Sunday, October 30, 2011

கத்தியின்றி ரத்தமின்றி ( சவால் சிறுகதை 2011 )                          ன் பெயர் ரா. . .  நான்  ** யில்  இருக்கும் வடக்கு வீதியில் வசித்து வரும் அழகான 17 வயது வாலிபன்.  நான் சாலையில் செல்லும் போது எல்லா பெண்களும் என்னை சைட்  அடிப்பார்கள்.  நானும்  ..  ஆனால் எந்த பெண்ணுடனும் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே சும்மா சைட் அடிப்பதும்  , சில நேரங்களில்..  


    இந்த நேரத்தில் ஒலிக்க தொடங்கிய செல் போனை எரிச்சலுடன்  முறைத்து விட்டு, மீண்டும் கதையை  படிக்க தொடங்கினான் சூர்ய பிரகாஷ்   கோகுல்.. சுருக்கமாக எஸ் பி கோகுல்

     .. அடிப்பதுமாக வாழ்க்கை என்று கொண்டிருந்தது.. அப்போதுதான்  எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது. பக்கத்து வீட்டில் புதிதாக ஒரு ஆண்ட்டி குடியேறினார்கள்.. பார்த்ததுமே முடிவு செய்து விட்டேன்.. இவரை பார்த்தால் மட்டும் போதாது.. ஓ.. 


மீண்டும் அலைபேசி ஒலித்தது..  புதிய எண்ணாக இருந்தது.. யார் தொந்தரவும் இருக்க கூடாது என நினைத்து , இந்த பாழடைந்த கட்டடத்தில் வந்து அமர்ந்தால் , போன் இம்சிக்கிறதே.. ஆஃப் செய்து வைக்கவும் முடியாது .. நண்பர்கள் அழைக்க கூடும்.. மீண்டும் ரிஜக்ட் பட்டனை  அழுத்தி விட்டு  தொடர்ந்தான்.
இந்த இடத்தில் அந்த ஆண்ட்டியை பற்றி வர்ணிக்காவிட்டால், கடவுள் என்னை மன்னிக்க மாட்டார்.. சிவந்த நிறம்.. பெரிய கண்கள்.  எடுப்பான  நாசி.. ரோஜா இதழ்கள்.. சங்கு கழுத்து. மலையா என மலைக்க வைக்கும் ..


மீண்டும் அழைப்பு .. ரிஜக்ட்

முடிவு செய்து விட்டான்.. (மீண்டும் அழைப்பு .. ரிஜக்ட்)
த்தா இவளை (மீண்டும் அழைப்பு .. ரிஜக்ட்)ணும் இல்லைனா. (மீண்டும் அழைப்பு .. ரிஜக்ட்)த்தவன்  ..மீண்டும் அழைப்பு. எரிச்சலின் உச்சிக்கு சென்றான் கோகுல்..அக்செப்ட் பட்டனை தட்டி பேசினான்.

“  ஹலோ. யாரு ? “

எதிர் முனையில் ஆண் குரல்.

“ மிஸ்டர் கோகுல் .. நான் யார் என்பது முக்கியமன்று..  என்னை நம்பினால் நல்லது நடக்கும்.. உங்களை காப்பாற்ற போறவன் நான்.அதனால என் பெயர் காக்கும் கடவுள் விஷ்ணு என  வேண்டுமனால் வைத்து கொள்ளுங்கள். உடனே அந்த இடத்தை விட்டு ஓடு ங்கள்“

லைன் கட் ஆனது..

வியர்த்து போனான் கோகுல்..

யாரேனும் சும்மா மிரட்டுகிறார்களா?
ஆனால் அந்த குரலின் தீவிரம் யோசிக்க வைத்தது

சட் என முடிவு எடுத்து, அந்த இடத்தில் இருந்து ஓட தொடங்கினான்..
சில அடிகள் ஓடி இருப்பான்..பெரும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான்.
சற்று முன் அவன் அமர்ந்து இருந்த கட்டடம் இடிந்து விழுந்து கொண்டு இருந்தது.

             நாளைக்கு எக்சாமை வச்சுக்கிட்டு படிக்காம படுத்துகிடக்கான் பாரு உன் பையன் “ அப்பா அம்மாவிடம் சீறுவது கேட்டது. படிக்கும் மூடு வரவே இல்லை. அந்த  போன் காலும் , கட்டடம் இடிந்து விழுந்ததும் மனதில் இருந்து அகலவே இல்லை. பாழடைந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் ஆச்சர்யம் இல்லை  . இடிந்து விழும் நிலையில் உள்ள கை விடப்பட்ட கட்டடம்தான்.. ஆனால் அந்த அழைப்பு வந்ததுதான் ஆச்சர்யமாக இருந்தது...

   அலை பேசி சிணுங்கியது. அதே எண் !!

  சற்று தயக்கத்துடன் எடுத்தான்.
“.. உடனே பேப்பர் பேனா எடுத்துகிட்டு, நான் சொல்வதை எழுதுங்கள் “
யோசிக்ககூட நேரம் இல்லாமல் பேப்பர் பேனா எடுத்து , விஷ்ணு சொல்வதை எழுத தொடங்கினான்.. எல்லாம் தேர்வு கேள்விகள்

                          “பொறுப்பில்லாத பையன்னு நினைச்சோம்.. ஸ்கூல் ஃபர்ஸ்ட் எடுத்து இருக்கிறானே “ அப்பா வுக்கு பயங்கர பெருமை
அது வரை பொறுப்பின்றி சுற்றிக்கொண்டிருந்த சுற்றிக்கொண்டு இருந்த  கோகுல் பொறுப்புள்ளவனாக மாறிப்போனான்.

இதனால் ஆசிரியர்களிடன் நல்ல பெயர் கிடைத்தது..ஆனால் பழைய 
நண்பர்கள் விலகத் தொடங்கினர்.


            வன் ஊர் சுற்றியபோதும், இப்போது பொறுப்புள்ளவனாக மாறி விட்டபோதும், அவனிடம் அன்பாக இருக்கும் ஒரே ஜீவன் அவன்   ஆங்கில ஆசிரியர் தாமஸ்தான்
“ சார்.. எனக்கு படிப்பை விட ஓவியத்துல ஆர்வம் அதிகம்.. அதை புரிஞ்சுக்காம படி படி னு வீட்ல டார்ச்சர் பண்றாங்க. அவங்க எனக்கு நெருக்குதல் கொடுக்காம இருந்தா , ஓரளவாவது படிப்பேன்.. ஆனால் அவங்க கொடுக்க்ற டார்ச்சர்ல, புத்தகத்தை எடுத்தாலே வெறுப்பா இருக்கு “
அவன் தோள் தட்டி ஆறுதல் சொல்வார் தாமஸ்..
அவரால்தான் கொஞ்சமாவது படித்தான்.. ராபட் ஃப்ராஸ்ட் , ஷேக்ஸ்பியர் என அவர் நடத்தும் பாடங்கள் மட்டும்தான் கொஞ்சமாவது மண்டையில் ஏறும் .

கவிதையை எப்படி அணுக வேண்டும் என அவர்தான் சொல்லிகொடுத்தார்..


If you can keep your head when all about you 
Are losing theirs and blaming it on you,
If you can trust yourself when all men doubt you,
But make allowance for their doubting too;


என்று ஆரம்பிக்கும் கவிதையை வாசித்து காட்டினார்.

  உன்னை , உன் திறமையை மற்றவர்கள் நம்பாவிட்டால் பரவாயில்லை.. நீ உன்னை நம்பு . யாரும் நம்பாத காலத்திலேயே அவனை நம்பினார் அவர்.
அவருக்கே கூட இவனது இனிய மாற்றம் ஆச்சரியம்தான்..
        வரைத்தவிர அவனை நேசித்த இன்னொரு ஜீவன் காயத்ரி..  கூட படிப்பவள்..
அவனை ஏன்  நேசித்தாள் என அவனுக்கு புரிந்ததே இல்லை..
சிலர் காதல் சுகமானது என்பார்கள்.. ஆனால் உண்மையில் இனிமையானது நட்புக்கும் காதலுக்கும் இடைப்பட்ட கால கட்டம்தான்.. அதை நன்கு அனுபவித்தான் அவன்.
“ கோகுல்.. இடிந்த கரைக்கு ஒரு நாள் போகணும்.. கூட்டிக்கிட்டு போவியா ? “   திடீரென ஒரு நாள் கேட்டாள்.

 அவள் சொன்ன அணு சக்தி, போராட்டம் என்பதெல்லாம் அவனுக்கு புரியவில்லை.. ஆனால் அவளுக்காக போக விரும்பினான்.
“ எப்போது போகலாம் “

வீட்டில் அமர்ந்து யோசித்து கொண்டு இருந்த போது செல் சிணுங்கியது.
விஷ்ணு இன்ஃபார்மர் காலிங்.

 “   மிஸ்டர் கோகுல்.. இந்த நேரத்தில் பேசுவதற்கு மன்னிக்கவும்.. நீங்க இடிந்த கரை போவது எனக்கு பிடிக்கல.. போக வேண்டாம்..  “ லைன் கட் ஆனது.
முதல் முறையாக விஷ்ணு மேல் சற்று வருத்தம் ஏற்பட்டது. ஆனாலும் அவர் பேச்சை தட்ட முடியாது.

“” காயு.. இடிந்த கரை இப்போ வேணாம். இன்னொரு நாள் கண்டிப்பா போகலாம்.. ஸ்கூல் சார்பா பிக்னிக் கூப்பிட்டு போறாங்க.. நாம அவங்க கூட போகப்போறது இல்ல.. போறதா  வீட்ல சொல்லிட்டு, நாம ரெண்டு மட்டும் தனியா இன்னொரு இடத்துக்கு போறோம்.. நிறைய பேசணும்”
*****
            லக்கில்லாமல் சுற்றி திரிந்தார்கள்.. அவள் அருகாமையே போதுமானதாக இருந்தது.
பஸ் ஸ்டாண்ட் டாய்லெட்டிற்கு போய் இருந்தாள் அவள் ,அவனிடம் அலைபேசியை கொடுத்து விட்டு.. போன் சிணுங்கியது.. அவள் வீட்டில் இருந்து.. பல மிஸ்டு கால்கள் வந்து இருந்தன.. போனை எடுக்க , பார்க்க அவர்களுக்கு எங்கே நேரம் இருந்தது.
ஏதாவது சீரிய்ஸ் மேட்டரோ. அக்சப்ட் பட்டனை  அழுத்தி விட்டு, பேசாமல்  யார் பேசுவது என கேட்டான்.
“ அய்யோ காயத்ரி.. எங்கே போய்ட்ட. உன்  அம்மா போய்ட்டாங்கடீ.. ரோட் ஆக்சிடண்ட். உன் ஸ்கூல் டூர் நீ  போகலையாமே.. எங்கேடி போய்ட்ட”   இணைப்பு கட் ஆனது.
அதிர்ந்தான் கோகுல்.
இந்த நேரத்திலா இப்படி ஆக வேண்டும்.
உற்சாகமான முகத்துடன் காயத்ரி வந்தாள்..
“ சரிப்பா.. வீட்ல தேடறதுக்கு முன்னாடி வீடு போய் சேரணும் ..போகலாமா? “
வீடு போனதும் இவள் சந்திக்க வேண்டிய துக்கத்தை நினைத்து பார்க்கவே முடியவில்லை.. இவள் அழுது பார்த்ததில்லையே.. இவள் அழவே கூடாது.
இல்லை.. அழுதுதான் தீர வேண்டும்.. ஆனால் முடிந்த அளவு அந்த சோதனையை தள்ளி போடலாம்.
“ காயு.. போகலாம் .அதற்கு முன்  ஒரு படம் பார்த்துட்டு  போய்டலாம்”
போன் அவள் கைக்கு போகாமல் பார்த்து கொண்டான். வடிவேலு நகைச்சுவைக்கு அவள் விழுந்து விழுந்து சிரித்ததை பார்த்து அழுகைதான் வந்தது.
ஸ்கூல் பிக்னிக் முடியும் நேரத்தை கணக்கு செய்து கச்சிதமாக ஊருக்கு வந்து விட்டார்கள்.

“என் போனை எங்கே வச்சேன்..”  நினைவு வந்து பையில் இருந்து எடுத்தாள்.
எத்தனை மிஸ்டு கால்.. லேசாக பதறினாள்..
“  கால் எதுவும் அடெண்ட் செஞ்சியா? “
ஆமா.. அது வந்து..
அதற்குள் இன்னொரு கால் வந்து அட்டெண்ட்ட் செய்தாள்.
அவள் முகம் வெளிறியது. உடல் நடுங்க தொடங்கியது..
கண்ணீருடன் அவன் பக்கம் திரும்பினாள்.
“இது உனக்கு முன்னாடியே தெரியுமா?”
“ தெரியும்..ஆனா...”
“ தெரிஞ்சுதான் படத்துக்கு கூப்பிட்டியா.. ஸ்வீட் சாப்பிட கூப்பிட்டியா.. என் உணர்வுகளை விட உல்லாசம்தான்  பெருசா போச்சா”
“ப்ளீஸ்..அப்படிஇல்லை”
“ இனி என் முகத்துல விழிக்காதே”
 கதறலுடன் வீட்டை நோக்கி ஓடினாள்.

                 ரு நல்ல உறவு அறுந்து விட்டதே. விஷ்ணு மேல் சந்தேகம் வரத் தொடங்கியது. யார் அவன்.  எனக்கு நல்லது செய்கிறான். கை மாறாக எதுவும் கேட்பதில்லை. சின்ன சின்ன உத்தரவுகளை போட்டு அதை செய்யும்படி சொல்கிறான். இன்னிக்கு ஸ்கூல் போகாதே.. நான் சொல்லும் புத்தகம் படி. அவளுடன்  பேசாதே. என்பது போல. இதனால் அவனுக்கு என்ன லாபம்.
அவன் என் வாழ்வில் வந்தது வரமா சாபமா?

இதற்கு முடிவு கட்ட வேண்டும்.

போன் அடித்தது.. விஷ்ணு இன்ஃபார்மர் காலிங்.  முக்கிய தகவல்கள் தருவதால் இப்படி ஸ்டோர் செய்திருந்தான்.

“ மிஸ்டர் கோகுல் “..உங்க அட்மின்  ரூம் கணினில 14ந்தேதி  ஒரு மெயில் வந்து இருக்கு..அதைப் பற்றி விபரம் தேவை.அட்மின் ரூம் கணிணியின் பாஸ் வோர்ட்  எஸ் எம் எஸ் பண்றேன் “

“ மன்னிக்கணும் விஷ்ணு.. உங்களை பார்த்து பேச ஆசைப்படுறேன்.. அதன் பின் தான் இனி உங்களுக்கு கட்டுப்படுவேன் “

“ என்னை கேள்வி கேட்காமல் நம்பினால்தான் பிடிக்கும். சரி..உங்க மனசுல சந்தேகம் வந்துருச்சு..  நாளைக்கு கெ கெ பொறியியல்  கல்லூரி, கெமிக்கல் பிரிவு, ஜெ 19  ஹாலுக்கு வாருங்கள்..உங்கள் சந்தேகம் தீரும் “

              ங்கே சென்றபோது  யாரும் இல்லை.
வெயிட் செய்து விட்டு கிளம்பி இருப்பானோ?
சில துண்டு சீட்டுகள் கிடந்தன..
எல்லாம் விஷ்ணு சிலருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகள்.  அவன் இங்குதான் இருந்து இருக்கிறான்.

பிரிண்ட் எடுத்து பார்த்து கொண்டிருக்கிறான்.. நாம் வந்ததும் ஏன் கிளம்பினான்?

புரட்டிப்பார்த்தான். சம்பந்தமில்லாத சீட்டுகளை கிழித்து எறிந்தான். கடைசியில் இரண்டு சீட்டுகள் மிஞ்சின. படித்து அதிர்ந்தான்.

“ விஷ்ணு எனக்கு ஏன் தவறான பாஸ்வோர்ட் அனுப்பவேண்டும். ? “
போன் அடித்தது.


விஷ்ணு காலிங்..
ரிஜக்ட் பட்டனை அழுத்தினான்..
“ இல்லை.. இனி மேலும்  இதை .. “ . . .

“  . . தொடரக்கூடாது என  முடிவு செய்து எனக்கு கால் செய்தான்.. நேரில்  வந்து  பேச சொன்னேன்.. நீங்களும் பக்கத்தில் இருந்தால் நல்ல இருக்கும்னுதான் உங்களையும் வர சொன்னேன் “
 கோகுல் சொன்னதையும் தாமஸின் முடிவுரையையும் கேட்ட மன நல நிபுணர் முஸ்தஃபா கனிவுடன் கோகுலைப் பார்த்தார்.
“ நல்ல வேளை.. எல்லாத்தையும் வெளிப்படையா சொன்னியே.. குட் பாய்..சரி..கொஞ்சம் பக்கத்து ரூம்ல வெயிட் பண்ணு “
கோகுல் போனதும் , தாமஸைப் பார்த்தார்.

“ சார்.. இவன் சொன்னதை வச்சு, நீங்க என்ன நினைக்கிறீங்க ? “

“ டாக்டர்.. தனக்கு ஆதரவா யாரும் இல்லைனு நினைக்கும் சிலர், கற்பனையா ஒரு கேரக்டரை உருவாக்கி , அந்த கேரக்டர் தன்னை வழி நடத்துவதா நம்புவாங்க.. சில சமயம் இது எக்ஸ்ட்ரீமுக்கு போய் டேஞ்சர் ஆகும்.. மத்தபடி இது உபத்திரவம் இல்லாதது... விஷ்ணு ஒரு கற்பனை பாத்திரம்னு நினைக்கிறேன். விஷ்ணு இவனிடம் பேசியதை பார்த்தவர்கள் யாரும் இல்லை “
“ “ சார்.. எல்லாம் விதிப்படி நடக்கும்னு நினைப்பது ஒரு  மூட நம்பிக்கைனா, எல்லாம் அறிவியல்படி நடக்கும்னு நினைப்பது இன்னொரு மூட நம்பிக்கை.. அறிவியலுக்கு  அப்பாற்பட்ட விஷயங்களும் உண்டு.

இந்த கேஸ் நீங்க சொல்ற மாதிரியும் இருக்கலாம்.. இன்னொரு  வாய்ப்பும் இருக்கு.. அதுதான் ஸ்பேஸ் அட்டாக்.. வேற்று கிரக வாசிகள் பூமி மேல் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கு என்பது விஞ்ஞானிகளின் சந்தேகம்.. ஆனால் இந்த தாக்குதல்  ஹாலிவுட் சினிமாவில் காட்டுவது போல , வினோதமான ஆயுதங்கள் மூலம் நேரிடையாக நடக்காது..கத்தியின்றி ரத்தம் இன்றி இந்த யுத்தம் நடக்கும்.

கனவுகள்  மூலமோ, உள்ளுணர்வுகள்  , காரணம் காட்ட முடியாத புதிய சிந்தனைகள் மூலமோ சிலரை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து , அதன் மூலம் தம் செயல்களை செய்வார்கள். படிப்படியாக நம்மில் சிலர் மூலமே பூமியை அழிப்பார்கள்.  விபரீத கண்டுபிடிப்புகள் நம் மூளையில் உருவாக காரணம் இதுவாக கூட இருக்கலாம்..
இடிந்த கரை மேட்டரை கோகுல் சொன்னதும் விஷ்ணு ஆஃப் ஆனதுதான் என் சந்தேகத்தை கிளப்பியது. பூமியை அழிக்கும் செயலுக்கு எதிரான போராட்டம் அவனுக்கு ஏன் எரிச்சலை கிளப்ப வேண்டும்? கோகுலின்  நம்பிக்கையை சோதிக்கத்தான் , அந்த துண்டு சீட்டுகள் . கோகுல் நம்பவில்லை என்பதால் இனி ”விஷ்ணு ” கோகுலை தொடர்பு கொள்ள மாட்டான் . நம்பி இருந்தால் ஒரு அணு சக்தி விஞ்ஞானியாக கோகுல் உருவாகி இருக்க கூடும்

ஆனால் இதுவெல்லாம் யூகம்தான்.. பையனை   வீட்டுக்கு அனுப்பி வைங்க.. என்ன பிரச்சினைனு பார்க்கலாம் “
கிளம்பினார் முஸ்தஃபா..

அவரை அனுப்பி விட்டு லேப் டாப்பில் மெயில் செக் செய்த தாமஸ் வியப்பில் விழி உயர்த்தினார்.

“ சார்” கோகுல் குரலைக் கேட்டதும்தான் அவனை அதிகம் காக்க வைத்து விட்டதை உணர்ந்தார்.

“  உன் விஷயமா பேசிட்டேன்..     நீ உடனே புறப்பட்டு அவர் வீட்டுக்கு போ.. நல்லது நடக்கும்..சீக்கிரம் போ. என்  பைக்கை எடுத்துக்க. பஸ்ல போனா நேரம் ஆயிடும்.. பை பாஸ்ல போ.சீக்கிரம்.. ஆல த பெஸ்ட் “

அவன் கிளம்பி சென்றதும் , இன்னொரு  முறை மெயிலை படிக்க ஆரம்பித்தார்.
“ டியர் மிஸ்டர் தாமஸ்..நான் யார் என்பது முக்கியம் இல்லை.. நான் உங்கள் நண்பன்..என்னை நம்பினால் நல்லது நடக்கும்.. காக்கும் கடவுள் விஷ்ணு என்பதையே என் பெயராக வைத்து கொள்ளுங்கள்.. அல்லது வேறு பெயர் வைத்து கொள்ளுங்கள்..ஏன் எதற்கு என கேட்காமல் உடனே இரண்டு விஷயங்கள் செய்யுங்கள்..1. அந்த கோகுலை அதி விரைவாக முஸ்தஃபா  இல்லம் போக சொல்லுங்கள்.. பை பாஸ் சாலையில், ஹெல்மெட் இல்லாமல் செல்ல வைப்பது உங்கள் சாமர்த்தியம்2. நான்  எஸ் எம் எஸ்அனுப்பும் நிறுவனத்தின் ஷேர்களை கண்ணை மூடிக்கொண்டு வாங்குங்கள். சொத்து முழுதும் விற்றுக் கூட வாங்குங்கள். என்னை  நம்புவது உங்களுக்கு  எளிதுதான்.. என்னை நம்பியவரை நான் கோகுலுக்கு செய்த நன்மைகளை சொல்லி இருப்பானே..அன்புடன் ,விஷ்ணு
“ அய்யோ.என்னங்க.. நம்ம பைக் ஆக்சிடண்ட் ஆயிடுச்சாம்.. கோகுல் .ஆஆ “ அலறிய மனைவியின் சத்தம்கூட கேட்காமல் , ஷேர் விவகாரத்தில் மூழ்கியிருந்தார் தாமஸ்.
************************************************
சில ஆண்டுகளுக்கு பிறகு.

  திரு.தாமஸ் அவர்களுக்கு நல்லாசியர் விருது வழங்கப்பட்டது. இவர் அணு சக்தி ஆதரவு பிரச்சாரம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது - செய்தி 

10 comments:

 1. கதை வித்தியாசமா இருக்கு சகோ....
  வெற்றிபெற வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 2. கதை நன்றாக உள்ளது, வாழ்த்துகள் :)

  ReplyDelete
 3. சாரி.. என்னதான் சொல்ல வரீங்கன்னு புரியல.. விளக்கமா இன்னொரு பதிவு போடா முடியுமா ?

  ReplyDelete
 4. முன் பாதி சொதப்பல் :(:(:( பின்பாதி அருமை நல்ல விறு விறுப்பு, மந்திரப் புன்னகை படவாசம் கொஞ்சம் வந்தது! வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. F.NIHAZA said...
  கதை வித்தியாசமா இருக்கு சகோ....

  நன்றி சகோ

  ReplyDelete
 6. sksukumar said...
  கதை நன்றாக உள்ளது, வாழ்த்துகள் :”

  நன்றி

  ReplyDelete
 7. முன் பாதி சொதப்பல் :(:(:(

  அதுதான் நன்றாக இருப்பதாக சிலர் சொல்கிறார்களே ;)

  ReplyDelete
 8. ”விளக்கமா இன்னொரு பதிவு போடா முடியுமா ?”

  கண்டிப்பாக விரிவாக எழுதுகிறேன்
  .

  ReplyDelete
 9. முன் பாதி=(ஆரம்பம்) சொதப்பல் :(:(:(

  அதுதான் நன்றாக இருப்பதாக சிலர் சொல்கிறார்களே ;)

  நன்றாகத்தான் இருக்கிறது ஒரு வாசகராக பார்க்கும்போது,
  ஆனால் ஒரு போட்டிக்கு அனுப்பும் போது அதன் நடுவர்களின் பார்வையில் சிறிய அளவிலாவது பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் அப்படி சொன்னேன்.

  ReplyDelete
 10. வித்தியாசமான முயற்சி அறிவியல் கலந்து. முயற்சிக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா