Showing posts with label ஜேம்ஸ் ஆலன். Show all posts
Showing posts with label ஜேம்ஸ் ஆலன். Show all posts

Sunday, May 30, 2021

நிபுணத்துவம் அடைய எவ்வளவு மணி நேரம் தேவை ?

 ஒரு விஷயத்தில்  மேதைமை அடைய 10,000 மணி நேரங்கள் பயிற்சி தேவை என்கிறார் மால்கம் கிளாட்வெல்

எளிமையாக சொல்லவேண்டுமென்றால்

10000 / 24  =  கிட்டத்தட்ட  417 நாட்கள் தூங்காமல் சாப்பிடாமல் இரவு பகலாக பயிற்சி எடுக்க வேண்டும்.  அது சாத்தியமில்லை

தினசரி மூன்று மணி நேரங்கள் வீதம் ஒன்பது வருடங்கள் பயிற்சி எடுத்தால் ஒன்பது வருடங்களில் பத்தாயிரம் மணி நேரம் வந்து விடும்.

அதாவது தனது ஐந்து வயதில் ஒருவன் இசை , கிரிக்கெட் , வணிகம், கல்வி என ஏதேனும் ஒன்றில் ஈடுபடும் சூழல் இருந்தால் பள்ளிப்பருவத்தில் அந்தந்த துறைகளில் பிரகாசிப்பான்.  ஆசிரியர்கள் கவனிப்பு, புகழ் , தன்னம்பிக்கை ,  உயரக நட்புசூழல்என நல்ல விஷயங்கள் நடக்கும்.  பிற்காலத்தில் ஜொலிப்பான்

சற்று தாமதமாக , அதாவது பத்து வயதில் ஈடுபாடு ஆரம்பித்தால் , பயிற்சி செய்யும் காலத்தைப்பொறுத்து ,  அவனும் சாதனையாளராகலாம்

ஏஆர் ரகுமான் ,  டெண்டுல்கர் போன்றோரின் குடும்ப சூழல் இந்த பத்தாயிரம் மணி நேரத்தை அவர்களுக்கு அளித்ததை கவனியுங்கள்

ஜெயமோகன் தனது வெகு  சின்ன வயதிலேயே புத்தகம் படிக்கும் சூழல் இருந்ததாக சொன்னது நினைவிருக்கலாம்

ஒருவருக்கு 20 வயதில்தான் இந்த ஒன்றில் ஆர்வம் ஏற்படுகிறது , பயிற்சி எடுக்கும் சூழல் அமைகாறது என்றால் இரவுபகலாக கடுமையாக உழைத்து இந்த பத்தாயிரம் இலக்கை அடைதல் வேண்டும்

சாரு நிவேதிதா போன்ற பல எழுத்தாளர்கள் வெறித்தனமான வாசிப்பு மூலம் இந்த இலக்கை அடைந்தனர்

தாமதமாக தமது பயணத்தை தொடங்கி நாற்பது வயதுகளில் இலக்கை அடைந்தோரும் உண்டு ( எம்ஜிஆர் , நடிகர் விக்ரம் சில உதாரணங்கள)

அறுபது வயது வரை பயிற்சி செய்து,, ஓய்வுக்குப்பின் ஜொலிப்போரும் உண்டு


பெரிய சாதனையெல்லாம் வேண்டாம். ஒரு செயலில் நிபுணத்துவம் அடைந்தால் போதும் என்றால் அதற்கு தேவையான காலம் எவ்வளவு ?


நிபுணத்துவத்தின் நான்கு படிக்கட்டுகள் என ஜேம்ஸ் ஆலன் இப்படி சொல்கிறார்

1 பிடிவாதம் 2 தீவிர ஈடுபாடு  3 ஈடுபாடு மறைதல்  4 ஓய்வு

முதலில் ஒரு விஷயத்தை தேர்ந்தெடுத்து அதில் ஈடுபட வேண்டும்.  மனம் அதில் ஈடுபடாமல் முரண்டு பிடிக்கும்.   வெட்டியாக இதில் ஈடுபடுகிறோமோ , நாளைக்கு செய்யலாமே என்றெல்லாம் தோன்றும்  ஆனால் பிடிவாதமாக அதில் இருக்க வேண்டும் இது முதல் நிலை

அதன் பின் மனம் சற்று அடங்கும்.  அந்த செயலை அழகாக எளிதாக செய்ய மனமே யோசனைகள் தர ஆரம்பிக்கும் . இந்த  ஈடுபாடு இரண்டாம் நிலை

சைக்கிள் , கார் , பைக் போன்றவை நன்கு பழகியபின் கவனமே இல்லாமல்கூட அவற்றை இயக்க முடியும்.   ஈடுபாடு தேவையற்ற நிலை. இது மூன்றாம் நிலை


கவிதை கதை என நிபுணத்துவம் அடைந்தபின் எழுதவேண்டும் என்ற,முனைப்பு இல்லாதபோதுகூட கற்பனைகள் ஊற்றெடுக்கும்.  உழைப்பு தேவைப்படாத இந்த நிலை நான்காவது நிலை


முதல் இரண்டு நிலைகளை அடைய 48 நாட்கள் ஆகும்


48 நாட்கள் ஒரு விஷயத்தை இடைவிடாது செய்தால் மனம் அடங்கி , ஒத்துழைக்க,ஆரம்பித்து விடும்


அதற்குப்பிறகு அடுத்த நிலைகளுக்கு செல்வதும் உறுதி  .  எடுத்துக்கொள்ளும் வேலையைப்பொறுத்து , நான்காம் கட்டத்தை அடையலாம்

48 நாட்கள் தாக்குப்பிடிப்பது முக்கியம்

 









Sunday, February 16, 2020

வளத்தை தாங்கும் 8 தூண்கள் ஜேம்ஸ் ஆலன்

தொழில் நிமித்தம் அல்லது இலக்கிய மதிப்பு சார்ந்து படிப்பது ஒருவிதம். சும்மா படிப்பது வேறுவிதம்

இந்த சும்மா வாசித்தல்தான் முக்கியம். தப்பும் தவறுமான மொழியில் வெற்று அரட்டைக்காக எழுதப்படும் நூல்களை எக்காரணம் கொண்டும் படிக்கலாகாது என்ற என் தீர்மானத்தின்படி
சமீபத்தில் ஒரு நல்ல நூல் படித்தேன். வளமான வாழ்வின் எட்டு தூண்கள் ... ஜேம்ஸ் ஆலன்
பிறந்து விட்ட அனைவருமே சிறப்பான வாழ்வை வாழ முடியும். ஆனால் முடிவதில்லை..வளமான வாழ்க்கைக்கு எட்டு விஷயங்கள்தான் அடிப்படையானவை என்கிறார் இவர்.

சுறுசுறுப்பு , பேச்சில் செயலில் அளவோடு இருத்தல் , தனக்கு உண்மையாக இருத்தல் , ஒரு முறைமையை உருவாக்கி அதை கடைபிடித்தல், பரிவு , அக்கறை , சுயநலமின்மை , தன்னை நம்பி செயல்படுதல் ஆகியவை அவர் சொல்லும் எட்டு தூண்களாகும்

இவை அனைத்தும் " அதுதான் எனக்குத் தெரியுமே " வகையிலான எளிதானவைகளாக தோன்றினாலும் அவற்றை நாம் கடைபிடிப்பதில்லை என்பதே உண்மை

அளவுக்கு அதிகமாக செல்போனை முகநூலை பயன்படுத்துதல் , தேவைக்கு அதிகமாக கருத்து ஃசொல்லல் , பேசுதல் போன்ற அனைத்துமே நம் இயல்பாகிவிட்டன. இது தவறு ( இரண்டாம் தூண் )

யாராவது வந்து செய்யட்டும் என நினைக்காமல் முதல் அடியை நாம் எடுத்து வைக்க வேண்டும். செய்வதில்லை

தெரிந்தே அநீதியை ஆதரித்தல் , தெரிந்தே நேரத்தை வீணடித்தல் நம்மிடம் உள்ளன ( 3)

ஒரு நாளில் இவ்வளவு நேரம்தான் செல்போன் , டிவி பயன்படுத்தலாம் , ஒரு மாதத்தில் இத்தனை நூல்கள் படிக்க வேண்டும் , இத்தனை சொற்கள் கற்க வேண்டும் போன்ற இலக்குகள் நிர்ணயித்து இருக்கிறோமா

இப்படி பல கேள்விகளை நம்முள் எழுப்புகிறது இந்த நூல்







Tuesday, June 15, 2010

உன்னத வாழ்வுக்கு உதவும் தூண்டு விசை - ஜேம்ஸ் ஆலன்


ஜேம்ஸ் ஆலனின் கட்டுரை ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ( அடைப்பு குறிக்குள் நம்ம சொந்த கருத்து )

*******************************************

தனி மனித மேம்பாட்டுக்கு வழி வகுக்கும் ஆற்றல் மிக்க தூண்டு விசை , உறுதி எடுத்து கொள்ளல் அல்லது சபதம் செய்தல் என்ற விஷயம் ( இனி தண்ணி அடிக்க மாட்டேன். தினமும் படிப்பேன், தினமும் எழுதுவேன் என்பது போல ) ..
இது இல்லாமல் பெரிய விஷயங்கள் எதுவும் சாதிக்க முடியாது. உறுதிமொழி இல்லாத வாழ்க்கை , நோக்கம் இல்லாத ஒன்று.. நோக்கம் இல்லாத ஒரு வாழ்க்கை சிறப்பானதாக அமையாது.. தெளிவாகவும் , கவனமாகவும் தயாரிக்கப்பட்ட உறுதி மொழி இல்லாமல், வாழக்கையில் முன்னேற முடியாது..
தவறான விஷயங்களுக்கும் உறுதி மொழி எடுக்க முடியும் என்றாலும் ( அவனை அவமானப்படுத்தாமல் விட மாடேன் என்பது போல ) நல்ல விஷயகளை செய்பவர்களுக்குதான் உறுதி மொழி, உற்ற நண்பனாக இருக்கிறது.. எனவே இதை நல்ல விஷயங்களுக்கு எப்படி பயன்படுத்துவது என்பதை மட்டும் சொல்ல போகிறேன் ( நாளையில் இருந்து தினமும் தண்ணி அடிப்பேன் என யாரும் உறுதி மொழி எடுத்து கொள்வதில்லை . பெரும்பாலும் நல்ல விஷயங்களுகுதான் இது பயன்படுகிறது )

ஒருவன் ஒரு உறுதி , சபதம் எடுத்து கொள்கிறான் என்றால் என்ன அர்த்தம்,.? தற்போதைய நிலை அவனுக்கு பிடிக்க வில்லை. தனது குணத்தையும், வாழ்வையும் தீர்மானிக்கும் , மனம் என்ற விஷயத்தில் இருந்து, சிறந்த ஒன்றை எதிர்பார்க்கிறான்.அதற்கான பொறுப்பை வேறு யாரிடமும் கொடுக்காமல் தானே பொறுப்பை ஏற்க முடிவு செய்து விட்டான் என அர்த்தம். . அந்த சபதத்திற்கு உண்மையாக இருக்கும் பட்சத்தில் , சிறப்பான நிலையை அடைந்தேதீருவான்.
பெரிய ஞானிகளின் சாதனைகளை பார்த்தோம் என்றால் அதற்கு பின் அவர்கள் சபதம் இருக்கும்.
சிறந்த பாதை ஒன்றில் நடக்க தீர்மானித்ததும், பல பிரச்சினைகள் வரத்தான் செய்யும். ஆனாலும் , சோதனை எனும் இருளை கிழிக்கும் ஒலிகீற்றாக நம் லட்சிய தீபம்ஒளிர்ந்து வழி காட்டும்
ஒரு சபதம் என்பது வெறும் ஆசை அல்ல. ஒரு நல்ல நோக்கத்தை அடைய, எது வந்தாலும் பின் வாங்காமல் போராடுவேன் என்ற உறுதியான தீர்மானம் தான் உண்மையான உறுதி மொழி. . இதை கவனமாக உருவாக்க வேண்டும்.
அரைகுறை மனத்துடன் செய்யப்படும் சபதம் , சபதமே அன்று. கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே , இது உடைந்து விடும் ( சீக்கிரம் எ ந்திரிக்கனும்னுதான் நினைச்சேன்..ஆனா, குளிர் அதிகம் ,.,அதான் ஒரு நாள் வேண்டாம்னு னு இழுத்து போர்த்தி தூங்கிட்டேன் )

ஒரு சபதத்தை உருவாக்க பொறுமையுடன் செயல்பட வேண்டும் . அவசரம் கூடாது. என்ன பிரச்சினைகள் வர கூடும் என யோசிக்க வேண்டும். அதற்கு தயராக வேண்டும். என்ன சபதம் செய்கிறோம் என முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். ஒருவன் , பயமோ சந்தேகமோ இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு , அதற்கு பின் உறுதி எடுத்து கொண்டால், கண்டிப்பாக தன லட்சியத்தை அடைந்தே தீருவான்.

அவசர சபதம் , ஆடி போய் விடும் ..
தாக்கு பிடிக்கும் தந்திரத்தை, மனமே நீ கற்று கொள்..

உயர்ந்த சபதம் ஒன்றை எடுத்து கொண்ட மறு கணமே , அதற்கு சவால்கள் துவங்கும். சோதனை ஆரம்பிக்கும். வாய்ப்புகள் தேடிவரும் . ( சும்மா இருக்கும் போது கூட , வாரத்துக்கு  ஒரு நாள் தண்ணி அடித்து , நிம்மதியாக இருப்போம். தண்ணி அடிக்க மாட்டேன் என சபதம் செய்தவுடன் தான், தண்ணி அடிக்க பல அழைப்புகள் தேடி வர ஆரம்பிக்கும் ) இந்த சவால்களை சந்திக்க முடியாமல், சபதத்தை கை விட்டோர் பலர்.,

ஆனால், இந்த சவால்கள் நமக்கு தேவையான ஒன்றுதான், இவை நம் எதிரி அல்ல .. நண்பர்கள்தான் என புரிந்து கொள்ள வேண்டும்.
சபதத்தின் இயல்பு என்ன ? திடீரென ஓட ஆரம்பிக்கும், நீரோட்டம் அல்ல.. ஏற்கனவே , ஒரு திசையில் ஓடி வீணாகும் நீரோட்டடத்தை, நமக்கு தேவையான திசையில், பாதை அமைத்து திருப்பி விடுவது போன்றது.

பழைய பாதையை அடைத்து, புதிய பாதை அமைத்தாலும், நீர் அந்த அடைப்பை உடைத்து , பழைய பாதையிலேயே செல்ல முயலும். மண் சுவர்களை உடைக்க அது முயலும். நாம் பொறுமையாக மண் சுவர்களை வலுப் படுத்தி, நீரை, புதிய நீரோட்டத்திற்கு , பழக்க வேண்டும்..

அதன் பின், சுவர்களை உடைக்க பயன் பட்ட நீரின் விசை, இன்னிசையுடன் ஓடி நமக்கு பயன் தர ஆரம்பிக்கும். இதுதான் இயற்கை விதி. இதுதான் மனதிலும் செயல் படுகிறது.
தன இஷ்டம் போல செயல் பட்ட மனதை,. ஒரு நல்ல விஷயம் நோக்கி திருப்பி விடும் போது, அது திமிறத்தான் செய்யும். இது இயல்பான ஒன்று என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மண் சுவறை வலுபடுத்தி, தண்ணீரை கட்டுக்குள் கொண்டு வந்தது போல, மனதை வலுப்படுத்தி, தன லட்சியம் நோக்கி மனதை செயல்பட செய்ய வேண்டும்.
ஆற்றல் மிக்க எண்ணங்கள், தவறான திசையில் ஓடி வீணானது. இனி நல்ல திசையில் ஓடி, இன்னிசை தரும்.

வாழ்வில் முன்னேற விரும்பும் ஒருவன் , பிறரை முன்னேற்ற விரும்பும் ஒருவன், சுய சோதனைகள் செய்து கொள்ளட்டும். சபதம் எடுக்கட்டும். அந்த சபதத்திற்கு உண்மையாக இருக்கட்டும். அவனுக்கு கண்டிப்பாக வெற்றி கிடைத்தே தீரும். எவ்வளவு தவறு செய்து இருந்தாலும்,இலக்கு இல்லாமல் இருந்து இருந்தாலும், ஒருவன் உயர்ந்த நிலையை அடைய விரும்பிவிட்டால், அவனுக்கு பிரபஞ்ச விதி பாதுகாப்பாக இருந்து, அவனை வெற்றி அடைய வைத்து விடும் .. தளராத சபதம் முன், தடைகள் தூள் தூளாகும்..

Wednesday, May 19, 2010

விவசாயியிடம் ஒரு பாடம்


ஜேம்ஸ் ஆலனின் ஒரு நல்ல கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ( அடைப்பு குறியில் இருப்பது அவர் சொன்னதல்ல - ஹி ஹி )

********************************************************************

கிராம்க்களுக்கு சென்றால், விவசாயிகள், தங்கள் வயலில் பணியாற்றுவதை காணலாம். நன்றாக உழுவதையும் , விதை விதைப்பதையும் காணலாம். அவர்களிடம் போய், விதை விதைக்கிரிர்களே, இதில் என்ன விளையும் என எதிர்பார்க்கிறீர்கள் என கேட்டு தொலைக்காதீர்கள். அட முட்டாளே என அவர்கள் நினைப்பார்கள். என்ன விதைக்கிறோமோ , அதை அறுவடை செய்வோம். இது சாதாரண பொதுஅறிவு.

இயற்கையின் ஒவ்வொரு விஷயமும், மனிதனுக்கு ஒரு பாடத்தை வைத்து இருக்கிறது. மனித வாழ்வில் துல்லியமாக செயல்படும் அதே விதிகள்தான் நம்மை சுற்றி உள்ள இயற்கையிலும் செயல்படுகின்றன . மனதில் எதை விதைக்கிறோமோ அதை அறுவடை செய்கிறோம்.
நமது எண்ணங்கள்., சொற்கள் , செயல்கள் ( வலை பதிவுகள் !!!! ) எல்லாம் விதைகள்தான். அவை நல்லவையா , கெட்டவையா என்பதை பொருத்து அதன் பலன் இருக்கும்
வெறுப்பான சிந்தனைகளை கொண்டவன் வெறுக்கபடுவான். அன்பான எண்ணங்களை கொண்டவன் நேசிக்கபடுவான்

எண்ணங்கள்,. சொற்கள் , செயல்கள் தூய்மையானதாக இருந்தால், நம்மை சுற்றி தூய்மையானவர்கள் சேர்வார்கள்.
இவை மோசமானதாக இருந்தால், மோசமானவர்கள் நம்மை சூழ்வார்கள் . அயோக்கித்தனமான சிந்தனைகள் , செயல்கள் கொண்ட ஒருவன், நல்ல வாழ்க்கைக்கு இறைவனை வேண்டுவது என்பது, அவரை விதை விதைத்து விட்டு, சுரைக்காய் கிடைக்கும் என எதிர்பார்க்கும் விவசாயியின் எதிர்பார்ப்பைபோன்றது.

விதைப்பதை அறுப்பாய்.. வியக்க வேண்டாம். வயலை கொஞ்சம் பார்

அவரைவிதை அவரையாகும்.. சுரைவிதை சுரைஆகும்..

அவரவர் செயலே, அவரவர் வாழ்வும் ஆகும்


மகிழ்ச்சி வேண்டுமா. அனைவரையும் சந்தோஷபடுதுங்கள். சந்தோஷத்தை பரப்புங்கள்.

விதையை தூவி விட்ட விவசாயி, அதன் பின் இயற்கையஇடம் பொறுப்பை விட்டு விட வேண்டும் ( செடி வளர்கிறதா என தோண்டி பார்த்து கொண்டிருக்க கூடாது )

விதை காணமல் போவது போல தோன்றினாலும் கூட, பலன் கண்டிப்பாக கிடைக்கும்.

அதே போல் தான் வாழ்க்கை.. பகிர்ந்து கொள்ளுங்கள்.. அதிகம் பெறுவீர்கள்.. கொடுங்கள் .. உங்களுக்கு கிடைப்பது கிடைக்கும்.

அறிவாளி என தன்னை கருதும் ஒருவன், தன அறிவை புரிந்து கொள்ள உலகில் யாரும் இல்லை.. எனவே இதை யாருக்கும் தர மாட்டேன் என சொன்னால், அவனுக்கு உண்மையில் அறிவு இல்லை என பொருள்.. அப்படியே அவன் அறிவாளியாக இருந்தாலும் கூட, அதை அவன்இழப்பான்.

அமைதி வேண்டும், ஆனந்தம் வேண்டும் என கடவுளிடம் வேண்டினாலும் கிடைப்பதில்லை . ஏன்? இதை அவர்கள் விதிப்பதில்லை. அதுதான் பிரச்சினை
ஒருவன் கஷ்டப்பட்டால், இதை அவனே அவனிடம் கேட்டு கொள்ள வேண்டும்

என்ன மன விதைகளை நான் விதைத்து வந்தேன்?
என்ன விதைதுகொண்டு இருக்கிறேன்
மற்றவர்களுக்கு என்ன செய்தேன்
மற்றவர்களிடன் எப்படி நடந்து கொள்கிறேன்
தன்னை தானே கேட்டு தெயல்வு பெற்று, அசுத்த விதைகளை நீக்க வேண்டும்

விவசாயிடம் இருந்து இந்த எளிய பாடம் கற்றல் நல்லது

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா