Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Sunday, May 3, 2020

கோயம்பேடு மலர்கள் மைக்ரோ கதை

அவன ஏண்டி பூ வாங்க கோயம்பேடு அனுப்பிச்ச ?  கோபமாக கத்தினார் அவர்

வீட்டுலயே சிம்பிளா கல்யாணம் நடத்துறோம். பூ இல்லைனா எப்படிங்க ? தயக்கமாக சொன்னாள் மனைவி

ஊர் கெட்டு கிடக்கு..  நேத்துகூட  நாலூபேருக்கு கொரானா.  இப்ப  போயி அனுப்பிஞ்சு இருக்கியே என திட்டும்போதே பையன் வந்தான்

அப்பா  பூ கிடைக்கல என்றான் பையன்;


கடவுள்  காப்பாத்திட்டாரு  மகிழ்ந்து கொண்டாள் மனைவி


ஏண்டா பூ கிடைக்கல  கேட்டார் அவர்


அல்லாத்தையும் அரசாங்கம்  வாங்கிருச்சுப்பா என்றான் பையன்;


அரசாங்கமா, அவங்களுக்கு  ஏண்டா  அவ்வளவு பூ   ..  குழப்பமாய் கேட்டார்


நாட்டு மக்கள்  ஊரடங்கை சிறப்பா கடைபிடிக்கிறத பாராட்டி எல்லா வீட்டு மேலயும் விமானம் மூலமா பூ தூவறங்களாம். குறிப்பா  நம்ம தெருவுல அதிகமா தூவறாங்களாம் என்றான் பையன்

என்னடா  சொல்ற  என அவர் திகிலுடன்  கேட்கும்போதே கோயம்பேடு மலர்கள் அவர்கள் தலையில் விழத்தொடங்கின



Wednesday, April 29, 2020

பொய் தெய்வங்கள். ஜெயமோகனின் " கைமுக்கு "

ஜெயமோகனின் கைமுக்கு சிறுகதை வெகுவாக யோசிக்க வைத்தது

கைமுக்கு என்றால் என்ன?

அந்த காலத்தில் பின்பற்றப்பட்ட ஒரு சித்திரவதை முறை. குற்றம் சாட்டப்பட்டவர் , கொதிக்கும் எண்ணைய்க்குள் கையை விட்டு, அதில் போடப்பட்டு இருக்கும் சின்ன,அனுமன் சிலையை எடுத்துக்காட்ட வேண்டும். கையில் காயமின்றி சிலையை எடுத்தால் நிரபராதி என கருதப்படுவார்.

இந்தப்பின்னணியில் துவங்குகிறது கதை.
தற்போதையை சித்தரவதை முறைகளைப் பற்றி பேசும் முன்னாள் போலிஸ்காரர் , தனது வாழ்வில் இப்படி ஒருவனை அடித்து வெளுத்த நிகழ்வைச் சொல்கிறார்

    ஜாப் ரைட்டிங் செய்து வருமானம் ஈட்டும் ஏழை ஒருவர் , கஷ்டப்பட்டு தன் மகனை படிக்க வைக்கிறார்

பையன் படித்து , நல்ல வேலை கிடைத்து , வீடு வாங்கி , திருமணம் செய்து, குழந்தை பெற்று வசதியாக செட்டில் ஆகிறான்.

தந்தையையும் தன்னுடன் அழைத்துக கொள்கிறான்.

எல்லாம் நல்லபடியாக செல்கிறது. எதிர்பாரா விதமான சம்பவம் ஒன்றில் பையன் சிக்கியபோதுதான் , அவன் படிப்பு , வேலை எல்லாம் பொய் என தெரிகிறது. அவன் ஒரு திருடன் என தெரிந்து தந்தை நிலைகுலைந்து போகிறான். அவன் மனைவி அவனை,விட்டு விலகி விடுகிறாள்

அப்போதுதான் அந்த போலிஸ்காரர் அவனை அடித்து துவைக்கிறார். ஒரு தந்தையின் நம்பிக்கையை அழித்து,விட்டானே என்பதுதான் அவர் கோபம்

சில வருடங்கள் கழித்து அவனை சந்திக்கிறார். அவன் மகிழ்ச்சியுடன் வசதியாக இருக்கிறான். நல்ல வக்கீல்களும் பணமும் இருப்பதால் பயமின்றி திருட்டை தொடர்கிறான். தந்தையும் அவனது இந்த வாழ்க்கைக்கு பழகி சந்தோஷமாக இருக்கிறார்

அவன் ஏன் திருடன் ஆனான் என்பதுதான் மேட்டர்.

சரியான ஆடை இல்லை. நல்ல"காலணி இல்லை. காசு இல்லை. நல்ல பையன் , அறிவாளி, ஆனால் வறுமை தாளாமல் லேசாக திருட ஆரம்பித்து அப்படியே பழக்கமாகி விட்டது.
இனி அதை விடும் வாய்ப்பு கிடையாது
புலி வாலை பிடித்த கதை

இதில் கைமுக்கு என்பதை போலிஸ் அடியுடன் ஒப்பிட்டு அந்த போலிஸ்காரர் சொன்னாலும் , கைமுக்கு என்பது நம்மை வாட்டி வதைக்கும் சோதனை நெருப்பின் குறியீடு என்பதை புரிந்து கொள்ள முடிகிறது

அந்த கைமுக்கு சோதனையை , அரசன் பரிதாபப்பட்டு நிறுத்திவிட்டான். ஆனால் வாழ்க்கைக்கு அந்த இரக்கம் கிடையாது. life is not  fair. அது கைமுக்கு சோதனையை நடத்திக் கொண்டேதான் இருக்கிறது

எந்த அளவு உயர்வை நாம் நாடுகிறோமோ அந்த அளவு வேதனைகளை வாழக்கை கொடுக்கிறது. அதை சகித்துக் கொண்டுதான் , கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு அனுமனை எடுக்க வேண்டியிருக்கிறது

அந்தக்கால கைமுக்கு சோதனையில் வெற்றி பெற ஒரு குறுக்குவழி உண்டு. அதிகாரிகளை கவனித்து விட்டால் போதும். கையில் போலி சிலை ஒன்றை கொடுத்து விடுவார்கள். கொதிக்கும் எண்ணெய்க்குள் கைவிடுவது போல போக்கு காட்டிவிட்டு , போலி சிலையை காட்டி வெற்றி பெற்று விடலாம்;

உண்மை தெய்வத்தை தேடுவதன் வலிகளை தாங்க முடியாமல் பொய் தெய்வத்திடம் சராணகதி அடைவதைத்தானே அன்றாடம் பார்க்கிறோம்
   எளிய உதாரணம் உண்டு. இணையத்தில் தமிழ் எழுத முடியும் என்ற வாயப்பு வந்தபோது அது மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. உண்மையான ஆர்வத்துடன்தான் பலர் எழுதினர்

ஆனால் அப்படி உண்மையாக எழுதி , அமுத்த கட்டத்துக்கு நகர்வது உழைப்பைக் கோரும் வேலை என பலருக்கும் புரிந்து கொண்டனர்

  பெரும்பாலான இதழ்கள் , ஊடகங்கள் எந்த கட்சியினரின் கைகளில் இருக்கின்றன என்பதை புரிந்து கொண்டு , அதற்கேற்ற அரசியல் சார்புகள் எடுத்து , அதற்கேற்ப தொடர்புகளை வளர்த்துக் கொண்டு , இணைய எழுத்து என்பதில் இருந்து அடுத்த கட்டம் நகர்ந்தனர். இப்படி விளையாட்டாக இறங்கிய அரசியலை இன்று உண்மையாக நம்பத் தொடங்கி அதில் இருந்து வெளிவர முடியாமல் சிக்கிக் கொண்டு விட்டனர்

உண்மையில் கொஞ்சம் சோதனைகளை சமாளித்து இருந்தால் , உண்மை தெய்வத்தையே பார்த்திருக்கலாம். அதாவது தமது தகுதியாலேயே உரிய இடங்களை அடைத்திருக்கலாம்

   இந்த கதையில் வரும் மகன் அந்த கல்லூரி கால அவமானங்களில் இருந்து தப்ப பொய்தெய்வத்தை ஏற்கிறான் என்றால் அது அவன் மட்டும் செய்யவில்லை.
அவனது திருட்டுத் தொழிலுக்காக அவனை விட்டு விலகும் முதல் மனைவி , அவனது திருட்டு சொத்தை அனுபவிக்க தயங்குவதில்லை. நல்ல வேலை என பொய் சொல்லி ஏமாற்றி திருமணம் செய்தது அவளுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சோதனைதான். அதைக்கடக்க அவள் கண்டுபிடித்த , அவளுக்கு ஆறுதல் தரும்பொய் தெய்வம் அந்த சொத்துகள்

அவனை பிடிப்பதில் நேர்மையான முனைப்பு காட்டிய போலிஸ் அதிகாரி , ஒரு கஷ்டமான சூழலில் பொய் தெய்வத்திடமே சரணடைகிறார்

தனது மகன் குற்றவாளி என அறிந்து துடிக்கும் தந்தையும் மன சமாதானத்துக்கு தயாராகிறார்

  சரி..  பொய் தெய்வம் என்றால்தான் என்ன ? அவர்கள் ஜெயித்து விட்டார்களே . அந்த சந்தோஷம் போதுமே .   என நினைக்கலாம்

   ஆனால் சோதனைகளை சமாளிக்க அஞ்சி , பொய் தெய்வங்களால் வெற்றி பெற்று , பொய் தெய்வங்களால் சூழப்பட்ட ஒரு உலகை , கொதிக்கும் எண்ணெய்க்கடியில் மறைந்தபடி உண்மை தெய்வம் கவனித்துக கொண்டிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது




Monday, April 27, 2020

காதலின் வகைகள்


கவிதா சொர்ணவல்லியின் நான் அவன் அது என்ற சிறுகதை படித்தேன்


நமக்கு காதல் குறித்து பல்வேறு கற்பிதங்கள் உண்டு

காதலே  பொய்யானது என்ற வகையினர் ஒரு விதம். அதில் பிரச்சனையில்லை


காதலை கொண்டாடுபவர்களிடம்தான் பல்வேறு போலித்தனங்கள்

காதல் தப்பில்லை. ஆனால் சுய ஜாதியாக பார்த்து , ஜாதக பொருத்தம் பார்த்து , வசதிவாய்ப்புகளை பார்த்து காதலிக்க வேண்டும் என்ற தரப்பு உண்ட

பணத்தை மட்டும் பாரத்தால் போதும் என்ற காதல் உண்டு

இன்ன சாதியினரை , இன்ன மதத்தினரை தவிர யாரை காதலித்தாலும் ஓகே என்ற முற்போக்கினர் உண்டு

முறைப்பெண்ணை முறைமாமனை காதலிக்கலாம் என்ற தாராளவாதிகள் உண்டு

தம்பி , இப்படி எல்லாம் அடங்குவதற்கு அது சிற்றாறு அல்ல. அது காதல் என சொல்லும் கதைதான் நான் அவன் அது


பெண்விடுதலை என்பது பெண்மைத்தனத்தை மறுதலிப்பது,என சிலர் நினைக்கிறார்கள். பூ வைப்பது , தன்னை அழகாக்கிக்கொள்வது , பூப்படைதலை கொண்டாடுவது போன்றவையெல்லாம் பெண்ணடிமைத்தனம் என நினைப்பவர்கள் உண்டு. ஆண்கள் போல ஆடை அணிந்து ஆண்களைப் போல இருப்பதுதான் ஃபெமினிசம் என ஆடவர் பார்வையில் பெண்ணியத்தை வரையறுப்போர் உண்டு

அட நாய்களா.  ஒரு பெண் தன்னை"தன் உணர்வுகளை பிறருக்கு அஞ்சாமல் கொண்டாடுவதுதான் இயல்பானது. அதை"நோக்கி வளர்வதுதான் ஆரோக்கியமானது என ஒரு சித்தி பாத்திரம் மூலம் குறிப்பால் உணர்த்துவது அழகு

ஓர் ஆண் தன் மீது கொண்ட அக்கறையை தாழம்பூ பறிப்பதன் மூலம் உணர்கிறாள் என்பதில் அவள் உணர்வும் ஊரின் பின்புலமும் சொல்லப்பட்டு விடுகிறது

அந்த காதல் கல்யாணத்தில் முடிய வாய்ப்பில்லை.  உடல் சாரந்த இன்பம் சாத்தியமில்லை. அதற்காக அது காதல் இல்லாமல் போய்விடாது.

காதல் எங்கும் எப்படியும் இருக்கலாம் என்பதை ஆற்றோரத்தில் வீசும் தென்றல் போன்ற நடையில் சொல்கிறது கதை

  அறியாத வயதில் தெரியாமல் ஏற்படும்ஈர்ப்பு காதலாகுமா என்ற கேள்வி வரலாம்

  அறிந்த வயதில் பல்வேறு கணக்குகள் போட்டு வருவதுதான் காதலா என்ற கேள்வியும் வருகிறது


காதல் என்ற பெயர் , இந்த கதை சூழலில் ,சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்

அவர்களையுமேகூட அந்த பெயரற்ற உணர்வை ரசிக்க வைக்கிறது கதை


Tuesday, April 7, 2020

உலக வரலாறை எழுதும் கிருமிகள். ஜெயமோகனின் ஆடகம்

ஜெயமோகனின் ஆடகம் என்றொரு சிறுகதை படித்தேன்

ஆடகம்..  வித்தியாசமான பெயர்.  தூய பொன் என்று பொருள்

ஆனால் கதை விஷத்தைப் பற்றி பேசுகிறது.. உண்மையில் விஷமும் அமுதமும் ஒரே மூலப்பொருட்களால் ஆனதுதான்.  மூலப்பொருட்களின் அளவைப் பொருத்து விஷமென்றோ,அமுதமென்றோ ஆகிறது

கதை நாயகனுக்கு வாழ்வில் எந்த ஆர்வமும் இல்லை. மரணத்தைப் பற்றியே கனவு காண்கிறான்..
மழைப்பொழிவு,மிகு ஆகும்பே என்ற ஊருக்கு தற்கொலை செய்து கொள்ளும் பொருட்டு செல்கிறான்

யானையையே கொல்லத்தக்க ,,கடும் விஷமிக்க ராஜநாகங்கள் அங்கு இருப்பதை அறிந்து நாகம் கடித்து சாக விழைகிறான்

விரும்பியபடி பாம்பு கடித்து நினைவிழக்கிறான்.

அந்த விஷம் அவனை கொல்லவில்லை. அமுதமாக செயல்பட்டு அவனுக்கு,புதிதொரு வண்ணமயமான வாழ்க்கை வழங்கி இருப்பதை கதையின் பிற்பகுதியில் அறிகிறோம்;

மழைமிகு பிரதேசம் , வனம் , பாம்பு ஆகியவை இயற்கையின் குறியீடுகள் என வாசித்தால் மெல்லிய திடுக்கிடல் ஏற்படுகிறது
Guns, Germs, and Steel என்றொரு நூல்

ஏன் ஐரோப்பா உலகை ஆள்கிறது . ஏன் கருப்பின மக்கள் துன்பத்தில் உழல்கின்றனர்.   எல்லா வளமும் செல்வங்களும் அமெரிக்கா போன்ற சில நாடுகளில் ஏன் குவிந்தது.  ஆப்ரிக்கா ஏன் வறுமையில் வாடுகிறது.

என்பது போன்ற கேள்விகளை நூல் ஆகிறது

அனைவரும் சமமான மனிதர்கள்தான். ஆனால் இந்த சமநிலையை குலைத்து வெள்ளையர்களை உயரத்துக்கு எடுத்துப் போனதில் நோய்க்கிருமிகளுக்கு முக்கிய பங்குண்டு என்கிறது நூல்

இயற்கை ஏதோ,ஒரு கணக்கிட்டு அவர்களை செல்வந்தர்களாக வல்லரசுகளாக மாற்றிவிட்டது. கண்ணுக்குப் புலப்படாத கிருமிகள்தான் அவர்களை வாழ வைத்த தெய்வம் என்பது நூலின் செய்தி

ஆடகம் கதையில் , சாக விரும்பும் ஒருவனை வளம்பட வாழ வைக்க இயற்கை முடிவு செய்து விட்டது. அவனை அந்த பாம்பு சற்று அதிகம் கடித்திருந்தால் அவன் செத்திருப்பான். கடிக்காது போயிருந்தால் வேறு வகைகளில் தற்கொலை செய்திருப்பான்.  சரியான அளவு கடித்து சரியான விஷத்தை இறக்கி அவனை வாழ வைத்து விட்டது

உண்மையில் அவன் இதைக் கேட்கக்கூட இல்லை

   ஒரு கணத்தின் ஒரு துளியில் இவ்வளவு விஷம் போதும் என நாகம் முடிவெடுக்கும் அந்த ஒரு சொல்லற்கரிய ஒரு காலாதீத இடைவெளியில்தான் உலக வரலாறே நிகழ்கிறது போலும்


Sunday, September 4, 2016

அசோகமித்ரனின் பார்வை சிறுகதை - என் பார்வையில்


அன்றாடம் காணும் நிகழ்ச்சிகளைக்கூட மிக சிறப்பாக கதை ஆக்குபவர் அசோகமித்ரன்.. ஒரு வரியில் ஓர் அழகான சித்திரத்தை படைத்து விடுவார்....அவர் கதைகளில் எல்லாமே சிறப்பானவை என்றாலும் பார்வை எனும் சிறுகதை எனக்கு மிகவும் பிடிக்கும்..காரணம் இதன் எளிமைத்தன்மை.. இதன் உள்ளடக்கம்..

ஒரு பெண் சோப் பொடி விற்க வருகிறாள். பேச்சு வாக்கில் தன் சுயசரிதையை - ஏன் மதம் மாறினோம் என்பதை- சொல்கிறாள்.. அதன் பின் போய் விடுகிறாள்.. இதுதான் ” கதை சுருக்கம் “ ஆனால் கதை இந்த சுருக்கத்துள் சுருங்கி விடாமல் வானளவு விரிகிறது..

கதையின் ஆரம்பத்தில் அந்த பெண் அந்த வீட்டுக்குள் கதவை திறந்து வருகிறாள்..அந்த வீட்டுப்பையன் கதவை திறந்து வீட்டை விட்டு கிளம்புகிறான்.

இந்த இரண்டு வரிகளில் அந்த பெண்ணின் கேரக்டர் , அவள் குடும்ப பின்னணி. இந்த வீட்டின் தோற்றம் , இந்த வீட்டின் பொருளாதார நிலை , வீட்டினரின் மனப்போக்கு என பல விஷயங்கள் நமக்கு தெரிந்து விடுகின்றன.. அதுதான் அசோகமித்திரன்.

சோப்பு பொடி விற்பவள் என்பதால் அதைப்பற்றி சொல்கிறாள்.. ஆனால் வீட்டுக்கார பெண்ணுக்கோ பொதுவான விஷ்யங்கள் பேசவும் ஆசை. அந்த பெண்ணைப்பற்றி கேட்கவே அவள் பதில் சொல்கிறாள்.. பேச்சு வாக்கில் தன் குடும்பம் கிறிஸ்துவர்களாக மதம் மாறியதை சொல்கிறாள்... அதற்கான காரணத்தையும் சொல்கிறாள்.. அவள் தங்கைக்கு கண் பார்வை போய் விட்டது... இயேசுவை கும்பிட்டு சரியாகி விட்டது.

இன்னும் கொஞ்சம் பேசி விட்டு , ஒரு டெமோ காண்பித்து விட்டு அவள் கிளம்பிப்போகிறாள்... அவள் எப்படி வந்தாளோ அதேபோல கதவை ஓசையின்றி அடைத்து விட்டு செல்கிறாள்..

    எப்படி அந்த தங்கையின் பார்வை குடும்பத்தை மாற்றியதோ அதே போல ஆரம்பத்தில் அவள் மீது ஈடுபாடு இல்லாத பார்வை கொண்ட வீட்டுக்காரரின் பார்வை அவளைப்பற்றி தெரிந்ததும் மாறுகிறது என்பதை மறைந்து வருகிறது...ஆனால் அந்த பெண்ணை பொருத்தவரை அவள் பார்வை வேலையின்மீது மட்டுமே இருக்கிறது.. சகஜமாக பேசினாலும் அவள் பார்வை மாறவில்லை என்பதை அழகாக காட்டி இருப்பார்.. டெமோ பொடியை நான் பக்கத்து வீடுகளில் கொடுக்கிறேன் என்ற உதவி கிடைக்கிறது.அதாவது ஒரு தரப்பு பார்வை மாறி விட்டது. ஆனால் அவள் பார்வை மாறவில்லை/

    அவள் பார்வை என்பது குடும்பம் , வேலை என்பது..ஆனால் வீட்டுக்காரரின் பார்வை என்பது பொழுது போக்கு , அடுத்தவர் அந்தரங்கத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வம் போன்றவை..

அவள் ஓசைப்படாமல் கதவை திறந்து வந்ததற்கும் , அந்த பையன் சத்தத்துடன் திறந்து போனதற்கான ஒப்பீடு நம் மனதில் தோன்றுகிறது. அதேபோல , வீட்டுக்காரரின் பெண்ணுக்கும் இவளுக்குமான ஒப்பீடும் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.. இத்தனைக்கும் அந்த பெண் நேரடியாக கதையில் வருவதில்லை..குரல் மட்டுமே... இப்படி நாமும் கதையில் பங்கேற்று நம் பார்வைக்கும் இடம் கிடைக்கிறது.

    சின்ன சின்ன நுணுக்கங்கள் அபாரம்,உதாரணமாக , தான் மதம் மாறியதை அவள் சொல்கையில் , அடடா,, மாறாமல் இருந்திருக்கலாமே என அங்கலாய்க்கிறாள்  வீட்டுக்கார அம்மா..  உண்மையில் அவள் மாறினாலும் மாறாவிட்டாலும் இவளுக்கு ஒன்றும் இல்லை.. சும்மா வம்பிழுத்தல், பேச தூண்டுதல். இவள் கேள்விகளால் அவளுக்கு லேசாக எரிச்சல் வருவதும் பதிவாகி இருக்கிறது.


அசோகமித்ரன் சிறுகதை தொகுப்புகளில் இந்த கதை இருக்கும் தொகுதியாக பார்த்து வாங்கி படியுங்கள்




Monday, June 13, 2016

சிறுகதைப் போட்டி

ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் நடத்தும் சிறுகதைப்போட்டி்

முதல் பரிசு - 10,000
இரண்டாவது பரிசு 8000
3ம் பரிசு 6000 இரு ஆறுதல் பரிசுகள் ரூ 2000

சகோதரி நிவேதிதை குறித்து கதை இருக்கலாம் ( சாரு நிவேதிதா குறித்து அல்ல ) 
வாழ்க்கை குறித்த பாசிட்டிவ் பார்வையுடனோ ,தீமை அழிவது குறித்தும் கதை இருக்கலாம்

ராமகிருஷ்ணவிஜயம் இதழின் மூன்று பக்கங்களுக்குள் கதை இருக்க வேண்டும்
சொந்த கதை என்பதற்கும் இதுவரை எங்கும் வெளிவராத கதை என்பதற்கும் உறுி மொழி தேவை
srv@chennaimath.org என்ற மெயிலுக்கு அனுப்புங்கள்..சப்ஜெக்ட்டில் சிறுகதை போட்டி என குறிப்பிட மறக்காதீர்கள்.. வாழ்த்துகள்
கடைசி தேதி ஜூலை 25, 2016
செப்டம்பரில் முடிவு தெரியும்

Tuesday, January 12, 2016

கவிதா சொர்ணவல்லியின் பொசல் சிறுகதை தொகுப்பு - என் பார்வையும் ஒரு விவாதமும்


பெண் எழுத்தாளர்கள் கதை பொதுவாக இரு துருவங்களில் ஒன்றில் இருக்கும்..பெண்ணியம் , புரட்சி என்ற துருவம் ஒன்று..குடும்பக்கதை என்ற துருவம் மற்றொன்று... அதுவும் இல்லாவிட்டால் ஆண் எழுத்தாளர்களை ஃபேக் செய்ய முனையும் கதைகள் இன்னொரு வகை..

கவிதா சொர்ணவல்லியை பொருத்தவரை அவர் சில கொள்கைகளில் பிடிவாதமாக இருக்கக்கூடியவர்... எனவே அவர் கதைகள் ஏதேனும் இசங்கள் சார்ந்தோ , பெண் விடுதலை சார்ந்தோ இருக்கும் என நினைத்தேன்.. அப்படி எழுதும் ஆழ்ந்த அறிவும் தகுதியும் கொண்டவர் அவர் என்பதால் அப்படிப்பட்ட கதைகளை எதிர்பார்த்தே அவரது பொசல் சிறுகதை தொகுப்பை படிக்க ஆரம்பித்தேன்.. ஆனால் என்ன ஒரு ஏமாற்றம்...இனிய ஏமாற்றம்.. அழகு தமிழில் , இனிய நடையில் , பொதுவான மனித உணர்வுகளைப்பேசும் கதைகள் அவை....

ஒரு  மழைக்கால பேருந்து பயணத்தில்  படித்த அந்த தொகுப்பு மழை அனுபவத்தை மேலும் ரசனை மிக்கதாக மாற்றியது


ஒன்பது கதைகள்... ஒவ்வொன்றும் ஒரு விதம்


காதல் கடந்த ஈர்ப்பை கூறும்  நான் அவன் அது  , கிராமத்து கடவுள்களை பற்றிகூறும் விலகிபோகும் கடவுள்கள் , இந்த தொகுப்பில் பலரது ஃபேவரைட் கதையான கதவின் வெளியே மற்றொரு காதல் , தாய் பாசத்தை உணர்வுபூர்வமாக சொல்லும் அம்மாவின் பெயர் , காதலின் கதகதப்பை உணர வைக்கும் எங்கிருந்தோ வந்தான் ,  நவீன வாழ்வியல் சூழலில் நீறுபூத்த நெருப்பாக இருக்கும் காதலை சொல்லும் மழையானவன் , சற்றே பூடகமான கதை அம்சம் கொண்ட யட்சி ஆட்டம் , இலக்கிய ரீதியாக கச்சிதமான எழுத்து நடையைக்கொண்ட பச்சை பாம்புக்காரி , அமானுஷ்யமாக தொடங்கி நெகிழ்ச்சியாக முடியும் டிசம்பர் பூ என ஒவ்வொரு கதையும் மனதில் தென்றலின் குளுமையை வீசிச்செல்கிறது

கதையின் கடைசி வரிகளை அழுத்தமாக அமைப்பது , கதாபாத்திரங்களை வெகு சில வரிகளில் அறிமுகம் செய்வது , கதையின் மன நிலையை ஆரம்பத்திலேயே மனதில் கொண்டு வருவது , இனிமையான நடை என பாசிட்டிவாக பல விஷ்யங்களை சொல்லலாம்..

ஆனால் குறிப்பிட்ட சூழலில் நடக்கும் கதையில் இன்னும் அதிகமான வட்டார சொற்கள் இடம்பெற்றிருக்கலாம்.. பொது தமிழில் இருப்பது சராசரி வாசகனுக்கு வசதிதான் என்றாலும் , யதார்த்த சூழல் சற்று குறைவதாக தோன்றுகிறது

 கிராமத்து சூழலில் கொஞ்சம் குறை இருந்தாலும் மாடர்ன் சூழலை , தற்கால பெண்ணின் மொழியை கண் முன் நிறுத்துவதில் சற்றும் குறை வைக்கவில்லை

வேறு ஏதாவது சொல்லணுமா என்றான்..

  நீண்ட நாட்களாக நீ கேட்ட  உன் மீதான என்  காதல் பற்றிய கவிதை என் கையில் இருக்கிறது..அதில் உனக்கு பிடித்த போன்சாய் செடிகூட இருக்கிறது என சொல்ல நினைத்து , எதுவும் இல்லை என சொல்லி சிரித்தேன் என்பதில் அந்த உணர்வை துல்லியமாக கொண்டு வந்து விடுகிறார்...  அவனது தேவ தூத இறகுகள் நீண்டுதான் இருந்தன.. ஆனால் அதன் பட்டு நூல் அறுந்திருந்தது என பொயட்டிக்காக சொல்ல முடிந்திருப்பது அருமை ( எங்கிருந்தோ வந்தான் )

காதல் என்பது எதிர்பார்ப்பற்றது,, நிபந்தனை அற்றது என்பார் ஜே கிருஷ்ண மூர்த்தி... ஆனால் பெண் அப்படி எளிதாக காதல் வயப்பட்டு விட முடியாது.. காதலை பிரகடனப்படுத்தவும் மூடாது,,,உதாரணமாக ஆட்டோகிராப் படம்போல ஒரு பெண் தன் காதல்களை சொல்லிவிட முடியாது... இதை அழகாக அலசி இருக்கும் கதை கதவின் வெளியே மற்றொரு காதல்... ஒருவருடன் பிரச்சனை வந்தால்தான் இன்னொருவருடன் காதல் வரும் என்பது இல்லை... உண்மையில் வெறுப்பு நிறைந்த இதயத்தில் காதல் வரவே வராது... காதல் நிரம்பிய இதயத்தில் காதல் பூத்துக்குலுங்குவதை யாரும் தடுக்க இயலாது என சொல்லும் இந்த கதை ஒரு பெண்ணின் மனதை துல்ல்லியமாக பிரதிபலிக்கும் தமிழ் சிறுகதைகளில் முக்கியமான கதைகளில் ஒன்று

பேசுபொருள் சார்ந்து எனக்கு பிடித்த கதை இது..ஆனால் சொல்லப்பட்ட விதம் காரணமாக எனக்கு பிடித்த கதை பச்சைபாம்புக்காரி

தன் அப்பாச்சியின் சமையல் சுவைக்கு காரணம் அருவாள் மனைதான் என நினைத்து சிறுமியாக இருக்கும்போதே அதைகேட்கிறாள் நாயகி...கைப்பக்குவத்துக்கு காரணம் பச்சைப்பாம்பை கைகளால் உருவதுதான் என்கிறாள் அப்பாச்சி... இதெல்லாம் கிராமத்து நம்பிக்கை என நினைக்கிறோம்.. ஆனால் கடைசியில் அருவா மனை , பச்சைப்பாம்பு ஆகியவை வேறொரு பொருள் கொள்ளும்போது அவை பிரமாண்டம் ஆகின்றன...  பெண்களால் வழிவழியாக காப்பாற்றப்படும் வாஞ்சை  கண் முன் தோற்றம் கொள்கின்றன

அன்பு என்பது வெகுளித்தனமானது..ஆனால் நாம் அதற்கு வெவ்வெறு பெயர்கள் வைத்துள்ளோம்... உண்மையான அன்பு தீங்கு செய்யாது.. அன்பு எதிர்பார்ப்பற்றது....இதை சொல்லும் அற்புதமான கதை நான் , அவன் , அது...


ஆனால் இதையெல்லாம் மீறி பாட்ஷா டைப் கதைதான் அம்மாவின் பெயர்.. அம்மாவின் பெயர் என்னவென்றே தெரியாத ஒரு மகள்... அவள் பெயர் தெரியும்போது எப்பேற்பட்ட பெண்மணி என பிரமித்துப்போகிறாள்... தன் சுயத்தை மறைத்து , சுயத்தை இழந்து வாழும் நம் ஊர் பெண்களை டிராமட்டிக்காக கண் முன் நிறுத்தும் இந்த அம்மாவின் பெயரையே தலைப்பாக வைத்தது மிகவும் பொருத்தமானது... கடைசி வரிகள் மிகவும் அருமை

இதைவிட இன்னொரு கதை எழுதி விட முடியாது என நினைக்கும்போது கடைசியாக ஒரு கதை...  அது தாய் மீது மகள் கொண்ட அன்பு என்றால் இது தாய் மீது மகன் கொண்ட வாஞ்சை...தாய் மகள் அன்பை ஓர் ஆண் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம்...ஆனால் மகன் தாய் அன்பை ஒரு பெண் புரிந்துகொள்ள முடியும் என்ற சப் டெக்ஸ்ட் பலரால் மிஸ் செய்யப்படும் வாய்ப்பு அதிகம்..



என்ன ஏன் சாக விட்ட” அப்படின்னுதான் கேப்பாங்கன்னு நினைக்கிறேன். அத அவங்க கேக்றதுக்காகத்தான் நானும் காத்துட்டு இருக்கேன்” என்றான். “கேட்டா என்ன செய்வே” என்றேன் ‘சத்தியமா என் கிட்ட பதில் இல்ல” என்றான் தடவிய டிசம்பர் செடியின் குட்டி முள் கிழித்து என் விரலில் ரத்தம் வடிந்ததை நான் கிருஷ்ணாவிடம் சொல்லி கொள்ளவில்லை.



-----------------------------------------------------

இந்த கதை குறித்து நண்பர் நிர்மலுடன் ஓர் உரையாடல்...



- நண்பா...பொசல் தொகுப்பு எப்படி இருந்துச்சு


வாசித்தேன் நல்லாருந்திச்சி


எந்த அம்சம் உடனடியா ஈர்த்துச்சு


கதைகள் அனைத்தும் first person ல் சொல்லியது பிடித்திருந்தது

உங்க ஃபேவரைட் எது

அவன் அவள் அது. Is really good.

லவ்லி


அம்மா பெயர் is also nice

யட்சி கதை பிடித்திருந்தது


இன்னொரு காதல் கதை என் ஃபேவரைட்..பெண் மனதை துல்லியமா பிரதிபலித்தது...சரி,,,இந்த கதைகளின் மைனஸ் என்ன 



இன்னும் இண்டென்ஸா எழுதிருக்கலாம் still it's good..வட்டார சொற்கள் இன்னும் அதிகம் வந்திருக்கலாம்



ஒருவருடன் காதலில் இருக்கும்போது , இன்னொருவர் மேலும் நேசம் வரலாம் என்று ஒரு பெண் பார்வையிலான கதை எப்படி இருந்துச்சு




அது தீம் நல்லாருக்கு, இன்னும் உள்ளே போயிருக்கலாமோ ந்னு தோனிச்சி.

சூப்பர்...ஆனா எனக்கு பிடிச்சு இருந்துச்சு

எனக்கு பிடித்தது நான் அவன் அது..ஆனா தலைப்பு தான் ஏதோ மலையாள படம் போல இருக்கு

ஹாஹா


 incest லவ்

Attraction.

Infatuation

ந்னு எதுவும் புரியாமல் இருக்கும் attraction




நெறய ஆங்கில வார்த்தைகள் வருதே, அது ஒகேவா. எனக்கு பிடித்திருந்தது.

ஆங்கில வார்த்தைகள் இந்த கதை மாந்தருக்கு பொருத்தமாகவே இருந்தது


Yes agreed I liked it too

ஒரு மாடர்ன் பெண் தூய தமிழில் யோசிப்பதாக எழுதினால் செயற்கையாக இருக்கும்


அம்மாவின் பெயர் மனதில் நிற்கும் கதை

அம்மாவை ஓர் ஆண் பார்ப்பதற்கும் பெண் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருப்பதை புரிய வைத்தது


யட்சி கதை , மாடனும் மோட்சத்தில் வரும் ஒரு கதை போல இருந்தது

யெஸ் just realised that. ஒரு மகன் அம்மா மீது என்னிக்கும் பொறாமை படமாட்டான்ல

எக்சாக்ட்லி


எனக்கு இந்த இடத்தில் அட்லிஸ்ட் இரண்டு observable act சொல்லிருந்தா அந்த இண்டென்ஸ் வந்திரிக்குமோ?

How does that Jeslouse operate

என் மகளுக்கும் என் மனைவிக்கும் என்னை குறித்து ஒரு போட்டி உண்டு




ஒருத்திய குட் ந்னு மகளுக்கு பிடிக்காது . ஏன் காரில் நானும்மனைவியும் பேசினால் கூட மூக்கை நுழைத்து நானும் அம்மா வுக்கு ஈக்வல்னு நிறுவ முயற்சி செய்வாள்


ஆமா... அது இயல்பானது


இது போல ஏதாச்சும் ....எனி ஹவ் கதையின் தீம் அது இல்ல.

தாய்க்கு ஈக்வல் என மகள் காட்டிக்கொள்ள விரும்பும் தருணங்கள் உண்டு... மகளுக்கு ஈக்வல் என் தாய் காட்டிக்கொள்ள விரும்பும் தருணங்கலும் உண்டு


யெஸ் யெஸ்

இதைத்தாண்டியும் அவர்களுக்குள் வாஞ்சை இருக்கிறது என்பதே அவர்கள் உறவை மிகவும் இண்டென்ஸ் ஆக்குகிறது..


யெஸ்

Jealousy need Not be negative or destructive

யெஸ்ஸ்ஸ்ஸ்


It's a unavoidable feel resulting in comparison

ஆமா... தேவதச்சன் வரிகள் நினைவுக்கு வருகின்றன

உன்னிடமிருந்து பறந்து சென்ற
இருபது வயது என்னும் மயில்
உன்
மகளின் தோள் மீது
தோகை விரித்தாடுவதை
தொலைவிலிருந்து பார்க்கிறாய்
காலியான கிளைகளில்
மெல்ல நிரம்புகின்றன,
அஸ்தமனங்கள்,
சூரியோதயங்கள் மற்றும்
அன்பின் பதட்டம்

Monday, June 30, 2014

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு.ஒன்று மனசாட்சி ( இடாலோ கால்வினோ கதையின் சுருக்கப்பட்ட வடிவம்)

அந்த நாட்டில் திடீரென யுத்த மேகம் சூழ்ந்தது,, அவன் முதல் ஆளாக ராணுவத்தில் சேர்ந்தான் .. எல்லோரும் பாராட்டினார்கள்..

என் எதிரி ஆல்பர்ட்டோவை கொன்றே ஆக வேண்டும்..அதற்காகத்தான் ராணுவத்தில் சேர்கிறேன் என்றான்.

எல்லோருக்கும் ஆச்சர்யம்.. யார் அவன் .. அவன் மேல் ஏன் அவ்வளவு கோபம் என கேட்டனர்..

அவன் மோசமான ஆள்.. எனக்கு ரொம்ப தீமைகள் செய்திருக்கிறான்,. அவனை கொன்றே ஆவேன் என்றான்..

தம்பி ,,,அப்படி எல்லாம் உன் இஷ்டத்துக்கு கொல்ல முடியாது..  நம் எதிரிகளை மட்டும்தான் கொல்ல முடியும் என்றனர்,

அட அது எனக்கு தெரியாதா... ஆல்பர்ட்டோ மிக மோசமான எதிரி..  நேர்மை அற்றவன்.. அவனே கொன்றே தீர்வேன்.. என் ஃபிளாஷ் பேக் கேட்டால் உங்களுக்கு என் கோபம் புரியும் என்றான்..

சரி சரி..கொன்று தொலை என்றனர்..

”அவன் எங்கு இருக்கிறான் ?”

“ அதெல்லாம் எங்களுக்கு தெரியாது “

“ அப்ப சரி.. நானே போய் அவனை தேடிக்கண்டு பிடித்து கொல்கிறேன் “

“ தம்பி..அப்படி எல்லாம் செய்யக்கூடாது... நாங்கள் அனுப்பும் இடத்துக்கு போக வேண்டும் ..அங்கு யாரை வேண்டுமானாலும் கொன்று கொள் “

“ அதெப்படி எனக்கு எந்த தீங்கும் செய்யாதவர்களை கொல்ல முடியும்.. ஆல்பர்ட்டோ எனக்கு தீங்கு செய்தவன்... அவனை மட்டும் கொல்கிறேன்”

இந்த விவாதத்தால் களைப்படைந்து போன ஒருவர் போர் என்பதை விளக்கி சொன்னார்..

“ அப்படி எல்லாம் அப்பாவிகளை கொல்ல முடியாது.. நான் வீட்டுக்கு போகிறேன் .. எனக்கு வேலை வேண்டாம் “ என்றான் அவன்..

“ அதெல்லாம் முடியாது..உன் பெயரை சேர்த்து விட்டோம் ..போரிட்டுதான் ஆக வேண்டும் “ என சொல்லி விட்டனர்..

அவர்களுடன் சேர்ந்து போய் எதிரிகளை கொல்ல ஆரம்பித்தான்..  ஓவ்வொரு கொலைக்கும் ஒவ்வொரு அவார்டு கிடைத்தது..அவார்டுகள் வாங்கி குவித்தான்.. கடைசியில் எதிரி நாடு சரணடை ந்து போர் முடிந்தது..

ச்சே..தேவையே இல்லாமல் அப்பாவிகளை கொன்று விட்டோமே என வருந்தியபடி அந்த ஊரை சுற்றி வந்தான்..எல்லா பதக்கங்களையும் கொல்லப்பட்டோர்கள் குடும்பத்தினருக்கு தேடிப்போய் கொடுத்தான்..

ஒரு நாள் தற்செயலாக அல்பர்ட்டோவை பார்த்து விட்டான்.. தக்காளி , ஒரு வழியா மாட்டினான் என நினைத்தபடி அவனை அங்கேயே கொன்று விட்டான்..

அவனை கைது செய்தார்கள்.. விசாரணையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது..

மனசாட்சியில்லாமல் செய்த கொலைக்கு விருதுகள்..மனசாட்சிப்படி செய்த கொலைக்கு தண்டனையா.. மனசாட்சிப்படி நடப்பது தவறா என மீண்டும் மீண்டும் கேட்டான்.. யாரும் அவன் குரலை பொருட்படுத்தவே இல்லை

Sunday, June 29, 2014

ராமன் தேடிய சீதை ( இட்டாலோ கால்வினோ சிறுகதையின் சுருக்கப்பட்ட வடிவம்)


 அந்த அடுக்கு மாடி கட்டடத்தின் கீழே நின்று கொண்டிருந்தேன்..கைகளை குவித்து “ தெரசா “ என சத்தமான குரலில் அழைத்தேன்..  எந்த சலனமும் இல்லை..   மீண்டும் கத்தினேன்..ம்ஹூம்..
வழிப்போக்கர் ஒருவர் என்னை பார்த்து சொன்னார் “ சார்..இவ்வளவு மெதுவா கத்தினா மேல் மாடில கேட்காது.. இருவரும் சேர்ந்து அழைப்போம் “ என்றார்.. இருவரும் சேர்ந்து ஒருமித்த குரலில் கத்தினோம்.. “ தெரசா ஆஆஅ “...ம்ஹூம் .. அவள் வரவில்லை..

இன்னும் சிலர் கூடினர்.. உதவிக்கு வந்தனர்.. எல்லோரும் சேர்ந்து கத்தினோம் “ தெரசாஆஆஆஆஆஅ “ பயனில்லை.. சிறிது நேரத்தில் மேலும் சிலர் கூடி விட்டனர்..

ஒன் டு த்ரீ சொல்லி ஒன்றாக கத்தினோம்...

மீண்டும் மீண்டும் முயன்று பார்த்தோம்..பயனில்லை

“ தெர்சா மேலே தான் இருக்கிறாளா.. எங்காவது போய் விட்டாளா “ கேட்டான் ஒருவன்..

“ தெரியலையே “ என்றேன் நான்,,

” சாவி இல்லாமத்தான் மேலே போக முடியுமா கத்துறீங்களா “ கேட்டான் ஒருவன்..

“ சாவி இருக்கு .இந்த வீட்டு சாவி இல்லை.. என் வீட்டு சாவிதான் இருக்கு... “ என்றேன் நான்..

அப்ப இங்கே யாரு இருக்கா சற்று எரிச்சலாக கேட்டான் ஒருவன்,,

தெரியலையே என்றேன் நான்,,

தக்காளி..அப்ப ஏண்டா தெரசா தெரசானு கூப்பிடுற என்றான் ஒருவன்...

அந்த பேர் பிடிக்கலைனா வேறு பேரு சொல்லுங்க ..கூப்பிட்டு பார்ப்போம் என்றேன் நான்,,

தக்காளி,.,விளையாடுறியா என்றார் கூட்டத்தில் ஒருவர்..

 ச்சே ச்சே நான் ஏன் விளையாடபோறேன் என அமைதியாக சொன்னேன்.

சரி சரி..கடைசியாக ஒரு முறை கூப்பிட்டு பார்ப்போம்...வரலைனா சங்கத்தை கலைப்போம் என ஒருவர் சொன்ன யோசனையை கேட்டு கடைசியா கத்தினோம் “ தெரசாஆஆஆ “

பயனில்லை.. கூட்ட்டம் கலைந்தது...

நானும் அங்கிருந்து கிளம்பினேன்,,

ஏதோ குரல் கேட்டது போல இருந்தது “ தெரசாஆஆஆ ”

எவனோ ஒருவன் மனம் தளராம டிரை பண்றான் போல...

Tuesday, March 18, 2014

தண்ணீர் தேவதை 2 ( இணைய மேதைகளின் இணையற்ற படைப்பு )


முந்தைய அத்தியாயங்களை இதில் படிக்கலாம்

அத்தியாயம் 8

எழுதியவர் தேசாந்திரி வழிப்போக்கி
நாகராஜ் என்னப்பா ஊரே கலவராமிருக்கு?தோழர் வந்திட்டீங்களா?நம்ம கணேசனுக்கு துர்மரணம் சம்பவிச்ச நேத்து ராத்தியில இருந்து அவன் கூட்டாளிகளை சுத்தி சுத்தி வரான்.நிர்மல் யாரிடமும் பேசறதில்லை.சிரசாசனம் செய்தப்ப பிச்சைக்கு தெரிந்த காயத்ரி, முடிஞ்சதும் நம்ம கந்தசாமி வீட்டு கிழவியாத் தெரிஞ்சதாம்.ஊரே பயந்துபோய் கிடக்கு தோழரே.அட ஏன் எல்லோரும் இப்படி இல்லாத ஒன்னுக்காக பயந்து சாவறீங்க?மூனு பயங்களும் ஒன்னா சுத்திக்கிட்டிருந்த கூட்டு களவாணிங்க.ஒருத்தன் செத்ததும் மிச்சமுள்ளவனுங்க பயந்து போய் கிடக்காங்க.இல்லைங்க தோழரே கணேசன் வீட்டுக்குள்ள வித்தியாசமா சத்தம் கேக்குதாம்.அடப் போங்கய்யா நீங்க நம்பற ஈஸ்வரன் சுடலையா சாம்பல் பூசி ராத்திரி பூரா ஆடறாராம்,அவர்கூடவே பேய் பிசாசெல்லாம் சேர்ந்து ஆடி களைச்சு விழுந்து சுடுகாட்டிலேயே தங்குதுங்களாம்.ஈஸ்வரனை நம்புற நீங்க இதை ஏன்யா நம்ப மாட்றீங்க?.கடவுளை நம்பாத நாங்க இதைத்தானயா வெங்காயம்னு சொல்றோம்.தோழரே கணேசன் உடம்பு அடக்கமாகலயே.அதான் வீட்டையும், அவன் கூட்டாளிகளையும் ஆத்மா சுத்தி வருது போல.அவனை பெத்தவங்களே உள்ள போக பயந்து எதிர்வீட்ல உட்காந்திருக்காங்க பாருங்க தோழர்.அட வெங்காயங்களா எத்தனை பெரியார் வந்தாலும் திருத்தமுடியாதுய்யா உங்கள.இன்னைக்கு ராத்திரி நான் தங்கறேன் கணேசன் வீட்ல.ஊரில் இருக்க மொத்த ஜனம் தடுத்தும் தோழர் கணேசன் வீட்டுக்குள் போய் கதவை தாளிட்ட அதே சமயம் பூரணமா தெரிஞ்ச நிலவை கரும்மேகம் சூழத் தொடங்கியது.நிலவும் மர்மமா சிரிக்கற மாதிரியே இருந்தது!.....




*******************************************************************

அத்தியாயம்9

எழுதியவர் சரஸ்வதி ஸ்வாமினாதன்
Judgement day பற்றிய பயம் பிச்சைக்கும் நிர்மலுக்கும் கணேசன் அகால மரணம் தந்நது. அவன் செத்துப் போகல பேயா இருக்கான் என்ற நினைக்கல ஆனா அவன் அகப்பேய் என்ன என்ற கேள்வி விதைச்சுட்டு போயிட்டான் என்று இருவரும் அவர்கள் மனம் யோசிப்பதை தனித்தனியே உணர்ந்தனர். அவர்களின் சிந்தனையின் வெளிப்பாடு வித்தியாசமாய் இருக்க இன்னும் கலவரமானார்கள் அவர்களை சுற்றியிருப்போர்.

கணேசன் பற்றி அதிகம் தெரிந்தவர்களைவிட இந்த நண்பர்களின் மூலம் அறிமுக மானவர்களே அதிகம்.

கணேசன் பிச்சை நிர்மல் புத்தக கண்காட்சிக்காக சென்னை வந்து அப்படியே சாரு சாரை பார்த்துவிட்டு திரும்பி போனார்கள்.

பாலு சாரோட மரணம் பற்றிய சர்ச்சை பிச்சை எழுதியது பார்த்து கணேசன் எனக்கும் இப்படி ஒரு போஸ்ட் போடுவியா என்றான்.

உனக்கு போஸ்ட் இல்ல தொடர் நாவல் நம்ம வாசகர் வட்டம் எல்லாம் உனக்காக எழுதுவாங்க நம்ம சாரு சாரும் எழுதுவாரு...

விளையாட்டு பேச்சு நிஜமான அதிர்ச்சியில் நிர்மல் நீந்த துவங்கி உடல் களைப்பாக மனம் தூங்கும் என கணக்கிட்டு நீந்தி கொண்டிருக்க...தோழர் பைசாசம் பற்றிய விவாதத்தில் இருந்தார்.

நம் கணேசன் விட்டுவிட்டு சென்ற பணிகள் என்னவென்று பிச்சை மனதில் சிந்திக்க துவங்கினான்.
அவன் நாவல் கருப்பொருள் கணேசன் ஆனான். அவன் கலைந்து போன குடும்பம் பற்றிய அக்கறை அதன் பொருளாதார மீட்சி என்று மனம் திரும்பியது. பிச்சை down to earth வந்தான்.

பின் நவீனத்துவத்தின் பின்கோடே என்று பிச்சை பிறந்த நாளில் முன்மொழிய கணேசன் வழிமொழிய ஏரல் பற்றிய அருமையான பதிவு மட்டுமே கணேசனுக்கு அஞ்சலி என நினைத்தான்.

எழவு வீட்டுல காப்பித் தண்ணி கொடுங்க ஆறுதலாய் இருக்கும் என்று எவரோ இட்ட குரலுக்கு ஒரு அரை நிஜார் பையன் வந்தான்.

கணேசன் மிச்சமாய் பிச்சையும் நிர்மலும் கிளம்பினார்கள்.

அவர்கள் தீர்மானம் அந்த கண்களில் தெரிந்தது விடிந்த நேரம் கருமேகம் கலைந்து அகப்பேய் அகன்றது....

விடியல் இனியது என மனம் கூவியது.





******************************************************************




அத்தியாயம்10

எழுதியவர் Arel Arj
நிர்மல் பாட்டி சொன்னதை எல்லாம் மனதில் ஒருமுறை படம் போல ஓட்டி பார்த்தான். சட்டென்று அவன் கவனத்துக்கு ஒன்று தோன்றியது. 120 வருடங்களுக்கு முன் இருந்த ஒரு நோயை பற்றிய அபூர்வ சம்பவங்கள். அப்படி என்ன அபூர்வம், மர்மம்..? எல்லாருக்கும் அது மர்மமா தோன்றாது. சிலர் அதை 'இவ்ளோ தானா' என்று கூறி ஒரு மொன்னையான விஷயம் போல் ஆக்கி விடிவார்கள். ஆனால் நிர்மலால் அப்படி எடுத்து கொள்ள முடியவில்லை. அந்த நோய் வந்தால் நாம் அதை உணர மாட்டோம். நம்மை பார்ப்பவருக்கு நம் முகம் வாடி போனது போல் தெரியும், அவ்வளவாக பசிக்காது, மிக சாந்தமாக மாறிவிடுவோம், எந்த சலனமும் பதைபதைப்பும் நம்மில் எழாது, பிறரிடம் மிக பாசத்துடன் பழகுவோம். 'இதெல்லாம் என்னடா நோய் அறிகுறி' என்று அந்த பாட்டி சொல்லும் போது நிர்மல் நினைத்தான். இந்த நோய் வந்தவர்கள் ஆறு மாதங்கள் வரை இவ்வாறு இருந்து இறந்து போனார்கள். இதில் ஆச்சர்யமான விஷயம் இறப்பவருக்கு நெருக்கமானவருக்கு, உண்மையாக அன்பு செய்பவருக்கு இந்த நோய் தொற்றிக்கொள்ளும். அவர்களும் நோய் அறிகுறிகளோடு இருந்து பின்னர் இறந்து போவார்கள். இறந்தவர்களின் ஆன்மா பிறரை எந்த விதத்திலும் தொல்லை செய்யாமல் தனக்கு பிடித்தவரை போய் சந்திக்கும், தன் சிறு சிறு ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும். யாரையும் அந்த நோயினால் இறந்த ஆன்மா தொல்லை செய்தததாக இதுவரை சான்று இல்லை. இந்த நோய் தாக்கிய பிறகு எவ்வாறு அதில் இருந்து விடுபடுவது என்பதையும் அந்த பாட்டி சொல்லி இருந்தார். நோய் அறிகுறிக்கு நேர்மாறான காரியங்களை செய்ய வேண்டும். வெறிகொண்டு சாப்பிட வேண்டும், கோவத்துடன் இருக்க வேண்டும், பரபரப்பாக இருக்க வேண்டும், கடுகளவு பாசம் கூட யாரிடமும் காட்டக்கூடாது. மனித தன்மையற்ற கொடூரனாக மாற வேண்டிய கட்டாயம் நிர்மலுக்கு இப்போது. அவனுக்கு தன்னை மட்டும் காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. இந்த நோயுக்கு முற்றிலுமாக தீர்வு கண்டுபிடிக்கவே விரும்பினான். என்ன செய்ய என்று யோசித்த அவனுக்கு, பாட்டியை போய் சந்திப்பதே சரியான வழியாக தோன்றியது.




***************************************************************

அத்தியாயம்11

எழுதியவர் இலக்கியச்செம்மல் வெளங்காதவன்
இந்த வாழ்க்கைதான் எத்தனையெத்தனை திருப்பங்களை அடக்கியது என்று வியந்தவாறே ஒருக்களித்துப் படுத்திருந்தான் பிச்சை. கைகள் குறுக்கி, கால்கள் ஒன்றொன்று பின்னி, ஆதிசேஷனை படுக்கையாய்க் கொண்ட அந்தக் கடவுள் தன் பெண்ணாளுடனான புனைவின் ஆரம்ப நிலை தேட்டங்களை நினைவுறுத்தியது, பிச்சை படுத்திருந்த விதம்.

விதவிதமான ஆசைகளும் விசித்திரங்களும் சொல்லொண்ணாச் சித்திரங்களும் அடைபட்டிருக்கும் மனம் ஒரு குரங்குதான் என்று நினைத்தபோதே, அச்சிந்தினையிலிருந்து அங்கு வைக்கப்பட்டிருந்த வெள்ளி முலாம் பூசியதைப்போன்ற, கீழே அரைவட்டமும் முக்கோணமும் கலந்த வடிவிலான பாட்டில்மீது தாவியது அம்மனக்குரங்கு.

அதைக் கைப்பற்றும் எண்ணமிருந்தாலும் பற்றற்ற நிலையில் பட்டுப்போன பட்டாம்பூச்சியாய், கால்கள் அகற்றிய அணிலாய், நுரைமேல் நீந்தும் தவளையாய், துளசியின் வாடை கண்ட கொசுவாய், வீற்றிருக்கும் கட்டிலாய், திறந்திருக்கும் சன்னலாய், அரைவட்ட முக்கோண பாட்டிலாய், எல்லாமே அவனாகி, அதுவும் அவனும் கலந்து, அதுவும் அவனும் எதுவுமற்ற நிலையாகும், ஒப்பில்லா முறையாகும் சடமாகித்தான் போய்விட்டது அவன் மனம்.

சடமாகிப்போன சடகோபனை நினைக்கவேண்டிய மனதில், திடீரென நிர்மலும், நூற்றைம்பது வருடமாகியும் சடமாகிவிடாத அந்தப்பாட்டியும் நிழலோடினார்கள். மின்னால் கீற்று வெட்டும் வேகத்தின் ஒன்பதின் ஒரு பங்கு வேகமாக, ஓடையின் இறுதித் துளியின் தரையடையும் லாவகமாகவும் நிர்மலும் அந்தப் பாட்டியும்;

கட்டிலிலிருந்து எழுத்துவிட்டான் பிச்சை.

பாட்டி சொன்ன தண்ணீர் தேவதை உண்மைதானா? என மனம் கேள்வி எழுப்பியது. மின்னலுக்குப்பின் வரும் இடியென, புயலென, மழையென அவன் மனம் குழம்பியது.

குழப்பம் நீக்க அவன், அந்தப் பாட்டிலை அணுகினான்.





************************************************************************




அத்தியாயம்12

எழுதியவர் சரவணன்
பிச்சையிடம் இது உண்மைதான என்று தெரிந்துகொள்கிற ஆர்வம் இல்லையில்லை வெறியே சூழ்கொண்டது. புட்டியை கையில் எடுத்தபோது அந்த கிழவி சொன்ன நிழல் உலகம் மற்றும் தண்ணீர் தேவதைகளின் விளக்கங்கள் நிழலாடியது.... அதை சொல்லியபோது கிழவியின் கண்கள் ஒரு அற்புதத்தை பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு குழந்தையின் கண்களை போல் எப்பிடி விரிந்தது....

நிர்மல் கொன்சமும் நம்பமுடியாதவனாக கிழவியின் முன் அமர்திருந்தான். அன்று அந்த கிழவி சொன்ன கதை கேட்கும்பொழுது இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால்...ஹும்ம் இப்பொழுது என்ன புண்ணியம்...பிச்சையும் இதில் வந்து மாட்டிக்கொண்டு....விடை தேடி இப்பொழுது இருவரும் கிழவியின் முன் அமர்திருக்கின்றனர்...

கிழவி, "அவரு ஒரு அற்புதமான மனிதர்! நாங்கள் எல்லாம் அழிந்துபோன இசைவாணர் வம்சாவளியை சேர்ந்தவர்கள். ஊர் ஊராய் திரிவது எங்கள் சமூக வழக்கம். நிரந்தரமாக எங்கும் தாங்குவதில்லை. அந்த சம்பவம் அவருக்கு நேர்ந்த பிறகு நான் இங்கேயே தங்கிவிட்டேன்."

நிர்மல் "அழிந்துபோன கலையா? என்னது அது?"
"அவர் மிக அருமையாக கதை சொல்லுவார். கைகளில் உள்ள அந்த வாத்தியத்தை வைத்துக்கொண்டு வாசித்துக்கொண்டே பாட்டு போல் சொல்லுவார். திங்கடி என்று சொல்லுவார்கள் அந்த வாத்தியத்தை. மூன்று பூசணிக்காய்கள் ஒன்று சேர்த்து கட்டியது போல் இருக்கும் மேல வீணை போன்று..அந்த வாத்தியத்தின் ஓலீ ஒரு முறை கேட்டால் சில மணி நேரங்கள் காதுகளில் கற்பனையாக ஒளித்துகொண்டிருக்கும்"
பிச்சை "அந்த வாத்தியத்தில் அப்பிடி என்ன வித்தியாசம்?"
"இருக்கு தம்பி! இந்த காலத்தில் இதை நம்புவீர்களா என்று தெரியவில்லை ஆனால் உலகம் முழுவதும் இந்த கலை அன்று இருந்தாக அவர் சொல்லுவார். எங்களுடைய சனம்தாம் ஊரு ஊராக சென்று நாங்கள் போகும் வழியில் கேட்ட சம்பவங்களையும் கதைகளையும் சேர்த்து கட்டி ஒரு சுவாரசியமான கதையை போல் உரு போட்டு பாட்டாக பாடுவார்கள். இதில் அந்த சொல்லப்படப்போகும் கதையை இவர்கள் மிக கவனமாக மனத்தில் முதலில் உருவாக்குவார்கள், அதில் ஓசை, உணர்ச்சிகள், படங்களுடன் அந்த கதையை மனத்தில் உருவாக்குவார்கள். இனிக்கு வருதே சினிமா படம் போல மனத்தில் உருவாக்குவார்கள். அதை திரும்ப திரும்ப அந்த வாத்தியத்தை பயன்படுத்தி அதற்கான ராகத்தில் பாடியபடியே அதை மீண்டும் மீண்டும் நினைவில் இருத்துவர்கள்"

பிச்சை "அது சரி பாட்டி, இது என்ன பிரமாதம் பெரிசா ஒன்னும் இல்லையே?"

"தம்பி நிழல் உலகம் என்று ஒன்று இருக்கிறது தெரியுமா?

பிச்சை "தெரியாது"

நிர்மல் முகத்தில் அதிர்ச்சி கலவரம் இரண்டும் சேர்ந்த கலவை, ஆனால் நடப்பதை எல்லாம் பார்த்தால் நம்ப முடியாது என்று சொல்லவும் முடியவில்லை.

"இன்னிக்கு விஞஙானம் என்று ஏதோ சொல்லுகிறீர்கள்! அந்த உலகம் இங்கேதான் இருக்கிறது நமது உலகத்தொடு ஒன்றோடு ஒன்றாக கலந்து கரைந்து இருக்கிறது. துணியில் உள்ள ஊடு பாவு போல...அதை நாங்கள் தண்ணீர் தேசம் என்று சொல்லுவோம்!"

நிர்மல் "தண்ணீர் தேசமா? நீங்கள் சொன்ன அந்த தண்ணீர் தேவதைகள் அந்த உலகத்தைத்தான் சேர்ந்தவர்களா?"

"ஆமாம்! அன்னிக்கு நீ கேட்டதால் நிறைய சொல்லவில்லை. அந்த உலகம் நம்மோடு தொடர்பில் உள்ளது

இருந்தாலும் அவர்களுக்கு ஒரு பிரிசினை என்றால் இங்கே உங்களுக்கு மனத்தில் அடித்துகொள்ளுமே அதற்கு காரணம் இந்த தண்ணீர் தேவதைகள்தான்!"

நிர்மல் "அப்போ நாம் பேசுவதையும், நினைப்பதையும் அவர்களால் பார்க்க முடியுமா?"

"பார்க்க மட்டும் இல்லை உங்கள் மனத்தில் ஒரு விசயத்தை அவர்களால் உருவாக்கவும் முடியும்! இந்த திங்கடி என்ற அந்த வாத்தியம் தண்ணீர் தேவதைகளுக்கு மிகவும் பிடித்தமான இசை! அந்த வாத்தியத்தை வாசிக்கும்போது கூட அமர்ந்து கேட்குமாம்..இவர்கள் உருவாக்கும் இந்த கதைகளை அந்த இசையோடு சொல்லும்போது அவை கூட அமர்ந்து கேட்குமாம்! இதை அவர்கள் நாங்கள் செல்லும் ஊர்களில் மாலை நேரங்களில் ராஜாசபையில் எல்லோரும் அமர்திருக்க படுவார்கள். அப்பொழுதும் அந்த தண்ணீர் தேவதைகள் அங்கே வருமாம் உட்கார்ந்து கேட்ட்க்கும்பொழுது இவர்கள் உருவாக்கிய அந்த காட்சிகளை, உணர்வுகளை இசை கேட்கும் மனிதர்களிடம் அப்பிடியே உருவாக்குமாம். எல்லா மனிதர்களும் ஒரே கட்சி ஒரே உணர்வு! ஆனால் யாருக்கும் புரியாது இது எப்படி என்று"

"சரி இந்த தண்ணீர் தேவதைகள் மனத்தில் காட்சிகள், உணர்ச்சிகளை உருவாக்கமுடியும் என்று சொல்லுகிரீர்களே! இசை சம்பந்தப்பட்டது மட்டும் தான் முடியுமா?

"இல்லை! எதுவேண்டுமானாலும் முடியும்! ஆனால் அதை முதலில் நீங்கள் பிசிறில்லாமல் கற்பனை பண்ண தெரியவேண்டும்! நீங்கள் இப்பொழுது அனுபவித்துகொண்டிருக்கும் பிரிசினை எல்லாத்துக்கும் காரணம் இந்த தண்ணீர் தேவதைகள்தான்!!!"




******************************************************************

அத்தியாயம் 13

எழுதியவர் இலக்கியச்செம்மல் விளங்காதவன்
விஜீநாதன் எனும் தந்துகிக்காரனும் கின்னாரன் எனும் திங்கடிக்காரனும் எமது சபையில் மேலான இசைக்கலைஞர்கள். கீர்த்தனைகளை விஜீநாதன் இசைக்க, பின்புல உயிரூட்டல் கின்னாரனால் நடைபெறும், அனுதினமும்.”

“குயிலின் ஓசையையும், மயிலின் அகவலையும் கேட்டறிந்து, பின்னொலி ரிதங்களையும்(வடமொழிச் சொல்) ஒலியோடை வேகத்தையும் அனுசாரித்து, உள்ளக்கிடக்கையின் சொல்வண்ணம் பூசி, மருகும் மாலையின் வெம்மையை எடுத்து, உருகும் பனியில் நீந்தவைத்து, கொக்கின் வெள்ளையில் நீலச்சாயம் பூசி காதில் வெல்லப்பாகைக் கலந்து ராகமாக்கி, நரம்பிலிருந்தும், விடும் மூச்சிலிருந்தும் தேவராகங்களை இசைப்பவர்கள் அவர்கள்.” அந்தப்பாட்டியின் கண்களின் பிரகாசம் கொப்பளிக்கப் பேசினாள்.

தந்துகிக்கும் தந்துபிக்கும் வித்தியாசமறியா இசைஞானி பிச்சையின் கண்கள், அந்தப்பாட்டியின் காதோரக் கமழங்களில் பதிந்திருந்தது. நிர்மல், தன் முகவாயைச் சொறிந்துகொண்டே, அவளிடமிருந்து வரும் வார்த்தைக் கோர்வைகளை உள்ளீடாக்கப் பிரயத்தனம் செய்துகொண்டிருந்தான்.

“ஒரு பெண்புறா சிறகுகளை விரித்து மேலெழும்பும் ஓசைக்கென்று தனி ராகங்கள் வைத்திருந்தார்கள் எம் இசைக்கலைஞர்கள். விஜீநாதனும் கின்னாரனும் ‘இசைச்சொரூபிகள்’ என்றே அழைத்தனர் எம்முலகில்.”

“இசையின் சிருஷ்டிக் கோர்வைக்கும், உமது வயிற்றில் எழும் பசிக்கும் உண்டான நுண்கட்டமைப்பு வியாக்கியானங்களை எம்மனோர் ஆராய்ந்துகொண்டிருந்தனர்”

“இந்தக் கின்னாரனின் மூத்த மாணவன்தான், என் கணவன் ‘பாரிசீலன்’!”

எந்தப் பதற்றமுமின்றி அவள் பேசியது, இருவரின் காதிலும் சப்தித்து அடங்கியது.

தென்றல் தன் ஒப்பில்லா நறுமலர் மணத்துடன் வீசியது.





( தொடரும் )



Monday, March 17, 2014

மேதைகள் சேர்ந்து எழுதும் அதிரடி கதை - தண்ணீர் தேவதை

ரிலே ரேஸ் கதை... பலர் தொடர்ந்து எழுதப்போகும் கதை... ஒருவருக்கு மூன்று வாய்ப்புகள்.. எழுத விருப்பம் இருக்கும் யார் எழுத வேண்டுமானாலும் எழுதலாம்.. தான் எழுதுவதை , யார் தொடர வேண்டும் என்பதை ( விருப்பம் தெரித்தவர்களிலிருந்து ஒருவரை ) , குறிப்பிட்ட பகுதியை எழுதியவர் சொல்வார்..
***********************************************
தண்ணீர் தேவதை

அத்தியாயம் 1 
எழுதியவர் Nirmal Mrinzo
இந்த கதையை நான் எனது நாவலுக்கான கருவாக வைத்திருந்ததிலிருந்து எழுதுகிறேன், இந்த கதையை எனக்கு சொன்னது ஒரு 150 வயது பாட்டி, ஆத்தங்கரையிலேதான் எப்பொழதும் இருக்கும், அது எப்ப பொறந்திச்சி, இங்கு வந்திச்சின்னு யாருக்குமே தெரியாது, அதுகிட்ட விஷேசமான மருத்துவ சக்தி இருதிச்சி, எங்க ஊருக்கு பக்கம் யாருக்கு மஞ்சள் காமாலை வந்தாலும் இந்த பாட்டிக்கிட்டதான் தூக்கிட்டு வருவாக. சின்ன புள்ள, புள்ளதாச்சி, கிழம், என எல்லோரும் பாட்டிகிட்ட மருந்து வாங்கி சாப்பிட வருவாங்க. எனக்கு மஞ்சள் காமாலையில் இருக்கும் பொழுது நானும் அந்த பாட்டிகிட்ட மருந்து வாங்கி சாப்பிட போனேன், மருந்து வாங்கி சாப்பிட்டேன், சரியான மழை, மழை விடுமென அந்த பாட்டி வீட்டிலேயே காத்துகிட்டிருந்ததில் நேரம் அதிகமாகி, அங்கே தங்கிவிட்டேன். அன்னிக்குதான் அந்த கதையை சொல்லிச்சி பாட்டி. அது அந்த பாட்டியை பற்றி யாருக்கும் தெரியாத கதை. சந்தோஷ வாழ்வை பற்றீய கதை........

அத்தியாயம் 2 
எழுதியவர் பிச்சை
" என்னடே கதை விடறே.. பாட்டியா.. 150 வயசா.. கதை சொன்னுச்சா ..ஹா ஹா.. ஏதாச்சும் கனவா ..ஹா ஹா.. “ வாய் விட்டு சிரித்த கணேசனை சற்று அலுப்புடன் பார்த்தான் நிர்மல்.
” இங்கே பாருடா.. A is A அப்படீங்கற கான்சப்ட் எல்லாம் வழக்கொழிஞ்சு போச்சு.. ஏ என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அப்படீங்கற யுகத்தில இருக்கோம்..truth can be stranger than fiction " என்றான் நிர்மல்..
” சரிடா.. அப்ப நான் ஒரு பேயை பார்த்தேன் அப்படீனு சொன்னா நம்புவியா “ குறும்பாக கேட்டான் கணேசன்.
இப்படி வேறு யாரேனும் கேட்டு இருந்தால் சூடாக பதில் கொடுத்து இருப்பான்.. ஆனால் ஏரலில் இருந்து சென்னைக்கு தன்னை பார்க்க வந்து இருந்து வந்து இருக்கும் பள்ளி நண்பன்..இதமாவெ சொல்வோம்
“ பேய் அப்படீங்கறது பொய்.. நான் சொல்வது வித்தியாசமான உண்மைகள்..ரெண்டும் வேற “ என்றான் நிர்மல்.
“ அப்ப அந்த பாட்டி பொய்னு நான் ஏன் சொல்லக்கூடாது “ விடவில்லை கணேசன்..
“ இருடா பேசலாம்... டீ எடுத்துட்டு வறேன் “ .. சமையல் அறை நுழைந்த போது போன் அடித்தது.. அப்பா.
“ நிர்மல்.. என்னடா போன் கிடைக்கவே இல்லை.. ஒரு பேட் நியூஸ்டா...”
” என்னப்பா “
“ ஃபாரின்ல வந்து இருக்கேனு கேள்விப்பட்டு உன்னை பார்க்க கிளம்பிய உன் நண்பன் கணேசன்... “
“கணேசன் ?”
“கார் ஆக்ச்சிடெண்ட் ஆகி ஸ்பாட்லயே..”
“ என்னப்பா உளறுரீங்க” பதட்டத்துடன் வெளியே ஓடி வந்தான் நிர்மல்
அங்கே கணேசன் இல்லை...
இது ஆல்டேர்னேட் ட்ரூத்தா அல்லது ட்ரூத்தா அல்லது இல்யூஷனா... திகைத்துப்போய் நின்றான் நிர்மல்.. அந்த பாட்டி சொன்ன விஷ்யங்களின் அழுத்தம் , அர்த்தம் புரிய் ஆரம்பித்தது

அத்தியாயம் 3 
எழுதியவர் நிஜந்தன் தோழன்
"கணசே" என வாய் கொழறியது நடப்பது என்ன என விளங்கிக்கொள்ளாமல் நிர்மல் திடுக்கிட்டான்..தான் இதுவரை படித்த நாவலில் கூட இப்படி திடுமென விளங்கிக்கொள்ள முடியாத கதைபோக்கை உணர முடியாததை கண்டு ஆசூயாய் உணர்ந்தான்.வைத்தியம் பார்க்க கிளம்பியதில் இருந்து பாட்டி சொன்ன கதை வரை மீண்டும் நடந்தவற்றை ஒரு முறை மனதில் ஓட்டி க்கொண்டிருந்தான் எல்லாம் தெளிவாக மறுமுறை ஊத்து பறிக்கும் போது வரும் நீரை போல மனதில் ஓடியது. பாட்டி சொன்ன கதை சொல்ல தொடங்கிய முன் ஏழு மோகினிகள் எக்ஸிமோக்கள் பற்றி பேசிய விஷயம் நினைவுக்கு வந்தது.. என்ன யோசித்தானோ தெரியவில்லை திடீரென நீச்சல் குளத்தில் இறங்கி நீந்த ஆரம்பித்தான் எதுமே நடக்காத மாதிரி நீரில் வசிப்பவனை போல நீந்தி கொண்டிருந்தான். குன்றக்கடி கோவிலில் இருந்து வந்துறங்கிய பிச்சை எல்லாவற்றை கண்டு திடுக்கிட்டான் தீடிர் விபத்து,நீந்திக்கொண்டே இருக்கும் நிர்மல் என எல்லாவற்றிர்க்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும் என சிக்கலை தீர்க்க நிஜந்தனைக் கூப்பிட்டான் பிச்சை...
அத்தியாயம் 4 
எழுதியவர் நறுமுகை தேவி

வாசல் கதவை யாரோ பலம் கொண்ட மட்டும் தட்டும் சத்தம் கேட்டு தடால் என்று எழுந்தான் பிச்சை.. ச்சே! இது என்ன குழப்பமான கனவு..கணேசன் செத்து விட்டதாக போன் வந்ததே..ஐய்யோ..! அவனுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ?நெஞ்சுக்குள் கொஞ்சமாய் கலவரம் சூல் கொண்டது.வெளியே காலிங்பெல் அடிப்பதும்,கதவு பலமாய்த் தட்டப்படுவதுமாய் இருந்தது.ஆனாலும்,நேற்று முன் தினம் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த காரணத்தினால் கால்களில் இரத்தம் கட்டிக் கொண்டு உடனே பதறி எழமுடியவில்லை.மட்டுமில்லாமல்,கனவின் தாக்கத்தில் இருந்து மூளை உடனடியாக விடுபட மறுத்தது.சாவு பற்றிய கனவு கண்டால் திருமணச் செய்தி வருமாமே?உண்மையாய் இருக்குமோ? என்று எண்ணிக்கொண்டே நழுவ இருக்கும் லுங்கியைக் கைபற்றியபடி கதவு திறந்தான் பிச்சை.அங்கே..
வாச..லி…ல்..
பிரிந்து போன காதலி காயத்திரி கைப்பெட்டியுடன்..
என்ன..? அதிர்ச்சியில் நா குழறியது பிச்சைக்கு..

உள்ளே வரலாமா?என்றவள் பதிலுக்குக் காத்திராமல் சர்வ சுதந்திரத்துடன் உள் நுழைந்து இயல்பாகச் சொன்னாள்

பிச்சை..உன்னை விட்டு என்னால் இருக்க முடியலை..வீட்டில் இருந்து மொத்தமாகக் கிளம்பி வந்து விட்டேன்..
அத்தியாயம் 5 
சரஸ்வதி ஸ்வாமி நாதன்

என்ன நீ ஏதோ ஒரு முடிவோடதான் இருக்க போல பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் கோரை பாய் பின்னி நானும் பாட்டியும் பல கதை பேசியிருக்கோம் இப்ப நீ கதைக்கிறதெல்லாம் அவங்க நான் பேசுனதோட மிச்சம்.

ஏரல் நிர்மல் நீயும் இரட்டைகுழல் துப்பாக்கியா இலக்கியம் சுட கிளம்புங்க நான் வேணாங்கள ஆனா பாட்டி கிடந்து தவிக்குது பய புள்ள அம்மா உணவகத்தில் சாப்பிட்டு நாக்கு செத்து கிடக்கு நீ போய் கீரை வச்சு கொடு ன்னு சொல்லுக்கு..கட்டுப்பட்டு வந்தேன்.

உலக அறிவையெல்லாம் உன் மூளை உள் வாங்குதே அந்த மலைக்கோட்டை காவிரியில் பாலத்தில் விழுந்து போன தாத்தாவோட சாவு என்ன மாதிரி இந்த கிழவியோட வாழ்க்கையை திருப்பி போட்டுச்சு தெரியுமா ...

150 வருஷமா அதே கரையில் எங்க தலைமுறை அந்த தண்ணீர் கிழவனுக்கு படையல் வைப்போம் எல்லா மஹாளய அமாவாசைக்கு...

போன வருஷம் பாட்டி நம்ம கல்யாணத்துக்கு வேண்டிக்குச்சு நீ பிச்சை எடுத்துக்கிட்டு இங்க கிடக்க....


அத்தியாயம்6
ராம்ஜி யாஹூ


இப்பந்தான் டேய் நிர்மலு ஏறலு, சிருவைகுண்டம் னு தனித் தனியா பேரு வச்சு இருக்கீவ .
உங்க தாத்தா காலத்துல கரும்குளத்துல இருந்து முக்காணி வரை ஒரே ஊரு தான் .
அவுக கருப்பா இருந்தாலும் களையா இருப்பாவ. எனக்கு எட்டு வயசு அப்போ, உங்க தாத்தனுக்கு பன்னெண்டு வயசு . என்கிட்டே எதைப் பாத்து மயங்கினாவா தெரியலை . பெருமாள் சித்ரா பவுர்ணமி அன்னிக்கு ராத்திரி உன்னைய எனக்குப் பிடிச்சிருக்கு புள்ளை , கலியாணம் கட்டிக்கிடுவோம்னு சொன்னவா . அதைக் கேட்ட
எங்க அண்ணன் , உங்க தாத்தாவைப் பாத்து நீரு தேவமாரு நாங்க ஜெபகூட்ட ஆளு, எப்படியா பொருந்தும் சொன்னான் . அதெல்லாம் தெரியாதுவே ன்னு சொல்லி சைக்கிள் கேரியர்ல இருந்து அருவாளை எடுத்து அந்த பெருமா கோவிலு வாழை மட்டை நாரைக் கிழிச்சு அதையே எனக்குத் தாலியாக் கட்டினாவ. சைக்கிள்ள என்ன அப்போமே முன்னால வச்சுக் கூட்டிட்டு போனாவா . கல்யாணம் ஆன முதத் திருப்பு எங்களை வீட்டுக்குக் கூட்டிப் போய் பால், கலர், பர்பி வாங்கிக் கொடுத்தது நம்ம பேட்மா நகரத்து மைதீன் பாய் . என் வயசு 150 சொன்னதுக்கே முளிக்கயேடே , மைதீன் பாய் வயசு இப்போம் 180 தாண்டிருச்சு டேய் .

அத்தியாயம்7

ஸ்ரீநிவாச கோபாலன் வேதாந்த தேசிகன்

பிச்சை மீன் தொட்டியை வெறித்துக்கொண்டு இருந்தான். காயத்ரி குளியலறைக்குள் போனாள். பெண்டுல கடிகாரம் அரைமணி அடித்து ஓயவும் பிச்சையின் செல்போன் ஒலித்தது. மேசை மீது இருந்த செல்போனை எடுப்பதற்குள் வாசற்கதவைத் தட்டும் ஓசை கேட்டு கதைத்திறந்தான். இரண்டு போலிஸ் நுழைந்தனர். அதே கணத்தில் பாத்ரூமில் இருந்து 'டமால்' என்ற சப்தம். ஒரு போலிஸ் காயத்ரி வைத்த பையைத் திறந்தார். அதில் குருதி சொட்டும் தலை. பிச்சைக்குப் பித்து பிடித்துவிடும் போல

( தொடரும் )


Saturday, July 27, 2013

ஒரு மரணம் , ஒரு மனோதத்துவம்

இது சிறுகதை அல்ல ..சின்னஞ்சிறு கதை . சிறிய முடிச்சை வைத்து குறைந்த பட்ச வரிகளுடன் எழுதப்படுவது.படிமம் , குறியீடு , அக தரிசனம், அறச்சீற்றம் என எதுவும் இருக்காது. வெறும் பொழுதுபோக்குக்காக எழுதப்படுவது..

**************************

காலிங் பெல் அடித்து கொஞ்ச நேரம் கழித்துதான் கதவு திறந்தது, பொறுமையாக காத்து இருந்தேன். பொறுமை அனைவருக்கும் அவசியம் என்றாலும்  மருத்துவருக்கு , அதுவும் மன நல மருத்துவருக்கு மிக அவசியம்.
எனக்கு முப்பது வயது என்றாலும் ஐம்பது வயதுக்கான பொறுமை இருப்பதற்கு காரணம் என் குரு டாக்டர் ஜோசப். மருத்துவம் ஒரு தொழில் அல்ல..அது ஒரு சேவை..அது ஒரு தவம் என போதித்தவர் அவர்.

கதவை திறந்தவனுக்கு 25 வயது இருக்கலாம்.

“ வாங்க டாக்டர் “ என்றான்.

இவ்வளவு பணிவாக இங்கிதம் தெரிந்தவனாக இருக்கிறானே...இவனுக்கா பிரச்சினை..ம்ம்ம்.. மருத்துவ விந்தைகள் !
அவன் மனைவியும் புன்னகையுடன் கண்களால் வரவேற்றாள்.

அவளுக்கு 22 வயது இருக்க கூடும் என கணித்தேன்.

காஃபீ சாப்பிட்டவுடன் நேரடியாக விஷயத்துக்கு வந்தேன்,

” என்னிடம் தயக்கம் இல்லாம பேசலாம்..சொல்லுங்க //என்ன பிரச்சினை? “

அவன் முகம் சற்று மாறியது.

“பிரச்சனையா...எனக்கா...என்ன”  மனைவி இடைமறித்தாள்.

“ நான் பேசிக்கிறேன்..சும்மா இருங்க...”

அவன் அடங்கினான்

“ டாக்டர்///அவர்  நல்லாத்தான் இருந்தார்... ஆனால் கொஞ்ச நாளாத்தான் பிரச்சினை//  இல்லாத விஷ்யங்களை இருப்பதா கற்பனை செஞ்சுக்குறார்”

ம்ம்...இது நான் எதிர்பார்த்ததுதான். வொர்க் ஸ்ட்ரஸ் , சமூக அழுத்தம். உரிய அங்கீகாரம் கிடைக்காமை இதில்தான் முடியும்.

” மேடம் .கவலைப்படாதீங்க... இதுக்கு மருந்து தேவை இல்லை....அவர் நினைப்பு தவறு என்பதை செயலால் காட்டினால் போதும். இப்ப பாருங்க”

அவளிடம் சொல்லி விட்டு அவனிடம் திரும்பினேன்.

சார் இது என்ன ? “

அவனிடம் கண்ணாடி டம்ப்ளரை காட்டினேன்.

கொஞ்ச நேரம் திகைத்து போய் பார்த்தான். மனைவியை பார்த்தான்.

” சொல்லுங்க “ உற்சாகப்படுத்தினேன்.

“ டாக்டர்...கையில் ஏன் ரோஜா பூங்கொத்தை வச்சு இருக்கீங்க? எனக்கு வாழ்த்து சொல்ல வந்தீங்களா? “

நான் சிரித்தேன்.

“இது கண்ணாடி கிளாஸ் “

“ இல்லை டாக்டர்...மலர்களின் வாசம் என் நாசியை தொடுது... இப்படி பொய் சொல்றீங்களே”

மனைவியோ செய்வதறியாமல் நின்றாள்.

இது கண்ணாடிதான் என எவ்வளவுதான் சொன்னாலும் சரிப்படாது.இது கண்ணாடி இது கண்ணாடி என அவனை மீண்டும் மீண்டும் சொல்ல வைக்கும் ஆட்டோ சஜஷன் எல்லாம் வேலைக்கே ஆகாது.

” சார் கடசியா கேட்கிறேன். இது கண்ணாடியா ,மலர் கொத்தா ?”

அவன் பொறுமை இழந்து கத்தினான்

“ இது மலர் கொத்து ,,மலர் கொத்து ..மலர் கொத்து “

 நான் சட் என கோபமாக முகத்தை மாற்றிக்கொண்டேன்.

“ ஷட் அப்...இது கண்ணாடி “

கோயிலில் சிதறி தேங்காய் உடைப்பது போல , ஓங்கி தரையில் அடித்தேன். கண்ணாடி சிதறியது. மனைவி வீல் என அலறினாள். ஒரு துண்டு அவன் உதட்டில் மோதி ரத்தம் கசிந்தது.

“ சாரி மேடம்..இந்த மாதிரி ஷாக் ட்ரீட்மெண்ட்தான் அவர் ஆழ் மனதில் பதிந்து , அவர் கற்பனைகளை அழிக்கும்...மன்னிச்சுடுங்க... இன்னும் ஒரு ட்ரீட்மெண்ட்தான்..சரி ஆகிடும் “

அவன் முகத்தில் கலவரத்தோடு கைக்குட்டையால் உதட்டு ரத்தம் துடைத்தான்.

வெளியே அழைத்து வந்தேன்.

தோட்டத்தை காட்டினேன்..

“ இது என்ன ?”

அவன் முன்பு போல திகைத்தான்..

“ இது ஆழ்ந்த பள்ளத்தாக்கு.. நாம் மலை உச்சியில் நிற்கிறோம் “

சிரித்தேன்,

“இல்லை.. நாம் சமதளத்தில் நிற்கிறோம் “

“ இல்லை டாக்டர்... நாம் இருப்பது மலை உச்சி..விழுந்துடப்போறீங்க..இப்படி வாங்க”

“ ஹாஹா...இது சமதளம்...ம்ம்..சரி நான் முன்னாடி நடந்து காட்டுறேன்..என் பின்னாடி வாங்க”

“ நோ...பள்ளத்தாக்கு டாக்டர்... விழுந்து செத்துடாதீங்க... ’ பதறினான்.

புன்னகையுடன் நடக்க ஆரம்பித்தேன்.

**************************************************************

கீழ்தள கதவை காலிங் பெல் அடித்து திறக்கும் அவரை பொறுமை இல்லாமல் உள்ளே நுழைந்தார்கள்.

” நான் சொன்னபடி அவன் வந்தானா? தன்னை மன நல மருத்துவர் என சொல்லி இருப்பானே”

பெரியவர் சோம்பலாக பார்த்தார்.

“ ஆமாம் சார் ,..வந்தான் .. நீங்க சொன்னபடி.ஏதாச்சும் பேச்சு கொடுத்து உட்கார வைக்க பார்த்தேன்...அவனோ தன் பேஷண்டை பார்க்க போறேனு லிஃப்ட் ஏறி டாப் ஃப்லோர் போயிட்டான்..”

“சார்..என்ன சார்..இப்ப்படி செஞ்சுட்டீங்க... அவருக்கு மன நலம் சரியில்லை.. எப்படியோ தப்பிச்சி வந்துட்டார்.. பத்திரமா பார்த்துக்கோங்க போன் செஞ்சும் உச்சி மாடிக்கு போக விட்டுட்டீங்களே.. அந்த வீட்டு பொண்ணு ஒருத்தி மரணத்துக்கு இவர் தெரிஞ்சோ தெரியாமையோ காரணம் ஆகிட்டார்.. இங்கேதான் வருவார்னு தெரியும்.. பார்த்துக்குவீங்கனு போன் செஞ்சுட்டு நாங்க வரதுக்கு லேட் ஆகிப்ப்போச்சே .. “

பதட்டத்துடன் அவர்கள் எழுவதற்குள் பெரிய சத்தத்துடன் அவன் கீழே விழுந்து சிதறினான்.

********************************************

மேல் தளத்தில் அந்த மனைவியும் , ” மன நோய் “ கணவனும் புன்னகைத்து கொண்டனர். அவன் கைகள் மருத்துவ கவன குறைவால் இறந்து போன த்ன் த்ங்கை போட்டாவை வருடின

**********************************************




Wednesday, May 29, 2013

எதிர்கால மனிதன் நிகழ்காலத்திற்கு வந்தபோது ....


" காலேஜ்ல நாம ரெண்டு பேரும்தான் டாப் ராங்க் ஸ்டூடன்சா இருந்தோம் . நாம கண்டிப்பா பெரிய கண்டுபிடிப்புகள் , பெரிய சாதனைகள் செய்வோம்னு எல்லோரும் நினைச்சாங்க. ஆனால் இந்த போர்ட்டபிள் அணுகுண்டு கண்டுபிடிச்சது பெரிய சாதனையா அல்லது தீமையானு புரியல “

புலம்பிய ராஜேஷை நட்பு கலந்த அனுதாபத்துடன் பார்த்தான் ஜேம்ஸ்.

” ஒரு தீப்பெட்டி சைஸ் பெட்டி. சரியான காம்பினேஷன்ல பட்டன்களை அழுத்தினால் , உலகமே அழிஞ்சுடும் , ஆளில்லாத விமானம் , ஏவுகணை எதுவுமே வேண்டாம். இருந்த இடத்தில் இருந்தே உலகத்தை அழிக்கலாம்.

கண்டிப்பா இது அறிவியல் சாதனை. ஆனால் இதனால் தீங்கு ஏற்படாது. உலகிலேயே மிக மிக புத்திசாலியான ,ஓர் ஐடியல் மனிதனால்தான் இந்த காம்பினேஷன்ல பட்டன்களை அழுத்த முடியும். ஆனால் அப்படி ஒரு மனிதனின் இருப்பு சாத்தியமில்லை. அதனால் பயம் வேண்டாம்”


ராஜேஷுக்கு நம்பிக்கை வரவில்லை.

” அதெப்படி சொல்ற. நீ சொல்லும் புத்திசாலி இப்ப இல்லாம இருக்கலாம். ஆனால் வரும் காலங்களில் அப்படி ஒரு புத்திசாலி தோன்றலாமே “

ஜேம்ஸ் சிரித்தான்.

“ கண்டிப்பா பரிணாம வளர்ச்சியில் அப்படி ஒரு மனிதன் தோன்றலாம்தான். ஆனால் அப்படி ஒரு மனிதன் தோன்றுவதற்கு...”

தன் கணினியை உற்று பார்த்தான், அவன் எண்ணம் அறிந்து கணினி இயங்கியது. ஸ்க்ரீனில் தெரிந்த தகவலை பார்த்து சொன்னான்.

 “ ..... இன்னும் 127 ஆண்டுகள் , 7 மாதங்கள் ஆகும். அதற்குள் இதற்கு மாற்று , எதிர் ஆயுதங்கள் எல்லாம் வந்து விடும். சோ , டோண்ட் வொர்ரி “

“ அப்பாடா “ பெரு மூச்சு விட்டான் ராஜேஷ்..

“ அவசரப்பட்டு பெருமூச்சு விடாதே. நான் இன்னொரு அபாயம் குறித்து கவலைப்படுறேன் “

கவலையுடன் சொன்ன ஜேம்ஸ் முகத்தை என்ன என்பது போல பார்த்தான் ராஜேஷ்.

“ ஒரு வேளை அந்த எதிர்கால புத்திசாலி மனிதன் , தன் புத்தி சாலித்தனத்தால் நிகழ் காலத்துக்கு வந்தால் , நமக்கு பிரச்சினைதான் “

உச்சகட்ட புத்திசாலித்தனத்துடன் ஒருவன் இருக்க முடிந்தால் , அவனால் காலம் கடந்து வர முடிவது சாத்தியம்தானே.

கவலையுடன் ஜேம்சை பார்த்து ராஜேஷ் கேட்டான்.

“ ஆராய்ச்சியின் முடிவை , அந்த ஆராய்ச்சியே தீர்மானிக்கிறது என ஒரு தியரி உண்டு. அதாவது தன் இயல்புபடி இயங்கி கொண்டு இருக்கும் நுண் பொருட்கள் , அதை ஆராயும்போது கொஞ்சம் விசித்திரமாக இயங்க தொடங்குகின்றன, எனவேதான் முழு உண்மையை கண்டுபிடிக்க முடியாமல் போய்க்கொண்டு இருக்கிறது.

ஆராய்ச்சி கருவிகள் , ஆராய்ச்சி செய்பவர்கள் நோக்கம் , ஆராய்ச்சி நடக்கும் கால கட்டம் -இதெல்லாம் கூட ஆராய்ச்சி முடிவை மாற்ற கூடும்.

எதிர்கால மனிதர்கள் பற்றிய ஆராய்ச்சி இது வரை வெற்றி பெறாததற்கு காரணம் இதுதான். அந்த ஆராய்ச்சி வெற்றி பெற வேண்டிய தேவை இது வரை இல்லாமல் இருந்தது.

ஆனால் நமது இந்த அணுகுண்டு கண்டுபிடிப்பு , எதிர்கால மனிதனுக்கு ஒரு தேவையை உருவாக்கி அவனை வர செய்து விட வாய்ப்பு இருக்கிறதா ? “


ஜேம்ஸ் முகத்தில் மெல்ல கவலை ரேகைகள் படர்ந்தன.


” நீ சொல்வது ஓரளவு உண்மைதான். ஒன்றை புரிந்து கொள். அவன் நம் கண் முன் தோன்றினால் பயந்து விடாதே.. அவன் இருப்பு என்பது ஹைப்போதீசிஸ் போலத்தான்.. அதாவது ஒரு சாத்தியம்தான் நம் கண் முன் தெரியும்.

அதை அலசி ஆராய்ந்தால் அதில் இருந்து விடுபட்டு விடலாம்.. பீதி அடைந்து விடாதே”

அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே , வெளியில் யாரோ வந்திருப்பது சென்சார்கள் மூலம் தெரிந்தது. உள்ளே வர அனுமதி கேட்டு அவன் உணர்வு அலைகளை அனுப்பினான்.

அனுமதி கிடைத்து உள்ளே வந்தான்.

பார்ப்பதற்கு மிக வசீகரமாக இருந்தான். ஆரோக்கியமாக இருந்தான். குறிப்பாக புத்திசாலித்தனம்!! கண்கள் ஒளிவிட்டன.

” உங்க கண்டுபிடிப்பை கேள்விப்பட்டு வந்தேன். உண்மையில்யே இது அதிசயம்தான்... எங்கள் காலத்தில் , அதாவது 100 ஆண்டுகள் கழித்து கண்டுபிடிக்க வேண்டியதை, இப்போதே கண்டுபிடித்து விட்டீர்களே”

” ஓ...எதிர்கால மனிதன்”

இருவருக்கும் வியர்த்து போனது.

இல்லை..இது வெறும் கனவு..மாயத்தோற்றம் -  தைரியம் வரவழைக்க முயன்றனர்.

“ உங்க பேர் ? “

அவன் புன்னகைத்தான்.

” எதிர்காலத்தில் எந்த மொழி இருக்கும். எந்த நாட்டினன் இருப்பான், இந்த இனம் நீடிக்கும் என்ற சஸ்பென்சை நான் உடைக்க விரும்பவில்லை. பரிணாம வளர்ச்சியில் புத்திசாலித்தனம் , தீய உணர்வு எல்லாமே வளரும். அப்படி வளர்ந்த உச்ச நிலைதான் நான்.”

சொல்லிக்கொண்டே  தீப்பெட்டி அணுகுண்டை எடுத்தான்.

காம்பினேஷன் பட்டன்களை தட்ட தொடங்கினான்.

“ ஹேய் .. நிறுத்து “ அவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டான் ஜேம்ஸ்.

பல ஆண்டுகளுக்கு அப்பாற்பட்ட அவனை குண்டு தொட முடியவில்லை.

அவன் சிரித்தான்.

” இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து ஸ்பேஸ்- டைம் துப்பாக்கி கண்டுபிடுத்தார்கள்..அதை வைத்து வருங்கால மனிதனை கொன்று பயிற்சி எடுத்தார்கள்”

ராஜேஷ் முகம் ஒளிர்ந்தது..

” ஹேய் ,,இவன் சொல்வது தவறு...ஐம்பது ஆண்டுகள் கழித்து கண்டுபிடிப்பார்கள் என சொல்ல வேண்டும். ஐம்பது ஆண்டுகள் கழித்து கண்டுபிடித்தார்கள் என எப்படி சொல்ல முடியும் ? “

அவன் எதையும் கண்டுகொள்ளாமல் , பட்டனை அழுத்தி கொண்டு இருந்தான்.

“ சரியாத்தான் சொல்றான், நமக்குதான் ஐம்பது ஆண்டுகள் கழித்து என்பது எதிர்காலம் .. இவன் நூறு ஆண்டுகள் கழித்து பிறந்தவன். அவனுக்கு ஐம்பது ஆண்டுகள் என்பது இறந்த காலம்தான் “  ஜேம்ஸ் அலுப்புடன் சொன்னான்.

இன்னும் இரண்டு பட்டன்கள்தான். அது வெடித்து விடும்.

“ ஹேய்....   இதை எப்படி கவனிக்காமல் போனோம். இவன் அந்த கடைசி பட்டனை அழுத்தினால் உலகம் அழிந்து விடும். அதன் பின் இவன் எப்படி நூறு ஆண்டுகள் கழித்து பிறக்க முடியும். ஆக இவன் இருப்பு என்பதே பாரடக்ஸ் தானே”

ராஜேஷ் அலறினான்.

“ அட ..ஆமா.. லாஜிக்கலான கேள்விதான் “

ஜேம்ஸ் பெருமூச்சு விட்டான்.

அந்த எதிர்கால மனிதன் ஒரு கனவு போல மறைந்தான்.

“ ம்ம்ம்.. எதிர்கால மனிதன் என்பது ஒரு தவறான முன் யூகம் “ சிரித்த ராஜேஷ் ,” சரி வா...ஃப்ரெஷா கொஞ்சம் ஆக்சிஜன் அடிச்சுட்டு வரலாம்” என்றான்.

இருவரும் ஆக்சிஜன் பாட்டிலை எடுத்து கொஞ்சம் உறிஞ்சினார்கள்.

மூளை முன்பை விட நன்றாக யோசித்தது.

“ சரி.. லாஜிக் என்பதே  இருப்பு சார்ந்ததுதானே.. நாம் இல்லாவிட்டால் லாஜிக் ஏது ..  இல்லாமையில் இருந்து இருப்பு தோன்ற முடியாது என்பது லாஜிக்..ஆனால் நாமெல்லாம் தோன்றுவதற்கு முன்பு , ஒரு லாஜிக் மீறலில்தான் உலகம் தோன்றி இருக்கிறது.

நாம் இருப்பதற்கு முன்பும் லாஜிக் இல்லை.. நாம் இல்லாமல் போன பின்னும் லாஜிக் இல்லை.

எனவே வருங்கால மனிதன் வந்து உலகை அழிப்பது லாஜிக் மீறல்தான் என்றாலும் , சாத்தியமான ஒன்றா”

ராஜேஷ் கேட்க, ஜேம்ஸ் சற்று குழம்பினான்.

“ இதில் குழப்பம் என்ன இருக்கு, இந்த லாஜிக் மீறல் லாஜிக்கலாத்தானே இருக்கு “

எதிர்கால மனிதன் அவனுக்கே உரிய புன்னகையுடன அந்த அறையில்தான் அவ்வளவு நேரம் இருந்தது போல , அவர்களை பார்த்தான்.

மெதுவாக கடைசி பட்டனை அழுத்தினான்

************************************************************************



Saturday, May 18, 2013

இறந்தவர்களிடம் பண மோசடி ( அறிவியல் புனைவு )


 கண்டிப்பாக அவன் ஏதோ ஃபிராடு செய்கிறான் என புரிந்தது. ஆனால் என்னவென்றுதான் புரியவில்லை.

கணேசன் எனக்கு பள்ளிகாலத்தில் இருந்தே பழக்கம்.  நான்கூட அவ்வப்போது லீவு எடுப்பேன். ஆனால் அவனோ ஒரு நாள் கூட லீவு எடுக்கவே மாட்டான். அந்த அளவுக்கு படிப்பில் ஆர்வம் என அவசரப்பட்டு முடிவு செய்து விடாதீர்கள். லீவு எடுக்காமல் வந்து விடுவானே தவிர வகுப்பறைக்குள் வர மாட்டான். கால்பந்து மைதானம் அருகே ஒரு புளிய மரம் இருக்கும். அங்கே அமர்ந்து சினிமா பத்திரிக்கைகளையோ , சீன் படங்களையோ பார்த்து கொண்டு இருப்பான்.

அப்போதெல்லாம் இண்டர்னெட் கிடையாது. எனவே யாருக்கும் கிடைக்காத சீன் படங்கள் அவனிடம் இருப்பது அபூர்வமானதாக கருதப்பட்டது. மிகவும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் அதை காட்டுவான். விலைக்கும் விற்று வந்தான். அந்த வகையில் அந்த வயதிலேயே சம்பாதிக்க ஆரம்பித்து விட்டான்.

காசின் அருமை அப்போதே அவனுக்கு புரிந்து விட்டது, சம்பாதிக்கும் லாகவமும் கை வந்து விட்டது.

ஆனால் ஆசிரியர்கள் அவனை அவ்வளவாக கண்டிப்பதில்லை. கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் வாங்கி விடுவான்.

எனவேதான் நன்றாக படிக்க கூடிய எனக்கு பி ஏ தமிழ் பிரிவு கிடைத்தது அவனுக்கோ ஆர் ஈ சீயில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் கிடைத்தது.

    இதில் கொடுமை என்னவென்றால் நான் பி ஏ படித்தாலும் ஒரு வொர்க் ஷாப்பில் வேலைக்கு சேர்ந்து படிப்படியாக இயந்திரவியலில் பல நுணுக்கங்களை கற்று , பொறியியல் துறையில் செட்டில் ஆகி விட்டேன்.

அவனோ பொறியியல் துறையில் பட்டம் பெற்றாலும் அந்த துறை தவிர மற்ற துறைகளில்தான் ஆர்வம் காட்டி வந்தான்.

ஒரு நாள் ஓர் ஆர்டர் விஷ்யமாக சென்னை வந்தபோது, மூர் மார்கெட்டுக்கு வழி கேட்டு கொண்டு இருந்தேன். பென்ஸ் கார் ஒன்று நின்று கொண்டு இருந்தது, அருகில் சென்றேன்..

“ சார்..இங்கே மூர் மார்க்கெட் பக்க்கதில், கெஜேஃப் எஞ்னினியரிங் எங்கே இரு..” கேட்ட்கும்போதே முகத்தை பார்த்து விட்டேன்.

அட.. நம்ம கணேஷ்,.

“ “டேய்...கணேஷ்... நீயா ,,, நல்லா இருக்கியா?”

அவனுக்கும் என்னை தெரிந்து விட்டது.

“ அட ... நீயா.... வாடா வா... பார்த்து எத்தனை நாள் ஆச்சு... ம்ம்...காரில் ஏறு “

அழைத்து கொண்டு பெசண்ட் நகரில் இருக்கும் அவன் வீடு நோக்கி காரை பறக்க விட்டான்.

“ மச்சான்.. ஹார்ட் வொர்க்  , ஸ்மார்ட் வொர்க் என இரண்டு இருக்கு,,, நான் அந்த காலத்தில் இருந்தே , ஸ்மார்ட் வொர்க்கைத்தான் நம்புறேன்.. பாரு.. இந்த மாதிரி என்னிடம் நாலு காரு இருக்கு. சொந்தமா மூணு வீடு இருக்கு. எல்லாம் மூளைடா.. “ சிரித்தான்.

அவன் என்ன தொழில் செய்கிறான் என யூகிக்க முடியவில்லை.. ஏதோ தப்பான வழி என புரிந்தது. ஆனால் என்னவாக இருக்கும் என புரியவில்லை. சீட்டு , காந்த படுக்கை , பிரமிடு போன்று லோக்கலாக இறங்கும் ஆளும் இல்லையே.

என்னை பார்த்து புன்னகைத்தான்.

” ஆசை கண்களை மறைக்கும்,இந்த கான்சப்டை மட்டும் மனதில் வச்சுக்கிட்டா, எப்படி வேணும்னாலும் சம்பாதிக்கலாம்டா.. :

“ டேய்..மத்தவங்க ஆசையை பயன்படுத்தி ஏமாத்துறது தப்பு,,, என்னிக்கு இருந்தாலும் மாட்டிக்குவ”

மறுபடி சிரித்தான்.

“ தம்பி... நான் ஏமாத்துறது ஏற்கனவே இறந்து போனவங்களை... அவங்க எப்படி என்னை மாட்ட வைக்க முடியும்??”

” என்னடா சொல்ற” அதிர்ச்சி அடைந்தேன்.

“ம்ம்.... அட்வான்ஸ்டு அறிவியல் எப்படி கைகொடுக்குதுனு உனக்கு மட்டும் நேரடியா காட்டுறேன்...  நீயே பாரு.. இதை வேறு யாரிடமும் சொன்னதில்லை... உனக்கு சொன்னாலும் நீ இதே போல செய்ய மாட்டேனு எனக்கு தெரியும்.,உனக்கு தைரியம் பத்தாது..  என்னை காட்டி கொடுக்கவும் முடியாது,, ஏனா இதை யாரும் நம்ப மாட்டாங்க..உள்ளே வா”

அறைக்குள் அழைத்து சென்றான்..

விதவிதமான வித்தியாசமான கருவிகள்..  கெமிக்கல் வாசனை. அமிலம் ஒன்று ஆவேசமான மணம் வீசிக்கொண்டு இருந்தது.

“ இதோ பார்..இதுதான் டை மெஷின்...இதன் மூலம் கடந்த காலத்துக்கு மெசேஜ் அனுப்பலாம்..   அந்த கால மனிதர்களுக்கு கனவு மூலம் இந்த மெசேஜ் கிடைத்து , சிலர் நேரில் வரக்கூடும். அவர்களுடன் நான் வியாபாரம் செய்வேன். இதில் எனக்கு ஒரு போதும் நஷ்டம் வராது. லாபம் மட்டுமே வரும்.. எப்படி என நீயே பார்ப்பாய்.. வெயிட் “ என்றான்.

“ என்ன வியாபாரம் ? “

“ என்றுமே டிமாண்ட் இருக்கும் ஒரே வியாபாரம் ஆயுத வியாபாரம்..  இப்ப பாரு..  நவீன ஆயுதம் விற்பனைக்கு அப்படீனு ராஜராஜ சோழன் காலத்துக்கு மெசேஜ் அனுப்புறேன்.  விளைவுகளை பாரு.”


என்னவோ டைப் செய்தான்.. மானிட்டரை அட்ஜஸ்ட் செய்து டெஸ்டினேஷன் காலம் என்பதை நிரப்பினான். message sent  என மானிட்டர் அறிவித்தது.

கொஞ்ச நேரம் ஏதும் நிகழவில்லை.. எதிர்பார்ப்புடன் காத்து இருந்தேன்.

கதவு தட்ட்டப்பட்டது.

’திறந்துதான் இருக்கு..வாங்க”

உள்ளே ஒருவர் நுழைந்தார்.

பழைய காலத்து ஆள் போல இருந்தார். வேட்டி அணிந்து இருந்தார். உடலில் ஒரு துண்டை சுற்றி இருந்தார்.

“ என் பேர் பரமேஸ்வரன்..சோழர் ஆட்சியை கவிழ்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்..  ஆயுதங்கள் கிடைப்பதாக கேள்வியுற்றோம்”

கணேஷ் ஒரு துப்பாக்கியை காட்டினான்.

“ இதன் பெயர் துப்பாக்கி. இதில் குண்டுகளை நிரப்பி எதிரிகளை சுடலாம். வில் , அம்பு போன்றவற்றை விட சக்தி வாய்ந்தது.

சட் என அங்கிருந்த கண்ணாடி குடுவையை சுட்டான். உடைந்து சிதறியது.

பரமேஸ்வரன் ஆச்சர்யமாக பார்த்தார்.

“ இதன் விலை ? “

கணேஷ் மர்மமாக புன்னகைத்தான்.

“இதற்கு எவ்வளவு விலை கொடுத்தாலும் தகும்.  இதை வைத்து நீங்களே புதிய கருவிகளை உருவாக்க முடியும், உங்களை யாராலும் வீழ்த்த முடியாது.. ஆயிரன் பொற்காசுகள் “

பரமேஸ்வரன் அதிர்ந்தார். “ஆயிரம் சற்று அதிகம் அல்லவா?”

”பேரம் பேச நேரம் இல்லை.. உங்கள் காலத்துக்கு விரைவில் சென்றாக வேண்டும்.. நீண்ட நேரம் இருக்க முடியாது “

முடிவு எடுத்து ஆயிரம் பொற்காசுகளை மேஜையில் வைத்தார்.

அவர் கையில் துப்பாக்கி வைக்கப்பட்டது.

கொஞ்சம் கொஞ்சமாக அவர் மறைய தொடங்கினார்.

அவர் உடைவாள், ஆடை, குடுமி , உடல் என மறைய தொடங்கியது.

ஆனால் துப்பாக்கி மறையவில்லை.

தொப் என தரையில் விழுந்தது.

கணேஷ் அதை எடுத்து பத்திரப்படுத்தினான்.

“ நான் சொன்னேனே,,,ஆசை கண்ணை மறைக்கும் என...அதுதான் இது.... கடந்த கால பொருட்களை நிகழ் காலத்தில் பயன்படுத்த முடியும்.. ஆனாலும் ஒரு போதும் எதிர்கால பொருட்களை நிகழ் காலத்தில் பயன்படுத்த முடியாது...  இது தெரியாமல் பலர் ஏமாறுகிறார்கள்.

இப்படி பல அரசர்கள், ராபர்ட் கிளைவ் போன்றவர்களை ஏமாற்றித்தான் இவ்வளவு சொத்து சேர்த்தேன்..ரிஸ்க் இல்லாத தொழில் “ சிரித்தான்.

சரி..போதும் என முடிவு செய்து கிளம்ப ஆயத்தமானேன்,\

மீண்டும் கதவு தட்டப்பட்டது.

உள்ளே வந்தவர் பரமேஸ்வரன் காலகட்ட ஆள் போலவே இருந்தார். என் பெயர் ரவிதாசன் என்றார்.


**********************************************

கணேஷை பேய் அடித்து கொன்று விட்டதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் பேசி கொண்டார்கள்.  ஹார்ட் அட்டாக் என போலீஸ் கேசை முடித்தது.
ஆனால் ஆசை கண்ணை மறைக்கும் என்ற கணேசின் கான்சப்ட் அவனுக்கே எமன் ஆனது எனக்கு மட்டுமே தெரியும்.

இப்போதைய பொருட்களை கடந்த காலத்துக்கு எடுத்து செல்ல முடியாது... ஆனால் கடந்த கால பொருட்களை இப்போது பயன்படுத்தலாம் எனற அவனது புரிதல் சரிதான்.

ஆனால் அவன் ஒன்றை புரிந்து கொள்ளவில்லை.

பிரச்சினை வந்தால் , கடந்த கால ஆட்களை நாம் கொல்ல முடியாது., ஏனென்றால் அது பாரடக்ஸ். கடந்த கால ஆளான நம் தாத்தாவை நாம் கொன்று விட முடிந்தால் , நாம் எப்படி பிறந்து இருக்க முடியும். கடந்த காலத்தில் கொலை என்பது paradox.

ஆனால் கடந்த காலத்தின் விளைவுகளால் நாம் இறப்பது என்பது இயல்பானது.

 நவீன ரக ஆயுதங்கள் யாவும் ரவிதாசன் முன் பயனற்று போய் , ஆயுதம் ஏதும் இன்றி வெறும் கைகளால் ரவிதாசன் கணேஷை கொன்றதை நான் சொன்னால் யார் நம்ப போகிறார்கள்?
:

Thursday, May 16, 2013

அறிவியல் ரீதியாக நூதன குற்றம் செய்யும் பதிவர்- சட்டம் என்ன செய்ய போகிறது ?



அன்புள்ள பதிவர் அறிவியல் வெறியனுக்கு..

உங்களுடைய சமீபத்திய இடுகையான “ டைம் டிராவல் “ சாத்தியமா என்ற கட்டுரை படித்தேன்.   அருமை..

ஸ்பேஸ் போன்றதே காலம் என்பதையும் , ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு எப்படி வேண்டுமானாலும் எந்த திசையிலும் செல்லலாம். அதே போல காலத்திலும் எந்த திசையிலும் செல்ல முடியும். அதாவது 2010 ல் இருந்து 2020 க்கு செல்வதை போல 2020ல் இருந்து , 2010க்கும் செல்ல முடியும். 1947க்கு வேண்டுமானாலும் கூட செல்ல முடியும் என்பதை அறிவியல் பூர்வமாக சொல்லி இருந்தீர்கள். சூப்பர் என வியந்தேன்.

ஆனால் இதே தலைப்பில் ஒரு கட்டுரையை , வரிக்கு வரி இதே போல , 2013ஆம் ஆண்டிலேயே , பிச்சைக்காரன் என்ற பதிவர் கட்டுரை எழுதியாக கேள்விப்பட்டு வருத்தப்பட்டேன்.

இந்த பிழைப்புக்கு... சே..

வெறுப்புடன்,
 நிர்மல்
15.05.2090

அன்புள்ள நிர்மல்.

உங்கள் பாராட்டில் மகிழ்ந்தேன், திடீரென கடைசியில் கவிழ்த்து விட்டீர்களே... ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். நான் வலைப்பதிவுகள் எதுவும் படித்ததில்லை. பிச்சைக்காரன் என்ற பெயரை கேள்விப்பட்டது கூட இல்லை.

உங்கள்க்கு யாரோ தவறான தகவல் கொடுத்து இருக்கிறார்கள்.

அன்புடன்,
அறிவியல் வெறியன்
17.05.2090

நண்பருக்கு,

எனக்கு தகவல் தந்தவர் அவர் குற்றச்சாட்டு உண்மைதான் என்கிறார். ஆனால் பிச்சைக்காரனின் பதிவுகள் ஏதும் இணையத்தில் கிடைக்கவில்லை. ஒரு அச்சில் இருக்கிறதா என தெரியவில்லை. எதற்கும் தேடிப்பாருங்கள். அவர் கட்டுரைக்கும் , உங்கள் கட்டுரைக்கும் இருக்கும் வேறுபாட்டை சுட்டிக்காட்டி , உங்கள் நேர்மையை உலகுக்கு உணர்த்துங்கள்.

அன்புடன்,

நிர்மல்
20.05.2090

நிர்மல்,

கதைகள் , கவிதைகள் என சொந்தமாக எழுதி வருகிறேன். ஒரு போதும் காப்பி அடித்ததில்லை. ஆனால் அறிவியல் கட்டுரைகள் எழுதும்போது மட்டும் , பிச்சைகாரன் கட்டுரை போல இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். யார் அந்த பிச்சைகாரன் என நானும் தேடிப்பார்த்து விட்டேன், அவர் கட்டுரைகள் ஏதும் கிடைக்கவில்லை.

ஒரு வேளை உங்களுக்கு கிடைத்தால் சொல்லுங்கள். எவ்வளவு காசு கொடுத்தாலும் வாங்கி கொள்கிறேன். ஒரு வேளை பிச்சைக்காரனின் ஆவி என் மேல் புகுந்து எழுதிகிறதோ என ஐயுறுகிறேன். பயமாக இருக்கிறது.

அன்புடன்,
அறிவியல் வெறியன்

23.05.2090

நண்பரே.

ஒரு நல்ல மன நல மருத்துவரை சென்று பாருங்கள்.

அன்புடன் ,

நிர்மல்.

25.05.2090


மரியாதைக்குரிய இந்திய அறிவியல் கழக தலைவருக்கு,

வணக்கம்,

ஸ்பேஸ் , டைம் குறித்த பார்வைகள் வெகுவாக மாறி இருப்பதை அறிவீர்கள். டைம் என்பதை ஸ்பேஸ் போலவே கருத முடியும் என்பதை பல ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன, இறந்த காலத்தில் இருந்து , நிகழ் காலத்துக்கோ. அல்லது எதிர்காலத்தில் இருந்து நிகழ் காலத்துக்க்கோ பயணம் செல்ல முடியும் என்பது ஆய்வு நிலையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இதை நேரடியாக உணர்கிறேன்.
2013ல் வாழ்ந்த பிச்சைக்காரன் என்பவர் , டைம் டிராவல் மூலம் என் வீட்டுக்கு வருகிறார் என நினைக்கிறேன். அப்படி வந்து , நான் என்ன எழுதுவது என்பதை அவரே முடிவு செய்கிறார். இதனால் என் பெயர் கெடுகிறது.

அனுமதி இல்லாமல் என் இடத்துக்கு வருவது எப்படி குற்றமோ அதே போல அனுமதி இல்லாமல் என் நேரத்துக்கு வருவதும் குற்றம்தானே..

இதற்கேற்ப சட்டம் கொண்டு வர அறிவியல் துறை ஆவன் செய்யுமா?

இத்துடன் , என் முழு கடித தொடர்புகளை இணைத்துள்ளேன்.

அறிவியல் ரீதியாக நூதன குற்றம் செய்யும் பதிவர்- சட்டம் என்ன செய்ய போகிறது என என் கடித தொடர்புகளுக்கு பெயர் சூட்டி இருக்கிறேன்

அன்புடன்.
அறிவியல் வெறியன்

27.05.2090


நண்பரே..

எங்கள் நேரத்தே வீணடிக்காதீர்கள்.

2013ல் பிச்சைக்காரன் எழுதிய ஒரு சிறுகதையை எங்களுக்கு அப்படியே அனுப்பி இருக்கிறீர்கள்..எங்களை முட்டாள் என நினைக்க வேண்டாம். இப்படி செய்தால் உங்கள் மேல்தான் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.

 நீங்கள் சொல்வது எதுவும் உண்மை சம்பவங்கள் அல்ல. 2013ல் பிச்சைக்காரன் எழுதிய ஒரு கதை.. அந்த கதை உங்கள் பார்வைக்கு...

பிச்சைக்காரன்: அறிவியல் ரீதியாக நூதன குற்றம் செய்யும் பதிவர்- சட்டம் என்ன செய்ய போகிறது ?

உங்கள் சேவையில்,

இந்திய அறிவியல் கழகம்

30.05.2090

Sunday, August 12, 2012

உலக புகழ் பெற்ற ரஷ்ய சிறுகதை - குதிரை வண்டி

சில கதைகள் காலத்தை வென்று நிலைத்து நிற்கும் . அப்படிப்பட்ட ஒரு கதைதான் இது. சிறுகதை மன்னன் செக்கோவ் இதைப் பற்றி மிகவும் பாராட்டி எழுதி இருக்கிறார். இந்த கதை அன்றைய ரஷ்யாவை பிரதிபலித்தாலும் , இன்றும் பொருந்த கூடிய கதை.
படித்து பாருங்கள். வலைப்பதிவுகளில் பெரிய இடுகைகளை படிக்க முடியாது என்ற ய்தார்த்தம் அறிந்து சற்று சுருக்கி இருக்கிறேன்.


குதிரை வண்டி - நிக்கோலாய் வசிலெயெவிச் கோகோல் 
*******************************************
ராணுவ அலுவலகம் அமைக்கப்பட்டதில் இருந்து அந்த ஊர் உயிர் துடிப்பு மிக்கதாகிவிட்டது. அதுவரை சோம்பலான , சலிப்பூட்டும் ஊராக அது இருந்து வந்தது. அந்த ஊர் வழியாக பயணம் செய்ய நேரிட்டால் , அழுது வடிந்து கொண்டு இருக்கும் சிறிய வீடுகளை காணும்போது , உங்களுக்கு ஏற்படும் உணர்வுகளை எழுத நினைத்தால்கூட எழுத முடியாது. உங்கள் பணம் அனைத்தையும் இழந்து விட்டாலோ அல்லது உங்கள் நிறுவனத்தில் பெரிய தவறு ஒன்றை செய்து விட்டாலோ ஏற்படுவது போன்ற ஒரு சங்கடமான மன நிலைதான் உண்டாகும். 

               தென் ரஷ்ய நகரங்களில் வழக்கமாக செய்வது போல , மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு இருந்தன. யாரும் யாரையும் சந்தித்து கொள்வதில்லை. லேசாக ஒரு தூறல் விழுந்தால் போதும் . சாலை முழுதும் சகதியாகிவிடும். தப்பித்தவறி அந்த ஊர் வழியாக பயணம் செய்யும் பயணிகள் , எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த ஊரை கடந்து செல்ல , தம் குதிரைகளை துரிதப்படுதுவார்கள். 
      ஆனால் குதிரைப்படை அலுவலக்ம் அங்கு அமைக்கப்பட்டவுடன் , எல்லாமே மாறிவிட்டது. தெருக்கள் உயிர் பெற்று , புதிதாக தோற்றம் அளித்தன. ராணுவ அதிகாரிகள் கம்பீரமாக சாலைகளில் செல்வதை, அந்த ஊர் வாசிகள் தம் சிறிய வீடிகளில் இருந்து பார்த்து ரசிப்பது அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. அந்த அதிகாரிகளும் , அவர்கள் செல்லும் வண்டிகளும் , ஆடைகளும் நகரவாசிகளுக்கு நல்ல பொழுது போக்காக இருந்தது. 
                         
படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் தனது இல்லத்தை அங்கே மாற்றி கொண்டவுடன், அந்த ஊரின் உயிர்த்துடிப்பு மேலும் அதிகரித்தது. அதுவரை இருக்கும் இடம் தெரியாமல் வாழ்ந்து வந்த அண்டை ஊர் காரர்கள் எல்லாம் அதிகாரிகளை சந்திக்கும் பொருட்டும் , விருந்துகளுக்காவும் அந்த ஊருக்கு வர தொடங்கினர். 

   ஒரு சுபமுகூர்த்த நாளில் ஏதோ ஒரு காரணத்தால் ஒரு பிரமாண்டமான விருந்துக்கு அழைப்பு விடுவித்து விட்டார் ஜெனரல். அதற்கான ஏற்பாடுகள் பிரமிக்க வைத்தன. சமையலறை கத்திகள் எழுப்பும் ஓசை வெகு தொலைவு வரை கேட்டு கொண்டு இருந்தது. ஜெனரலின் வீட்டு முற்றம் முழுதும் விருந்தினர்களின் வாகனங்களால் நிரம்பி இருந்தது. அதிகாரிகள், கனவான்கள்   மற்ற ஆடவர்கள் வந்து இருந்தனர். அவர்களில் முக்கியமாவர் பித்தாகரஸ் பித்தாகொரோவிச் செர்டோகவுட்ஸ்கி என்ற  நிலக்கிழார்தான். பேச்சு வன்மை மிக்க அவன் , அந்த மாவட்டத்தில் முக்கியமான ஒருவன்.  குதிரைப்படை பிரிவில் சேவை ஆற்றியவர் அவன். விருந்துகளில் தவறாமல் கலந்து கொள்வான். அவர் செல்வாக்கு மற்ற மாவட்டங்களுக்கும் பரவும் வாய்ப்பு இருந்தது. ஆனால் சில “அசம்பாவித “ சம்பவங்களால் அவன் சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டான். தவறு அவன் மீதா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் அவன் செல்வாக்கு இதனால் பாதிக்கப்படவில்லை என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.

அவன் எப்போதுமே மிடுக்கான ராணுவ அங்கியைத்தான் அணிவான் அழகான ஒரு பெண்ணை மணந்து இருந்தான். வரதட்சணையாக கணிசமான பணம் கிடைத்து இருந்தது. இந்த பணத்தில் சில குதிரைகள் வாங்கி இருந்தான். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அவன் ஓர் உயர் குடிமகனாக காட்சி அளித்தான். அவனைத்தவிர மற்ற விருந்தினர்களைப் பற்றி சொல்வதற்கு ஏதும் இல்லை. பெரும்பாலும் அதிகாரிகள்தான் வந்து இருந்தனர். ஜெனரல் சற்று பருத்த மனிதர்தான். ஆனால் அவர் நல்லவர் என்றே அவர் ஊழியர்கள் சொன்னார்கள். அவர் குரல் கணீர் என இருக்கும்.

விருந்து அற்புதமாக இருந்தது.  பல தரப்பட்ட உணவுகள் . விருந்துக்காக பல மணி நேரங்கள் செலவிடப்பட்ட உழைப்பு விருந்தின் சுவையில் தெரிந்தது. அருமையான கோடைக்காலம் , நன்றாக திறந்து விடப்பட்டு இருந்த சாளரங்கள் , மேஜையில் ஐஸ் கட்டிகளால் நிரப்பப்பட்டு இருந்த தட்டுகள் , சூடான சுவையான உரையாடல்கள் , ஜெனரலின் சத்தமான குரல், ஷாம்பெய்ன் என எல்லாம் கச்சிதமான ஒத்திசைவில் இருந்தன. விருந்தினர்கள் திருப்தியுடன் சாப்பிட்டு எழுந்தனர். சுருட்டை பற்ற வைத்தபடி , காஃபி கோப்பைகளுடன் வெளியே வந்தனர்.

இப்போது அவளை பார்க்க இருக்கிறோம் “ என்றார் ஜெனரல்.  “இதோ , என் அன்புக்குரிய இவர் “  தன் ஊழியரான இளம் அலுவலரை சுட்டிக் காட்டினார் “ அந்த குதிரையை அழைத்து வருவார். கனவான்களே , நீங்களே பாருங்கள் “ என்றார். 

    சுருட்டு புகையை ஆழமாக இழுத்தபடி இந்த வார்த்தைகளை சொன்னார். சுருட்டு புகை மேகம் போல அவரை சூழ்ந்து இருந்தது. 
அந்த குதிரையின் பெயர் அக்ரஃபெனா இவனோவ்னா. வலிமையாகவும் , தைரியமாகவும் காட்சி அளித்தது. ஜெனரல் அதை திருப்தியுடன் பார்வையிட்டார். மற்றவர்கள் அதை ஆசையுடன் தொட்டுப்பார்த்தனர். சிலர் அதன் அழகை தொலைவில் இருந்தே ரசித்தனர்.

.செர்டோகவுட்ஸ்கி அந்த குதிரையின் அருகே சென்றான்.  “ இவள் மிக மிக நன்றாக இருக்கிறாள் “ என்றார் செர்டோகவுட்ஸ்கி ., “  நல்ல வடிவமைப்பில் இருக்கிறாள். இவள் எப்படி நடந்து கொள்கிறாள் என கேட்க மேதைகையீர் அனுமதிப்பீர்களா ? “  

       “ மிக நன்றாக இருக்கிறாள். ஆனால் அந்த முட்டாள் மருத்துவன் சில தவறான மருந்துகள் கொடுத்து விட்டான். அத்னால் இரண்டு நாட்கள் கொஞ்சம் பிரச்சினை.அவ்வளவுதான் ” 


     “ இவள் அருமையானவள். மிக அருமையானவள்.   இவளை பூட்ட்டுவதற்கான வண்டி மேதைகையீரிடம் இருக்கிறதா ?
 “  இவளை வண்டியில் பூட்ட முடியாது. இவள் சவாரி குதிரை “


” எனக்கு தெரியும். நான் கேட்டது , மேதைகையீர், மற்ற குதிரைகளுக்கு ஏற்ற குதிரை வண்டிகள் உங்களிடம் இருக்கிறதா ?”

          ” இல்லை. அப்படிப்பட்ட வண்டிகள் என்னிடம் இல்லை. ஆனால் ஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும். கொஞ்ச நாட்களுக்கு முன் , தற்போதைய பாணியில் , குதிரை வண்டி ஒன்று வாங்க விரும்பினேன். பீட்டர்ஸ்பர்க்கில் வசிக்கும் என் சகோதரனுக்கு இதைப் பற்றி எழுதினேன். ஆனால் அவனால் வாங்கி அனுப்ப முடியுமா என தெரியவில்லை”

   ” மேதகையீர். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் “ கர்னல் குறுக்கிட்டார் ” வியன்னாவில் செய்யப்படும் குதிரை வண்டிகளுக்கு நிகர் எதுவும் இல்லை “


    “ சரியாக சொன்னீர் “
“ என்னிடம் ஒரு அட்டகாசமான வியன்னா வண்டி இருக்கிறது., மேதகையீர் “ சொன்னான் செர்டோகவுட்ஸ்கி .

 “ அந்த வண்டியில்தான் இங்கு வந்தீர்களா ?

 “ இல்லை. அதை சில சந்தர்ப்பங்களில்தான் பயன்படுத்துவேன்.  மிக விசேஷமானது அது. இறகைபோல லேசாக இருக்கும். அதில் நீங்கள் அமர்ந்தால் , தொட்டிலில் இருப்பது போல உணர்வீர்கள் “ 

” அந்த அளவுக்கு வசதியானதா ? “

“ மிக மிக வசதியானது. இருக்கைகள் , சுருள் கம்பிகள் . என ஒவ்வொன்றும் கச்சிதமாக இருக்கும் “ 

” ஒஹோ ! அற்புதம் “

" அதில் என்னவெல்லாம் ஏற்றி செல்ல முடியும் தெரியுமா! மேதகையீர், இதைப் போன்ற ஒன்றை நான் ஒரு போதும் பார்த்ததில்லை. பத்து போத்தல்கள் ரம் , இருபது பவுண்ட் புகையிலை , ஆறு சீருடைகள் மற்றும் இரண்டு சுருட்டு பைப்புகள் , உள்ளதிலேயே நீளமான பைப்புகள் , மேதகையீர். இதில் ஏற்றலாம் “

 “ வெகு அருமை “ 

 “ இதன் விலை 4000 ரூபிள்கள், மேதகையீர் “

  “ கண்டிப்பாக இவ்வளவு விலைக்கு தகுதியானதுதான். நீங்களே வாங்கினீர்களா  ?

   “ இல்லை , மேதகையீர். தற்செயலாகத்தான் எனக்கு கிடைத்தது. என் பழைய நண்பன் வாங்கினான். அவனுடன் இருப்பது இன்பம் தருவதாக இருக்கும் , மேதகையீர்.  நாங்கள் நெருங்கிய நண்பர்கள். என்னுடையதெல்லாம் அவனுடையது.அவனுடையதெல்லாம் எனது. நாளை என் வீட்டிற்கு வந்து விருந்துண்டு மேதகையீர் என்ன கவுரவிப்பீர்களா? வந்தால் அந்த வண்டியை பார்க்கலாம் “
   
” என்ன சொல்வதென்று தெரியவில்லை. நான் தனியாக வர இயலாது. இந்த அலுவர்களையும் அழைத்து வர சம்மதீப்பீர்கள் என்றால்... “

” அவர்களும் வர வேண்டும் என கெஞ்சி கேட்டு கொள்கிறேன். கனவான்களே , உங்களை என் வீட்டில் பார்ப்பதை பெரிய கவுரவமாக எண்ணுவேன் “

கர்னல், மேஜர் மற்றும் மற்ற அலுவலர்கள் செர்டோகவுட்ஸ்கிக்கி நன்றி தெரிவித்தனர். 

   “ என்னுடைய கருத்து என்னவென்றால் , மேதகையீர் , ஒன்றை வாங்குகிறோம் என்றால் அது சிறப்பானதாக இருக்க வேண்டும். அது சிறப்பானதாக இல்லாவிட்டால் , அதை வாங்கும் முயற்சியே தேவை அற்றது.  நாளை என் வீட்டிற்கு வந்து என்னை கவுரவித்தால் , அதில் நான் செய்துள்ள வசதிகளை உங்களுக்கு காட்டுவேன் “

 புகையை ஊதியவாறு பார்வையிலேயே ஜெனரல் சம்மதித்தார். செர்டோகவுட்ஸ்கி மகிழ்ந்து போனான். என்ன உணவுகள் எல்லாம் ஏற்பாடு செய்து விருந்தினர்களை மகிழ்விக்க வேண்டும் என மனதிலேயே திட்டமிடத் தொடங்கினார். அந்த கனவான்களை நோக்கி புன்னகைத்தார். அவர் மீது அவர்கள் கவனம் அதிகரித்து இருப்பதை உணர்ந்தார். கண்களில் தெரிந்த உணர்ச்சிகளில் இருந்தும் , தலை அசைப்பில் இருந்தும் அவர்கள் கவனத்தை உணர முடிந்தது. திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. 


உடனடியாக வீட்டுக்கு சென்று விருந்து ஏற்பாடுகளை கவனிக்க நினைத்தான். தொப்பியை எடுத்து கொண்டு கிளம்ப ஆயத்தமானான். ஆனால் இன்னும் கொஞ்ச நேரம் ஜெனரலோடு இருக்கலாமே என ஏனோ தோன்றியது.

 சீட்டாட்டம் தொடங்கியது. தானும் கலந்து கொள்ளலாமா வேண்டாமா என குழம்பினான். ஆனால் சிலர் அவரை அழைத்தனர். அழைப்பை மறுப்பது நாகரிகமல்லவே. எனவே ஆட்டத்தில் அமர்ந்தான். எப்படியோ ஒரு மது கோப்பை அவன் கைக்கு வந்து சேர்ந்தது.  அதிகம் யோசிக்காமல் , அதை குடித்து முடித்தான். சில ஆட்டங்களுக்கு பிறகு இன்னொரு கோப்பையும் குடித்தான் அவர் வாய் முணுமுணுத்தது

 “  நான் சீக்கிரம் கிளம்ப வேண்டும் , நண்பர்களே “

  புதிய ஆட்டம் தொடங்கியது. உரையாடல்கள் சூடு பிடித்தன. ஒரு கேப்டன் சோஃபாவில் வசதியாக சாய்ந்து அமர்ந்தபடி, வாயில் சுருட்டு ஒன்றை புகைத்து கொண்டு , தன் வீரதீர பிரதாபங்களை சொல்லிக்கொண்டு இருந்தார். செர்டோகவுட்ஸ்கி அவ்வப்போது தான் இருந்த இடத்தில் இருந்தபடியே உரையாடல்களில் கலந்து கொண்டான். “ எந்த வருடம்? “ “ எந்த படைப்பிரிவில் ? “ என கேள்விகளை சம்பந்தமே இல்லாமல் எழுப்பினான். இரவு உணவுக்கு சற்று முன் சீட்டாட்டம் முடிந்தது. செர்டோகவுட்ஸ்கி ஏராளமாக வென்று இருந்தார். ஆனால் வெற்றி தொகையை எடுத்து கொள்ளவில்லை. 

. அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. ஒயினுக்கும் குறைவில்லைசெர்டோகவுட்ஸ்கியை சுற்றி போத்தல்கள் இருந்ததால் , விருப்பம் இல்லாம்லேயே தன் குடுவையை நிரப்பி கொண்டு இருந்தான். அதிகாலை மூன்று மணிக்கு அனைவரும் கிளம்பினர். வண்டிக்காரன் அவரை அவன் வீட்டில் விட்டு சென்றான். அவன் மனைவி வெள்ளை ஆடை அணிந்து தூங்கி கொண்டு இருந்தாள் . அவள் அருகில் சென்று படுத்தார். திடுக்கிட்டு கண் விழித்த அவள் ,  தன் கைகளை அவரை நோக்கி நீட்டினாள். ஆனால் அவளை கவனிக்கும் நிலையில் அவன் இல்லை என்பதை உணர்ந்து மீண்டும் உறக்கத்தை தொடர்ந்தாள். 

     அவள் மிகவும் தாமதமாகவே எழுந்தாள். தன் கணவன் பலமான குறட்டை சத்தத்துடன் தூங்கி கொண்டு இருப்பதை பார்த்தாள். நான்கு மணிக்குதான் அவன் வந்தான் என்பதை நினைவுக்கு வந்தது , எனவே அவனை எழுப்பாமல், முகம் கழுவ சென்றாள். கண்ணாடியில் தன்னை பார்த்த அவள் , இந்த காலையில் தான் மிக அழகாக இருப்பதாக நினைத்து கொண்டாள் . இந்த எண்ணம் தோன்றியதும் , கண்ணாடி முன் வழக்கத்தை விட அதிக நேரம் செலவழித்தாள். பின் அழகாக ஆடை அணிந்து கொண்டு தோட்டத்துக்கு சென்றாள்.

  சீதோஷ்ண நிலை அருமையாக இருந்தது. சூரியன் தன் இனிமையாக கதிர்களை வீசிக்கொண்டு இருந்தான். ஆனால் இனிமையான இதமான குளிரும் நிலவியது. சூரியனின் இதமான கதகதப்பினால் , மலர்கள் இனிமையான வாசம் வீசின. மதியம் ஆகி விட்டதையும் . தன் கணவன் இன்னும் தூங்குவதையும் அவள் கவனிக்கவில்லை.  தொலைவில் ஏதோ வண்டி சத்தம் கேட்டது. உற்று கவனித்தாள் . ஒன்றன் பின் ஒன்றாக பல வண்டிகள் வருவதை கவனித்தாள். ஒரு வண்டியில் ஜெனரலும் , கர்னலும் வந்து கொண்டு இருந்தனர். மேஜர் , கேப்டன் , அலுவலர்கள் என பலர் வந்து கொண்டு இருந்தனர். 

” அவர்கள் இங்கா வருகிறார்கள்?; அவள் எண்ணமிட்டாள் “ கடவுளே இங்குதான் வருகிறார்கள் “

இன்னும் தூங்கி கொண்டு இருந்த கணவன் அருகே ஓடினாள்

“ எழுந்திருங்கள். சீக்கிரம் “ அலறினாள்.

“ என்ன ? என்ன ஆச்சு ? “ முனகினான் செர்டோகவுட்ஸ்கி .கண்களை திறக்காமலேயே சோம்பல் முறித்தான். 

” விருந்தாளிகள் வந்து இருக்கிறார்கள். கேட்குதா? . விருந்தாளிகள் “

” விருந்தாளிகள்? என்ன விருந்தாளிகள் ? “  முணகினான் அவன் . “ சரி.ஒரு முத்தம் கொடேன் “

“ சீக்கிரம் எழுந்திருங்கள்.. ஜெனரலும் மற்றவர்களும் வந்து இருக்கிறார்கள்”

“ ஜெனரலா? வந்து விட்டாரா? என்னை ஏன் எழுப்பவில்லை? விருந்து தயாரா ? ”

“ என்ன விருந்து ? “

“ ஆனால் நான் தான் விருந்துக்கு ஏற்பாடு செய்ய சொன்னேனே ?”

“ விருந்தா? நான்கு மணிக்கு வந்து படுத்தவர்தான். என் கேள்விகள் எதற்கும் பதில் அளிக்காமல் தூங்கி விட்டீர்கள். நானும் தொந்தரவு செய்யாமல் விட்டு விட்டேன் “

இடி விழுந்தது போல கொஞ்ச நேரம் அசையாமல் நின்றான் செர்டோகவுட்ஸ்கி . கண்கள் நிலைகுத்தி போய் இருந்தன. திடீர் என படுக்கையில் இருந்து குதித்தான்.

“ என்னவொரு முட்டாள் நான் “ தலையில் அடித்து கொண்டான். ” அவர்களை நான் தான் அழைத்தேன். வந்து விட்டார்களா? “

“ கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்கள் “


 “ அவர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். நான் வீட்டில் இல்லை என சொல்லி விடு. காலையிலேயெ சென்று விட்டேன் என்றும் வீட்டுக்கு வர மாட்டேன் என்றும் சொல்லி விடு. பணியாட்களிடமும் சொல்லு. புரியுதா.? சிக்கிரம் “
சொல்லி முடித்ததும் ஒளிந்து கொள்ள இடம் தேடினான். வண்டியை நிறுத்தும் இடம்தான் பாதுகாப்பு என நினைத்து அந்த அறைக்கு ஓடி சென்றான். குதிரை வண்டியில் ஏறி கதவை மூடிக்கொண்டான். இன்னும் பாதுகாப்பு கருதி ,போர்வையால் தன்னை போர்த்தி கொண்டான்.

ஜெனரலும் மற்றவர்களும் வீட்டிற்குள் வந்தனர்.

“ ஐயா வீட்டில் இல்லை “ பணியாள் சொன்னான்.

“ என்ன? இல்லையா? விருந்துக்கு வருகிறாரா இல்லையா ?

“ இல்லை.. நாளைதான் வீடு திரும்புவார்”

“  அட கடவுளே” என்றார் ஜெனரல்

“  நல்ல காமெடி “ சிரித்தார் கர்னல்.


” இல்லை .இல்லை. இதை பொறுத்துகொள்ள முடியாது. நம்மை வரவேற்க முடியாவிட்டால் , ந்ம்மை ஏன் அழைத்தான் “ ஜெனரல் கோபத்தில் கொந்தளித்தார்.

” என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை ,. மேதகையீர் , எப்படி இது போல நடந்து கொள்ளலாம் “  ஓர் இளம் அதிகாரி ஒத்து ஊதினார்.

“ என்ன சொன்னாய்? “ வினவினார் ஜென்ரல். அந்த அதிகாரியை இரண்டு முறை சொல்ல சொல்லி ரசிப்பது ஜென்ரலின் வழக்கம்

” என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை ,. மேதகையீர் , எப்படி இது போல நடந்து கொள்ளலாம் “ 


” ஆமா..ஏதாவது பிரச்சினை என்றால் நம்மிடம் சொல்லி இருக்க வேண்டும் “

” இப்போது ஒன்றும் செய்வதற்கில்லை. வீட்டுக்கு போகலாம் “ என்றார் கர்னல்.


” கண்டிப்பாக . ஆனால் அவனது வண்டியை பார்த்து விட்டு செல்லலாமே. அதை எடுத்து கொண்டு சென்று இருக்க மாட்டான்  . தம்பி  , வா இங்கே “

” என்ன வேண்டும் மேதகையீர் “ பணியாள் ஓடி வந்தான்


 ” உன் எஜமானரின் புதிய வண்டியை காட்டு “ 


” அன்பு கூர்ந்து இந்த வண்டி அறைக்கு வாருங்கள் “ 


ஜென்ரலும் மற்றவர்களும் வண்டி நிறுத்தும் அறைக்குள் நுழைந்தனர்

அந்த வண்டியை கவனமாக பார்த்தார்கள். சக்கரங்களையும் , சுருள் கம்பிகளையும் கவனித்தனர்.

“ சிறப்பாக ஒன்றும் இல்லையே” என்றார் ஜெனரல் . “ ரொம்ப சாதாரணமாகத்தான் இருக்கிறது “ 
 “ பார்க்க ஏதும் இல்லை “ என்றார் கர்னல் “ சிறப்பம்சம் ஒன்றுமே இல்லையே”

” எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், மேதகையீர் , இது 4000 ரூபிள் மதிப்பு பெறாத வண்டி “ என்றார் இளம் அதிகாரி.

“என்ன சொல்கிறாய்? “

” எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், மேதகையீர் , இது 4000 ரூபிள் மதிப்பு பெறாத வண்டி “ 
” நான்காயிரமா? இரண்டாயிரம் கூட பெறாது. எதற்கும் உட்புறத்தையும் பார்த்து விடுவோம். ஒருவேளை அதில் சிறப்பம்சம் இருக்க கூடும் . திறந்து பாருங்கள் ”

திறந்ததும் உள்ளே இருந்த செர்டோகவுட்ஸ்கியை அனைவரும் பார்க்க முடிந்தது. 

“ அட . நீ இங்கேயா இருக்கிறாய்? “ ஜெனரல் வியப்புற்று விட்டார்.
அவனை மீண்டும் மூடி வைத்து விட்டு , தன் பரிவாரங்களுடன் கிளம்பி சென்றார். 

***********************************************




Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா