Showing posts with label பதிவர் புத்தக கண்காட்சி. Show all posts
Showing posts with label பதிவர் புத்தக கண்காட்சி. Show all posts

Sunday, July 1, 2012

நெய்வேலி புத்தக கண்காட்சி - ஒரு விசிட்

 நெய்வேலியில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடந்து வந்தாலும் , இதுவரை நான் சென்றதில்லை. தேவையான புத்தகங்களை சென்னையிலேயே வாங்கி கொள்ளலாமே என்ற எண்ணம் , நெய்வேலி செல்ல தடையாக இருந்தது.

ஆனால் இந்த முறை செல்ல வேண்டும் என்று தோன்றியது.  அங்கு புத்தக கண்காட்சி எப்படி நடக்கிறது என பார்க்க விரும்பினேன். நானும் ஒரு நண்பரும் ( பதிவுலகத்தில் இல்லாத நண்பர் ) செல்ல முடிவு செய்தோம்.

காலை சீக்கிரமே எழுந்து , ஏழு மணிக்கெல்லாம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தோம்.  நெய்வேலி பேருந்தில் ஏற இருந்த என்னை , நண்பர் சற்று தடுத்து நிறுத்தி , பயணத்தில் சிறு மாறுதல் செய்தார்.

நெய்வேலிக்கு , பாண்டிச்சேரி வழியாக சென்றால்தான் நல்லதாம். அவர் சதித்திட்டம் புரிந்தது.  நேரம் அதிகமாகும்தான். சரி, ஈ சி ஆர் சாலையில் ஜாலியாக செல்லும் திருப்தி எனக்கு கிடைக்கும்,..பாண்டி செல்லும் திருப்தி அவருக்கு கிடைக்கும்.. ஓகே என்றேன்.

அதன் பின் பாண்டி சென்று அவர் கடமைகளை முடித்து விட்டு நெய்வேலி சென்றபோது இரண்டு மணி. மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து , நூலக வளாகத்துக்கு பேருந்து வசதி இருக்கிறது.





சென்னையில்  நகர  நெரிசலில் புத்தக கண்காட்சியை கண்ட நமக்கு அமைதியான சூழலில் ஒரு கண்காட்சியை பார்ப்பது  புது அனுபவமாக இருந்தது.  நான் கவனித்த வகையில் சும்மா வேடிக்கை பார்க்க வந்தவர்கள் குறைவே,, உண்மையிலேயே படிப்பில் ஆர்வம் இருப்பவர்களே பெரும்பாலும் வந்து இருந்தனர். இதனால் தேவையற்ற கூட்டம் இல்லை.

மற்ற ஊர்களை விட நெய்வேலியில் வாசிப்பவர்கள் சதவிகிதம் அதிகம். அந்த ஊரின் தன்மை அப்படி.

முக்கியமான பதிப்பகங்களின் ஸ்டால்கள் இருந்தன. ஆனாலும் சில முன்னணி பதிப்பகங்களை காண முடியவில்லை. சென்னையை ஒப்பிட்டால் , ஸ்டால்களின் எண்ணிக்கை மிக குறைவுதான், ஆனாலும் புத்தகங்கள் அதே அளவுதான் இருக்கும். காரணம் சென்னையில் ஸ்டால்கள் பல இருந்தாலும் , ஒரே  வகை புத்தகங்கள்தான் பல ஸ்டால்களை பி( பீ )டித்து இருக்கும் . ஆன்மீகம் , சமையல் , அழகு குறிப்ப்புகள் , சுஜாதா , ரமணி சந்திரன் போன்றவை.

 நெய்வேலி கண்காட்சியில் இந்த பிரச்சினை இல்லை. எனவே தேவையானவ்ற்றை தேடி எடுக்க வசதியாக இருந்தது.

 தஞ்சை பல்கலை , அண்ணாமலை பல்கலை போன்றவற்றின் ஸ்டால்கள் என்னை கவர்ந்தன, பண்டைய தமிழ் நூல்களில் இரும்பின் பயன்பாடுகள் பற்றிய குறிப்புகள் இருப்பதை பற்றிய ஒரு புத்தகம் ஆச்சரியப்படுத்தியது. அதே போல பிற்கால சோழர் வரலாறு புத்தகமும் கவனிக்க வைத்தது.


 சில ஸ்டால்களில் ஆங்கில நாவல்களை மிக மலிவான விலைக்கு கொடுத்து கொண்டு இருந்தார்கள். பலர் ஆர்வமாக வாங்கி சென்றதை கவனிக்க முடிந்தது.

அதே போல ஆன்மிக ஸ்டால்களிலும் பயங்கர கூட்டம்.  இஸ்லாமிய புக் ஸ்டால்களில் , மாற்று மதத்தவர்களை அதிகம் காண முடிந்தது சந்தோஷமாக இருந்தது.

சாரு புத்தகம் ஆண்டுக்கு எட்டுதான் விற்கிறது என கணக்கு காட்டி ஏமாற்றிய பதிப்பகம் , சாருதான் தன் டிரம்ப் கார்ட் என உணர்ந்து அவர் புத்தகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து டிஸ்ப்ளே செய்து இருந்தது..

கண்காட்சிகளின் ஹீரோவான லிச்சி ஜூசும் இடம் பெற்று இருந்தது, நான் அந்த பகுதியில்தான் அதிகம் சுற்றினேன்.


ஓ ஹென்றி சிறுகதைகள்  வாங்கி பேருந்தில் சென்னை வருவதற்குள்ளாகவே படித்து விட்டேன். வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் விரைவில் படிக்க வேண்டும்.

கார்ப்பரேட் சாமியார்கள் ஸ்டால்களில் வழக்கமான கூட்டம் இல்லை. சில கார்ப்பரேட் சாமியார்களின் ஸ்டால்களையே காண முடியவில்லை .
பணக்க்காரன் ஆவது எப்படி போன்ற புத்தகங்களுக்கும் முன்பு இருந்த ஆதரவு இல்லை. அதே நேரத்தில் இலக்கிய புத்தகங்களை கேட்டு வாங்குகிறார்கள்..
 நல்ல மாற்றம்தான்.

எட்டாம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது. நேரம் கிடைத்தால் போய் வாருங்கள். நல்ல அனுபவமாக இருக்கும்.



Tuesday, January 17, 2012

கட்டை விரல் கிண்டல்-மனுஷ் மன நோயாளியா ? வசுமித்ர வுடன் ஓர் உரையாடல்

அந்த காலத்தில் கஷ்டப்பட்டு, இலக்கியம் வளர்த்தோம். இன்றோ ஜெயமோகன் வருகைக்கு பின், இலக்கியம் கமர்ஷியல் ஆகி விட்டது என சாரு வேதனையுடன் ஒருமுறை சொன்னார். அது உண்மைதான்.  இலக்கியத்தின் மீதான passion இன்று இல்லை.

புத்தககண்காட்சியில் சென்ற முறையைவிட கூட்டம் குறைவானதற்கு காரணம் இதுதான். 
கமர்ஷியல் எழுத்து கூடாது என்பது என் கருத்து அன்று, நான் எல்லாவற்றையும் படிப்பவன்., ஆனால் எல்லா ஸ்டால்களிலுமே கமர்ஷியல் ரைட்டிங் மட்டுமே இருந்தால் என்ன செய்வது?

எந்த ஸ்டாலில் பார்த்தாலும் அதே சுஜாதா , அதே பொன்னியின் சொல்வன்., சுய முன்னேற்றம் , சமையல் குறிப்பு... ம்ம்.. என்ன செய்வது.

உயிர்மை போன்ற “இலக்கிய “ ( ? ! ) இதழ்கள் இப்படி ஆகிவிட்டாலும், சித்தாந்த அடிப்படையில் செயல்படும் பதிப்பகங்கள் சற்று ஆறுதல் அளித்தன. எதிர்பாராத நல்ல புதையல்கள் அங்கு ஏராளம் கிடைத்தன. 

ஸ்டால்களில் இருந்த கூட்டத்தைவிட , கேண்டீனிலும் வெளியிலும்தான் கூட்டம் அதிகமாக இருந்தது. வழக்கம்போல கழிப்பறை வசதி சரியில்லை. மக்கள் ஆங்காங்கு நீர்பாசனம் செய்து கொண்டு இருந்தனர். 

இது போன்ற பிரச்சினைகளை தவிர்க்க விரும்பியே சாரு உள்ளிட்ட பலர் புத்தக விழாவிற்கு  வரவில்லை. ( இரண்டு நாட்கள் மட்டும் சாரு வந்தார் ) 

சாரு கலந்து கொண்ட வாசகர் சந்திப்பு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது . நின்று கொண்டே பலர் அவர் பேச்சை கேட்டனர். தினம் தோறும் அவர் வந்து இருந்தால் , நன்றாக இருந்து இருக்கும்.

இந்த நிலையில் , வழக்கம்போல துரோகபுத்திரன் தன் வேலையை ஆரம்பித்தார். தற்செயலாக நடந்த சண்டையை வக்கிரமாக ரிப்போர்ட் செய்தாரா அல்லது அவ்ரே வன்முறையை தூண்டினாரா என்பது போகபோகத்தெரியும்.

ஆனால் மனுஷ் தரப்பின் மிரட்டலுக்கோ, ஆசை வார்த்தைகளுக்கோ மயங்காத வசுமித்ர போற்றுதலுக்கு உரியவர் என்ற முறையில் அவருக்கு மலர்ச்செண்டு அளித்து என் மரியாதையை தெரிவித்து கொண்டேன்.

ஸ்டாலில் பல வேலைகள் , மற்ற வேலைகள் என இருந்தாலும் எனக்கு நேரம் ஒதுக்கி பேசினார். அதைப்பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன். இப்போது சுருக்கமாக..

*********************************************************

தெரிந்தவர்களை திடீரென மறந்து விட்டு, யாரென்ரே தெரியவில்லை என மனுஷ் சொல்கிறாரே? அவருக்கு மனரீதியாக ஏதாவது கோளாறா?

அப்படியெல்லாம் சொல்ல முடியாது. அவருக்கு இலக்கியத்தை விட வியாபாரம் முக்கியாமாகி விட்டது , அதனால்தான் அபப்டி நடந்து கொள்கிரார். தன் நெஞ்சு அறிவது பொய்யற்க என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

மனுஷ் வரலாற்றை பார்த்தால் அவர் யாருக்குமே உண்மையாக இருப்பதில்லையே... 

அவர் தனக்கே உண்மையாக இருப்பதில்லை

ஒரு காலத்தில் ஓரிரண்டு நல்ல கவிதைகள் எழுதிய அவர் ஏன் வீழ்ச்சி அடைந்தார்?

பிரான்ட் நேம் ஒன்று கிடைத்ததும் கவிதைகள் எழுவதை நிறுத்தி விட்டு, பின்னட்டை குறிப்புகளையே கவிதைகள் என்ற பெயரில் பிரசுரிக்க ஆரம்பித்து விட்டார். மற்றவர்களையும் அப்படியே எழுத சொல்லி டார்ச்சர் செய்கிறார். 


நீ
எனக்கு 
எவ்வளவு முக்கியம் தெரியுமா
பாம்புக்கு


எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியம்.

என பத்தாங்கிளாஸ் பையன் எழுதும் கவிதையை , தேவதச்சன் பெயரில் பிரசுரிக்கிறார். இப்படி சொல்வதால் பத்தாங்கிளாஸ் பையன்கள் கோபிக்க கூடாது. வாசிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ள நிலையில், அவர்க்ள் கவிதை இதை விட நன்றாகவே இருக்கும்.

அறம் தரிசனம் எல்லையற்ற கவித்துவம் என்றெல்லாம் உதார் விடுகிறார்.

ஓர் உதாரணம்.

ஒரு பின்னட்டை குறிப்பு..


கண்ணாடியில் நகரும் பிம்பங்களைப் போல இருந்தும் இல்லாததுமாய் நகர்ந்து கொண்டிருக்கும் உறவுகளின் நிழல்களைத் தொடர்ந்து செல்கின்றன இவரின் கவிதைகள். இச்சைகளுக்கும் நிராசைகளுக்கும் இடையே எண்ணற்ற கேள்விகளை எழுப்பியபடியே தனக்கென ஒரு பிரத்யோக வெளியைஅவை உருவாக்கிக் கொள்கின்றன.



இதை ஒட்டி வெட்டினால் , கவிதை தயார்... 

கண்ணாடியில் நகரும் பிம்பங்கள்
இருந்தும் இல்லாததுமாய்

உறவுகள் நிழல்களை பின் தொடர்கின்றன

இச்சை கனவு
நிராசைகளுக்கிடையே
எண்ணற்ற கேள்விகள்....

கீழே ஏதாவது ஒரு பிரபல கவிஞர் பெயரை போட்டு விட்டால் , அதுதான் இலக்கியம்.


அவரது இந்த போலித்தனத்தைதான் கண்டிக்கிறேன் . மற்றபடி அவர் நண்பர்தான். நாளை நீங்கள் ஒரு புத்தகம் எழுதினால் , பிடிக்காவிட்டால் திட்டத்தான் செய்வேன். நன்றாக இருந்தால்தானே பாராட்ட முடியும்

கட்டை விரலை கடித்து துப்பியதாக மனுஷ் அவதூறு செய்கிறாரே..

என்ன நடந்தது என அவர் நேரடியாகவே கேட்டு அறிந்து இருக்க முடியும். ஆனால் கிசுகிசு பாணியில் அவதூறு செய்கிறார். சிலர் அவருக்கு ஆதரவு அளிக்க்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்ன சொல்லிதரப்போகிறார்கள். அவர்கள் குழந்தைகளை நினைத்தால் கவலையாக இருக்கிறது 



அடுத்து என்ன சதி செய்யலாம் - ஆழ்ந்த சிந்தனை 

 நீர் பாசனம் 

இப்படித்தான் பொது இடத்தில் நடந்துக்கணும்- இளைய சமுதாயத்துக்கு பயிற்சி




படிக்கவேண்டிய புத்தகங்களில் ஒன்று
ஆள் இல்லாத கடையில் டீயா ?
ஸ்டாலை விட வெளியில்தான் கூட்டம் அதிகம் 

எல்லா கூட்டமும் கேண்டீனில்


கண்ணாடியில் நகரும் பிம்பங்கள்
இருந்தும் இல்லாததுமாய்

உறவுகள் நிழல்களை பின் தொடர்கின்றன

இச்சை கனவு
நிராசைகளுக்கிடையே
எண்ணற்ற கேள்விகள்.... யே எண்ணற்ற கேள்விகளை எழுப்பியபடியே தனக்கென ஒரு பிரத்யோக வெளியைஅவை உருவாக்கிக் கொள்கின்றன.


இந்தப் பின்னட்டையை வெட்டி ஒட்டினால் நாம் கண்டடைகிற வரிகளை கூசாமல் கவிதை அதுவும் தத்துவச் சரடோடும் கவிதைகள் எனச் சொல்லலாம்.


கண்ணாடியில் நகரும் பிம்பங்கள்
இருந்தும் இல்லாததுமாய்

உறவுகள் நிழல்களை பின் தொடர்கின்றன

இச்சை கனவு
நிராசைகளுக்கிடையே
எண்ணற்ற கேள்விகள்....
***********************************************


Friday, January 13, 2012

கட்டை விரலை கடித்து துப்பினாரா?- புத்தக விழா அடிதடியும் , மனுஷின் சின்னத்தனமும்

கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை கனிமொழியை உலக மகா கவி என அவர் பின் வாலாட்டிய படி சென்று கொண்டு இருந்தார் பெருங்கவிஞர் மனுஷ்.  அரசி கவிதை எழுதி ஜெயலலிதாவை நக்கல் அடித்தார்.

இன்று காலம் மாறிய நிலையில், திமுகவுக்கு எதிரான நிலையை எடுத்துள்ளார். அவ்வப்போது சமரசம் செய்து கொண்டு வயிறு வளர்க்கும் இவர் போன்றவர்களை , நம் நடுத்தர வர்க்கம் புத்திசாலி என மெச்சுகிறது.

 ஆனால் தமது நம்பிக்கையில் சமரசம் செய்துகொள்ளாதவர்களை , இளிச்சவாயர்கள் என்றுதான் இந்த நடுத்தர வர்க்கம் மதிப்பிடுகிறது..


புத்தக கணகாட்சியில், கவிஞர்கள் சங்கர் ராம சுப்ரமணியனுக்கும் , வசுமித்திரவுக்கும் இடையே தேவ தச்சன் எழுத்து குறித்து கருத்து மோதல் ஏற்பட்டது.

ஷேக்ஸ்பியர் பெரிய கவிஞர் என நாம் நினைக்கிறோம். யாராவது அவர் நல்ல கவிஞர் இல்லை என்றால் , சரி சொல்லி விட்டு போ என விட்டு விடுவோம். ஆனால் தமது கவிதை மேல் உயிராக இருப்பவர்கள் இப்படி மேம்போக்காக நடந்து கொள்ள மாட்டார்கள்.

அந்த வகையில், தேவ தச்சன் மீதான விவாதம் சற்று எல்லை மீறி கைகலப்பில் முடிந்தது..


இதை என்னவோ குழாயடி சண்டை போல மனுஷ் நக்கலடித்து இருக்கிறார்.

கவிதைக்காக, தமிழுக்காக சண்டையிட்ட அவர்களை போற்ற வேண்டுமே தவிர தூற்றுவதில் அர்த்தம் இல்லை.

பொது இடத்தில் சண்டை போடுவது தவ்று என்றாலும், தமிழுக்காக சண்டையிட்ட அவர்களை போற்றுவது நம் கடமை..

கட்டை விரலை கடித்து துப்பியதாக சின்னத்தனமாக மனுஷ் பிரச்சாரம் செய்கிறார் .. அது தவறானது ,, பொய்யானது ,, அற்பத்தனமானது...

சில பதிவர்கள் விபரம் புரியாமல் இந்த விவகாரத்தை நக்கலடிப்பது வேறு.. ஆனால் மனுஷ் நக்கலடிப்பது விஷமத்தனமானது.. முன் விரோதத்தை அடிப்படையாக கொண்டது

"இன்று புத்தக கண்காட்சியில் உயிர் எழுத்து ஸ்டாலில் வைத்து கவிஞர் சங்கர் ராமசுப்ரமணியனுக்கும், வசுமித்திரா என்பவருக்கும் தேவதச்சன் கவிதைகளை முன் வைத்து பயங்கர அடிதடியாம். சங்கருக்கு ஃபோன் செய்து கேட்டேன்."


என்று எழுதி இருக்கிறார்..
அதாவது வசுமித்ரா என்பவர் யாரென்றே தனக்கு தெரியாதது போல நாடகம் ஆடுகிறார்..


இந்த வசுமித்ர அந்த காலத்தில் உயிர்மையில் ஏராளமாக எழுதி இருக்கிறார். ஒரு கட்டத்தில் மனுஷின் கேவலமான புத்தி தெரிய வந்ததும், மனுஷின் முகத்தில் காறி உமிழ்ந்து விட்டு , உயிர்மையை விட்டு வெளியேறினார் என்பது வரலாறு.


இப்போது சங்கருக்கு போன் செயததாக சொல்கிறாரே.. இதே சங்கரையும் தனக்கு யாரென்றே தெரியாது என்றவர்தான் இந்த மனுஷ்..


ஆக இவர் யாருக்கும் உண்மையாக இருந்தது இல்லை...


காலச்சுவட்டு, கனி மொழி, , சாரு என இவர் துரோகப்ப்ட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது..


ஒரு சம்பவத்தை , பொய் கலந்து , ஒரு நான்காம் தர செய்தி தாள் போன்று ரிப்போர்ட் செய்யும் அவசியம் அவருக்கு ஏன் வந்தது?


கட்டை விரலை கடித்தாரே, வேறு எதையும் கடிக்கவில்லையா.. என்றெல்லாம் நரகல் நடையில் எழுத வேண்டிய அளவுக்கு மனதில் ஏன் அவ்வளவு வக்கிரம்? 


இதை எல்லாம் பார்த்தால், படிப்பு என்பதன் அர்த்தம் என்ன , புத்தகங்களின் பயன் என்ன என்ற ஆயாசமே மிஞ்சுகிறது.  




Tuesday, January 10, 2012

புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய டாப் டென் புத்தகங்கள்

புத்தக் கண்காட்சி வந்தாலும் வந்தது.. ஆளாளுக்கு நான் அதை வாங்கினேன் , இதை வாங்கினேன் என லிஸ்ட் கொடுத்து மிரட்டினார்கள்.  நான் புத்தக கண்காட்சிக்கு செல்வதே வேடிக்கை பார்க்கவும் , நண்பர்களுடன் சுற்றுவதற்கும், எழுத்தாளர்களுடன் பேசுவ்தற்கும்தான்.
ஆனால் அல்ட்டிமேட் ரைட்டர் ஒரு நாள் மட்டுமே வ்ரவிருக்கிறார் என்பது என் ஆர்வத்தை சற்று குறைத்தது.
ஆனாலும் விதி சும்மா விடவில்லை..ஆர்வக்கோளாறில் கிளம்பினேன்.

பார்க்கிங் பத்து ரூபாயாம்.. சரி, சினிமா தியேட்டர் , ஷாப்பிங் காம்ப்லெக்ஸ் என எல்லா இடத்திலும்தானே வாங்குகிறார்கள் என நினைத்தால், சிலர் இதை எதிர்க்கிறார்கள்..

பத்து ரூபாய் வாங்குவதிலும் நியாயம் இருக்கிறது, எதிர்ப்பதிலும் நியாயம் இருக்கிறது என நினைத்துக் கொண்டேன்.

உள்ளே இருந்த உணவகத்தில் நுழைந்தால் விலையைப்பார்த்தால் பயமாக இருந்தது.

லீவு நாட்களிலோ, மாலை நேரங்களிலோ செல்வதை விட, லீவு போட்டுவிட்டு, துவக்க நேரத்திலேயே சென்றதால் , நன்றாக சுற்றிப்பார்க்க முடிந்தது. கமர்ஷியல் ஸ்டால்களில் நல்ல புத்தகங்கள் இருந்தாலும், கொஞ்சம் ஸ்டடி செய்தால், சரியாக தேர்வு செய்ய முடியும், சீதைப்பதிப்பகத்தில், அதிரடி தள்ளுபடியில் சில நல்ல புத்தகங்கள் கிடைக்கின்றன.

சில இஸ்லாமிய ஸ்டால்களில் அருமையான புத்தகங்கள் உள்ளன, ஆனால் அவர்கள் பிரமோஷன் சரியில்லை..

தினந்தோறும் நடக்கும் , மாலை நேர சொற்பொழிவு அருமை. இன்று அமீர் இயல்பாக பேசினார்.

சாந்தியும், சமாதானமும் நிலவட்டும் என ஆரம்பித்து அவ்வப்போது தான் ஓர் இஸ்லாமியன் என பெருமையாக சொன்னது சிறப்பாக இருந்தது.. மத அடையாளங்களை காட்டிக்கொளவது லாபகரமானது அன்று , புரட்சியாளன் இமேஞ் போய் விடும் என நினைக்கும் டிரண்ட் நிலவும் உலகில் , அவர் இப்படி பேசியது பிடித்து இருந்தது.

தன்க்கு தூண்டுதலாக இருந்த எழுத்து, குர் ஆன் தான் என பெருமிதத்துடன் சொன்னார்.
அதே போல டாக்டர் ராமானுஜம் பேச்சும் சிறப்பு.
கணித மேதை ராமானுஜம் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது.
அவரைப்பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன்..

சரி.. புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள் பட்டியல் பின் வருமாறு..

1 . முயல் வளர்த்து முதலாளி ஆவது எப்படி?
2.ஈமு வளர்த்து கோடீஸ்வரன் ஆகுங்கள்
3 முதலாளித்தவம் , சுரண்டல் மற்றும் ஏகாதிபத்தியம்
4குண்டாக இருக்கும் நீங்கள் ஒல்லியாக வேண்டுமா?
5 ஒல்லியான நீங்கள் குண்டாவது எப்படி?
6வளமான வாழ்வுக்கு வாஸ்து
7 குதூகல வாழ்வுக்கு வழி காட்டும் குபேர பூஜை
8 கடவுளை வணங்குவதில் இருந்து, தலைவனை வணங்குவது வரை- பகுத்தறிவு விளக்க கையேடு
9 முப்பது வகை சூப் செய்யும் வகைகள்
10 கணேஷ் வசந்த் துப்பறியும் சுஜாதா நாவல்கள் தொகுப்பு




Wednesday, January 12, 2011

கேபிள் சங்கருக்கு கிடைத்த அதிர்ச்சி- புத்தக கண்காட்சியில் பரபரப்பு

புத்தக கண்காட்சி என்றால், அனைவரும் புத்தகம் படித்து அறிவை வளர்ப்பதற்காக அங்கே செல்கிறார்கள் என நினைக்கிறோம்..

ஆனால் அங்கு நடக்கும் சுவையான சம்பவங்களை பார்த்தால் , வேறு பல விஷ்யங்களும் நடப்பது புரிந்தது,,

 அனைவரும் அங்கு வர முடியாது என்பதால், வராதவர்களும் பயன்பெறும் வகையில், சில சம்பவங்களை தொகுத்து தருவதில் பிச்சைக்காரன் டாட் பிளாக்ஸ்பாட் டாட் காம் பெருமை படுகிறது..

Saturday, January 8, 2011

புத்தக கண்காட்சியில் கேபிள் சங்கர் அராஜகம்- படத்துடன் நேரடி ரிப்போர்ட்

புத்தக கண்காட்சி என்றால் புத்தகங்களை பார்ப்பதை விட பதிவர்களை பார்ப்பது தனி சுவாரஸ்யம்..

எழுத்தின் மூலம் பதிவர்களை பற்றி ஒரு பிம்பம் மனதில் உருவாகி இருக்கும்.. நேரில் பார்க்கும்போது  கிடைக்கும் அனுபவம் வேறு.

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா