Monday, April 2, 2012

அதிர வைத்த சார்த்தர் புத்தகம்

எனக்கு வாழ்க்கை வரலாற்று வரலாற்று புத்தகங்கள் மிகவும் பிடிக்கும். இலக்கிய மேதை சார்த்தரையும் மிகவும் பிடிக்கும்.

ஆனால் அவர் வாழ்க்கை வரலாற்று புத்தகமான சொற்கள் நூலை வெகு நாளாக படிக்காமலேயே வைத்து இருந்தேன் .. ஏன்?

இந்த சொற்கள் நூல் அவரது சிறு வயது ஆண்டுகளைப் ப்ற்றியது என்பது எனக்கு சற்று ஏமாற்றம்தான்.. சிறு வயது சம்பவங்கள் அனைவருக்கும் பிடிக்கும் தான். ஆனால் ஒரு ஹீரோவைப் பற்றி படிக்க நினைப்பவர்கள் அவரது , திறமைகள் பளிச்சிடக்கூடிய , சவால்கள் நிறைந்த இளமை மற்றும் பின் இளமை பருவம் பற்றித்தானே படிக்க நினைப்பார்கள்.. மழ்லை வயது அனுபவங்களில் என்ன கிக் இருக்கிறது .

இந்த எண்ணங்களால் அந்த நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வமே வரவில்லை..

சென்ற வாரம் கொஞ்சம் நேரம் கிடைத்தது.. ஆனால் படிக்க வேறு புத்தகங்கள் கையில் இல்லை. எனவே சொற்கள் நூலை புரட்டினேன்..

மிட்டாய் வாங்கி சாப்பிட்டேன், பால் குடித்தேன், பசங்களுடன் விளையாடினேன் என சம்ப்வங்களின் அடுக்காக இருக்கும் என நினைத்து படிக்க ஆரம்பித்த எனக்கு இனிய அதிர்ச்சி.. உலகின் உன்னதாமான புத்தகங்கள் ஒன்றை படித்து கொண்டு இருக்கிறோம் என்பது புரிய ஆரம்பித்தது..

ஒருவர் தன் குழந்தை பருவத்தை , 20 வயதில் நினைத்து பார்ப்பது வேறு, ஆனால் இந்த புத்தகத்தை சார்த்தர் தன் 59ஆவது வயதில் எழுதி இருக்கிறார்.. ஆகவே இது குழந்தைத்தனமான எழுத்தல்ல... ஒருவர் தன் உன்னத கால கட்டத்தில் இருக்கும்போது படைத்த உன்னத எழுத்து..

 சில இடங்களில் அவரது நேர்மையான எழுத்து திடுக்கிட செய்கிறது. உண்மைக்கு மிக அருகே செல்லும்போது ஏற்படும் படபடப்பு அது..

சில பகுதிகளில் , அந்த குழந்தை பருவத்திலேயே  நாம் வாழ்கிறோம். சில இடங்களில் பழைய சம்ப்வங்களை நினைத்து பார்ப்பது போல உணர்கிறோம்.. சோ ஸ்வீட்...


காதலியை ரசிப்பது போல , புத்தகத்தை ரசிப்பது தொட்டு பார்ப்பது , முதன் முதலில் வாசிக்க தெரிந்தவுடன் ஏற்படும் மகிழ்ச்சி என பிரத்தியேக உணர்வுகளை சுட்டி காட்டி இருக்கிறார் சார்த்தர்..

************************************************************

என்னை அதிர வைத்த் வரிகள் சில


  • உலகில் நல்ல தந்தையர்களே கிடையாது.. என் தந்தை உயிரோடு இருந்து இருந்தால் என்னை ஒரு வழி ஆக்கி இருப்பார் 
  • எல்லா குழந்தைகளும் மரணத்தின் கண்ணாடிகள்
  • தூசி தட்டுவதற்கு தவிர புத்தகங்களை தொட தடை விதிக்கப்பட்டு இருந்தது. வாசிக்க க்ற்கும் முன்பே நான் அந்த நிற்கும் கற்களை “செங்கற்களை “ வணங்கினேன்
  • என்னை பொருத்தவரை  நான் ஒருத்திக்கு சகோதரனாக இருந்து இருந்தால், எங்களுக்குள் தகாத உறவு ஏற்பட்டு இருக்கும்
  • பூச்சிகளை கொன்ற நான் , அவற்றின் இடத்தை பிடித்து கொள்கிறேன். நானே பூச்சியாக மாறி விடுகிறேன்’
**************************************************************



வெர்டிக்ட் _    சொற்கள்:-    சோ ஸ்வீட் 


வெளியீடு - தோழமை பதிப்பகம் 

Sunday, March 25, 2012

எழுத்தாளர் விஜய மகேந்திரனுக்கு கொலை மிரட்டல்- துரோகபுத்திரன் அட்டூழியம்

கூட்ங்குளம் பிரச்சினைக்காக ஞானி குரல் கொடுத்து வருவது தெரிந்த் ஒன்றுதான்.. அணு உலை எதிர்ப்பாளர்கள் சென்னையில் கூட்ட்ம் ஒன்று  நடத்தினார்கள்.. அதில் துரோக கவிஞர்  கலந்து கொள்கிறார் என்பதை அறிந்து   நடு நிலையாளர்கள் அதிர்ந்தனர்..

அநீதிக்கு பேர் போன அந்த துரோகி கலந்து கொண்டால்,  ஒட்டு மொத்த போராட்டமும் பாதிக்கப்படுமே என்ற நல்லோரின் அச்சம் பிற்பாடு உண்மையானது..  இந்த இடுகை அதைப் பற்றி அன்று..


அல்ட்டிமேட் ரைட்டர் அந்த துரோகியின் பத்திரிக்க்கை தன் ரத்தம் சிந்தி வளர்த்தார்.. அது வரை கட்சி பத்திரிக்கையாக கருதப்பட்ட அந்த பத்திரிக்கைக்கு , அல்ட்டிமேட் ரைட்டரின் கட்டுரைகள்தான் இலக்கிய இடம் வாங்கி கொடுத்தது.

அப்படிப்பட்ட அவருக்கே பத்து பைசா கூட கொடுக்காமல் ஏமாற்றினார் அவர்..


அதே பாணியில், இளம் எழுத்தாளர் விஜய மகேந்திரனையும் ஏமாற்றியுள்ளார் அவர்..


அத்தோடு விட்டால் பரவாயில்லை... அவர் இயல்பு அது என விட்டு விடலாம்..

ஆனால் இந்த பிரச்சினையப்பற்றி யாரிடமும் பேசக்கூடாது என விஜய் மகேந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் அவர்...

பாவம்.. ஃபேஸ் புக்கில் தன் மன வேதனையை வெளிப்படுத்திய வி ம , சில மணி நேரங்களிலேயே அந்த கமெண்டுகளை நீக்கி விட்டார்..

என்ன ஆயிற்று என வி ம விடம் விசாரித்தபோதுதான் , அந்த துரோகி போன் செய்து மிரட்டியது தெரிய வந்தது...

கருத்துரிமை குறித்து நீட்டி முழங்கும்  துரோக கவிஞர் இப்படி மற்றவர்களை மிரட்டுவது , பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..




Thursday, March 22, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானம் - எதிர்த்து யார்.. ஆதரித்தது யார்- ரிப்போர்ட்

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி பெற்றதுள்ளது... இதை ஆதரித்தவர்கள் யார் ? எதிர்த்தது யார்?

 ஆதரவு நாடுகள்...


பெனின் , காமரூன் , லிபியா , மொரீஷியஸ் ,  நைஜீரியா , இந்தியா !!! , சிலி , கோஸ்டா ரிக்கா , Guatemala, மெக்சிகோ , உருகுவே, ஆஸ்திரியா , பெல்ஜியம் , இத்தாலி, நார்வே, ஸ்பெயின் , ஸ்விஸ் , அமெரிக்கா, செக் குடியரசு , போலந்து , ஹங்கேரி, மால்டோவா, ருமேனியா

மொத்தம் - 24


 நடு  நிலை  நாடுகள்



அங்கோலா,  Botswana, Burkina Faso , Djibouti , செனகல், ஜோர்டான் , க்ரிகிஸ்தான் , மலேசியா


மொத்தம் - 8


எதிர்ப்பு நாடுகள்


  காங்கோ ,  Mauritania , உகான்டா  , பங்களாதேஷ் , சீனா , இந்தோனேஷியா , குவைத் , மாலத்தீவுகள், பிலிப்பைன்ஸ் , கட்டார் , சவுதி, தாய்லாந்து, க்யூபா, ஈக்வெடார் , ரஷ்யா !!!!    


மொத்தம் - 15







 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை ஆதரித்தால் தேச துரோகியா? இஸ்லாமிய நண்பனின் மவுனமும் , எனது அதிர்ச்சியும்


சற்று முன் ஓர் உணவகத்தில் சாப்பிட்டு கொண்டு இருந்தேன் , பாகிஸ்தான் பங்ளாதேஷ் மோதும் இறுதி ஆட்டம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருந்தது


பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டமிழக்கு. போதெல்லாம் பெரும் கரகோஷம் கிளம்பியது.  எதிர் அணி இந்தியா இல்லைஎனற போதும் , ஏன் இந்த ஆர்வம் ?

பாகிஸ்தானை எதிர்ப்பது  தேசத்துக்கு நாம் ஆற்றும் பெரும் தொண்டு என்பது , சிறுவயதிலேயே நம் மனதில் பதிய வைக்கப்பட்டதே இதற்கு காரணம்..

*************************

எனக்கு இந்த அனுபவம் சிறு வயதில் கிடைத்தது... கபில் தேவ், ரிச்சர்ட் ஹாட்லீ மற்றும் இம்ரான் ஆகியோர் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஆல் ரவுன்டர்கள்... இவர்கள் சம்காலத்வர் என்பதால் , ஒப்பீடு தவிர்க்க இய்லாதது...

மூவரில் சிறந்த்வர் யார் என் சொல்வது கஷ்டம்.. மற்ற இருவரை விட பேட்டிங்க்கில் விஞ்சி நிற்பது ஹாட்லீ என்ற போதும் ,அவர் பவுலிங்க் மற்ற இருவரைவிட சுமார் என்பது என் கருத்து...  கபில் சிறந்த  வீரர் என்றாலும், இம்ரான் கானின் ஆவேசம் ,ஆக்ரோஷம் கபிலுக்கு வராது என்பது என் கருத்து,, என்வே இந்த மூவரில் சிறந்தவர் இம்ரான் கான் என்பது என் தனிப்ப்பட்ட கருத்த். பெரும்பாலான நண்பர்கள் இதை ஏற்கவில்லை..


ஒரே ஒரு  நண்பன் அப்துல் காதர் என்னை ஆதரித்தான்,.

ஒரு நாள் அனைத்து நண்பர்களும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம்.. அப்போது இந்த டாபிக் விவாதத்துக்கு வந்தது. இம்ரான் கானின் பெருமைகளை நான் அடுக்கினேன்..  ஆனால் பெரும்பாலானோர் கபிலை ஆதர்த்தனர்.. என் தரப்பு வலு சேர்க்க யாரும் இல்லை.. அப்துல் காதர் எனக்கு ஆதரவாக பேசுவான் என எதிர் பார்த்து அவன் முகம் பார்த்தேன். அவன் , விவாத்தையே கவனிக்காதவன் போல் முக பாவம் காட்டிக்கொண்டு இருந்தான்,, அவன் ஏன் இம்ரான் கானுக்கு ஆதரவளிக்க்க வில்லை என்பது அந்த சம்ப்வம் நடந்து சிலஆ ண்டுகள் கழித்துதான் புரிந்தது...

**************************************************************

சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் க்ரிக்கெட் போட்டி நடந்தது அல்லவா,, அதை  நண்பர்களுடன் சேர்ந்து தொலை காட்சியில் பார்த்தேன்.. போட்டி முடிந்து அனைவரும் சென்ற பின் நானும் சேகர் என்ற நண்பனும் தனியாக பல விஷ்யங்கள் பேசி கொண்டுஇ ருந்தோம்...   அப்போது அவன் " ரஹீம் உண்மையிலேயே கிரேட் டா " என்றான்..

" ஏன்டா "

" அவன் முஸ்லீமாக இருந்தால் கூட பாகிஸ்தானை ஆதரிக்காமல் , இந்தியாவை ஆதரித்த்து கை தட்டினானே " என்றான்   


எனக்கு அதிர்ச்சியாக இருந்தது... கிரிக்கெட் அணியை ஆதரிப்பதில் மதம் எங்கிருந்து வந்தது ?  முஸ்லீமாக இருந்தால் பாகிஸ்தானை ஆதரிக்க கூடாதா ? இந்திய அணியை ஆதரித்து நாட்டு பற்றை நிரூபிக்க வேண்டுமா ?

 நாட்டு பற்றை அளக்கும் மீட்டர் கிரிக்கெட்டா ?

அபத்தம்...



ஒருவர் பாகிஸ்தான் அணியை ரசித்தால் அது அவர் தனிப்பட்ட விருப்பம்...  எந்த மதத்தவராக இருந்தாலும், இதை வெளிப்படையாக சொல்லும் நிலை வேண்டும். இந்த் சிறிய விஷ்யம் கூட நம் நாட்டில் சாத்தியம் இல்லை என்பது கேவலம்...


 

Monday, March 19, 2012

தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ள அருணகிரி நாதர் பாடல் - மறைபொருள் விளக்கம்

சில தமிழ் சொற்கள் மற்றும் பழ மொழிகள் , தவறான அர்த்தத்தில் பயன்பட்டு வருவதை முந்தையை பதிவுகளில் பார்த்தோம் . இனியும் பார்க்க இருக்கிறோம்.  இந்த இடுகையில் , தமிழ் பாடல் ஒன்று தவறான அர்த்தத்தில் பிரபலாமாக உள்ளதே..அதை பார்க்கலாம்..

++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே,
….ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே,
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே,
….குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே,
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே,
….வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே,
ஆறு முகம் ஆன பொருள் நீ, அருளல் வேண்டும்,
….ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
நூல்: திருப்புகழ்
பாடியவர்: அருணகிரிநாதர்



இதற்கு நம் மக்கள் கூறும் அர்த்தம்...

  • ஆண் மயிலின்மீது ஏறி விளையாடுகின்ற முகம் ஒன்று,
  • ஞான விஷயங்களைத் தந்தையாகிய சிவபெருமானுடன் சரிசமமாக உரையாடுகின்ற முகம் ஒன்று,
  • என்னைபோன்ற அடியவர்களின் குறைகளைக் கேட்டுத் தீர்வு செய்யும் முகம் ஒன்று,
  • தாரகன் என்ற அரக்கனின் மலையை வீழ்த்திவிட்டு அங்கே வேல் பிடித்து நிற்கும் முகம் ஒன்று,
  • உன்னுடன் மோத வந்த சூரனையும் மற்ற அரக்கர்களையும் வீழ்த்திய முகம் ஒன்று,
  • வள்ளியை மணம் புரிய வந்த முகம் ஒன்று,
இப்படி ஆறுமுகனாக அருணாசலத்தில் குடிகொண்ட பெருமாளே, உன் அருளை வேண்டி நிற்கிறேன்!

 ***************************************

இது சரியா?

இல்லை...

இந்த விளக்கத்தில் கடைசி வரிக்கு முந்தைய வரிக்கு சரியான விளக்கம் இல்லை...


இதற்கான ஆன்மீக விளக்கம் பின் வருமாறு..

ஆண் மயிலின்மீது ஏறி விளையாடிய போது உனக்கு ஒரு முகம்தான் இருந்தது... அதேபோல் ,ஈசனுடன் ஞான மொழி பேசிய போதும், அடியார்கள் குறை தீர்த்த போதும் , மலையை வீழ்த்திய போதும் , அரக்கனை வென்றபோதும் , வள்ளியை மணம் புரிந்த போதும் , உனக்கு இருந்தது ஒரே ஒரு முகம்தான்..

ஆனால் எனக்கு ஆறு முகத்துடன் காட்சி தருகிறாய்..  ஆறு முகத்துடன் காட்சி தருவதன் தத்துவ விளக்கத்தை கூறுவாயாக..



***************************************


இப்படி தத்துவ விள்க்கம் கோரும் பாடல் தவறான பொருளுடன் பிரபலமாகி இருக்கிறது 

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா