Sunday, August 22, 2010

பாலகுமாரன் நாவல்களும் மற்ற நாவல்களும் ஒரே வகைதானா ?

இலக்கியம் என்பது என்ன? யார் எழுதுவது இலக்கியம்? இலக்கியம் என்பது மனிதனுக்கு தேவையா என்பதெல்லாம் எப்போதும் இருக்கும் கேள்விகள்தான்..

அதில் எழுத்து சித்தர் பால குமாரன் அவர்களை இலக்கியவாதிகல் தம் ஆட்டத்தில் சேர்த்துகொள்வதில்லை... அதனால் அவருக்கு நஷ்டமில்லை.. வாசகர்களும் இதை பொருட்படுத்துவதில்லை..

ஒரு இலக்கியவாதி , தன் பார்வையில் பாலகுமாரன் எழுதுவது இலக்கியம் அல்ல என சொல்லலாம். அதை வைத்து விவாதம் நடப்பது நல்லதுதான்.. பாலகுமாரன் அவர்களின் சிறப்பை சொல்ல
இத்தைகைய விவாதங்கள் உதவும்.

ஆனால் ramji_yahoo போன்றவர்கள் பாலகுமாரன் எழுத்தை படித்தாலும் இன்பமாக இருக்கிறது... ஒரு மர்ம நாவல் படித்தாலும் இன்பமாக இருக்கிறது ..எனவே எல்லாம் ஒன்றுதான் என்று சொல்வதை

ஏற்க முடியாது..

யோசித்து பார்த்தால் பலரும் இப்படி நினைப்பது தெரிய வருகிறது.. எனவேதான் இந்த பதிவு,,,

என்னை பொருத்தவரை எல்லா புத்தகங்களும் படிப்பதை விரும்புகிறேன்.. சமீபத்தில் கூட கிரைம் சக்கரவர்த்தி ராஜேஷ் குமாரின் , பூவில் ஒரு சூறாவளி ரசித்து படித்தேன்.. சுவையாக எழுதி

இருந்தார்..அவர் சாதனையை பாராட்ட விரும்புகிறேன்..

அதற்காக அந்த நாவலும் உடையாரும் ஒரே மாதிரியானதுதான் என சொல்ல முடியாது...

இதில் உயர்வு தாழ்வு என்ற பிரச்சினை இல்லை... ஒவ்வொரு மனனிலையின்போதும் ஒவ்வொரு வகை புத்தகம் தேவைப்படும்.. அந்த நேரத்து தேவையை ஒரு புத்தகம் பூர்த்தி செய்கிறதா
என்பதை பொருத்தே அதன் வெற்றி தோல்வியே தவிர , மற்ற எழுத்தாளருடன் ஒப்பிட்டு அல்ல..


பாலகுமாரன் நாவல்கள் இலக்கியமா இல்லையா என்பது வேறு பிரச்சினை..

ஆனால் அவர் எழுத்து போல மக்களுக்கு நெருக்கமான எழுத்து வேறு எதுவும் இல்லை என திட்டவட்டமாக சொல்லலாம்..அவரது சமீபத்து நாவலான உடையாரில் கூட அவரது துள்ளலான நடை இருப்பது ஆச்சரியப்படத்தக்கது...

வெறுமே வரலாற்று தொகுப்பாக இல்லாமலும் அதே சமயம் வர்ணனைகள்- குறிப்பாக பெண்ணை வர்ணித்தல்- என்ற பானியில் இல்ல்லாமல், நிர்வாகம், பண்பாடு , மேலாண்மை , தத்துவம் ,

பெண் விடுதலை, மதித்தல், காதல் , ஆன்மீகம் , சாதி சண்டை, பொறி இயல் என எல்லாம் கலந்து கொடுத்து இருக்கிறார்.

படித்து முடித்த பின் ராஜராஜசோழன் நம் மனதி சிம்மாசனம் இட்டு அமர்ந்து கொள்கிறார்..அந்த நாவலை பற்றி விரிவாக பிரகு எழுதுவேன்...

அதற்காக பாலகுமாரன் நாவல்கள் மட்டும்தான் உயர்ந்தவை..மற்றவை தாழ்ந்த்தவை என சொல்லவில்லை...

பாலகுமாரன் நாவல்கள் தனிதுவம் வாய்ந்தவை... அதயும் மற்ற நாவல்களையும் ஒரே பட்டியலில் சேர்க்க கூடாது ..


ஒவ்வொன்றின் தேவையும் வேறு வேறு.. பாலகுமாரன் நாவல்களின் தேவையே இல்ல்லாமல் இருப்பவர்களும் இருக்க கூடும்... அதை தவறு என சொல்ல முடியாது...

3 comments:

  1. நண்பரே எனக்கும் உங்கள் அளவுக்கு பாலகுமாரன் எழுத்துகள் பிடிக்கும். நான் ஜே மோ வலை பக்கத்தில் பாலகுமாரன், ராஜேஷ் குமார், ரமணி சந்திரன், புஷ்பா தங்கதுரை எல்லாரும் ஒன்று என்று சொல்ல வந்தது, எல்லாரும் வாசகர்களை மகிழ்வித்தார்கள் என்ற அர்த்தத்திலேயே.

    ஜே மோ அவர் அளவிற்கு ரமணி சந்திரனும், பால குமரனும் எழுதுவது இல்லை என்று தரப் படுத்துதல் தவறு.

    கமபனின், இளங்கோ வின் எழுதிகளோடு ஜே மோ தனது எழுத்தை ஒப்பிட விரும்புவது இல்லை.

    இளங்கோ அடிகளின் எழுத்தோடு விஷ்ணு புரத்தை ஒப்பீடு செய்து விஷ்ணு புரம் இலக்கியமே இல்லை என்றால் எப்படி இருக்கும்.

    ஜே மோ, புதுமை பித்தன், கோணங்கி எல்லாம் படிக்காதீர்கள், நேரிடையாக எல்லலரும் கம்பன், இளங்கோ சீவக சிந்தாமணி மட்டும் படியுங்கள் என்றால் முறையாகுமா.

    ReplyDelete
  2. ஒவ்வொரு பிரிவிலும் சிறந்தவர்கள் இருக்கிறார்கள் என்ற அர்தத்தில் நீங்கள் சொல்வது சரிதான்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா