Saturday, January 1, 2011

2011- டாப் டென் அச்சங்கள்

புத்தாண்டு பிறந்ததை பலர் மகிழ்ச்சியோடு வரவேற்றாலும், அந்த மகிழ்ச்சிக்குள் ஒரு பயம் ஒளிந்திருப்பதை யாரும் மறுக்க முடியாது..
எத்தனையோ வகை பயங்களை மனதில் பதுக்கி வைத்துக் கொண்டு , ஹேப்பி நியூ இயர் என சிரித்த படி சொல்லும் கலை நம்மவர்களுக்கு மட்டுமே வரும்..
நமக்கு சந்தோஷம் இல்லாவிட்டாலும், அடுத்தவர்கள் தவறாக நினைக்க கூடாது என்பதற்காக நாமும் சிரித்தபடி வாழ்த்துவோம்..
அனைத்து பயங்களையும் இங்கே பட்டியல் இட முடியாது..
2011ம் ஆண்டை பற்றிய டாப்10 பயங்களை மட்டும் பார்க்கலாம்**************************************************************
10 தேர்தல்
தேர்தல் ஆண்டு என்பதால் அரசியல்வாதிகள் என்னென்ன பொய்கள் சொல்ல போகிறார்களோ என்பது முக்கிய பயங்களில் ஒன்று…
ஆனால் பழகி போச்சு என்பதால் பத்தாவது இடம்தான்
9 பதிவுலக சர்ச்சைகள்
அவ்வபோது யாராவது பிரச்சினையில் மாட்டுவதும், கண்ணீர் விடுகிறேன், வெட்கப்படுகிறேன், போன்ற அனுதாப அறிக்கைகளும் , மன்னிப்பு கேள் போன்ற ஆவேச அறிக்கைகளும் இந்த ஆண்டும் தொடருமா என்பது முக்கிய பயம்..
ஆனால் இதுவும் பழகிப்போன ஒன்று
8 காப்பி
கஷ்டப்பட்டு நாம் பதிவிடுவதை சிலர் காப்பி அடித்து தம் பதிவாக போட்டு விடுவார்கள்..
ஆனால் இதில் பயம் இல்லை… பழகிப்போன ஒன்றுதான்.. ஆனால் நாம்தான் காப்பி அடித்தோம் என அவர்கள் குற்றம் சாட்டிவிடுவார்களோ என்பது வரும் ஆண்டில் முக்கிய பயம்..இது சென்ற ஆண்டுகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
7 யாரைத்தான் நம்புவதோ..
ஒரு பதிவரின் எழுத்தை ரசித்து படிப்பவன் நான்.. அவரை அடிக்கடி சந்தித்து இலக்கிய சர்ச்சை செய்வது வழக்கம்..
ஒரு நாள் சோகமாக இருந்தார்.. காரணம் கேட்டபோது, யாரோ ஒருவர் அவர் பெயரில் போலியாக இயங்குவதாக சொன்னார்.. இதனால் தன் பெயர் கெடுகிறது என ஆத்திரப்பட்டார்.
நான் அந்த போலிக்கு மெயில் அனுப்பி, நண்பனாகி அவருடன் பேசும் வாய்ப்பை பெற்றேன்.
இவ்வளவு நல்லவரான அவர் இப்படி செய்யலாமா என கேட்டபோதுதான் உண்மை தெரிந்தது..
உண்மையில் அவர்தான் ஒரிஜினல் பதிவராம்.. அவரை காப்பி அடித்து இன்னொருவர் புகழ் பெற்று விட்டாராம்… அந்த புகழை நம்பி என்னை போல பலர் ஏமாந்து விட்டோமாம்…
கேட்ட எனக்கு அதிர்ச்சி..
இப்போது பழகி வரும் பதிவர்கள் உண்மையிலேயே அவர்கள்தானா என்ற பயம் வந்து விட்டது..
இது ஒரு முக்கிய பயம்..

6 நிறுத்தப்படுமா..
சமீபத்தில் கூகிள் நிறுவனம் தன் முதல் இடத்தை இழந்தது…
இதனால் சீர் திருத்த நடவடிக்கைகளில் ஒன்றாக, பிளாக் சர்வீஸை நிறுத்தி விடுமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது
6 A )பதிவுலகம் பிரபலம் அடைய தொடங்கியதை அடுத்து, பல பிரபலங்கள் அவ்வப்போது பதிவர்களை திட்டுவது வாடிக்கையாகி விட்டது..
அடுத்து திட்டு வாங்கப்போவது யார்..திட்டப்போவது யார் என்ற கிலி பலரிடமும் உள்ளது
5அலுவலக அக்கப்போர்
பலர் அலுவலகம் செல்வதே பதிவுகளை பார்வையிடவும், பதிவிடவும்தான்..
இதை மோப்பம் பிடித்த சில அலுவலகங்கள், இதை தடை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளன..
இந்த வில்லத்தனம் தன் அலுவலகத்திலும் வந்து விடுமோ என்பது பலரின் அடிப்ப்படை பயம்
4 சாமியார்
எந்த சாமியாராவது மாட்டிகொள்வாரோ என்பது அடுத்த பயம்..
அவர்கள் ஜெயிலுக்கு போவது நமக்கு கவலையில்லை… ஆனால் ஏதாவது வீடியோ கேசட் ரிலீஸ் செய்து விட்டு போய் விடுகிறார்கள்.. அதை வாங்கி பார்க்காவிட்டால் தலை வெடித்து விடும் அபாயம் இருக்கிறது..
அன்சென்சார்ட் வெர்ஷன் பார்க்க அதீத செலவு ஆகிறது..
இந்த செலவு நம்மை பயமுறுத்துகிறது
3 காவேரி பிரச்சினை
சொல்லவே வேண்டாம்.. அவ்வப்போது இந்த பிரச்சினை கிளம்புவது பயம் என்றால் , பலரும் அரசுகளுக்கு அட்வைஸ் சொல்லி பதிவிடுவார்களே என்பதை நினைத்தால் பெரும் பயமாக உருவெடுக்கிறது
2 விஜய் , அஜித் பட ரிலீஸ்
இவர்கள் படம் ரிலீசானால்  ஆரம்பிக்கும் எஸ் எம் எஸ் யுத்தம் பயமளிக்க கூடியது..
செல்போன் இல்லாதவர்களுக்கு ஆபத்து இல்லை என்பது ஆறுதல்
1, கமல் தன் அடுத்த படத்தை ரிலீஸ் செய்து விடுவாரோ..
மேக்கப் போட்டு கொள்வதை நடிப்பு என்றும், மெட்ராஸ் பாஷையில் பேசுவதை காமெடி என்றும் நினைக்கும் இவர் படம் வந்தால், பயம் தயாரிப்பாளர்களுக்கு மட்டும் அல்ல..
ரசிகர்களுக்கும்தான்.. படம் பிடிக்கவில்லை என சொல்ல முடியாமல், நல்ல படம்.. மக்களுக்க்கு புரியவில்லை என பழியை போட வேண்டும்..
முதல் நாளே தியேட்டர் காலியாக இருந்தாலும், கவலையே படாமல், படம் ஹிட் ஆயிடிச்சு .. ஹிட் ஆயிடிச்சு  என அழுகையை மறைத்து கொண்டு சொல்ல வேண்டும்… படத்தின் வெற்றிக்கு என்ன காரணம் என கமல் எஃப் எம் ரேடியோவில் பேசுவதை வேதனையோடு கேட்க வேண்டும்…
மற்ற பயம் எல்லாம் ஒரு தரப்போடு முடிந்து விடுபவை.. ஒட்டு மொத்த தமிழ் நாட்டை மட்டுமின்றி, தமிழ் பேசும் மக்கள் இருக்கும் எல்லா நாடுகளிலும் அச்சத்தை ஏற்படுத்துவது கமல் பட ரிலீஸ்தான்..
எனவே இதற்கே முதல் இடம்

23 comments:

 1. //மேக்கப் போட்டு கொள்வதை நடிப்பு என்றும், மெட்ராஸ் பாஷையில் பேசுவதை காமெடி என்றும் நினைக்கும் இவர்//
  என்ன இப்படி சொல்லிடீங்க? அதானே 'இந்தியன் ஸ்டாண்டர்ட்'?

  //ஒட்டு மொத்த தமிழ் நாட்டை மட்டுமின்றி, தமிழ் பேசும் மக்கள் இருக்கும் எல்லா நாடுகளிலும் அச்சத்தை ஏற்படுத்துவது கமல் பட ரிலீஸ்தான்//
  ஆகா! கடைசில தலைவர இப்பிடி வாரிடீங்களே! புத்தாண்டின் முதல் பலத்த கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்! :-)

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. சாரு-ஜெமோ ரசிகர்களின் மோதலை விட்டுவிட்டீர்களே..அதானே ரஜினி-கமல் பயத்தைவிடவும் பெரியது..ஹா..ஹா...

  ReplyDelete
 3. >>> அது என்னங்க JPC…………? இந்த வருடம் அநியாயம் செய்த வார்த்தை..
  ரெண்டு கட்சியும் இந்த வருசமாவது ஒழுங்கா ஸ்கூலுக்கு (நாடாளுமன்றம்) வரட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..பார்வையாளன்!!

  ReplyDelete
 4. தெனாலி பயம் போல அடுக்கி விட்டீர்களே, அதுவும் 1-வது இடம் அவருக்கே. நானும் கமல் ரசிகை தான். ஆனால், அவருக்குத் தன் அடையாளத்தில் சமீபத்தில் குழப்பம் வந்த்தாகத் தோன்றுகிறது

  ReplyDelete
 5. புத்தாண்டின் முதல் பலத்த கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்! "

  புத்தாண்டின் முதல் பின்னூட்டமே அமோகமா இருக்கே :)

  ReplyDelete
 6. தெனாலி பயம் போல அடுக்கி விட்டீர்களே, அதுவும் 1-வது இடம் அவருக்கே. நானும் கமல் ரசிகை தான். ஆனால், அவருக்குத் தன் அடையாளத்தில் சமீபத்தில் குழப்பம் வந்த்தாகத் தோன்றுகிறது

  அவர் தானும் குழம்பி , ஊரையும் குழப்புபவர்

  ReplyDelete
 7. இந்த வருடம் அநியாயம் செய்த வார்த்தை..
  ரெண்டு கட்சியும் இந்த வருசமாவது ஒழுங்கா ஸ்கூலுக்கு (நாடாளுமன்றம்) வரட்டும்”

  அவர்கள் வந்தாலும் நஷ்டம்தான் ..வராவிட்டாலும் நஷ்டம்தான்

  ReplyDelete
 8. சாரு-ஜெமோ ரசிகர்களின் மோதலை விட்டுவிட்டீர்களே.”

  அதை தனியாக எழுத வேண்டும்..

  ReplyDelete
 9. //10 தேர்தல் //

  அது பயம் இல்லங்க காமெடி...

  //9 பதிவுலக சர்ச்சைகள்//
  இதெல்லாம் இல்லைனா சுவாரஸ்யம் குறைந்திடும்...

  //8 காப்பி//
  நாம பேமஸ் ஆகுறோம்னு இது ஒரு அறிகுறி.. அப்படி யாராவது நீங்க தான் காப்பி அடிச்சீங்கன்னு சொன்னா சொல்லுங்க.. போட்டுடுவோம்..

  //7 யாரைத்தான் நம்புவதோ..//
  சத்தியமா இது நான் தாங்கோ.!!!

  //6 நிறுத்தப்படுமா..//
  வாய்ப்புகள் குறைவு.!!

  ReplyDelete
 10. //5அலுவலக அக்கப்போர்//
  இதுதான் பாஸு சரியான பயம்.!!

  //4 சாமியார்//
  ஓ.. அவரா நீங்கள்.!!! நீங்க சாமியார் இல்லையே.!!(ஏதாச்சும் வீடியோ விட்டுடாதீங்க..!!)

  //3 காவேரி பிரச்சினை//
  ஹலோ இதுதான் ரொம்ப சலிச்சுபோனது.. இதுதான் 10வது இடமாயிருக்கனும்..

  //2 விஜய் , அஜித் பட ரிலீஸ்//
  ஓ.. நீங்க சூர்யா ரசிகரா.!! விஜய், அஜித்த கேவல படுத்துறீங்களே அவங்க ரசிகர்கள் பாத்தா சும்மா விடுவாங்களா.. இருந்தாலும் விஜய்யும், அஜித்தும் ரொம்ப கேவலமானவங்கன்னு நீங்க மெயில் அனுப்புனீங்களே அது கொஞ்சம் கூட சரியில்ல..(நாராயணா.! நாராயணா.!)

  //1, கமல் தன் அடுத்த படத்தை ரிலீஸ் செய்து விடுவாரோ..//
  சத்தியமா இத கண்டிக்கிறேன்.!! தோழா.1 ஒரு தனிபட்ட மனிதரை நீங்கள் இப்படி கேவலபடுத்தாதீர்கள்.. நீங்கள் சொல்வதை பார்த்தால் கமலுக்கு நடிக்க தெரியாது என சொல்வது போல் உள்ளது.. நண்பரே பயம் பயமென சொல்லிவிட்டு இந்த ஆண்டின் முதல் சண்டைக்கு நீங்களே அடித்தளம் அமைக்கிறீர்கள்... எனது ஆட்சேபனையை பெருவாரியாக செலுத்துகிறேன்.. கொஞ்சம் நாகரீகமாக உங்கள் மனவெளிபாடை எதிர்பார்க்கிறேன்.. இப்படியல்ல..

  ReplyDelete
 11. தமிழ்மணத்தில் 102வது இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.. அப்ப நான் எந்த இடமிருப்பன்.. 1000 தாண்டி போகுமோ.???

  ReplyDelete
 12. இருந்தாலும் விஜய்யும், அஜித்தும் ரொம்ப கேவலமானவங்கன்னு நீங்க மெயில் அனுப்புனீங்களே அது கொஞ்சம் கூட சரியில்ல..(நாராயணா.! நாராயணா.!)"

  அட ஆண்ட்வா..
  ஏன் இந்த கொலை வெறி?

  ReplyDelete
 13. அப்ப நான் எந்த இடமிருப்பன்..”

  எங்கள் மனதில் உங்களுக்கு முதல் இடம்தான்

  ReplyDelete
 14. சத்தியமா இது நான் தாங்கோ.!!!:

  உணமையான கூர்மதியன் நீங்கதானா?

  ReplyDelete
 15. //ஏன் இந்த கொலை வெறி?//

  இதிலென்ன கொலைவெறி.?? தங்கள் கருத்தை வெளியில் கொண்டுவந்துள்ளேன்.. அவ்வளவுதானே.!!

  //எங்கள் மனதில் உங்களுக்கு முதல் இடம்தான்//

  ஆஹா.!! உச்சி குளிருது.. யாருப்பா அது.. இவரு கன்ட்ரோல் பண்ணுங்கப்பா கன்ட்ரோல் பண்ணுங்கப்பா..

  //உணமையான கூர்மதியன் நீங்கதானா?//

  அப்படி சொல்லிடமுடியாது.. உலகத்துல பார்வையாளன் போல பல என்னைவிட பெரிய புத்திசாலிகள் இருக்கின்றனர்.. இருந்தாலும் நீங்க விருப்பபடுறதால ஏத்துகிறன்..

  ReplyDelete
 16. மேக்கப் போட்டு கொள்வதை நடிப்பு என்றும், மெட்ராஸ் பாஷையில் பேசுவதை காமெடி என்றும் நினைக்கும்//
  இந்த கருத்து 100 சதவீதம் உண்மை. பாலசந்தர் காலங்களில் நன்றாக நடித்த ரஜினி,கமல் இப்போது சீனியர் ஆகிவிட்டதால் வெறும் மேக்கப் பலத்தில் படம் ஓடிவிடும் என்று நினைப்பதே காரணம். அந்த டைரக்டர் படத்தில் நடித்தால் ஹிட் ஆகும் என்ற காலம் போய் அந்த நடிகரின் கால்சீட் கிடைத்தாலே போதும் என்று நிலமை மாறியதே காரணம் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 17. ஞாயமான அச்சம் கமலை ரொம்பவும் கலாய்க்கிறீர்களோ

  ReplyDelete
 18. இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
  இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
  மகிழ்வான முத்தாண்டாய்
  மனங்களின் ஒத்தாண்டாய்
  வளங்களின் சத்தாண்டாய்
  வாய்மையில் சுத்தாண்டாய் மொத்தத்தில்
  வெத்தாண்டாய் இல்லாமல்
  வெற்றிக்கு வித்தாண்டாய்
  விளங்கட்டும் புத்தாண்டு.

  ReplyDelete
 19. மீண்டும் தமிழ்மணம் தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் 16-இல் 1-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. நல்லாயிருக்கு பார்வையாளன். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 21. இந்த பயங்கள் நியாயமானதுதான் என்றாலும்கூட 2011இல் மிக முக்கிமான பயங்கள் இரண்டு விடுபட்டுவிட்டதே.
  ஒன்று தமிழ்நாட்டு மெகா தேர்தல்! அடுத்தது கிரிக்கட் வேர்ள்ட் கப்!!

  ReplyDelete
 22. கமல் மேட்டர் சூப்பர். அவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியல விருமாண்டிக்கு பிறகு ஒரு படமும் மக்களை கவரவில்லை.

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா