Showing posts with label றியாஸ் குரானா. Show all posts
Showing posts with label றியாஸ் குரானா. Show all posts

Monday, March 3, 2014

தமிழ் கவிதைகளின் எதிர்காலம்? - கவிஞர் றியாஸ் குரானாவுடன் ஓர் உரையாடல்

  நவீன கவிதை காலாவதியாகி விட்டது என்ற கவிஞர் றியாஸ் குரானாவின்
கட்டுரை சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருடன் ஓர் உரையாடல்.. உரையாடலுக்கு முன் அவர் கட்டுரையில் இருந்து ஒரு சிறிய பகுதி..
********************
பின்நவீன கவிதை சாத்தியங்களை மாத்மாத்திரமே கருத்திற்கொள்கிறது. அதனூடாக எதையும் காப்பாற்றிவிட்டு ஒரு செயலை முடிக்கிறது. அதாவது, தீப்பிடித்திருக்கும் மாடியில் சிக்கிய குழந்தையை மிக இலகுவாக காப்பாற்றிவிட பின்நவீனக் கவிதையால் முடிகிறது. இது எப்படி என்றால் குறித்த சம்பவத்தை பிரதிபலிக்காமல், அதற்கு நிகரான ஒரு சம்பவத்தை உருவாக்கிவிடுகிறது. இந்த உருவாக்கத்தில், எதார்த்தம் என நம்புவதற்கும் கற்பனைக்குமிடையிலான எல்லைக்கோட்டை அழித்துவிடுகிறது. அப்படி அழிக்கப்படும்போது ஒரே பிரதியில் எதார்த்தமும் கற்பனையும் சமமான அர்த்தத்தில் வசிப்பதாக மாற்றியமைக்கிறது. இப்படி மாற்றியமைப்பதினூடாக, அங்கே காப்பாற்றமுடியாது என்ற ஏக்கம் சிறிதும் இருப்பதில்லை. எதை எந்த வழிகளில் நிகழ்த்திக் காட்ட முடியுமோ அந்த வழிகளையெல்லாம் கையாள்கிறது. நெடிய வரலாற்றில் சரிசெய்ய முடியாமல் போராடிய வாழ்வை, வேறொரு தளத்தில் பிரதியில் நிகழ்த்திக்காட்டுகிறது. பின்நவீனத்துவத்தின் கவித்துவம் என்பது நிகழ்த்திக்காட்டுவதுதான். நவீனத் துவத்தின் கவித்துவம் பிரதிபலித்தல் என்பதை நிங்கள் அறிந்திருப்பீர்கள்.
நவீன கவிதையை காலாவதியாகச் செய்த கவிதையை 2004ம் ஆண்டு ரமேஸ் : பிரேம் இருவரும் இணைந்திருக்கும்போது அவர்களிடமிருந்தே வெளிப்பட்டது. அதுபோல சில கவிதைகளை அப்போது, அவர்கள் முயற்சித்திரந்தாலும் அந்த ஒரேயொரு கவிதையே நவீனத்திலிருந்து பின்நவீனத்திற்கு கவிதையை நகர்த்தும் முதலாவது கவிதையாக இருந்தது. எனினும். அதன் பிறகு அவர்களால்கூட நிகழ்திக்காட்டும் கவிதைகளைத் தொடரமுடியாமல் போய்விட்டது என்பது துரதிஸ்டவசமானதுதான்.
அந்தக் கவிதை இதுதான். தமிழின் முதலாவது பின்நவீன கவிதையாக (நிகழ்த்து கவிதை) நான் அடையாளம் கண்டது.
புத்துயிர்ப்பு
நெடிதுயர்ந்த கட்டிடம் எரிந்து கொண்டிருந்தது.
உள்ளே இருந்து அபயக்குரல்கள்
தலைக்குமேல் பறந்த காகம் ஒன்று
தீச்சுடரில் சிக்கிக்
கட்டிடத்தின் திறந்த வாய்க்குள் விழுகிறது.

பத்தாவது மாடியின் கண்ணாடிச்
சன்னலை உடைத்து
எரிந்து கொண்டிருக்கும்தாய்
குழந்தையை வெளியே வீசுகிறாள்
பறாச் சிறகுகளைச் சூடியஅ து
படபடக்கிறது அந்தரத்தில்.

சிறகுகளை குழந்தைக்கு முளைக்கச் செய்து காப்பாற்றிவிடுகிறது கவிதை. காப்பாற்ற முடியாத ஏக்கமாக மாறாமல், காப்பாற்றுதல் என்பதை நிகழ்த்திக் காட்டுகிறது.ஆயினும், 2010ம் ஆண்டிற்குப் பிறகே இந்த பின்நவீன நிகழ்த்து கவிதைகள் அதிகரிக்கத் தொடங்கின
****************************************

இனி உரையாடல்....

********************************

 ஒரு பார்வையில் பார்த்தால் , கவிதை எளிமை படுத்துவது தவறு என நீங்கள் வாதிடுவதாக தோன்றுகிறது


நவீன கவிதையை எப்படி கடக்கிறோம் என்பதை சொல்கிறேன். அதுபோல, கவிதை எப்படி நகர்ந்து வந்திருக்கிறது என்பதையும் சொல்கிறேன். எளிமை என்பது வாசிப்பு பயிர்ச்சியை பொறுத்து உருவாகுவது. ஒரு தமிழ் பாட மாணவனுக்கு திருக்குறள் புதுக்கவிதையைவிட எளிமையானதுதான்.



நினைவு வைத்து கொள்ள எளிதான வடிவில் , சந்தத்தில் இலக்க்ண நூலான தொல்காப்பியத்தை எழுதினார்கள்...அது ஓர் அழகுதானே

அந்தத்தேவை இப்போது இருப்பவர்களுக்கு அதை பரிந்துரைப்போம். ஆனால், கவிதை ஒரு கற்பனையான சிந்தனை முறை என யோசிப்பவர்களுக்கு வேறு தேர்வு அவசியம்தானே


நவீன கவிதை காலாவதி ஆவது ஓகே..ஆனால் நவீன கவிதையின் எல்லா சாத்தியங்களையும் தமிழ் முயன்று பார்த்து விட்டு , பின் நவீனத்துவத்துக்கு தயாராகி விட்டதா? நாவலை பொறுத்தவரை , பின் நவீனத்துவத்துக்கு இன்னும் தயாராகவில்லை என்பது பலர் கருத்து

நாவல் சிறுகதை எல்லாம் மிக முந்தியே அதைச் செய்துவிட்டன. எதுவும் அதன் அனைத்துச் சாத்தியங்களையும் நிகழ்த்திவிட்ட பிறகுதான் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்பது ஒருவகை எதிர்பார்ப்பு . ஆனால், அது அப்படியல்ல. எந்தக் கருத்துநிலையும் முழுமையாக செயற்படுத்தப்படுவதோ, முழுமையாக நிராகரிக்கப்படுவதோ இல்லை. அதன் முக்கியமாக சரடு கேள்விக்குள்ளாகும் புலத்திலிருந்து அது உடைத்துக்கொண்டு போய்விடுகிறது

பின்நவீன கவிதை சாத்தியங்களை மாத்மாத்திரமே கருத்திற்கொள்கிறது- இதுதான் பின் நவீனத்துவத்தின் வரையறையா


நவீன கவிதை அதை எப்படிக் கடக்கிறது என்பதும், கடந்த நிலையில் அதற்கு என்ன பெயரிடுவது என்பதும் முக்கியமான ஒன்று. அதை பின்நவீன அம்சங்களோடு பொருத்தி பேசுவது என்பது ஒரு ஆரம்ப நிலை. இது பின்நவீனத்துவத்தின் கருததநிலையை முற்றாக எடுத்துக்கொள்வதல்ல. நவீனத்துவத்தின் தொடரச்சியுடன் கடந்து நிற்பது. நான் தௌவிவான ஒரு சொல்லை பயன்படுத்தியிருப்பேன். தமிழின் பின்நவீன கவிதை என்று. ஆகவே, பின்நவீனம் என்ற கருத்தாக்கத்தை முற்றாக இங்கு கையேற்காமல், தமிழ் கவிதையின் தொடர்ச்சியை வாசிப்பதினுாடாக, நவீன கவிதையை எப்படிக் கடக்கிறது என்றுதான் முன்வைத்திருப்பேன்.

பின்நவீனத்துவம் வாழ்வை முழுமையாகச் சரிசெய்ய முடியாது என அறிவித்தது. - அப்படி என்றால் ஈழம் சார்ந்த லட்சியவாத கவிதைகள் எல்லாம்?



அவை குறித்து கட்டுரையில் பேசியிருக்கிறேன். இதற்கு முன்பும், கற்பனை என்பது மேலதிகச் சிந்தனை என்ற கட்டுரையிலும் பேசியிருக்கிறேன். அரசியலை தனித்துறையாகவே கவிதை பார்க்கிறது. அதற்கு கவிதை கடமைப்பட்டது என்ற எந்த பிடிவாதத்தையும் அது நிராகரித்துவிடும்.

ஈழ அரசியல் போன்றவற்றுக்கு இடம் இல்லையா?
அரசியல் ரீதியான பார்வைக்கு இங்கு பின்நவீனத்துவம் முக்கிய இடந்தருகிறது. சிறுபான்மைக் கதையாடலாக ஈழத்து அரசியல் நிலவரத்தை அனுகுகிறது. அதற்கான வாய்ப்பு அதற்குள் உண்டு.


விளிம்பு நிலை மக்களின் எழுத்துகள் , பெண்ணீய பார்வைகள் போன்றவை குறித்து ?


அவை குறித்து பேசியிருக்கிறேன். பின்நவீனம் தமிழைச் சந்தித்ததும் ஏற்பட்ட மாற்றங்கள். அரசியல் ரீதியிலான அதன் பயன்பாடே தமிழில் மேலெழுந்தது. விளிம்பு நிலையில் வைக்கப்பட்டவர்கள், சிறுகதையாடல்கள் என்பன மேல்நிலைக்கு வந்தன. அதன் வரவுதான், தலித் இலக்கியம், பெண் எழுத்துக்கள் என்பது முன்னிலைக்கு வரவேண்டிவந்தது. இது முற்றிலும் அரசியல் சார்ந்த பார்வையினுாடாக இலக்கியம் அனுகப்பட்டதற்கு உதாரணம். ஆனால், நான் சொல்வது, புனைவுசாரந்த செயல்களால் கவிதை நவீன வெளியிலிருந்து கடந்துவிடுவதைத்தான்.

மனிதனை மகத்தானவனா மாற்றுவதே கலை என்பதை பின் நவீனத்துவம் மறுக்கிறது என்கிறீர்களா


மனிதனை எந்த தத்துவங்களும், அறங்களும், கலைகளும் மகத்தானவனவர்களாக மாற்றவில்லை என்கிறது என உடனடியாகச் சொல்லலாம். இப்படிச் சொல்லுவதுதான் அனைவருக்கும் புரியவும்கூடும்.

அப்படி என்றால் கலைகளின் நோக்கம் அல்லது பணி என்ன
அனைத்திற்கும் நோக்கமும், பணியும் தேவை என்பது ஒரு மதம் சார்ந்த பார்வை. ஆனால், இந்தக் கேள்வியை தொடர்ச்சியாக கேட்டால் அமற்கு ஏதோவொரு வகையில் பதிலொன்றை உருவாக்கிவிட முடியும். கலை என்பது ஒருவகை மனிதச் செயல். அது நிகழ்த்தப்பட்ட பிறகு அதன் பயன் மற்றும் நோக்கம் குறித்து பல விசயங்களை உருவாக்கிவிட முடியும். ஏலவே நொக்கதையும் பயனையும் விளைவாக வைத்து செயற்பட்டால் அது கலையில்லை என்று மட்டும் தெளிவாக சொல்லலாம்.

Friday, November 29, 2013

இயக்குனர் மகேந்திரன் ஆணாக்திக்கவாதியா ? கவிஞர் றியாசுடன் ஓர் உரையாடல்

ஆண்டிகளில் பரம்பரை ஆண்டி , பஞ்சத்துக்கு ஆண்டி என இருவகை உண்டு..
நானெல்லாம் இப்போதுதான் மகேந்திரன் படங்கள் பார்த்து வருகிறேன்... ஆனால் அவர் படங்களை வெகு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ,பார்த்து நினைவில் வைத்திருப்பவர்கள் உண்டு...அவர்களுடன் உரையாடுவது ஓர் இனிய அனுபவம்,

அவர் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் , ஆணாதிக்கம் ,மணிரத்னம் போன்றோர் அவர் கதையை சுட்டது ,போன்ற பல விஷ்யங்களை நேற்று விவாதித்தோம்..அவற்றின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு..

**********************************************************



குறியீடு பற்றி பற்றி பேசுபவர்கள் , மகேந்திரனின் பூட்டாத பூட்டுகள் பார்க்க வேண்டும்.. மல்லிப்பூ காட்சி, அஞ்சு பைசா காட்சி ஆகிய இரண்டை மட்டும் பார்த்தாலே போதும்

  • Gj Premkumar பாஸு நானும் பாத்தேன்..எனக்கு தெறிஞ்ச குறியீடு ..ஹாஆஆஆஆவ்..


  • Siva Raj இதுல ரெண்டு தடவை ' பற்றி' வருதே , இதுவும் குறியீடா...?! 


  • Riyas Qurana ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது. பாடல் சட்டென்று நினைவுக்கு வந்தது.


  • Balamurugan Chendurpandian அலோ பிச்சைக்கார்...சினிமா பத்தியே பேசறீங்களே...படம் இயக்க போறீங்களா, தயாரிக்கப் போறீங்களா?


  • Riyas Qurana நன்டு படம் குறித்து பதிந்தபோது, அள்ளித்தந்த வானம் பாடல் நினைவில் வந்தது. ” தனித்த காலம் வளர்த்த இடங்களெ, இளமை நினைவை இசை்கும் தெருக்கள்” வரி சுற்றிக்கொண்டிருந்தது.


  • Riyas Qurana மகேந்திரனின் நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தை , மணிரத்னம் - மௌனராகமாக எடுத்தார். உதிரிப்பூக்களை - வசந்த் - ஆசை என எடுத்தார்.

  • Riyas Qurana தனது படங்களில் ஆண்களோடு நேருக்கு நேர் பேசாத, எதையும் அமைதியாக பொறுத்துக் கொள்கிற ‘குடும்ப பாங்கான’ பெண்கள்தான் முன்மாதிரியான பெண்கள் என்ற கருத்தை அநேகமாக பதிவு செய்திருக்கிறார்.

    அவரின் முதல் படமான முள்ளும் மலரும் ஷோபா, உதிரிப்பூக்கள் அஸ்வினி, ஜானி ஸ்ரீதேவி, நெஞ்சத்தைக் கிள்ளாதேயில் சரத்பாபுவின் இரண்டாவது மனைவி, அதேப் படத்தில் திருமணத்திற்கு பிறகு சுகாசினியின் மாற்றம், கண்ணுக்கு மை எழுது சுஜாதா, மெட்டி விஜயகுமாரி, நண்டு பட நாயகி இப்படி… மகேந்திரன் காட்டவிரும்பும் பெண்கள் விமர்சனத்திற்குரியவை.

  • Pichaikaaran Sgl அவரது எல்லாப்படங்களும் பார்த்து இருக்கீங்க போல...இதைப்பற்றி விரிவா எழுதுங்க...எல்லோருக்கும் பயன்படும்


  • Gj Premkumar அதே போல்..ஆணாதிக்கம் நிறைந்து,ஐயா மகேந்திரனின் படங்கள்..

  • Riyas Qurana தோழர், ஆணாதிக்கம் நிறையாத தமிழப்படமே இல்லை. மகேந்திரனின் படங்களிலும்...

  • Gj Premkumar பெண்களை ஒன்றும் செய்ய இயலாதவர்களாய் காட்டிய விதத்தில் அவரின் பங்கு அதிகம் தோழரே..

  • Riyas Qurana முள்ளும் மலரில் படாபட் ஜெயலட்சுமி, உதிரிப்பூக்களில் அஸ்வினியின் தக்கச்சி, கை கொடுக்கும் கையில் ராஜலட்சுமி. துணை நாயகிகளாக காட்டும் பெண்களை அறிந்திருந்தால் இதைச் சொல்ல மாட்டீர்கள். 12 படங்கள் இயக்கியிருக்கிறார். தனக்கு பிடித்த படமான ”உதிரிப்பூக்களை” பிழைகள் குறைந்த படம் என்றுதான் சொல்லியிருக்கிறார். மிகப் பெரிய மனது.

  • Gj Premkumar துணை நாயகிகள் மட்டும்..மற்றபடி மனைவி என்பவள் ,அதே அஸ்வினி,ஷோபா..?

  • Riyas Qurana நாயகிகள் பற்றி மேலே குறிப்பிட்டிருக்கிறேன். படிக்க மறந்துவிட்டீர்கள் என நினைக்கிறென்.

  • Gj Premkumar Sorry..

  • Pichaikaaran Sgl அருமை Riyas Qurana .. ஜானியில்கூட ரஜினியை விட ஸ்ரீதேவியை ஒரு படி மேலாக காட்டி இருப்பார்...பூட்டாத பூட்டுகளில், தன் கணவன் கண் ஆப்பரேஷனுக்கு வைத்து இருந்த பணத்தை எடுத்து கொடுக்கும் பெண்ணை மறக்க முடியுமா

  • Riyas Qurana ஜொனி படத்தில், சுஜாதா பாடிய இரண்டாவது பாடல் என நினை்கிறேன். ” ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும்” அற்புதமான பாடல்.

  • Pichaikaaran Sgl Gj Premkumar விவாதத்தில் என்ன sorry? 
    a
  • Riyas Qurana தன் மனைவி வேறு ஒருவருடன் காதல்கொண்டு அவரோடு சென்று திரும்பவும், தனது கணவனிடம் திரும்பி வருகிறாள். அவளை அவன் ஏற்றுக்கொள்ளும் காட்சி... மிக அபூர்வமானது. இது என்ன படம்...?

  • Pichaikaaran Sgl Riyas Qurana நண்டு படத்தில் கதானாயகியின் தோழியை பவர்ஃபுல்லாக காட்டி இருப்பார் அல்லவா,...இதன் உள்ளீடு என்ன
  • Pichaikaaran Sgl Riyas Qurana நீங்கள் சொல்வது பூட்டாத பூட்டுகள்..தோழர் , அவர் படங்களில் துணை நாயகிகளை , நாயகிகளைவிட வலுவாக காட்டும் உள்ளீடு என்ன

  • Riyas Qurana அவரின் படத்தில் துணைநாயகி என்பது இருப்பதில்லை. ஒரு வசதிக்காக நாம் இப்படி சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், ஒரு சமாந்திரமாக, விமர்சனமாக பெண்களை உருவாக்கிக்காட்டிய படியே நகருவார். அமைதியான எதையும் ஏற்றுக்கொள்ளுபவள்தான் பெண் எ்ன்ற கருத்து நிலைபெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே, முற்றிலும் மாற்றமான ஒரு பெண்ணை சமாந்தரமாக உருவாக்குவார். அப்படிச் செய்வதால், ஆணாதிக்கத்தின் நிழலை படியவிடும் வாய்ப்பை தனது திரையிலிருந்து நீக்குகிறார்.

  • Gj Premkumar ஸாரி என்றது பேட்டரி லோ..அதனால் தோழரே..

  • Pichaikaaran Sgl ஹாஹா..... சூப்பர்....அடிச்சு ஆடுங்க

  • Riyas Qurana ஒரு இனிய மனது பாடலின் இணைப்பிருந்தால் இ்ங்கே தந்துவிடுங்கள். ... அனைவரும் மகேந்திரனை நினைக்கட்டும். அவரது தொலைபேசியின் ரிங்டோன் கூட அந்தப்பாடல்தான்.

  • Pichaikaaran Sgl Riyas Qurana எவ்வளவோ இருளாக இருந்தாலும் , அங்கு ஓர் ஒளி இருக்கும் என்பது அவர ப்டங்களின் பொதுக்கருத்தா... அந்த “துணை நாயகிகளை “ அந்த ஒளியாக கொள்ளலாமா?

  • Pichaikaaran Sgl Gj Premkumar புலி பதுங்குவது , பாய்வதற்காகத்தான் என நான் அறிவேன் 

  • Riyas Qurana ஒருவகைப் பிரகாசம்.
  • Gj Premkumar இங்கு பாடலைப் பற்றி அல்ல விவாதம் தோழரே..அவரின் பாத்திர படைப்பு..


  • Riyas Qurana சலிப்பு வரும்போது கேட்பதற்குத்தான் பாடல். கேட்டுப்பாருங்கள். விவாதிப்பதைவிட ரசிப்பது மிக அற்புதமான தருணம்.


  • Pichaikaaran Sgl மகேந்திரன் படங்களை நான் இப்போதுதான் பார்க்கிறேன்,, நீங்கள் எல்லாம் முன்பே பார்த்தவர்கள்...உங்களிடம் இருந்து அதிகபட்சம் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் Riyas Qurana Gj Premkumar

  • Gj Premkumar அவரின் ஆபார திறமை ஓரு வட்டத்திற்குள் நின்று விட்டது என்பதுதான் எனது ஆதங்கம்..

  • Pichaikaaran Sgl எப்படி சொல்கிறீர்கள்? கணவன் மனைவி உறவு , நடுத்தர குடும்ப பிரச்சனை , ஒரு சகோதரனின் பாசம், சிறுவயது ஈர்ப்பு , காமம் என பல தளங்களை அவர் தொட்டு இருக்கிறாரே

  • Riyas Qurana அவர் ஒருபோதும் தன்னை அபாரமான திறமையானவராக சொன்னதில்லை.

  • Riyas Qurana பூட்டாத பூட்டுக்கள் போன்ற கதையைத் தொடுவதற்கு தமிழ் சினமாவுக்கு இன்னும் காலம் பிடிக்கும் என நினைக்கிறென்.

  • Riyas Qurana நெ்ஞ்சத்தைக் கிள்ளாதே படத்திலிருந்து... பருவமே புதிய பாடல் பாடு என்ற பாடலை இணைத்துவிடுங்கள். இன்னுமொரு தேநீர்.

  • Pichaikaaran Sgl ரசிகனை அழ வைக்கும் சந்தர்ப்பங்கள் இருந்தாலும், அதை தவிர்ப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்



  • Gj Premkumar அப்படி பார்த்தால் பாலசந்தர் அதை விட அதிகமான கதைகளை கையாண்டவர்..

  • Pichaikaaran Sgl நம்மை அழ வைப்பதை தனது வெற்றியாக பாலச்சந்தர் கருதுவார்...மகேந்திரன் அப்படி நினைப்பதில்லை என்பது முக்கிய வித்தியாசம் என கருதுகிறேன் Riyas Qurana

  • Gj Premkumar ஒரு ரசனையோடு கொடுத்தவர் என்ற விதத்தில் மகேந்திரன் ஒரு படி மேலே நிற்கிறார் எனலாம்..

  • Pichaikaaran Sgl ஆமா ஆமா...அதைதான் சொல்றேன்..அழகியல்

  • Riyas Qurana கடும்கோபம் வந்தாலும், உரத்துப் பேசாத மனிதர்களையும், அவர்கள் தமது வலிகளையும் சந்தோசங்களையும், உள்ளுக்குள்ளே ரசிக்கும்படி ஆக்கிவைத்தவர். தலைமறைவு வாழ்க்கைபோன்ற ஒன்றை உறவுகளிடையெ இருப்பதை வெளிப்படுத்தியவர். பாலச்சந்தர், அழவைத்து பார்க்க முயற்சித்தவர். மகேந்திரன் உணர்த்தியவர்.

  • Pichaikaaran Sgl மகேந்திரன் படங்களில் பாடல்கள் பெரும்பாலும் பெண்களுக்கே கொடுக்கப்படுவது குறித்து ?

  • Gj Premkumar ஆனால் பாலசந்தர்'ன் பெண்கள் ஆளுமை திறன் மிக்கவர்கள்..

  • Riyas Qurana கதையின் முக்கியத்துவம் குறித்து... பாடல்கள் அமைவது வழக்கம். மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட என்ற பாடலின் இணைப்பை தாருங்கள். இன்றுவரை வந்த எந்தப்பாடலும் இதற்கு நிகரில்லை என்றே சொல்லுவேன். கேட்டுப்பாருங்கள். அதில், மலையாள பாடகர் பிரேம்மானந்த் பாடிய ” சந்தககவிகள் பாடிடும் மனதில் இன்பக் கனவுகளே..” ஒரு அற்புதமான பாடலும் இருக்கிறது. இணைப்பு கிடைக்கட்டும்.



  • Pichaikaaran Sgl ஆணை பழிவாங்க , அவன் மூலம் கர்ப்பமாகும் கல்கி , சங்கீத் ஞானம் இல்லாமல் கண்வனை டார்ச்சர் செய்யும் சிந்து பைரவி , பாடகனை டார்ச்சர் செய்து பிறகு அவன் காலில் விழும் புது புது அர்த்தங்கள் என பாலச்சந்தர் படங்களில்தானே பெண்னடிமைத்தனம் உள்ளது?

  • Riyas Qurana நுால்வேலி சரிதா மட்டுமே போதும் அவருடைய நாயகிகள் நிங்கள் சொன்னதுபோல இல்லை என்பதற்கு. திருமணம் ஆகாமல் கற்பமாகிறாள். அவளை கடைசியில் கொலை செய்ய வேண்டி வருகிறது. சிந்து பைரவி கதை எல்லாம் தெரியும்தானே... முற்போக்கான பெண்கள் கடைசியில் தற்கொலை செய்வதுதான் முடிவா. இல்லாமல் வாழவைக்க முடியாதா?

  • Pichaikaaran Sgl Riyas Qurana காட்சிகளை தன் இசையால் மூழ்கடித்து விடுகிறார் என இளையராஜா மீது குற்ற்சாட்டு உண்டு,.ஆனால் மகேந்திரன் படங்களில் அழகாக, தேவையான இடங்களில் மட்டும் பின்னணி இசைக்கிறார்... சண்டைகளில் டிஷ்யூம் டிஷ்யூம் ஓசைகூட இல்லை...மகேந்திரன் படங்களில் இருக்கும் இசை குறித்து என்ன சொல்கிறீர்கள்

  • Riyas Qurana இளையராஜா அப்படி மூழ்கடிப்பதில்லை. அவரின் இசைக்கற்பனையின் வீச்சில் காட்சிகள் கலைந்துவிடுவதுண்டு. நிண்டுபிடிக்க முடியாயாமல் போவதுண்டு. பாலுமகேந்திரா, மகெந்திரனின் படங்களிலும், நிவாஸ், சிறிராம், போன்றவர்களின் கமெராவிலும் அது நடப்பதில்லை.

  • Riyas Qurana மெட்டி ஒலி காற்றோடு என்ற பாடலை கேட்டுப்பாருங்கள். ஒரு பெண் குரலை ஒரு இசைக்கருவிபோல மாத்திரமே பயன்படுத்தியிருப்பார்.

  • Pichaikaaran Sgl மெட்டி ஒலி படத்தில் அண்ணனும் தங்கையும் பாடுவதாக பாடல் வருமே...அது போல சகோதாரப்பாசத்தை காட்டும் பாடல்கள் வேறு வந்ததாக தெரியவில்லையே ( செண்டிமெண்ட் பாடல்கள் வேறு விதம்.. நான் சொல்வது அழகியலோடு கூடிய பாடல்)

  • Pichaikaaran Sgl அதுதான் நீங்கள் சொல்லும் சந்தககவிகள் பாடிடும் மனதில் இன்பக் கனவுகளே

  • Riyas Qurana ஆமா... மிக அருமையான பாடல். ஜெயமோகனுக்கு பிடிக்கும் என்று சொன்னதாக ஞாபகம் அப்போது எனது ரசனையில் சந்தேகம் வந்தது. பின்னர், அந்தப்பாடலைப் பாடிய பிரேமானந்தம் பற்றி கூறியதாக அறிந்தேன்....

  • Riyas Qurana கைகொடுக்கும் கை படத்தில் ”தாளம்பூவே வாசம் வீசு” அருமையான பாடல். அதுபோல, முள்ளும் மலரும் படத்தில் ஜென்சி பாடிய , அடி பெண்ணே பொன்னுாஞ்சல் ஆடும் இளமை. பாலுமகேந்திராவின் கமெரா, எனக்கு விருப்பமான நடிகை ஸோபா, என ஒரே கொண்டாட்டமாகவே இருக்கும். இணைப்பை தந்துவிடுங்கள்.
  • Pichaikaaran Sgl ”ஜெயமோகனுக்கு பிடிக்கும் என்று சொன்னதாக ஞாபகம் அப்போது எனது ரசனையில் சந்தேகம் வந்தது.” ஹா ஹா.... சீரியசான விவாதத்தில் ஒரு காமெடி இடைவேளை சூப்பர்

  • Pichaikaaran Sgl வாவ் வாவ் வாவ்,... நினவில் வைத்து இருந்து கொட்டுகிறீர்களே..ம்ம்ம்

  • Riyas Qurana எப்போதோ படித்தவைகள்தான், பார்த்தவைகள்தான், கேட்டவைகள்தான். நினைவிலிருந்தே எழுதுகிறேன். எனது ஞாபக சத்தியின்மீது அதிக நம்பிக்கை இருக்கிறது. ம்...ம்...ம்...

  • Pichaikaaran Sgl அந்த அளவுக்கு உங்கள் மனம் க்வர்ந்து இருக்கிறது
    41 minutes ago · Like · 1
  • Pichaikaaran Sgl பிற்காலத்தில் ஊர்பஞ்சாயத்து , சாசனம் என அவர் ஏன் நீர்த்து போனார்?

  • Pichaikaaran Sgl கலைக்கும் முதுமை உண்டா?

  • Riyas Qurana அவருடைய 12 படங்களில், 4 அல்லது 5 படங்கள்தான் கொண்டாடப்பட்டடுபவை. அதுவும் நம்மைப்போன்ற சிலர். அல்லது புதிதாக வரும் துணை இயக்கநர்கள் போன்றவ்களினால். ஜனவெளியை கைப்பற்ற முடியாது போய்விட்டது. ரஜனியை வைத்து எடுத்த கை கொடுக்கும் கை படத்திற்கும் அதுதான் நிலை.கலைக்கு முதுமை இல்லை. சிந்தனை என்பது காலத்தோடு நகர்ந்துகொண்டு வர வேண்டும். அது காலத்தை பிந்துமானால் எவ்வளவு திறயைமானவராக இருந்தாலும் அவர் பழசுபட்டுப்போய்விடுவார். ஜெயமோகன், இளையராஜா, என அதிக உதாரணங்களைச் சொல்லலாம். சிலருக்கு, தங்கள் இளமைப்பருவத்துக் காலமே தங்களோடு எப்போதும் இருக்கும். அந்தக்கால விசயங்களுடன் தங்கிவிட்டிருப்பார்கள். சிலர் மிக மெதுவாக சிந்திப்பவர்களாக இருப்பார்கள். புதிதாக வருபவைகளை ஏற்க்கமாட்டார்கள். ஒரு பத்தாண்டு கடந்துவிட்டால். தான் பறக்கணித்தவைகளை கொண்டாடுவார்கள். மிகச்சிலரே, காலத்திற்கு சமாந்தரமாக பயணிக்கக்கூடியவர்கள். சாரு, ராஜ சுந்தரராஜன் போன்றவர்கள். காலத்தோடு பயணிப்பதுதான் உயிர்ப்புமிக்கது. பின்தங்கும்போது, மிகப்பழசு பட்டுவிவார்கள்.
  • Pichaikaaran Sgl சுஜாதாவும் கடைசி வரை உயிர்ப்புடன் இருந்தார் என நினைக்கிறேன்..சரியா

  • Riyas Qurana ஆமா.... அவர்குறித்து அதிகமான விமர்சனங்கள் இருக்கிறது. அவர் எழுத்தாளரே இல்லை என்றுகூட, அவரது பிரதிகளை வைத்து சொல்லலாம். ஆனால், அவர் உயிர்ப்புமிகு இலக்கியச் செயற்பாட்டாளர்.

  • Riyas Qurana பிரபஞ்சன்,ஜெயகாந்தன்,சுஜாதா, போன்றவர்களை ஜனரஞ்சக வெளிக்குள்ளும் தள்ளிவிட முடியாது, நவீன வெளிக்குள்ளும் இழுத்து வைக்க முடியாது. இரண்டிலும் தமது செயல்பரப்பை விரிவுபடுத்தியவர்கள். இவர்களை கலைஞர்கள் என சொல்லலாம். இவர்களுடைய செயல்பாட்டை இன்னும் விரிவுபடுத்தி, நவீனப்படுத்தி கொண்டுசெல்ல முடிகிறவர்தான் தமிழின் சிறந்த இலக்கியச் செயற்பாட்டாளராக இன்றைய பொது உளவியல் ஏற்க்கும்.

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா