Tuesday, August 24, 2010

அடல்ட்ஸ் ஒன்லி கவிதையில் அசலும் நகலும் -இலக்கிய அக்கப்போர்

அன்புள்ள பதிவர் பிச்சைக்காரன் அவர்களுக்கு ..

மண்டபத்தில் உட்கார்ட்ந்து யாரிடமும் கேட்காமல் நானே சொந்தமாக சில அஜால் குஜால் கவிதைகள் எழுதி இருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுமாறு கேட்டு கொள்கிறேன்..


. . .. ;-)பழசும் புதுசும் ;-)...

வேலை முடிந்ததும்

காசை குறைவாக கொடுத்தேன்..

“ அவ்வளவுதான் தர முடியும் ..

கட்டில் பழசு” என்றேன்...

கட்டில்தான் பழசு,
கட்டழகி அல்ல என்று வந்தது பதில்...
;-)பதிலடி;-)

இளமையாக காட்டிக்கொள்ளும்

மனைவியை கிண்டலடிக்க

நினைத்தான்..

விருந்து ஒன்றில்

” ஆறு குழந்தைக்கு அம்மாவே “
என அன்பாக அழைத்தான்...

கடுப்பான மனைவி

பழிவாங்க நினைத்தாள்

“ கொஞ்சம் பொறுங்கள், வருகிறேன்

நான்கு குழந்தைக்ளுக்கு அப்பாவே “ என்றாள்அன்புடன் ,
தமிழ் வெறியன்


அன்புள்ள தமிழ் வெறியன் அவர்களுக்கு..

எழுச்சியுடன் நீங்கள் எழுதிய கவிதை உணர்வு என் பதிலை படித்ததும் அடங்கிவிடும் என அஞ்சுகிறேன்..

தமிழ் இலக்கிய மரபில் அஜால் குஜால் கவிதைகளுக்கு தனி இடம் உண்டு .. வேலை இல்லாத சிலரால் துவக்கப்பட்ட இந்த கவி மரபு அதன் பின் வேலையை விட்டு விட்டு எழுதும் அளவுக்கு

பரிணாம வளர்ச்சி அடைந்தது.

இது போன்ற கவிதைகளை உணர்வு பூர்வமாக எழுத வேண்டும். யோசித்து எழுதக்கூடாது. அனுபவத்தில் இருந்து எழுதுவதுதான் நிஜம்..மற்றதெல்லாம் நகல்...

சிலர் ஆங்காங்கு குஜால் வார்த்தைகளை போட்டுவிட்டால் , அது கவிதை என நினைக்கிறார்கள்..இது தவறு ...

கேரளாவின் புகழ் பெற்ற இலக்கியவாதி என்னுடன் பேசும்போது, இலக்கியவாதி என்பவன் , உலகத்தை பரிசோதனை கூடமாக்கி , தான் ஓர் ஆராய்ச்சியாளனாக செயல்பட வேண்டும் என்றார்.

அந்த அடிப்படையில், பஸ்சில் , சில இளம் பெண்கலிடம் சில சோதனைகள் செய்து பார்த்தபோதுதான் , கவிதை எங்கும் இருப்பதை உணர்ந்தேன்... ( நான் பொறுக்கி அல்ல. இருந்தாலும் சோதனை

அடிப்படையில் இதை செய்ய வேண்டியதாகி விட்டது..இலக்கியத்தை நான் தானே காப்பாற்ற வேண்டி இருக்கிறது ?? )
இதோ சில கவிதைகள்

;-)ஜென் கவிதை - ஒரு கை ஓசை;-)

ஒரு முறை பஸ்சில் ஒரு பெண்ணை உரசினேன்..
அவள் முறைத்தாள்..

நீயும் எஞ்சாய் செய்..

இரு கை சேர்ந்தால்தான் ஓசை என்றேன்..

ஒரு கையிலும் ஓசை வருமே என்றாள்.

எப்படி என்றேன்..

பளார் என ஓர் அறை விட்டாள்...

இதுதான் ஒரு கை ஓசைதர்ம அடி வாங்கினாலும் ஜென் தத்துவ ஞானம் அப்போது கிடைத்தது....


;-)இறைவனின் திருவிளையாடல்;-)


ஒரு பெண்ணை மேலும் கீழுமாக பார்த்து சொன்னேன்..

என்னே இறைவனின் திருவிளையாடல்..

உன்னிடம் சில பகுதிகளில் கஞ்சன்

சில பகுதியில் வள்ளலாக இருக்கிறானே , என்றேன்..

அவள் சொன்னாள்...

என்னே அவன் திருவிளையாடல்...

முள்ளை மிதித்தும் காலில் குத்தவில்லை..

காலில் புதிய செருப்பு...

செருப்படி வாங்கினேனா இல்லையா என்பது கவிதை தரிசனம் அல்ல. நெருப்பு போல கவிதை பிறந்ததுதான் முக்கியம்...
இதே போல அனுபவம் சார்ந்த பின் நவீனத்துவ கவிதை எழுத பழகுமாறு கேட்டுக்கொள்கிறேன்..


வாக்களிக்க , ta.indli.com/site/pichaikaaran.blogspot.com

2 comments:

  1. முதலில் அவர் இப்போ இவரோ ம்ம் நடக்கட்டும் ஒரு மனுஷனை பின்னூட்டப் பெட்டியையே மூட வைத்து விட்டீர்களே ஐயா

    ReplyDelete
  2. அத்வைத தரிசனத்தில் பிரித்து பார்க்கும் மரபு இல்லை . அவர் , இவர் -இருவருக்குள்ளும் இருப்பது இலக்கியம் என்ற இறை சக்தி இருக்கிறது

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா