Monday, May 25, 2015

பாலுமகேந்திரா முன்பு அழுதேன் - சாரு நிவேதிதா உருக்கமான பேச்சு


தமிழ் ஸ்டுடியோ அமைப்பு சார்பாக ’ பாலு மகேந்திரா விருது “ வழக்கும் விழா 24.05.2015ல் , கோடம்பாக்கத்தில் இருக்கும் BOFTA கல்லூரியில் நடந்தது.,.. காலை 10 மணிக்கு ஆரம்பித்த விழா இரவு பத்து மணி வரை நடந்தது... பாலு மகேந்திராவின் தலைமுறைகள் திரைப்படம் , 16 குறும்படங்கள் திரையிடப்பட்டன... நல்ல அருமையான ஏசி மற்றும் ஒலி ஒளி வசதியுடன் கூடிய திரையரங்கில் அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் சினிமா பார்த்தது நல்ல அனுபவம்.. நாசர் உட்பட ஏராளமான ஆளுமைகள் , ரசிகர்கள் கலந்து கொண்டு ஒரு மாநாடு போல விழா நடந்தது
பாலுவின் தலைமுறைகள் படத்தை படம் வந்தபோது பார்த்து நான் எழுதிய குறிப்பு இதில்... தலைமுறைகள் - பிச்சையின் பார்வையில்..
மாலை ஆறு மணிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிகள் துவங்கின...
பீ.லெனின் மாலன், சாரு நிவேதிதா , லீனா மணிமேகலை, கார்த்திக் சுப்புராஜ்,கோ.தனஞ்செயன் , அருண் ஆகியோர் பேசினர்...-_______________________________________
குறும்படம் எனும் தனி வகை  - கார்த்திக் சுப்புராஜ்
அருணை எனக்கு அந்த காலத்திலியே தெரியும்.. குறும்படங்கள் குறித்து அவருடன் நிறைய பேசி இருக்கிறேன். அவருக்கு ஒரு உலக குறும்பட சீடியை அந்த காலத்தில் கொடுத்தேன்.. குறும்படம் என்பது தனியான ஒரு வகை. அது வணிக சினிமாவின் சுருக்கப்பட்ட வடிவம் அல்ல... நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்காக குறும் படம் எடுத்தபோது கூட அதை ஆர்வத்துடன் செய்தேன். தயாளரிப்பாளரை பிடிக்க வேண்டும் என்பது என் நோக்கமாக இருந்தது இல்லை... குறும்ப்டங்களுக்கு என தனியான ஒரு சந்தையை உருவாக்கி பல குறும்பட இயக்குனர்களை ஊக்குவிக்க ஓர் அமைப்பை உருவாக்கி இருக்கிறேன். அடுத்து பல முக்கியமான ஆளுமைகள் பேச இருப்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
_______________________________
சிறுபத்திரிக்கை போல குறும்படம் -மாலன்நிகழ்ச்சிக்கு குறித்த நேரத்துக்கு முன்பே வந்து விட்டேன்.. அமைதியாக தனிமையாக அமர்ந்து வானத்தை கவனித்துக்கொண்டு இருந்தேன். நீலம் , சாம்பல் நிறம் , சிவப்பு , கருப்பு என அதன் நிற மாற்றத்தை ரசித்தேன். இப்படி வானத்தை ரசித்து வெகு நாட்கள் ஆகி விட்டன. சமீபத்தில் தனஞ்செயனின் புத்தகம் படித்தேன். மிகவும் பிடித்திருந்தது. அவரிடம் பாராட்டை சொன்னேன். இந்த இரண்டு அனுபவங்களுக்காகவும் தமிழ் ஸ்டுடியோவுக்கு நன்றி. அந்த காலத்தில் எல்லாம் குறும்படங்கள் பார்ப்பது எல்லாம் சாத்தியம் இல்லாமல் இருந்தது. எங்கோ ஒரு சில இடங்களில் கிடைக்கும் வாய்ப்பை தேடிச்சென்று பயன்படுத்துவோம், நாங்கள் ஒரு குறும்படம் எடுக்க முயன்றோம். அதில் பல சவால்களை சந்தித்தோம் .காரண்ம் அன்று உரிய வசதிகள் இல்லை, இன்று வசதிகள் உள்ளன, அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமானால் நிறைய வாசியுங்கள். பாலு மகேந்திராவை ஓர் இயக்குனராக உங்களுக்கு தெரியும். அவரை ஒரு நல்ல வாசகனாக எனக்கு தெரியும். நல்ல வாசிப்பாளர் அவர். நாங்கள் புத்தகங்கள் குறித்தே அதிகம் பேசுவோம். சிறு பத்திரிக்கை இயக்கம் போல குறும்படங்கள் தனி இடம் பிடிக்க வேண்டும்-__________________________________
பாலுவுக்கு நிகர் பாலு மட்டுமே - லீனா மணிமேகலைபாலு மகேந்திராவை நான் அப்பா என்றுதான் அழைப்பேன், எனக்கு அவர் அப்பா போன்றவர். நான் முதன் முதலில் என் படத்தை திரையிட்டபோது அவரை உரிமையுடன் அழைத்தேன்.. அவரும் ஆர்வமாக வந்தார், என் எல்லா திரையிடல்களுக்கும் அவர் வந்து இருக்கிறார். அவருக்கு நிகராக இனி ஒருவர் வர முடியாது, அவர் நம்மை விட்டு மறைந்தது பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் இடையேயான இடைவெளி இப்போது குறைந்து வருகிறது. இன்னமும் கூட நாம் எடுக்கும் படங்களை திரையிட உரிய ஸ்பேஸ் கிடைப்பதில்லை. இது மாற வேண்டும். போட்டிக்கு வந்த படங்களை பார்த்தேன்,. பல நன்றாக இருந்தன. படம் எடுப்பவர்கள் ஒலி அன்ற அம்சத்தில் கவனம் செலுத்த வேண்டும். என் படத்தை பார்த்த ஒரு பிரபல ஆளுமை எனக்கு ஒரு மெயில் அனுப்பினார்.. அது எனக்கு மிகப்பெரிய வெளிச்சம் அளித்தது.. ஷூட்டிங் செல்லும்போது கேமரா இல்லாமல் செல்வது எவ்வளவு அபத்தமோ அதே போன்ற அபத்தம்தான் சவுண்ட் எஞ்சினியர் இல்லாமல் செல்வதும் என சொல்லி இருந்தார். ஒலி அம்சம் மிகவும் முக்கியம்
-______________________________________________
என்னை வென்ற மணி ரத்னம் - சாரு நிவேதிதாஎன்னை எழுதச்சொன்னால் எழுதி விடுவேன். ஆனால் பேச எனக்கு எப்பவுமே தயக்கம் உண்டு. நான் மனதில் பட்டதை பேசி விடுவேன், இதனால் யாராவது புண்பட்டு என்னை ஜென்ம விரோதியாக நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். எழுத்திலும் என்னிடம் ஒளிவு ம்றைவு இல்லை. மது அருந்தியபோது நான் அதை மறைத்தது இல்லை. எந்த பாரில் அருந்தினேன் என்பது உட்பட விரிவாக எழுதுவேன்,. இதை பலர் திட்டினர். இப்போது குடியை விட்டுவிட்டு மகாத்மா காந்திபோல வாழ்கிறேன். இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை.
என்னை பெரும்பாலும் யாரும் பேச அழைப்பதில்லை. காரணம் என்னை அழைத்தால் வேறு சிலரின் பகை வந்து சேரும். சாருவை சும்மா ஃபார்மலாக அழைத்தோம். மற்றபடி அவருக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என சொல்லி தப்பித்துக்கொள்ளுமாறு அமைப்பாளர்களை கேட்டுக்கொள்கிறேன் ( அரங்கில் பலத்த சிரிப்பு )எனது சக பயணிகள் என நினைக்கும் இருவரை சமீபத்தில் ஒரு விழாவில் சந்தித்தேன்.. ஆர்வமாக கைகுலுக்க சென்றேன், ஆனால் என் கைகளை அவர் தட்டிவிட்டு வெறுப்பாக முகத்தை திருப்பிக்கொண்டனர். அந்த அளவுக்கு என்னை வெறுக்கிறார்கள்.
இதனால்தான் நான் மனிதர்களை விட மரங்கள் , விலங்குகளுடன் பேசுவதில் ஆர்வம் காட்டுகிறேன். பாலு மகேந்திராவும் இப்படிதான், ஒருவகையில் பாலு மகேந்திராதான் நான். அவருக்கும் எனக்கும் பல ஆண்டுகள் பழக்கம் உண்டு. ஆனால் அவர் படங்கள எதையும் நான் பார்த்தது இல்லை. வீடு , சங்தியாராகம் பார்த்து விட்டீர்களா என அடிக்கடி என்னை கேட்பார் , நான் இல்லை என்பேன். காரணம் இது போன்ற மாற்று படங்கள் மீது எனக்கு பயங்கர ஒவ்வாமை உண்டு.
துப்பாக்கி , கத்தி போன்ற படங்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் மாற்றுப்படங்கள் என்ற பெயரில் வரும் படங்கள் மீது எனக்கு பயங்கர ஒவ்வாமை உண்டு.
ஒரு காமன்மேனுக்கு இருக்கும் சென்சிபிள் கூட இவர்களுக்கு இருப்பதில்லை. சென்சிபிள் என எதை சொல்கிறேன். சிலர் திரையரங்கில் அமர்ந்தவாறு சத்தம்போட்டு செல்போனில் பேசுவார்கள். காரணம் இந்த நுண் உணர்வு இன்மை. உலக சினிமாக்கள் பார்க்காமல் , எந்த இலக்கிய வாசிப்பும் இல்லாமல் இவர்கள் எடுக்கும் படத்தில் சென்சிபிலிட்டி இருப்பது இல்லை, எனவே இவர்களைக்கண்டாலே எனக்கு பயம்.

எனவேதான் பாலுவின் படங்களை நான் பார்த்தது இல்லை.
முதல் முறையாக நான் பார்த்தது அவரது தலைமுறைகள் படம்தான்.. பார்த்துக்கொண்டிருந்தபோதே அவர் மேதைமையை அறிந்தேன். என்ன ஒரு கலைஞன் என நினைத்துக்கொண்டேன். இத்தனை நாள் இவரை தெரிந்துகொள்ளாமல் போனேனே என வருத்தப்பட்டேன்
மிக அழகான , மிக விலை உயர்ந்த மலர்க்கொத்துடன் அவரை சந்திக்க போனேன். அதை அவர் கையில் கொடுத்தும் ஏன் இவ்வளவு காஸ்ட்லியான மலர்க்கொத்து என ஆச்சர்யப்பட்டார். என்னால் எதுவும் பேச முடியவில்லை. அவர் முன்னால் வெறுமனே அழுது கொண்டே இருந்தேன்.
எப்பேர்ப்பட்ட கலைஞன் அவர். அதன் பின் அவர் படங்களை பார்த்தேன். அவர் படங்களை தாமதாக தெரிந்து கொண்டது எனக்குத்தான் நஷ்டம். அவருக்கு ஒன்றும் இல்லை.
தலைமுறைகள் படத்தை அவர் பாராட்டினாரா இவர் பாராட்டினாரோ என சிலர் பெயர்களை சொல்லி கேட்டேன்.. இல்லை என்றார். பாலச்சந்தர் எழுதிய கடிதம் மட்டும் காட்டினார். மிகச்சிறந்த பாராட்டுக்கடிதம்.
உங்கள் படங்களை பாலுவிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். தமிழ் அல்லது ஹாலிவுட் சினிமாவில் இருந்து கற்றுக்கொள்ளாதீர்கள் .  ஐரோப்பிய சினிமா பாருங்கள். உங்கள் மீது எனக்கு இருக்கும் வெறுப்பை மாற்றுங்கள்எனக்கு மணி ரத்னம் மேல் சின்ன கோபம் இருந்தது,,,ஓ காதல் கண்மணி படத்தை திட்டுவதற்காகவே அந்த படத்தை பார்க்க போனேன்.. ஆனால் அந்த படம் என்னை வென்று விட்டது. எனக்கு மிக மிக பிடித்து இருந்தது. அது போல உங்கள் படங்களால் என்னை வெல்லுங்கள்>
என்னை திருப்திப்படுத்தும் அளவுக்கு படம் எடுக்க முடியாது என சிலர் சொல்லலாம். ஆனால் என்னை திருப்திப்படுத்திய படங்கள் , இயக்குனர்கள் என நூறுக்கு மேல் என்னால் சொல்ல முடியும்...
போட்டிக்கான படங்களை பார்த்துவிட்டு பெஸ்ட் என நான்கு படங்களை பட்டியலிட்டேன். பார்த்தால் அதே படங்களைத்தான் மற்ற நடுவர்களும் தேர்ந்தெடுத்து இருந்தனர்.
நல்ல படம் என ஒன்று இருக்கிறது , அதை ரசிக்கவும் , அதை எடுக்கவும் சென்சிபிலிட்டி தேவை.... அதற்கு வாசிப்பும் , சினிமா பார்த்தலும் உதவும்
-______________
இதன் பின் லெனின் பேசினார். சாரு புத்தகங்களை படித்தாலே போதும் , நிறைய தெரிந்து கொள்ளலாம் என்றார். ஐரோப்பிய சினிமா பார்ப்பதன் அவசியம் , இலக்கிய வாசிப்பு என பலவற்றை தனக்கே உரித்தான முறையில் அழகாக சொன்னார். நேத்து ராத்திரி , அம்மா பாடலில் இருக்கும் ராகத்தை சொன்னது அழகாக இருந்தது.. தன் பாணியில் ஒரு பாட்டு பாடி பேச்சை முடித்தார் அவர்
பிறகு பரிசளிப்பு விழா நடந்தது

1 comment:

  1. Everyone speech is concise and to the point except Mr.Charu, he sounds incoherent like a Brownian motion.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா