Friday, February 22, 2019

வாசிம் ஜாஃபர்- கிரிக்கெட் உலகின் ஃபீனிக்ஸ் பறவை


 உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்... 
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்  நிழலும் கூட மிதிக்கும்....

என்பார் கவியரசர் கண்ணதாசன்..

இதை நம் வாழ்வில் அனுபவித்து இருப்போம்... பிரபலங்களும் இந்த அனுபவத்துக்கு ஆளாவது உண்டு

ரஞ்சிகோப்பையை அடுத்தடுத்து இரு முறை வென்று சரித்திரம் படைத்துள்ளது விதர்ப்பா அணி.. அதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் அந்த அணி வீரர் வாசிம் ஜாஃபர்

இதற்கு முன்பு மும்பை அணிக்காக விளையாடி அந்த அணியின் ரஞ்சி வெற்றிக்கும் உதவி இருக்கிறார் இவர்..

இந்திய அணிக்காகவும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்

அவர் பிரபலமாக இருந்த கால கட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் இவருக்கு பணி வழங்கியது.. அவர் தம்முடன் இருப்பது ஒரு பெருமை என நினைத்ததால் இந்த கவுரவ பதவி..

ஒரு கட்டத்தில் காயம் காரணமாக மும்பை அணியில் இருந்து நீக்கப்பட்டார்... மற்ற அணிகளும் சேர்த்துக்கொள்ளவில்லை... எனக்கு காசெல்லாம் வேண்டாம்.. சும்மா ஆடுகிறேன் என சொன்னதை யாரும் மதிக்கவில்லை

இவர் நிலையை உணர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம் , இனி கிரிக்கெட்டல்லாம் வேண்டாம்... ஒழுங்காக நிறுவனத்துக்கு ஒன்பது மணிக்கு எல்லோரையும் போல வேலை செய்யுங்கள்... ஐந்து மணிக்கு வீட்டுக்குப்போய் மெகா சிரியல் பாருங்கள் என்றது

ஒரு கிரிக்கெட் வீரராக இந்த அவமானம் அவரை காயப்படுத்தியது.. இந்த சூழலில் மும்பை பயிற்சியாளராக இருந்த சந்திரகாந்த பண்டிட் விதர்ப்பா அணியின் பொறுப்பை ஏற்றார்.. ஜாஃபரின் திறமையை அறிந்திருந்த அவர் விதர்பா அணியில் அவரை சேர்த்தார்

அதன் பின் நடந்ததெல்லாம் பொன் எழுத்துகளால் பொறிக்க வேண்டிய வரலாறு

அவமானங்கள் நிரந்தரம் அல்ல

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா