Friday, July 30, 2010

தேடினேன் வந்தது

”சார்.. இந்த தங்க காசை வச்சுக்கிட்டு , நூறு ரூபா குடுங்க “

கேட்ட அவன் புத்தனா அல்லது புத்திசாலியா அல்லது சித்தனா என யோசிக்க முடியவில்லை...அவன் பெயர் குப்பன்... ஆனால் அவன் கேரக்டர் எப்படி- தெரியவில்லை...

அது உண்மையான தங்கம்தான் என தெரிந்தது...இதை நூறு ரூபாய்க்கு ஏன் விற்கிறான்?

அவனிடமே கேட்டு விட்டேன்..

“ சார்.. இந்த புதையலுக்கு சொந்தக்காரன் ஒரு பைத்தியக்காரன்.. தன் சொத்து நல்ல ஆளுங்க கைக்கு போய் சேரணும்ங்றது அவன் ஆசை.. பேராசைப்பட்டு வித்தா , நான் ரத்தம் கக்கி செத்துடுவேன் ..அந்த மாதிரி மந்திர வசியம் செஞ்சு வச்சுட்டான் “ சோகமாக சொன்னான்,

“ பேசாம நல்லவங்க கைய்ல புதையல ஒப்படைச்சுட்டு, பங்கு வாங்கிக்க ..” ஐடியா கொடுத்தேன்...

“ நல்லவஙனு எப்படி கண்டு பிடிக்றது ? அதுக்கு ஒரு கண்டிஷன் போட்டு இருக்காரு.. ஆனால் அந்த கண்டிஷனை இது வரை யாரும் நிறைவேத்தல... நிறைவெத்த முடியலைனா அவன் கண்னு பறி போய்டும்..இனீகு ஒருத்தன் வரான்.. என்ன ஆக போகுதா “ புலம்பினான் அவன்


என்ன கண்டிஷன் ? - கேட்டேன்..

“ அவனை நல்லவன் நு நூறு சதவிகிதம் யாராச்சும் நம்பனும்... அப்படி ஒரு ஆளை கூட்டி வரனும்... அந்த ஆள் அதை சாமி முன்னாடி சொல்லணும்... அவன் மனசாட்சிப்படி உண்மையலேயே அவன் நல்லவன் நு சொன்னா புதையல்..இல்லைனா, கண் போய்டும்”

எனக்கு ஆச்சர்ய்மாக இருந்தது...

சரி.. நானும் உன் கூட வர்ரேன்.. நடப்பதை பார்க்கலாம்... கிளம்பினேன்... அந்த புதையல் மேல் எனக்கும் ஆசை வந்து விட்டது ..

**************************************************************************************************************************

சாமி சிலை முன் வந்தவனை உட்கார வைத்து இருந்தார்கள் ...

“ பாருப்பா..தைரியமா சொல்லு..உண்மையா சொல்லு..இவரை நல்லவர்னு முழுசா நம்புறியா ? “

“ ஆமா .. இவரை ரொம்ப நாளா தெரியும்.. நன்பர்.. நல்லவர்... “

“ சாமியை நல்லா பார்த்து சொல்லு..பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது “

“ சத்தியமா ந்ல்லவர்.. குறை சொல்லவே முடியாது “

அழைத்து வந்தவன் பரவசத்துடன் பார்த்து கொண்டு இருந்தான்..

குப்பன் உடுக்கையை அடிக்க ஆரம்பித்தான்...
ஒரு வித அமானுஷ்ய த்னமை நிலவியது...

திடீரென , அழைத்து வந்தவன் முகத்தை பொத்தி கொண்டு கதற ஆரம்பித்தான்....

குப்பன் பதறினான்..

“ தப்பா எதாச்சும் நினைச்சியா ? “

உட்கார்ந்து இருந்தவன் பயந்து விட்டான்.. முகத்தில் வியர்வை பொங்கி வழிந்தது.
” இப்ப நல்லவ்னா இருக்கான்..புதையல் கிடைத்ததும் என்னை ஏமாத்திடுவான் நு சந்தேக்கப்பட்டுட்டேன் “

குப்பன் தலையில் கை வைத்து கொண்டான்..

“ உன் சந்தேகம் இவன் கண்ணை பறிச்சுடுச்சே “

பச்சலை வைது கட்டினான...

“ நாந்தான் சொன்னேன்ல... முழுசும் நம்புற ஆளை கூட்டிட்டு வான்னு .இப்ப பாரு “

***********************************************************************************************************************

அனால் என்னை கொஞ்சம் கூட வெறுக்காத ஆயிரம் பேர் உண்டு.. புதையல் எனக்குத்தான்..வீட்டில் உட்கார்ந்து யோசித்தேன்..

யாரை அழைத்து போகலாம்..

ரெண்டு வருஷமா காதலிக்கும் காஞ்சனா ?

வேண்டாம்... அவள் சாதரணமாக பிறருடன் பேசினாலும் சண்டை போட்டு அவளை காயப்படுதி இருக்கிறேன்..அந்த கோபம் அவளுக்கு இருக்கும்

நிறுவன மேலாளர்? என் அருமை அவருக்கு நன்றாக தெரியுமே?

வேண்டாம்..ஊதிய உயர்வு பிரச்சினையில் பழைய மனஸ்தாபம் உண்டு. நேரங்கெட்ட வேளையில் நினைவு வந்து தொலைக்க போகிறது..


அவரை மறந்து விட்டேனே.. பதிவர் நண்பர்.. என் மேல் எந்த வருத்தமும் இருக்க வாய்ப்பில்லை.. அவருக்கு போன் செய்ய எத்தனித்தேன்..

ஒஹ் . நோ.. சில நாட்களுக்கு முன் நகைச்சுவை என நினைத்து ஒரு பின்னூட்டம் இட்டு இருந்தேன்.. அது அவரை காயப்படுத்தி விட்டது... அந்த கோபம் இருக்க கூடும்


என் அம்மா ?

அம்மா என்றால் அன்புதான். ஆனால் என் காதல் அவளுக்கு பிடிக்கவில்லையே..

அப்பா?

பணத்தகறாறு...

அட ஆண்டவா.. உயிர் நண்பன் மாடசாமி...

அவன் தங்கைகல்யாணத்துக்கு உதவவில்லை என கோபம்..

யோசித்து பார்த்தால், இவ்வளவு பெரிய உலகில் என்னை நேசிப்பவர் யாரும் இல்லை...எல்லோரையும் ஒரு விதத்தில் காயப்படுத்தி இருக்கிரேன்..

மயக்கம் வரும் போல இருந்தது... புதையலை விட, இந்த உண்மை மனதை பாத்திதி விட்டது...


“ மாமா..இந்த கணக்கை எப்படி போடணும்... “ ஹோம் வொர்க் சந்தேகத்துடன் பக்கத்து வீட்டு சிறுமி சீதா வந்தாள்..

அவளுக்கு பாடம் சொல்லி கொடுத்து முதல் ரேங்க் வாங்க வைத்தவன் நான்.. என் மேல் அலாதி பிரியம்..

“ வா ..உட்கார் . என்றேன் “

“ எனக்கு பிறந்த நாள்..ஆசிர்வாதம் பண்ணுங்க” காலில் விழுந்தாள்..

கூச்சமாக இருந்தது நான் என்ன பெரிய மனுஷனா?

“ சாரி,,,விஷ் பண்ண மறந்துட்டேன் “

“ பரவாயில்லை மாமா.. லேட்டா விஷ் பண்ணாலும் உங்க வாழ்துதான் என் பேரண்ட்ஸ் ஆசியை விட பெருசு “

நெகிழ்ந்தேன்...

இவளை அழைத்து செல்லலாமா.. யோசித்தபோது போன் வந்தது..

“ குப்பன் பேசுறேன்.. புதையல் விஷயமா... “

பணத்தை எப்படியும் சம்பாதிக்கலாம்..அன்பை பெறுவது , அதை காப்பாற்ருவது கஷ்டம்..

“ வேண்டாம் ..குப்பா..எனக்கு வேற புதையல் கிடைச்சுடுச்சு”

சீதாவை பார்த்தபடி உறுதியான குரலில் சொன்னேன்

4 comments:

 1. அன்பை பெறுவது பற்றி நல்ல கதை

  ReplyDelete
 2. தலைப்பு தேடாமல் வந்தது என்று வைத்திருக்கலாம்

  ReplyDelete
 3. தலைப்பு பற்றிய கருத்து சூப்பர் . நானும் கூட கிட்டத்தட்ட அப்படித்தான் நினைத்தேன் ..நன்றி

  ReplyDelete
 4. பணத்தை எப்படியும் சம்பாதிக்கலாம்..அன்பை பெறுவது , அதை காப்பாற்ருவது கஷ்டம்..


  ..... நல்லா எழுதி இருக்கீங்க..... உண்மையை சொல்லி இருக்கீங்க....

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா