Tuesday, October 25, 2011

அடிமை வெறியும், அபார கண்டு பிடிப்பும் - உயிர்காத்தவரை மறந்த ஊடகங்கள்

   ஐ பேட் , ஐ பாட் போன்றவற்றை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவை ஊடகங்கள் “ கொண்டாடியதை “ கவனித்து இருப்பீர்கள். ஆப்பிள் என்றால் முன்பெல்லாம் ஆதான் , ஏவாள் மற்றும் நியூட்டன் நினைவுக்கு வருவார்கள்.இனிமேல் இவர்தான் ஸ்டீவ் ஜாப்ஸ்தான் நினைவுக்கு வருவார் என உருகினார்கள் இவர்கள்..

அவர் திறமைசாலி என்பதில் சந்தேகம் இல்லை.. ஆனால் இந்தியர்கள் என்ற முறையில் , தமிழன் என்ற முறையில் நம் வாழ்வை மேம்படுத்தும் கண்டுபிடிப்பு எதையும் அவர் நிகழ்த்தவில்லை.. ஒட்டு மொத்த மனித குலம் என்று பார்த்தாலும் , அவர் கண்டுபிடிப்பால் மனித வாழ்வுக்கு பெரிய மாற்றம் வந்து விடவில்லை..

பெரிய அளவிலான வியாபாரத்துக்கு உதவி இருக்கிறார் என்பதே அவர் பிரத்தியேக பலம். இந்த அடிப்படையில் , அயல்னாட்டு மீடியா செய்யும் அலப்பறையை பின் பற்றி நம் மீடியாக்களும் அலப்பறை செய்தன.. அடிமை புத்தி என்பதை தாண்டி அடிமை வெறிதான் இதில் தெரிந்தது..

அயல் நாட்டுக்காரர் செய்த நன்மைகளை பாராட்டக்கூடாது என்பதன்று நம் கருத்து. நன்மை செய்தால் மட்டுமே பாராட்ட வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடு. ஆனால் நம் மீடியாக்கள் விளம்பர அடிப்படையில் ஒருவரை பாராட்டுகின்றவே அன்றி, அவர் செய்த நன்மைகள் அடிப்படையில் அல்ல.

 உண்மையிலேயே நல்லது செய்த ஒருவர் இதே கால கட்டத்தில் ( செப் 27ந்தேதி ) இறந்தார்..அவரை நம் மீடியாக்கள் கண்டு கொள்ளவில்லை.. மாற்று ஊடகமாக உருவெடுத்து வரும் பதிவுலகமாவது அவருக்கு உரிய மரியாதை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த இடுகை.**************************************************
Wilson Greatbatch
லட்சக்கணக்கானோர் உயிரை காப்பாற்றிய ( இதய நோயாளிகளுக்கான )பேஸ்மேக்கர் கருவியை கண்டுபிடித்தவர்
வில்சன் கிரேட்பாட்ச் - இதுதான் இந்த மாமனிதரின் பெயர்.இவர் வாழ்க்கை வ்ரலாற்றை கண்டிப்பாக படித்து பாருங்கள். மனத்துக்கு புத்துணர்ச்சி பிறக்கும்.
இவரது பூர்வீகம் பிரிட்டன். பிறந்தது அமெரிக்காவில்.( செப் 6 , 1919 )  சிறு வயதில் வானொலித்துறையில் ஈடுபாடு காட்டினார். அதை ஒரு ஹாபியாக வைத்து இருந்தார் . அது பிற்காலத்தில் அவருக்கு உதவியது.
    இரண்டாம் உலகப்போர் நடந்த போது அமெரிக்க ராணுவத்தில் பணி புரிந்தார். விமானப்படையில் தலைமை வனொலி இயக்குனராக இருந்தார். மேலும் பல பணிகளை செய்தார். ராணுவத்தில் கிடைத்த அனுபவங்கள் அவரை ஆன்மீக ரீதியாக பக்குவப்படுத்தின. தோல்வியில் துவளாத இதயத்தை அவர் இங்குதான் பெற்றார்.

            நியூயார்க்கில், எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங் படித்தார். அதே பல்கலைக்கழகத்தில் வானொலி சார்ந்த பணிகள் செய்து வருவாய் ஈட்டினார். பகுதி நேர பணியாற்றிய நிறுவனத்தில் , பேஸ் மேக்கர் கருவி பற்றிய யோசனையை முன் வைத்தார் .. அவர்கள் அதை ஏற்கவில்லை.

     1956ல்தான், இந்த கருவி அமைக்கப்பட முடியும் என்ற எண்ணம் அவருக்குள் உறுதிப்பட்டது.. அது தொடர்பாக ஆய்வுகள் நடத்தினார்.

     தன் மேல் இருந்த நம்பிக்கையால், தன் பணியை ராஜினாமா செய்து விட்டு, தன் சேமிப்பான 2000 டாலருடன் முழு மூச்சாக இதில் இறங்கினார். 1960ல் ஒரு 70 வயது நோயாளிக்கு இந்த கருவி பொருத்தப்பட்டது. மரணம் அடையும் நிலையில் இருந்த அந்த நோயாளி மேலும் சில மாதங்கள் வாழ்ந்து இந்த கருவியின் வெற்றிக்கு சாட்சியாக இருந்தார்.

   அதன் பின் பேட்டரிகளில் மாற்றங்கள் செய்து, பத்தாண்டுகள் உழைக்க கூடிய  பேஸ்மேக்கர்க்ள் உருவாக்கினார்.

இதனால் லட்சக்கணக்கானோர் பலன் அடைந்தனர்.

உலகின் சிறந்த பத்து கண்டு பிடிப்புகளில் ஒன்றாக இது மதிப்பிடப்படுகிறது.

கடும் உழைப்பே வெற்றிக்கு வழி என்பார் இவர்.

பத்து முயற்சிகள் செய்தால் ஒன்பது தோல்வி அடையும். ஒன்றுதான்ஜெயிக்கும்.. ஆனால் இந்த ஒன்றின் வெற்றி, மற்ற ஒன்பது தோல்விகளுக்கான இழப்பை ஈடு செய்து விடும் என்பார் இவர்.
    தன் வேலைகளில் கடவுளின் ஆசி இருப்பதாக நம்பினார். தோல்வி என்பது , எதிர்கால வெற்றிக்கு கடவுள் தரும் சிக்னல் என நினைத்தார்.

330 காப்புரிமைகள் பெற்று இருந்தார். மனிதர்கள் மேல் பேரன்பு கொண்டு இருந்தார்.

தன் 92 வயதில் , 27 செப்டம்பர் 2011 ல் உலகை விட்டு பிரிந்தார்.

அவர் இறந்தாலும், அவரை  பல நல் இதயங்களால் மறக்க இயலாது.
13 comments:

 1. ஒருவரை உயர்த்திப்பேச மற்றொருவரை தாழ்த்தியே தீர வேண்டுமா? ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி குறை கூறாமலே வில்சன் கிரேட் பாட்ச் பற்றி எழுதியிருக்கலாமே!

  ReplyDelete
 2. நீங்கள் சொல்வதில் இருக்கும் நியாயத்தை ஒத்துக் கொள்கிறேன்.
  ஆனால் பேஸ்மேக்கர்கள் பற்றி பொதுப் புத்திக்காரர்கள் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தேவைப்பட்டவர்களும், அவர்கள் உறவினருமே அதிகம் அதைப் பற்றி அறிந்திருப்பர். ஆனால் ஆப்பிள் சாதனங்கள் அனைவருக்கும் ’தெரிய’ வைக்கப்பட்டது.அதுவே அந்த ஆரவாரங்களுக்கு ஒரு காரணமாகவும் இருக்கலாம்!

  ReplyDelete
 3. ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி குறை கூறாமலே"

  அவர் திறமைசாலிதான்..அவரை குறை சொல்ல்வில்லை.

  ஊட்கங்கள் போக்குதான் குறை சொல்லும்படி இருக்கிறது

  ReplyDelete
 4. ஆனால் ஆப்பிள் சாதனங்கள் அனைவருக்கும் ’தெரிய’ வைக்கப்பட்டது.அதுவே அந்த ஆரவாரங்களுக்கு ஒரு காரணமாகவும் இருக்கலாம்!"

  உண்மை

  ReplyDelete
 5. ஸலாம் சகோ.பார்வையாளன்,

  //உலகின் சிறந்த பத்து கண்டு பிடிப்புகளில் ஒன்றாக இது மதிப்பிடப்படுகிறது.//--அடடா..!

  மிகவும் அருமையான ஓர் ஆக்கம்.
  அரியபல தகவல்களை அறியத்தந்தமைக்கு
  மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 6. பாஸ்... எதுக்கு சம்பந்தா சம்பந்தமில்லாமல் குறை கூறுகிறீர்கள்.. இதில் எங்கே "அடிமை வெறி" இருக்கிறது..

  சும்மா பரபரப்புக்காக யாராது திட்டுவதெல்லாம் வேலைக்காகாது..

  ReplyDelete
 7. தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. " தீபாவளி வாழ்த்துக்கள்"

  நன்றி

  ReplyDelete
 9. ”இதில் எங்கே "அடிமை வெறி" இருக்கிறது..”

  வெள்ளைக்காரனை ஹீரோ வொர்ஷிப் செய்வதை வேறு எப்ப்டி சொல்வது?

  உண்மையிலேயெ நல்லது செய்தர்வர்களை பாராட்டுவது வேறு விஷ்யம்

  ReplyDelete
 10. உண்மையிலேயே நல்லது செய்தவர்களை பாராட்டுவது அவசியம்! தகவல்களுக்கு நன்றி!

  தீபாவளி வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. உண்மையான விஷயம், ஆதாயம் இருந்தால் மட்டும் தான் நியூஸ்.
  நல்ல பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி.
  தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. புத்தர் ஏன் சிரிக்க மாட்டேங்குறார்...

  ReplyDelete
 13. மனித குலத்துக்கு உதவும் எந்தவொரு விஞ்ஞானியின் நிலையும் இதுதான் என அருமையாய் எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா