Sunday, December 11, 2011

அல்ட்டிமேட் ரைட்டரின் எக்ஸைல் - பின் நவீனத்துவ ரகளை


மிழக இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும் அளவுக்கு பிரமாண்டமாக நடந்தது அல்ட்டிமேட் ரைட்டரின் எக்ஸைல் நாவல் வெளியீட்டு விழா.

முன்பு ஒருவர் சாருவின் மீது கொண்ட பொறாமையை மனதில் வைத்து மட்டம்தட்டி வந்தார். ஆண்டுக்கு 80 புத்தகங்கள்தான் விற்கின்றன என கணக்கு காட்டி ஏமாற்றினார். அவர் ஒட்டு மொத்தமாக விற்ற புத்தகங்களின் எண்ணிக்கையை விட , விழா அன்று விற்ற புத்தகங்களின் எண்ணிக்கை பல மட்ங்கு அதிகம்.

இந்திரா பார்த்தசாரதி பாராட்டு மழையில் புத்தகத்தை நனைத்தார். பேசி முடிந்து இருக்கைக்கு திரும்பியவர், மீண்டும் எழுந்து வந்து பாராட்டினார்.

பேசும் ஐடியா இல்லாமல் வந்த மதன், சாருவின் வேண்டுகோளுக்கிணங்க, குறிப்புகள் ஏதும் இல்லாமல் மனமார நாவலை பாராட்டினார்.

இப்படி எத்தனையோ சாதனைகளை வெளிவரும் முன்பே எக்சைல் செய்தது
ஆனால் ஒரு வாசகன் படிக்க ஆரம்பிக்கும்போது, இந்த அம்சங்கள் எல்லாம் அவன் கணக்கில் வராது.

தன் கையில் தவழும் புத்தகம் , அவன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா இல்லையா என்பதே கேள்வி.

எனவே விருப்பு , வெறுப்பு என்றி இந்த நாவலை அலசுவது நம் கடமை. இந்த நாவல் என்ன சொல்கிறது? எப்படி சொல்கிறது? ஒரு சாராசரி வாசகனின் பார்வையில் நாவல் எப்படி இருக்கிறது?

பார்க்கலாம்..

முதலில் ஒன்று சொல்லி விடுகிறேன்.

இது வரை வந்த தமிழ் நாவல்களில் இது சற்றே வேறுபட்டது. இது ஒரு த்ரீ இன் ஒன் நாவல்.

இதை நீங்கள் ஒரு கட்டுரைத்தொகுப்பாக படிக்கலாம்.. சுய சரிதையாயாக படிக்கலாம். அல்லது நாவலாகப் படிக்கலாம்..

எப்படி படித்தாலும், சுவாரஸ்யமாகவும் பலன் மிக்கதாக இருக்கும் என்பதே இதன் சிறப்பு.

கட்டுரை தொகுப்பாக படித்தால் ஏராளமான விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன,

வாழ்வில் வெற்றி பெறும் சூத்திரங்கள், மருத்துவ குறிப்புகள், வயகாரவை மிஞ்சும் வீரிய விருத்து லேகியம்  சில சமையல் குறிப்புகள், முக்கிய புத்தங்கள் பட்டியல், ஆன்மீக குறிப்புகள், சித்தர் பற்றிய குறிப்புகள், தரிசிக்க வேண்டிய ஆலயங்கள், தரிசிக்க வேண்டிய முறைகள், இஸ்லாமிய சுஃபி மகான் பற்றிய குறிப்புகள் , மது வகைகள் , பின் நவீனத்துவம் என்றால் என்ன என்பதற்கு விளக்கம் என ஒவ்வொரு பக்கமும் தகவல் சுரங்கம்.

அம்ர்ந்தால் ஒரே மூச்சில் அரை நாளில் படித்து விடலாம்.

சுய சரிதையாக படித்தால், ஓர் எழுத்தாளனின் உழைப்பு , அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என ஒரு சர்வதேச தரத்திலாம சுயசரிதை புத்தகம் படித்த திருப்தி கிடைக்கும்.,, ஆனால் இது முழுமையான சுய சரிதை நூல் அன்று என்பதால், இந்த கோணத்தில் படிப்பது நாட் ரெகமெண்டட்.

இந்த கோணத்தில் படித்தாலும், ஒரே அமர்வில் படித்து முடிக்கலாம்

நாவல் என்ற கோணத்தில் படித்தால்தான் , எக்ஸைலின்  முழு வீச்சயும் உள்வாங்க முடியும். ஆனால் இப்படி படித்தால் அரை நாளிலெல்லாம் படிக்க முடியாது, படிக்கவும் கூடாது.

காரணம் இந்த நாவல் வாசகனின் உழைப்பையும் கோருகிறது. சவால் விடுகிறது.

நாவலை ஆரம்பித்தால் ஜெட் வேகத்தில் செல்லும்தான். ஆனால் கஷ்டப்பட்டு பிரேக் போட்டு நிறுத்தி ஆங்காங்கு சற்று எழுத்தை முழுமையாக உள்வாங்க வேண்டும்.

நானெல்லாம் சிலவற்றை நிபுணர்களுடன், நண்பர்களுடன் பல பகுதிகளை விவாதித்த பின்பே அடுத்த பகுதிக்குள் சென்றேன்.

உதாரணமாக ஓர் இடத்தில், லக்காம் சொல்லும் woman does not exist கோட்பாடு பற்றி தெரியுமா என கேட்டு விட்டு நாவல் தொட்ரகிறது. அந்த கோட்பாடு தெரியவில்லை என்றால் , அது என்ன என தெளிவு படுத்திக்கொண்டு நாவலை தொடர்ந்தால்தான் நல்லது. சும்மா ஸ்கிப் செய்து விட்டு சென்றால் அந்த பகுதியின் அர்த்தம் சரிவர புரியாது

மேலோட்டமாக படித்தாலும் நன்றாக இருக்கும்தான். ஆனால் இப்படி படித்தால் சாரத்தை இழந்து விடுவோம். கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறோம். மீன் பிடித்து திரும்பி விடலாம். இன்னும் கொஞ்ச தூரம் போனால் , விலை உயர்ந்த பொக்கிஷங்கள் கிடைக்கும் என்றால் , கூடுதல் எஃபோர்ட் கொடுக்கலாம் அல்லவா? எது போல கொஞ்சம் எஃபோர்ட் கொடுத்தால், நாவலில் பல புதையகல்கள் அள்ளலாம்.

எக்சைல் என்ற பெயரே ஆழமான அர்த்தம் கொண்டது. நாடு கடத்தப்படல் என்பது இதன் பொருள்.

மரண தண்டனையை விட கொடுமையானது இது.
பல சந்தர்ப்பங்களில் நாடு கடத்துதல் என்பது நேரடியாக இருக்காது.

படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கிறீர்கள். வீட்டில் அவமானப்படுத்துகிறார்கள் என்றால் வீடை விட்டு வெளியேறுவீர்கள். அது ஒருவகை எக்சைல்தான்.

மயக்கம் என்ன படத்தில் தனுஷ் அனுபவிப்பது ஒரு வகை எக்சைல்தான்.

அதே போல தமிழ் நாட்டில், எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், சொந்த நாட்டுக்குள்ளேயே எக்சைல் வாழ்க்கை வாழ்கின்றனர் என்பது ஒரு கோணம்.

ஒரு நடிகனுக்கோ , அரசியல் தலைவனுக்கோ பால் அபிஷேகம் செய்கிறீர்கள் என வைத்து கொள்ளுங்கள், யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.

ஓர் எழுத்தாளனுக்கு அப்படி செய்ய நினைத்தால் தொலைத்து விடுவார்கள். எழுத்தாளன் என்றால் அடங்கி இருக்க வேண்டும்,. அவனுக்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டம். ஆச்சாரம் கெட்டு விட்டது என ரகளையே நடக்கும்.

( இதை மீறும் பொருட்டு, இலக்கியவாதிகளின் அடையாளத்தை பிரதிபலிக்கும் ஆடையை சாரு தவிர்த்து விட்டு, வேறோர் உடையில் விழாவில் தோன்றியதை பார்த்து இருப்பீர்கள் )

இப்படிப்பட்ட சமூகத்தில் , சொந்த நாட்டிலேயே , நாடு கடத்தப்பட்டவன் போல  வாழும் உதயா என்ற எழுத்தாளனின் கதைதான் எக்ஸைல்.

ஆனால் இது அவன் கதை மட்டும் அன்று. அவன் கோணத்தில் மட்டும் கதை சொல்லப்படுவதில்லை. தன் வீட்டிலேயே அடக்குமுறையை சந்திக்கும் அஞ்சலி, ஆதிக்க சாதியில் பிறந்த ஒருவன் , குப்பை அள்ளும் வேலையில் , ஏமாந்து போய் சேரும் நிலை, உதயாவின் மகள், அஞ்சலியை காதலிக்கும் உதயா ஒரு கட்டத்தில் தானே அவளை அடக்குமுறைக்கு உட்படுத்த நினைக்கும் வினோதம் , காரணமே இல்லாமல் துன்புறுத்தப்படும் சொறி நாய், தற்கொலைக்கு தூண்டப்படும் பூங்கொடி , சிறுவர்களின் விளையாட்டால் அல்லல்படும் வளர்ப்பு நாய் என பல்வேறு பாத்திரங்கள். ஒவ்வொன்றும் மறக்க முடியாதவை. ஒரு விதத்தில் இவர்களும் கூட புகலிட வாழ்வுதான் வாழ்கிறார்கள்.

ஒருவரை எந்த காரணமும் இல்லாமல் துன்புறுத்துவதை  பல இடங்களில் பார்க்கிறோம்.

அன்பை போதிக்கும் ஆன்மீக வாதிகள்கூட அடக்குமுறையை பயன்படுத்துவதை நாவல் சுட்டிக்காட்டுகிறது..

இதை எல்லாம் பார்த்தால் , நாவல் ரொம்ப சீரியசாக இருக்குமோ என நீங்கள் நினைக்கலாம்.

அதுதான் கிடையாது.

நாவலின் துவக்க பகுதியில் இருந்து , கிளைமேக்ஸ் வரை, துள்ளல்தான், ரகளைதான் , கொண்டாட்டம்தான்.

பொது இடங்களில் அமர்ந்து படிக்காதீர்கள். படித்தால் சிரிப்பை அடக்க முடியாது. எல்லோரும் உங்களை வினோதமாக பார்ப்பார்கள்..

குறிப்பாக 66 , 67 பக்கங்களை சிரிக்காமல் படிப்பவர்களுக்கு விருது கொடுக்கலாம். செம கிண்டல்.

“ ஆரூர் சிம்மன் சாமான்ய ஆள் அல்ல. மூன்று தமிழ்களுக்கு வேந்தராக கருதப்படும் அவர் தமிழ் மொழிக்கு ஆற்றி இருக்கும் தொண்டை ஃபெர்னினான்ந்த் தெ சஸூரோடும் , க்ளோத் லெவி ஸ்த்ராஸோடும் மட்டுமே ஒப்பிட முடியும்” என ஆரம்பித்து..


”அப்போது முத்தமிழ் அறிஞர் செய்த ஒரு காரியத்தை நெல்ஸன் மண்டேலா கூட யோசித்து பார்த்து இருக்க மாட்டார் ” என்றும்


“ அப்பாவித் தமிழ்ர்கள் மேல் ராணுவத்தாக்குதல் தொடர்ந்தது. இது பற்றி முத்தமிழ் அறிஞரிடம் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் சொன்ன பதிலில்தான் நீங்கள் அவர் தமிழ் அறிவை புரிந்து கொள்ள வேண்டும் .அவர் சொன்னார் “ மழை விட்டும் , தூவானம் விடவில்லை .


இப்பேர்பட்ட கீர்த்தியை கொண்ட முத்தமிழ் அறிஞருக்கும், கவிச்சக்கரவர்த்திக்கும் இடையேதான் இந்த ஆண்டின் பாரதிய ஞான பீட பரிசுக்கு போட்டி. உண்மையில் இதை நீங்கள் பாப்லோ நெரூதாவுக்கும் க்ளோத் லெவி ஸ்த்ராஸுக்கும் இடையேயான போட்டியாகவே எடுத்து கொள்ள வேண்டும் .


இத்தகைய பின் நவீனத்துவ காமெடி நாடக சூழலில் “

என்று இரண்டு பக்கங்க்ளுக்கு பகடி என்றால் என்ன பாடம் எடுத்திருக்கிறார் சாரு.

இதை டைப் செய்யும்போது கூட என்னால் சிரிப்பை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை.


 நடிகர்  கமல் ஹாசனை ஆரம்பத்திலேயே கிண்டல் செய்து முடித்து விடுகிறார்.

சொய்ங் வாத்தியார், நிதானமில்லாமல் தண்ணி அடித்து விட்டு மணலில் கவிழ்ந்து கொள்ளும் ஞானம், கன்னமிட்டு என்று சொல்லி குழப்பும் விலை மாது, நாவலில் கலக்கும் கொக்கரக்கோவுக்கே பெப்பே காட்டும் சூப்பர் கொக்கரக்கோ, கொக்கரக்கோ கொடுக்கும் வினோத தண்டனை,  BJ என்ற குட்மார்னிங் மெசேஜ்,  “ பாக்க முடியுது...     முடியுது.. தூக்க முடியலயே என்ற அங்கலாய்ப்பு , பொது இடத்தில் உள்ளாடை அணியாமல் வந்த நடிகையை தொட மறுக்கும் பக்கிரி சாமி  , முல்லா கதை , அரசர்- ஆடு மேய்ப்பவன் கதை , உறங்காவில்லி, கருவூரார், தந்தைக்கு எழுதும் ஆபாச கடிதம்

என ரகளை செய்து இருக்கிறார் சாரு.

சீரோ டிகிரியில் பயன்படுத்திய அவரது மேஜிக் எழுத்தை நாம் காணும் இடம் ஓன்று வருகிறது. அப்பப்பா. கிளாஸ்.

சதிப்பின்னலுக்குள் உதயாவை சிக்க வைக்கும் இடமும் , புராண சம்பவமும் இணைந்து ஓர் இடம் வரும். படிக்கும்போது வித்தியாசமான உணர்வை தரும். நாவலின் முக்கியமான் இடங்களில் ஒன்று இந்த பகுதி.

திவாகர், பெரியார் படத்தை வைத்து இருக்கும் குருசாமி, நாய் கலவியை விடியோ எடுப்பவன் ( என் எடுக்க வேடனும் என்பதற்கு காரணம் இருக்கிறது , சிவா, கருவூரார் என ஒவ்வொரு கேரகடரும் நம் கண் முன் நடமாடுவது அவரின் எழுத்துக்கு வெற்றி



இதை பாருங்கள்

மது பான விருந்தின்போது ஒரு நண்பர் போர்ட்டிகோவிலேயே மூத்திரம் போனார். போதையாம். என்னங்கடா இது ? அதற்கு அட்டகாசமான பின் நவீனத்துவ விளக்கம் வேறு கொடுத்தார், அவர் அறையில் கிச்சன் , ஹால் , டாய்லெட் எல்லாம் அருகருகில் இருக்குமாம் . அந்த பழக்கத்தில் போய் விட்டாராம்.

சீரியசான ஒரு கதைக்களனை எடுத்து கொண்டு , பக்கத்துக்கு பக்கம் ரகளை செய்துள்ளார் சாரு.

அஞ்சலியின் கதை மனதை உருக்குகிறது.

வழக்கமாக , கதாசிரியர்கள் அஞ்சலியின் பார்வையில் இருந்தேதான் அனைத்தையும் பார்ப்பார்கள். ஆனால் , அஞ்சலி அதுவரை சொன்ன சம்பவங்களை , கொக்கரக்கோ தன் பாணியில் கிளைமேக்ஸில் சொல்லும் போது ஒட்டு மொத்தமாக வேறொரு பார்வை நமக்கு கிடைக்கிறது. ( மொத்தம் ஐந்து கிளைமேக்ஸ் )

ஆனால் யார் சொல்வது சரியான பார்வை என கதாசிரியர் எந்த முடிவையும் நம் மேல் திணிக்கவில்லை.

ஒரு சம்பவம் நடக்கும்போதே இன்னொரு கோணத்தையும் சொல்லி , காலம் வெளி தர்க்கம் என அனைத்தையும் கடந்து செல்கிறது நாவல்.

உதாரணமாக அய்யப்பன் அருளால் ஒரு மாபெரும் அதிசயம் நிகழ்கிறது. ஆனால் அதே அய்யப்பன் கோயிலில் விபத்தும் நடக்கிறது. இரண்டையும் வெளிப்படையாக சொல்வது சூப்பர்.

அதே போல, சிலர் செய்த தவ்றுகளுக்கு பாம்பு தகுந்த பாடம் புகட்டுகிறது. ஆனால் இன்னொரு பகுதியில் எந்த தவறுமே செய்யாமல் பலர் துன்புறுகிறார்கள்.

சிவா குறித்து உதயா சொன்னது அனைத்தும் பொய் என கொக்கரக்கோ சொல்லும்போது, நாவலின் முழு வீச்சு புரிகிறது..

பக்கிரிசாமி எனும் ஆவி சொல்லும் கதை , கேசவன் எனும் யானையின் கதை என எத்தனை முறை படித்தாலும் திகட்டாத எண்ணற்ற விஷயங்கள் நாவலில் புதைந்துள்ளன.

*******************************************************************


சரி..எனக்கு பிடித்த சில வரிகள்



  • அங்கே தத்துவவாதி என்றால் மிஷல் ஃபூக்கோ. இங்கே கமல்ஹாசன்,.காரணம் அவர்தான் சினிமாவில் நிறைய தத்துவங்கள் உதிர்க்கிறார். 
  •  நீ பேண்டீஸ் போடு , போடாமல் இரு , அது உன் இஷ்டம், ஆனால் என் கோபம் என்னவென்றால்....
  • இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி , சஞ்சய் காந்தி ஆவிகள் இங்குதான் அலைகின்றன. ஆனால் எனக்குதான் அவர்களை சந்திக்க ஆர்வம் இல்லை. எங்கள் கட்சியை ஒழித்து கட்டிய கட்சியை சேர்ந்த ஆவிகள் ஆயிற்றே
  • முன் பின் தெரியாத ஒரு பெண்ணுடன் ( டபுள் மீனிங்தான் )எப்படி சாட் செய்ய வேண்டும் 
  • கார்னிவலை எங்க ஊர்ல நடத்துங்க, எங்க ஊர்ல நடத்துங்க என சில வாச்கர்கள் யோசனை கூறினர். சரி நீங்க பொறுப்பு எடுத்து செய்ங்க என்றதும் அந்த பேச்சு நின்ற்து
  • சிவாஜியின் காதலிகள் அவருக்கு துரோகம் செய்து விட்டு, இன்னொருவரை கல்யாணம் செய்து கொள்ளும்போது, அந்த திருமணத்தில் பியானோ வாசிப்பார் சிவாஜி.அட அடா.. அப்படி ஒரு நடிப்பை மார்லன் பிராண்டோவால் கூட நடிக்க முடியாது
  • துறவை துறவுக்காக விரும்பி ஏற்பது வேறு. ஏதோ ஒன்றை வெறுத்து போய் இதை தேர்ந்தெடுப்பது வேறு
  •  நானும் வாயே திறக்காமல் அழுத்தமாக இருக்கிறேன் ( என்னது . வாயே திறக்க மாட்டீர்களா - அடிப்பாவிகளா ! - கொக்கரக்கோ ) இந்த கொக்கரக்கோதான் நாவலின் ஹீரோ. இது போல அடிக்கடி கமெண்ட் கொடுப்பார்
  • கலவி என்பது சிறிய மரணம் ( la petit mort )
  • "  நான் கடவுளை நம்புபவன். நம்பாதவன் மாதிரி நடிக்கிறேன். இல்லாவிட்டால் இந்தியாவில் எழுத்தாளனாக ஜீவிக்க முடியாது “
  • நம்முடைய மனதையும் , குணாம்சத்தையும், சிந்தனை போக்கையும் நிர்ணயிப்பதில் நாசிக்கு பெரும் பங்கு இருக்கிறது
  • எத்தனையோ தீர்த்தங்களை கண்டு வெற்றி கொண்ட கொக்க்ரக்கோவுக்கு, தன் கையில் இருக்கும் தக்கினியூண்டு தீர்த்தத்தை என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை

*********************************************

பிளஸ் 

  • துள்ளல் நடை
  • புதுமையான வடிவம்
  • சமகால பிரச்சினையை அலசுவது
  • ஏராளமான தகவல்கள்
  • வாசகனை யோசிக்க வைப்பது
  • நகைச்சுவையின் உச்சத்தை தொட்டு இருப்பது
மைனஸ்

  • ஃபிரெஞ்ச் கவிதைகள் வரும் இடங்கள் கதை வேகத்தை தடுக்கின்றன ( என் போன்ற தற்குறிகளுக்கு தமிழைத்தவிர வேறு ஏதும் தெரியாது )

  • சாட் விவகாரத்தில் , கதானாயகனை சிக்க வைக்கும் பெண்ணின் மோட்டிவ் குறித்து சரி வர விளக்கவில்லை. அந்த பெண்ணுக்கும் , கதானாயகனுக்கும் முன் விரோதம் இல்லை. யாரோ தூண்டி விட்டு தான் இது நடந்து இருக்கும். அந்த சதிகாரன் யார் என்பது விளக்கப்படவில்லை

***********************************************

வெர்டிக்ட் 

 தமிழ் வாசிக்க தெரிந்த ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய  நாவல் ( குழந்தைகள் படிக்க கூடாது )

எக்சைல்- குறி தவறாத மிஸைல் 

Saturday, December 10, 2011

சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நிற்குமா? கவிஞர் செய்த காமெடி

அவர் ஓர் இலக்கியவியாதி .. மன்னிக்கவும் ..இலக்கியவாதி..

தானே சில கவிதைகள் எழுதி தானே படித்து மகிழ்ந்து வந்தார்.
சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையாக ,  புகழ் பெற்ற எழுத்தாளர் ஒருவர் இவர் கவிதைகளை பற்றி எழுதவே பரவலான அறிமுகம் பெற்றார்.

இந்த நிலையில் தானே ஒரு பத்திரிக்கை ஆரம்பித்தால் நிறைய கவிதைகள் எழுதலாமே என தோன்றியது, ஆனால் அதற்கு காசு வேண்டுமே?

எனவே குறுக்கு புத்தியுடன் ஒரு திட்டம் வகுத்தார்.

தான் வேலை செய்து வந்த பத்திரிக்கையின் ரகசியங்களை , அரசியல்வாதி ஒருவருக்கு தெரிவிக்கும் ஒற்றராக மாறினார். கை நிறைய காசு பார்த்தார்.

அந்த பத்திரிகையில் இருந்து கொண்டே , புது பத்திரிக்கையை வளர்க்கும் துரோகத்தில் ஈடுபடலானார்.

காலப்போக்கில் , அந்த பத்திரிக்கையினர் சுதாரித்து கொண்டு இவரை வெளியே அனுப்பினர்.

அதன் பின் சொந்த பத்திரிக்கையில் முழு கவனம் செலுத்தினார். ஆனாலும் பத்திரிகை விற்கவில்லை..

இவரது நண்பர் ஒருவர், அபாரமான எழுத்தாற்றல் மிக்கவர்.
இவர் நிலையை கண்டு பரிதாபபட்டு, காசு  வாங்காமல் பல்வேறு கட்டுரைகள் எழுதி கொடுத்தார்.

இந்த உத்வியால் பத்திரிகை வளர தொடங்கியது.

ஆனால் இன்னொருவரால் தான் வளர்ந்தது ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கவே , அந்த எழுத்தாளரை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இந்த துரோகத்தை எதிர்பார்க்காத எழுத்தாளர் அந்த நட்பை முறித்து கொண்டார்.

இதெல்லாம் பழைய கதை.

சமீபத்தில் இன்னொரு காமெடி அரங்கேறியது.

ஒரு  நிகழ்ச்சிக்கு அந்த கவிஞர் அழைக்கப்பட்டார்.

அவர் தானும் போகாமல், அந்த நிகழ்ச்சிக்கு செல்ல இருந்த இன்னொரு எழுத்தாளரையும் தடுத்து விட்டார்.

ஆனாலும் அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.

சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடும் என கணக்கு போட்ட அந்த கவிஞரின் இந்த செயல்தான், இலக்கிய வட்டராங்ககளில் இப்போதைய காமெடி .


Thursday, December 8, 2011

தர்க்கா, இறை நேசர்கள் , மகான்களுக்கு சக்தி உண்டா? - இஸ்லாம் என்ன சொல்கிறது?

இஸ்லாம் குறித்து சில தகவல்களை பார்த்தோம்..

சில கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டு , முக்கியமான சில விஷயங்களை விவாதிக்க இருக்கிறோம்...

இவை எல்லாம் என் முடிவான கருத்துக்கள் அன்று, என் தேடலில், வாசிப்பில் இருந்து புரிந்து கொண்டவை மட்டுமே.

தகவல் பிழையோ , சொற் பிழையோ இருந்தால் சொல்லுங்கள்.. திருத்தி கொள்கிறேன்.

1. இஸ்லாம் பற்றி எழுத அந்த மதத்தில் பல நிபுணர்கள் இருக்கிறார்களே.. நீங்களும் ஏன் இஸ்லாம் குறித்து எழுதுகிறீர்கள்? சீக்கிய, புத்த மதங்கள் பற்றி எழுத வேண்டியதுதானே ?


 நான் மத அடிப்படையில் எழுதவில்லை.. இஸ்லாமிய நூல்கள் படித்த போது எனக்கு ஏற்பட்ட பிரமிப்பை பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவே. இதன் மூலம் எழும் விவாதங்கள் மூலம் என வாசிப்பை மேலும் அதிகப்படுத்தி கொள்கிறேன்.


2 தர்ககா வழிபாட்டை சில முஸ்லீம்கள் ஏற்கிறார்கள்.. சிலர் ஏற்பதில்லை.. உங்கள் கருத்து என்ன?

நான் படித்ததில் இருந்து புரிந்து கொண்டது, மகான்களுக்கு சில சக்திகள் உள்ளன என்பதை இஸ்லாம் ஏற்கிறது. அவர்களை மதிக்கவும் சொல்கிறது. ஆனால் இப்படி மதிப்பதை, சிலர் இணை வைப்பதாக நினைத்து எதிர்க்கிறார்கள்..

இடல் சரியில்லை என மருத்துவமனை போகிறோம், அதற்காக , இறைவனை நம்பாமல் டாக்டரை  நம்புகிறோம் என சொல்ல முடியுமா?

3 அதெல்லாம் இருக்கட்டும். அடக்கஸ்தலதுக்கு மதிப்பு உண்டா இல்லையா?


நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தமது தாயாரில் அடக்கத் தலத்தை சியாரத் செய்த போது அழுதார்கள். அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அபோது அவர்கள் என் தாயாடுக்காக பாவ மன்னிப்பு தேட நான் என் இறைவனிடம் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. என் தாயாரின் அடக்கத்தலத்தை சியாரத் செய்ய் அனுமதி கேட்டேன். அதற்கு அல்லாஹ் அனுமதித்தான். எனவே நீங்களும் கப்ரை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனின் அது மரணத்தை நினைவுபடுத்தும் என்று கூறினார்கள்.


4 மகான்களாக இருந்தாலும் , சாதாரணர்களாக இருந்தாலும் இறப்பு அனைவருக்கும் பொதுதானே ? 


குர் ஆன் அப்படி போதிக்கவில்லை 


அல்லாஹ்வுடைய பாதையில் வெட்டப்பட்டவர்களை மவுத்தானவர்களென்று சொல்லாதீர்கள். அவர்கள் ஹயாத்தையுடையவர்கள். ஆனால், அறியமாட்டீர்கள்" (2:154)


ஆண்டவனுடைய பாதையில் வெட்டப்பட்டவர்களை மரணித்தவர்கள் என்று நினைக்கவும் வேண்டாம். ஆனால் அவர்கள் ஜீவனுள்ளவர்கள். ஆண்டவன் பக்கமிருந்து ரிஸ்கை கொடுக்கப் படுகிறார்கள், ஆனந்தமாக இருக்கிறார்கள் (3:169,170)


5 சரி.. அவர்கள் இறந்தாலும் உயிர்ப்புடன் இருப்பதாகவே வைத்து கொள்வோம். என் கேள்வி என்னவென்றால், மகான்களுக்கு சக்தி உண்டா? 




ஸஹீஹுல் புஹாரியில் குறிப்பிடப்பட்டுள்ளது: உமர் இப்னு கத்தாப் அவர்களது காலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்ட போது, அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்கள் மூலம் மழை தேடிப் பிரார்த்தித்துள்ளார்கள். யாஅல்லாஹ்! நாங்கள் உனது நபியின் பொருட்டினால் தண்ணீர் வேண்டிய போதெல்லாம் நீ எமக்கு மழையைத் தருவித்தாய். இப்போது அந்த நபியினது பெரிய தந்தையின் பொருட்டினால் கேட்கின்றோம். எமக்கு மழையை அருள்வாயாக|| இப்பிரார்த்தனையின் பின் அவர்கள் மீது அல்லாஹ்வினால் மழை பொழியப்பட்டது. 




நிச்சயமாக பூமியில் உலா வந்து கொண்டிருக்கும் சில மலக்குகள் அல்லாஹ்வுக்கு உள்ளனர். அவர்கள் எனது உம்மத்துகளிடமிருந்து எனக்கு ஸலவாத்தைச் சேர்ப்பித்துக் கொண்டிருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறி: இப்னு மஸ்ஊத்(ரலி) நூல்: இமாம் நஸயீ(ரஹ்), இமாம் தாரமீ(ரஹ்))




ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

போர் நடக்கவிருந்தபோது என்னுடைய தந்தை அன்றிரவு என்னை அழைத்து, ‘நபி(ஸல்) அவர்களின் சகாக்களில் (நாளை போரில்) முதலில் நானே கொல்லப்படுவேன் எனக் கருதுகிறேன். மேலும் எனக்குப் பின் நான்விட்டுச் செல்பவர்களில் நபி(ஸல்) அவர்களைத் தவிர மற்றவர்களில் உன்னைத் தவிர வேறு யாரையும் நான் மதிப்பிற்குரியவராகக் கருதவில்லை. என் மீது கடன் உள்ளது. அதை நீ அடைப்பதுடன் உன்னுடைய சகோதரிகளிடம் நல்ல முறையில் நடந்து கொள்” என்றார். மறுநாள் (போரில்) அவர்தான் முதலில் கொல்லப்பட்டார். அவருடன் இன்னொருவரும் அடக்கம் செய்யப்பட்டார். இன்னொருவருடன் அவரை கப்ரில்விட்டுவைப்பதை என்னுடைய மனம் விரும்பவில்லை. எனவே, (அடக்கப்பட்ட) ஆறு மாதங்களுக்குப் பின்பு அவரின் உடலை நான் கப்ரிலிருந்து வெளியிலெடுத்தேன். அப்போது அன்றுதான் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டவர் போன்று அவரின் காதைத் தவிர உடம்பு அப்படியே இருந்தது. 

(இமாம் புகாரி(ரஹ்))




6 தர்க்கா கட்டுவது சரியா தவறா? 


ஆதாரத்தை பாருங்கள் 




இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றிய (விஷயத்)தை வெளியாக்கினோம்; (அப்பட்டணவாசிகளோ) "இவர்கள் யார் என்பதை பற்றி தர்க்கித்துக் கொண்டதை (நபியே! நினைவு கூறும்) "இவர்கள் (இருந்த இடத்தின்) மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை(ப் பற்றி) இறைவனே நன்கறிவான் என்றனர்; இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்; "நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்" என்று கூறினார்கள். (18:21).

அல்ஃகப் மஜ்ஜித் என்னும் இடத்தில் நபிமார்களின் 70 கப்ருக்கள் இருந்தன என நபி(ஸல்) அவர்கள் கூறினதாக இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,

இமாம் ஹைதமி(ரஹ்), இமாம் பஜ்ஜார்(ரஹ்)

Wednesday, December 7, 2011

சாருவின் எக்ஸைல் வெளியீட்டு விழா சுவாரஸ்யங்கள்



ரபரப்பாக எக்ஸைல் வெளியீட்டு விழா முடிந்தாலும், அதன் தாக்கம் முடியவில்லை. நாவலை இப்போதுதான் ஒவ்வொருவராக படித்து முடித்து கருத்துக்கள் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.

நாவல் குறித்த என் கருத்து இரண்டு நாளில் வெளியிடப்படும்.

அல்ட்டிமேட் ரைட்டர் சாருவின் புத்தக விழா அமர்க்களமாக  நடந்து முடிந்தது. 

சொற்பொழிவுகளின் முழு ரிப்போர்ட் ஏன் வெளிடவில்லை என பலர் என்னிடம் உரிமையுடன் கேட்ட்னர்.

நாளை வீடியோ தொகுப்பு வெளியாக இருக்கிறது. எனவே வார்த்தைக்கு வார்த்தை ரிப்போர்டிங் செய்ய விரும்பவில்லை.

ஆனால் வீடியோ கண்ணில் சிக்காத சிலவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..

  • வாலியும், இந்திரா பார்த்த சாரதியும் மேடையில் சும்மா அமர்ந்து இருந்த போது கூட , நாவலைப்பற்றி பாராட்டி தமக்குள் பேசிக்கொண்டு இருந்தனர். அருகில் இருந்தவர்களுக்கு அது தெளிவாக கேட்டது. 
  • இந்திரா பார்த்தசாரதி வெகு உற்சாகமாக நாவலை பாராட்டி பேசி அமர்ந்தார். பேசி முடித்தும் அவருக்கு திருப்தி இல்லை. ம்தன பேச அழைக்கப்பட்டு, மேடை ஏறிய பின், மதனிடம் அனுமதி கேட்டு , மேலும் கொஞ்சம் பாராட்டி பேசிவிட்டு சென்றார் இ பா
  • இவ்வளவு பெரிய கூட்டத்தில் , தன் இலக்கிய வாழ்வில் பேசியதில்லை என்றார்
  •  நான் ஞானி அருகில் அமர்ந்து இருந்தேன்.  ஓ பக்கங்களால் தான் அடையும் சிரமங்கள் சொல்லி மாளாது என சாரு நகைச்சுவையாக பேச , அதை ரசித்து சிரித்தார் ஞானி ( அது என்ன நகைச்சுவை என்பது வீடியோவில்)
  • சென்ற முறை போல பீர் அபிஷேகம் செய்யப்படவில்லை. ஜென் குருவாக  அல்ட்டிமேட் ரைட்டர் வளர்ச்சி பெற்ற நிலையில் பீர் அபிசேகம் செய்வதில் சற்று தயக்கம் இருந்தது. 
  • சில எழுத்தாளர்கள் ”சில காரணங்களால்”  வர இயலாமல் போனது நல்லதாக போயிற்று, இதனால் மதனுக்கு பேச நேரம் கிடைத்தது. சிங்கம் போல மேடை ஏறி கர்ஜித்தார். எந்த தயாரிப்பும் இல்லாமல் வந்து , அறிவார்ந்த முறையில் பேசி , அனைவர் மனதையும் கொள்ளை கொண்டார். நானும் சாருவின் வாசகன், உங்கள் சார்பாக பேசுகிறேன். என்று பேசி அனைவர் மனதிலும் இடம் பிடித்தார்
  • பிரெஞ்ச் மொழி பெயர்ப்பில் சாருவுக்கு தெரிந்த ஒரு வார்த்தை குறித்து விளக்கினார். அது என்ன என்பதை வீடியோ இணைப்பில் பாருங்கள். எனக்கும் பிரெஞ்ச் மீது காதல் ஏற்பட்டு, மூன்று மாதங்களில் பிரஞ்ச் கற்கும் புத்தகம் வாங்கி விட்டேன்

Image0626 Image0633 Image0634  Image0623 Image0624  



Tuesday, December 6, 2011

எக்சைல் நாவல் இண்டர்னேஷனல் ஸ்டாண்டர்ட்- சாரு புத்தக விழாவில் மதன் புகழாரம்

ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை கிளப்பி இருந்த இலக்கிய உலக இதயக்கனி சாருவின் எக்சைல்  நூல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

எந்த ஒரு அமைப்பின் உதவியும் இல்லாமல் , முழுக்க முழுக்க சாரு வாசகர் வட்டத்தினால் நடத்தப்பட்ட விழா என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. வாசகர் வட்டத்தினர் பம்பரமாக சுழ்ன்று வேலை பார்த்தனர். பார்க்கிங்கில் பைக் நிறுத்த இடம் இல்லாதபடி , திரளான மக்கள் விழாவிற்கு வந்து இருந்தனர்.

வழக்கமான மேடைபோல இல்லாமல் , மேடையில் மிக குறைவான பேச்சாளர்களே இருந்தனர்.

வாலிப கவிஞர் வாலி, இலக்கிய உலக பிதாமகன் இ பா மற்றும் அல்ட்டிமெட் ரைட்டர் .. மூன்றே பேர்தான் மேடையில்..

விழா அரங்கம் உற்சாகம் கொண்ட ரசிகர்களாலும் , மதன், ஞானி போன்ற அறிவார்ந்த பிரமுகர்களாலும் நிரம்பி இருந்தது.

விழாவை தொகுத்து வழங்கப்போவது யார் என்பது ஆர்வத்தை கிளப்பி இருந்தது.
ஒரு முக்கியமான நபர் விழாவை தொகுத்து வழங்கினார்.

ஆம், சாருதான் விழாவை தொகுத்து வழங்கினார்.

தன்க்கு பேச நேரம் கிடைப்பதில்லை என்பதால் இந்த பணியை ஏற்று தன் கருத்துக்களை சொல்லப்போவதாக சொன்னார்.

வாசகர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்..

வாலி பேசுகையில்..

சிலர் தேவையில்லாமல் சாருவை வசை பாடுகிறார்கள்.. யார் அதிகமாக விமர்சிக்கப்படுகிறானோ அவன் அறிவாளியாகத்தான் இருக்க முடியும். மண் புழுவையும் , மரவட்டையயும் யாரும் மதிப்பதில்லை. நல்ல பாம்பைத்தான் மதிப்பார்கள். அந்த வகையில் சாரு புறக்கணிக்க முடியாதவர்.

அவர் புத்தகங்களை சமீப காலங்களத்தான் படிக்கிறேன்.

இந்த நாவல் மிக அருமையாக இருக்கிறது. நான் எழுதுவது நேக்ட் ட்ரூத் என்றால் சாரு எழுதுவது ப்ரூட்டல் ட்ரூத்,

உண்மையாக எழுதுகிறார். அருமையான நடை. சென்சார் செய்யப்படாத சினிமா பார்ப்பது போல இருக்கிறது. காமம் , காதல் இல்லாமல் மனிதன் இல்லை.. வலம்புரிஜான் ஒரு முறை சொன்னார். காமம் என்பது மூக்கு என்றால் காதல் என்பது மூக்குத்தி.

 நாவலைப் பற்றி பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என சிலர் நினைக்கலாம். எனக்கு நாவல், சிறுகதைகள் பற்றி நன்கு தெரியும் . நான் சிறுகதை எழுத்தாளகத்தான் இலக்கிய உலகுக்கு வந்தேன்.

இவ்வாறு அவர் பேசினார்..

இ பா பேசுகையில்,  செக்ஸ் எனப்து ஆபாசம் இல்லை. நம் இந்திய கலாச்சாரத்தில் இதை  வெளிப்படையாக பேசி இருக்கிறார்கள். ஆங்கிலேயர் பாதிப்ப்பில்தான் செக்ஸ் என்பது பாவகரமானது என்ற எண்ணம் தோன்றியது.

அந்த கால பள்ளிக்கூட புத்தகங்களில்., சில தமிழ் செய்யுள்களின் சில வரிகள் மறைக்க்கப்பட்டு இருக்கும், என்ன என்று பார்த்தால் முலை என வரும் இடங்களை புள்ளி வைத்து அழித்து இருப்பார்கள்.
இப்படி அழிப்பதால்தான், மாணவர்களுக்கு அது என்ன என்ற ஆர்வம் ஏற்பட்டு ஆராய்வார்கள்.

இன்று இது மாறி இருக்கிறது என நினைக்கிறேன்

இந்த் நாவலில் சாரு முக்கியமான இடங்களை தொட்டு இருக்கிறார்.

நானும் வாலியும் ராமாயணம் குறித்து பேசிக்கொண்டு இருந்தோம். ராவனன் எத்தனையோ பெண்களுடன் பழகி இருக்கிறான். அவன் காதலில் விழுந்தது சீதையுடன் மட்டுமே..அந்த காதல் அவன் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
அதே போல, இந்த நாவலின் கதானாயகன் வீழ்ச்சிக்கும் காதல் காரணமாகிறது
இந்த நாவல் சாஃப்ட் போர்னோவா என சிலர் கேட்டார்கள். இது ஹார்ட் போர்னோ. செக்சை வெறுப்பவர்கள் இதை படிக்க வேண்டாம். ஹார்ட் அட்டாக் வந்து விடக்கூடும்


இவ்வாறு பேசினார்..

மதன் பார்வையாளராகத்தான் வந்து இருந்தார். சாருவின் வேண்டுகோளுக்கு இணங்கி பேசினார்.

நான் சர்வதேச புத்தகங்கள் படித்து இருக்கிறேன். அந்த வகையில் சொல்கிறேன். இது சர்வதேச தரமிக்க நாவல். இது சாருவின் கிரேட் அசீவ்மெண்ட்.  புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். நிறுத்த முடியவில்லை. சிறுனீர் கழிக்க கூட எழ மனமில்லாமல் படித்தேன்.

கடைசியாக சாரு பேசினார்.

வாசகர்களின் பெயர்களை நினைவு வைத்து இருந்து குறிப்பிட்டார். சில கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அன்றாட செயல்களில் ஒழுங்காக இல்லாமல் , உயர்ந்த விஷயங்களைப்பற்றி பேசுவது வீண் வேலை என்பதில்தான் , விழா ஆரம்பத்தில் பேச்சை அரம்பித்தார். அதே டாபிக்கில்தான் பேச்சை முடித்தார்..

சினிம பாடல், கோட் சூட் ஆடை என மரபான விஷ்யங்களில் இருந்து விலகியது ஏன் விளக்கம் அளித்தார்.

மொத்ததில் ஜாலியான மன நிலையில் நடந்த அறிவு பூர்வமான நிகழ்ச்சி இது.

*************************


சாரு பேச்சு குறித்த விபரங்கள், எக்ஸ்க்ளூசிவ் படங்கள் - அடுத்த இடுகையில்

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா