Showing posts with label சீரோ டிகிரி. Show all posts
Showing posts with label சீரோ டிகிரி. Show all posts

Tuesday, July 2, 2013

சர்வதேச விருதை குறி வைக்கும் சாருவின் நாவல்- வரலாற்று தருணத்தில் தமிழ் படைப்புலகம்


  உலக அளவிலான நாவல்களுடன் போட்டியிட்டு , கடைசி சுற்றுக்கு முன்னேறி, கிட்டத்தட்ட 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள சுவிஸ் இலக்கிய விருது கிட்டத்தட்ட கிடைத்துவிட்டது என்ற நிலையில் சாரு நிவேதிதா இருப்பது தமிழ் இலக்கிய உலகில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் , நடுனிலை  இலக்கியவாதிகள் , ஒரு தமிழ் எழுத்தாளனின் நாவல் உலக அரங்க்குக்கு செல்வதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



உலக அளவில் சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்து ஸ்விஸ் நாட்டின் Jan Michalski விருது ஒவ்வொரு ஆண்டும் வ்ழங்கப்படுகிறது.


தகுதி வாய்ந்த நடுவர்கள் சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுப்பார்கள்.


முதல் மூன்று இடம் பிடிக்கும் எழுத்தாளர்கள் , சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்ப்பட்டு ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள இலக்கிய வீடு Maison de l’Ecriture எனும் பிரமாண்ட நகரத்தில் மூன்று மாதங்கள் தங்க வைக்கப்படுவார்கள்.




இந்த நகரம் எழுத்தாளர்களுக்காக சகல வசதிகளுடன் உருவாக்கப்பட்டபகுதியாகும். வசதியான அறைகள் , உணவகம் , நூலகம் , கண்காட்சியகம் என எல்லாமே இதில் இருக்கும்.


நவம்பரில் முடிவு அறிவிக்கபடும், வெல்வோர் முப்பது லடசம் ரூபாய்களை பரிசாக பெறுவார்.


இந்த் ஆண்டுக்கான போட்டியியில் 11 புத்தகங்கள் இறுதி சுற்றில் உள்ளன.


இறுதி சுற்றுக்கு வந்த புத்தகங்களில் சாருவின் ஜீரோ டிகிரியும் ஒன்று.


இதில் மற்றவை அனைத்தும் ஒரே ஃபார்மேட்டில் இருக்கும் நிலையில் ஓர் உன்னதமான பின் நவீனத்துவமான படைப்பான சீரோ டிகிரி மிக மிக வேறுபட்டு இருப்பதால் அதற்கே பரிசு கிடைக்கும் என இப்போதே பேசப்பட்டு வருகிறது.

மற்ற புத்தகங்களை சாதாரணமாக மதிப்பிட்டு விட முடியாது. கறாராக பரீசிலித்துதான் ஷார்ட் லிஸ்ட் செய்து இருக்கிறார்கள். சீரோ டிகிரி களத்தில் இல்லாவிட்டால், ஒவ்வொரு புத்தகமுமே முதல் பரிசுக்கு தகுதியானவைதான். ஆனால் சீரோ டிகிரி களத்தில் இருப்பதால் , இப்போதே பரிசி உறுதி என்கிறார்கள் நடு நிலையாளர்கள்.

எனக்கும் சீரோ டிகிரிக்கும் இடையேயான தொடர்பு இன்று நேற்றல்ல. பல காலமாக நீடித்து வருகிறது. என் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் படித்து இருக்கிறேன் . வாழ்வின் கஷ்ட நஷ்டங்களை அறியாத பருவம்.,வேலையில்லாமல் கஷ்டப்பட்ட காலகட்டம்., மகிழ்ச்சியான கால கட்டம், இலக்கிய பரிச்சயம் ஏற்பட்ட கால கட்டம் என ஒவ்வொரு நிலையிலும் படிக்கும்போது ஒவ்வொரு உணர்வை தந்து கொண்டு இருக்கிறது சீரோ டிகிரி.

அதனால்தான் இன்னும் அதைப்படித்து கொண்டே இருக்கிறேன். என்னால் என்றுமே முடிக்க முடியாத நாவல் இதுதான்.

என்னிடம் சீரோ டிகிரி பிரதிகள் எத்தனை இருக்கின்றன என எனக்கே தெரியாது. வெவ்வேறு இடங்களில் , வெவ்வேறு சூழ்னிலைகளில் சீரோ டிகிரி காப்பிகளை வாங்கிப்படிப்பது என் வழக்கமாக இருந்து இருக்கிறது.

இத்தனைக்கும் சாரு எழுத்தில் எனக்கு பிடித்தது எக்சைல்தான். அதற்கு பிறகு ராசலீலா. ஆனால் அவை எல்லாம் ஒரு காப்பிதான் இருக்கின்றன. சீரோ டிகிரியில் மற்ற புத்தகங்களில் இல்லாத  வேறு ஏதோ ஒன்று , வரையரை செய்ய முடியாத ஒன்று இருக்கிறது.

என்சைக்களோபீடியாகவாக , கவிதை நூலாக, சிறுகதை தொகுப்பாக , நாவலாக என விதம் விதமாக ரசித்து படித்தாலும் இதை இன்னும் படிக்க முடிக்க முடியவில்லை.

எத்தனையோ வரிகளை மீண்டும் மீண்டும் படித்து கொண்டே இருக்கலாம்.

  • பூனைக்குட்டிகளை யாராவது வெறுக்க முடியுமா என்ன? கறுப்பு பூனைக்குட்டி , வெள்ளை பூனைக்குட்டி, பழுப்பு பூனைக்குட்டி. பூனைக்குட்டிக்ளை நான் ஆராதிக்கிறேன். முத்தமிடுகிறேன். பூனைக்குட்டிகள் மிகவும் ருசியானவை.
  • ஊசிமுனை வழியே யானையை இழுத்து செல்லும் செப்படி வித்தை - எழுத்து
  • எழுத்து வாழ்க்கையை பற்றியதல்ல, எழுத்து எழுத்தைப் பற்றியது
  • தேசிய கீதத்தை பத்தி என்ன நினைக்கிறீங்க?   “ நான் அதைப் பிரதியாக பார்க்கிறேன். இலக்கியப்பிரதியாக “   -இந்த பதிலுக்காகவே உங்களுக்கு நோபல் பரிசு கொடுக்கணும். என்ன பதிலு சார். எப்படித்தான் உங்க மூளைல இப்படியெல்லாம் உதிக்குதோ. ம்ம். நானும் அந்த காலத்துல இப்படி இருந்தவன் தான்.
  • தமிழ் மொழி என்பது எத்தனை இனக்குழுக்களின் மொழிகளை ஒழித்துக்கட்டி விட்டு உருவானதென்பது உத்தம தமிழ் எழுத்தாளனுக்கு தெரியுமா?
  • கைக்குள் சிக்கவில்லை
           இருந்தும்
          
            தன் முதல் கவிதையை எழுதிக்கொண்டிருக்கிறது

             மொழி

  • சூன்ய மொழி 
          சீழ் பிடிக்க
         ஒற்றைக் கண்ணில் இருந்து
         ஒழுகியது
         கவிதை

  • இப்படித்தான் இது தோன்றியது எனில் இத்தோற்றங்களின் தோற்றம் எப்படி இருந்தது?

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

 நான் ரசித்து படித்த நாவல் உலக அளவில் கவனம் பெற்று இருப்பது மட்டுமே என் மகிழ்ச்சிக்கு காரணம் அல்ல/

இதன் மூலம்  உலக அரங்கில் தமிழும் கவனம் பெறுவது ஒட்டு மொத்த தமிழ் இலக்கியத்துக்கே நல்லது என்ற வகையில் , இதை தமிழ் எழுத்துலக வரலாற்றின் திருப்பு முனையாகவே கருதுகிறேன்.

             ***************

 நான் கருதுவதெல்லாம் இருக்கட்டும். கவிஞர் றியாஸ் குரானா இது குறித்து என்ன சொல்கிறார்?


எனது நேர்காணலில் சாருவுக்கு புக்கர் பரிசு கிடைக்கும் என்று சொன்ன ஞாபகம் வருகிறது. சீரோ டிகிரிக்கு விருது கிடைக்க வாய்ப்புள்ளது. எனது இனிய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

1. காப்பி அடிப்பவர், எழுத்தை வைத்து மிக மோசமான அரசியலை செய்பவர் என பல விமர்சனங்கள் இருந்தாலும் தமிழிலிருக்கும் மிகக் கவர்ச்சிகரமான, உலகத்தரத்திலான கதைசொல்லி சாரு நிNவேதிதாதான். உலகத்தரத்தில் பலருடைய கதைகள் இருந்தாலும் சாரு நிவேதிதாவின் எழுத்துக்கள் கொண்டிருக்கின்ற கவர்ச்சி தமிழில் வேறு யாரிடமும் இல்லை. இது நிரந்தரமான ஒரு கருத்து அல்ல. வாசிப்பு விரிவுபடும்போது மதிப்பீடுகளும் மாற்றமடைகின்றன.

2.கவரச்சிகரமான எழுத்து - நீண்ட நேரம் ஒரே வகையான சூழலுக்கள் பார்வையாளரை வைத்திருப்பதில்லை. பலவகையான பொருட்கள் உள்ள ஒரு வியாபார நிலையத்தைப்போல, இங்குமங்குமாக பலவகையான பொருட்களை பரப்பி வைத்திருப்பவை. எல்லா வகையான பார்வையாளர் களுக்குமான சாமான்கள் அங்கு கிடைக்கும்.மிக மோசமானது எனக் கருதப்படுபவைகள் தொடங்கி உயர்தரமானவைகள் என கருதப்படுபவைவரை அங்குண்டு. ஒரே இடத்தில் எல்லாம் பார்வைக்குண்டு. பன்மையான பார்வையாளர்களை அங்கு சந்திக்க செய்யும். விதம் விதமான பார்வையாளர்களை ஒரே இடத்தில் கூட்டிவிடக்கூடிய பிரதி என்பதால் அப்படிச்சொன்னேன். சாருவின் பிரதியைக் கையிலெடுக்கும் ஒருவர் அதை தூக்கிவீசிவிட முடியாது.ஏனெனில், அவர் எதிர்பார்ப்பவைகளும் சிறிதளவிலேனும் அங்கு கிடைக்கும். இது தமிழில் வேறு எந்த எழுத்தாளர்களின் பிரதியிலும் இல்லை. அது ராய் இசைபோல ஒரு கலப்பினம்.

3.உலகத்தரம் - எந்த வகையான கோட்பாட்டு வாசிப்புக்களுக்கும் இடந்தருபவை.கோட்பாடுகளுக்கு அப்பாலும் லைற்றீடிங்குக்கும் இடந்தருபவை. சாருவின் பிரதிகளை வாசிக்கும்போது, எப்போதோ வாசித்த பல கோட்பாடுகள், ரசனை மதிப்பீடகள், சாதாரண செய்திபற்றிய கருத்து நிலைகள் என பலவற்றை மீண்டும் நமக்குள் கிளர்த்துகின்றன. இப்படியான காரணங்களால் அது உலகத்தரமானது என்றும் கூறினேன். உலகத்தரமென்று ஒன்று தனிப்படையான வரையறைகளுக்குள் இல்லை என்று புரிந்திருக்கின்ற நிலையிலே - உலகத்தரம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன் என்பதையும் தெரிவிக்கிறேன்.

4.சூப்பர் மாக்கெட்டில் சாமான்கள் பரப்புவதைப்போன்ற அம்சம் மற்றவர்களிடம் இல்லை என்றுதான் சொன்னேன்.மற்றவர்களின் கதைகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. மிக மலிவான பொருட்களைக் கொண்டும் பெறுமதிமிக்க ஒன்றை உருவாக்க முடியும் என்பதையே சாரு நிவேதிதாவின் எழுத்துக்களில் பார்க்கிறேன்.அதுவே கவர்ச்சிகரமானதாக எனக்கு தோன்றுகிறது.

5.பெறுமதி - பிரதியை உருவாக்கும் பணியில் வாசகனின் பங்களிப்பை ஏற்பவன் என்ற வகையில், பலவகைப்பட்ட வாசகர்களின் இருப்பையும் ஏற்பவன்.அது அவசியமென்றும் கருதுபவன்.ஆக, பிரதியை அர்த்தப்படுத்தும் வழிகளில் அனைத்து வகை பார்வையாளர்களும் பங்காற்றக்கூடிய இடத்தை தன்னகத்தில் கொண்டிருக்கும் கதைகளாகவே சாருவின் நாவல்களைப் பார்க்கிறேன்.அதுவே அதற்கான பெறுமதி என்றும் கருதுகிறேன்.மற்றப்படி, அகவிரிவாக்கதில் சுயவிமர்சனத்தை தவறவிடும் தருணங்கள் போன்ற உங்கள் ஏனைய விமர்சனங்கள் எனக்கு உடன்பாடனவைதான். அதை நான் எனது நேர்காணலில் சொல்லியிருக்கிறேன்.





Tuesday, July 20, 2010

ஸீரோ டிகிரி- அற்பமா அற்புதமா


சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரி நாவல் அற்புதமான நூலா அல்லது அற்பமான என பலருக்கு சந்தேகம்...

இதில் பெரும்பாலானோர் இதை படித்ததில்லை என்பதே உண்மை..

லேசாக சில பக்கங்களை பார்த்து விட்டு , ஆபாச குப்பை என சொல்பவர்கள் ஒரு புறம்...

சாருவை நேசிப்பவர்கள், அவர் எழுதினால் நன்றாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் , படிக்காமலேயே , இது அறபுதமான நூல் என் சொல்லும் நிலை ஒரு புறம். ..

இலக்கியம் தெரிந்தவர்கள் இதை பார்க்கும் முறை வேறு...

எல்லா புத்தகங்களையும், விருப்பு வெறுப்பு இன்றி படிக்கும் , ஒரு பார்வையாளன் இதை எப்படி பார்க்கிறான்.. பின் நவீனத்துவனம் வரையறை, நான் லீனியர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் ஆராயாமல், இந்த நூல் எப்படி ஒருவரை பாதிக்கும் என எளிய தமிழில் சொல்வதே இந்த பதிவின் நோக்கம்...

ஓர் ஆபாச புத்தகத்தையோ , ஆபாச சினிமாவையோ பார்த்தால், அனைவரையும் ஆபாசமாக நினைக்கவே தோன்றும்.. ஆபாச எண்ணங்களை மனதில் எழுந்தவாறு இருக்கும்..

ஸீரோ டிகிரியை படித்து முடித்தால், கண்டிப்பாக ஆபாச எண்ணம் தோன்றாது... எனவே இது ஆபாச குப்பை என சிலர் சொல்வது தவறு...

வழக்கமான நடையில் இருந்து மாறுபட்டு வித்தியாசமாக இருப்பது படிப்பதை எளிமை ஆக்குகிறது...

அனால், மற்ற புத்தகங்களை போல, விரைவாக படிக்காமல், ஒவ்வொரு வரியையும் , ஒவ்வொரு எழுத்தையும் கூர்மையாக படிக்க வேண்டிய இருக்கிறது...

சில நாவல்களை, ஒரு பத்தியை விட்டு விட்டு படித்தாலும் , தொடர்ச்சி இழக்கப்பாமல், அதை புரிந்து கொள்ள முடியும்..

ஆனால், தொடர்ச்சி இல்லாமல் எழுதப்பட்டுள்ள இந்த நாவலை , ஒரு வரியை விட்டு விட்டாலும், புரிந்து கொள்ள முடியாமல் போய் விட கூடும்...

தியானத்தில் ஒரு வகை உண்டு.. மனதை கவனித்தல் என்பது எல்லோரும் சொல்லும் தியானம்..இதில் சற்று மேம்ப்பட்ட நிலைதான், மனதை யார் கவனி க்கிறான் என்பதையே கவனிப்பது..

இந்த நிலை நாவலை படிக்கும்போது ஏற்படுகிறது....

படித்து முடித்ததும், மனம் உறைந்து விட்ட நிலை ஏற்படுகிறது... சற்று நேரம் மனம் அசையவே இல்லை....

கண்ணீர், நகைச்சுவை, அன்பு என எல்லாமே உண்டு...

அனைவரும் படிக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.. தமிழில் தான் இதை நாம் ரசிக்க முடியும்... வேறு மொழியில் இது போன்ற நாவலை ரசிப்பது கடினம்...

தமிழ் அவர் இழுத்த இழுப்புக்கு வருவது ஆசார்யமாக இருக்கிறது..

கொடூரம், நேசம் எல்லாமே நெஞ்சை தொடுகின்றன..

ஆனாலும், இதை அனைவரும் படிக்க முடியாது என்பதே என் கருத்து.. அனைவரும் படிக்க தேவையும் இல்லை...

வாழ்க்கையின் கொடூரங்களை அறியாத இனிய வாழ்வு சிலருக்கு ஆசிர்வத்திக்கப்பட்டு இருக்கலாம்.. அவர்கள் வலி , வன்முறை யை எல்லாம் புரிந்து கொள்வது கஷ்டமாக இருக்கும்...

அதே போல ஓரளவுக்கு மன முதிர்ச்சியும் தேவை... இல்லை என்றால், ஆபாச கதை போல தோன்ற கூடும்... ஆபாச கதை எல்லாம் படித்து முடித்தவர்களுக்குத்தான், இதில் சொல்ல வரும் விஷயம் புரியும்...

இந்த நாவலின் தேவை இல்லாதவர்களை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கும்...

அதாவது இந்த நாவலை படித்து விட்டு, என்னக்கு இது அன்னியமாக இருக்கிறது என்று ஒருவர் சொன்னால், அவர் ஓர் உன்னத வாழ்க்கை, (கவலைகள், வலி எல்லாம் இல்லாத வாழ்க்கை) வாழ்கிறார் என பொருள்..

********************************************************

இந்த நாவல் என்னில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்திய , மறக்க முடியாத நாவல்...


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா