Tuesday, January 21, 2020

சிவாஜியுடன் சிறப்பு அனுபவங்கள்

சின்ன வயதில் இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியில் அன்னையின் ஆணை என்ற படம் பார்த்தேன். சின்ன வயது என்பதால் படம் அவ்வளவாக நினைவில்லை . ஆனால் ஒரு காட்சி மனதில் பசை போட்டு உட்காரந்து விட்டது
அதில் சிவாஜியின் மனைவியாக வரும் சாவித்ரி , கணவனை கடுமையாக திட்டுவார். சிவாஜியின் நெஞ்சில் நகத்தால் பிராண்டி காயப்படுத்துவார்.சிவாஜி எந்த எதிர்வினையும் காட்டாமல் வாஷ்பேசின் சென்று காயத்தை கழுவிக் கொள்வார். நிதானமாக துண்டால் துடைப்பார். எதிர்பாரா ஒரு கணத்தில் திடீரென ஆக்ரோஷத்தை காட்டுவார். பிரமிப்பாக இருக்கும்

இந்த காட்சி பலராலும் ரசிக்கப்பட்ட ஒன்று என்ற தகவல் இந்த நூலை எனக்கு நெருக்கமாக்கியது ....  நான் சுவாசிக்கும் சிவாஜி _ஒய் ஜீ மஹேந்திரா

வரலாற்றுச் சம்பவங்களும் நேரடி அனுபவங்களும் கலந்து எழுதப்பட்ட நூல் என்பது இதன் தனித்துவம்

நூலாசிரியர் சிவாஜியுடன் அவர் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் என்பதால் பல அபூர்வ தகவல்களைத் தருகிறார். ஒரு சராசரி ரசிகனாக தான் ரசித்த காட்சிகளையும் சொல்கிறார்

அதாவது என்பதை வெவ்வேறு மாடுலேஷன்களில் சொல்வது , ஒரே பாடலை வெவ்வேறு பாணியில் வெளிப்படுத்துவது , இரண்டு கண்களில்,இருவேறு உணர்ச்சிகளைக் காட்டுவது . அதற்கான ஷாட் என இவர் சொல்லும் காட்சிகளை இன்றைய தொழால்நுட்ப வளர்ச்சியால் நாம் உடனே யூட்யூபில் கண்டு ரசிக்க முடிவது கூடுதல் அனுகூலம்

களைப்பாக இருப்பதுபோல நடிப்பதற்காக பயிற்சி செய்யும் நடிகரிடம் களைப்பாக இருப்பது போல நடிக்க பழகுங்கள் , நிஜமாகவே களைப்பது நடிப்பல்ல என பாடம் எடுப்பது , காஞ்சிப் பெரியவரின் ஆசி , கவுரவம் படத்தில் மகன் வேடத்தில் முத்துராமன் போன்ற பிற நடிகர்களை நடிக வைக்காமல் தந்தை மகன் என இரண்டு வேடங்களையும் செய்ததற்கான காரணம் , ரஜினியின் அனுபவம் , பாலு மகேந்திரா சேரன் போன்றோர் சிவாஜிக்காக கதை சொன்ன நிகழ்வுகள் என சினிமாத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் அரிய பொக்கிஷமாக வந்துள்ளது புத்தகம்

கண்ணதாசன் பதிப்பகம் வெகு ஸ்டைலிஷாக நூலை வெளியிட்டுள்ளனர். வண்ணப்படங்கள் உட்பட ஏராளமான படங்கள் , பிழைகளற்ற தமிழ் என கவியரசருக்கு மரியாதை செய்துள்ளது பதிப்பகம்

கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா