Thursday, March 25, 2010

ஆண் உடலில் , ஒரு பெண்

மங்கையராக பிறப்பதற்கு மாபெரும் தவம் செய்ய வேண்டும் என்பார்கள்...

அனால் , அப்படி எல்லாம் தவம் செய்து , யாரும் பெண்ணாகவோ , ஆணாகவோ பிறப்பதாக தெரியவில்லை.... எல்லாம் வல்ல இயற்கையாலோ, அல்லது எல்லாம் வல்ல இறை அருளாலோ தான் அப்படி பிறப்பதாக பொதுவாக நம்புகிறார்கள்... எக்ஸ் , ஒய் தான் நிர்ணயிக்கிறது என்கிறது அறிவியல்...

இதை எல்லாம் மீறி, ஒரு பெண் என்ற நிலையை அடைவதற்கு, ஒரு பெண்நாக பிறப்பதற்கு, நம்மை போன்ற ஒரு சக உயிர் மேற்கொண்ட மாபெரும் தவம் தான், மாபெரும் போராட்டம் தான், நான் வித்யா என்ற புத்தகம்... வித்யா என்ற பெண் எழுதி உள்ளார்...
(
பிறக்கும் போதும் இவர் பெண் தான்... ஆனால், ஆண் என்ற உடலில் இவர் பிறந்து விட்டார்.... இது இயற்கை செய்த தவறா, இறை செய்த தவறா, - தெரியவில்லை... ஆனால் தண்டனை இவருக்கு தான்...

கேலி, கிண்டல் , அவதூறு, சிலசமயம் அடி, உதை,,, அவ்வபோது சில நல்லவர்களின் சந்திப்பு - இதுதான் இவர் வாழ்க்கையாக இருந்தது....

அரவாணிகளுக்கு , யாரும் ஒரு நல்ல வேலை கொடுப்பதில்லை... எனவே அவர்கள், பிச்சை எடுப்பது அல்லது பாலியல் தொழில் என செல்கிறார்கள்...

உடனே நாம் என்ன நினக்கிறோம்,... இந்த அரவாணிகள் எல்லாம் மோசம்பா ... மோசமான தொழில் செய்பவர்கள்.. கொஞ்சம் தள்ளியே இருப்போம்...

இப்படி நாம் நினைப்பதால், நாம் அவர்களுக்கு வேலை கொடுபதில்லை... வேலை கிடைக்காததால், அவர்கள், பிச்சை பாலியல் தொழில்...

என்ன ஒரு விஷ சக்கரம் பாருங்கள்

இத்தனை கஷ்டத்திலும், தன் சுயமரியாதையை இழக்கத கண்ணியம், இவரை உயர்த்தி காட்டுகிறது....

நம்மை போன்ற சக மனிதர்கள், கொஞ்சம் அன்பு , கொஞ்சம் விழுப்புணர்வு கொண்டு இருந்தால், இந்த துயர்கள் அவசியம் இல்லாமல் போய் இருக்கும்.... ஆகா, நாமும் இந்த துயருக்கு காரணம் என்று புரியும் போது , தலை குனிகிறோம்...

சில இல்லகிய வாதிகள், ,அறிவி ஜீவிகள் இதை எழுதி இருந்தால், பாலியல் பார்வையில் எழுதி, உலக இலக்கியம் படைத்தது இருப்பார்கள்...
இவர், சக அரவாணிகள் கண்ணியத்தையும் பாதிக்காத வகையில், சமூக அக்கறை உடன் எழுதி உள்ளார்...

அரவாணியாக பிறப்பது, என்ற இந்த விஷயத்தில், முறையான வழிகாட்டுதல் , தெளிவு , புரிதல் இல்லாதது தான் பல பிரச்சினைகளுக்கு காரணம்... இந்த புத்தகம , அரவாணிகள் உலகத்தை அறிமுகம் செய்து வைகிறது... அவர்கள் சார்பான வேதனை புரிகிறது....

ஆனால்,. புத்தகம் டாகுமென்ரி போல் இருக்கும் என யாரும் நினைக்க வேண்டாம்... சீராக எழுத பட்டுள்ளது... நூல் ஆசிரியர் , மொழி ஆர்வம் மிக்கவர் என்பதால், நல்ல நடையில் , புத்தகம் உள்ளது...இவ்வளவு சோதனைகளுக்கு மத்தியிலும், நேர்மறை தொனியில் அவர் வாழ்க்கையை அணுகும் விதம்தான் இந்த நூலின் தனி சிறப்பு
முழுதும் சோகம் என்று இல்லாமல், அவர்களின் சின்ன சின்ன சந்தோஷங்கள், அன்பான் சீண்டல், நடு ரீதியான கேலிகள் என யதார்த்தமாக எழுதப்பட்டுள்ளது

ஆபரஷன் நடப்பதை விளக்கும் இடம், நம் உடலையும் மனதயும் பதற வைகிறது....

அரவாணியாக பிறக்காத ஒருவர், சந்தர்ப சூழ்நிலையால், மன ரீதியாக பாதிக்க பட்டு, தன்னை ஒரு அரவாணி என கருதி கொண்டு, ஆபரேஷன் வரை சென்றால், எவ்வளவு விபரீதம்?

சற்று வித்யாவின் அப்பாவை நினைத்து பார்போம்.. தனது மகன், ஆசையுடன்,கனவுடன் வளர்த்த மகன், திடீர் என ஒரு நாள் , நான் ஒரு பெண் என கூறினால் அவருக்கு எப்படி இருந்து இருக்கும்...

இதை பற்றிய விழிப்புணர்வே , இன்றைய உடனடி தேவை... தன்னை , பெண் என உணரும்போது, உடனடியாக, தைரியமாக, பெரியவர்களிடம் சொல்லும் அளவுக்கு , பெரியவர்களிடம் விழிப்புணர்வு தேவை...
அறிவு பூர்வமாக அணுகப்பட்டு, மன ரீதியான சிகிச்சை அல்லது உடல் ரீதியான , பால் மற்று சிகிச்சை பாதுகாப்பான முறையில் நடத்தப்பட்டு, அவர்களை அன்கீக்கரம் செய்வதே, நம்மை போன்ற சக மனிதர்கள், இயபலான வாழ்கை நடத்த உதவும்

கண்டிப்பாக ஒவ்வொருவரும் இதை படிக்க வேண்டும், ... பொழுது போக்குக்காக அல்ல.... சமுகத்தின் பழுதை நீக்குவதற்காக....

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

7 comments:

 1. {{{பிறக்கும் போதும் இவர் பெண் தான்... ஆனால், ஆண் என்ற உடலில் இவர் பிறந்து விட்டார்.... இது இயற்கை செய்த தவறா, இறை செய்த தவறா, - தெரியவில்லை... ஆனால் தண்டனை இவருக்கு தான்..}}}}

  நிதர்சனமான வரிகள்!!
  பகிர்வுக்கு நன்றி!!!!
  படிக்க முயற்சிக்கிறேன் ,
  பொழுது போக்குக்காக அல்ல.... சமுகத்தின் பழுதை நீக்குவதற்காக...

  ReplyDelete
 2. கண்டிப்பாக படியுங்கள் ..படித்த பின், உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்

  ReplyDelete
 3. கண்டிப்பாக ஒவ்வொருவரும் இதை படிக்க வேண்டும், ... பொழுது போக்குக்காக அல்ல.... சமுகத்தின் பழுதை நீக்குவதற்காக....
  ///

  2 வது பதிவே நல்ல பதிவு
  தொடருங்கள்

  ReplyDelete
 4. இதை பற்றிய விழிப்புணர்வே , இன்றைய உடனடி தேவை... தன்னை , பெண் என உணரும்போது, உடனடியாக, தைரியமாக, பெரியவர்களிடம் சொல்லும் அளவுக்கு , பெரியவர்களிடம் விழிப்புணர்வு தேவை...
  அறிவு பூர்வமாக அணுகப்பட்டு, மன ரீதியான சிகிச்சை அல்லது உடல் ரீதியான , பால் மற்று சிகிச்சை பாதுகாப்பான முறையில் நடத்தப்பட்டு, அவர்களை அன்கீக்கரம் செய்வதே, நம்மை போன்ற சக மனிதர்கள், இயபலான வாழ்கை நடத்த உதவும்

  ..... true! nice write-up!

  ReplyDelete
 5. மிக அருமையான பதிவு.. சமூகத்தில் அரவாணிகளின் நிலைமை இன்னும் சீர் செய்யப்படாமல் தான் இருக்கிறது..
  அவர்களும் சக மனிதர்கள் என்ற உணர்வு வந்தாலே பல இடங்களில் அவர்களுக்கு பேருதவி..
  உங்கள் முயற்சி வெல்க... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா? கண்டனக் கூட்டம்!

  நேரம்: 29.05.2010, வியாழன், மாலை 5 மணி

  இடம்: ஒய்.எம்.சி.ஏ அரங்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, உயர்நீதி மன்றம் எதிரில் (ஹாட் சிப்ஸ் அருகில்), சென்னை.

  நிகழ்ச்சி நிரல்:

  தலைமை: தோழர் சி. ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC, தமிழ்நாடு


  கண்டன உரை:

  தோழர். வாஞ்சிநாதன், வழக்குரைஞர், HRPC – மதுரை.

  திரு. சங்கரசுப்பு, வழக்குரைஞர், சென்னை.

  திரு. இராதகிருஷ்ணன், வழக்குரைஞர், சென்னை.

  திரு. திருமலைராஜன், வழக்குரைஞர், ஈரோடு, முன்னாள் தலைவர், தமிழக கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் கூட்டமைப்பு.


  ஏப்.25 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்குரைஞர்களின் நேருரைகள்!

  அனைவரும் வருக! நீதிக்கான போரில் தோள் தருக!

  ReplyDelete
 7. மிக அருமையான பார்வை. உணர்ந்ததை உணர்த்தும் பக்குவம். மிக, மிக அருமையான பதிவு.

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா