Saturday, May 29, 2010

பேசும் பேய்கள்

" பேய் எல்லாம் இல்லைன்னு சொன்ன.. கொலுசு சத்தத்தை நீயே கேளு "

உண்மைதான். மல்லி பூ வாசனையும் லேசாக வந்தது.. இருந்தாலும், என் மனம ஏற்கவில்லை. " டேய். யாரவது இந்த பக்கம் போய் இருப்பாங்க. நம்ம கவனிச்சுருக்க மாட்டோம். "

" ஏண்டா ரெண்டு பெரும் அடிசுக்றீங்க. known is drop.un known is ocean .. பேய் இருந்தாலும் இருக்கலாம்,. இல்லாமலும் இருக்கலாம். நாம இந்த கிராமத்துக்கு வந்தது, பைனல் இயர் ப்ரோஜெக்ட்டுக்காக .. முடிச்சுட்டு ஊருக்கு பொய் சேருவோம்,., பேய் இருந்தா என்ன , இல்லாட்டி என்ன " என குமார் சொன்னாலும், அங்குள்ள அமானுஷ்ய தன்மையை ஆராயும் விபரீத புத்தி எங்களை விட வில்லை.

நான், குமார் , பாலாஜி மூவரும் இங்கு வந்ததில் இருந்து, நாடு நிசியில் அலறல் கேட்பதும் , மல்லி வாசனை வீசுவதும், தொடர்ந்தன.. இது பேயின் வேலை.. என்பது பாலாஜியின் கருத்து.. ஆவி எல்லாம் இல்லை என்பது என் கட்சி.. இதை பற்றி கவலை இல்லாமல் , படிப்பை மட்டும் நேசிக்கும் குமார், ஒரு மூ
ன்றாவது அணி.
இருந்தாலும், ஊர் பெரியவர்கள் அறிவுரைப்படி, வேப்பிலையை எங்கள் அறை வாசலில் கட்டி வைத்தோம். பேய்க்கு வேப்பிலை வாசம் பிடிக்காதாம்.

******************************

" டேய்.. நாளையோடு ப்ராஜெக்ட் முடியுது..ஊருக்கு போகனும்.. அதுக்கு முன்னாடி, கிராமத்துக்கு வெளியில் இருக்ற , பேய் பங்களாவுக்கு ஒரு முறை போய் பார்க்கலாம்டா.. எதோ ஒரு லக்ல , புதையல் ரகசியம் எதாவது பேய் சொன்னாலும் சொல்லலலாம்... அப்படி இல்லேன்னாலும், பேயை பார்த்த ஒரு திரில் கிடைக்கும்... என்ன சொல்றீங்க "

பாலாஜியின் கருத்து எனக்கு ஓகே தான். பேய் இல்லை என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு... தங்கி இருந்த அறை ஓனர் எச்சரித்தார்.. "தம்பிகளா.. அந்த பங்களாவுல, ஒரு பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டு பேயா சுத்துறா... அங்கே யாரும் போவது இல்லை... "

" இதுல எல்லாம் நம்பிக்கை இல்லை சார்.. ஒன்னும் ஆகாது " என்றேன்

" நல்ல பசங்கள இருக்கீங்க.. சரி போங்க... அங்கே இருக்கும் அறை வாசல்ல , வேப்பிலை கட்டிட்டு தூங்குங்க.. எக்காரணம் கொண்டும் இரவு நேரத்துல வெளியே வராதீங்க.. உங்களை வெளியே வர வைக்க பேய் பல தந்திரங்கள் செய்யும் .... ஏமாந்துராதீங்க "

" சார்.. ஒரே ஒரு வாட்டி மட்டும் வெளியே வந்து அந்த பேயை பார்த்துக்குறேனே " பாலாஜி கெஞ்சினான்..

" சரி, ஒரு தாயத்து தர்றேன். கையில் கட்டிக்கோங்க.. அனால், ஒரு முறை பேய் பார்வை பட்டதும், இதன் சக்தி போயிரும்... மறு முறை பார்க்க டிரை செஞ்சா , ஆபத்து "
******************************

பங்களா, பாழடைந்து இருந்தது.. வௌவால்கள் பறந்தன.. இருட்டுவதற்குள், சாப்பிட்டு விட்டு, அறை க்கு சென்றோம்.

நானும் பாலாஜியும்  ஓர் அறை.. குமார் இன்னொரு அறை... படிக்க போகிறானாம். தனி அறை கேட்டான்.

ஓகே டா மச்சான் ..கதவை திறக்காதே... மார்னிங் பார்ப்போம்.. குட் நைட்

இருவரும் அறை கதவை சாத்தி படுத்தோம்..

பேய் அறிகுறி எதுவும் இல்லை... " என்னடா..பேய் தூங்க போயிருச்சா " கிண்டல் அடித்தேன்..

திடீரென வீட்டு ஓனர் கதவை தட்டினார்.. " தம்பி , எங்க அப்பா ஊர்ல இருந்து வந்து இருக்காரு, போன்ல கூப்பிட முயற்சி செஞ்சேன்.உங்க செல் போன்ல சிக்னல் இல்லை..அதன் பேச முடியல..வெளிய வாங்க "

" டேய் ..என்னனு போய் [பாரு " பாலாஜியை அனுப்பினேன்...

அவன் சென்றான்..

அலறலுடன் கதவை அடைத்து உள்ளே வந்தான்..

" என்னடா ஆச்சு ? "

" வெளியே ஓனர் இல்லைடா... ஒரு எலும்பு கூடு சிரிச்சுக்கிட்டு இருந்துச்சு.. தாயத்தை பார்த்து திருப்பி போய்டுச்சு "

நான் சிரித்தேன்.. "நல்ல கற்பனை ... தூங்குடா நாயே " படுத்தேன்..

மீண்டும் தட்டப்பட்டது... குமார் குரல்... " டேய்... சீக்கிரம் கதவை திற"

பாலாஜி நடுங்கினான்.. இது பேய்தான்...

நான் துணிந்து திறந்தேன்.. குமார் நடுக்கத்துடன் நின்றான்..  நடுக்கமாக சொன்னான் “ டேய், நீ கதவை தட்டுன மாதிரி இருந்துச்சு.. வெளியே வந்தா, எலும்பு கூடு... இனிமே , யாரும் வெளியே வர கூடாது... உள்ளே போ” சொல்லி விட்டு தன் அறைக்கு ஓடினான்..

படிக்கிற பையன்... பயத்திலையும் தனி ரூம்... ஹ்ம்ம்..

மீண்டும் குமார் சத்தம்.. டேய்..ஆபத்து... சீக்கிரம்  வெளியே வாங்க... ப்ளிஸ்

எழ நினைத்த என்னை, பாலாஜி தடுத்தான்...”எதுவா இருந்தாலும் காலைல பார்க்கலாம்..இது பேய் வேலை தான்...”

குமார் சத்தம் மெல்ல அடங்கியது.

*************

காலை... குமார் மூளை சிதறி இறந்து கிடந்தான்... யாரோ அவனை அடித்து அவன் பணத்தை திருடிவிட்டனர் என்றனர் சிலர்..

பேயின் வேலை என்றனர் சிலர்..

ஒரு திருடனுடன், போராடும போது நண்பன் உதவிக்கு போராடும்போது, காப்பாற்ற செல்லாமல் , அறையில் தூங்கினேனா.. அல்லது பேயின் வேலையா./..

பேயின் வேலையாக இருந்தால்தான், என் மனசாட்சி என்னை மன்னிக்கும்..

அன்றிலிருந்து பேயை நம்ப ஆரம்பித்தேன் அல்லது நம்புவதாக காட்டிக்கொள்ள ஆரம்பித்தேன்

4 comments:

  1. வித்தியாசமான கதை... நல்லா இருக்கு.

    ReplyDelete
  2. wow.. நல்லா இருந்ததுங்க..

    உயிர் பயம் உயிர் நண்பனையும் இழக்க வைக்கிறது.. யதார்த்தம்..

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா