Showing posts with label செய்திகள் நூலகம். Show all posts
Showing posts with label செய்திகள் நூலகம். Show all posts

Thursday, November 10, 2011

சாருவின் கட்டுரையை படியுங்கள்- துக்ளக் இதழுக்கு கடிதம்

அன்புள்ள துக்ளக் ஆசிரியர் அவர்களுக்கு..

இந்த வார துக்ளக் பார்த்தேன். நூலக இட மாற்றத்தை மறு பரீசலனை செய்ய வேண்டும் என எழுதியிருந்தீர்கள்.  உங்கள் கருத்தை சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு.

ஆனால் இது சம்பந்தமான கட்டுரைகளில் தகவல் பிழைகள் இருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்


  • இந்த இடமாற்றம் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாக எழுதி இருக்கிறீர்கள்.
இது தவறு. மக்களுக்கு சம்பந்தம் இல்லாத சில தமிழ் வியாபாரிகள், இலக்கிய வாதிகள் என்ற போர்வையில் இதை எதிர்க்கிறார்களே தவிர, பொது மக்கள் இதை வரவேற்கவே செய்கின்றனர். கன்னிமரா நூலகம் அருகே அண்ணா நூலகமும் மாற்றப்பட்டால், பய்னாளிகளுக்கு வசதிதான் என்பதால் , உண்மையிலேயே நூலகங்களை பயன்படுத்துபவர்கள் இந்த மாற்றத்தை வரவேற்கின்ற்னர். உங்கள் நிருபரை கன்னிமரா நூலகம் அனுப்பி , அங்கு தேர்வுகளுக்காக படித்து கொண்டிருக்கும் இளைஞர்கள் கருத்தை கேட்டு விட்டு அதன் பின் முடிவு செய்யுங்கள். ஏற்பட்டுள்ளது சர்ச்சை அன்று , மகிழ்ச்சிதான்.

  • எழுத்தாளர்கள் இந்த மாற்றத்தை எதிர்ப்பதாக எழுதி இருக்கிறீர்கள்

இது முற்றிலும் தவறு. ஒரு சில ஓய்வு பெற்ற , முன்னாள் எழுத்தாளர்கள் கட்சி அடிப்படையில் எதிர்க்கிறார்களே தவிர, தற்போது ஆக்டிவாக எழுதிக்கொண்டு இருக்கும் சாரு நிவேதிதா போன்றோர் இதை எதிர்க்கவில்லை ( அவர் கட்டுரையை இத்துடன் இணைத்துள்ளேன் ) ஒரு செயலுக்கு ரஜினி , கமல் போன்றோர் எதிர்ப்பு  தெரிவித்தால் , அதை நடிகர்கள் எதிர்ப்பு என செய்தியாக்கலாம். ஓமக்குச்சி நரசிம்மன், என்னத்த கண்ணையா போன்றோர் எதிர்ப்பை ஒட்டு மொத்த நடிகர்க்ளின் எதிர்ப்பாக எடுத்து கொள்ள கூடாது.  நூலக மாற்றத்தை எதிர்க்கும் இந்த எழுத்தாளர்கள் எந்த முக்கியத்துவமும் இல்லாதவர்கள். முக்கியத்துவம் வாய்ந்த எழுத்தாள்ர்களான சாரு போன்றோர் இதை எதிர்க்கவில்லை

  • கோட்டூர்புர அண்ணா நூலகத்தை கணிசமானோர் பயன்படுத்துகிறார்கள் என எழுதி இருக்கிறீர்கள்
ஓரளவு உண்மைதான். ஆனால் இதே நூலகம் கன்னிமரா அருகே மாற்றப்பட்டால் , படிப்பவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் 

  •  நலிந்த மக்கள் வாழும் மாவட்டங்களில் இருந்த நிதியை முறைகேடாக எடுத்து பயன்படுத்தியது தவறுதான், அதற்கென்ன செய்வது, இனி மேல் நிதி ஒதுக்கி , அவர்களுக்கு புத்தகம் வாங்கி தரலாம் என எழுதி இருக்கிறீர்கள்.
இது நலிந்த மக்களுக்கு எதிரான கருத்து. 

இஸ்லாமியர் வாழும் இடங்கள், தாழ்த்தப்பட்டோர் அதிகம் வாழும் இடங்கள், கல்வி அறிவு குறைந்த மாவட்டங்கள் இனம் காணப்பட்டு , அங்குள்ள நூலகங்களுக்கு உடனடியாக ,கோட்டூர்புரம் நூலகங்களின் புத்தகங்கள் அனுப்பப்பட வேண்டும்,  இனி மேல் புதிதாக நிதி ஒதுக்கி, புதிதாக அமையவுள்ள அண்ணா நூலகத்திற்கு புத்தகம் வாங்க வேண்டும் என்பதே சரியான தீர்வாக அமைய முடியும். 

Wednesday, November 9, 2011

தமிழ் நாட்டின் அவமான சின்னம் - அணிவகுக்கும் ஆதாரங்கள்

 நூலக இடம் மாற்றம் குறித்து தினதந்தியையும்  நக்கீரனையும் படித்து விட்டு, கண்கள் சிவக்க, சினிமாவில் வருவது போல நரம்புகள் புடைத்து எழ ஆவேசத்துடன் பாய்ந்த அறிவு கொழுந்துகளைப்பற்றி குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் இவர்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு அறிவு கூர்மையை காட்டி வருகிறார்கள் இலக்கியவாதிகள். இந்த விஷ்யத்தில் தெளிவான கருத்தை சொன்ன ஒரே இலக்கியவாதி அல்ட்டிமேட் ரைட்டர் சாரு மட்டுமே.. 


இந்த நூலகம் தொடர்பான ஊழல்கள், முறைகேடுகள் எல்லாம் ஆதாரத்துடம் அணி வகுத்து வருகின்றன. செலவிட்டப்பட்ட தொகையில் மிக கொஞ்சம் மட்டுமே நூல்களுக்காக சென்றுள்ளது பெரும்பாலான தொகை சிலர் பாக்கெட்டுகளுக்கு சென்றுள்ளது.  நலிவடைந்த மக்கள் மாவட்டங்களின் நூலக நிதியை முறைகேடாக எடுத்து இதற்கு பயன்படுத்தியுள்ளனர். 


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த அசைக்க முடியாத ஆதாரங்கள் உங்கள் பார்வைக்கு..


*****************************************************************





  • பல புத்தகங்கள் சந்தை விலையை விட அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பிராடிகல்ஸ், ரேடிகல்ஸ் இன் எக்சைடைட் ஸ்டேட்ஸ் என்ற புத்தகம் வெளிச் சந்தையில் ரூ.89,319 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் ரூ.1,44,098-க்கு வாங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜியோலைட் ஸ்ட்ரக்சர் கோட்ஸ் என்ற புத்தகம் ரூ.70 ஆயிரம் அதிகமாகக் கொடுத்து ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்துக்கு வாங்கப்பட்டுள்ளது.
  •  இதன்காரணமாக அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
  •  அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு புத்தகங்களை வாங்க டெண்டர் கோரப்பட்டதா என்று கேள்விக்கு, டெண்டர் கோரப்படவில்லை என்றும், நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் புத்தகங்கள் வாங்கப்பட்டதாகவும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
  •  அரசு விதிகளின் படி, ரூ.50 லட்சத்துக்கும் அதிகமாக பொருள்களை வாங்கும்போது வெளிப்படையான டெண்டர் மூலமாகவே வாங்க வேண்டும். எனவே, இது விதிகளுக்கு எதிரானது ஆகும்.
  • கன்னிமாரா நூலக இயக்குனர் தான் பரிந்துரைத்துள்ளார். சட்டப்படி, அவருக்கு உரிமையில்லை. சென்னையில் நூலகச் சட்டப்படி, மாவட்ட நூலக ஆணைக்குழுவின் நிதி ஆதாரத்தின் அடிப்படையில் தான் நூலகம் அமைக்க வேண்டும்
 
  •  நூலகத்துக்காக தமிழக அரசு தரப்பில் ரூ.20 கோடி மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.165 கோடி உள்ளூர் நூலக ஆணைக் குழுவின் நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நூலக நிதிகளிலிருந்தும் இதற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இதுவும் விதிகளுக்கு எதிரானது.
  •  அண்ணா நூற்றாண்டு நூலகத் திறப்பு விழாவுக்கு ரூ.1 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்க ரூ.23 லட்சமும், உணவுக்கு ரூ.9.8 லட்சமும் செலவிடப்பட்டுள்ளன. 
********************************************************************************

இவ்வளவு முறைகேட்டுடன் கட்டப்ப்ட்ட கட்டடம் தமிழ் நாட்டின் அவமான சின்னம் என மக்கள் கருதுகின்றனர், இதற்கு அண்ணா பெயர் வைத்தது அவரை இழிவு செய்வது போலுள்ளது என்கின்றனர் விபரம் புரிந்தவர்கள்

Tuesday, November 8, 2011

முதல்வரிடம் நேரடியாக மனு - நல்லெண்ணம் கொண்ட பதிவர்கள் கவனத்திற்கு


 நூலகம் என்பது அறிவு தேடல் கொண்டவர்களுக்கு மட்டும் அன்று. ஒரு சராசரி மனிதனுக்கும் கூட அத்தியாவசியமானது.
ஆனால் ஆட்சியாளர்களுக்கு சராசரி மக்களைப் பற்றி கவலைப்படவே நேரம் இருப்பதில்லை என்கிறபோது நலிந்த மக்களைப்பற்றி கவலைப்பட ஏது நேரம்?

   அண்ணா பல்கலைக்கழகம் , ஐ ஐ டி போன்ற இடங்களில் அறிவு தேடலுக்கு போதுமான வசதிகளை அங்கேயே கொடுத்து விடுகிறார்கள். அதையும் மீறி தேவைப்பட்டால் , நகர் முழுதும் ஏராளமான வசதி வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் விடாப்பிடியாக கோட்டூர்புரத்திலேயே நூலகம் அமைக்க காரணம் மக்கள் நல் வாழ்வு அன்று. தமிழக மக்களில் எத்தனைபேர் இதை பயன்படுத்திக்கொள்ள முடியும் ? .001% இருந்தால் அதிகம். இந்த நிலையில் அங்கு 200 கோடியை கொட்டியது சரியா? 

இதை பல பகுதிகளாக பிரித்து , மாவட்டங்கள் தோறும் நூலகங்களை மேம்படுத்தி இருந்தால் , ஒட்டு மொத்த தமிழகமுமே பயன்படுத்தி இருக்குமே.

எங்கு நோயாளிகள் இருக்கிறார்களோ அங்குதானே மருத்துவர்கள் தேவை. ஏற்கனவே நல்ல நிலையில் இருப்பவர்களிடமே மீண்டும் மீண்டும் மருத்துவர்களை அனுப்பி பயன் உண்டா? 

சென்னை வாழ் மக்களுக்குமே கூட கோட்டூர்புரத்தை விட எழும்பூர்தான் படிப்பதற்கு வசதியான இடம். காரணம் அதை சூழ்ந்துதான் பல நூலகங்கள் உள்ளன. வெளியூரில் இருந்து ரயிலில் வருபவர்களுக்கும் ,புற நகரில் இருந்து வருபவர்களுக்கும் எக்மோர்தான் வசதி. 

தலை நகரில் ஒரு பிரமாண்டமான நூலகம் எழுப்பினால்  விளம்பரம் கிடைக்கும் என்பதை தவிர வேறு எந்த பயனும் இதில் இல்லை.

சென்னையில் வசிக்கும் ஓய்வு பெற்ற எழுத்தாளர்கள் , நல்ல ஓய்வு இடம் பறிபோகிறதே எந்த ஆதங்கத்தில், நூலக மாற்றத்தை எதிர்க்கிறார்களே தவிர, ஞானி போன்றவர்கள் கொள்கை அடிப்படையில் கோட்டூர்புரத்தில் நூலகம் இருப்பதை எதிர்க்கிறார்கள். ஆனால் இதை மாற்றினால் அரசு வேறு இடம் வழங்காது என்பது மட்டுமே அவர்கள் தயக்கம்..

இந்த நிலையில் ஒரு கட்சி தலைவர் ( அதிமுக, திமுக , காங்கிரஸ் அல்ல )  நூலக மாற்றத்தில் இருக்கும் நியாயத்தை முதல்வரிடம் எடுத்து சொல்ல உதவுவதாக ஒப்புக்கொண்டுள்ளார். முதல்வரிடம்  இது குறித்து நேரடியாக மனு கொடுக்கவும் ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்.

தகுந்த ஆட்கள் மூலம் மனு கொடுத்தால் அது உரிய கவனம் பெறும் என்பது ஒரு புறம் இருக்க , ஏற்கனவே அரசும் நூலக மாற்ற சிந்தனையில் இருப்பதால் மனு கூடுதல் கவனம் பெறும் என்று நம்பலாம்.

 நான் கொடுக்க இருக்கும் மனு கீழ் கண்டவாறு இருக்கும். நீங்களும் நேரடியாக கொடுக்க முடிந்தால் கொடுங்கள். அல்லது தபாலில் அனுப்புங்கள்.  அல்லது ஒருங்கிணைந்து செயல்படுவது என்றாலும் ஓக்கே.

*************************************************************

என் மனு

மாண்பு மிகு முதல்வர் அவர்களுக்கு.

கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள நூலகம் நலிவடைந்த மக்களுக்கு பயனளிக்கவில்லை. 200கோடியை ஒரே இடத்தில் கொட்டியதற்கு பதிலாக, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கீழக்கரை போன்ற ஊர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் ஊர்கள், கல்வியில் பின் தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்கள் என இனம் காணப்பட்டு , ஆங்காங்கு நூலகங்கள் அமைக்கப்பட்டு இருந்தால் அனைவருக்கும் பலனளிப்பதாக இருந்து இருக்கும். கட்டடங்களுக்கு குறைவாகவும், நூல்களுக்கு அதிகமாகவும் செல்வழித்து இருந்தால் , இதே தொகையில் பெரிய அறிவு புரட்சியே ஏற்படுத்தி இருக்க முடியும். ஆனால் சென்ற அரசு ஏதோ சில காரணங்களால் மக்கள் பணத்தை வீணாக்கி விட்டது. 
மக்கள் உங்களிடம் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். டி பி அய்க்கு நூலக்ததை மாற்றுவது நல்லதுதான். ஆனால் அதை விட சிறந்த மாற்று வழி உண்டு.  நூலகங்கள் குறைவாக இருக்கும் இடங்களை இனம் கண்டு அங்கு நூலகத்தை மாற்றுவதே சிறந்தது. அது உடனடியாக முடியாத பட்சத்தில் , இப்போதைய கோட்டூர்புர நூலகத்தை உடனடியாக மூடிவிட்டு, அங்கு இருக்கும் புத்தகங்களை பிரித்து , மாவட்ட நூலகங்களுக்கு அனுப்ப ஆவண செய்தால், தமிழகம் முழுதும் உங்களை வாழ்த்தும்.

தங்கள் உண்மையுள்ள ... 
மக்கள் நலனில் அக்கறை கொண்ட , 
ஒரு சாதாரண மனிதன்
*****************************************8

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா