Thursday, August 23, 2012

பதிவர் சந்திப்பும் மதுபான சர்ச்சையும் - என் நிலைப்பாடு

 நன்மைக்கும் , தீமைக்கும் இடையே தகராறு ஏற்பட்டால் , அதில் சிக்கலே இல்லை. கண்ணை மூடிக்கொண்டு நன்மையை ஆதரித்து விடலாம். ஆனால் நன்மைக்கும் , நன்மைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால்தான் சிக்கல்.

சென்னையில் பதிவர் சந்திப்பு என்பது நல்ல விஷயம். ஆரோக்கியமானதும் கூட. இப்படி ஒரு கூட்டம் நடக்க வேண்டும்,. ஓர் அமைப்பு உருவாக வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இப்போது நிறைவேற இருக்கிறது. இளைஞர்களும், சீனியர்களும் இணைந்து செயல்படுவதை பார்க்கையில் சந்தோஷமான இருக்கிறது.

ஒரு நல்ல நோக்கத்தோடு மதுவை எதிர்ப்பது என்பது நல்ல விஷ்யம். எத்தனையோ குடும்பங்கள் சீரழிகின்றன. ஏழைகள் மேலும் ஏழைகளாகிறார்கள். இத்தகைய மதுவை சிலர் எதிர்ப்பதும் ஆரோக்கியமானதுதான்.

ஆனால் இந்த நல்ல விஷ்யங்களுக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு இருப்பது துரதிர்ஷ்டவசமானது.

உண்மையில் இரு தரப்புமே , ஒருவரை ஒருவர் ஏற்க கூடியவர்கள்தான். ஆனால் சொன்ன விதத்தில் , புரிந்து கொண்ட விதத்தில் சில தவறுகள் இருக்க கூடும்.

பதிவர் சந்திப்பினால் ஆதாயம் அடைய போவது டாஸ்மாக் மட்டுமே என்பது  போல ஒருவர் கருத்து தெரிவித்து இருந்தார் . இதனால் சிலருக்கு மன கசப்பு ஏற்பட்டு சர்ச்சை ஏற்பட்டது.

அவர் சொன்ன அந்த கருத்து சற்று அதீதமானது . குடிக்க வேண்டும் என ஒருவர் விரும்பினால் , பதிவர் சந்திப்புக்கு வந்துதான் குடிக்க வேண்டும் என்பதில்லையே. அதற்கென ஆயிரம் இடங்கள் இருக்கின்றனவே. நேரம் செலவழித்து பதிவர் சந்திப்புக்கு வந்துதான் குடிக்க வேண்டும் என்பது இல்லையே.

அவர் சொல்ல வந்த கருத்து வேறு. சற்று மாற்றி சொல்லி விட்டார்.
மற்றவர்களுக்கு கஷ்டம் தராத பட்சத்தில் , குடிப்பது என்பது ஒருவரது தனிப்பட்ட விஷ்யம்.
இதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் இதில் பெருமை படுவதற்கும் எதுவும் இல்லை. தண்ணி அடிப்பதை கிளுகிளுப்பு கலந்த பெருமிதத்துடன் அந்த காலத்தில் பேசிக்கொள்வார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் அலுவல் ரீதியாகவே சில சமயம் குடிக்க வேண்டி இருக்கிறது. எல்லா இடங்களிலும் மது சுலபமாக கிடைக்கிறது. எனவே மது அருந்துவதை வீர செயலாக பேசுவதில் அர்த்தம் இல்லை என அவர் சொல்ல விரும்பி இருக்கலாம்.

ஆனால் கொஞ்சம் அதீதமாக பதிவர் சந்திப்பு நடத்துவதே தண்ணி அடிப்பதற்குதான் என சொல்லி இருக்க வேண்டாம் .  பதிவர் சந்திப்பில் முக்கிய பங்காற்றும் பலர் குடி பழக்கத்துக்கு கடும் எதிர்ப்பாளர்கள்.

உதாரணம் காட்டுவதற்காக சிலரை மட்டும் சுட்டி காட்டி இருக்கவும் வேண்டாம். அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் புரிந்து கொள்ள கூடியதே.

பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டவர்களுக்கு தெரியும். குடி காரணமாக பிரச்சினைகள் வந்தது இல்லை.

டீ , காபி சாப்பிடுவது போல மது அருந்துவது ஒரு சாதாரணமான செயல். இதற்கு அதீத முக்கியத்தும் கொடுப்பதால் தான் , அந்த நண்பர் ஒரு தவறான நிலைப்பாடு எடுப்பதற்கு காரணம் என்பதும் புரிந்து கொள்ள கூடியதே..

என்னை பொருத்தவரை பதிவர் சந்திப்பையும் ஆதரிக்கிறேன் . மது அருந்துவதற்கு எதிரான அந்த நண்பரையும் நல் எண்ணத்தையும் ஆதரிக்கிறேன்.



15 comments:

  1. இருவர் கருத்திலும் தவறு இல்லை ஆனால் அந்தப் பதிவு குறிப்பிட்ட ஒரு சிலரை நோக்கி ஒரு ஸ்க்ரீன் ஷாட் போட்டதால் தான் பெரும் குழப்பம்.

    குடிப்பது என்பது தனி நபர விருப்பம்.

    ReplyDelete
  2. தோழரே...
    நான் பதிவர் அல்ல, பொதுவான வாசகன், அந்த பதிவில் வந்த பின்னுட்டங்களைப் பார்த்தால் குடியை ஆதரிப்பவர்கள் குழுவினர் தான் அதிகமாக இருக்கிறார்கள் எதிர்பவர்கள் மிகக் குறைவு . பதிவில் சம்மந்தப்பட்டவர்களின் தாய், தந்தை சொன்னாலும் கேட்கமாட்டோம் , எங்களுக்கு சூடு, சொரணை இல்லை என்று சொன்ன பிறகு அந்த சர்ச்சைக்குரிய ஸ்கிரின் ஷாட் இருந்தால் ஏன்ன?இல்லாவிட்டால் ஏன்ன ?? குடி முழ்கி போய்விடுமா ஏன்ன? அதற்காக ஏன் சண்டையிடவேண்டும் ??
    பொதுவில் தான் குடித்ததை ஒப்புக்கொண்டபிறகும் ஸ்கிரின் ஷாட் ஐ நீக்கவேண்டும் என்று கோருவதில் என்ன நியாயம் உள்ளது? என்பதை அவர்கள் உணரமாட்டார்களா ..??
    கண்ணியம் இல்லாதவர்களின் வலைப்பூவில் கண்ணியம் இருக்குமா என்பதே நியாயவான்களின் கவலை+கேள்வி....

    ReplyDelete
  3. @கும்மாச்சி... ஆம் ... அதை தவிர்த்து இருக்க்லாம்..

    ReplyDelete
  4. என்னதாம்ப்பா சொல்ல வர?

    ReplyDelete
  5. என்னதாம்பா சொல்ல வர ?

    1. மது அருந்துவது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது...

    2 அதை வீரச்செயலும் இல்லை.. பாவச்செயலும் இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.

    3. மது அருந்திவிட்டோ , அருந்தாமலோ மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுத்தால் , அது தான் தவறு...

    4 . மது அருந்துவது பாவம் என சில மதங்கள் சொல்கின்றன. மது அருந்துவது அருவருப்பானது என சில பெண்கள் நினைக்கிறார்கள். எனவே பொது நிகழ்ச்சிகள் நடக்கும்போது , அனைத்து தரப்பினரும் வர வேண்டும் என நினைத்தால் , மது அருந்துவதை பொது நிகழ்ழ்சிகளோடு கலந்து பேச கூடாது என சிலர் வேண்டுகோள் முன் வைக்கிறார்கள்.

    ReplyDelete
  6. அனைவரும் இதுக் குறித்து எழுதிவிட்டோம் எனத் தோன்றுகின்றது !!!

    இன்னும் மிச்சம் இருப்போரும் இதனை எழுதிவிட்டால் நல்லாருக்கும் ..

    :)

    //என்னை பொருத்தவரை பதிவர் சந்திப்பையும் ஆதரிக்கிறேன் . மது அருந்துவதற்கு எதிரான அந்த நண்பரையும் நல் எண்ணத்தையும் ஆதரிக்கிறேன்.//

    எனது நிலைப்பாடும் அதுவே !!! ஆனால் பதிவர்கள் சந்திப்பு என்றாலே குடித்துவிட்டு கும்மாளம் போடும் இடம் தான் என்ற அவரது எள்ளல் தொனி கண்டிக்கப்படவேண்டியது. அவற்றில் உள்நோக்கம் இருப்பதாகவே படுகின்றது.

    ReplyDelete
  7. உங்கள் நிலைப்பாடு சரியானதே, பதிவர் சந்திப்பு வெற்றியடைய வாழ்த்துவோம்!

    ReplyDelete
  8. காபி டீ குடிப்பதோடு மது குடிப்பதை ஒப்பிடுவது ஏற்க முடியவில்லை. இரண்டும் ஒன்றாகுமா?
    மது அருந்துவதும் தவிர்ப்பதும் அவரவர் உரிமை, விருப்பம் என்ற அளவில் நீங்கள் சொல்வது புரிகிறது. பதிவர் விழாவை இப்படி புரட்டியிருப்பது எதிர்பாராத சிக்கல். இப்போது அவைக்கு வருவோரை மோப்பம் பிடிப்பார்களா? :-)

    ReplyDelete
  9. நல்ல பதிவு சார். நீங்கள் வந்தால் மகிழ்ச்சி!!

    ReplyDelete
  10. சரியான கருத்து..

    ReplyDelete
  11. @ பதிவர் சந்திப்பு என்றால் குடித்து கும்மாளம் இடும் இடம் என்ற தவறான எண்ணம் அவருக்கு ஏன் ஏற்பட்டது என்பதும் சிந்தனைக்குரியது

    ReplyDelete
  12. @ கும்மாச்சி... வெளிப்படையாக வெளியிடப்பட்ட கருத்தைதானே ஸ்கிரீன் ஷாட் எடுத்து போட்டேன். இது எப்படி தவறாகும் என்கிறார் அந்த சகோதரர்...

    ReplyDelete
  13. @ பழூர் கார்த்தி... கண்டிப்பாக இது போன்ற நல்ல விஷ்யங்கள் வெற்றி பெற வேண்டும்

    ReplyDelete
  14. @ அப்பாதுரை... மது என்பது இயல்பான பானம் ஆகி விட்டது என்பது நடை முறை எதார்த்தம். பேருந்தில் , சினிமா தியேட்டரில் மது அருந்தி விட்டு எத்தனையோ பேர் வந்து செல்கின்றனர்.. இதை எல்லாம் யாரும் தடுக்க இயலாது.. என்னை பொருத்துவரை மது அருந்துவதற்காகவே பிரத்தியேகமாக நடத்தப்படும் பல சந்திப்புகளுக்கு சென்றுள்ளேன். ஆனால் பொதுவாக ஒரு சந்திப்பு நடக்கும் நிலையில், அது மதுபான சந்திப்பு என்ற முத்திரை பெறுவது அழகல்ல.

    ReplyDelete
  15. @ சிவகுமார்... கண்டிப்பாக வருகிறேன்..

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா