Wednesday, July 7, 2010

விஷ்ணுபுரம் பதிவு பிடிக்கவில்லையா? திட்டுங்கள் சாரு நிவேதிதாவை

என்னை போன்ற பலர் தமிழில் எழுதும் போது , ஒற்று பிழைகள் போன்ற பல பிழைகளை அலட்சியாக செய்வது வழக்கம்... இதை ஒரு எழுத்தாளர் என்ற முறையில் , சாரு நிவேதிதா சுட்டி காட்டி இருந்தது உண்மைதான்..

அதே போல , ஒருவர் எழுத்தை படிப்பவர்கள் அதை பற்றி விவாதிபதில்லை என்று அவர் குறைபட்டு இருப்பதும் உண்மையே.. அனால் யாரும் புத்தகங்கள் வாங்குவதில்லை என்று அவர் சொல்வது தவறு... அவர் ரசிகர்களை விட, என்னை போன்றவர்கள் அவர் நூல்களை வாங்கி படிப்பதுதான்அதிகம்

உண்மையில் ஒரு எழுத்தாளனின் ரசிகரை விட , என்னை போன்ற பார்வையாளர்கள்தான், ஒருவரது எழுத்தை ஊன்றி படிக்க முடியும்...

என்னை பொறுத்தவரை, ராஜேஷ்குமார், பாலகுமாரன், தமிழ்வாணன், பட்டுகோட்டை பிரபாகர், ஜெயகாந்தன், ஜெயமோகன், சாரு நிவேதிதா என எல்லோரையும் படிப்பவன்... ஒருவர் உயர்வு, ஒருவர் தாழ்வு என எண்ணுவதே இல்லை...

அதே சமயம்,. ஒரு எழுத்தாளர், மற்ற எல்லோரையும் மட்டம் தட்டுவதை ஏற்றுகொள்கிறேன்.. புரிந்தும் கொள்கிறேன்... ஒரு குறிப்பிட்ட சிந்தனையில் இருக்கும் ஒருவர், மற்ற வகை சிந்தனையை , மற்றவர் நடையை ரசிக்க முடியாததுதான்..

ஆனால், ஒரு எழுத்தாளரின் ரசிகர்கள், கண்ணை மூடிக்கொண்டு மற்றவரை விமர்சிப்பது சரியல்ல... எல்லோரையும் படிப்பதுதான் நல்லது....

குறைந்த பட்சம், எந்த எழுத்தாளரின் எழுத்தை ரசிகிரார்களோ, அதையாவது படிக்க வேண்டும்...

ஜெயமோகனின் புத்தகமான விஷ்ணுபுரம் நாவலை படித்து முடித்ததும், அதை பற்றி எழுதுவதற்கு சாரு வின் பதிவுதான் காரணம்... எனவே என் அந்த பதிவு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் திட்ட வேண்டியது சாரு நிவேதிதாவைதான்,,..

அதே போல, சாறு நிவேதிதாவின் பல புத்தகங்களை படித்து ரசித்து இருந்தாலும் , அதை பற்றி எழுத என்னை ஊக்கு விக்காததர்காக , யாரை வேண்டுமாலும் திட்டி கொள்ளுங்கள்...

எந்த குறிப்பிட்ட எழுத்தாளரின் ரசிகராக இல்லாமல் , எழுத்தை மட்டும் ரசிப்பதால், பல புத்தகங்களை படிக்க முடிகிறது..

இலக்கிய விமர்சனம் படிக்க சிலருக்கு போரடிக்கலாம்..
ஆனால், என்னை போன்ற பார்வையாளன் , ஒரு புத்தகத்தை பற்றி செய்யும் அறிமுகம் , சாதாரண மனிதனின் பார்வையாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு, சாரு நிவேதிதா நூல் உட்பட எல்லோருடைய புத்தகங்கள் பற்றியும் எளிய அறிமுகம் தர உத்தேசித்து இருக்கிறேன்...

2 comments:

  1. நீங்கள் ரொம்ப வித்தியாசமானவராக இருக்கிறீர்கள்.
    பாரபட்சம் இல்லாமல் பார்வையாளனாக இருப்பது ரொம்ப சிரமமான காரியம்.

    ReplyDelete
  2. சுதந்திர பறவையாக இருப்பதில் நிறைவாக இருக்கிறது

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா