Friday, April 19, 2013

ஏற்காடு விசிட் - ஏமாற்றமா , உற்சாகமா ?



எப்படி இருக்க வேண்டும் என சிலரிடம் கற்றுகொள்ளலாம்.. எப்படி இருக்க கூடாது என சிலரிடம் கற்கலாம்.

நான் சமீபத்தில் ஏற்காடு சென்று இருந்தேன். சிலர் பக்கத்து ரூமில் தங்கி இருந்தார்கள். ஊர் திரும்பும் வரை அவர்கள் ரூமை விட்டு வெளியே வரவே இல்லை.  டீவியில் ஏதாவது  பார்த்து கொண்டு இருப்பார்கள். எதையாவது சாப்பிட்டுகொண்டு இருப்பார்கள். கொஞ்சம் மது அருந்துவார்கள்.  கடைசியில் கிளம்பி விட்டார்கள். இதை ஊரிலேயே செய்து இருக்கலாமே.. 

இன்னும் சிலர் ஓர் ஊருக்கு போனால் விக்கிபீடியாவை படித்து விட்டு , அதன் படி அந்த ஊர் இருக்கிறதா என பார்ப்பார்கள்.


என்னை பொருத்தவரை அந்த ஊரின் பிரத்தியேக தன்மையை ரசிப்பது , எதிர்பாராத தன்மையை எதிர்கொள்வதையே விரும்புவேன்.

இப்படி சில இடங்களை நான் சமீபத்தில் கர் நாடக மானிலத்தில் ரசித்தேன். ஆனால் அவ்ற்றை பற்றி எழுத பயமாக இருக்கிறது.

பெரும்பாலானோர் அழகை ரசிப்பவர்க்ள்தான் என்றாலும் , ஒரு சிலரின் பொறுப்பற்ற தன்மை அச்சமூட்டும். புதிய இடங்களை எப்படி ரசிப்பது என தெரியாமல் , மது புட்டிகளை உடைப்பது , பிளாஸ்டிக் பாட்டில்களை கொட்டுவது , உணவு பொருட்களை வாரி இறைப்பது என  நாஸ்தி செய்து விடுவார்கள்.

ஆனால் ஏற்காடு எல்லோருக்கும் தெரிந்த இடம்தான். ஆனால் கிளர்ச்சியூட்டும் இடங்களோ , சுற்றி பார்க்கும் இடங்களோ குறைவு என்பதால்,  தேவையற்ற கூட்டம் அங்கு குவிவதில்லை. 

     சிலர் பிரமாண்டமாக எதையோ எதிர்பார்த்து வந்து விட்டு, ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதும் நடக்கும். 

    எதையும் எதிர்பாராமல் வெறுமனே சென்றால் நல் அனுபவமாக இருக்கும் என தோன்றியது.  நகர வாழ்க்கையில் வானத்தை காண்பதே பெரிய விஷயமாகி விட்டது.  எண்ணற்ற நட்சத்திரங்களை சிறு வயதில் காணும்போது அது அளிக்கும் மன சித்திரங்கள் அபாரம்.  அந்த உணர்வுகளை ஏற்காட்டில் அடைய முடிந்தது.

மலைகள் எல்லாமே அழகானவைதான். எங்கு சென்றாலும் ரசிக்கலாம். ஆனால் ஒப்பீட்டளவில் சென்னைக்கு அருகில் அமைந்து இருப்பது ஏற்காடு என்பதால் அது ஓர் அட்வாண்டேஜ்.

இரவு உணவுக்காக வெளியே ச்சென்று இருந்தேன். திடீர் என மின்சாரம் போய் விட்டது. விளக்கு ஏதும் இல்லை. கடும் இருட்டு. அந்த இருட்டை அன்றாட வாழ்வில் உணர்ந்தது இல்லை. அந்த இருட்டில், மரங்களுக்கு மத்தியில் நின்று கொண்டு நட்சத்திரங்களை பார்த்தபோது , இயற்கையின் ஒரு பகுதியாகவே நான் மாறிவிட்டது போல இருந்தது. அந்த அமைதி, தனிமை , அமைதியில் இருக்கும் ஒரு வகை சப்தம் , ஒலியில் இருக்கும் ஒருவகை நிசப்தம் என மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

அதே வானத்தை பகலில் பார்ப்பது வேறோர் அனுபவம். வானமும் , கடலும் சந்திப்பதை பார்த்து இருக்கிறோம். ஆனால் வானமும் பூமியும் சந்திப்பதை காண்பது அபூர்வம், மலைகளில் மட்டுமே இந்த காட்சி கிடைக்கும். எங்கு நோக்கினும் வானம் என்பது ஓர் சூப்பர் அனுபவம்,

மலைகளை ஏன் ஆன்மீகத்திற்கு தேர்ந்தெடுத்தார்கள் என்பது புரிந்தது.

ஆனால் ஆன்மீகம் என்பது என்பது வேறு,ஆலய வழிபாடுகள் என்பது வேறு. எனவே ஆலயங்கள் செலவதில் எனக்கு ஆர்வம் இல்லை.

ஆனால் ஏற்காட்டில் எதை பார்க்கலாம் என சிலரிடம் கேட்டபோது சில இடங்களை சொன்னார்கள். சில ஆலயங்களை சொல்லி, அதில் ஏதும் விசேஷம் இல்லை ,போக வேண்டாம் என எல்லோருமே சொன்னார்கள் . இப்படி அவர்கள் சொன்னதே எனக்கு ஒரு விசேஷமாக  தோன்றியது. 

அவர்கள் சொல்வதை வைத்து பார்த்தால் , பெரிய கூட்டம் வராது போல. சரி நாம் போய் அமைதியை ரசிக்கலாம் என கிளம்பினேன்,

பெரிய கூட்டம் இல்லாத பெரிய ஆலயங்களும்  , சிறிய சிறிய ஆலயங்களும் இருந்தன .
லலிதா சகஸ்ரனாமம் பலர் சொல்வார்கள். ஆனால் லலிதா என்ற கடவுள் குறித்து பலருக்கு தெரியாது. தெளிவான விளக்கங்களுடன் கூடிய அருமையான கோயில் இங்கு உள்ளது.

மொத்தத்தில் அமைதி விரும்பிகளின் சொர்க்கபுரி ஏற்காடு என்றால் மிகையில்லை.
















5 comments:

  1. பதிவை ரசித்தேன்.

    ReplyDelete
  2. ஏற்காடு இதுவரை செல்லவில்லை
    தங்கள் பதிவுஒரு நல்ல வழிகாட்டிப் பதிவாகவும்
    போகவேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டியது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மனம் குளிர்ந்த பதிவு

    ReplyDelete
  4. இப்படி சில இடங்களை நான் சமீபத்தில் கர் நாடக மானிலத்தில் ரசித்தேன். ஆனால் அவ்ற்றை பற்றி எழுத பயமாக இருக்கிறது.//

    Y...........????????

    sonnaal ubayogamaaga irukkum.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா