Wednesday, July 7, 2010

matrix + chaos தியரி = விஷ்ணுபுரம்.( பொருத்தம் இல்லாத தலைப்பு, வருத்தம் தராத நாவல் )

மேட்ரிக்ஸ் படம் பார்த்து இருப்பீர்கள்... படம் பார்த்து இருப்பவர்களுடன் பேசினால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ரசித்து இருப்பதை பார்க்க முடியும்...

என்னை பொறுத்தவரை, அந்த படம் பார்த்து முடித்தவுடன், நாம் இருப்பது 2010 ல் தானா, உண்மையில் நாம் இருக்கிறோமா அல்லது இதெல்லாம் கற்பனை தோற்றமா , வேறு யாரவது நம்மை ப்ரோகிராம் செய்து வைத்து இருக்கிறார்களா என்றெலாம் தோன்றியது...
யோசித்து பார்த்தால், அப்படி இருக்கும் சாத்தியமும் இருக்கிறது...

அதே போன்ற உணர்வுதான், ஜெயமோகனின் விஷ்ணுபுரம் படித்து முடித்ததும் தோன்றியது...

நாமெல்லாம் உண்மைதானா அல்லது யாரோ ஒருவர் சொல்லி கொண்டு இருக்கும் கதையில் நாமெல்லாம் ஒரு பாத்திரம்தானா .. எல்லாமே ஒரு நாடகம்தானா என்று ஓர் உணர்வு ஏற்பட்டது...

உண்மையில் இந்த உணர்வை ஏற்படுத்துவது அந்த நாவலின் நோக்கம் அல்ல .. ஆனால் எனக்கு ஏற்பட்ட உணர்வு இது... உண்மையல் இதை படிப்பது ஒரு வித்தியாசமான அனுபவத்தை தந்தது.... அறிவுரை கூறுவது, ஒரு சிந்தனையை போதிப்பது , ஒரு நபரின் சாகசங்களை சொல்வது என்று எதுவும் இல்லாமல் ஒரு வித்தியாசமான நாவலாக இருந்தது விஷ்ணு புரம்.

*************************************************************

சில ஆண்டுகளுக்கு முன், ஒரு நண்பன் இந்த புத்தகத்தை என்னிடம் கொடுத்து படிக்க சொன்னான்... இறந்த புத்தகம் அவனை மாற்றி விட்டதாக சொன்னான்... விஷ்ணுபுரத்துக்கு முன், வி. பின் என அவன் வாழ்வை பிரிக்கும் அளவுக்கு இந்த நாவல் இருப்பதாக சொன்னான்..

நாவலின் பெயர் , அட்டை படம், பின் அட்டை குறிப்பு- இதெல்லாம் நாவல் ஒரு சாமிக்கதை போல என என்னை நினைக்க வைத்தது... எனவே சும்மா புரட்டி பார்த்து விட்டு அவனிடமே கொடுத்து விட்டேன்.

சென்ற வாரம் , புத்தக கடைக்கு சென்ற போது தற்செயலாக இந்த புத்தகத்தை பார்த்தேன்... 847 பக்கங்கள்.. சரி,,இதில் என்னதான் இருக்கிறது.... படித்து பார்க்கலாமா என தோன்றியது... விலையை பார்த்தேன்.. 500 ரூபாய்... இந்த விலைக்கு இதுவரை எந்த தமிழ் புத்தகமும் வாங்கியதில்லை.... ஆங்கில புத்தகங்கள் வாங்கி இருக்கிறேன் .தமிழ் பித்தகத்தில் அந்த அளவுக்கு , நான் எதிர்பார்க்கும் விஷயங்கள் இருக்குமா என்ற சந்தேகம் எனக்குஉண்டு..risk

சரி.. ரிஸ்க் எடுத்து பார்க்கலாம் என வாங்கினேன்..


***************************************************************************************************************
ஒரு புள்ளியில் கதை ஆரம்பித்து , சிறிது சிறிதாக வேகம் எடுத்து, அதிவேகத்தை இறுதியில் அடைவது ஒரு விதம்..

சில ஆங்கில படங்களில் , ஆரம்பத்திலேயே ஒரு பெரிய விஷயம் நிகழ்ந்து நம்மை நாற்காலியில் விளும்புக்கு தள்ளும் அளவுக்கு பரபரப்பு ஏற்படுத்தும. அதன் பின், அதற்கு சம்பந்தமே இல்லாத வகையில் வேறு காட்சிக்கு மாறி, சிறிது சிறிதாக வேகம் எடுக்கும்... முந்தல் காதின் அர்த்தம் பிறகு புரியும்..

இந்த பாணியில் இருக்கிறது இந்த நாவல்..

கடினமாக இருக்கும் என நினைத்து , சில பக்கங்களை புரட்ட ஆரம்பித்த சில நொடிகளிலேயே அது என்னை ஈர்த்து விட்டது... சிதறி கிடப்பது போல காட்சிகள் இருந்தாலும், ஒவ்வொன்றும் சுவையாக இருப்பதால் , எதையும் விட்டு விடாமல் படிக்க முடிந்தது..

பல இடங்களில் வைக்கப்பட்ட புள்ளிகள் , ஒரு அழகிய கோலமாக கடைசியில் மாறுவது மிக நேர்த்தி..

*************************************************************************************************************

ஒரு நபர்... அவருக்கு ஏற்படும் சிக்கல்,,,, அத அவர் எப்படி தீர்க்கிறார்... என்ற நேர்கோட்டில் நாவல் செல்லவில்லை ..அப்படி சென்று இருந்தால், சிறிது நேரத்தில் அலுப்பு தோன்ற கூடும்... முடிவுதான் முக்கியம் என்பதால், பல பக்கங்களை வேகமாக கடந்து சென்றுவிடுவோம்..

விஷ் ணு புரத்தை பொறுத்தவரை, நாவல் எங்கு சென்று முடிகிறது என்ற ஆவலை விட, நாவல் தொட்டு செல்லும் விஷயங்கள் முக்கியம் என்பதால், ஒவ்வொரு வரியும் முக்கியத்துவம் பெறுகிறது ...

பிறத்தல் , வாழ்தல் ,இனப்பெருக்கம் செய்தல், சாதல் - இதைத்தானே மிருகங்களும் செய்கின்றன... இதை தாண்டி மனிதனுக்கு வேறு எதுவும் இருக்கிறதா... என்ற ஞான தேடல்தான் பல நல்லதுக்கும் காரணம் ..பல துன்பங்களுக்கும் காரணம்...

ஒரு வேளை, இப்படி தேடுவதே ஒரு வேண்டாத வேலையா ..இப்படி தேடி நம் வாழக்கை வீணடித்து கொள்கிறோமோ என்றும் தோன்றுகிறது..

இதை எல்லாம, பல்வேறு விதமாக பல மார்க்கங்கள் விளக்குகின்றன... எல்லா வழிகளையும், அதனதன் பார்வையில் விளக்கும் ஞான சபை விவாதங்கள் , நேர்மையாக விவரிக்கப்பட்டுள்ளன..
ஒட்டு மொத்த நாவலையும் படிக்காமல், அந்த பகுதியை மட்டுமே படித்தால் போதும் என தோன்றுகிறது... இன்னொரு விதமாக பார்த்தால், அந்த பகுதி இல்லாமல் கூட நாவல் நன்றாக இருக்கும் என்றும் தோன்றுகிறது...

*********************************************************************************
இவ்வளவு கடினமான நாவலை எழுதும்போது கூட நகைசுவை உணர்ச்சியை தக்க வைத்துள்ள , அவரை பாராட்டாமல் இருக்க முடியாது..அதே போல , ஒரு திரைப்படத்தை பார்ப்பது போன்ற அனுபத்தை தரும் வகையில், காட்சி அமைப்புகளை அமைத்துள்ளார்..

சைன்ஸ் பிக்க்ஷன் போல , சில காட்சிகள் உள்ளன... ரகசிய கதவுகள், பாஸ் வோர்ட் என்றெல்லாம் ரசிப்பதற்கு பல இடங்கள் உள்ளன,, ( பாஸ் வோர்ட் என்பது நேரடியாக சொல்லப்படவில்லை... கூர்ந்து படித்தால் புரியும் )

******************************************************************************************************
உங்கள் அறையை அப்படியே விட்டு விட்டால், அது ஒழுங்கு நிலையில் இருந்து ஒழுங்கின்மை என்ற நிலைக்கு செல்லும்... ஒழுங்கின்மை என்ற நிலைக்கு செல்வதுதான் இயற்கை.... என்ரோபி என்று அறிவியல் சொல்வது இதைத்தான், ... இதைதான் காலம் என்கிறார்கள்... பரிபூரண ஒழுங்கின்மையை அடைந்த பின், மீண்டும் ஒழுங்கு என்ற நிலைக்கு வந்தாக வேண்டும்...

இந்த இடத்தைத்தான், பிரளயம் என்று நாவல் சொல்கிறதோ என்று தோன்றுகிறது ..

அதே போல chaos theory .. ஒரு வண்ணத்து பூச்சி சிறகடிக்கும் சிறிய செயல், பல்வேறு சிக்கலான வழிகள் மூலம் அதிகரித்து சென்று, பெரும் புயலாக மாறக்கூடும் ...
ஒரு செயல், அதன் மூலம் இன்னொரு செயல் என்று விரிவடைந்ததுதான் இந்த உலகமா.. ? திருவடி தான் விரும்பிய பெண்ணை அப்போதே அடைந்து இருந்தால், ஓர் ஆழ்வார் உருவாக்கி இருக்க மாட்டார் ....

****************************************************************

மனிதன் ஞானத்தை உருவாக்குகிறான்.. அது அவன் மேல் உட்கார்ந்து இருக்கிறது... தள்ளாடிய படி சுமந்து திரிகிறான்..

காமம் மன வாசல் திறந்து நம்முள் நுழையும் போது, அதன் நிழல்தான் முதலில் நுழைகிறது.

மக்கள் சாதாரணமானவர்களைத தான் தலிவர்கள் ஆக்குகிறார்கள்..பிறகு அவனை அசாதரனமானவன் என நினைத்து வணகுகிரார்கள்.

அதிகாரம் இருப்பதை போல காட்டி கொள்ளும்போது மேலும் அதிகாரம் வந்து சேருகிறது..

பொருட்களுக்கு தனி தன்மை என்பது, இன்னொரு பொருளின் மீது அது ஏற்படுத்தும் விளைவு மட்டுமே. இந்த பொருள் இப்படித்தான் இருக்கும் என சொல்ல முடியாது

தீ என்பது எல்லோருக்கும் சுடத்தானே செய்யும். சுடாத தீ உண்ட ?

உண்டு... நீரின் ஆத்மாவுக்கு..

நாம் பார்க்கிறோம், பார்க்கும் கணத்திற்கும் அப்பொருளை பார்வை தொட்ட கணத்திற்கும் இடையே ஒரு கால இடைவெளி உள்ளது. அது மிகமிகச் சிறியதாக இருக்கலாம். ஆயினும் அவ்விடைவெளியில் அப்பொருள் அழிந்து இன்னொன்று பிறந்திருக்கும்…( ஒரே ஆற்றில் இரண்டு முறை குளிக்க முடியாது என்ற ஜென் தத்துவத்தை தொட்டு செல்கிறார் )

பன்னிரண்டாவது லிங்கம் எது ? ( எது என்பதை தனியாக சொன்னால் ஒரு மாதிரி இருக்கும்... படித்து தெரிந்து கொள்ளுங்கள் )

***********************************************************************************************

எல்லோரும் இதை படித்து , ஒரு நல்ல அனுபவத்தை பெற வேண்டும் என விரும்புகிறேன்.. ஆனால் , இது எல்லோருக்குமான நாவல் அல்ல என்றும் தோன்றுகிறது... முதல் நூறு பக்கங்களை படித்து விட்டால், பிறகு நிறுத்த முடியாது...

நூலகத்தில் இருந்தோ, நண்பர்களிடம் இருந்தோ வாங்கி படிப்பதை விட , சொந்தமாக வாங்கி படிப்பது நல்லது... மீண்டும் மீண்டும் படிக்க வேண்டி இருக்கும்...

*****************************************************************************

மொத்தத்தில் ,இதற்காக செலவிட்ட நேரம், பணத்திருக்கு முழுதும் தகுதி உள்ள புத்தகம்..

விஷ்ணுபுரம்- அகம் , புறம் என அனைத்தையும் ஆராயும் விறு விறு புரம்..

****************************************************************************************************

சில குறைகளை சுட்டி காட்ட விரும்புகிறேன் ...


1 விஷ்ணு புரம் என்ற தலைப்பு, இது மத ரீதியான நூல் என்ற அடையாளத்தை தருவதால், என்னை போல பல வாசகர்களை நெருங்க முடியாமல் போகிறது ... ஒரு தத்துவ நூலான இதற்கு, பின் தொடரும் நிழலின் குரல் என்பது போல செகுலர் பெயரை வைத்து இருப்பதுதான் பொருத்தமாக இருந்துஇருக்கும்

2 பின் தொடரும் குரல் நாவலில் இருந்த அளவுக்கு வடிவ அமைப்பு நேர்த்தி இதில் இல்லை என தோன்றுகிறது...

3 மன்னர்கள், ஆழவார்கள், வைதீகர்கள் என அனைவரையுமே எதிர்மறையாக காட்டி இருப்பது நெருடலாக இருக்கிறது..

4 ஞான சபை விவாதத்தில் தமிழ் மரபான சித்தர் மரபு சார்ந்த விவாதம் இல்லாததது ஒரு குறை.

5 அத்வைதம், த்வைதம் , விஷிஷ்டத்வைதம் போன்ற வார்த்தைகளியே காணவில்லை ....

6. தேடுதல் என்பதே கூட ஒரு வகை அகங்காரம்தான்.. அது அறிதலை தடை செய்யும் என்ற ஜிட்டு கிரிஷ்ணமுர்தியின் தத்துவமும் தலை காட்டுகிறது... கடைசியில் என்னதான் சரியான வாழ்வு முறை , என்று திட்டவட்டமாக எதுவும் கூறாமல் நழுவுவது போலதோன்றுகிறது

***************************************
விஷ்ணுபுரம் - ஆசிரியர் : ஜெயமோகன் கவிதா வெளியீடு விலை rs 500

8 comments:

  1. தங்களுக்கு என்னுடைய பதிவில் ஒரு விருது அளித்துள்ளேன் ... வாருங்கள் நண்பா பெற்று கொள்ள ....

    ReplyDelete
  2. http://apkraja.blogspot.com/2010/07/blog-post_07.html

    ReplyDelete
  3. உங்கள் விருது என்னை சந்தோஷப்படுத்தவில்லை... பயம் தான் ஏற்படுகிறது...

    தவறை தவறு என்று சரியை சரி என்றும் கூறும் உங்கள் நடுநிலை எனக்கு தெரியும் என்பதால் , உங்கள் அன்பை தக்க வைத்துகொள்வது பெரிய சவால் என்பதை அறிவேன்... அதனால்தான் பயம்...

    தங்கள் அன்புக்கு நன்றி.... நன்றி..... நன்றி....

    ReplyDelete
  4. இந்த புத்தகம் ஆன்லைனில் எங்கு கிடைக்கும் என்று சுட்டி கொடுத்தால் நல்லது... எதிர் பார்க்கிறேன்...

    ReplyDelete
  5. "இந்த புத்தகம் ஆன்லைனில் எங்கு கிடைக்கும் என்று சுட்டி கொடுத்தால் நல்லது..."

    udumalai.com

    ReplyDelete
  6. கோவை அரன்July 12, 2010 at 1:45 AM

    நல்ல பார்வை , நாவல் உங்களால் சிலருக்கேனும் பேருக்கு போய் சேரும் .

    //நாவலின் பெயர் , அட்டை படம், பின் அட்டை குறிப்பு- இதெல்லாம் நாவல் ஒரு சாமிக்கதை போல என என்னை நினைக்க வைத்தது... எனவே சும்மா புரட்டி பார்த்து விட்டு அவனிடமே கொடுத்து விட்டேன்.//

    என் உறவினர் ஒருவர் விஷ்ணுபுராணம் என்று படித்து கண்ணில் ஒற்றிக்கொண்டார் :)

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா