Showing posts with label சினிமா. திரைப்படம். Show all posts
Showing posts with label சினிமா. திரைப்படம். Show all posts

Monday, December 23, 2024

வித்தியாசமான இயக்குனர் வித்தியாசமான காதல்

 படித்ததில் ரசித்தது 

.....


ரொம்ப வித்தியாசமான டைரக்டர் அவர். எப்போது நோக்கினாலும் அப்போதுதான் நாலு நாள் சேர்ந்தாற் போல உறங்கி விழித்தது மாதிரியிருப்பார். அந்தக் கண்களில் இனம் புரியாத சோகம் தாண்டவமாடும். கதை விவாதம் என்ற ஒன்று தினந்தோறும் நடக்கும் சில வாரங்களோ, பல மாதங்களோகூட அது நீளும். ஆனால் அசிஸ்டென்ட் டைரக்டர்கள் சொல்கிற எதையும் கேட்டுக்கொள்ள மாட்டார். அப்புறமெதற்கு அவர்கள்? தான் சொல்வதைக் கேட்பதற்காகத்தான்.



அட அவராவது அதை கோர்வையாகச் சொல்வாரா என்றால், மண்ணாங்கட்டி அவர் பேசுவதை அவரே நவீன தொல்காப்பியர்களை வைத்து தமிழில் ரீமேக் செய்தால்தான் உண்டு.


அதுவே அவரிடம் இருக்கும் பெண் உதவி இயக்குனர்கள் என்றால், அவர்களுக்கு சீன் சொல்கிற சுதந்திரம் உண்டு. அதைப் பயன்படுத்துவாரா? மாட்டாரா? என்பதெல்லாம் படமாகி வருகிற வரைக்கும் புரிந்துகொள்ள முடியாத ரகசியம். தன்னுடன் மாய்ந்து மாய்ந்து கதை விவாதம் செய்யும் உதவி இயக்குனர்களுக்கும் உயிர் இருக்கும். பசி இருக்கும். பிள்ளைக்குட்டிகள் இருப்பார்கள். பஸ் இருக்கும். பஸ்சில் டிக்கெட் இருக்கும். என்பதெல்லாம் எதுவுமே தெரியாத, அல்லது தெரிந்துகொள்ள விரும்பாத ஏகாந்தி அவர்.


இல்லையென்றால், மதியம் இரண்டு மணி வரை பேசிக் கொண்டேயிருக்கிற அவர், தனக்கு மட்டும் சிக்கன், மட்டன் ஐட்டங்களை வரவழைத்து வெட்டுவதையும் சரியாக இரண்டு பத்துக்கு வாட்சைப் பார்த்துவிட்டு, 'போய் சாப்ட்டுட்டு வந்திடுறீங்களா? என்று ஷட்டரை குளோஸ் பண்ணிவிட்டு ஒரு குட்டித் தூக்கம் போடுவதையும் எந்த மனிதாபிமானத்தில் சேர்ப்பது?


ஆனாலும் அவர் இயக்கிய படங்கள் தமிழிலும் தெலுங்கிலும் வசூலை வாரிக் குவித்தன. அதெப்படி? அதுதான் அவரது தனிப்பட்ட திறமை. இளமை துள்ளுகிற வயசில் அண்ணன் தம்பிகளாகப் படமெடுக்க வந்தவர்கள் இன்று தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சூத்திரமாகிவிட்டார்கள். இருந்தாலும் இந்த அண்ணன் மட்டும் பிச்சு பிச்சு போட்ட பிகாசோ ஓவியம் போல யாருக்கும் புரியாத படைப்பாளி.


இல்லையென்றால், இவர் இயக்கிய பிரமாண்ட படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆன அந்த வருத்தப்படாத வாலிபர், 'ஆளை விடுங்கடா சாமீ என்று பாதியிலேயே ஷூட்டிங்கிலிருந்து தப்பித்து ஓடி வந்திருப்பாரா? இத்தனைக்கும் அது அவரே வளர்வதற்காக நாலு ஆபீஸ் கதவைத் தட்டி வாய்ப்பு கேட்டுக் கொண்டிருந்த நேரம். அவருக்கே பொறுக்க முடியாத அவஸ்தை அது என்றால் புரிந்துகொள்ள வேண்டியதுதான்.


அட.. அது எப்ப? இரு வேறு உலகங்கள் பற்றிய கதை அது. சினிமாவில் நீண்ட கால தயாரிப்புகள் இருக்கின்றன. ஆனால் இது நீண்ட காலத்திற்கும் முந்திய அந்தக் கால தயாரிப்போ என்று அஞ்சுகிற அளவுக்கு வருஷக்கணக்காக நீண்டது. அதில் ஹீரோவுடன் படம் முழுக்க

டிராவல் ஆகிற கேரக்டர் வருத்தப்படாத வாலிபருக்கு இருபத்தைந்து நாள் நடித்திருந்தார். ஒவ்வொரு நாளும் பிரசவ வார்டில் சேர்த்து பிள்ளையை கிழித்தெடுக்கிற மாதிரியே, எல்லாரிடமும் நடிப்பை வாங்கிக் கொண்டிருந்தார் டைரக்டர்.


'அந்தாளு என்ன நினைக்கிறாருன்னு நமக்கும் புரிய மாட்டேங்குது. நமக்கு புரியற மாதிரி சொல்லித் தொலையவும் மாட்டேங் குறாரு. அட.. நாம எந்த ஸ்பாட்ல நிக்குறோம்னு தெரிஞ்சா அதை வச்சாவது புரிஞ்சுக்கலாம்னா, சுத்தி பச்சை துணியை தொங்க விட்டுட்டு கிரீன்மேட் ஷாட்டுன்னு எடுத்துகிட்டு இருக்காரு. மண்டையிலயிருக்கிற பல்பை பீஸ் போக வைக்காம விட மாட்டாரு போலிருக்கே' என்று ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்தவர்தான்.அதற்கப்புறம் அந்த திசைக்கே போகவில்லை அவர். நல்லவேளை... அங்கிருந்து ஓடி வந்தவருக்குதான் ஒன்பதாம் இடத்துல குரு. அதற்கப்புறம் அவர் செல்வாக்கு உயர்ந்து இன்று பல கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு டாப் ஹீரோவாகிவிட்டார்.


இவரென்ன ஆனார்? படம் வெளிவந்தது. அட்டர் பிளாப். கொல்லன் பட்டறையில கோடாலி செய்யுறவர்கூட, பிரிப்ரேஷன் இல்லாமல் போவதில்லை. கரி எவ்வளவு வேணும்? சம்மட்டி சைஸ் என்ன? அடிக்கிற ஆளுக்கு எனர்ஜி போதுமா? அல்லது பாதியிலேயே பல்ஸ் இறங்கிடுமா? என்றெல்லாம் பார்த்துப் பார்த்துதான் ஒரு கோடாலி செய்வார். இவர் அப்படியா? சுமார் பதினேழரை கோடி லாஸ், நஷ்டத்தை இவர் தலையில் கட்டிவிட்டது நிறுவனம்.


இவர் பண்ணிய ராவடியில் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து ஓடிப்போன ஒளிப்பதிவாளர், தனக்காக ஒதுக்கப்பட்ட நட்சத்திர ஓட்டல் ரூமிற்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டு அறையிலிருக்கும் லேன்ட் லைன் போனையும் துண்டித்துவிட்டு படுத்துவிட்டார். சுமார் ஒன்றரை நாள், யூனிட் முழுக்க, பிரேக் டவுன் ஆன அரசு பஸ்சை போல, நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தது. அப்புறம் ஓட்டல் நிர்வாகத்திடம் கெஞ்சி வேறொரு சாவி போட்டு உள்ளே போய், ஆளை அமுக்கிக் கொண்டு வந்தார்கள்.


'அந்தாளு ஒழுங்கா வேலையைப் பார்க்கலேன்னா இப்படித்தான் என்றார் கேமராமேன். இவங்க ஈகோவுல நம்ம தலையை உருட்றானுங்களே...என்ற கடுப்பில்தான் நம்ம நேரம் வரட்டும் என்று காத்திருந்தது நிறுவனம். சரியாக கத்தி வைத்தார்கள். இன்னும் கடன் தீர்ந்தபாடில்லை.


சூடான இஸ்திரி பொட்டியில சுள்ளுன்னு தண்ணீர் துளியை வீசுன மாதிரிதான், அவ்வளவு மனக்குடைச்சலுக்கு நடுவிலும் காதல் வந்தது இவருக்கு. கல்யாணம் குடும்பம் குழந்தைன்னு ஆயிருச்சேன்னு ஒதுங்கிப் போற உலகமா இது? முதல் மனைவி விவாகரத்து பெறுவதற்குக் காரணமான அந்த நடிகை வெகு காலம் கழித்து மீண்டும் கிராஸ் ஆனார் இவர் வாழ்வில். ஏதோ ஒரு வார இதழின் வண்ணப்பக்கத்தில் அவர் புகைப்படம் வந்திருந்தது.


பக்கோடா போட்றவன் பார்சல் கட்ற பேப்பரையும் நினைச்சுகிட்டா மாவை எண்ணெய் சட்டியில போடுவான்? அப்படியொரு பக்கோடா பார்சலோ, அல்லது வரவழைத்த சஞ்சிகையோ? கரெக்டாக அந்த அட்டைப்படம் அவர் கண்ணில் பட்ட நேரம், ஆந்தையே ரெஸ்ட் எடுக்கப் போகலாமா என்று நினைக்கிற நடுராத்திரி இரண்டு மணி. காதலால் கசிந்துருகிய இருவருக்கும் திடீர் சண்டை வந்தது. ஏன்? எதற்கு? என்பதற்கெல்லாம் ஒரு காரணம் வேண்டுமா என்ன? வந்தது. அவ்வளவுதான். திடீரென தனது கதவோரம் நாலு தெருநாயைக் கட்டி வைத்து டைரக்டரு வரும்போதெல்லாம் காதே கிழிகிற அளவுக்கு குரைக்க விட்டார் நாயகி.



From.. கோடம்பாக்கம் செக்போஸ்ட் ஆர் எஸ் அந்தணன் 

Thursday, June 3, 2021

பிசாசு −2 மிஷ்கின் அப்டேட்

 பிசாசு படம் அனைவருக்கும் பிடித்த படம்.

இயல்பான நகைச்சுவை ,  மனித நேயம் , உறவுகள் , அற்புதமான காதல் , ராதாரவியின் அழகான நடிப்பு போன்றவற்றை ஒரு பேய்ப் படத்தில் பார்ப்போம் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அதில் வரும் ஆட்டோ டிரைவரை யாரும் மறக்க முடியாது


ஆனால் பிசாசு −2 படம் ,  பிசாசு முதல் பாகத்தின் நீட்சி அன்று என மிஷ்கின் கூறியுள்ளார்


கண்ணியமான காதல் , தாய்ப்பாசம் , மனிதநேயம் என கதாநாயன் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என நச் என சொன்னது முதல் பாகம்.   இரண்டாம் பாகம்  கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படம்.  இதற்காக ஆண்ட்ரியா  கடுமை உழைத்துள்ளார். அவருக்கு நல்ல,பெயர் கிடைக்கும்.   அவரது திரை வாழ்வின் முக்கியமான படமாக இருக்கும்  விஜய் சேதுபதி கேரக்டர் ஆச்சர்யப்பட வைக்கும்


முக்கியமான பாத்திரத்தில் பூர்ணா வருகிறார்.   சந்தோஷ் பிரதாப்பும் உண்டு


இவ்வாறு மிஷ்கின் கூறியுள்ளார்


Sunday, January 12, 2020

தர்பார் ரஜினி படமா முருகதாஸ் படமா ?

தர்பார் ரஜினி படமா அல்லது முருகதாஸ் படமா என ஒரு விவாதம் நடந்து வருகிறது .


பேட்ட படம் ஒரு அட்டகாசமான புதுமையான திரைக்கதை என்றாலும் கார்த்திக்சுப்புராஜ் அதை மறைத்து அது எண்பதுகளின் ரஜினி படம் என நினைக்க வைத்து விட்டார். எனவே அதன் வெற்றி ரகசியம் சராசரி இயக்குனர்களுக்கு தெரியப்போவதில்லை.

தர்பார் படத்தைப்பொருத்தவரை அசத்தலான படம் . ஆனால் ஒரு சராசரி ரஜினி ரசிகனுக்கு இது ரஜினி படமாக தெரியவில்லை. ஏன் ?

1 வழக்கமான ரஜினி கதாபாத்திரங்கள் இந்த படம் போல பல்வேறு பரிணாம வளர்ச்சிகள் அடைவதில்லை

2 ரஜினிதான் பெண்களை காப்பதாக அவர் படங்கள் இருக்கும். இதில் அவரால்"அவர் மகளை காக்க முடிவதில்லை. மாறாக மகள் இவரை காக்கிறாள்

3 கதாநாயகி இப்படத்தில் வெறுமனே டூயட் பாடுவதில்லை. யாரோ ஒருவர் என்ற நிலையில் துவங்கி மகள் இல்லாத,நிலையில் அவர் துணை தேவை என பார்வையாளர்களை நினைக்க வைப்பது போல நயன்தாரா கேரக்டர் செதுக்கப்பட்டுள்ளது

4 கூட ஆட்களை கூட்டி வர நினைத்தேன். சரி நாமே பேசிப்பார்க்கலாம்னு வந்தேன் என ரஜினியிடம் பேசும் கதாபாத்திரங்களை 90களில் பார்த்திருக்க மாட்டோம். இதில் பார்க்கிறோம்

5 வழக்கமாக ரஜினியை பில்ட்அப் கொடுத்து காட்டுவதுதான் ஒளிப்பதிவாளர்கள் பணியாக இருக்கும். இப்படத்தில் அவை இருந்தாலும் ஒரு விஷுவல் விருந்தே படைத்து விட்டார் சந்தோஷ் சிவன். செம

6,தன் மகளை கொன்றவனை தேடிப்போகிறார் ரஜினி. ஆனால் அவன் இறந்து விட்டான் என அறிந்து ஸ்தம்பிக்கிறார். இப்படி ரஜினியை குழம்பி நிற்கும் காட்சியை 90களில் பார்த்திருக்க மாட்டோம்

7 கதாநாயன் தன் முயற்சியால் மட்டுமே சினிமாட்டிக்காக வெல்வதில்லை. தற்செயல்களும் உதவுகின்றன ( நம் அன்றாட வாழ்வைப்போல)
இந்த காட்சிகள் படத்துக்கு நம்பத்தன்மை அளிக்கின்றன. கதை அந்தரத்தில் தொங்காமல் மண் மேல் நடக்கிறது

ரயில் நிலைய சண்டை போன்றவைகூட ராஜாதிராஜா , ராஜா சின்ன ரோஜா பட,வகை ரஜினி சண்டை இல்லை. ஆனாலும் ரசிக்க வைக்கின்றன

கண்டிப்பாக இது 90களின் ரஜினி படமல்ல.,முருகதாசின் படம்.  பழைய ரஜினியை பார்க்க முடியவில்லை என ரஜினி ரசிகன் வருந்தாமல் புதிதாக ஒரு ரஜினியை பார்ப்பதில் ரசிகர்களை மகிழ,வைத்ததில் முருகதாஸ் வெற்றி பெற்று விட்டார் !hats off  முருகதாஸ்

Tuesday, January 7, 2020

ford vs ferrari திரைப் பார்வை

விளக்கை ஏற்றுபவன் அதை பலர் காணும்படி மேஜையில் வைப்பான். ஒளித்து வைக்க மாட்டான் என்பார் இயேசு.
அதுபோல நல்ல எழுத்தாளர்கள் , இயக்குனர்களின் படைப்புகள் அனைத்தும் நல்ல படைப்பை உருவாக்குவதன் ரகசியத்தை வெளிப்படையாக சொல்கின்றன. கவனிக்கத்தான் ஆட்கள் குறைவு

ford vs ferrari
அப்படி ஒரு சிறப்பான படம்

போட்டி நிறுவனத்தை சமாளிக்க முடியாமல் திணறும் கார் நிறுவன அதிபர் , இதன் விளைவாக பணி இழப்பு அபாயத்தை சந்திக்கும் விற்பனை மேலாளர் , கார் ரேஸ் ரத்தத்தில் ஊறிய"டிரைவர் ,  கார் வடிவமைப்பில் கில்லாடியான இஞ்சினியர் ஆகிய மேநைகள் ஒரு புள்ளியில் சந்திக்கும் இயற்கை விளையாட்டுதான் படம்

இவர்கள் அனைவருமே உண்மை,மனிதர்கள். தனித்தனியாக வாழக்கை வரலாறு எழுதிய வரலாற்று நாயகர்கள்

விற்பனை மேனேஜர் லீ அயகோக்கா அன்றைய டொனால்ட் டிரம்ப். ஆனால்,அவ்வாய்ப்பை மறுத்தார் என்பது வரலாறு

யாரையும் தாழ்த்திவிடாமல் நன்றாக பேலன்ஸ் செய்து விறுவிறுப்பான படமாக்கியுள்ளனர்;

போர்ட் நிறுவனத்துக்கும் பெராரிக்கும் போட்டி என்பது தலைப்பு என்றாலும் தமக்குள்ளான முரண்களைத்தான் படம் பேசுகிறது

இப்படிப்பட்ட படங்கள் தமிழில் வருமா
என்ற ஏக்கம் இல்லை
காரணம் அரங்கு நிறைந்த காட்சிகளாக  ஆங்கிலத்திலேயே படம் பார்க்கின்றனர் தமிழ் ரசிகர்கள்


Monday, September 9, 2019

ஆதரவின்றி கண் மூடிய கலைஞன்

கல்லூரி வைரமுத்துவின் முதல்பாடலான பொன்மாலைப்பொழுது பாடலில் நடித்த ராஜசேகர் அந்த கால லட்சியவாத இளைஞன் வேடத்தில் கச்சிதமாக பொருந்தினார்.
உண்மையிலேயே லட்சியவதாக இளைஞனாகத்தான் இருந்தார். தன் நண்பர் ராபர்ட்டுடன் இணைந்து பல நல்ன படங்கள் தந்தார்.   ஒரு தலை ராகம் படத்தில் இவர் பங்களிப்பு முக்கியமானது. ஆனால் அதற்கான அங்கீகாரம் கடைசி வரை கிடைக்கவே இல்லை.
பெரிய கனவுகளுடன் சினிமாவுக்கு வந்த அக்கலைஞன் மெகாசீரியல் நடிகன் ஆனார்.

மருத்துவமனை கட்டணம் செலுத்த இயலாமல் சிகிச்சையில் தாமதம் ஏற்பட்டதெல்லாம் பெருங்கொடுமை

அவரது அறிவோ கலையார்வமோ நடிகன் எனும் புகழோ அவருக்கு உதவவில்லை...

தமிழகம் தலை குனிய வேண்டிய நிகழ்வு

Monday, March 4, 2019

கமலும் ஜாதியும் - ராகிர படப்பிடிப்பு


கமல் ஹாசனின் சாதி குறித்த கண்ணோட்டத்தை எழுத்தாளர் ராகி ரங்கராஜன் குறிப்புள்ளதை படிக்க நேர்ந்தது,, அதை பகிர்கிறேன்

கமல்ஹாசனின் சாதி வெறி என்றெல்லாம் சீப்பாக எழுதினால் அது அந்த எழுத்தாளரை அசிங்கப்படுத்துவதாகும் ,, சும்மா ஜாலியாக இருவரும் பேசிக்கொண்டதை பகிர்ந்துள்ளார்,,, அவ்வளவுதான்

மகா நதி படத்தில் ஒரு கேரக்டருக்கு ஒரு நடிகரை பரிந்துரைத்தார் ராகிர.

அய்யய்யோ , அவர் வேண்டாம்.. நான் ஐயங்கார்., வாலி ஐயங்கார்... நம் நண்பர் சுஜாதா அய்யங்கார்.. நீங்களும் அய்யங்கார்... அந்த நடிகரும் அய்யங்கார்

அவருக்கு வாய்ப்பளித்தால் அய்யங்கார் கோஷ்டி என சொல்லி விடுவார்கள்.. அவர் வேண்டாம் என்றாராம் கமல்...

அந்த நடிகர்யார் என அவர் சொல்லி இருந்தாலும் நான் தவிர்த்து விட்டேன்

..

இன்னொரு சம்பவம்

கமலுக்கு அய்யங்கார் பாணியில் நாமம் அணிந்து நடிக்க ஓர் ஆசை இருந்தது.,, ஹே ராம் படத்தில் அது அமைந்தது

எப்பூடி என நாமம் படத்தை காட்டினார் கமல்

சம்யோஜிதமாக வடகலை நாமம் இருக்கும்படி செய்து விட்டீர்களே என்றேன் கேலியாக

காரணம் நானும் அவரும் வடகலை

அதை கேலியாக சொன்னேன்

ஆனால் அவர் அப்படி வைத்த்தில் ஜாதி கண்ணோட்டம் ஏதும் இல்லை’


இப்படி ராகிர சொல்லி இருக்கிறார்



ஜெய்சங்கர் குறித்த ஒரு நினைவுக்குறிப்பு... ராகிர ஒரு கசப்பான சம்பவத்தை எப்படி இலகுவாக சொல்கிறார் பாருங்கள்

என் கதை ஒன்று நாடகம் ஆக்கப்பட்டு டிவியில் ஒளிபரப்பானது

பார்த்து விட்டு ஜெய்சங்கர் போன் பேசினார்

வெகு அருமை.. இப்படி ஒரு படைப்பை  பார்த்ததே இல்லை என்றார்

கொஞ்சம் ஓவராக புகழ்கிறாரோ என தோன்றியது,,, அடக்கத்துடன் நன்று சொன்னேன்

அவர் விடவில்லை... வெகு நேரம் பாராட்டிய பின்புதான் ஓய்ந்தார்


சில மாதங்கள் கழித்து அவரிடம் எனக்கு ஓர் உதவி தேவைப்பட்டது

போன் செய்தேன்’

- நான் ரா கி ர பேசுறேன் என்றேன்

-சரி,, அதுக்கென்ன என்றார் சாதாரணமாக

- சும்மாதான், ஓர் உதவி என்றேன்

- அப்படியா,, என்றார் அலட்சியமாக

தேவைப்படும் உதவியை சொன்னேன் ( பள்ளி ஒன்றில் நண்பர் பையனுக்கு அட்மிஷன் )

- ஓஹோ... அப்படியா என்று கேட்டு விட்டு லைனை கட் செய்தார்

என்ன செய்வது... அன்று அவர் மூடு சரியில்லாமல் இருந்திருக்கலாம்.,, சில மாதங்களுக்கு முன் நல்ல மன நிலையில் இருந்திருக்கலாம்

Wednesday, February 13, 2019

பாக்யராஜின் துரோகமும் பாலா சந்தித்த துரோகமும்


இட ஒதுக்கீடு என்பது நல்ல நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட ஒன்று,, அதன் நோக்கம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது

ஆனால் சில பொதுப்பிரிவினர்  தம் சான்றிதழ்களில் ஃபிராடு செய்து , தம்மை இட ஒதுக்கீட்டின் பலன்களை பெற முயல்வதும் , பிறகு மாட்டிக்கொள்வதும் அவ்வப்போது நடப்பதுதான்

பாக்யராஜ் இங்குதான் ஒரு மாற்று சிந்தனையை பயன்படுத்தி ஒரு கதை எழுதினார்..  வேலையில்லாத ஒருவன் , தன்னை பிராமணன் என காட்டிக்கொண்டு வேலை பெறுவதாக ஒரு நடைமுறைக்கு ஒவ்வாத கதை

முடிந்த அளவு பெண்களையும் பிராமணர்களையும் இழிவு படுத்துவது போன்ற கதைப்போக்கு..

கண்டிப்பாக தனக்கு புரட்சியாளன் இமேஜ் கிடைக்கும். படம் ஓடும் என்பதை அவர் சரியாக கணக்கிட்டார்.. ஆனால் பிராமணரக்ளை இப்படி நேரடியாக இழிவு செய்தால் , அவர்கள் கோபத்துக்கு ஆளாவோம் என்ற ஒரு பயம் இருந்தது

எனவே ஒரு பலியாட்டை தேடினார்.. நல்ல சினிமாவுக்கான முயற்சியில் இருந்த பாலகுமாரன் சிக்கினார்..  ஓர் அனுபவத்துக்காக இயக்குனர் முயற்சியில் இருந்த அவருக்கு அந்த வாய்ப்பை வழங்குவதாக பாக்யராஜ் சொன்னதை அப்பாவித்தனமாக நம்பினார் பாலகுமாரன்

ஆனால் உண்மையில் அது ஒரு வாய்ப்பல்ல.. பெயர் மட்டும் பாலகுமாரனுடையது.. அதில் கொட்டப்படும் விஷமெல்லாம் பாக்ராஜை சேர்ந்தது..

படம் ஓடியது..லாபம் அவருக்கு ,, கெட்ட பெயர் பாலகுமாரனுக்கு

சினிமாவின் சூதுவாது தெரியாமல் ஏமாந்தது என் பிழை அல்ல... இந்த தந்திரம் ரொம்ப நாள் வேலை செய்யாது என வயிறு எரிந்து பேட்டி அளித்தார்

அந்த 7 நாட்கள் , தூறல் நின்னு போச்சு , முந்தானை முடிச்சு என வெற்றிகளை குவித்த பாக்யராஜுக்கு , மேற்சொன்ன படம்தான் அவர் வாழ்வின் கடைசி ஹிட் படம்

அதன் பின் வரிசையாக தோல்விகளை சந்தித்து முடங்கினார்

துரோகமும் தந்திரங்களும் தற்காலிக வெற்றியை தரலாம்.. ஆனால் நிரந்தரம் அல்ல

அதுபோல இயக்குனர் பாலாவுக்கு துரோகம் செய்தவர்களை இயற்கை நிதி மன்னிக்கப்போவதில்லை

எப்பேற்பட்ட இயக்குனர்.. அவர் இயக்கம் சரியில்லை என சொல்லி அவமானப்படுத்தியவர்கள் வெல்லப்போவது இல்லை

Sunday, February 10, 2019

துரோகத்தை சந்திப்பினும் பெருந்தன்மையை கைவிடாத இயக்குனர் பாலா


பாலா எப்போதுமே தன்னிச்சையாக செயல்படும் படைப்பாளி என்பது தெரிந்த விஷயம்தான்

இது தெரிந்துதான் வர்மா படத்தில் ஒப்பந்தம் செய்தனர்.

விக்ரமுக்கு எப்படி ஒரு திருப்பு முனை படம் கொடுத்தாரோ அதே போல அவர் மகனுக்கும் ஒரு திருப்பு முனையை கொடுப்பதுதான் அவர் மனதில் இருந்தது

சூர்யா , ஆர்யா என அவர் படத்தில் நடித்த அனைவருக்குமே அந்த படங்கள் பெருமை சேர்க்கும் படங்களாகத்தான் அமைந்தன

இந்த நிலையில் , அவர் படைப்பு சுதந்திரத்தில் தலையிட முயன்றது தயாரிப்பாளர் நிறுவனம்

பாலா அதற்கு இடம் கொடுக்கவில்லை

வேண்டுமென்றால் நான் விலகிக்கொள்கிறேன்.. எடுத்த படத்தை உங்களிடம் கொடுத்து விடுகிறேன்.. விருப்பம்ப்போல காட்சிகளை சேர்ப்பது , நீக்குவது உங்கள் விருப்பம்.. ஆனால் ஒரு நிபந்தனை.. என் பெயரை எங்கும் பயன்படுத்தக்கூடாது என்றார்

இது தெளிவாக டைப் செய்யப்பட்டு ஜனவரி 2019 மாதம் கை எழுத்து இடப்பட்டது

 உண்மை இவ்வாறு இருக்க  , பட நிறுவனம் திடீரென ஓர் அறிவிப்பு வெளியிட்டது

எடுத்த வரையில் படம் தங்களுக்கு பிடிக்கவில்லை என்றும் புதிதாக எடுக்கப்போகிறோம் என்றும் அறிக்கை வெளியிட்டனர்

இது நடு நிலையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என அவர் சென்ற மாதமே சொல்லி விட்ட பிறகு இந்த அறிக்கை என்பது பாலாவை அவமானப்படுத்தும் செயல்தான்


விக்ரமும் பாலாவும் இது குறித்து பேசவில்லை

ஆனால் பாலா தன் அமைதிக்கு காரணம் விக்ரம் மகனின் எதிர் காலம் என்கிறார்.. இது அவரது பெருந்தன்மை

விக்ரம் அமைதியோ நேர்மையற்றதாகும்


ஏறிய ஏணியை உதைப்பது வெகு எளிது..ஆனால் அது நல்லதல்ல என யாரேனும் விக்ரமுக்கு சொல்ல வேண்டும்
 

Sunday, December 23, 2018

ராயல்ட்டி யாருக்கு... வைரமுத்து காமெடி

இப்போதெல்லாம் அரசியல் கூட்டங்களுக்கு ஆட்கள் வருவதில்லை.. பிரியாணி கொடுத்தும் காசு கொடுத்தும்தான் கூட்டம் திரட்டுகின்றனர்.

இதற்கு மாறாக இப்போதெல்லாம் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடுகிறது...

இது ஆரோக்கியமான போக்காகும்

இலக்கிய முன்னோடிகளை அறிமுகம் செய்யும் தமிழாற்றுப்படை எனும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கபிலர் குறித்து வைரமுத்து பேசினார்.

நல்ல கூட்டம்.. குடும்ப தலைவிகள் பலரும்கூட , தனியாகவும் குடும்பத்துடனும் வந்திருந்தனர்... மகிழ்ச்சி..

வைரமுத்துவுக்கு பேசியவர்கள் சிறப்பான ஆழமான உரை வழங்கினர்..
(செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் முனைவர் தெ.ஞானசுந்தரம் தலைமை உரை. முனைவர் சாரதா நம்பி ஆரூரன் வாழ்த்துரை)

வைரமுத்து மிக உன்னிப்பாக இந்த உரைகளை கவனித்து தன் பேச்சில் மேற்கோள் காட்டினார்... இது நல்லதொரு பண்பாகும்.. பலர் மற்றவர் உரைகளை கவனிப்பதில்லை


இருவர் படத்தில் தான் எழுதிய நறுமுகையே பாடலில் வரும் அற்றைத்திங்கள் என்ற வரிக்கு ராயல்ட்டி கொடுப்பதென்றால் , கபிலருக்குதான் கொடுக்க வேண்டும் என யாரையோ மறைமுகமாக கேலி செய்து நகைச்சுவையாக பேசினார்


புலிக்கும் யானைக்கும் சண்டை வந்தால் புலிதான் வெல்லும் என்கிறார் வள்ளுவர்... புலி தற்காலிகமாக தோற்றிருக்கலாம்.. யானையின் சூழ்ச்சியால் தோல்வி.. ஆனால் புலிதான் வெல்லும் என்று வைரமுத்து பஞ்ச் ஆக பேசினார்... ஆனால் சூழ்ச்சியால் புலியை வீழ்த்திய யானையுடன் தற்போது கூட்டணி அமைத்துள்ள நிலையில் அந்த பஞ்ச் வசனம் சரியாக எடுபடவில்லை


அவரது பேச்சு முன்பு தினமணியில் வந்தது... பிறகு தமிழ் ஹிந்துவில் வந்தது... இந்த பேச்சு நக்கீரனில் வருகிறது..

இது வளர்ச்சியா வீழ்ச்சியா என தெரியவில்லை

ஆனால் ஒரு நல்ல தமிழ் விருந்து... எந்த பந்தியில் பரிமாறப்பட்டாலும் நல்லதுதான்..


 

Sunday, December 2, 2018

மண்டூகங்கள் - மதியிலிகள் - சிட்டுக்குருவிகள் - செல்போன்கள்


 ஒரு புளிய மரத்தின் கதை நூலைப் படித்து விட்டு , புளிய மரத்தைப் பற்றி நூல் சரியாக விளக்கவில்லையே என கேட்கும் மக்கள் நிரம்பிய தேசம் இது

புளிய மரம் என எதை குறிப்பால் உணர்த்துகிறார் என நூலாசிரியர் விளக்கினால்தான் புரியும்.. 

நூல்களுக்கு விளக்கவுரை எழுதுவது போல இப்போது சினிமாவுக்கும் விளக்கவுரை தேவைப்படும் காலம் வந்து விட்டது...  ஒரு சராசரி ரசிகனுக்கு எந்த சிக்கல்களும் இல்லை.. உற்சாகமாக படத்தை ரசிக்கிறான்

ஆனால் சில இலக்கிய  பத்திரிக்கைகளுக்குத்தான் விளக்கம் தேவைப்படுகிறது

2.0 படத்தில் , பறவை ஆர்வலர் ஒருவர் இருக்கிறார்..செல்போன்களால் பறவை அழிகிறது என நினைத்து அதே செல்போன்களை ஆயுதமாக்கி பழி வாங்குகிறார் என்பது கதை..   செல்போன்களால் குருவி அழிகிறது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்பது இந்த ஆர்வலரின் எதிர் தரப்பின் கருத்து... இந்த இருவரும் மோதுகின்றனர் என்பதுதான் கதை

செல்போன்களால் குருவி அழிவதாக படம் சொல்கிறது என பலர் ஆய்வுக்கட்டுரை எழுகின்றனர்... உண்மையில் படம் அப்படி சொல்லவில்லை.. அதில் வரும் ஒரு கேரக்டர் சொல்கிறது.. அவ்வளவுதான்


 நுகர்வு வெறி தவறு என அந்த கேரக்டர் நினைக்கிறது..அதனால் ஏற்படும் விளைவுகள்தான் கதை

   ஒரு சாதாரண விஷ்யத்தை புரிந்து கொள்ள இவர்கள் எல்லாம் பத்திரிக்கை ஆசியர்களாக இருப்பது விந்தைதான்

  தினமலர் , இந்து போன்ற பல இதழ்கள் நடு நிலைமையாக அழகாக எழுதியுள்ளர்.. ஒரு சில இலக்கிய இதழாசிரியர்கள்தான் விபரமின்றி குப்பையாக எழுதுகின்றனர்






Saturday, August 1, 2015

ரஜினி நிஜமான சூப்பர் ஸ்டார் - இளையராஜா நெகிழ்ச்சி


தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இளையராஜாவின் என்னுள்ளில் எம்எஸ்வி என்ற இசைக் கச்சேரி நடந்தது.
நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே வந்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த் இறுதி வரை பங்கேற்று இசையை ரசித்தார்.
பின்னர் ரஜினியை நோக்கிய இளையராஜா, 'சாமி, மேடைக்கு வந்து சில வார்த்தைகள் பேசுங்க," என்று அழைத்தார்.
ரஜினி பேசுகையில், "எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்கு சாமி. பெரிய மகான், அவர் நினைவை கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இளையராஜா இசைஞானி. எம்.எஸ்.விஸ்வநாதன் இசை சாமி. அந்த கடவுளை பற்றி இந்த ஞானிக்கு தான் தெரியும்.
அவரைப் பற்றி நம்மைப் போன்ற பாமர மக்களுக்கு இசைஞானிதான் உணர்த்த வேண்டும். இந்த இசை நிகழ்ச்சியில் என்னைப் போன்றவர்கள் கலந்து கொண்டோம் என்பதே பெரிய ஆசீர்வாதம்," என்றார்.

அதை தொடர்ந்து எம்எஸ்வி குறித்து ரஜினியின் கருத்தைக் கேட்டார் இளையராஜா.

அதற்கு ரஜினி கூறிய பதில்:

திறமை என்பது கடவுள் கொடுப்பது. பெற்ற தாய், தந்தையிடம் இருந்து அது வருவதில்லை. ஜென்மம் ஜென்மமாக வரக்கூடியது. அது ஒரு பிராப்தாம். சரஸ்வதி கடாட்சம். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அது கிடைத்திருக்கிறது.
பணம், பெயர், புகழ் போன்றவை வரும்போது தலைகால் நிற்காது. ஆனால் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சிறு கடுகளவுகூட தலைக்கனம் இல்லை. அவர் ஒரு இசை கடவுள்," என்றார்.


அடுத்து, 'இந்த திரையுலகம் மிகப் பெரியது. எவ்வளவோ பேர் இருக்காங்க. நான் யாரையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை. உங்களைக் கூட அழைக்கவில்லை. ஆனால் நீங்களாக வந்து அமர்ந்து ரசிக்கிறீர்கள். இங்கு வரவேண்டும் என உங்களை தூண்டியது எது?" என கேட்டார் ராஜா..


அதற்கு பதிலளித்த ரஜினி, "1960 மற்றும் 70 கால கட்டத்தில் ஜாம்பவான்களாக நடிகர்கள், டைரக்டர்கள், பாடகர்கள் பலர் இருந்தனர். எம்.ஜி.ஆர் சார், சிவாஜி சார், பாலசந்தர், ஸ்ரீதர், டி.எம்.சவுந்தரராஜன், சீனிவாஸ், பி.சுசீலா என எல்லோரையும் புகழ் உச்சிக்கு கொண்டு சென்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
ராமருக்கு உதவிய அனுமன் போல் செயல்பட்டாலும், ஒரு அணில் மாதிரியே வாழ்ந்தார். அப்படிப்பட்ட ஒரு மகானை நான் பார்த்தது இல்லை. இனியும் பார்க்கப்போவது இல்லை. அப்பேர்ப்பட்ட மகானின் இசை பற்றி நீங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும், உங்களைக் கவர்ந்த அவரது பாடல்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்," என்றார்.

ரஜினியின் இந்த பதிலைக் கேட்ட இளையராஜா ஒரு கணம் அமைதியாகிவிட்டார். அடுத்து, "சாமி, நீங்க உண்மையிலேயே சூப்பர் ஸ்டார்... சூப்பர்" என்றார்.

Monday, May 25, 2015

பாலுமகேந்திரா முன்பு அழுதேன் - சாரு நிவேதிதா உருக்கமான பேச்சு






தமிழ் ஸ்டுடியோ அமைப்பு சார்பாக ’ பாலு மகேந்திரா விருது “ வழக்கும் விழா 24.05.2015ல் , கோடம்பாக்கத்தில் இருக்கும் BOFTA கல்லூரியில் நடந்தது.,.. காலை 10 மணிக்கு ஆரம்பித்த விழா இரவு பத்து மணி வரை நடந்தது... பாலு மகேந்திராவின் தலைமுறைகள் திரைப்படம் , 16 குறும்படங்கள் திரையிடப்பட்டன... நல்ல அருமையான ஏசி மற்றும் ஒலி ஒளி வசதியுடன் கூடிய திரையரங்கில் அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் சினிமா பார்த்தது நல்ல அனுபவம்.. நாசர் உட்பட ஏராளமான ஆளுமைகள் , ரசிகர்கள் கலந்து கொண்டு ஒரு மாநாடு போல விழா நடந்தது




பாலுவின் தலைமுறைகள் படத்தை படம் வந்தபோது பார்த்து நான் எழுதிய குறிப்பு இதில்... தலைமுறைகள் - பிச்சையின் பார்வையில்..




மாலை ஆறு மணிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிகள் துவங்கின...
பீ.லெனின் மாலன், சாரு நிவேதிதா , லீனா மணிமேகலை, கார்த்திக் சுப்புராஜ்,கோ.தனஞ்செயன் , அருண் ஆகியோர் பேசினர்...



-_______________________________________




குறும்படம் எனும் தனி வகை  - கார்த்திக் சுப்புராஜ்




அருணை எனக்கு அந்த காலத்திலியே தெரியும்.. குறும்படங்கள் குறித்து அவருடன் நிறைய பேசி இருக்கிறேன். அவருக்கு ஒரு உலக குறும்பட சீடியை அந்த காலத்தில் கொடுத்தேன்.. குறும்படம் என்பது தனியான ஒரு வகை. அது வணிக சினிமாவின் சுருக்கப்பட்ட வடிவம் அல்ல... நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்காக குறும் படம் எடுத்தபோது கூட அதை ஆர்வத்துடன் செய்தேன். தயாளரிப்பாளரை பிடிக்க வேண்டும் என்பது என் நோக்கமாக இருந்தது இல்லை... குறும்ப்டங்களுக்கு என தனியான ஒரு சந்தையை உருவாக்கி பல குறும்பட இயக்குனர்களை ஊக்குவிக்க ஓர் அமைப்பை உருவாக்கி இருக்கிறேன். அடுத்து பல முக்கியமான ஆளுமைகள் பேச இருப்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.




_______________________________




சிறுபத்திரிக்கை போல குறும்படம் -மாலன்



நிகழ்ச்சிக்கு குறித்த நேரத்துக்கு முன்பே வந்து விட்டேன்.. அமைதியாக தனிமையாக அமர்ந்து வானத்தை கவனித்துக்கொண்டு இருந்தேன். நீலம் , சாம்பல் நிறம் , சிவப்பு , கருப்பு என அதன் நிற மாற்றத்தை ரசித்தேன். இப்படி வானத்தை ரசித்து வெகு நாட்கள் ஆகி விட்டன. சமீபத்தில் தனஞ்செயனின் புத்தகம் படித்தேன். மிகவும் பிடித்திருந்தது. அவரிடம் பாராட்டை சொன்னேன். இந்த இரண்டு அனுபவங்களுக்காகவும் தமிழ் ஸ்டுடியோவுக்கு நன்றி. அந்த காலத்தில் எல்லாம் குறும்படங்கள் பார்ப்பது எல்லாம் சாத்தியம் இல்லாமல் இருந்தது. எங்கோ ஒரு சில இடங்களில் கிடைக்கும் வாய்ப்பை தேடிச்சென்று பயன்படுத்துவோம், நாங்கள் ஒரு குறும்படம் எடுக்க முயன்றோம். அதில் பல சவால்களை சந்தித்தோம் .காரண்ம் அன்று உரிய வசதிகள் இல்லை, இன்று வசதிகள் உள்ளன, அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமானால் நிறைய வாசியுங்கள். பாலு மகேந்திராவை ஓர் இயக்குனராக உங்களுக்கு தெரியும். அவரை ஒரு நல்ல வாசகனாக எனக்கு தெரியும். நல்ல வாசிப்பாளர் அவர். நாங்கள் புத்தகங்கள் குறித்தே அதிகம் பேசுவோம். சிறு பத்திரிக்கை இயக்கம் போல குறும்படங்கள் தனி இடம் பிடிக்க வேண்டும்







-__________________________________




பாலுவுக்கு நிகர் பாலு மட்டுமே - லீனா மணிமேகலை



பாலு மகேந்திராவை நான் அப்பா என்றுதான் அழைப்பேன், எனக்கு அவர் அப்பா போன்றவர். நான் முதன் முதலில் என் படத்தை திரையிட்டபோது அவரை உரிமையுடன் அழைத்தேன்.. அவரும் ஆர்வமாக வந்தார், என் எல்லா திரையிடல்களுக்கும் அவர் வந்து இருக்கிறார். அவருக்கு நிகராக இனி ஒருவர் வர முடியாது, அவர் நம்மை விட்டு மறைந்தது பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் இடையேயான இடைவெளி இப்போது குறைந்து வருகிறது. இன்னமும் கூட நாம் எடுக்கும் படங்களை திரையிட உரிய ஸ்பேஸ் கிடைப்பதில்லை. இது மாற வேண்டும். போட்டிக்கு வந்த படங்களை பார்த்தேன்,. பல நன்றாக இருந்தன. படம் எடுப்பவர்கள் ஒலி அன்ற அம்சத்தில் கவனம் செலுத்த வேண்டும். என் படத்தை பார்த்த ஒரு பிரபல ஆளுமை எனக்கு ஒரு மெயில் அனுப்பினார்.. அது எனக்கு மிகப்பெரிய வெளிச்சம் அளித்தது.. ஷூட்டிங் செல்லும்போது கேமரா இல்லாமல் செல்வது எவ்வளவு அபத்தமோ அதே போன்ற அபத்தம்தான் சவுண்ட் எஞ்சினியர் இல்லாமல் செல்வதும் என சொல்லி இருந்தார். ஒலி அம்சம் மிகவும் முக்கியம்




-______________________________________________




என்னை வென்ற மணி ரத்னம் - சாரு நிவேதிதா



என்னை எழுதச்சொன்னால் எழுதி விடுவேன். ஆனால் பேச எனக்கு எப்பவுமே தயக்கம் உண்டு. நான் மனதில் பட்டதை பேசி விடுவேன், இதனால் யாராவது புண்பட்டு என்னை ஜென்ம விரோதியாக நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். எழுத்திலும் என்னிடம் ஒளிவு ம்றைவு இல்லை. மது அருந்தியபோது நான் அதை மறைத்தது இல்லை. எந்த பாரில் அருந்தினேன் என்பது உட்பட விரிவாக எழுதுவேன்,. இதை பலர் திட்டினர். இப்போது குடியை விட்டுவிட்டு மகாத்மா காந்திபோல வாழ்கிறேன். இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை.




என்னை பெரும்பாலும் யாரும் பேச அழைப்பதில்லை. காரணம் என்னை அழைத்தால் வேறு சிலரின் பகை வந்து சேரும். சாருவை சும்மா ஃபார்மலாக அழைத்தோம். மற்றபடி அவருக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என சொல்லி தப்பித்துக்கொள்ளுமாறு அமைப்பாளர்களை கேட்டுக்கொள்கிறேன் ( அரங்கில் பலத்த சிரிப்பு )







எனது சக பயணிகள் என நினைக்கும் இருவரை சமீபத்தில் ஒரு விழாவில் சந்தித்தேன்.. ஆர்வமாக கைகுலுக்க சென்றேன், ஆனால் என் கைகளை அவர் தட்டிவிட்டு வெறுப்பாக முகத்தை திருப்பிக்கொண்டனர். அந்த அளவுக்கு என்னை வெறுக்கிறார்கள்.




இதனால்தான் நான் மனிதர்களை விட மரங்கள் , விலங்குகளுடன் பேசுவதில் ஆர்வம் காட்டுகிறேன். பாலு மகேந்திராவும் இப்படிதான், ஒருவகையில் பாலு மகேந்திராதான் நான். அவருக்கும் எனக்கும் பல ஆண்டுகள் பழக்கம் உண்டு. ஆனால் அவர் படங்கள எதையும் நான் பார்த்தது இல்லை. வீடு , சங்தியாராகம் பார்த்து விட்டீர்களா என அடிக்கடி என்னை கேட்பார் , நான் இல்லை என்பேன். காரணம் இது போன்ற மாற்று படங்கள் மீது எனக்கு பயங்கர ஒவ்வாமை உண்டு.




துப்பாக்கி , கத்தி போன்ற படங்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் மாற்றுப்படங்கள் என்ற பெயரில் வரும் படங்கள் மீது எனக்கு பயங்கர ஒவ்வாமை உண்டு.




ஒரு காமன்மேனுக்கு இருக்கும் சென்சிபிள் கூட இவர்களுக்கு இருப்பதில்லை. சென்சிபிள் என எதை சொல்கிறேன். சிலர் திரையரங்கில் அமர்ந்தவாறு சத்தம்போட்டு செல்போனில் பேசுவார்கள். காரணம் இந்த நுண் உணர்வு இன்மை. உலக சினிமாக்கள் பார்க்காமல் , எந்த இலக்கிய வாசிப்பும் இல்லாமல் இவர்கள் எடுக்கும் படத்தில் சென்சிபிலிட்டி இருப்பது இல்லை, எனவே இவர்களைக்கண்டாலே எனக்கு பயம்.

எனவேதான் பாலுவின் படங்களை நான் பார்த்தது இல்லை.




முதல் முறையாக நான் பார்த்தது அவரது தலைமுறைகள் படம்தான்.. பார்த்துக்கொண்டிருந்தபோதே அவர் மேதைமையை அறிந்தேன். என்ன ஒரு கலைஞன் என நினைத்துக்கொண்டேன். இத்தனை நாள் இவரை தெரிந்துகொள்ளாமல் போனேனே என வருத்தப்பட்டேன்




மிக அழகான , மிக விலை உயர்ந்த மலர்க்கொத்துடன் அவரை சந்திக்க போனேன். அதை அவர் கையில் கொடுத்தும் ஏன் இவ்வளவு காஸ்ட்லியான மலர்க்கொத்து என ஆச்சர்யப்பட்டார். என்னால் எதுவும் பேச முடியவில்லை. அவர் முன்னால் வெறுமனே அழுது கொண்டே இருந்தேன்.




எப்பேர்ப்பட்ட கலைஞன் அவர். அதன் பின் அவர் படங்களை பார்த்தேன். அவர் படங்களை தாமதாக தெரிந்து கொண்டது எனக்குத்தான் நஷ்டம். அவருக்கு ஒன்றும் இல்லை.




தலைமுறைகள் படத்தை அவர் பாராட்டினாரா இவர் பாராட்டினாரோ என சிலர் பெயர்களை சொல்லி கேட்டேன்.. இல்லை என்றார். பாலச்சந்தர் எழுதிய கடிதம் மட்டும் காட்டினார். மிகச்சிறந்த பாராட்டுக்கடிதம்.




உங்கள் படங்களை பாலுவிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். தமிழ் அல்லது ஹாலிவுட் சினிமாவில் இருந்து கற்றுக்கொள்ளாதீர்கள் .  ஐரோப்பிய சினிமா பாருங்கள். உங்கள் மீது எனக்கு இருக்கும் வெறுப்பை மாற்றுங்கள்







எனக்கு மணி ரத்னம் மேல் சின்ன கோபம் இருந்தது,,,ஓ காதல் கண்மணி படத்தை திட்டுவதற்காகவே அந்த படத்தை பார்க்க போனேன்.. ஆனால் அந்த படம் என்னை வென்று விட்டது. எனக்கு மிக மிக பிடித்து இருந்தது. அது போல உங்கள் படங்களால் என்னை வெல்லுங்கள்>




என்னை திருப்திப்படுத்தும் அளவுக்கு படம் எடுக்க முடியாது என சிலர் சொல்லலாம். ஆனால் என்னை திருப்திப்படுத்திய படங்கள் , இயக்குனர்கள் என நூறுக்கு மேல் என்னால் சொல்ல முடியும்...




போட்டிக்கான படங்களை பார்த்துவிட்டு பெஸ்ட் என நான்கு படங்களை பட்டியலிட்டேன். பார்த்தால் அதே படங்களைத்தான் மற்ற நடுவர்களும் தேர்ந்தெடுத்து இருந்தனர்.




நல்ல படம் என ஒன்று இருக்கிறது , அதை ரசிக்கவும் , அதை எடுக்கவும் சென்சிபிலிட்டி தேவை.... அதற்கு வாசிப்பும் , சினிமா பார்த்தலும் உதவும்




-______________




இதன் பின் லெனின் பேசினார். சாரு புத்தகங்களை படித்தாலே போதும் , நிறைய தெரிந்து கொள்ளலாம் என்றார். ஐரோப்பிய சினிமா பார்ப்பதன் அவசியம் , இலக்கிய வாசிப்பு என பலவற்றை தனக்கே உரித்தான முறையில் அழகாக சொன்னார். நேத்து ராத்திரி , அம்மா பாடலில் இருக்கும் ராகத்தை சொன்னது அழகாக இருந்தது.. தன் பாணியில் ஒரு பாட்டு பாடி பேச்சை முடித்தார் அவர்




பிறகு பரிசளிப்பு விழா நடந்தது

Tuesday, July 22, 2014

வேலை இல்லா பட்டதாரி - சதுரங்க வேட்டை . ஓர் ஒப்பீடு


தமிழ் சினிமாவை அழித்து வருவது மசாலா படங்கள் அல்ல.. மாற்று சினிமா என்ற போர்வையில் வெளிவரும் ஏமாற்று சினிமாக்கள்தான் தமிழ் சினிமாவை உருப்பட விடாமல் செய்கின்றன.

சமீபத்தில் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டு இருக்கும் இரண்டு படங்களில் ஒன்று விமர்சகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது ..அது சதுரங்க வேட்டை..  இன்னொரு படம் வேலை இல்லா பட்டதாரி.. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது..

கிராமத்தில் இருந்து வந்த ஒருவன் முதன்முறையாக ஜூவில் யானையை பார்த்தான்.. இப்படி ஒரு விலங்கு இருக்க வாய்ப்பில்லையே என குழம்பினான். அதுபோல சினிமா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற டெம்ப்ளேட் சிந்தனையில் இருப்பவர்கள் , வேலை இல்லா பட்டதாரியின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் , புரிந்து கொள்ள முடியாமல் திகைக்கின்றனர்.. சுவாரஸ்யமான படம் என்றால் சில இலக்கணங்கள் வேண்டும் என எங்கேயாவது படித்து விட்டு , அதன்படி இந்த படம் இல்லையே..பிறகு எப்படி ஓடுகிறது என குழம்புகிறார்கள்..  அந்த இலக்கணங்கள்படி எடுக்கும் படங்கள் ஓடுவதில்லையே என்பதும் அவர்களுக்கு குழப்பமாக இருக்கிறது..

சராசரி ரசிகனின் பார்வையில் இரண்டு படங்களின் வெற்றியையும் அலசுவது முக்கியம்..

சதுரங்க வேட்டை படம் அதிரடியாக ஆரம்பிக்கிறது...ஆரம்பமே சுவாரஸ்யம்.. செட்டியாரை ஃபிராடு செய்து ஏமாற்றுவது அட என சொல்ல வைக்கிறது... ஆனால் அதை தொடர்ந்து சுவையான திருப்பங்கள் எதுவும் ஏற்படுவதில்லை..   அந்த எதிர்ப்பும் இல்லாமல் தொடர்ந்து அடுத்தடுத்து ஹீரோ செய்யும் ஃபிராடு வேலையின் தொகுப்பாக படம் செல்கிறது...

சோகமான அம்மா  ஃபிளாஷ்பேக் , ஹீரோயினின் அன்பால் ஹீரோ திருந்துவது என்பது போன்ற வழக்கமான காட்சிகளை வைத்து படத்தை ஒரு ஷேப்புக்கு கொண்டு வந்து விட்டார்கள்..  ஒரே பாடலில் பணக்காரன் ஆவது போல , ஒரே ஃபிளாஷ்புக்கில் சர்வ வல்லமை பொருந்திய அறிவாளியாகி விடுகிறார் ஹீரோ..

ஆனால் இந்த ஃபார்முலா படத்தை வித்தியாசமான படம் போன்ற தோற்றத்தை கொடுத்ததில் இயக்குனரின் புத்திசாலித்தனம் தெரிகிறது.. வசனங்கள் அபாரம்..

நான் யாரையும் ஏமாற்றவில்லை.. ஏமாற விரும்புபவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தேன்..

தமிழ் நாட்டை சிங்கப்பூர் ஆக்குவேன் என சொல்லி ஓட்டு வாங்குகிறார்கள்..ஆனால் செய்வதில்லை..அவர்கள் மேல் வழக்கு போட முடியுமா போன்ற வசனங்கள் கைதட்டல் வாங்குகின்றன..
ஆனால் இதெல்லாம் விஜயகாந்த் ஃபார்முலாதான்..

வேலை இல்லா பட்டதாரி எப்படி இருக்கிறது..

வேலை இல்லாத இளைஞர் , கண்டிப்பான அப்பா , பாசமான அம்மா, பக்கத்து வீட்டு இளம்பெண் என பல முறை பார்த்த கதை.. வித்தியாசமான படம் என பம்மாத்து செய்யாமல் எடுத்தது முதல் வெற்றி...  இன்னும் சொல்லப்போனால் அந்த ஃபார்முலாவை ஒவ்வொரு கட்டத்திலும் கிண்டல்தான் செய்திருக்கிறார்கள்...  சண்டை காட்சியில் சண்டையை கிண்டல் செய்வது , பாடலை கிண்டல் செய்வது செம ரகளையாக படம் இருக்கிறது.. அம்மா செண்டிமெண்டை வைத்து அழ வைக்க முயலவில்லை.. காதல் காட்சிகளும் வெகு இயல்பு,,,,  உன்னத காதல் என்ற பம்மாத்தெல்லாம் இல்லை... பாடல்கள் பட்டாசு,,,

இப்படிப்பட்ட படங்களும் தேவை... சதுரங்க வேட்டை போன்ற புத்திசாலித்தனமான படங்களும் தேவை...

புத்திசாலித்தனமும் இல்லாமல் , மக்களை கவரும் அம்சங்களும் இல்லாமல் வெளிவரும் ஃபேக் படங்கள்தான் ஒழிய வேண்டும்..




Wednesday, December 11, 2013

நடிகரின் வாழ்க்கையை முடித்து வைத்த திரைப்படம்

ரத்தினக்குமார் - நேரம் சரியில்லாத படம்

 நடிப்பு         : பியூ சின்னப்பா , எம் ஜி ஆர், பானுமதி , மாலதி, என் எஸ் கே, துரைராஜ் , மதுரம்
 இயக்கம்   : கிருஷ்ணன் பஞ்சு
இசை           : ஜி ராம நாதன் , சுப்புராமன்
தயாரிப்பு    : முருகன் டாக்கீஸ்
பாடல்கள்   : பாப நாசம் சிவம் , சுரபி
வசனம்        : வேலாயுதம்



கதை     :  பிச்சைக்காரனுக்கு அதிர்ஷடவசமாக ராஜயோக வாழ்க்கை கிடைக்கிறது..  நன்றி இல்லாமல் நடந்து கொண்டு , மீண்டும் பிச்சைக்காரன் ஆகிறான்

வகைப்பாடு  : பொழுதுபோக்கு ,யதார்த்தம் ,மாற்று சினிமா, குப்பை , பிரச்சாரம்

***********************************************************************

சில படங்களில் சில நடிகர்கள் நடித்து இருக்க கூடாது.. சில பாடல்களை சில பாடகர்கள் பாடி இருக்க கூடாது என சொல்வார்கள்...அறிவியல் பூர்வமானது அன்று என்றாலும் வியப்பளிப்பது...

 நான் ஒரு ராசி இல்லாத ராஜா என்ற பாடலில் இருந்து டி எம் எஸ் வீழ்ச்சியை சந்தித்தார் ( ஒரு தலை ராகம் )

கே ஆர் ராமசாமி , நான் பாட மாட்டேன் என்றொரு படத்தில் பாடினார். அதுவே அவர் கடைசி பாடலாக அமைந்தது..( துளி விஷம் படம் )

ராசாத்தி என் உசிரு என்னதில்லை என்ற பாடலை பாடிய - அப்போது வேகமாக முன்னுக்கு வந்துகொண்டு இருந்த - ஷாகுல் ஹமீது விபத்தில் காலமானார் (  திருடா  திருடா )

அந்த வரிசையில் வரும் படம்தான் ரத்தினகுமார் ( 1949)..தோல்விகளால் துவண்டு இருந்த பியூசின்னப்பாவுக்கு , உத்தம புத்திரன் படம் வாழ்வளித்தது என முன்பு பார்த்தோம். இந்த படம் கதையே சரி இல்லை... ஓரளவு இவர் வாழ்க்கையை பிரதிபலிப்பது போலவும் , வீழ்ச்சியை காட்டுவது போலவும் இருந்தது..

இந்த படத்தில் பானுமதி என் எஸ் கே போன்றோர் இருந்தும் , அருமையான பாடல்கள் இருந்தும் , படம் ஓடவில்லை... அவர் வீழ்ச்சி தொடங்கியது... இது வந்து இரண்டு ஆண்டுகளில் அவர் காலமானார். இதன் பின் வந்த வனசுந்தரி படமும் சராசரி படம்தான்.. அவர் இறப்புக்கு பின் இன்னொரு படம் கடைசியாக ரிலீஸ் ஆனது.

அவருக்கு வீழ்ச்சியளித்த படம் என்றாலும் , படம் நன்றாகவே உள்ளது.

ஹீரோ ரத்னகுமார் ஓர் அனாதை...பிச்சை எடுக்கிறான்... இன்னொரு அனாதை பிச்சைக்காரியை மணம் செய்து கொண்டு ஓரளவு முன்னேறி வருகிறார்கள்..இந்த நிலையில் தன் மகனை சின்ன வயதில் பறிகொடுத்த மன்னர் தன் தங்கை மகளை இளவரசியாக முடிசூட்டுகிறார்.. ரத்னாவுக்கு சில மந்திர சக்திகள் கிடைக்கின்றன... அதனை வைத்து இளவரசியை கைக்குள் போட முடிகிறான்..தன் மனைவியை துரத்தி அடிக்கிறான்.. ஒரு கட்டத்தில் அந்த சக்தி போய் விடுகிறது... தவறை உணர்கிறான்.. தூக்கு தண்டனை விதிக்கபடும் கடைசி நேரத்தில், இவனே தொலைந்து போன இளவர்சன் என தெரிய வந்து காப்பாற்ற படுகிறான்..

மொத்தம் இருபது பாடல்கள் !!! அனைத்தும் அருமை...

எங்கிருந்தோ வந்தான் என்ற பாரதி பாடல் சாயலில் ஒரு பாடல்..கேலி மிக செய்வாள் என்ற அந்த பாடல் அருமை..

இளவரசியை காதலிக்க முயலும் நபர் ஒரு பிச்சைக்காரன் என கண்டுபிடிக்கும் கடமை தவறாத வீரர் யார் தெரியுமா?

ம்ம்.. எம் ஜி ஆர் தான் அந்த சின்ன வேடத்தில் வருகிறார்..

படத்தில் சுவையான ஒரு காட்சி..

பாழடைந்த சத்திரத்தில் ஒரு பேய் ஹீரோவை துரத்தும்... ஒரு பாறையை கையில் வைத்துக் கொண்டு போட்றுவேன்..என மிரட்டும்...கெஞ்சி பார்க்கும் ஹீரோ ஒரு கட்டத்தில் ., சரி போட்டு தொலை என்பார்..
அது பாறையை தூக்கி போடும்..உள்ளே பார்த்தால் வைரங்கள் , வைடூரியங்கள். தங்கம் என இருக்கும்...

என் எஸ் கே வழக்கம்ப்போல அழகான காமெடி...

பானுமதியும் , மாலதியும் இரு ஹீரொயின்கள்..அழகு..

இந்த படத்தை தயாரித்தது மதுரையை சேர்ந்த முருகன் டாக்கீஸ் நிறுவனமாகும்...

ரத்தினக்குமார் - ரம்பம் இல்லை 

Tuesday, December 10, 2013

கமல்பாணி ஹீரோயிசத்தில் வந்த முதல் திரைப்படம்

உத்தம புத்திரன்  - தமிழிம்  முதல் இரட்டை வேட  ஹீரோயிச படம்

 நடிப்பு         : பியூ சின்னப்பா , எம் வி ராஜம்மா , பாலையா, என் எஸ் கிருஷ்ணன் , மதுரம் , காளி ரத்திரனம்

 இயக்கம்   : டி ஆர் சுந்தரம்

தயாரிப்பு   : மாடர்ன் தியேட்டர்ஸ்

கதை     :  அரசருக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் . ஆட்சிக்கு வந்து விடும் கெட்ட சகோதரனை வீழ்த்தி நல்ல சகோதரன் ஆட்சியை பிடித்து மக்களுக்கு நல்லது செய்கிறான்..

வகைப்பாடு  : பொழுதுபோக்கு ,யதார்த்தம் ,மாற்று சினிமா, குப்பை , பிரச்சாரம்

**************************************************************************

தமிழ் சினிமாவின் முதல் இரட்டை வேட படம் என கருதப்படும் படம் உத்தம புத்திரன் ( 1940 ).  ஆனால் 1935லிலேயே துருவன் என்ற படத்தில் இரட்டை வேடம் வந்து விட்டது என்கிறார் திரைப்பட அறிஞர் தியடோர் பாஸ்கரன். ஆயினும் போதிய ஆதாரங்கள் இன்மையால் , உத்தம புத்திரன் படத்தையே முதல் இரட்டை வேட படமாக அதிகாரபூர்வமாக   ஏற்று இருக்கிறார்கள்..

  நமக்கு இந்த பட பிரதிகள்தான் கிடைக்கின்றன என்பதால் , இதைத்தான் அந்த கால ரசனைக்கு ஓர் ஆவணமாக கருத வேண்டி இருக்கிறது.. மேலும் இந்த படம்தான் கமல்பாணி ஹீரோயிச நடிப்புக்கு ஒரு டிரண்ட் செண்டராகவும் அமைந்து இருக்கிறது.

கமல்பாணி ரஜினிபாணி என இரண்டு பாணிகள் என்றென்றும் நம் ரசனையில் உண்டு..இதில் எது உயர்ந்தது எது தாழந்தது என அந்தந்த ரசிகர்கள் அவர்களுக்கு சாதகமாக சொல்வார்கள்..

ஆனால் நடு நிலையுடன் பார்த்தால் , இதில் உயர்வு தாழ்வு ஏதும் இல்லை...சிலரை காரணம் இன்றி பிடித்து விடும்..பெரிய பிளஸ் பாயிண்ட் இல்லாததேகூட அவரை நம்முடன் அடையாளப்படுத்திக்கொள்ள செய்து விடும்.. நம்மில் ஒருவராக அவரை நினைத்துக்கொள்வோம். 
அழகு , திறமை. முறையான நடிப்பு பயிற்சி , நடனம் என கமலின் ப்ளஸ்களில் ஒன்றுகூட இல்லாத ரஜினி தனது தனித்துவ திறமையால் கமலையும் மிஞ்சி ஜெயிக்கிறார் இல்லையா ...இது ஒரு பாணி..

முதல் இடம் இரண்டாம் இடம் என அலட்டிக்கொள்ளாமல் பல்துறை திறமையை தொடர்ந்து முன் வைத்து தனக்கு என ஓர் இடத்தை உறுதி செய்வது ஒரு பாணி. இன்றைக்கும் தன் பாணியை விட்டுக்கொடுக்காமல் , தொடர்ந்து கற்று , தொடர்ந்து புதிய முயற்சிகளை கமல் செய்கிறார் இல்லையா...இது ஒரு பாணி...

இந்த இரண்டாவது பாணியை தமிழ் சினிமாவில் உருவாக்கிய முதல் நடிகர்தான் பி யூ சின்னப்பா..
அன்றைய நிலையில் நம்பர் ஒன் தியாகராஜ பாகவதர்.. உங்களுடன் ஒரு நாள் மனைவியாக வாழ்ந்து விட்டு அடுத்த நாள் தற்கொலை செய்து கொள்கிறேன்..என்னை ஏற்று கொள்ளுங்கள் என அவருக்கு பெண்களிடம் இருந்து கடிதங்கள் குவியுமாம்.  அவர் சீவிய சீப்பை போற்றி பாதுகாத்த ஆண்கள் , அவர் செல்வாக்கை கண்டு நேருவே வியந்தது என பல சம்பவங்கள்...
ஆனால் அவர் நடிப்பு , நடனம் . சண்டை என்றெல்லாம் பல்துறை திறமைகளை காட்டியவர் அல்லர்..  ரஜினி, எம் ஜி ஆர் போல இனம் தெரியாத ஈர்ப்புதான் அவர் பலம்..

அந்த கால கட்டத்தில் , அவருக்கு போட்டியாக இன்னொரு துருவமாக ஜொலித்தவர் பி யூ சின்னப்பா...

நடனம். சண்டை , பாடல் என இவர் ஒரு சகலகலா வல்லவர் ( கமல்போல ) ... ஆயினும் இவர் படங்கள் சரியாக ஓடவில்லை.. நல்ல பெயரும் கிடைக்கவில்லை..பேசாமல் ஊருக்கு போய் ஆன்மீக தேடலில் ஈடுபடலானார்.. மவுன விரதம் , உண்ணா நோன்பு என இறைவனை நோக்கி இறைஞ்சினார்.. காக்கா உட்கார பழம் விழுந்ததோ அல்லது கடவுள் கண் திறந்தாரோ தெரியவில்லை... மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் , இவர் வீடு தேடிப்போய் , உத்தம புத்திரன் படத்துக்கு புக் செய்தார்..அதன் பின் அவருக்கு ஏறு முகம்தான்..

அவர் ஊரான புதுக்கோட்டையில் வீடுகளாக வாங்கிப்போட்டார்...பயந்து போன அன்றைய புதுக்கோட்டை மன்னர் , இனி யாரும் அவருக்கு வீடு விற்க கூடாது என சட்டம் போட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..

அந்த அளவுக்கு ஒரு டிரண்ட் செட்டர் படம் உத்தம புத்திரன்..

அரசருக்கு இரட்டை குழந்தைகள் ... அரசரை கன்வின்ஸ் செய்து , ஒரு குழந்தையை பிரித்து விடுகிறான் மந்திரி...இன்னொரு குழந்தையை தன் கைப்பாவையாக வளர்த்து , ஆட்சியை அனுபவிக்கிறான்.. அந்த இன்னொரு குழந்தை வீரனாக இன்னொரு இடத்தில் வளர்கிறது..

சுயபுத்தி இல்லாமல் , கொடுங்கோலாக செயல்படும் இவனை ஒரு கட்டத்தில் சகோதரன் எதிர்க்கிறான்..இரும்பு முகமூடி அணிவித்து அவனை ஜெயிலில் தள்ளி விடுகிறான் இந்த கெட்ட மன்னன்...அதில் இருந்து தப்பி , எப்படி நீதியை நிலை நாட்டபடுகிறது...கெட்ட புத்திரனை , உத்தம புத்திரன் எப்படி வென்றான் என்பது கதை..

அந்த காலத்தில் முதன்முதலாக இரட்டை வேடத்தில் , ஒரே தோற்றத்தில் இருவர் , பேசுவது சண்டையிடுவதை பார்க்கையில் நம் தாத்தாக்கள் எப்படி மகிழ்ந்திருப்பார்கள் என நினைக்க ஆச்சர்யமாக இருக்கிறது..

பாடல் , சண்டை என ஜொலிக்கிறார் பி யூ சின்னப்பா. இவர் ஒரே காட்சியில் பல வேடத்தில் தோன்றிய இன்னொரு படத்தையும் , அதன் ஒளிப்பதிவாளரைப்பற்றியும் இன்னொரு இடுகையில் பார்க்கலாம்..

அபூர்வ சகோதர்கள் படமும் இரட்டை வேட படம் என்றாலும் அதில் உணர்வுகள் , செண்டிமெண்டுகள் பிரதானமாக இருக்கும்..படம் ஷார்ட்டாகவும் இருக்கும்.

இது சற்று நீளமான படம்,..மூன்றரை மணி நேரம் ஓடுகிறது... எத்தனை பாடல்கள் என எண்ண முடியவில்லை... இரு சகோதரர்களும் ஆவேசமாக வாக்குவாதம் செய்து அப்படியே பாட ஆரம்பித்து விடுகிறார்கள்...காமெடியனை சிலர் விசாரிக்க , அவன் தன் பதிலை பாட்டாகவே பாடி விடுகிறான்..

ஓர் அணாவுக்கு அந்த காலத்தில் டிக்கட் வாங்கிபோய் அமர்ந்து விட்டால் , பாட்டு கச்சேரி , டான்ஸ் என பல்வித கொண்டாட்டங்கள்..ஒரே டிக்கட்டில்!!! நன்றாக எஞ்சாய் செய்து இருக்கிறார்கள்..

யுத்த காலத்தில் படத்தை இரண்டு மணி நேரமாக குறைக்க பிரிட்டிஷ் அரசு ஆணையிட்டபோது , திரையுலகம் கொதித்து போய் விட்டதாம்... சுதந்திர போராட்டத்தைவிட அதி தீவிரமாக இதை எதிர்த்து போராடினார்களாம்...

படத்தின் இன்னொரு முக்கியம் அம்சன் வில்லன் பாலையா நடிப்பு... இவர் ஒரு சகாப்தம் என்றே கருதுகிறேன்.. சினிமாவின் ஆரம்ப கட்டத்தில் இருந்து நடித்து பல காலம் தொடர்ந்தவர்... வில்லன் , ஹீரோ , காமெடி ,, கடைசியில் தந்தை என எல்லாவற்றிலும் கலக்கியவர் இவர்... இந்த படத்திலும் அழகு..

நீளமாக வசனங்கள் இல்லை...ஷார்ட் அண்ட் ஸ்வீட் ....மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்.. நீங்களோ வாயிலில் நின்று வருபவர்கள் குறித்து உரைக்கிறீர்களே..வெட்கமாக இல்லை - ஓர் எ.கா...

கெட்ட அரசனை சற்று காமெடியாக அமைத்து இருப்பது சிறப்பு... இளவரசியை ( ராஜம்மா ) சென்று பார்க்கக்கூட சோம்பல்.. தன் இரட்டை வேட சகோதரனை தன் போல நடித்து ( ?! ) காதலிக்க ( !?) அனுப்புகிறான்.. காதல் ஒர்க் அவுட் ஆனதும் கல்யாணம் மட்டும் செய்து கொள்ளலாம் என்ற ராஜதந்திரம் !!!

அந்த கால பாடல்கள் ஏராளமாக இருந்தாலும் , அனைத்தும் தரமாக இருந்தன... இன்று போல , பெண்ணின் உடலைக்காட்டி மயக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் , உண்மையான திறமைசாலிகளின் கைவண்ணத்தில் பாடல்கள் ஜொலிக்கின்றன... 

அதில் செந்தமிழ் நாடெனும் போதினேலே என்ற பாடல் சூப்பர் ஹிட்...ஆங்கிலேயர் ஆட்சியாளர்கள் கண்களில் மண்ணைத்தூவி விட்டு இந்த பாடலை இடம் பெற செய்து இருக்கிறார் சுந்தரம்..

கதையுடன் சேர்ந்து வரும் காளி என் ரத்தினம் காமெடி அழகு..தனி காமெடி டிராக்கில் வரும் என் எஸ் கே காமெடியோ பட்டாசு..இன்றைய சென்சார் அதை அனுமதிக்காது...டீவியிலும்கூட ஒளிபரப்ப முடியாது...உடனே ஆபாச காமெடியா என நினைக்காதீர்கள்..இல்லை...சமூக சாடல் , சீர்திருத்த காமெடி... பிளாக் ஹ்யூமர் டைப்பில் கலக்கி இருப்பார்..

மொத்தத்தில் ,
  உத்தம புத்திரன் - உள்ளம் கவர்ந்த புத்திரன்


Saturday, November 30, 2013

ஆபாசம் இன்றி ஓர் அடல்ட்ஸ் படம்- ,மகேந்திரனின் மேஜிக்களில் ஒன்று

தமிழில் அடல்ட்ஸ் படங்கள் வந்ததே இல்லை... வக்கிரமான படங்கள் வேறு விதம்..அதுவல்ல..  குழந்தைகளுக்கு புரியாத சற்று பெரிய விஷயங்களை அலசும் படங்களை சொல்கிறேன். அந்த வகையில் தமிழில் முக்கியமான படங்களில் ஒன்று பூட்டாத பூட்டுக்கள்.

தலைப்பே சற்று வித்தியாசமாக இருக்கிறது அல்லவா...படமும் அப்படியே..

மகேந்திரன் படங்களுக்கு என சில தனித்தன்மைகள் உண்டு... முதல் காட்சியிலேயே படத்தை ஆரம்பிப்பது , இயல்பான நடிகர்கள் , இனிய பாடல்கள், கச்சிதமான ஒளிப்பதிவு , அழுத்தமான பெண் கதாபாத்திரங்கள், சிறப்பான துணை நடிகர்கள் , அழகான எடிட்டிங்,  நறுக் என ஒரு கவிதை போல முடிவது  என சிலவற்றை சொல்லலாம்..

பூட்டாத பூட்டுகள் படம் பற்றி பழைய ஆள் ஒருவரிடம் கேட்டார்...அது ஒரு கள்ளக்காதல் படம்பா என்றார்... எனக்கு கொஞ்சம் வியப்பாக இருந்தது.. இப்படி எளிதாக புரிந்து கொண்டதால்தான் அந்த காலத்தில் இந்த படம் அவ்வளவு சிறப்பாக ஓடவில்லை என்பது படம் பார்த்த பின் தெரிந்தது..

மனித மனதின் நுட்பங்களை , புதிர்களை , உறவுச் சிக்கல்களை சொல்லும் படம் இது..

படத்தின் பிரதான கேரக்டர்கள் யார், அவர்களுக்கு என்ன பிரச்சனை , கதையின் முடிச்சு என்ன என்பதெல்லாம் வெகு அழகாக குறைவான நேரத்திலேயே சொல்லப்பட்டு விடுகிறது..

குழந்தை இல்லாத தம்பதிகள்..குழந்தை குறித்து அடிக்கடி பிரச்சனை வருகிறது... தத்து எடுக்கும் முயற்சி சரிப்படவில்லை... நாயகனின் சகோதரனின் கோபமும் இதனால் ஏற்படுகிறது... 
நாயகனுக்கு தன் மனைவி மீது அன்புதான்...ஆனால் அதை சரியாக காட்டினானா? அன்பை கொட்டிக்கொடுக்க அவன் காத்து இருந்தும் , அவள் அன்புக்கு ஏங்கி வேறோர் இடம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம்...

காட்டாத அன்பு பூட்டாத பூட்டு போல பயனற்றதுதானே...அதேபோல , போலியான அன்பு எவ்வளவுதான் கொட்டப்பட்டாலும் அதனாலும் பலனில்லை..

இந்த அன்பு எப்படி ஓவ்வொருவரின் உறவுகளை பாதிக்கிறது என பல்வேறு கேரக்டர்கள் மூலம் கேஸ் ஸ்டடி செய்து இருக்கிறார் மகேந்திரன்,

படத்தின்  டைட்டிலில் முதல் பெயராக இடம் பெறுவது ஹீரோவின் பெயர் அல்ல... இந்த கதையை எழுதிய பொன்னீலவன் பெயர்தான் முதலில் காட்டப்படுகிறது..

மகேந்திரன் எப்போதுமே கதையை அப்படியே எடுப்பவர் அல்லர்.. ஒரு ஸ்பார்க் மட்டும் எடுத்துக்கொள்வார்... இதிலும் அப்படியே...ஆனால் வழக்கத்துக்கு மாறாக எழுத்தாளர் பொன்னீலவனுடனும் அவ்வப்போது விவாதித்து இருக்கிறார்.

பெண் கேரக்டர்களை அழுத்தமாக படைப்பது மகேந்திரன் இயல்பு..ஜானியில் ஸ்ரீதேவி கேரக்டரை ரஜினியை விட சற்று உயர்வாக காட்டி இருப்பார்... நாயகியை ஏமாற்ற முயலும் போலி ஜானி , நாயகியின் களங்கமற்ற அன்பை பார்த்து திகைத்து போவது படத்தின் முக்கிய திருப்பமாக இருக்கும்..
பெண்ணீயம் அல்லது பெண்ணடிமை என்ற துருவங்களில் சிக்காமல் , சில இடங்களில் பெண் ஆணை டாமினேட் செய்கிறாள்..சில இடங்களில் விட்டுக்கொடுக்கிறாள் என்ற எளிய யாதார்த்தம் இந்த படத்திலும் இருக்கிறது.

 கணவனை தூக்கி எறிந்து விட்டு , தனக்கு ஆசை காட்டியவனை தேடிசெல்கிறாள் நாயகி... அந்த துரோகியோ இவளை துரத்தி விடுகிறான்.. இவள் இப்போது என்ன செய்வாள்... கையறு நிலை... பெண் என்பவள் ஆண் சார்ந்துதான் இருக்க வேண்டி இருக்கிறது என்ற ஒரு நிலை..இங்கே பெண்மை பணிந்து போகும் நிலை...

இன்னொரு பெண்.. நாயகியுடன் சேர்ந்து வேலை செய்யும் ஓர் ஏழைப்பெண்... அவள் கணவனுக்கு கண் தெரியாது...அவனை இவளே காக்கிறாள்...இவள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றபோதும் , தன் கணவனை காக்கிறாள்.... ஒரு கட்டத்தில் கதானாயகனையே காக்கிறாள்... இன்னும் உச்சமாக, அவனுடைய மனைவியையும் தானே கவனிப்பதாக சவால் விடுகிறாள்..அங்கு பெண்மை விஸ்வரூபம் எடுக்கிறது..

இந்த இரண்டையும் அழகாக பேலன்ஸ் செய்கிறார் மகேந்திரன்...

இதை செண்டிமெண்ட் குப்பையாகவோ , ஆபாச களஞ்சியமாகவோ எடுத்து இருக்கலாம்... ( ஓர் இடைச்செருகல்...இந்த படம் தாமதமானதால் , இதே கதையை சற்று செக்சியாக எடுத்து , இதற்கு முன் ரிலீஸ் செய்து காசு பார்த்தது இன்னொரு படம் ).

ஆனால் மகேந்திரன் துளியும் ஆபாசமின்றி இந்த “ கள்ளக்காதல்” கதையை எடுத்து இருக்கிறார்..

ஊருக்கு புதிதாக வந்தவனின் பசப்பு மொழியில் , போலி அன்பில் நாயகி திசை மாறுகிறாள் என்பதை அவர் எப்படி ஒரே ஒரு ஷாட்டில் காட்டுகிறார் என்பதே அவரை சிறந்த கலைஞன் ஆக்குகிறது...ஆபாசம் ஆகி விடும் அந்த காட்சி கலையாக மிளிர்கிறது..

அவனுக்கு பரிமாற இலை விரிக்கிறாள் அவள்...அவன் சாப்பிட அமர்கிறான்... அவன் இலையில் அவன் சாப்பிட சோறு விழுவதற்கு முன் , அவள் தலையில் சூடியிருந்த பூவில் இருந்து ஒருபூ அவன் இலையில் விழுகிறது...இந்த காட்சி , அதற்கான இசை எல்லாம் உள் அர்த்தத்தை தெளிவாக விளக்கி விடும்... அவள் அவனுக்கு விருந்தாக முடிவெடுத்து விட்டாள்!!

அவன் கணவன் எந்த அளவுக்கு அப்பாவியாக இருக்கிறான்..?
அந்த ஆளை பார்க்க கணவன் போகிறான்.. தன்னை தேடி வருவதைப் பார்த்து அந்த ஆள் நடுங்குகிறான்... கணவனோ சம்பந்தம் இல்லாமல் வேறு என்னவோ சாதாரண விஷ்யம் பேசுகிறான்..தூரத்தில் இன்னொரு ஆளின் குரல் ஒலிக்கிறது... ஒரு அஞ்சு பைசா தொலஞ்சு போச்சு...தேடிக்கிட்டு இருக்கேன்... முக்கியமான ஒன்றே தொலையப்போகிறதே !!

இன்னொரு காட்சி..வயித்துக்கு துரோகம் பண்ணாம சாப்பிடுங்க..

அவன் பதில்// நான் ”வயித்துக்கு”  மட்டும்  துரோகம் பண்ண மாட்டேன்..


படம் எப்படி காட்சி ரீதியாக நகர்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்.

 நாயகனுக்கு பண நெருக்கடி ..சகோதரனிடம் போகிறான்.. அவனோ அவமானப்படுத்தி அனுப்புகிறான்.

சோகத்துடன் அந்த கண் தெரியாத கணவன் - மனைவி வீட்டுக்கு சென்று தன் சோகத்தை சொல்கிறான்..அந்த பெண் பாவம் ஏழை..கஷ்டப்பட்டு உழைத்தும் , க்டன் வாங்கியும் , தன் கணவன் கண் ஆப்பரேஷனுக்கு பணம் சேர்த்து வருகிறாள்..ஓரளவு பணம் சேர்த்து வைத்து இருக்கிறாள்.

தான் தன் கடையை விற்பதை தவிர வேறு வழி இல்லை என புலம்புகிறான் நாயகன்..

அவள் ஒரு முடிவுடன் எழுகிறாள்..தன் கணவன் தோளைத்தொட்டு ஏதோ பேசப்ப்போகிறாள்...அதற்குள் அந்த கண் தெரியாத கணவன் சொல்கிறான் “ நானும் அதைத்தான் நெனச்சேன் “  வேறு எந்த வசனமும் இல்லை... அவள் என்ன சொல்லப்போகிறாள் என்பது வசனம் இல்லாமல் அவனுக்கும் புரிகிறது.. நமக்கும் புரிகிறது.
லெனினின் எடிட்டிங் பற்றி சொல்ல வேண்டும்..ரஜினியின் ராஜாதிராஜா படத்துக்கு அவர்தான் எடிட்டர் என்பதும் , ப்டத்தின் வெற்றிக்கு அவர் எடிட்டிங் முக்கிய காரணம் என்பதும் பலருக்கு தெரியாது..
இந்த படத்தின் அழகுக்கு அவர் ஒரு முக்கிய காரணம்..முக்கியமான காட்சிகளை சஸ்டெயின் செய்து ஆழத்தை அதிகரிக்கிறார்... தேவையற்ற காட்சிகள் அறவே இல்லை..
இசை இளையராஜா...பின்னணி இசை அபாரம்.. பாடல்களில் பலருக்கும் பிடித்த பாடல் , ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது என்ற பாடல்..
ஆனால் எனக்கு பிடித்தது இந்த பாடல்..

இந்த பாடலின் தொடர்ச்சியாக , அந்த பெண்ணை கரக்ட் செய்துவிட்டதாக நாயகன் சொல்கிறான்.

இன்னொரு ஆளின் மனைவியை இப்படி செய்வது தப்பில்லையா என கேட்கிறான் ஊருக்கு புதிதாக வந்தவன்,,

இதில் என்ன தப்பு,,, அவளாத்தானே வந்தா என்கிறான் அவன்..

இந்த வார்த்தை அவனுக்கே பிறகு எதிராக போவது அவலச்சுவை..

இயல்பான ஹாஸ்யம், அழகான கேமரா என படத்தை ரசித்து பார்க்க முடிகிறது...

ஊரில் எல்லோரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை ஏளனமாக பார்க்கையில் , அது வரை பைத்தியமாக கருதப்பட்ட ஒருவன் , நான் ஏதேனும் உதவட்டுமா என்பான்,,, இது போன்ற அழுத்தமான காட்சிகள் படம் முழுக்க உண்டு,,

படம் முடிவதற்கு இரண்டு நிமிடம் முன்பு கூட படம் முடியபோவது தெரியாது,.சட் என ஒரு கவிதை போல முடிகிறது படம்..

படம் பார்த்து கொஞ்ச நாளைக்கு அந்த கணவன் மனைவியை மறக்க முடியாது... 

மொத்தத்தில் பார்த்தே ஆக வேண்டிய படங்களில் ஒன்று பூட்டாத பூட்டுகள்

 நடிப்பு - ஜெயன், சாருலதா , பிரபாகர் , சுந்தர் , குமரிமுத்து , சாமிக்கண்ணு மற்றும் பலர்
ஒளிப்பதிவு அசோக்குமார்
பாடல்கள்  பஞ்சு அருணாச்சலம்..









Wednesday, November 27, 2013

மகேந்திரனின் மகத்தான படைப்பு - இயல்பு மாறாத இன்னிசை




இப்போது ரஜினி ரசிகனாக இருப்பது வேறு. பள்ளிக்காலங்களில் ரஜினி ரசிகனாக இருப்பது வேறு. அப்போதெல்லாம் ரஜினி ரசிகனுக்கென , எழுதப்படாத மரபுகள் இருந்தன.. கமலை பெர்சனலாக திட்ட வேண்டும்... திட்ட வேண்டும் என ஏற்கனவே முடிவு செய்து விட்டு கமல் படத்துக்கு போக வேண்டும்... பாராட்ட வேண்டும் என ஏற்கனவே முடிவு செய்து விட்டு ரஜினி படத்துக்கு போக வேண்டும்.. படங்கள் மட்டும் அல்ல... பாடல்களைக்கூட இப்படி இனம் பிரித்து ரசிக்க வேண்டும் என பல விதிகள் உண்டு.

நடிப்பில் சிறந்தவர் ரஜினியா கமலா என அவ்வப்போது ஆரோக்கியமான வாக்குவாதங்கள் நிகழும்.. இந்த டிரண்ட் கல்லூரியிலும் தொடர்ந்தது...

எப்படி இருந்தாலும் ரஜினி படம்தானே நல்லா ஓடுது என்பதால் விவாதங்களில் எங்கள் கை சற்று ஓங்கியே இருக்கும். ஆனால் வெளியே சொல்ல முடியாமல் இரண்டு காம்ப்ளக்ஸ்கள் அப்போது இருந்தன..
ரொமான்ஸ் பாடல்களில் பெரும்பாலும் கமல் பட பாடல்கள்தான் நன்றாக இருக்கும்... இன்னொன்று ரஜினி படத்தில் தெரியும் லேசான ஆணாதிக்கம்..

இந்த குறைகளை நீக்கியது டீவியில் பார்த்த ஒரு ரஜினி படம். அந்த படத்தை அதன் பின் மீண்டும் மீண்டும் பல முறை பார்த்து வருகிறேன். ரஜினி படங்களில் எனக்கு பிடித்தது அந்த படம்தான்... அதுதான் ஜானி... மகேந்திரன் படங்களிலும் எனக்கு பிடித்தது அந்த படமே.. கதானாயகியை அந்த அளவுக்கு வேறு யாரும் கண்ணியமாக காட்டியதில்லை.. ரஜினியை அந்த அளவுக்கு யாரும் நடிக்க வைத்ததும் இல்லை..

இந்த காட்சியில் ஸ்கோர் செய்வது ரஜினியா,ஸ்ரீதேவியா, இளையராஜாவா

ரஜினியை மிகவும் வித்தியாசமாக காட்டி இருப்பார் இயக்குனர் மகேந்திரன். அதன் பின்புதான் முள்ளும் மலரும் பார்த்து பிரமித்தேன்.. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மகேந்திரன் எனக்கு பிடித்த இயக்க்குனராகிப்போனார். அவரது மற்ற படங்களையும் தேடி தேடி பார்க்க ஆரம்பித்தேன்.
அவர் படங்களிம் இயல்பு தன்மை , இயல்பான சுருக்கமான வசனங்கள் , ஈர்க்கும் திரைக்கதை , இயல்பான நடிப்பு , பாடல்கள் படமாக்கப்படும் விதம் என அவர் படங்களின் மாணவன் ஆனேன்,

அந்த வகையில் அவர் படங்களில் எனக்கு பிடித்த ( ஜானி , முள்ளும் மலரும் நீங்கலாக ) படம் நண்டு ( 1981) ...  வெகு வெகு இயல்பான கதை, இயல்பான சம்பவங்கள் , மறக்க முடியாத பாத்திரப்படைப்புகள், விஷுவ
குறியீட்டு ரசிகர்களுக்காக...
ல் ட்ரீட்கள், பாடல்கள் , விறுவிறுப்பான திரைக்கதை , சஸ்பென்ஸ் , வித்தியாசமான சில முயற்சிகள் என கலக்கி இருப்பார்.

ஆச்சர்யப்படுத்தும் விஷயங்கள் பல இருந்தாலும், இரண்டு மட்டும் சொல்கிறேன்..இந்த படத்தில் இரண்டு முழு நீள ஹிந்தி பாடல்கள் இடம்பெற்றுள்ளன.,.. தமிழ் படத்தில் ஹிந்தி பாடல் !!

சிறந்த பாடகராக  நம் மனதில் இருக்கும் பிபி ஸ்ரீநிவாஸ் அவர்கள்தான் இந்த பாடல்களை படைத்த கவிஞர் ஆவார் !!!

டைட்டில் கார்டில் திரைக்கதை வசனம் இயக்கம் மகேந்திரன் என்பது ஹிந்தி மொழியிலும் காட்டப்படுகிறது..


இப்படி பல ஆச்சர்யங்கள்..

படத்தின் கதை சிவசங்கரியினுடையது... அதை அப்படியே எடுக்காமல் கொஞ்சம் மாற்றி வேறோர் அர்த்தம் கொடுத்து இருக்கிறார் மகேந்திரன்.  ஆனால் முள்ளும் மலரும்போல முழுமையாக மாற்றவில்லை..

அது என்ன நண்டு? தலைப்பே ஆச்சர்யம் அளித்தது... படம் முழுக்க நண்டு வந்து கொண்டே இருக்கிறது..  நண்டு வளைக்குள் போகிறது என் இண்டர்வெல் கார்ட் போடுகிறார்கள் ...ஒருவேளை ஹீரோ என நாம் நினைப்பவன் மர்மமான ஆளா என்றெல்லாம் நினைக்கிறோம். கடைசியில்தான் அந்த குறியீடு புரிகிறது..
ஸ்பாய்லர் என்பதெற்கெல்லாம் பழைய படங்களில் அர்த்தம் இல்லை என்றாலும், இன்னும் படம் பார்க்காதவர்கள் யாரேனும் இருக்க கூடும்..எனவே அவர்கள் படம் பார்க்கும் அனுபவத்தை கெடுக்க விரும்பவில்லை..அதை விளக்கவும் விரும்பவில்லை..

நண்டு பாறைகளை துளைப்பதில்லை... துயரங்கள் நல்லவர்களை அழிப்பதில்லை ..இதுதான் படத்தின் கான்சப்ட் என்பதால் , இதன் குறியீடாகவும் நண்டை பார்க்கலாம்..

 நண்டுகளை ஒரு கூடையில் போட்டு வைத்து பாருங்கள்..ஒரு நண்டு மேலே ஏற முயன்றால் , மற்றவை அதை கீழே இழுக்கும். மத்திய தர வாழ்க்கை இப்படித்தான்... கஷ்டப்பட்டு , சிக்கனமாக இருந்து முன்னேற முயலும்போது , பிரச்சனைகள் கீழே இழுக்கும்.. மீண்டும் பல்லைக்கடித்துக்கொண்டு முன்னேறியாக வேண்டும்..இதன் குறியீடாகவும் நண்டை பார்க்கலாம்..

நண்டு வெளியே தெரியாமல் மண்ணுக்குள் இருக்கும்.திடீர் என வெளிப்படும்..அது போல வாழ்க்கையில் பிரச்சனைகள் திடீர் என்றுதான் தோன்றும் என்பதன் குறியீடாகவும் பார்க்கலாம்..

ஆனால் படத்தில் இன்னொரு விஷ்யம் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளது.. பழைய படம்தானே என சொல்ல விரும்பவில்லை... யாரேனும் ஒருவராவது புதிதாக பார்ப்பீர்கள்..உங்கள் அனுபவத்தை கெடுக்க விரும்பவில்லை..


பெரிய இடத்து வடக்கிந்திய பையன் ராம்... பொறுப்பற்ற அப்பா... குடும்பத்தில் மற்றவர்கள் அன்பான்வர்கள்.. பையன் ஆஸ்த்மா நோயாளி... அப்பாவின் டார்ச்சர் பொறுக்க முடியாமல் , அங்கிருந்து கிளம்பி சென்னையில் வேலை கிடைத்து வந்து விடுகிறான்

அங்கே ஓர் ஒண்டு குடித்தனத்தில் புரோக்கர் குமரி முத்து சேர்த்து விடுகிறார்.சென்னை ஆஃபிசில் வேலை செய்யும் சக ஊழியர் சீதாவும் அதே வீட்டில்தான் தன் குடும்பத்துடன் வசிக்கிறார் என்பது தெரிந்து மகிழ்கிறான் ராம் ( குறியீட்டு ரசிகர்கள் , இந்த பெயர்களை கவனியுங்கள் !! ) .

சிதாவின் அம்மா , ( அப்பா இல்லை ) சீதா அக்கா , அவள் கணவன் , வீட்டு ஓனர், எல் அய் சி ஏஜண்ட் வெண்ணிற ஆடை மூர்த்தி , வீட்டு ஓனர் மகள் , அங்கு இருக்கும் மற்ற பெண்கள் , சீதாவின் தோழி , அவள் தகப்பன் , என பிரதான கேரக்டர்களும் அவர்கள் குணாதிசயங்களும் ( ராமின் குடும்பம் உட்பட ) , வெறும் பத்து நிமிடங்களில் நமக்கு அறிமுகமாகி விடுகின்றன என்பதில்தான் மகேந்த்ரன் நிற்கிறார்.

அதன் பின் பலத்த போட்டிகளுக்கிடையே காதலில் சீதா வெல்வது , அக்கா கணவனின் வில்லத்தனத்தை மீறி திருமணம் , குழந்தை , மகிழ்ச்சியான வாழ்க்கை , வட இந்தியா செல்லுதல் , ராம் அம்மாவின் மகிழ்ச்சி , என இளையராஜாவின் பாடலுடன் படம் இனிமையாகவும் விறுவிறுப்பாகவும் செல்கிறது.. கடைசியில் நாம் ஆவலுடன் எதிர்பார்த்த நண்டு வந்து படத்தை முடித்து வைக்கிறது..

பிரச்சனைகள் என்றும் ஓயப்போவதில்லை.. ஆனால் வாழ்க்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதே படத்தின் மெசேஜ்..

பிரச்சனைகளை வெல்லும் ஆற்றல்  நம்மிடம் இருப்பது வரம் என்றால் , ஒரு பிரச்சனை முடிந்து விட்டது என ஹாயாக உட்கார முடியாது என்பது சாபம்...மண்ணுக்கடியில் ஒளிந்து இருக்கும்  அடுத்த பிரச்சனை எப்போதும் வெளி வரலாம்..

இந்த இரண்டுக்கும் நடுவில்தான் வாழ்க்கை செல்கிறது..

படிக்கும்போது பாசாகும் பிரச்சனை , காதல் பிரச்சனை , குழ்ந்தை பிறக்கவில்லையே என பிரச்சனை , குழந்தைகளால் பிரச்சனை , அவர்களுக்கு திரும்ண பிரச்சனை என எப்போதும் பிரச்சனைகள் தோன்றிக்கொண்டேதான் இருக்கின்றன..சினிமாவில்தான் , காதலர்கள் திருமணம் செய்து கொள்வதுடனோ . ஹீரோ பழி வாங்குவதடனோ பிரச்சனை முடிந்து விடுவதாக காட்டுவார்கள்...அல்லது எல்லாம் நாசமா போச்சே என ஒப்பாரியுடன் படத்தை முடிப்பார்கள்.. ஆனால் வாழ்க்கை இப்படி இல்லை..at a given moment , இரண்டுமே இருக்கும்..

இந்த வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்த வெகு சில படங்களில் இந்த படமும் ஒன்று..

குளிக்க தண்ணீர் கிடைப்பதில் பிரச்சனை என்பதும் ஒரு பிரச்சனைதான்,, ஆனால் அங்கும்கூட யாராவது உதவக்கூடும்.. அந்த நேரத்தில் அது பேருதவி.. ஓர் ஆணுடன் பேசினால் , புரணி பேசுபவர்கள் இருந்தால் , ஆதரவு கொடுப்போரும் எங்காவது இருப்பார்கள்.. திருமணத்தை பேசி முடிக்கும் நல்லிதயங்கள் தொலைவில் இருந்து வரக்கூடும்...அதைக்கெடுக்கும் சதிகாரர்கள் கூடவே இருக்கக்கூடும்.. வந்த மருமகளை வாயார வரவேற்கும் மாமியாரும் , துரத்தும் மாமனாரும் ஒரே இடத்தில் இருக்கக்கூடும்..
இப்படி சீதாவின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் வெகு இயல்பாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

வட இந்திய காட்சி வசனங்களை எப்படி கையாண்டார்கள் என்பது இன்னொரு சுவாரஸ்யம்... கதாபாத்திரங்கள் ஹிந்தியில் பேசுவார்கள்..ஆனால் குரல் தமிழில் ஒலிக்கும்..அதாவது நமக்கும் புரிந்து விடும்..அவர்கள் எப்படி தமிழ் பேசுகிறார்கள் என்ற கேள்வியும் வராது..

ஆனால் எல்லா காட்சிகளிலும் இப்படி தமிழ் ஒலிக்காது.. சில சந்தர்ப்பங்களில் தமிழ் , ஹிந்தி மொழி வேறுபாடுகளை வைத்து காட்சி இருக்கும்..உதாரணமாக , மாமியார் பேசுவது சீதாவுக்கு புரியவில்லை..கணவனிடம் கேட்கிறாள் என்றால் , மாமியார் ஹிந்தியிலேயே பேசினால்தான் இயல்பாக இருக்கும்... அது போன்ற இடங்களில் ஹிந்தியிலேயே பேசுவார்கள்.
அதில் சுவாரஸ்யமான காட்சி ஒன்று.. சீதா பேசுவதை தன் தாய்க்கு ராம் விளக்குகிறான் இல்லையா.. அவனுக்கு ஏதோ ஒன்று தேவைப்படும்.. அதை அவன் தமிழிலேயே கேட்பான்... என்னப்பா சொல்ற என அம்மா கேட்க, வெட்கத்துடன் தன் தவறை உணர்ந்து ஹிந்தியில் கேட்பான்// மெல்லிய நகைச்சுவை..அதே நேரம் அவன் தமிழ் குடும்பத்தில் பழகி பழகி அவன் மனதில் தமிழ்தான் இருக்கிறது என்பதும் பூடகமாக சொல்லப்பட்டு இருக்கும்..லல்லி சீன்


செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி, வனிதா , குமரிமுத்து , வீட்டுஓனர் , ரிக்‌ஷா ஓட்டுப்வர் என ஒவ்வொரு கேரக்டரும் செதுக்கப்பட்டுள்ளது...தேவை இன்றி ஒரு காட்சியும் இல்லை... ஒரு கேரக்டரும் இல்லை...

கதானாயகன் சுரேஷ் நாயகி அஸ்வினி....இருவரும் செம க்யூட்டாக நடித்து இருக்கிறார்கள்...  நாயகனுக்கு குரல் கொடுத்து இருப்பவர் சரத்பாபு... அருமை.

அள்ளித் தந்த் பூமி அன்னை அல்லவா , சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா.

எனக்கு மிக மிக பிடித்த பாடல்..

இதை வட இந்திய நாயகன் பாடப்போகிறானா என சற்று புன்னகையுடன் எதிர்பார்த்தேன்.. ஆனால் மகேந்திரன் கில்லாடி... அதை நாயகன் பாடவில்லை.. அவர்கள் ஊர் சுற்றி பார்க்கும்போது பின்னணியில் பாடல் ஒலிக்கும்.. ராஜாவின் பல பாடல்களை நம் இயக்குனர்கள் வீணடித்துள்ளனர்.. ஆனால் மகேந்திரன் போன்ற மேதைகள் அந்த பாடல்களுக்கு உரிய மரியாதை கொடுத்து பாடல்களை பயன்படுத்தியுள்ளனர்...உதா. இந்த பாடல்..

பார்த்தே ஆக வேண்டிய அந்த பாடல்

மஞ்சள் வெயில் என்றொரு இன்னொரு பாடல்..மயக்கும் பாடல்..

சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன்... உன் மூஞ்சிய பார்த்தா காறித்துப்புற மாதிரி இருக்கு என ஓர் இளம்பெண் முன் காறித்துப்புகிறார் நடிகர்... ஆடியன்ஸ் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்..இதில் என்ன நகைச்சுவை என எனக்கு புரியவில்லை...

காட்சிப்பூர்வமான ஹாஸ்யம் இங்கு வளரவே இல்லை... இந்த படத்தில் காட்சிப்பூர்வ ஹாஸ்யங்கள் அனேகம்.. உதாரணமாக சுண்டல் காட்சி... படம்பார்த்தால் , அதை காண மறக்காதீர்கள்..

கிளைமேக்ச்சை மட்டும் வைத்து படம் எடுக்காமல் , ஒவ்வொரு காட்சியையும் சிறுகதையாக செதுக்கி இருக்கும் நேர்த்தி அபாரம்... சீதாவின் காதலுக்காக , தோழியும் அவள் அப்பாவும் பேசுவது அழகு அழகு அழகு..

இன்னொரு காட்சி..

ராக்கி பண்டிகை... அந்த வீட்டு பெண்களிடன் ராக்கி கயிற்றை கொடுத்து, யாராவது ஒருவர் எனக்கு கட்டி விட்டு , எனக்கு தங்கை ஆகுங்கள் என்கின்றான் ராம்.

அவனை மாடிக்கு போகச்சொல்லி விட்டு பெண்கள் விவாதிக்கிறார்கள்.. யாருக்கும் தங்கையாக விருப்பம் இல்லை... நைசாக நாயகியிடம் கொடுத்து மாடிக்கு அனுப்புகிறார்கள்..அது வரை அவர்கள் காதலை சொல்லிக்கொண்டதில்லை...எனவே நாயகி ராக்கி கயிற்றுடன் மாடிக்கு போகிறாள்..

முன்னணி இசை , இசையராஜா என்றெல்லாம் உசுப்பேத்தி விட்டு சிலர் அவரை ஒழித்து கட்டி விட்டார்கள்.. ஆனால் நான் சொல்லும் இந்த காட்சியில் அவர் இசையமைப்பு ஃபர்ஸ்ட் கிளாஸ்.

இந்த காட்சி , அதற்கு நாயகன் பதில் , அவள் என்ன செய்கிறாள் , கீழே வந்து தன் உணர்வுகளை தன் தாயிடம் எப்படி வார்த்தை இன்றி வெளிப்படுத்துகிறாள் , அந்த் தாய் அதை எப்படி ஏற்கிறார் என்பதையெல்லாம் பார்க்கையில் என் கண்கள் கலங்கி விட்டன ( சோகத்தால் அல்ல )/.


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா