Sunday, July 3, 2011

ஞானிகள் நாய்களை விரும்புவது ஏன்? - சாரு நிவேதிதா

ஞாயிறு விடுமுறையை தொலைக்காட்சியில் செலவிட நான் என்றும் விரும்பியதில்லை . எனவே தொலைக்காட்சிக்கும் எனக்கும் சம்பந்தம் இருக்காது.. ஆயினும் சாரு நிகழ்ச்சிக்காக ஆவலாக காத்து இருந்தேன்…



அவர் பேச இருப்பது தத்துவமோ, இலக்கியமோ அல்ல... வளர்ப்பு மிருகங்கள் பற்றிய நிகழ்ச்சி... ஆனால் அதிலும் தன் முத்திரையை பதிப்பார் என்பது எனக்கு தெரியும்.. எனவே சரியான நேரத்தில், தொ.கா முன் அமர்ந்தேன்..

இயல்பாக பேச ஆரம்பித்தார் சாரு... அவர் ஒரு புறம் பேச , அவரது செல்லங்களான பப்புவும் , சோராவும் ( நாய்கள் என்று சொன்னால் அவற்றுக்கு பிடிக்காதாம் ) உடல் மொழியால் பேசிக்கொண்டிருந்தன...

மனிதர்களுக்குள் நிலவும் அன்புக்கும், நாய்கள் மேல் நாம் வைக்கும் அன்புக்கும் என்ன வித்தியாசம்? நாய் எப்படி மனிதனை விட உயர்ந்த நிலையில் இருக்கிறது?  போன்ற விஷயங்களை சுவையாகவும் , தத்துவ நோக்கிலும், அன்புடனும் எடுத்துரைத்தார்..

அவர் பேசியதில் இருந்து....   
*******************************************

ஒரு காலத்தில் எனக்கும் நாய்களுக்கும் சம்பந்தம் இருந்தது இல்லை... சில ஆண்டுகளுக்கு முன் ஒரு மழை நாளில் ஒரு நாயை பார்த்தேன்..  அதை எடுக்க வளர்க்க ஆரம்பித்தேன்.. காலப்போக்கில் அதன் மீது என்னுடனான நெருக்கம் அதிகரித்தது. அதன் பெயரும் பப்புதான்...  நாயின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள்தான்... எனவே சில ஆண்டுகளில் அது இறந்து விட்டது. 
மிகவும் மன வேதனை அடைந்தேன்..


அப்போதுதான் டாக்டர் அருண் எனக்கு பப்புவை அறிமுகப்படுத்தினார்..இது வெளினாட்டு இனத்தை சேர்ந்தது... தனி கவனத்துடன் வளர்க்க வேண்டும்.. கடும் வெயில் இதற்கு ஒத்து வராது.  பப்பு ஒரு சாப்பாட்டு பிரியன்.. 


 என் மேல் பப்புவுக்கும் , சோராவுக்கும் பயங்கர பொசசிவ்னெஸ் உண்டு .. நான் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வரும்போது , என்னை யார் முதலில் கொஞ்சுவது என்பதில் அவற்றுக்கு இடையே நடக்கும் சண்டை சுவையாக இருக்கும்.


வெளியே சென்று இருக்கும் போது, ஏதாவது ஆட்டோ சத்தம் கேட்டால் , நான் தான் வந்து விட்டதாக நினைத்து , அவை குலைக்க ஆரம்பித்து விடும்.
இந்த அளவுக்கு அன்பு இருப்பதால்தான், மகாபாராததில் தர்மர்  தன் நாயையும் தன்னுடன் சொர்க்கம் அழைத்து சென்றார் என கூறப்பட்டுள்ளது...


செயிண்ட் பெர்னார்ட் என்று ஒரு நாய் வகை இருக்கிறது . பப்ப்வும் ஒரு செயிண்ட்தான்.. அதற்கு கோபமே வராது.. 


மனிதனின் அன்புக்கும் நாயின் அன்புக்கும் வேறுபாடு இருக்கிறது..  நாயின் அன்பு அன்கண்டிஷனல்... ஒரு மனிதனுக்கு தேவை என்றால்தான் அன்பு காட்டுவான்...ஆனால் அன்பாக இருப்பது நாயின் இயல்பு தன்மை... நிபந்த்னை இல்லாத அன்பு...
நான் தியானம் செய்ய அமரும்போது , அது என் மடியில் வந்து அமர்ந்து கொள்ளும் ( தியான  நிலையில்  அவர் அமர, அவர் மடியில் அது அமர்ந்து கொண்டது ) 


சோரோவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அது சாப்பாட்டு பிரியன் அல்ல.. ராயல் ஃபுட் மட்டும்தான் சாப்பிடும்... மற்றவை சாப்பிட்டால் வாந்தியாகி விடும்..


ஒரு முறை அதற்கு பெட் விரித்து வைக்க மறந்து தூங்கி விட்டேன். நள்ளிரவு தற்செயலாக விழித்து பார்த்தால் , என் அருகிலேயே தூங்காமல் அமர்ந்து கொண்டு இருந்தது.. பதறி போய் எழுந்து அதன் பெட்டில் தூங்க வைத்தேன்.


எழுத்தாளனும் துறவியும்  ஒன்று.. இருவரும் தனிமையில் வாழ்பவர்கள்... அவர்களுக்கு  நெருக்கமாக இருப்பவை நாய்கள்தான்..


நான் பேச்சுக்காக நாய்கள் என சொல்கிறேனே தவிர பொதுவாக இவற்றை நாய்கள் என சொல்வதில்லை.. சொன்னால் இவற்றுக்கு பிடிக்காது... 


என் மகன் , மனைவி உள்ளிட்ட யாரிடம் செலுத்தாத அன்பை இவ்ற்றின் மீது செலுத்துகிறேன்.


இவற்றின் காலத்துக்கு பின் எவற்றின் ஆன்மா எங்கே போகும் .இவற்றுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? ஏன் இந்த வாழ்க்கையில் இணைந்தோம்? 







15 comments:

  1. //எழுத்தாளனும் துறவியும் ஒன்று.. இருவரும் தனிமையில் வாழ்பவர்கள்... அவர்களுக்கு நெருக்கமாக இருப்பவை நாய்கள்தான்..//

    நல்ல வரிகள். இன்று ஒரு தகவலில் நாய்க்கும் ஞானிக்கும் உள்ள ஒற்றுமை குறித்து கேட்டது நினைவுக்கு வந்தது.

    இனம் இனத்தோடு சேரும்போல

    ReplyDelete
  2. "இன்று ஒரு தகவலில் நாய்க்கும் ஞானிக்கும் உள்ள ஒற்றுமை குறித்து கேட்டது நினைவுக்கு வந்தது."

    எழுத்து சித்தர் பாலகுமாரன் இது குறித்து நிறைய எழுதி இருக்கிறார் ..

    ReplyDelete
  3. Great Job. It need special Interest and dedication to do this. Blogging ,Face Book and Twitter is Just abut Sharing What you Enjoyed and wants others to Enjoy. You are doing the right thing.

    ReplyDelete
  4. என்னங்க அவர் குரங்கை கூட்டிட்டு வாக்கிங் போறார்...
    (நான் அந்த நாய்கிட்ட கேட்டேன்)

    ReplyDelete
  5. எங்கள் வீட்டு நாய்க்கு நான் "வண்டு முருகன்" என்று பெயர் வைத்து உள்ளேன் :)
    அந்த பெயரில்தான் அவனை எல்லோரும் அழைப்பார்கள்.
    நான் சனி ஞாயிறு இரு தினங்கள் மட்டும் சொந்த வீட்டிற்கு செல்வது உண்டு...
    அந்த இரு தினங்களும் வண்டு முருகன் என்னுடன் தான் எந்நேரமும் சுற்றி கொண்டு இருப்பான்...

    மனிதர்களை விட நாயிடம் அருமையான ஜீவன் உள்ளது.....
    நாய் இயற்கைக்கு மிக அருகில் உள்ளது..
    நாயிடம் உள்ளது unconditionl love என்று சொல்ல முடியாது.... ஆனால் அதீத அன்பு என்று சொல்லலாம்....அளப்பரிய அன்பு,தூய்மையான அன்பு என்று சொல்லலாம்....
    நான் வீட்டில் உள்ள அனைவரயும் விட வண்டு முருகனுக்கு அதிக பிஸ்கட் கொடுப்பேன் ....அதானால் அவனுக்கு என் மீது அதித அன்பு :)

    ReplyDelete
  6. சாருவின் பேச்சை பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  7. @ தனிக்காட்டு ராஜா
    உங்கள் அனுபவம் அருமை . @ தனிக்காட்டு ராஜா
    உங்கள் அனுபவம் அருமை .

    ReplyDelete
  8. @ பிரபாகரன் ,
    ஜோக் அருமை . சீரியஸாக சொல்ல வேண்டும் என்றால் , ஒரு மிருகம் நண்பரையே ஏமாற்றாது , நண்பரை மிரட்டாது , நண்பரை பழி வாங்க நினைத்து , பெண்மையை ஆயுதமாக பயன்படுத்தாது . அந்த வகையில் , நீங்கள் சொன்னது ஜோக் அல்ல . பாராட்டு . நன்றி@ பிரபாகரன் ,
    ஜோக் அருமை . சீரியஸாக சொல்ல வேண்டும் என்றால் , ஒரு மிருகம் நண்பரையே ஏமாற்றாது , நண்பரை மிரட்டாது , நண்பரை பழி வாங்க நினைத்து , பெண்மையை ஆயுதமாக பயன்படுத்தாது . அந்த வகையில் , நீங்கள் சொன்னது ஜோக் அல்ல . பாராட்டு . நன்றி

    ReplyDelete
  9. எங்கள் வீட்டில் ஒரு நாய் இருக்கிறது, சாரு என்று பேர் வைத்திருந்தேன் இப்போது இவ்வளவு நடந்த பிறகு அதற்க்கு பெருத்த அவமானம் என்று நினைத்து பிச்சைக்காரன் என்று மாற்றிவிட்டேன்...

    ReplyDelete
  10. தவறு அந்த பெண் மீது என்றே வைத்துக்கொள்வோம்!

    மிஷ்கினை கொண்டாடிய இவர், மிஷ்கின் தன்னுடைய புத்தகத்தை பாராட்டவில்லை என்பதற்காக 30 பதிவுகள்
    போட்டு திட்டினார்.

    கடவுள் (இவருக்கு) நித்தியானந்தா கையும் களவுமாக மாட்டியவுடன் "சரசம் சாமியார் சல்லாபம்" என்று புத்தகம் வெளியிட்டார்.

    61 வயது ரஜினி 37 வயது ஐஸ்வர்யாவை காதலிப்பது "ஆபாசம்" என்று நிஜமில்லாத ஒன்றை (எந்திரன் திரைப்படம்) விமர்சித்தார்.

    உப்பு சப்பு இல்லாத விஷயங்களுக்கு "ஆபாசம்" என்று பெயர் சூட்டும் இவர், தான் ஒரு சிக்கலில் மாட்டியவுடன், விளக்கமளிக்காவிட்டாலும் பரவாயில்லை, இது சம்பந்தமாக இவருடைய அடிபொடிகள் வெளியிடும் நக்கல் பதிவுகளை வெளியிடுகிறார், சந்தேகம் இவர்மீதுதான் திரும்புகிறது.

    இவர் புத்தகம் படித்து இருக்கிறீர்களா, என்று உடனே கேள்வி எழுப்பாதீர்கள், படித்து இருக்கிறேன்.

    ஒன்று புரிந்து கொள்ளுங்கள் நண்பரே, தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் மற்றவர்கள் தவறு செய்தால் மட்டும் "ஆபாசம்" என்று திட்டும் இவர், ஒரு தவறில் தான் மறைமுகமாக சம்பந்தப்பட்டால்கூட ஒத்துக்கொள்ள மறுப்பதுதான் மிகவும் ஆச்சர்யம் அளிக்கிறது.

    தமிழ் சினிமா ரசிகர்களின் Hero Worship மனோபாவத்தை விமர்சிக்கும் இவர், அதே மனோபாவத்தை தன்னுடைய ரசிகர்களுக்கு ஏற்படுத்த முனைகிறார். அதற்கு "நான் ரொம்ப நல்லவன்" வேஷம் தேவைப்படுகிறது.

    இறுதியாக, நண்பரே, படைப்புகளை மட்டும் ரசியுங்கள்!

    ReplyDelete
  11. @ Anonymous (கடைசியாக பின்னூட்டமிட்ட அனானிக்கு)

    இவ்வளவு நல்ல, தெளிவான கருத்தை ஏன் அனானியாக வந்து சொல்ல வேண்டும்... அடையாளம் காட்டியே சொல்லியிருக்கலாமே...

    ReplyDelete
  12. அனானி நண்பரே . உங்கள் நல்லெண்ணம் புரிகிறது . ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் . ஒரு பெண்ணின் பிரைவைஸி பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை . சாருவை மன நிம்மதி இழக்க செய்து , அடுத்த நாவலை தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் அந்த பதிப்பக முதலாளி செயல்படுகிறார் . இந்த நிலையில் , அதைப்பற்றி மேலும் மேலும் பேசுவது, முதலாளியின் சதிக்கு பலியாவதில் முடியும் . ங்கள் . ஒரு பெண்ணின் பிரைவைஸி பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை . சாருவை மன நிம்மதி இழக்க செய்து , அடுத்த நாவலை தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் அந்த பதிப்பக முதலாளி செயல்படுகிறார் . இந்த நிலையில் , அதைப்பற்றி மேலும் மேலும் பேசுவது, முதலாளியின் சதிக்கு பலியாவதில் முடியும் .

    ReplyDelete
  13. ///@ பிரபாகரன் ,
    ஜோக் அருமை . சீரியஸாக சொல்ல வேண்டும் என்றால் , ஒரு மிருகம் நண்பரையே ஏமாற்றாது , நண்பரை மிரட்டாது , நண்பரை பழி வாங்க நினைத்து , பெண்மையை ஆயுதமாக பயன்படுத்தாது . அந்த வகையில் , நீங்கள் சொன்னது ஜோக் அல்ல . பாராட்டு ./// அதே வெறி கொண்ட மிருகமாக இருந்தால் தாங்கள் மேற்சொன்ன அத்தனையையும் என்ன அதற்கு மேலாகவே செய்யும்..))

    ReplyDelete
  14. நாம நாய் பத்தி பேசுறோம்னு தெரிஞ்சி ஒரு அனானி நாயின் புகைப்படத்தையே போட்டுட்டார்!!

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா