Tuesday, January 17, 2012

கட்டை விரல் கிண்டல்-மனுஷ் மன நோயாளியா ? வசுமித்ர வுடன் ஓர் உரையாடல்

அந்த காலத்தில் கஷ்டப்பட்டு, இலக்கியம் வளர்த்தோம். இன்றோ ஜெயமோகன் வருகைக்கு பின், இலக்கியம் கமர்ஷியல் ஆகி விட்டது என சாரு வேதனையுடன் ஒருமுறை சொன்னார். அது உண்மைதான்.  இலக்கியத்தின் மீதான passion இன்று இல்லை.

புத்தககண்காட்சியில் சென்ற முறையைவிட கூட்டம் குறைவானதற்கு காரணம் இதுதான். 
கமர்ஷியல் எழுத்து கூடாது என்பது என் கருத்து அன்று, நான் எல்லாவற்றையும் படிப்பவன்., ஆனால் எல்லா ஸ்டால்களிலுமே கமர்ஷியல் ரைட்டிங் மட்டுமே இருந்தால் என்ன செய்வது?

எந்த ஸ்டாலில் பார்த்தாலும் அதே சுஜாதா , அதே பொன்னியின் சொல்வன்., சுய முன்னேற்றம் , சமையல் குறிப்பு... ம்ம்.. என்ன செய்வது.

உயிர்மை போன்ற “இலக்கிய “ ( ? ! ) இதழ்கள் இப்படி ஆகிவிட்டாலும், சித்தாந்த அடிப்படையில் செயல்படும் பதிப்பகங்கள் சற்று ஆறுதல் அளித்தன. எதிர்பாராத நல்ல புதையல்கள் அங்கு ஏராளம் கிடைத்தன. 

ஸ்டால்களில் இருந்த கூட்டத்தைவிட , கேண்டீனிலும் வெளியிலும்தான் கூட்டம் அதிகமாக இருந்தது. வழக்கம்போல கழிப்பறை வசதி சரியில்லை. மக்கள் ஆங்காங்கு நீர்பாசனம் செய்து கொண்டு இருந்தனர். 

இது போன்ற பிரச்சினைகளை தவிர்க்க விரும்பியே சாரு உள்ளிட்ட பலர் புத்தக விழாவிற்கு  வரவில்லை. ( இரண்டு நாட்கள் மட்டும் சாரு வந்தார் ) 

சாரு கலந்து கொண்ட வாசகர் சந்திப்பு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது . நின்று கொண்டே பலர் அவர் பேச்சை கேட்டனர். தினம் தோறும் அவர் வந்து இருந்தால் , நன்றாக இருந்து இருக்கும்.

இந்த நிலையில் , வழக்கம்போல துரோகபுத்திரன் தன் வேலையை ஆரம்பித்தார். தற்செயலாக நடந்த சண்டையை வக்கிரமாக ரிப்போர்ட் செய்தாரா அல்லது அவ்ரே வன்முறையை தூண்டினாரா என்பது போகபோகத்தெரியும்.

ஆனால் மனுஷ் தரப்பின் மிரட்டலுக்கோ, ஆசை வார்த்தைகளுக்கோ மயங்காத வசுமித்ர போற்றுதலுக்கு உரியவர் என்ற முறையில் அவருக்கு மலர்ச்செண்டு அளித்து என் மரியாதையை தெரிவித்து கொண்டேன்.

ஸ்டாலில் பல வேலைகள் , மற்ற வேலைகள் என இருந்தாலும் எனக்கு நேரம் ஒதுக்கி பேசினார். அதைப்பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன். இப்போது சுருக்கமாக..

*********************************************************

தெரிந்தவர்களை திடீரென மறந்து விட்டு, யாரென்ரே தெரியவில்லை என மனுஷ் சொல்கிறாரே? அவருக்கு மனரீதியாக ஏதாவது கோளாறா?

அப்படியெல்லாம் சொல்ல முடியாது. அவருக்கு இலக்கியத்தை விட வியாபாரம் முக்கியாமாகி விட்டது , அதனால்தான் அபப்டி நடந்து கொள்கிரார். தன் நெஞ்சு அறிவது பொய்யற்க என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

மனுஷ் வரலாற்றை பார்த்தால் அவர் யாருக்குமே உண்மையாக இருப்பதில்லையே... 

அவர் தனக்கே உண்மையாக இருப்பதில்லை

ஒரு காலத்தில் ஓரிரண்டு நல்ல கவிதைகள் எழுதிய அவர் ஏன் வீழ்ச்சி அடைந்தார்?

பிரான்ட் நேம் ஒன்று கிடைத்ததும் கவிதைகள் எழுவதை நிறுத்தி விட்டு, பின்னட்டை குறிப்புகளையே கவிதைகள் என்ற பெயரில் பிரசுரிக்க ஆரம்பித்து விட்டார். மற்றவர்களையும் அப்படியே எழுத சொல்லி டார்ச்சர் செய்கிறார். 


நீ
எனக்கு 
எவ்வளவு முக்கியம் தெரியுமா
பாம்புக்கு


எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியம்.

என பத்தாங்கிளாஸ் பையன் எழுதும் கவிதையை , தேவதச்சன் பெயரில் பிரசுரிக்கிறார். இப்படி சொல்வதால் பத்தாங்கிளாஸ் பையன்கள் கோபிக்க கூடாது. வாசிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ள நிலையில், அவர்க்ள் கவிதை இதை விட நன்றாகவே இருக்கும்.

அறம் தரிசனம் எல்லையற்ற கவித்துவம் என்றெல்லாம் உதார் விடுகிறார்.

ஓர் உதாரணம்.

ஒரு பின்னட்டை குறிப்பு..


கண்ணாடியில் நகரும் பிம்பங்களைப் போல இருந்தும் இல்லாததுமாய் நகர்ந்து கொண்டிருக்கும் உறவுகளின் நிழல்களைத் தொடர்ந்து செல்கின்றன இவரின் கவிதைகள். இச்சைகளுக்கும் நிராசைகளுக்கும் இடையே எண்ணற்ற கேள்விகளை எழுப்பியபடியே தனக்கென ஒரு பிரத்யோக வெளியைஅவை உருவாக்கிக் கொள்கின்றன.இதை ஒட்டி வெட்டினால் , கவிதை தயார்... 

கண்ணாடியில் நகரும் பிம்பங்கள்
இருந்தும் இல்லாததுமாய்

உறவுகள் நிழல்களை பின் தொடர்கின்றன

இச்சை கனவு
நிராசைகளுக்கிடையே
எண்ணற்ற கேள்விகள்....

கீழே ஏதாவது ஒரு பிரபல கவிஞர் பெயரை போட்டு விட்டால் , அதுதான் இலக்கியம்.


அவரது இந்த போலித்தனத்தைதான் கண்டிக்கிறேன் . மற்றபடி அவர் நண்பர்தான். நாளை நீங்கள் ஒரு புத்தகம் எழுதினால் , பிடிக்காவிட்டால் திட்டத்தான் செய்வேன். நன்றாக இருந்தால்தானே பாராட்ட முடியும்

கட்டை விரலை கடித்து துப்பியதாக மனுஷ் அவதூறு செய்கிறாரே..

என்ன நடந்தது என அவர் நேரடியாகவே கேட்டு அறிந்து இருக்க முடியும். ஆனால் கிசுகிசு பாணியில் அவதூறு செய்கிறார். சிலர் அவருக்கு ஆதரவு அளிக்க்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்ன சொல்லிதரப்போகிறார்கள். அவர்கள் குழந்தைகளை நினைத்தால் கவலையாக இருக்கிறது அடுத்து என்ன சதி செய்யலாம் - ஆழ்ந்த சிந்தனை 

 நீர் பாசனம் 

இப்படித்தான் பொது இடத்தில் நடந்துக்கணும்- இளைய சமுதாயத்துக்கு பயிற்சி
படிக்கவேண்டிய புத்தகங்களில் ஒன்று
ஆள் இல்லாத கடையில் டீயா ?
ஸ்டாலை விட வெளியில்தான் கூட்டம் அதிகம் 

எல்லா கூட்டமும் கேண்டீனில்


கண்ணாடியில் நகரும் பிம்பங்கள்
இருந்தும் இல்லாததுமாய்

உறவுகள் நிழல்களை பின் தொடர்கின்றன

இச்சை கனவு
நிராசைகளுக்கிடையே
எண்ணற்ற கேள்விகள்.... யே எண்ணற்ற கேள்விகளை எழுப்பியபடியே தனக்கென ஒரு பிரத்யோக வெளியைஅவை உருவாக்கிக் கொள்கின்றன.


இந்தப் பின்னட்டையை வெட்டி ஒட்டினால் நாம் கண்டடைகிற வரிகளை கூசாமல் கவிதை அதுவும் தத்துவச் சரடோடும் கவிதைகள் எனச் சொல்லலாம்.


கண்ணாடியில் நகரும் பிம்பங்கள்
இருந்தும் இல்லாததுமாய்

உறவுகள் நிழல்களை பின் தொடர்கின்றன

இச்சை கனவு
நிராசைகளுக்கிடையே
எண்ணற்ற கேள்விகள்....
***********************************************


No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா