Saturday, January 14, 2012

உயிர்மை பாணியில் உருப்படாத கவிதை- பொங்கல் ஸ்பெஷல்


கவிதை என்பது மொழியின் உன்னத வடிவம். ஆனால் உயிர்மை போன்ற அரசியல் பத்திரிகைகள் கவிதையை மலினமாக்கி வருகின்றன..

கற்றறிந்தோர் உயிர்மை பாணி கவிதைகளை ஆபாசம் என நினைத்தாலும் , ஒரு சில நடுத்தர வர்க்கத்தினர் அந்த வகை கவிதைகள் மீது ஒரு வித ஈர்ப்பு கொண்டுள்ளன்ர். இந்த மாதிரி கவிதை தமிழில் மட்டும்தான வர முடியும். சூப்பர் என்றெல்லாம் உருகுகின்றனர்... உலகுக்கே தமிழ் நாடுதான் வழிகாட்டுகிறது என்ற அவர்கள் பிரமையை கலைக்க விரும்பவில்லை..

ஆனால் அவர்கள் நலன் கருதியும். பொது நலன் கருதியும், உயிர்மை பாணி பொங்கல் கவிதையை பிரசுரம் செய்வதில்   , பிச்சைக்காரன் டாட் காம் பெருமைப்படுகிறது

*******************************************************

                     சூன்ய பாழ் வெளியில் ஒரு பொங்கல் 

                                                எப்பொழுது எழுவாள்
                                                எப்பொழுது தொழுவாள்                                                 
எப்பொழுது சொல்வாள்
எப்பொழுது பேசுவாள்
எப்பொழுது ஏசுவாள்
எப்பொழுது நினைப்பாள்
எப்பொழுது ஏங்குவாள்
எப்பொழுது தூங்குவாள்
எப்பொழுது இமைப்பாள்
எப்ப்பொழுது அழுவாள்
எப்பொழுது

இந்த சின்ன
எப்பொழுதில்
அவள் என்ன செய்வாள்

நிதானமாக
அவ்வளவு அன்பாக
அவ்வளவு மகிழ்ச்சியாக
அவ்வளவு இறுக்கமாக

ஒரு துயர் நிறைந்த பானையில்
தண்ணீரை அன்று
தன் கண்ணீரை நிரப்புவாள்
பச்சரியை அன்று
தன் பரிதவிப்பை நிரப்புவாள்

அவ்வளவு மௌனமாக
அவ்வளவு இதமாக
அவ்வளவு
சோகத்தோடு
பிரிந்த போது
காதலன் இட்ட முத்தத்தை நினைத்தவாறே
அவள் எப்பொழுது சுவைத்து உண்டு முடிப்பாள்
பொங்கலை
கண்ணீரை
சோகத்தை
தன் காதலை
அவளை.


                                                                          - விளாடிமிர் டிரான்ஸ்கி , ரஷ்ய க்விதை

3 comments:

  1. இந்த கவிதை நன்றாக வந்திருக்கிறது நண்பா

    ReplyDelete
  2. இந்த கவிதை நன்றாக வந்திருக்கிறது நண்பா’

    விளாடிமிர் டிரான்ஸ்கி சார்பாக நன்றி :)

    ReplyDelete
  3. அதென்ன...// சூன்ய பாழ் // ஒரே பொருள்தரும் இரு வார்த்தைகளை இணைத்து, ஒரு வார்த்தையாக.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா