Saturday, November 19, 2011

பேருந்து கட்டண உயர்வும் , கோழி பிரியாணி அறிவு ஜீவிகளும்


ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு அலட்சியமாக டிப்ஸ் வைக்கும் பலருக்கும் ஒரு ஃபிளாஷ் பேக் இருக்கும். அதை காசு வந்ததும் மறந்து விடுவது வாடிக்கை.

இப்போது அலட்சியமாக காசு செலவழிக்கலாம். ஆனால் வேலை தேடும் காலத்தில் ஒரு ரூபாய் கூட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் . வெளியே பார்ப்பதற்கு , சலவை சட்டை பேண்ட், ஷூ , டை என இருந்தாலும் , பாக்கெட்டில் பத்து ரூபாய்தான் இருக்கும் . ஒரு டீ குடிக்க கூட ஆயிரம் முறை யோசிக்க வேண்டும்.

இப்படி கணக்காக காசு எடுத்து வந்தவர்களுக்கு பேருந்தில் திடீர் அதிர்ச்சி. இனி மேல் பழைய கட்டணம் பொருந்தாது. டிக்கெட் விலை ஏறி விட்டது என்றார்கள் நடத்துனர்கள்.

இதை சிலர் முணுமுணுப்புடன் ஏற்றாலும், சிலருக்கு இது தாங்க முடியாத விலை உயர்வு.  பஸ் இல்லாமல் நடந்தே கூட செல்ல வேண்டி வரும்.

பாஸ் கட்டணம் ஆயிரம் ரூபாய். பழைய கட்டண பாஸ் செல்லுபடி ஆகாது. கூடுதல் கட்டணம் கட்டி முத்திரை வாங்க வேண்டும்.

ஆயிரம் ரூபாயெல்லாம் நலிந்த மக்களுக்கு மிகப்பெரிய தொகை.

 இதற்கு காரணம் அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக சொல்கிறார்கள்.


ஒரு பிலேட் சிக்கன் பிரியாணிக்காக , ஒரு பிரச்சினையில் முடிவு எடுக்கும் தமிழ் அறிவு ஜீவிகளும் இதற்கு ஒரு காரணம்.

சினிமா தியேட்டருக்கோ , டாஸ்மாக்குக்கோ போனால், ஐம்பது ரூபாய் கொடுத்தால்தான் ஏசி கிடைக்கும், அண்ணா நூலகத்தில் இலவசமாக ஏசி கிடைக்கிறது என மகிழ்ந்து போய் சொன்னார்கள் அல்லவா?

இலவசம் என்றால் எட்டு அடுக்கு மாளிகைக்கு , கழிப்பிடம் உள்ளிட்ட பகுதிகளுகு ஏசி செய்யும் காசை யார் ஸ்பான்சர் செய்கிறார்கள் என்பதை இவர்கள் எண்ணி பார்க்கவில்லை.

இது உண்மையில் இலவசம் அன்று. மக்கள் பணத்தில்தான் இந்த வசதிகள் செய்யப்படுகின்றன என்ற அடிப்படை உண்மை கூட இவர்களுக்கு புரியவில்லை.

நலிந்த மக்களின் அடிப்படை வசதிகளுக்கு ப்யன்பட வேண்டிய பணம் ஆடம்பரத்த்க்கும், சொகுசுக்கும் பயன்படுவதன் விளைவே , நலிந்த மக்கள் மேலும் மேலும் துன்புறுகிறார்கள்..

இந்த சொகுசை அனுபவிக்கும் அறிவு ஜீவிகள் வாக்கு சாவடிக்கு செல்லப்போவதே இல்லை.

ஆனால் நலிந்த மக்கள் வாக்கு சாவடிக்கு செல்வார்கள். ஆட்சி மாற்றம் ஏற்படுதுவார்கள்/
எனவே அரசு  நலிந்த மக்களுக்கே சாதகமாக செயல்பட வேண்டும். பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

 நூலகம் சின்ன உதாரணம் . இது போன்ர ஆடம்பர செலவுகள் பல உள்ளன. அவையும் இனம் காணப்பய்ட்டு குறைக்கப்பட்டால் மக்களுக்கும் நன்று , ஆட்சிக்கும் நன்று..

Friday, November 18, 2011

அண்ணா நூலக விவகாரம்- ஞானியுடன் ஓர் உரையாடல்


அண்ணா நூலக இட மாற்ற விவகாரத்தை பொறுத்தவரை, நக்கீரனை படித்து விட்டு பொங்கி எழுபவர்கள் ஒரு புறம். கோழி பிரியாணி எழுத்தாளர்கள் சங்கத்தினரின் அழிச்சாட்டியம் ஒரு புறம்.

இதில் தனக்கே உரிய தெளிவுடன் விளக்கம் அளித்து , மக்கள் மனதில் மேலும் உயர்ந்தவர் சாரு நிவேதிதா.

ஞானியை பொறுத்தவரை, அவர் நேர்மையானவர். சில தகவல்கள் அவர் கவனத்துக்கு வரவில்லை என நினைத்து அவருக்கு சில தகவல்கள் அனுப்பினோம். தொடர்ந்து அவர் அளித்த விளக்கம்




சார்.. வணக்கம்.. நூலக விவகாரத்தில் உங்கள் கருத்தில் ஏதும் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறதா?



Gnani Sankaran
எந்த மாற்றமும் இல்லை. என் கருத்து பிளாக் அல்லது ஒயிட் என்பது இல்லை. நடுவே பல பழுப்பு வண்ணங்கள் உள்ளன. சேர்த்தே பார்ப்பதுதான் என் வழக்கம். அண்ணா நூலகம் கட்டியிருக்க தேவையில்லை என்பதுதான் என் கருத்து. அதைக் கட்டும்போதே சொன்னேன். இப்போதும் அதே கருத்துதான். கட்டிவிட்ட பிறகு மாற்றுவது தேவையற்றது என்பதே என் கருத்து. கண்ணகிக்கு சிலை வைத்திருக்கவே தேவையில்லை. வைத்தது தவறு. அதை எடுத்ததும் தவறு. மறுபடியும் வைப்பதும் தவறு. இப்படித்தானே நம் அரசியல் இருக்கிறது



Pichaikaaran Sgl
ஒக்கே சார். இருக்கட்டும்.. கழிப்பறை உட்பட அனைத்து இடங்களுக்கும் ஏசி செய்ய்பட்ட அந்த நூலகம் இயங்க செய்ய்ப்படும் செலவை ஈடுகட்ட , நலிந்த மக்களின் பணம்தானே பயன்படுத்தப்படுகிறது. ? இயக்க செலவு, பாதுக்காப்பு செலவு போன்ரவற்றுகு 30 கோடி செல்வாகிறது என்கிறார்களே …

கட்டப்பட்ட செல்வை விடுங்கள்.. பராபமிப்பு செலவே பெரும் சுமையாக இருக்கிற்தே.


Gnani Sankaran
அந்த நூலகத்தை இடம் மாற்றுவது தேவையற்ற இன்னொரு பெரும் செலவை ஏற்படுத்தும். அதில் இருக்கும் தேவையற்ற செலவுகளைக்கண்டறிந்து குறைக்கச் சொல்லலாம். குழந்தைகள் மருத்துவமனை எழும்பூரில் ஏற்கனவே உள்ளது. அங்கேயே சிறப்பு மருத்துவ பிரிவை ஏற்படுத்தலாம். அல்லது கருணாநிதி கட்டிய சட்டமன்ற தலைமைச் செயலக வளாகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பதாக் சொல்லியிருக்கிறார்கள். அங்கேயே குழந்தைகள் பிரிவையும் ஏற்படுத்தலாம்

ப்ஸ் கட்டணத்தை முன் அறிவிப்பு இன்றி அதிகரித்து இருக்கிறார்களே



பஸ், பால், மின்சார Gnani Sankaranவிலை உயர்வுகள் ஆழமாக விவாதிக்கபப்டவேண்டியவை. மத்திய, மாநில அரசுகளின் தாராளமய பொருளாதாரக் கொள்கையோடு பின்னியிருப்பவை. அத்துடன் தமிழகக்கட்சிகளின் நிர்வாக திறமையின்மையும், வர்க்க சார்பும் சேர்ந்துள்ளன.









கேணி கூட்டத்தின் அடுத்த பேச்சாளர் யார் ?
Gnani Sankaran
அடுத்த கேணி கூட்டம் டிசம்பர் 11ல்தான். இன்னும் பேச்சாளர் முடிவாகவில்லை.

ஒரு முறை அழைத்தவரை மீண்டும் அழைப்பதில்லை என முடிவு செய்திருக்கிறீர்களா? சிலரை மீண்டும் அழைத்தால் நல்லது என்பது என் கருத்து

Gnani Photoகேணியில் ஒருமுறை அழைத்தவரை திரும்ப அழைப்பதில்லை என்பதே முடிவு. ஏனென்றால முதல்முறையாக அழைக்கப்படவேண்டியவர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள்.

Thursday, November 17, 2011

கதைக்கு பின் இருக்கும் கதை- சிறுகதை போட்டி அனுபவங்கள்

ஒரு மிகப்பெரிய வேலையை , சற்றும் பொறுப்பன்றி செய்யலாம். ஒரு சாதாரண் வேலையை  மிக கவனத்துடனும் , கலை நயத்துடனும் செய்யலாம்.  ஒவ்வொரு செயலுக்கும் அதற்குரிய எதிர் வினை உண்டு. கடந்த வாரங்களில் எனக்கு கிடைத்த நல்ல அனுபவங்கள் , மகிழ்ச்சியான நிகழ்வுகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

எனக்கெல்லாம் தமிழ் எழுதவே வாய்ப்பில்லாமல் இருந்தது.  தமிழ் மறந்து விடுமோ என்று கூட பயமாக இருந்தது. என் தமிழ் ஆர்வத்துக்கு உயிர் கொடுத்தது வலைப்பூவும் அதனால் கிடைத்த நண்பர்களும்தான்.எழுத்தில் தவறு ஏற்பட்டால் உரிமையுடன் போன் செய்து அதை தட்டி கேட்கும் நண்பர்களை எல்லாம் நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கும். இத்தனை நல்லவர்களை எல்லாம் வலைப்பூ இல்லாமல் இருந்தால், தெரியாமலேயே போய் இருக்கும்.

எனவேதான் வலைப்பூ சம்பந்தப்பட்ட செயல்களில் ஆர்வமாக கலந்து கொள்வதை என் கடமையாக நினைத்து வருகிறேன்.

ஆதி மற்றும் பரிசல் ஆகியோர் சிறுகதைப்போட்டி அறிவித்தபோது, மகிழ்ச்சியாக இருந்தது. இது உண்மையிலேயே பாராட்டத்தக்க தொண்டு என்றே சொல்ல வேண்டும், ஒரு பத்திரிக்கை போட்டி போல நேர்த்தியாக  நடத்தக்கூடியவர்கள் அவர்கள்.

 இம்முறை வழக்கமான துப்ப்றியும் கதை, கற்பனை கதை எல்லாம் எழுதாமல் யதார்த்தவாத பாணியில் ஒரு முயற்சி செய்ய நினைத்தேன்.

ஆனாலும் ஜஸ்ட் ஒரு  ஜாலிக்காக  பாப்பா போட்ட தாப்பா !!!! ( சவால் சிறுகதை-2011)  கதை எழுதினேன்.
கத்தியின்றி ரத்தமின்றி ( சவால் சிறுகதை 2011 ) க்தையில் ஆரம்ப வரிகள் இப்படி ஜாலியான மூடில் எழுதியவைதான்.

ஆனால் அடுத்த கதையை இப்படி கற்பனையாக எழுத விரும்பவில்லை. அன்றாட வாழ்வில்  நாம் காணும்  விஷ்யங்களை கூர்ந்து கவனித்தால் ,  நம்மைப்பற்றியே எத்தனை விஷ்யங்கள் தெரிகின்றன !!


போலீஸ்  லஞ்சம் வாங்குகிறார்கள் என்போம்.  ஆனால் நாம் சாலை விதிகளை மதிப்பதில்லை. சாலை விதியை  மீறுவதை பெருமையாக நினைபோம். அதிகாரிகள் பொறுப்பின்மையால் சில உயிர்கள் பலியாவதை உருக்கமாக மற்றவர்களிடம் சொல்வோம். ஆனால் நாம் பொறுப்பில்லாமல் , பீச்சில் பீர் அருந்தி விட்டு, பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு , பெருமையாக இண்டர்னெட்டில் போட்டோக்களை போட்டு கொள்வோம்..


இது போன்ற எண்ணற்ற விஷ்யங்களை கூர்ந்து கவனித்த போது அதிர்ச்சியாக இருந்தது. சில அதிர்ச்சியூட்டும் படங்களை நானே நேரடியாக எடுத்தேன்.

சில அதிர்ச்சியூட்டும் விளையாட்டுத்தனமான சம்பவங்களை நானே உருவாக்க்கினேன் . அதை எல்லாம் வெளியிட்டு இருந்தால் செம ரகளை ஆக இருந்து இருக்கும். படிப்பவர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்து இருக்கும்.


அப்போதுதான் ஒரு திருப்பு முனை. அலுவலக் சக ஊழியர் ஒருவருடன் காரில் சில இடங்களுக்கு செல்ல வேண்டி இருந்தது. அவருடன் எனக்கு பெரிய பழ்க்கம் இல்லை. அலுவல் ரீதியான பயணம்.

பயணத்தின் போது ஆங்காங்கு கண்ட வித்தியாசமான சம்பவங்களை ப்டம் எடுத்து வந்தேன்.

அவர் என்னை ஆச்சர்யமாக கவனித்தார். நான் ஒரு முன்னாள் பத்திரிக்கையாளன் என்பதால் , ஏதோ பத்திரிக்கைக்காக எடுக்கிறேன் என நினைத்தார்.

 நம் மக்களின் ஒழுங்கின்மை குறித்து அவரிடம் பேசினேன். சிறு நீர் கழிக்காதே என்ற போர்டில் சிறு நீர் கழிப்பது , குப்பை கொட்டாதே என்ற இடத்தில் குப்பை கொட்டுவது போன்றவற்றை சுட்டி காட்டினேன்.

அவர் அமைதியாக , மக்களையே குற்றம் சாட்டுவது தவறு என்றார். சிறு நீர் கழிக்க வசதியான இடம் மக்களுக்கு அமைத்து கொடுக்காமல், பொது இடத்தில் சிறுனீர் கழிக்கிறார்கள் என சொல்வது தவறு என்றார்.  நிறைய பேசினார்.

இந்த ஆண்டு எனக்கு அளித்த பரிசு அவர் நட்பு என நினைக்கிறேன்.

பெரியவர்களின் தவறுகளை விட்டுவிட்டு, எளியவர்களின் தவறை சுட்டிக்காட்டி வெற்றி பெற்ற சில திரைப்படங்களை சுட்டி காட்டினார்.

இத்தனையும் அவர் , என்னை ஒரு பத்திரிக்கையாளனாக நினைத்தே பேசினார்.

அவர் சொன்னது எல்லாவற்றையும் ஏற்கவில்லை. ஆனாலும், எளிய மனிதர்களின் தவறுகளை சுட்டி காட்ட விரும்பவில்லை.

எனவே நான் கஷ்டப்பட்டு எடுத்து சில முக்கிய படங்களை எல்லாம் அழித்தேன். ( கதையில் இருக்கும் படங்கள் நான் எடுத்தவை அல்ல. நெட்டில் இருந்து எடுக்கப்பட்டவை )

புத்தர் சிரிக்கிறார் ( சவால் சிறுகதை 2011 ) என்ற கதை வேறு மாதிரி வந்திருக்க வேண்டியது,

ஆனாலும் சும்மா பிரசுரித்து வைத்தேன்.

அணுசக்திக்கு எதிரான பிரச்சார கதை என நடுவர்கள் கருதி விட்டார்கள். உண்மையில் அணு சக்தி விவகாரம்  அதில் கொஞ்சம்தான். ஆனால் அந்த க்தை வடிவம் அவர்களை அப்படி நினைக்க வைத்து விட்டது.

க்தையில் நல்ல கதை, கெட்ட கதை என்று இல்லை. இதே சூழ்னிலைக்கு முழு நீள போர்னோ கதை கூட எழுதி வைத்து இருந்தேன்.

ஆனாலும், புத்தர் சிரிக்கிறார் கதை தோல்வி அடைந்து பாப்பா போட்ட தாப்பா  கதை வென்று இருந்தால் எனக்கு க்‌ஷ்டமாக இருந்து இருக்கும். இரண்டுமே வெற்றி பெறாதது மகிழ்ச்சி.

ஒரு விளையாட்டைகூட சின்சியராக செய்தால், கண்டிப்பாக அதற்கு பலன் உண்டு எனபது எனக்கு கிடைத்த புது நட்பின் மூலம் உணர முடிந்தது.

அதே நேரத்தில் , நான் கூர்ந்து கவனித்த பல விஷ்யங்கள் என் எண்ணப்போக்கில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன.

   நேர்மையான தோல்வியில் கிடைக்கும் மகிழ்ச்சியை உணர்வது இதுவே முதல் முறை என்ற வகையில், இந்த விளையாட்டு என்னை பொறுத்த வரை பெஸ்ட் கேம்.





Wednesday, November 16, 2011

சாரு நிவேதிதாவை வன்மையாக கண்டிக்கிறேன்

ஹாய் சாரு..

உங்களை உங்கள் எழுத்துக்காக கொண்டாடுபவர்கள் ஏராளம். உங்களுடன் இருக்கும் போது கிடைக்கும் எனர்ஜெடிக் ஃபீலிங்கிற்காக கொண்டாடுபவர்களும் ஏராளம். உங்கள் படிப்புக்காக , உழைப்புக்காக , அன்பிற்காக கொண்டாடுபவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.


இதையெல்லாம் தவிர  உங்களை ஒரு  குருவாக எண்ணி போற்றும் பலரும் இருக்கிறார்கள்.  உங்களை பார்ப்பது ஒரு ஜென் குருவைப்பார்ப்பது போல இருப்பதாக , நம் வாசக நண்பர்கள் சிலர் என்னிடம் கூறி இருக்கிறார்கள்.

எங்களுக்கு தீபாவளி என்பது , டிசம்பரில்  நடக்க உள்ள , தமிழில் எழுதப்பட்டுள்ள உலக நாவல் வெளியீட்டு விழாதான்.

புத்தாண்டு என்பது என்ன என நீங்கள் கேட்கலாம்..

தமிழ் புத்தாண்டு தை மாதமா, சித்திரையா என்பது அரசியல் பிரச்சினை..

ஆனால் எங்களுக்கு அந்த குழப்பம் எல்லாம் இல்லை.

எங்களை பொறுத்தவரை தமிழ் புத்தாண்டு, இலக்கிய புத்தாண்டு, எழுத்துல புத்தாண்டு என எல்லாமே டிசம்பர் 18தான் ... அன்றுதான்  நவீன தமிழ் இலக்கியத்துக்கு பிறந்த நாள்..

அந்த நன்னாளில் நீங்கள் வெளி நாடு செல்ல இருப்பதாக கேள்விப்பட்டேன், அதை வன்மையாக கண்டிக்கிறேன்..

2012 என்பது எக்சைல் நாவலுக்கான ஆண்டாகும். அந்த நாவல் வெளி வந்த பிறகு, உங்கள் ரீச் பல மடங்கு அதிகரித்து விடும். நாங்களெல்லாம் இப்போது போல எளிதாக அணுகி பேச முடியுமா என தெரியவில்லை.
எனவே இந்த டிசம்பர் 18 வெளி நாடு செல்லாமல் எங்களுடன் கொண்டாட வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

பால் அபிஷேகம் , குரு பூஜை என இலக்கிய உலகின் ஒரு புது அத்தியாயமாக இந்த ஆண்டின் டிசம்பர் 18 அமைய இருக்கிறது. அதை மாற்றி விட வேண்டாம்..

   மக்கள் நாடி துடிப்பை அறிந்தது போல சீன் போடும் சிலர் , தி மு கதான் ஆட்சி அமைக்கும் என்று அடித்து சொன்னபோது, வாஷ் அவுட் ஆகும் என கூலாக நீங்கள் துக்ளக்கில் எழுதினீர்கள்.

நானே கூட அதை நம்பவில்லை. ஆனால் அதன் பின் நடந்தது வரலாறு.

அதே போல அண்ணா நூலக விவகாரத்திலும் ஆட்டு மந்தை கூட்டத்தில் சேராமல் , சிங்கமென கர்ஜித்தீர்கள். அதை அப்போது பலர் ஏற்கவில்லை. இப்போது சிறிது சிறிதாக ஏற்று வருகிறார்கள்.

அதே போல எக்சைல் நாவல் வரலாறு படைக்கும் என்ற உங்கள் வாக்கும் பலிக்கத்தான் போகிறது.

எனவே இந்த பிறந்த நாளை சென்னையில் கொண்டாட வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்.




ஞானி அவர்களுக்கு ஆறு கேள்விகள்- அண்ணா நூலக விவகாரம்


உயர் திரு ஞானி அவர்களுக்கு..

உங்கள் மீதும் , உங்கள் நேர்மை , துணிச்சல்  மீதும் பெரும் நம்பிக்கை கொண்ட எளிய மக்களில் ஒருவன் நான்.  ஆனால் கோட்டூர்புரம் அண்ணா நூலக விஷயத்தில் உங்கள் நிலைப்பாடு நலிந்த மக்களுக்கு எதிரானதாக இருப்பதாக நினைக்கிறோம்.

ஆனால் இதற்கு அரசியல் உள் நோக்கம் எதுவும் உங்களுக்கு இருக்காது என உறுதியாக நம்புகிறோம்.ஆனால் சில தவல்கள் உங்கள் கவனத்துக்கு வரவில்லை என நினைக்கிறோம்.

கீழ்கண்ட விஷ்யங்கள் உங்கள் கவனத்துக்கு வந்ததா?


  • மின் வெட்டால் மக்களும் , நிறுவனங்களும் துன்புறும் நிலையில் , அண்ணா நூலகத்தில் கழிப்பிடம்  உள்ளிட்ட எல்லா இடங்களிலும் , ஆட்களே வராத நேரங்களிலும் , தினமும் ஏர் கண்டிஷன் செயல்பட்டு வருவது உங்கள் கவனத்துக்கு வந்ததா? 
  • புத்தகம் வாங்குவதை விடுங்கள். பராமரிப்பு, பாதுகாப்புக்கு மட்டும் ஆண்டொன்றுக்கு 30 கோடி ரூபாய்  ( மாதம் ஒன்றுக்கு 2.5 கோடி !! ) செலவாகும் என்பது உங்கள் கவனத்துக்கு வந்ததா? 
  • இது போன்ற ஆடம்பர கட்டடங்கள் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக இருந்தால் இத்தகைய செலவுகளை தம் வருமானங்கள் மூலம் சமாளிப்பார்கள். இந்த நூலகம் இந்த செலவுகளை , இந்த நூலகத்தை பயன்படுத்த வாய்ப்பே இல்லாத நலிந்த மக்களின் நிதியை கொண்டு சமாளிப்பது உங்கள் கவனத்துக்கு வந்ததா
  • இலவச டீவி போன்ற திட்டங்களால் பாமர மக்கள் மயங்கி விட்டார்கள் என அறிவு ஜீவிகள் குற்றம் சாட்டினார்கள். ஆனால் தற்போது நூலகம் குளு குளுவென இருக்கிறது  , கட்டடம் பிரமாண்டமாக இருக்கிறது என அறிவு ஜீவுகள் மயக்கத்தில் இருப்பதாக பாமர மக்கள் நினைப்பது உங்கள் கவனத்துக்கு வந்ததா?
  • அண்ணா நூலகம் சென்று பார்த்தீர்களா? அதில் புத்தகம் இருக்கும் அறைகளை விட வெற்றிடங்கள்தான் அதிகம். கன்னிமரா நூலக பாணியில் கட்டினால் இரண்டே தளத்தில் இந்த நூலகத்தை அமைத்து செலவை கட்டுப்படுத்தலாம் என தொழில் நுட்ப வல்லுனர்கள் கருதுவது உங்கள் கவனத்துக்கு வந்ததா?
  • இந்த செலவுகளை கட்டுப்படுத்தி , மற்ற நூலகங்களில் இருந்து எடுத்த பணத்தை திருப்பி கொடுத்தால் , நலிந்த மக்கள் பெரும் பயன் பெற முடியும் என்பது உங்கள் கவனத்துக்கு வந்ததா? 

இவை எல்லாம் எனக்கு தெரியும் . ஆனாலும் அனைவருக்கும் பயனுள்ள டி பி அய்க்கு , சிறப்பான சிக்கனமான இடத்திற்கு மாற்றுவதை எதிர்க்கிறேன் என்று நீங்கள் சொன்னாலும் உங்கள் மீதான எங்கள் மரியாதை மாறப்போவதில்லை.. 

ஆனாலும் உண்மை தெரிந்து , உங்கள் நிலையை மாற்றிகொண்டு  , வழக்கம்போல உங்களுக்கே உரித்தான மக்கள் நல சார்பு நிலையை எடுத்தால் என்றென்றும் நலிந்த மக்கள் உங்களை வணங்குவார்கள் 


என்றென்றும் அன்புடன்,
பிச்சைக்காரன் 

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா