Saturday, June 9, 2018
காலா - இந்துத்துவ தலித் விரோத சக்திகளுக்கு காலன்
காலாவில் ஒரு காட்சி ... தன் முன்னாள் காதலியை சந்திக்க யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அவள் வீட்டுக்கு செல்கிறார் ரஜினி.. அதை தெரிந்து கொண்ட வில்லன் கோஷ்டி அவரை சுற்றி வளைக்கிறது.
தன்னந்தனியாக மாட்டிக்கொள்ளும் ரஜினி வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு சண்டைக்கு ஆயத்தமாகிறார்...
காலம் காலமாக நாம் பார்த்து வந்த ஹீரோயிச சண்டையை ( ஒரு வித அலுப்புடன் ) பார்க்க ஆயத்தமாகிறோம்... ஒரே ஆள் நூறு பேரை சமாளிக்கும் சண்டையை எத்தனை முறை பார்த்திருப்போம்...
ஆனால் அங்குதான் ஒரு இனிய ஆச்சர்யம். அந்த டிபிக்கல் சண்டை நடப்பதில்லை... ரஜினியின் மகன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் புயலாக புறப்பட்டு வந்து எதிரிகளை பந்தாடுகிறார்கள் . அது இயல்பாக இருந்தாலும் , யாருக்கும் தெரியாமல் ரஜினி வந்தது அவர்களுக்கு எப்படி தெரியவந்தது ?
அதுதான் ஒரு சிறுகதையாக மிளிர்கிறது.. ஒரு பெண்ணால் , அவள் காதலால் ரஜினி காப்பாற்றப்படுகிறார் என்பது ஒரு சின்ன குறும்படமாக அட சொல்ல வைக்கிறது... கபாலியில் மகளால் காப்பாற்றப்படுவதை விட இந்த காட்சிக்கோர்வை மிக பிரமாதம்.
இப்படி ஒரு ஒவ்வொரு காட்சியாக ரசிக்க வைக்கிறது காலா
அறிமுகப்பாடல் , ரசிகர்களை பார்த்து கும்பிட்ட்ட படி கண் சிமிட்டியபடி அறிமுக ஆவது பாசிட்டிவான ஒரு வசனததுடன் அறிமுகம் ஆவது போன்ற காட்சிகள் ரஜினியால் பிரபலமடைந்து இன்று போதும் போதும் என்ற அளவுக்கு எல்லா படங்களிலும் இடம் பெற்று வருகின்றன..
\
தக்காளி போதும்டா .. திருந்துங்கடா என சொல்லும் விதத்தில் சற்றும் எதிர்பாராத ஒரு அறிமுக காட்சி ., செம தில் ,திமிர் அல்லது தன்னம்பிக்கை தேவைப்படும் காட்சி..
\
வில்லன்களால் சூழப்பட்டத்தை குறிப்பால் அறிந்து அவரை காப்பாற்ற முயலும் பைக் இளைஞன் , ஒன் லைனர்களால் திரையரங்கை அதிரச்செய்யும் சமுத்திர கனி , எதிர் கருத்தை துணிச்சலாக முன் வைக்கும் இளைய மகன் , தந்தையை மிஞ்சும் மூத்த மகன் , போராளி மருமகள் , கொல்ல விரும்பும் எதிரி என்றாலும் அவனை வீட்டுக்குள் அனுமதிக்க தன் அறம் சார்ந்து ஒரு காரணத்தை சொல்லும் வில்லன் , மனைவி , காதலி என ஒவ்வொரு பாத்திரமுமே செதுக்கி உருவாக்கப்பட்டுள்ளன...
இசை , ஒளிப்பதிவு , எடிட்டிங் என ஒவ்வொருவரும் மிகச்சிறப்ப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்..
படம் என்ற வித்த்தில் கிளாஸ்.. சரி ? உள்ளட்டக்கம்?
ரஜினி இந்து மத கடவுளை அவமதித்து விட்டார் என ஒரு இந்துத்துவ நாளிதழ் புலம்பி இருந்தது.//
அற்ப மனிதனின் கடவுளும் அற்பமாகவே இருக்கும் என்பார் ஜே கிருஷ்ண மூர்த்தி... மகாத்மா காந்தி வணங்கும் ராமனும் கந்து வட்டிக்காரன் ஒருவன் வணங்கும் ராமனும் ஒரே ராமனாக இருக்க முடியாது அல்லவா ? அந்த கந்து வட்டிக்காரன் வணங்கும் ராமன் கண்டிப்பாக அறத்தை போதிப்பவனாக இருக்க முடியாது...
இந்த படம் முழுக்க முழுக்க புத்தர் ஒரு கதாபாத்திரமாக வருகிறார்.. இதில் வரும் புத்தர் போற்றத்தக்கவர்.. ஆனால் இலங்கையில் தமிழனை கொன்று புத்த ஆலயம் கட்டினால் அதை ஏற்க முடியுமா ? இலங்கையில் தமிழ் கைதிகளை கொன்று புத்தர் சிலைக்கு படையல் வைத்த சிங்களர்களை ஏற்க முடியுமா ?
கடவுளை யார் எந்த அர்த்தத்தில் முன் வைக்கிறார்கள் என்பதே முக்கியம்..
இந்த படத்தில் வெகு தெளிவாக இதை கையாண்டு இருக்கிறார்கள்...\
ஒரு காட்சியில் பெண் போராளியை சில போலிசார் அவள் ஆடையை களைந்து மான பங்கம் ( ??? !! ) செய்கின்றனர்...
மானம் போனதும் தற்கொலை செய்யும் பெண்களை தமிழ் சினிமாக்களில் பார்த்துள்ளோம்// என்னை ஒன்னும் செய்யாதே என கெஞ்சும் பெண்களை பார்த்துள்ளோம்..
இந்த போராளி வலியுடன் தன் ஆடையை நோக்கி செல்கிறாள்.. ஆடையை எடுத்துக்கொண்டு அழுது கொண்டு வீட்டுக்கு செல்லப்போகிறாள் என சராசரி ரசிகன் நினைக்கிறான்..
ஆனால் அவள் எடுப்பது ஆடையை அல்ல... எதிரிகளுக்கு பதிலடி கொடுக்கும் ஆயுதம் ஒன்றை.
ஒரு பெண்னை நிர்வாணமாகவோ அரை குறை ஆடையுடனோ பார்த்து விட்டால் அது அவள் கற்புக்குதான் இழுக்கு என இது வரை உருவாக்கப்பட்ட கற்பிதங்களை உடைத்து எறிகிறது காலா///
நாயகன் படத்தில் மும்பையில் வளர்ந்து ஆளான ஹீரோ கடைசி வரை மொழி பெயர்ப்பாளர் துணையுடன் தான் பேசுவார்//
இதில் நாயகன் ஹிந்தியிலும் மராட்டியிலும் புகுந்து விளையாடுகிறார்..
மக்களின் விருப்பம் முன்னோர்கள் சொல் அதுதான் என்னை வழி நடத்தும் ஆணை என கம்பீரமாக ஹிந்தியில் சொல்வது செம
பல காட்சிகளில் பாட்ஷா மற்றும் படையப்பாவை மிஞ்சிக்காட்டி இருக்கிறார் ரஞ்சித்
மரண மிரட்டல் விடுத்து விட்டு கிளம்பும் வில்லனிடம் , உன்னை நான் இன்னும் கிளம்ப சொல்லலயே என கேலியாக சொல்வதும் அதை அலட்சியம் செய்து விட்டு வில்லன் கிளம்புவதும் அதை தொடரும் காட்சியும் ரஜினி படங்களின் சிகரங்களுள் ஒன்று
ரகுவரனுக்குப்பிறகு சிறப்பான வில்லன்.. பல காட்சிகளில் ரஜினியையே மிஞ்சி இருக்கிறார்..
இப்படி ஒரு சமூக நீதிக்கான படம் இதுவரை வந்ததில்லை.. அம்பேத்கர் உள்ளிட்ட புரட்சியாளர்கள் அயோத்திதாச பண்டிதர் இரட்டைமலை சீனி வாசன் போன்ற பலர் குறித்து மற்றவர்கள் பேசி இருந்தால் டிரையாக அல்லது பிரச்சார தொனியுடன் இருந்திருக்கும்.. கமெர்ஷியலாக ஒரு கனமான விஷ்யத்தை ரஞ்சித் வெற்றி பெற்றுள்ளார்
தலித்துகளின் சோகங்களை தோல்விகளை சொன்னால் அரசியல் கட்சியினர் ரசிப்பார்கள்/.//// ஆனால் தலித்துகளை வெற்றியாளர்களாக தலைவர்களாக காட்டினால் தமிழக கட்சியினர் ரசிப்பதில்லை/// கடவுள் எதிர்ப்பை இந்த்துதுவ கட்சியினர் விரும்புவதில்லை// இந்த இரு தரப்பையும் பகைத்துக்கொண்டு படம் எடுக்க அசாத்திய துணிச்சல் தேவை
சிஸ்டம் சரியில்லை என ரஜினி சொன்னது இந்தியா முழுமைக்கானதும்தான் என தன் காசில் படம் எடுத்து சொன்ன தயாரிப்பாளர் தனுஷ் பாராட்டுக்குரியவர்////
காலா - இன்னும் பல காலம் விவாதிக்கப்பட இருக்கும் கலைப்படைப்பு
------------------------------------------------------
Friday, June 8, 2018
Friday, October 20, 2017
பெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்
ஊடகவியலாளர் , எழுத்தாளர் ,கவிஞர், தலித் செயல்பாட்டார் என பன்முக ஆளுமை கொண்டவர் திருமிகு கவிதா சொர்ணவல்லி.. அவருடன் ஓர் உரையாடல்
--------
குமரகுருபரன் அறக்கட்டளையின் விருது விழா மிகச் சிறப்பாக அமைந்தது.. அறக்கட்டளையின் அடுத்த கட்ட திட்டங்கள் என்ன ?
நன்றி அறக்கட்டளையின் பெயர் JKB Foundation. குமாரின் கல்லூரி பெயர் JKB. இளம் இலக்கியவாதிகளுக்கான குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து வழங்கப்படும்.
வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களின் குழந்தைகளுக்கான கல்வி கட்டணம் செலுத்துவது , பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு கைகொடுப்பது என்பது குமார் தொடர்ந்து மேற்கொண்டிருந்த விஷயம். அதை JKB அறக்கட்டளையும் முன்னெடுக்கும். தற்போதைக்கு மருத்துவத்திற்கு, கல்விக்கு நிதியுதவி அளித்துக்கொண்டிருக்கிறோம். என்னுடைய சொந்தப் பணத்திளிருந்தே இதையெல்லாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
ஒடுக்கப்பட்ட சாதிக் குழந்தைகளுக்கு தரமான ஆங்கிலக் கல்வி கற்பிக்க வேண்டுமென்பது என்னுடைய, JKB Foundation உறுப்பினரானவழக்கறிஞர் கிருபா முனுசாமியின் விருப்பம். அதை வெகு விரைவில் மெய்ப்படுத்துவோம்.
குமார் நடத்திக்கட்டியது போன்ற இலக்கிய கூட்டங்களை நடத்தவும், சிறந்த புத்தகங்களை JKB Foundation மூலம் பதிப்பிக்கவும் திட்டம் இருக்கிறது. கை கூடவேண்டும். பார்க்கலாம்.
பெரியாரிஸ்ட்டுகள் பலர் உண்மையான பெரியாரை பிரதிநிதித்துவம் செய்வதில்லை..இது சார்ந்த நிகழ்வுகளை நடத்துவீர்களா ?
இது போன்ற நிகழ்வுகள் நடத்துவதில் நிஜமாகவே குழப்பங்கள் இருக்கிறது. இலக்கியமோ, அரசியலோ, அறிவுத்தளத்தில் இது போன்ற கூட்டங்கள் நடத்தப்படும்போது மீண்டும் மீண்டும் அதே பத்து பேர்தான் வந்து கொண்டே இருக்கிறார்கள்.
பெண்ணியம் பேசும் கூட்டங்களுக்கு மறுபடி மறுபடி பெண்கள் வருவதில் (அதுவும் பெமினிஸ்ட் பெண்கள் வருவதில்) என்னதான் மாற்றம் நிகழ்ந்து விடப்போகிறது. ஆண்களிடம்தானே அதைப் பேச வேண்டும். அவர்களை அழைக்காத பெண்ணியக் கூட்டங்களைப் போல்தான் இங்கு இலக்கிய கூட்டங்களும், அரசியல் கூட்டங்களும் அறிவுத் தளத்தில் எடுத்துச் செல்லப்படுகின்றன என்பது என்னுடைய எண்ணம்.
இருப்பினும், இன்றைய கால கட்டத்திற்கு அதிகமும் தேவையாய் இருக்கிற சமூக நீதி, சாதி ஒழிப்பு பற்றிய கூட்டங்களை நடத்த ஆர்வத்துடனே இருக்கிறோம். குறிப்பாக சாதி ஒழிப்பு பற்றி திருமாவை பேச (ஒடுக்குமுறைக்கு எதிரான குரல் என்றாலே அது திருமாதானே) அழைக்கும் கூட்டமாக இல்லாமல், சாதி ஒழிப்பு பற்றி அன்புமணி ராமதாசின் கருத்துக்களை, சாதி ஒழிப்பிற்கான அக்கட்சியின் திட்டங்களை அறிந்து கொள்ளும் வகையிலான கூட்டங்கள் நடத்துவதே JKB Foundation-ன் எண்ணம்.
ஆனந்தக்ரிஷ்ணன் பக்ஷிராஜனையும் கருப்பு நீலகண்டனையும் வைத்து பெரியார் பற்றிய கூட்டங்களை நடத்துவதும் எங்களுடைய விருப்பம். அதை சாத்தியப்படுத்த்வோம்.
*புத்த மத தீபாவளி என சிலர் அறிமுகம் செய்வது குறித்து உங்க பார்வை ?
ஒரு தேசமோ தேசிய இனமோ வளருவதற்கு வேறு பல காரணிகளுக்கு அப்பாற்பட்டு பண்பாடு, வரலாறு இன்ன பிற தொடர்பான பொது உளவியலும் அத்தியாவசியமான ஒன்றாகும். இந்தியாவைப் பொறுத்தவரை, அது ஒரு தேசமே அல்ல. சொல்லப் போனால் வெவ்வேறு தேசிய இனங்களின் தொகுப்பே ஆகும்.
மக்கள் திரள்கள் சாதியடுக்குகளாக இருந்து வருவதால் பொது உளவியலோ பிரக்ஞையோ இருப்பதற்கு மாறாக சாதியப் பிரக்ஞையே இருந்து வருகிறது. இங்கு கொண்டாடப்படும் எந்த ஒரு பண்டிகையும், சாதி மதப் பின்புலமின்றி கொண்டாடப்படுவதில்லை.
மததுக்கென்று பல பண்டிகைகளும், சாதிக்கென்று ஏராளமான விழாக்களுமாக, கொண்டாட்டம் என்பதே மத சாதி வண்ணங்களின் தொகுப்புதான்.
“உனக்கு நீயே ஒளியாய் இரு” என்ற புத்தரின் வாசகத்தோடு தீபாவளி என்பது புத்த ஒளி திருவிழா என்று அந்த மார்க்கத்தை முன்னெடுப்பவர்கள் ஒரு கதை வடிக்கிறார்கள். மகாவீரர் வீடு பேறு அடைந்த தினம்தான் தீப ஆவலியாக கொண்டாடப்படுகிறது என்று ஒரு கதையும் சொல்லப்படுகிறது. பின், வழக்கமான நரகாசுர வதக் கதைகள். லக்ஷ்மி வீட்டிற்கு வரும் தினமாக ஒரு கதை. இப்படி எந்த வடிவாக இருந்தாலும் அதன் பின்னணியில் மார்க்கமும் மதமுமே இருக்கிறது. மதமும் மார்க்கமும் முன்னெடுக்கும் எதுவொன்றையும் நாம் நம்பத் தொடங்கினோம் என்றாலே அங்கு பகுத்தறிவு என்பது கேள்விக்குறிதானே.
தீபாவளியை ஒரு இந்து மதப் பண்டிகையாக என்னால் ஏற்க முடியாத சூழலில், அதை புத்த மார்க்க பண்டிகையாகவோ, சமண பண்டிகையாகவோ, மார்வாடிகளின் பண்டிகையாகவோ, சேட்டுகளின் பண்டிகையாகவோ எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். இதில் எல்லாம் எனக்கு எந்தவொரு பெரிய பிடிப்போ, அல்லது நம்பிக்கையோ இல்லை.
(பிற மதப் பண்டிகைகளான கிறிஸ்துமஸ், ரம்சானை மட்டும் வாழ்த்து சொல்லி கொண்டாடுகிறீர்களே என்றால்,,, ஆம். பிறப்பால் நான் ஒரு பெரும்பான்மை மதத்தை சேர்ந்தவளாக இருக்கிறேன். அந்த அடிப்படையில் அந்த மதத்தில் நிகழும் சாதிக் கொடுமைகளை என்னால் உரத்துக் கேள்வி கேள்வி கேட்க முடிகிறது. நான் பிறந்த பெரும்பான்மை மதம், தன் பாசிச கைகள் கொண்டு ஒடுக்க நினைக்கும் சிறும்பான்மை மதங்களுக்காக குரல் கொடுக்கவும், அவர்களின் நம்பிக்கைகள் சிதைக்கப்படாமல் இருக்கவும் பிற மதப் பண்டிகைகளை வரவேற்கிறேன்
*பிறப்பு சார்ந்த பெருமிதம்தான் பார்ப்பனியம் என்பது ஒரு பார்வை.. ஆனால் பெரியாரியம் பேசும் சிலர் தமது குடும்ப பெருமையை பேசுவதை அவ்வப்போது காண்கிறோம்.. உங்க கருத்து ?
கொள்கை சார்ந்த பெருமிதங்கள் இருப்பதில் தவறில்லையே ஆனால் எந்தக் கொள்கையின் அடிப்படையின் நின்று நாம் பேசுகிறோம் என்கிற விழிப்புணர்வு இல்லாமல் வெறும் “கொள்கை பெருமிதங்களை”” மட்டும் சுமப்பது பார்ப்பனியம்தான்.
“நான் பெரியாரிய குடும்பத்தை சேர்ந்தவள்/வன்”
“நான் அம்பேத்கரிஸ்ட்”
“நான் born DMK”
இப்படி வெறுமனே இந்த கொள்கைகளின் பெருமிதங்களில் நின்று பேசுவதில் என்ன ஆகப போகிறது. இந்தக் கொள்கைகளின் அடிப்படையாவது தெரிந்திருக்க வேண்டுமல்லவா ?
மணியம்மையை திருமணம் செய்தது பற்றிய இன்றளவுமாண விமர்சனத்திற்கு, இன்றைய காலகட்டத்தில் வளர்ந்த இளம் பெண்ணின் பதில் “30 வயதுடைய மணியம்மை, (பெரியார் தன்னுடைய திருமணம் குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே மணியம்மைக்கு 30 வயது என்று குறிப்பிடுகிறார்) தான் யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தேர்வு செய்வது அவருடைய அடிப்படை உரிமை. 70 வயதான ஆணை அவர் திருமணம் செய்தாலும், 20 வயதுடைய ஆணை அவர் விரும்பி இருந்தாலும், அதை அறிவுத் தளத்தில், அரசியல் தளத்தில் முதிர்ச்சியான, 30 வயதுடைய பெண்ணின் தெளிவான தீர்க்கமான முடிவாகத்தான் அதைப் பார்க்க வேண்டும்” என்பதாகத்தான் இருக்க வேண்டுமென நான் நினைக்கிறேன். அதை விடுத்து, “பெரியாரை எந்தப் பெண்தான் திருமணம் செய்து கொள்ள விரும்ப மாட்டாள்” என்பதாக மேம்போக்காக விளக்கமளித்து கடக்க கூடாது என்பது என் புரிதல்.
அண்ணலும் பெரியாரும் சமூக நீதிப் போராளிகள் என்றாலும் வழிமுறைகள் வெவ்வேறு.. ன்றைய சூழலில் யார் வழி பொருத்தமாக இருக்கும் ?
அண்ணலையும்-பெரியாரையும் எதிர் எதிர் வைப்பதை நான் எப்போதுமே ஏற்றுக்கொள்வதில்லை. என்னளவில் அதனை கடுமையாக எதிர்க்கவே செய்கிறேன். அண்ணலின் caste annihilation + பெரியாரின் social justice இரண்டும் இணைந்து முன்பெப்போதும் இல்லாத தீவிரத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.

Saturday, August 26, 2017
விளிம புக்கு அப்பால் என்றொரு சிறுகதை தொகுதி
விளிம புக்கு அப்பால் என்றொரு சிறுகதை தொகுதியை அகநாழிகை பதிப்பகம் வெளியிட்டுள்ளது... அத்தனையும் புதிய தலைமுறைகள் படைத்தவை..
புத்தகத்தின் வடிவமைப்பு ஸ்டைலிஷாக உள்ளது.. கதைகளை வரிசைப் படுததியிருப்பதும் சிறப்பு..
இந்த தொகுதியின் அனைத்து கதைகளும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு.. அவற்றில் நியூஜென் கதையாக நான் கருதுவது கவிதா சொர்ணவல்லிி யின் சிறுகதையை
அழகான ஷார்ட் பில்ம்போல கதை அமைந்துள்ளது. என்ன வகை கதை ..பிரதான பாத்திரங்கள்.. பாத்திரங்களின் தன்மை ஆகியவற்றை வெகு அழகாக ஆசிரியர் கூற்றாக சொல்லாமல் காட்சிப்பூர்மாக சின்ன சின்ன உரையாடல்களில் நினைவோடைகளில் சொல்கிறார்..
பின் நவீனத்துக்கு என ஃபார்முலா கிடையாது... இன்றைய கால கட்டமே பின் நவீனத்துவ கால கட்டம்தான்.. ஆக இன்றைய வாழ்வை ரெப்ரசன்ட் செய்தாலே அது பின் நவீனத்துவமாகி விடும்... கதாபாத்திரத்துக்கு தன் பெயரை வைப்பது , புரியாமல் எழுதுவது ஆகியவை பின் நவீனத்துவ சூத்திரங்கள் அல்ல... அப்படிப்பட்ட அமெச்சூர் வேலைகளை செய்யாமல் வெகு இயல்பான நடையில் எழுதியிருக்கிறார்

ஒரு நல்ல
காதலை சொல்லும் படத்தைப்பார்த்துவிட்டு தன் உணர்வுகளை தன் மகிழ்ச்சியை
பகிர்வதற்கு தகுந்த நபரை தேடிப்பிடித்து கால் செய்கிறாள் ஒரு பெண்...
இதுதான் ஆரம்பம்... இந்த துவக்கத்திலேயே அவளது ரசனை அவள் பகிர்வுக்கு
தகுதியான நபர் அவர்களது உறவு என்பது அழகாக எஸடாப்ளிஷ் ஆகிறது... அவன்
அவள் சொல்வதற்கு கொடுக்கும் எதிர்வினை அவளுக்கு தன் உறவினன் ஒருவனது
நினைவைத்தூண்டுகிறது.
அவன் அவனது காதல் என பயணிக்கும் கதை காதல் எவ்வளவு அழகானது... அழிக்கவே முடியாதது என்ற உணர்வை கொண்டுகிறது... நாம் அழியலாம்... காதல் நம் தந்தையர் வழியாக வெளிப்பட்டிருக்கும்... நம் மூலம் ...நம் சந்ததியினர் மூலம்... என வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.... நாம் என்பது பொருட்டே இல்லை... இன்னும் ஒரு படி மேலே போய் மனிதர் என்பதே கூட பொருட்டில்லை.. ஒரு பாலம்.. ஒரு ஆறு கூட போதும்... காதல் அவற்றின் மூலம் வெளிப்படும் என்ற விஷயம் அழகாக உள்ளுறைந்துள்ளது..
இந்த அழகான காதல் கதையில் உட்கதையாக சாதிக் கொடுமை கதாநாயகியின் நிமிர்வு ஆகியவைவெகு சிறப்பு. சில பக்கங்களில் இத்தனை விஷயங்கள் சாத்தியமாகக்காரணம் காட்சி ரீதியாக கதை சொல்லும் யுக்திதான்....
சாதிக்கொடுமை என்பது இயல்பாக கதையோட்டத்தில் அமையும் கதைகள் மூலம்தான் இவ்விஷயம் மக்களை அடையும்..இல்லையேல் நாமே எழுதி நாமே படிக்கும் புரட்சிக்கதைகளில் சேர்ந்து விடும்..
நல்ல கதை... வாழ்த்துகள் கவிதா...

Subscribe to:
Posts (Atom)