Wednesday, June 3, 2020

அறிஞர்களை கொண்டாட காரணம் தேவையா ? திண்ணை விவாதம்

திண்ணை இதழில் ஜகந்நாதராஜா குறித்து வெளியான என் கட்டுரை மீது ஓர் விவாதம்..


  • BSV 
    இக்கட்டுரையைக் கண்டவுடன் ”என்ன ஜகன்னாத ராஜாவுக்கு என்ன ஆச்சு?” என்ற பயம்தான் வந்தது. திடீரென ஒருவரைப்பற்றி எழுத ஏதாவது காரணம் வேண்டும். போனவாரம் நாவலாசிரியர் வெங்கடராம் பற்றிய கட்டுரை இங்கு வந்தது. அவரின் நூற்றாண்டு நினைவு காரணம். அவருக்கும் தாய்மொழி தமிழில்லை.
    ஜகன்னாத ராஜா யார்? எங்கு பிறந்தார்? வளர்ந்தார்? அவருக்குத் தாய்மொழி தெலுங்கு என்று சொல்லிவிட்டால் போதுமா?
    ஒருவரைப் புகழ இன்னொருவரை இகழ வேண்டிய தேவையில்லை. பலவிடங்களில் தமிழ் ஆர்வலர்களை இகழ்கிறார் கட்டுரையில்.தமிழ் பிழைப்புவாதிகள் ஒருபக்கம் இருந்தாலும் தமிழை விரும்பி அதைப் பரப்ப ஆசைப்பட் உண்டு. ஆசைப்பட்ட தமிழ் ஆர்வலர்களும் தமிழ்க்காதலர்களும் எப்போதும் உண்டு. அவர்களுள் ஒருவர்தான் பாரதியார். தமிழ் பிழைப்புவாதியா அவர்?
    தமிழ் என் மூச்சு அதை பிறரிடமும் விடவேண்டுமென்றார் பாரதியார். எப்படி? இப்படி…
    ”யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
    இனிதாவது எங்கும் காணோம்,

    தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
    பரவும் வகை செய்தல் வேண்டும்.

    ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
    வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!
    சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
    தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

    திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
    அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.” என்று ஓங்கியுரைத்தார் பாரதியார்.
    தமிழைப் பிறரிடம் கொண்டு செல்ல மாட்டேன் என்றால் (தமிழ் என் மூச்சு; அதைப் பிறர் மேல் விட மாட்டேன்!” என்றாலதுதான் பொருள்) தெருவெல்லாம் தமிழ் முழக்கம் எப்படி செய்ய முடியும்? தேமதுரத் தமிழோசை உலமெல்லாம் எப்படி கேட்க முடியும்? வெளினாட்டார் தமிழே தெரியாமல் எப்படி வணக்கம் செய்வார்கள்?

  • BSV 
    ஜகன்னாத ராஜா என்பவர் ஒருவரே. ஆனால் ஜகன்னாத ராஜாக்கள் என்ற பன்மையில் தலைப்பு. ராஜாக்கள் என்பவர்கள் தெலுங்கு இன மக்கள். கரிசல் காட்டு பகுதியில் வந்து குடியேறியவர்கள். இவரைத் தவிர நான் வேறு எந்த தமிழறிஞர்களும் ராஜாக்களிடமிருந்து வந்ததாகத் தெரியவில்லை. எப்படி பன்மை வரும்? அதே சமயம், தமிழ்னாட்டு முதலமைச்சாரகவே அந்த இனத்திலிருந்து வந்தவர்தான் குமாரசாமி ராஜா. அவர் தமிழறிஞர் இல்லை.
    தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழறிஞர்கள் ஏராளம். மாபெரும் தமிழறிஞரான பரிதிமாற்கலைஞரே ஒரு தெலுங்கு பிராமணர். தமிழ்னாட்டில் பல தலைமுறைகளாக வசிப்போர் தமிழில் ஆர்வலராகவும் அறிஞர்களாகவும் இருப்பதில் வியப்பில்லை.
    இக்கட்டுரையில் பிற்பகுதியில் பட்டியலிடப்பட்ட நூல்களில் எண்ணம் 10 – தமிழக – ஆந்திர வைணவத் தொடர்புகள்- என்ற நூல் என்னிடம் உள்ளது. எத்தனை முறை வாசித்தேன் என்ற கணக்கே இல்லை. ராஜா என்ற பெயரைப்பார்த்துதான் நான் வாங்கினேன். காரணம்; தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டு அம்மொழியில் புலமை பெற்ற ஒருவரால் மட்டுமே இப்படிப்பட்ட நூலை எழுத முடியும். தெலுங்கு-தமிழ் வைணவத்தொடர்பை, சங்ககாலத்தில் தொடங்கி ஆழ்வார் பாசுரங்கள் வழியாக பெரும்புலமையோடு விளக்குகிறார். ஜகன்னாத ராஜா தஞ்சைத் தமிழ்ப் பலகலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர்.

  • பிச்சைக்காரன் 
    ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுப்பதற்கு மகிழ்ச்சி.
    ஒரு வார இதழின் அட்டையில் ஒரு அரசியல் தலைவர் , நடிகர் , கவர்ச்சி நடிகை இடம்பெற்றால் இயல்பாக எடுத்துக் கொள்வோம். ஓர் இலக்கியவாதி படத்தை பார்த்தால் அய்யய்யோ என்ன ஆச்சு இவருக்கு பதறுவோம். அல்லது”விருது ஏதேனும் வாங்கி இருக்கிறாரோ என நினைப்போம். ஒரு நடிகனை , கட்சிக்காரனை தினம்தோறும் பேசலாம். ஆனால் இலக்கியவாதியை பேச, அவன் சாக”வேண்டும் அவ்லது நூற்றாண்டு விழா, விருது என்பது போல ஏதேனும்் நிகழ வேண்டும். இதுதான் நம் இயல்பு. உவேசா வையே பிறந்த நாளிலோ , நினைவு தினத்திலோதானே பேசுகிறோம். அரசியலையும் சினிமாவையும்தானே கொண்டாடுகிறோம். சான்றோர்களையும் அப்படி நேரம்காலம் பாரக்காது கொண்டாட வேண்டும் என்பதை நீண்ட காலமாக கடைபிடிக்கும் திண்ணை இதழ் பிரத்யேக காரணங்கள் ஏதுமின்றியே ஜகந்நாதராஜா கட்டுரையை பிரதான கட்டுரையாக வெளியிட்டிருப்பது ஆச்சர்யம் இல்லை. பல இலக்கிய இதழ்களிலேயே தற்போது அரசியல்தலைவர்கள்தான் வியந்தோதப்படுகின்றனர். பாரதியாரும் பன்மொழி வித்தகர்தான். பிறநாட்டு கலைச்செல்வங்களை கொண்டு வந்து சேருங்கள். திறமை எங்கிருந்தாலும் மதியுங்கள் என்றார். தமிழை உலகமெங்கும் பரப்புவதற்கு தேவையான பிறமொழி ஞானம் அவரிடம் இருந்தது. மொழி காழப்பு அவரிடம் இல்லை. ராஜாக்கள் சமூகத்தின் பங்களிப்பு,என்று விவரித்து இதை சாதீய விவாதமாக மாற்றலாகாது. அதை தனியாக பேச வேண்டும். நமக்கு தேவை காந்திகள் கிடைப்பதோ கோட்சேக்கள் என பெயர்ச்சொல்லில் பன்மையை பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளதுதான்

  • பிச்சைக்காரன் 
    “ஜகன்னாத ராஜா யார்? எங்கு பிறந்தார்? வளர்ந்தார்? அவருக்குத் தாய்மொழி தெலுங்கு என்று சொல்லிவிட்டால் போதுமா?”
    கண்டிப்பாக போதாது.. இது ஒரு அறிமுக கட்டுரை மட்டுமே.. அவர் அமைத்த நூலகம் , இலக்கிய மன்றம் , அவரது இலக்கிய குரு , பிறப்பும் வாழ்வும் என ஏராளம் பேசலாம். பேசவேண்டும் . பேசுவோம்.
    அதுமட்டுமின்றி , மேலும் பல அறிஞர்களை சான்றோர்களை , அவர்கள் சாவதற்காக காத்திராமல் , நூற்றாண்டு விழா , பிறந்த நாள் என காத்திராமல் , அவ்வப்போது கொண்டாடுவோம். வணிக சினிமாக்களையும், கட்சிக்காரர்களையும் கொண்டாட பலர் உள்ளனர். நாமாவது மேதைகளை , நல்லோர்களை , கலையை , தமிழை கொண்டாடுவோம்

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா