Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Wednesday, August 19, 2020

இனக்கலவரத்தில் சித்துவின் உயிர் காத்த வீரன் - சேத்தன் சவுகான் நினைவலைகள்



 

 வரலாற்று நாயகர்களாக வாழ்வது கெத்து என்றாலும் அதற்கான விலையும் அதிகம்    ப்ரவைசி இருக்காது    இமேஜ் என்ற சிறையை மீறி எதுவும் செய்ய முடியாது அவதூறுகள்  பொறாமைகள் என் வாழ் நாள் முழுக்க அவதிதான்

  சத்தமில்லாமல் சாதனைகள் செய்து விட்டு சுதந்திரமாக உற்சாகமாக தான் நினைத்தபடி வாழ்வது ஒரு வகை


சில பாடல்களைக் கேட்டு கண்ணதாசன் பாடல் என நினைத்துக்கொண்டு இருப்போம் கடைசியில் பார்த்தால் அதிகம் பிரபலமாகாத ஒரு மேதை அதை எழுதி இருப்பார்

உதாரணமாக எல்லா இசை நிகழ்ச்சிகளிலும் பாடப்படும் “ நந்தா நீ என் நிலா நிலா “ என்ற பாடல் கண்ணதாசன் எழுதியதன்று

அதேபோல கிரிக்கெட்டில் பலர் இருக்கிறார்கள்   சமீபத்தில் காலமான சேட்டன் சவுகான் இப்படிப்பட்ட அமைதியான சாதனையாளர்களில் ஒருவர்


கவாஸ்கர் _ ஸ்ரீகாந்த்  கார்னிட்ஜ் _ ஹெயின்ஸ்     டேவிட் பூன் _ மார்ஷ்   போன்ற துவக்க ஆட்ட ஜோடிகள் உலகப்புகழ் பெற்றவை

அவற்றுக்கிணையான ஜோடிதான் கவாஸ்கர் _ சேட்டன் சவுகான் ஜோடி

இருவரும் இணைந்து பல ஆட்டங்கள் ஆடி இருக்கின்றனர் இந்த இணை பல சாதனைகள் செய்துள்ளது

ஆனால் கவாஸ்கருக்கு கிடைத்த பெயர் இவருக்கு கிடைக்கவில்லை   அதை இவர் விரும்பவும் இல்லை

தன்  எல்லைகளை உணர்ந்தவர் இவர்


சர்வதேசப்போட்டிகளில் ஒரு செஞ்சுரி கூட அடிக்காதவர் இவர்  ஒரு செஞ்சுரிகூட அடிக்காமல் ஓப்பனிங் ஆட்டக்காரராக பல ஆண்டுகள் நீடிக்க முடிந்ததை வைத்து இவர் அணிக்க்கு எவ்வளவு முக்கியமாக இருந்தார் என்பதை உணர்ந்து கொள்ளலாம்


அவரது பண்பு நலன் களுக்கு இரு உதாரணங்கள்


ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு போட்டியின்போது அணித்தலைவர் கவாஸ்கருக்கு அவுட் கொடுக்கப்பட்டது   அது தவறு என நினைத்த கவாஸ்கர் எதிர்முனையில் இருந்த சவுகானைப்பார்த்து இந்த ஆட்டத்தை புறக்கணிப்போம்   என்னுடன் நீங்களும் வெளியேறுங்கள் எனச்சொல்லி விட்டு கிளம்பினார்


சவுகானுக்கு தர்ம சங்கடம்  அணிதலைவர் பேச்சுக்கு கட்டுப்பட வேண்டும் ஆனால் தானும் வெளியேறினால் இந்திய அணி தோற்றதாக அறிவிக்கப்படும் ஒரு களங்கமாக வரலாற்றில் பதிவாகி விடும்

அமைதியாக கவாஸ்கரிடம் சொன்னார்  உங்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டவன் நான்  இதோ நானும்  வருகிறேன் என சொல்லி விட்டு நடக்கலானார்

ஆனால் அணி நிர்வாகத்துக்கு யோசிக்க நேரம் கொடுக்கும் பொருட்டு மிக மெதுவாக நடந்தார்     அதற்குள்   அணி நிர்வாகம் பேசி முடித்து ஆட்டத்தை தொடருமாறு சைகை செய்தனர்   ஒரு தவறான முன்னுதாரணம் தவிர்க்கப்பட்டது


அணியில் சேர்ந்த ஆரம்ப கால கட்டங்களில் அவ்வப்போது அணியை விட்டு நீக்கப்பட்டார் மீண்டும் கடும் முயற்சி செய்து உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாக ஆடி அணியில் இடம் பெற்றவர் இவர்

ஓய்வு பெற்றபின் அணியின் மேனேஜராக பணியாற்றியபோதும் இவரது பண்பு நலன் பளிச்சிட்டடது


இந்திய வீரர் ஹர்பஜன் சிங் இன துவேஷமாக நடந்து கொண்டார் என்பது குற்ற்ச்சாட்டு   2008ல் ல்   டெண்டுல்கர் தலைமையில் இந்தியா ஆஸ்திரேலியா சென்று இருந்தது..    ஒரு போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமன்ஸை   குரங்கு எனத் திட்டி விட்டதாக பஞ்சாயத்து

அப்போது மேனேஜர் என்ற முறையில் சேட்டன் சவுகான் ரிக்கி பாண்டிங் உடன் பேசினார்

குரங்கு என்பது உங்கள் சூழலில் இன துவேஷ வார்த்தையாக இருக்கலாம். இந்தியர்களுக்கு அது கடவுள் என அனுமான் ஆலயங்கள் , அனுமன் சிலைகள் போன்ற படங்களைக்காட்டி விளக்கினார். ஹர்பஜன் அப்படிப்பேச  வாய்ப்பில்லை என புரிய வைத்தார். இவற்றை எல்லாம் விளக்கும் அளவுக்கு ஹர்பஜனுக்கு ஆங்கிலம் தெரியாது என சாமர்த்தியமாகப்பேசி ஹர்பஜன் சார்பில் தானே பேசி பஞ்சாயத்தை சுமுகமாக முடித்து வைத்தார்

இந்த தன்மை அவருக்கு அரசியலில் உதவியது.   உத்தர்பிரதேஷத்தின் லோக் சபா எம் பி யாக இருந்து இருக்கிறார். மறையும்போது அமைச்சராக மறைந்து இருக்கிறார்

உள்ளூர்ப்போட்டிகளில் தனது கடைசி ஆட்டம் வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்.  ஒரு முறை தனது தாடை உடைந்தபோதும்கூட களத்தில் நின்று ஆடியவர் இவர்..   அடுத்தடுத்து இரு போட்டிகளில் இரட்டைச்சதம் ,  தொடக்க ஜோடியாக 400 ரன்களுக்கு மேல் குவித்தது என இவரது சாதனைகள் ஏராளம் 

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் ஒன்றில் 438 ரன் எடுத்தால் வெற்றி என இமாலய இலக்குடன் ஆடத்தொடங்கிய இந்தியா கிட்டத்தட்ட அந்த இலக்கை எட்டிய நிலையில் நேரமின்மை காரணமாக ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்தியா எடுத்த ரன்கள் ( 429- 8)   இந்தப்போட்டியில் கவாஸ்கர் - சேட்டன் சவுகான் ஜோடி மிக அபாரமாக ஆடி 200 ரன்களுக்கு மேல் குவித்தது


1984ல் உள்ளூர் போட்டி ஒன்றை முடித்து விட்டு ரயிலில் தன் அணித்தோழர்களுடன் வந்து கொண்டு இருந்தார்.


அப்போது இந்திரா காந்தி படுகொலை நடந்து சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடங்கியது.


நவ்ஜோத் சித்து , ரஜீந்தர் கய் ஆகிய சீக்கிய வீரர்கள் அவருடன் பயணித்தனர். அவர்களைத்தாக்க  முயன்ற கூட்டத்தை அரண்போல நின்று காத்தவர் இவர்தான்


இவரைப்பற்றி கவாஸ்கர் உருக்கமாக கூறுவதாவது


” அவன் என் உயிர் நண்பன்  அவன் செஞ்சுரி அடிக்காமல் போனதற்கு நானும் ஒரு காரணம் என நினைக்கிறேன்..  ஒரு போட்டியில் 97 ரன்கள் எடுத்து இருந்தான்.  டீவியில் பார்த்துக்கொண்டு இருந்தேன்.  அவர் செஞ்சுரி அடிக்கப்போகிறார்.. எழுந்து வந்து பால்கனியில் நின்று பாருங்கள் என சக வீரர்கள் அழைத்தனர். நான் நேரில் பார்த்தால் அவுட் ஆகி விடுவார் என்றொரு  நம்பிக்கை எனக்கு இருந்தது.. ஆனால் வற்புறுத்தலால் பால்கனியில் நின்று பார்த்தேன்.  என்ன கொடுமை.. நான் பார்த்த நேரம், அவன் அவுட் ஆகி விட்டார்.  இன்னொரு போட்டியில் அம்பயருடன் நான் போட்ட சண்டை காரணமாக அவுட் ஆகி விட்டான்


கடைசி ஆண்டுகளில் நாங்கள் அவ்வப்போது சந்திப்போம். வாழ்க்கை எனும் விளையாட்டின் கடைசி ஓவர்களில் இருக்கிறோம். எப்படியாவது செஞ்சுரி அடிக்க வேண்டும் என்பேன். அவன்சிரிப்பான்..  நீதான் செஞ்சுரி அடிப்பதில் வல்லவன்.  எனக்கும் செஞ்சுரிக்கும் ஒத்து வந்ததே இல்லை என்பான்.. அவன் சொன்னதுபோலவே சீக்கிரமே கிளம்பி விட்டான்.. என் துயரத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை

Wednesday, May 29, 2019

ஆடாமல் ஜெயித்த கிரிக்கெட் வீரர் - கிரிக்கெட் உலக கொடுமைகள்



1983 உலக கோப்பை வெற்றியில் கபில் தேவின் ஃபைனல் கேட்ச்சை ( விவியன் ரிச்சர்ட்ஸ் விக்கெட் ) , மொஹிந்தர் அமர் நாத்தின் கடைசி ஓவர்களை யாரும் மறக்க முடியாது

அதேபோல சுனில் வால்சனுக்கும் அவரது நண்பர்கள் உறவினர்களுக்கு 1983 உ கோப்பையை மறக்க முடியாது

காரணம் அந்த போட்டியில் வென்று கோப்பையுடன் புகைப்படத்தில் காட்சி அளிப்பவர்களுள் அவரும் ஒருவர்..

ஆம்..அந்த அணியில் இடம் பெற்றிருந்த வீர்களில் இவரும் ஒருவர். ஆனால் ஒரு மேட்ச் சில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை

ரோஜர் பின்னி , மதன்லால் , கபில்தேவ் போன்ற சீனியர்கள் இருக்கும்போது சின்ன பையனான எனக்கு வாய்ப்பு கிடைக்காததில் வருத்தம் இல்லை.. இப்போது நான் சீனியர் சிட்டிசனாகி விட்டேன் என்பதால் இப்போதும்கூட வருத்தம் இல்லை என்கிறார் இவர்

ஆந்திராவை சேர்ந்த வீரரான இவர் தற்போது ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியின் மேனேஜராக இருக்கிறார்

அதேபோல தமிழக வீரர் வி வி குமார்.. திறமைசாலிதான்.. ஆனாலும் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை

வாய்ப்பு கிடைத்த முதல் தொடரில் அருமையாக பந்து வீசினார்

அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான தொடர்

முதல் இன்னின்க்சில் சிறப்பாக பந்து வீசினார்

இரண்டாம் இன்னின்க்சில் ஒரு ஓவர் கூட வீசவில்லை

அடுத்த டெஸ்ட்டில் வாய்ப்பு தருவதாகவும் , பந்து வீசும் ஸ்டைல் ரகசியமாக இருந்தால்தால் அடுத்த டெஸ்ட்டில் எதிராளிகளை அச்சுறுத்த முடியும் என்றும் கூறி பந்து வீச வேண்டாம் என்றார் அணித்தலைவர்

ஆனால் என்ன கொடுமை என்றால் , அவர் வாழ்க்கையில் அடுத்த வாய்ப்பு என ஒன்று வரவே இல்லை

அதேபோல மதுரை வீரர் வெங்கட்ரமணா..

திறமையான பந்து வீச்சாளர்

கிரிக்கெட் உலக அரசியலால் இவருக்கும் வாய்ப்புகள் அமையவில்லை

இப்படி வாய்ப்புகள் அமையாமல் ,  காணாமல் போனோர் எண்ணிக்கை கிரிக்கெட்டில் அதிகம்.. வாழ்க்கையிலும்கூட

Friday, February 22, 2019

வாசிம் ஜாஃபர்- கிரிக்கெட் உலகின் ஃபீனிக்ஸ் பறவை


 உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்... 
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்  நிழலும் கூட மிதிக்கும்....

என்பார் கவியரசர் கண்ணதாசன்..

இதை நம் வாழ்வில் அனுபவித்து இருப்போம்... பிரபலங்களும் இந்த அனுபவத்துக்கு ஆளாவது உண்டு

ரஞ்சிகோப்பையை அடுத்தடுத்து இரு முறை வென்று சரித்திரம் படைத்துள்ளது விதர்ப்பா அணி.. அதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் அந்த அணி வீரர் வாசிம் ஜாஃபர்

இதற்கு முன்பு மும்பை அணிக்காக விளையாடி அந்த அணியின் ரஞ்சி வெற்றிக்கும் உதவி இருக்கிறார் இவர்..

இந்திய அணிக்காகவும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்

அவர் பிரபலமாக இருந்த கால கட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் இவருக்கு பணி வழங்கியது.. அவர் தம்முடன் இருப்பது ஒரு பெருமை என நினைத்ததால் இந்த கவுரவ பதவி..

ஒரு கட்டத்தில் காயம் காரணமாக மும்பை அணியில் இருந்து நீக்கப்பட்டார்... மற்ற அணிகளும் சேர்த்துக்கொள்ளவில்லை... எனக்கு காசெல்லாம் வேண்டாம்.. சும்மா ஆடுகிறேன் என சொன்னதை யாரும் மதிக்கவில்லை

இவர் நிலையை உணர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம் , இனி கிரிக்கெட்டல்லாம் வேண்டாம்... ஒழுங்காக நிறுவனத்துக்கு ஒன்பது மணிக்கு எல்லோரையும் போல வேலை செய்யுங்கள்... ஐந்து மணிக்கு வீட்டுக்குப்போய் மெகா சிரியல் பாருங்கள் என்றது

ஒரு கிரிக்கெட் வீரராக இந்த அவமானம் அவரை காயப்படுத்தியது.. இந்த சூழலில் மும்பை பயிற்சியாளராக இருந்த சந்திரகாந்த பண்டிட் விதர்ப்பா அணியின் பொறுப்பை ஏற்றார்.. ஜாஃபரின் திறமையை அறிந்திருந்த அவர் விதர்பா அணியில் அவரை சேர்த்தார்

அதன் பின் நடந்ததெல்லாம் பொன் எழுத்துகளால் பொறிக்க வேண்டிய வரலாறு

அவமானங்கள் நிரந்தரம் அல்ல

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா