா பிடிச்சுக்க விரும்புறீங்க..
( சிலர் ஆன்மிக வாதிகளை பிடிக்கலாம். சிலர் கட்சிகளை, எதாவது தொழிலை, வலை பதிவை கூட பிடித்து கொண்டு இதுதான் வாழ்வின் லட்சியம் என சொல்லலாம் )

" உங்க பாயிண்ட் புரியுது சார் "

பொறுமையா இன்னும் பாப்போம்.. நம்ம மனம் குழப்பமா இருக்கு,,, சின்னத்தனமா சிந்திக்குது..அற்பமா இருக்கு..இல்லையா

" அப்படி சொல்ல முடியாது... மனதின் ஒரு பகுதி மிருகமா இருந்தாலும், இன்னொரு பகுதி நல்ல தன்மைகள் நிரம்பி இருக்கு... மிருகம் என்ற கெட்ட பகுதியை நாம் வெல்ல முடியும் "

அப்படித்தான் நம்புறோம்.. ஆன்மானு ஒன்னு இருக்கு... நன்மை தீமைகள் அதை பாதிக்காது.... வெளி மனம், உள்மனம் என்றெல்லாம் இருக்கு அப்படீல்லாம் நினைக்றோம்.. இப்படி சொல்லி கொடுத்து இருக்காங்க... இது எல்லாமே முட்டாள் மனதின் சிந்தனைகள்தான் ..

" அப்ப நாங்க என்னதான் செய்யனும் "

அவசரப்படாதீங்க... இதுதான் செய்யணும் னு எந்த அவசியமும் இல்லாமல் கூட இருக்கலாம்... எல்லாவற்றையும் சரியாக புரிந்து கொண்டால், உங்கள் நடவடிக்கையே வேறு மாதிரி இருக்க கூடும்

" வாழ்வை சரியாக புரிந்து கொண்டால், என்ன செய்யனும்னு அதுவே சொல்லித்தரும் னு சொல்றீங்க... சரி,,, வாழ்க்கைனா என்ன ?"

அழகு, துன்பம் குழப்பம், , மரம், அதோ அங்கு பறக்கும் பறவை, சுட்டு எரிக்கும் சூரியன், குளிர்மிகு நிலவு என எல்லாமே வாழ்க்கைதான்,,, ஒரு தெளிவற்ற மனம் வாழ்வை எப்படி அனுகிகிறது என்பதுதான் முக்கியம்,, வாழ்வை பற்றிய விளக்கங்கள் அல்ல..

" வாழ்வில் நாம் சந்திக்கும் குழப்பங்கள் துயரங்கள் எல்லாம் மனதின் பிரதிபலிப்பு என புரியுது.. வாழ்வு என்பதில் இருந்து விலகி நின்று பார்த்தால்தான் தெளிவு பிறக்கும் னு தோணுது... எப்படி விலகி நின்று பார்ப்பது "

உண்மையை சொல்லனும்னா, நீங்க வாழ்க்கை என்பதை விட்டு விலகி தான் இருக்கீங்க,,, குப்பன் அப்படீங்கற நீங்க மாறாத, சிறப்பான ஒன்று போலவும், மற்ற எல்லாம் திருந்த வேண்டும் மாற வேண்டும் எபது போலவும் நினைக்கிறீங்க... மற்ற எல்லாவற்றையும் பார்க்கும் ஒரு சாட்சியாக, பார்வையாளனாக உங்களை நினைத்து கொள்கிறீர்கள்... (நீங்கள் வேறு - மற்ற எல்லாம் வேறு )..இப்படி தனியாக இருக்கும் நீங்கள், முழுமையை எப்படி புரிந்து கொள்வீர்கள் ?

" என்னை பத்தியே எனக்கு புரியல..உலகத்தை பத்தி புரிஞ்சுக்க முயற்சி பண்றேன்..ஹ்ம்ம் "

ஒரு முட்டாள் கண்டுபிக்கும் கடவுளும் முட்டாளாகத்தான் இருக்க முடியும் ... மனதை செம்மை படுத்தாமல், கடவுள் இருக்கிறாரா இல்லையா.. உண்மைனா என்ன , நல்ல அரசாங்கம்னா என்ன . இப்படியெல்லாம் கேட்டுகிட்டு இருக்கோம்

" ஆமா சார்.. கேட்க கஷ்டமா இருந்தாலும், உண்மையை உணர முடியுது.. என்னதான் செய்றது "

கொஞ்சம் கொஞ்சமா மாறலாம்னு நினைக்காம, இப்பவே - இந்த கணமே எல்லாத்தையும் தூக்கி எறிங்க... மனம் என்கிற குப்பை தொட்டில சேர்த்து வைத்து இருக்ற அனைத்து குப்பைகளையும் காலி செய்யுங்க... இதுவரை நீங்க அறிந்து வைத்துள்ள எல்லாம், புதிதாக அறிவதை தடை செய்கிறது

" சரி ..எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டா எனக்கு என்ன கிடைக்கும் "

நல்லா கேட்டீங்க போங்க... எதாச்சும் கிடைத்தால்தான் , துறப்பேன் என சொல்வது உண்மையில் துறத்தல் அல்ல... அது ஒரு வியாபாரம்தான்.. எல்லாவற்றையும் விட்டு விட்டால் என்ன கிடைக்கும் என ஒரு முட்டாள் மனது யோசித்தால், முட்டாள்தனமான விடைகள் தான் கிடைக்கும் ...( கடவுள் தெரிவார், பேரமைதி கிடைக்கும், ஆன்மிக ஆற்றல் கிடைக்கும் )....
அறிவு என்பதே கற்பிதம்தான்,,,, பழமைதான்... அறிந்ததில் இருந்து விடுதலை ஆனால்தான், இதுவரை அறியாததை காண முடியும்

" யோசிக்காம அப்படி கேட்டுட்டேன்... எங்களுக்கு பிடிச்ச மாதிரி பேசி, எங்களை சமாதான படுத்தும் வகையில் மேலோட்டமா பேசல.. நன்றி .... சார், நீங்க சொன்னதின் உண்மையை அறிவு பூர்வமா இல்லாம , இதய பூரவமா உணர முடியுது... உண்மையை உணர்ந்து விட்டால், அதற்கு பிறகு என்ன செய்வது என்ற கேள்வி இல்லை..என்ன செய்வது என்பதை அந்த உணர்வே தீர்மானிக்கும்... அந்த உணர்வுதான் முக்கியம்... சார், உங்களை பார்க்க இன்னொரு முறை வரலாமா ? "

Tuesday, April 27, 2010

போலி கம்யுனிஸ்ட்கள் அல்ல .- முத்திரை பதித்த இடதுசாரிகள் வேலை நிறுத்தம்

பொதுவுடைமை கருத்துக்களை அரசியல அரங்கில் ஒலிக்க செய்யும் கட்சிகள்தான், சி பி ஐ மற்றும் சி பி ஐ எம் ..

பல கஷ்டங்களுக்கு இடையில், கட்சி நடத்தும் இவர்களை ஆதரிக்கவிட்டலும் பரவயில்லை... கிண்டல் செய்பவர்கள் அதிகம்....

புரட்சி பேசிவிட்டு, சீட் பெற பேரம் பேசுபவர்கள், ஆடம்பர அரசியல செய்ய தெரியாதவர்கள் என பல பாமர கருத்துகள் உண்டு...

சிலர் ஒரு படி மேலே சென்று, உழைக்கும் மக்களை இவர்கள் பிரநிதுவ படுத்தவில்லை, இவர்கள் போலி கம்யூனிஸ்ட்கள் என கிண்டல் செய்வதை பார்த்து, உம்னையில் இவர்களுக்கு ஆதரவு இல்லையோ என சாமான்யர்கள் நினைபதுண்டு..

இந்நிலையில், பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.... மதுரைக்கு வில்லுக்கு அளித்ததே, இவர்கள் மேல் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது...

தமிழ் நாடு முழுதும், வேலை நிறுத்தம் வெற்றி என்றால், சி பி எம்மின் வெற்றி தனியாக தெரிந்து இருக்காது...

மென்பொருள் மக்கள் மற்றும் சண் டிவி தமிழர்கள் அதிகம் வசிக்கும் சென்னை போன்ற ஊர்களில், வேலை நிறுத்ததிற்கு அதிகம் ஆடஹர்வு இல்லை...

அனால், சி பி வலுவாக உள்ள, திருப்பூர், ஈரோடு , நகப்பிடினம் போன்ற இடங்களிலும், உழைக்கும் மக்கள் வசிக்கும் ஊர்களிலும், வேலை நிறுத்தத்திற்கு அமோக ஆதரவு..

முழு அடைப்பு செய்தால், விலைவாசி இரங்கி விடமோ என சிலர் அசட்டுத்தனமாக கேட்கலாம்.. அனால், வெட்டி பேச்சு பேசாமல், கட்டுபாடுடன் எதிர்ப்பை காட்டியதன் மூலம், இடது சாரி கட்சிகள் மக்கள் மதிப்பில் உயர்ந்துள்ளன....

ஒட்டு மொத்தமாக பந்த் பெரிய வெற்றி என சொல்ல மூடியாது... அனால், எதிர்த்தரப்பின் வாயை பந்த் செய்வதில், இடது சாரிகள் வெற்றி பெற்று உள்ளனர் என்றே நடுநிலையாளர்கள் கருதுகின்றனர் .

ஊருக்கு உபதேசமா? அரசு பள்ளிகள் கட்டுரை கிளப்பும் சந்தேகம்!!!!

தமிழ் தமிழ் என ஊருக்கு உபதேசம் செய்யும் அரசியல் வாதிகள், தங்கள் வாரிசுகளை ஆங்கில பள்ளிகளில் படிக்க வைப்பது நாம் அறிந்தது தான்... அனால், நாம் பெரிதாக அலட்டி கொள்வதில்லை.... எல்லோரும் அப்படித்தான் என நினைத்து கொண்டு சமாதானம் அடைவோம்...

ஆனால், நான் விரும்பி படிக்கும் தமிழ் பத்திரிக்கை ஒன்றும் இந்த பாணியில் இறங்கி உள்ளது சற்று வருத்தாமாக இருக்கிறது..

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் , கல்வி தரம் தனியார் பள்ளிகளை விட சிறப்பாக இருப்பதாகவும், மாணவர்களுக்கு களவு கற்கும் சூழல், அரசு சென்னை பள்ளிகளில் இருப்பதாகவும் , அந்த பத்திரிகையில் கட்டுரை வெளியிட பட்டிருகிறது...

அது உண்மையாக இருந்தால் சந்தோஷம்தான்....

ஆனால், அது உண்மை என அந்த பத்திரிக்கை நம்புகிறதா. அதை எழுதிய நிருபர் நம்புகிறார என்பதுதான் கேள்வி...

எழுதிய நிருபரோ, அல்லது பதிரிகையின தூண்களோ தங்கள் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் சேர்ப்பர்களா அல்லது தனியார் பள்ளிகளில் சேர்ப்பர்களா என்பது கேள்வி குறிதான்...

பத்திரிகைகள் தாங்கள் உண்மை என நம்புவதை மட்டுமே பிரசுரிக்க வேண்டும் என்பதே வாசகர்களின் வேண்டுகோள்...

எனது சந்தேகம் தவறானது என தெரிய வந்தால், மகிழ்ச்சிதான் .... அல்லது, வாசகர்களின் குழநதைகள், அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும்..தங்கள் குழந்தைகள் தனியார் கல்வி வசதியை பெற வேண்டும் என நினைத்தால், வருத்த படுவதை தவிர என்ன செய்ய முடியும் ???

Sunday, April 25, 2010

சிந்தனை, பகுத்தறிவு மூலம் உண்மையை அறிந்து விட முடியுமா




சிந்தனை, பகுத்தறிவு மூலம் உண்மையை அறிந்து விட முடியுமா... ஒரு தலைவன் நமக்கு எல்லா பதில்களையும் தர முடியுமா,அன்பு என்றால் என்ன என்பதை போன்ற கேள்விகளுக்கு, ஜே கிருஷ்ணமுர்த்தியின் இந்த உரையாடல் பதில் அளிக்க கூடும்ம்... கவனமாக படியுங்கள்....

************************************************
இரு இளைஞர் களுடன் உரையாடுக்றார், ஜே கே




"சார்... உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா?"

தாரளமா...

"நேசம் அன்பு, காதல்னா என்ன?"

இந்த வார்த்தை பற்றிய விளக்கம் வேண்டுமா...

"காதல்னா எப்படி இருக்கணும்னு பல கருத்துக்கள் இருகின்ன்றன... எல்லாம் குழப்பமா இருக்கே "

என்ன கருத்துக்கள்...

"காமம் கலக்க கூடாது..பேராசை கூடாது... எல்லோரையும் , தன்னைப்போல நேசிக்கணும்... பெற்றோரை நேசிக்கணும்...."

மற்றவர் கருத்து இருக்கட்டும்... உங்களுக்கு இதை பத்தி கருத்து இருக்கா..

"நான் நினைப்பதை சொல்வது கஷ்டம்... கடவுளை நேசிபதுதன் உண்மயான அன்பு..அன்பில் காமம் கலக்க கூடாது..ஒருவரை ஒருவர் நேசிக்கணும்,, அன்பே சிவம்,.,இரக்கமே இறைவன்.."

இந்த கருத்துக்கள் எல்லாம், நம் சூழ்நிலையை பொறுத்து உருவாகின்றன.. இவை எல்லாம் , தேவையா என சிந்திக்க வேண்டாமா...

"அப்படீனா , ஒரு கருத்தை ஏற்று கொள்வதே தப்பா ...."

சரி, தப்பு என்று சொல்வதும் ஒரு வகை கருத்துதானே... இந்த கருத்துக்கள் எல்லாம் எப்படி உருவாகின்றன என கவனித்தால், இதன் முக்கியத்துவம் புரியும்...

"கொஞ்சம் விளக்குங்க..."

நாம் எந்த சூழ்நிலையில் வளர்ந்தொமோ, அதுதானே நம் சிந்தனையை உருவாக்குகிறது.... ( ஒரு " பகுத்தறிவாதி குடும்பத்தில் பிறந்த ஒருவர், கடவுள் இல்லை என்பார்... ஆன்மிக வாதி குடும்பத்தில் பிறந்த ஒருவர் வேறு மாதிரி சொல்லுவர் )
இதை எல்லாம் தாண்டி, உண்மை என்ன என்று நாம் பார்ப்பது இல்லை...நம்புவது, நம்பாமல் இருப்பது, முடிவுகள், சிந்தனைகள், கருத்துகள்,எல்லாமே, நம் சூழ்நிலையை பொறுத்ததுதான்..இல்லையா ?

"ஆமா... இதில் என்ன தப்பு.."

சரி,,தப்பு அப்படீங்கறதே கருத்துதானே.. உண்மை என்பது கருத்தகளை பொருத்தது அல்ல..

"சார்..என்னதான் சொல்ல வர்றீங்க..."

அன்பு, காதல் என்பதை பற்றி உங்களுக்கு சில கருத்துக்கள், அபிபராயங்கள் இருக்கு..இல்லியா....

"ஆமா..
"
அவை உங்கள்ளுக்கு எப்படி கிடைத்தது...

"பல சிந்தனையாளர்கள் , ஞானிகள் எழுத்துக்களை படிச்சேன்...நானும் சிந்தனை செய்து, இந்த முடிவுகளுக்கு வந்தேன்..."

அவுங்க சொன்னதுல , உங்களுக்கு பிடிச்சதை ஏதுக்குடீங்க

"ஆமா... என் பகுத்தறிவை பயன் படுத்தி, உண்மையை தேர்ந்து எடுத்தேன்.."

எதை அடிப்படைய வச்சு தேர்ந்தெடுத்தீங்க ?

"என்னுடைய அறிவு..."

அறிவு நா என்ன... உங்களை மடக்க இப்படி கேட்கல... அன்பு என்பதை பத்தி, அபிராயங்கள், முடிவுகள், கருத்துக்கள் எல்லாம் எப்படி உருவாகுதுன்னு பார்க்க போறோம்,, அவ்வளவுதான்.. சரி சொல்லும்ங்க.. அறிவு ந எனா?

"பல புத்தகங்களை படித்து கற்பதுதான் அறிவு.. பல தொழில் நுட்பங்கள் , அறிவியல், தகவல்கள் இதை எல்லாம் கற்பது கூட அறிவு தான்..."
"
அறிவு என்பது , கொஞ்சம் கொஞ்சமாக சேர்கப்டுவது... இல்லையா... ஒரு வேளை, உங்கள் கலாச்சாரம், அன்பு என்பதெல்லாம் சும்மா டுபக்கொர்... எல்லாம் உடல் சார்ந்தது
தான், என சொல்லி கொடுத்து இருந்தால், நீங்களும் அதை தான் சொல்லுவீர்கல் ..இல்லையா...

"இல்லை..அவ்வப்போது நாங்களாகவும் சிந்திப்போம்..."

சிந்தனை என்பதே, ஒரு கருத்தில் இருந்து இன்னொரு கருத்திற்கு செல்வதுதான்... மனம் என்பது, அன்பு என்பதை பற்றிய கருத்துக்கள், முடிவுகளால், பதிக்கப்பட்டுள்ளது,,, இல்லையா..

"ஆமா... சரி அன்பு னா என்ன.."

ஒரு அகராதில பார்த்தா, வில்லகம் கிடைக்கும்.. ஆனா விளக்கம் என்பது உண்மை உணரவை பிரிய வைக்காது...உங்க அறிவுக்கு யற்ப, சிலவற்றை ஏற்கலாம், சிலவற்றை மறுக்கலாம்...

"அப்படீனா, உண்மை அறியவே முடியாதா.."

சிந்தப்பதன் மூலம் , உண்மையை அறிய முடியாது... அன்பு னா என்னனு சிந்திச்சு கண்டு பிடிக்க முடியுமா

"சிந்திக்காம எப்படி கண்டு பிடிப்பது..".
"
சிந்திப்பதுனா ஏன்னா...

"ஒரு விஷயத்தை பற்றி படிப்பது... விவாதிப்பது... ஒரு முடிவுக்கு வருவது..."

இது அன்புன என்ன னு உங்களுக்கு உணர்துச்சா...

"ஆமா.. சிந்திப்பதன் ன் மூலம், மனம் தெளிவாச்சு... ஒரு முடிவுக்கு வர முடிஞ்சது..."

அதவது, சில கருத்துக்கள், மற்றவற்றை விட தனியா தெரிஞ்சது... அப்படிதானே...

"ஆமா..."

அன்பு என்ற வார்த்தை , அன்பு அல்ல... விளக்கங்கள் எதுவும் உண்மையை உணர்த்தாது..

அன்பு, கடவுள், உண்மை போன்றவற்றை அறிய வேண்டும் என்றால், முன் கூட்டிய முடிவுகள், நம்பிக்கைகள, எதுவும் இருக்கா கூடாது... ( முன்பே கடவுள் இருக்கிறர் என்றோ இல்லை என்றோ முடிவு செய்ய கூடாது )
புத்தகங்கள், விளக்கங்கள், நபிக்கைகள், தலைவர்கள் போன்றவர்த்ரை தள்ளி வைத்து விட்டு, சுய தேடலுக்கான பயணத்தை தொடருங்கள்...
நேசியுங்கள்- அன்பு என்றால் எப்படி இருக்கா வேண்டும் , எப்படி இருக்க கூடாது என்பதை பற்றி அபிப்ராயங்களில், சிக்கி கொள்ளாதீர்கள்..
நீங்கள் அன்பு செலுத்தும் போது, எல்லாம் சரியாக நடக்கும்...
வேறு யாரும் உங்களுக்கு போதிக்க முடியாது...

உங்களுக்கு போதிக்க நினைப்பவனுக்கு எதுவும் தெரியாது... தெரிந்தவனுக்கு சொல்ல முடியாது...

Friday, April 23, 2010

புலிகளின் இரண்டு கண்கள்





தமிழ் ஈழ விடுதலை போரில், முதல் முதலில் வீழ்த்தப்பட்ட எதிரி யார்?

சிங்கள போலீஸ் ?

சிங்கள ராணுவ வீரர்?

சிங்கள கட்சி தலைவர்?
தமிழர்களை துன்புரிதிய ஒரு சிங்கள வெறியன்?

நீங்கள் இதில் எந்த விடையை சொல்லி இருந்தாலும், அது தவறு...
துரையப்பா என்ற தமிழர்தான், ஈழ போரின் முதல் பலி என்பது போன்ற , பரவலாக அறிய படாத தகவல்களை , நடுநிலையுடன் அலசி இருக்கும் புத்தகம் தான்,.மருதன் எழுதியுள்ள, விடுதலை புலிகள் என்ற நூல்..

. சிங்கள பேரின வாதத்தை கட்டு படுத்த முடியாத அரசியல் வாதிகள், தமிழர் நலனை புறக்கணிப்பதும், வாத்தைலளால் விளக்க முடியாத துன்பங்களை தமிழர்கள் அடை தும், மனித குலத்துக்கே ஒரு களங்கம்.

அமைதி வழியில் சிலர் தீர்வு காண முயற்சித்து, வெற்றி பெற முடியாத நிலையில், ஆயுத தீர்வு என்ற முடிவுக்கு பிரபாகரன் தள்ள படுகிறார் என்பது நன்றாக விளக்க படுகிறது... வேறு வழியே இல்லாத நிலையில் தான், ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது...

ஆனால், கொள்கை அடிப்படயில் இல்லாமல், ஒரு தனி மனிதனின் விருப்பு வெறுப்புக்கு ஏற்றாவரு, போராட்டம் நடத்த பட்டது உலகிலயே இதிதான் முதல் முறை என தோன்றுகிறது....

உண்மை வீரர் உமா மகேஸ்வரன், காதலில் விழுந்த போது, அதை ஒரு பிரச்சினை ஆக்கி, அவரை வெளியேற்றியது, விடுதலை போரில் ஒரு பெரும் பின்னடைவு..

பின், பிரபாகரனே காதலில் விழுந்து, கல்யாணம் செய்து கொள்வது, அவர் முன்பு எடுத்த முடிவு தவறு என உணர்த்துகிறது...

வரலாறு என்பதே அபத்தம் தான்... தி நகர் சண்டையில் , சற்று வேறு விதமான முடிவு ஏற்பட்டு இருந்தால், உலக தமிழர்களின் தலைவராக, உமா மகேஸ்வரனைதான் , இன்றி அடையாளம் காட்டி இருப்போம்...

ஒழுங்கு , கட்டு ப் பாடு, என எல்லா விதத்திலும் தனித்துவமாக புலிகள் அமைப்பு செயல்பட்டதையும், கடும் பயிற்சி எடுத்து கொண்டதையும் ,வரலாறு கண்டிப்பாக பாராட்டும்..

ஆனாலும், எதிரி யார் என்ற தெளிவு இல்லாமல், துரோகி என முடிவு எடுத்து, சொந்த சகோதரர்களையே கொன்று குவித்ததும, இந்நூலில் பதிவு செய்யபட்டுள்ளது...

அமைதி வழியில் போராடிய அமிர்த லிங்கம், கொல்லப்பட்டதை படிக்கும் போது, இதெல்லாம் ஏன் என நமக்கு கஷ்டம்க இருக்கிறது..
என்ன இருந்தாலும், தனக்கு சரி என பட்டதைத்தான் பிரபாகரன் செய்து இருக்கிறாரா..சுயநலம் என்று எதுவும் இல்லை , உண்மையான போராளி என்று நூல் விளக்குகிறது...

கும்பிட்ட கைக்குள் துப்பாக்கி, மலர் மாலையில் வெடி குண்டு என்றெல்லாம், சிலரை கொன்று குவிக்கும் போது, அவர்களை துரோகிகள் என்று முடிவெடுத்து தண்டிக்கும் அதிகாரத்தை தாங்கள் எடுத்து கொள்வது நியாயமா என்று சிந்தித்து இருந்தால், தம்மையும் சிலர் தண்டனைக்குரியவர்கள் என முடிவேக்க கூடும் என்ற உண்மை அவர்களுக்கு புருந்திரிக்க கூடும்...

கடைசியில் , கருணா என்ற தமிழனே, அவர்களுக்கு சவால் ஆனதுதான் வரலாறு...

இவளவு திறன், திட்டமிடல், உழைப்பு, விமான படை உருவாகும் ஆற்றல் எல்லாம் கொண்ட புலிகள், சிங்கள பேரின வாத எதிர்ப்பை மட்டும் இலக்காக கொள்ளாமல், சிங்கள பேரின வாத எதிர்ப்பு மற்றும சக போராளிகள் எதிர்ப்பு, இரண்டையும் இரண்டு கண்களாக கொண்டு போரிட்டதுதன், உலக வரலாற்றின் மாபெரும் சோகம்....

புத்தகம் : விடுதலை புலிகள்

ஆசிரியர் : மருதன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா