Tuesday, March 30, 2010

மலர மறந்த மொட்டுக்கள்


"பிரிஞ்சுடலாம் பா ..இது சரியா வராது..."

அவள் சொன்னதை கேட்டு, நான் சந்தோஷ பட்டு இருக்க வேண்டும்... ஆனால், இல்லை ...இனம் புரியாத உணர்சியடன் " என்னடி சொல்ற ? தெளிவாதான் இருக்கியா " என்றேன்...

" ஆமா,... நல்ல யோசிச்சு பார்த்துட்டேன்... உங்க மேல என் அன்பு எப்பவும் மாறது...ஆனா நாம சேர்வது நடக்க முடியாதது.. என்னை பொண்ணு பார்க்க நாளை வர்ரங்க,,, நான் முழு மனசோட சம்மதம் சொல்லிட்டேன்..." என்றாள்..

" நாளை நேர்ல பேசலாம் ..வெயிட் பண்ணு"
" இனிமே நீங்க என் கூட பேசுனா, அது என் வாழ்கையை பாதிக்கும்... இனி நானும் உங்களுடன் பேச மாட்டேன்,.,,நீங்களும் பேச வேண்டாம் ..ப்ளீஸ்
அதுக்கு மேல மேல உங்க இஷ்டம் "

********************************

அவளை முதன் முதலில் சந்தித்த போது, எனக்குள் எந்த ரசாயன மாற்றமும் ஏற்படவில்லை... லால் பாக்கில் , எப்போதும் அமரும் இடத்தில அமர்ந்து , சீரோ டிகிரி படித்து கொண்டு இருந்தேன்... யாரோ அருகில் வருவது போல இருக்கவே, சட் என புத்தகத்தை ஒளித்தேன்...

நாம் தமிழ் புத்தகத்தை படிப்பதை வேறு யார் பார்த்தாலும், நம்மை ஒரு மன நோயாளி என்றுதான் நினைகிறார்கள். ஆந்திரா பய உணர்வு...
ஆனால் அவள் பார்த்து விட்டால் போலும்,.,,, சார் நீங்க தமிழா ? நானும் தான் சார்... ஐநூறு ரூபாய்க்கு சில்லறை கிடைக்குமா , என்றாள்...

என்னிடமும் இல்லை... பிறகு பேசியது... அவளை டிராப் செய்தது,,, அவளும் என் வீட்டு அருகில் வசிக்கிறாள் என்பதை அறிந்தது, கொஞ்சம் கொஞ்சமாக பழக ஆரம்பித்தது என்பதெல்லாம் , என்னை பொறுத்த வரை, சாதரணமாந விஷய்னகள் தான்...

நான் பல பெண்களுடன் பழகி இருக்கிறேன்.. இவளை ஒரு வித்தியாசமான பெண் என்றெல்லாம் சொல்ல முடியாது.... அழகு சிலை என்றும் சொல்ல முடியாது..
அப்படியே உலக அழகியாக இருந்தாலும், எனக்கு பயன் இல்லை... எனாகு ஊரில் , திருமணத்துக்கு பெண் ரெடி... பெங்களூர் ஒப்பந்த வேலை முடித்ததும்.. ஊர் - கல்யாணம் எல்லாம் முன்பே முடிவு செய்ய பட்டதுதான்..

ஆனாலும், ஒரு பேச்சு துணை என்ற அளவில் , அவள் ஓகே தான்... பேசி கொண்டே இருப்பாள்... நான் ரஜினியை ரசித்தால், அவள் கமல் ரசிகை,.,, நான் சாரு எனறால், அவள் ஜெ மோ ... சின்ன சின்ன முரண்பாடுகள், அவளை சுவாரசியம் ஆக்கின...


***********
ஒரு நாள் என்னிடம் கொஞ்சம் சீரியசாக வந்தாள்.. " எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டங்க... என் அப்பா கன்னட காரர்..அம்மா தமிழ்... எனக்கு மாப்பிள்ளை கன்னட கார பாக்குராங்க என்றாள்...

" இதை ஏன் இவ்வளவு சோகமா சொல்றா " எனக்கு புரியவில்லை...

" நம்ம லவ் ஜெயிக்கணும் ராஜா... என்ன செய்றதுன்னு தெரியல "

எனக்கு சிரிப்பு வந்தது... நான் எப்ப இவளை லவ் பண்ணேன்.. இப்படி நினச்சுதான் பழகுறாள ?

ஆனால் மறுக்க விரும்பவில்லை..எப்படியும் ஒரு மாசத்துல பெங்களூர் விட்டு கிளம்ப போறோம்..அது வரை இந்த காதலை தொடர்வோம்... பிறகு எதாவது சொல்லி , சோக வசனம் பேசி , விடை பெறுவோம்... என் எண்ணம் சிறகடித்து...

நான் காமுகன் அல்ல... பெண் வெறியனும் அல்ல... ஒரு மாதத்துக்கு , ஒரு நட்பு தொடரட்டும் என்பதுதான் என் எண்ணமாக இருந்தது... அதை முறிக்க விரும்பவில்லை...

அதன் பின், பல இடங்கள் அவளுடன்... பல சுவையான சம்பவங்கள்.... ஆனாலும் , அவள் மேல் காதல் என எதுவும் இல்லை... என்ன கதை சொல்லி , விடை பெறுவது என்பதைத்தான் யோசிப்பேன்...

" ராஜ,.,, வீட்ல ஒவ்வொரு கதய சொல்லி, வர்ற மாபிளைங்கள தட்டி கழிக்றேன்.... சீக்கிரம் வந்து பொண்ணு கேளுங்க.. ஒத்துக்க மாட்டாங்க.. ஆனா போராடி தானே ஆகணும் " என்பாள் அவள்,,, கொஞ்சம் பொறு என்பேன் நான்...
" அவள் வீட்டு விருப்படியே யாராவது மனது கொண்டால், நம் வேலை மிச்சம் :" என நினைத்து கொள்வேன் நான்..

பெங்களூர் வேலை முடியும் நேரம் வந்து கொண்டே இருந்தது...
அப்போதுதான் அவளது போன்... அவள் அம்மா , அவள் பக்கத்துக்கு தமிழ் பையனை சிபாரிசு செய்ததும், அப்பா அதை மூர்க்கமாக மறுத்ததும், அம்மா உறவுக்கே அந்த எதிர்ப்பு என்ரால், காதலுக்கு எவ்வளவு எதிர்ப்பு இருக்கும் என அவள் உணர்ந்ததும் தனி கதை...

அவள் உறவை துண்டிப்பது பற்றி யோசிதேனே தவிர, அதற்கு அப்புறம் என்ன என யோசித்ததே இல்லை... அவள் இல்லாத உலகம் எப்படி இறக்கும் என கற்பனை செய்தது கூட இல்லை...

அவள் என்னுள் ஒரு பகுதியாகவே மாறி விட்டதை இப்போது தான் உணர்ந்தேன்....

இனி நானாக போன் செய்ய முடியாது.. அவள் விருபத்துக்கு மாறாக அவளுடன் பேச கூடாது... அவளாக பேசினால்..? " ப்ளீஸ் பேசு... உனக்காக உயிரையும் தருகிறேன் " மனதுக்குள் கெஞ்சினேன்...

என்ன இருந்தாலும் நான் செய்தது ஒரு வகை துரோகம்... மனதில் காதல் இல்லாமல், சும்மா போக்கு காட்டி வந்து இருக்கிறேன்... இப்போது அவள் பிரிய விரும்பும்போது, எனக்குள் காதல்....
அவளை பிரிவதுதான் எனக்கு தண்டனையாக இருக்கும... அவள் நேசித்தது ஒரு தவறான ஆளை... இப்போது அவளை விரும்பும் "நான் " , வேறு ஆள்... எனக்காக அவள் எந்த தியாகத்தையும் , போராட்டத்தையும் செய்யாமல், ஒரு சராசரி வாழ்வை வாழ்வதே சிறந்தது....

மூட்டை முடிச்சுகளை கட்ட ஆரம்பித்தேன்..

போன் அடித்தது...
என்னால் நம்ப முடியவில்லை...
அழைத்தது அவள்தான்...

எதற்கு அழைக்கிறாள்... முடிவை மாற்றி கொண்டா ளா ? ... என்னுடன் சேர விரும்பிகிரா ளா ? ... அவள் சேர விரும்பினால் , நான் என்ன முடிவு எடுப்பது ?

எதுவும் அடுத்த சில மணி துளிகளில் தெரிந்து விடும்... எதுவாக இருந்தாலும், இந்த சில மணி துளிகளை, என் கடைசி மூச்சு வரை மறக்க முடியாது என தோன்றியது

7 comments:

 1. ஒரு பெண் அவ்வளவு சுலபமாக தனனை oruvan மணந்து கொள்வான் என்று நம்பி விடக்கூடாது.
  அது சரி கதை முடிந்ததா? இன்னும் வருமா?

  ReplyDelete
 2. அன்பு இருக்கும் இடத்தில, கணக்குகள் , பயம் போன்றவை இருக்காது... எதையும் நம்ப கூடியதுதான் அன்பு...
  அந்த அன்பை , தமக்கு சாதகமாக பயன்படுத்துபவர்கள், ஆண் - பெண் என இருபாலரிடமும் உண்டு..

  ஆமா... நீங்க தின தந்தி எல்லாம் படிப்பதில்லையா

  ReplyDelete
 3. ///எதுவும் அடுத்த சில மணி துளிகளில் தெரிந்து விடும்... எதுவாக இருந்தாலும், இந்த சில மணி துளிகளை, என் கடைசி மூச்சு வரை மறக்க முடியாது////


  ....நல்ல விறுவிறுப்பான எழுத்து நடை. பாராட்டுக்கள்! வலைச்சரத்தில் உங்களை அறிமுகப் படுத்தி இருப்பதை கண்டு வந்தேன். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. நல்லா இருக்க்குங்க.

  ReplyDelete
 5. சூப்பர்
  ரசித்தேன்
  தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா