Saturday, August 18, 2012

ரா கி ரங்கராஜன் - என் நிறைவேறாத கனவு

சில நாட்களுக்கு முன் “ நான் கிருஷ்ணதேவராயன் “ நாவல் படித்தேன்.. மிகவும் பிடித்து இருந்தது. மேலும் பலருக்கும் பரிந்துரை செய்தேன். அவரை சந்த்தித்து பாராட்ட நினைத்தேன்.


அவர் உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார் என கேள்விப்பட்டதும், சரி, அவர் குணம் அடைந்ததும் சந்திக்கலாம் என விட்டு விட்டேன்.இந்த நிலையில் அவர் காலமான செய்தி அதிர்ச்சியாக இருந்தது.

” நான் கிருஷ்ணதேவரயான் “ நாவலை நான் பரிந்துரை செய்து , அவரை படித்த என் நண்பர்கள் எல்லோருமே அவர் எழுத்தின் மேல் காதலில் விழுந்து விட்டார்கள் . அவரது வேறு புத்தகங்கள் என்ன படிக்கலாம் என கேட்க ஆரம்பித்தனர்.

என்னை பொறுத்தவரை, அவர் எழுத்தை படித்துதான் வளர்ந்தேன் என்றே சொல்ல வேண்டும். சின்ன வயதில் இருந்தே படிது வருகிறேன். புரிந்தும் , புரியாமலும் சின்ன வயதில் அவரது பட்டாம்பூச்சியை படித்தது இன்னும் நினைவு இருக்கிறது. அந்த விபரம் புரியாத வயதில் அந்த எழுத்து ஏற்படுத்திய மனச்சித்திரங்கள் , அதை பற்றி பெரியவர்கள் பேசும்போது ஆவலாக கேட்டு ரசித்தது , எனக்கும் அந்த நாவல் புரிந்து விட்டதாக எண்ணிக்கொண்டது எல்லாம் இனிய நினைவுகளாக இருக்கின்றன,.

அதன் பிறகு விபரம் தெரிந்த வயதில் படிக்கும்போதுதான் அவரது மேதமையை புரிந்து கொள்ள முடிந்தது. பல பெயர்களில் , பல விதங்களில் எழுதியவர் அவர். மொழி பெயர்ப்பில் புதிய டிரெண்டையே உருவாக்கியவர் அவர். பிற்காலத்தில் நான் ஆங்கில புத்தகங்களை தேடிப்படிக்க
எப்படி கதை எழுதுவது என்று அந்த காலத்தில் ஒரு தொடர் எழுதினார். அதன் பின் பயிற்சியும் நடத்தினார். அதில் முதல் மாணவராக குமுதம் ஆசிரியர் எஸ் ஏ பி சேர்ந்தாராம்.

லைட்ஸ் ஆன் என்ற பெயரில் சினிமா செய்திகள் எழுதினார். செய்திக்கு பின் அவர் அளிக்கும் ஆங்கில ப்ஞ்ச் நச் என இருக்கும்.

உதாரணம்
தளபதி என்றதும் நினைவு வருகிறது.
குட்லக் தியேட்டரில் இரண்டு பிரிவியூ தியேட்டர்கள் இருக்கின்றன. இரண்டிலும் ஒரே சமயத்தில் தளபதி படம் போட்டார்கள். அப்படியும் கூட்டம் தாங்காமல் நடுநடுவே நாற்காலிகளைப் போட்டு சமாளிக்க நேரிட்டது. ஜி.வி.தான் வரவேற்றுப் பேசினார். மணிரத்தினம்? எங்கேயும் காணோம். Two is company, three is crowd.

கட்டுரைகள் , சிறுகதை , நாவல் என அவர் தொடாத விஷயமே இல்லை.  நான் அண்ணா நகரில் இருந்தபோது , அண்ணா நகர் டைம்சில் அவர் கட்டுரை இருப்பதை தற்செயலாக ஒரு நாள் கவனித்தேன், அதன் பின் , அண்ணா நகர் டைம்ஸ் தேடி படிக்க ஆரம்பித்தேன் , அவர் கட்டுரைக்காக. சில சமயங்களில்  நான் இல்லாத நேரத்தில் , அண்ணா நகர் டைம்சை போட்டு விட்டு சென்று விடுவார்கள்.  அது எங்கே என தேடி படிப்பேன் . அதன் பின் அந்த கட்டுரைகள் புத்தகமாகவும் வந்தது.

அவன் என்ற பெயரில் அவர் எழுதியுள்ள சுயசரிதை முக்கியமான ஒரு நூல் என கருதுகிறேன். பல விஷ்யங்களைப் பற்றி அதில் சொல்லி இருப்பார்.

குமுதத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின் துக்ளக், விகடன் போன்ற பத்திரிக்கைகளிலும் எழுதி இருக்கிறார். குமுதத்தில் பணியாற்றாமல், முழு நேர எழுத்தாளராக இருந்து இருந்தால், எழுத்து துறையில் மேலும் பல முத்திரைகளை பதித்து இருப்பார் என கருதுகிறேன்.அவரை சந்த்தித்து வணங்க வேண்டும் என்ற என் கனவு நிறைவேறாமலேயே போய் விட்டது என்பது எனக்கு பெரிய குறையாகவே என்றும் இருக்கும்.

அவருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள் 

8 comments:

 1. மயிலாப்பூர் அல்லயன்ஸ் பதிப்பகத்தில் போய்க் கேட்டால் ரா.கி.ர. எழுதிய 'கன்னா பின்னா கதைகள்', 'திகில் கதைகள்' போன்ற தொகுப்புகள் கிடைக்கும். இரண்டு மணிநேரம் போவதே தெரியாமல் மூழ்கி விடலாம்! அவர் மொழிபெயர்த்த ஆங்கில திகில் சிறுகதைத் தொகுப்பும் அபாரமாக இருக்கும். அவர் மட்டும் இங்கிலாந்தில் பிறநிதிருந்தால் ஜெஃப்ரி ஆர்ச்சர் would have run for his money!

  சரவணன்

  ReplyDelete
 2. ரா.கி ரங்கராஜன் தமிழுக்குக் கிடைத்த வரம்

  ReplyDelete
 3. அவரது நான் கிருஷ்ணதேவராயன்.... சான்ஸே இல்லைங்க.... அற்புதமான படைப்பு

  ReplyDelete
 4. எனது அதிவிருப்ப எழுத்தாளர் அவர்... அவரது ஆன்மா அமைதியடையட்டும்...

  ReplyDelete
 5. அவர் மறைந்தாலும் அவரது எழுத்துகள் என்றும் மறையாது

  ReplyDelete
 6. நல்ல முறையில் அஞ்சலி செலுத்தியுள்ளீர்கள். எனது பதிவையும் படிக்கவும். இணைப்பு :
  http://ranjaninarayanan.wordpress.com/2012/08/19/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/

  ReplyDelete
 7. நல்ல அஞ்சலி. அவருடைய இரு கட்டுரைகள் இங்கே:
  http://s-pasupathy.blogspot.ca/2012/08/1_19.html

  http://s-pasupathy.blogspot.ca/2012/08/2_3701.html

  ReplyDelete
 8. நினைவுக்கு வருகிற அவரது மற்றொரு பஞ்ச்லைன்-

  சாரதா ப்ரீதா (வெள்ளையத் தேவனில் ராம்கி தங்கையாக வந்தவர்) பேட்டி.
  '-அவர் அம்மாவிடம் கேட்டேன். உங்க பொண்ணுக்குக் குரல் நன்றாக இருக்கிறதே. அவரே டப்பிங் பேசியிருக்கலாமே!
  - பேசியிருக்கலாம். ஆனா டப்பிங் சமயத்துல பொண்ணு வயசுக்கு வந்துடுச்சு. அதான் கலந்துக்க முடியாம போச்சு.
  Catch them young என்பதை கோடம்பாக்கத்துக்காரர்கள் என்ன சின்சியராகக் கடைப்பிடிக்கிறார்கள்!'

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா