Monday, January 16, 2012

பெரியாரை படியுங்கள் - சாரு முழக்கம்

பெரியார் என்றால் கடவுள் மறுப்பாளர் என்ற எண்ணம் நம் மனதில் தோன்றும். ஆனால் இப்படி ஓர் எண்ணத்தை நம் மனதில் பதித்து வைத்து இருப்பது ஒரு வரலாற்று மோசடி என்றே சொல்ல வேண்டும்.

பெரியார் பல தளங்களில் இயங்கி இருக்கிறார் , அதில் ஒன்றுதான் கடவுள் மறுப்பு. கடவுள் மறுப்பை மட்டுமே அவர் முழு நேரமாக செய்யவில்லை.. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதல்ல அவர் கவலை. கடவுள் பெயரை சொல்லி சிலர் சுரண்டப்படுகிறார்களே என்பதே அவர் கவலை.

 பெண் அடிமைத்தனம் குறித்தும் பெண் விடுதலை குறித்தும் அவர் கருத்துகளை இப்போது பார்த்தாலும் ஆச்சர்யமாக இருக்கும்,.. அந்த காலத்திலேயே எவ்வளவு அட்வான்ஸ்டாக சிந்தித்து இருக்கிறார் என்பது பிரமிக்க வைக்கும்..

ஆனால் அவரை நாத்திகவாதி என்ற சிறிய வளையத்தில் சிக்க வைத்து , அவரது மற்ற சேவைகளை மறைத்து விட்டார்கள். அதன் விளைவை இப்போது பார்க்கிறோம்.

எவ்வளவுதான் படித்தாலும், சம்பாதித்தாலும் பெண்ணடிமைத்தனம் இன்னும் ஒழியவில்லை.

விஜய் டீவியில் நீயா நானா நிகழ்ச்சியில் அல்ட்டிமேட் ரைட்டர் சாரு கலந்து கொள்கிறார் என்ப்தற்காக அதை ஆவலுடன் பார்த்தேன். முதல் ஒளிபரப்பில் பார்க்காததால் இன்று பார்த்தேன் .

அதி பேசிய சிலரின் ஆணாதிக்க பேச்சுக்களை பார்த்து ஓர் ஆணாகிய எனக்கே அருவறுப்பாக இருந்தது.. பெரியாரை மறந்ததால் வந்த வினை என நினைத்து கொண்டேன்

கடைசியில் சாரு பேசினார். வழக்கமாக அமைதியாக பேசும் அவர் சற்று ஆவேசமாகவே பேசினார்.

” இந்தியா பல ஆண்டுகள் பின் தங்கி உள்ளது,  ஐரோப்பிய நாடுகளில் இரவு நேரங்களில் கூட பெண்கள் தைரியமாக நடமாட முடியும். இந்தியாவில் அந்த நிலை இல்லை.


இந்தியாவில் பெண்ணடிமைத்தனம் நிலவ பெண்களும் காரணம். அம்மாக்கள் தங்கள் பையன்களை சரியாக வளர்ப்பதில்லை. வீட்டு வேலைகள் செய்ய பழ்க்குவதில்லை
வீட்டில் பையன்கள் காஃபியை சிந்தி விட்டால், சகோதரிகளோ, அம்மாவோதான் க்ளீன் செய்ய வேண்டி இருக்கிறது.
என் வீட்டில், நான் தான் பாத்திரங்களை கழுவுகிறேன். மனைவிக்கு உதவுகிறேன். 


மனைவியிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ நீங்கள் அவர்களுக்கு அதை செய்யுங்கள்.. பெரியார் , பாரதியாரை படியுங்கள்.. பெரியார் நிறைய சொல்லி இருக்கிறார். பெண்கள் தலை முடியை ஷார்ட்டாக வைத்து கொள்ள வேண்டும் என அன்றே சொன்னார். ஏராளமாக சொல்லி இருக்கிறார். கலாச்சாரம் என்பதெல்லாம் , நம் வசதிக்காக செய்து கொள்வதுதான் “ 


சாரு பேசியதை அனைவரும் பிரமிப்புடன் கேட்டார்கள்.. பெரியார் வாழ்ந்த காலத்தில் நாம் வாழவில்லை.. பாரதி வாழ்ந்த காலத்தில் வாழவில்லை .. ஆனால் சாரு வாழும் காலத்தில் வாழ்கிறோம். இது நமக்கு பெரிய பெருமை  

26 comments:

 1. உண்மைதான்.நல்பகிவு.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. ஆனால் சாரு வாழும் காலத்தில் வாழ்கிறோம். இது நமக்கு பெரிய பெருமை

  //

  :-)

  ReplyDelete
 3. ஆனால் சாரு வாழும் காலத்தில் வாழ்கிறோம். இது நமக்கு பெரிய பெருமை

  //

  :-)

  ReplyDelete
 4. நானும் அந்த நிகழ்ச்சியை சாருக்காக பார்த்தேன். ஏனென்றால், சாரு ஒரு நீயா நானா வில் கலந்துகொண்டு பெற்ற அனுபவத்தையடுத்து தான் எனிமேல் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்குபெறமாட்டேன் என எழுதியிருந்தார். ஆனால் திரும்பவும் எப்படி??? என்ற கேள்விக்கு விடைவரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

  ஆனால் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்க முடியவில்லை. காரணம் கோபிநாத்தின் வழமையான சேட்டைகளான
  1. அதி மேதாவித்தனம்
  2. பெண்களுக்கு முன்னிலையில் தனது விம்பத்தை உயர்த்த படும் பாடு.

  கலந்து கொண்ட ஆண்களின் கருத்தை என்னவென்று கேட்டுவிட்டு அதை உடனே பிழை என்று ஒரு தலையாக சொல்வது அவ்வளவு நாகரிகமாக தெரியவில்லை. நடுவர்கள் என்ற ரீதியில் கலந்து கொண்ட சிறப்பழைப்பாளர்கள், ஒருவரின் கருத்திற்கு தனது எதிர் கருத்தை வைக்கலாமே தவிர அவர்களின் கருத்து பிழை என்று அநாகரிகமாக சொல்வது அறிவிலித்தனம் என்றே பல பெரியவர்கள் மற்றும் கற்றறிந்தவர்கள் சொல்கிறார்கள் எழுதுகிறார்கள்.

  Dr.சாளினி அவர்கள் நாகரிகமாக நடந்து கொண்டதை பாராட்டியே ஆகவேண்டும். அவர் தனது கருத்துக்களை முன்வைத்தாரே தவிர யாருடைய கருத்தையும் பிழை என்று சொல்லவில்லை. இதன் மூலம் தான் ஒரு நாகரிகமான படிப்பாளி என அவர் நிரூபித்துவிட்டார். ஆனால் சாரு??????

  சாரு குறிப்பிட்டார்
  "இந்தியா பல ஆண்டுகள் பின் தங்கி உள்ளது, ஐரோப்பிய நாடுகளில் இரவு நேரங்களில் கூட பெண்கள் தைரியமாக நடமாட முடியும். இந்தியாவில் அந்த நிலை இல்லை"

  இதைகேட்டு சிரிப்பதைத்தவிர வேறுவழியில்லை. பாலியல் தொடர்பான குற்றச்செயல்கள் இரவில் அதிகம் நடைபெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளதை மனதில் வைத்தே சாரு அந்த கருத்தை சொல்லியிருப்பார் என்று இலகுவில் அனுமானிக்க முடிகிறது. ஐரோப்பிய நாடுகளில் பாலியல் தொடர்பான குற்றச்செயல்களை செய்வதற்கு தேவையே இல்லை. காரணம் அவர்களுக்கான பாலியல் தேவைகளை நினைத்த மாத்திரத்திலேயே பூர்த்தி செய்து கொள்ளக்கூடியவாறாக இருக்கிறது. ஆக அந்த பிரச்சனை ஐரோப்பிய நாடுகளில் இல்லை.

  ஆனால் வீதிக்களவுகள் இரவு நேரங்களில் மிக சாதாரணமாக இருக்கின்றன. களவென்றால் இந்தியா போன்ற நாடுகளில் பொருளிழப்போடே பெரும்பாலும் முடிவடைகின்றன. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் அது உடல் காயத்திலேயே பெரும்பாலும் முடிகிறது. வேலை முடித்து இரவு 12 மணிக்கு பின்னர் வருவதென்றால் ஆண்களும் பலருடன் சேர்ந்து தான் வருவார்கள். 12 மணிக்கு பின்னர் ஐரோப்பிய நாடுகளின் வீதியில் நடந்தால் தெரியும் எத்தனை பெண்களை சந்திக்க முடியும் என்று. 100 ஆண்கள் சென்று கொண்டிருந்தார்கள் எனில் 1 பெண்ணைத்தான் காணமுடியும். நிலைமை இப்படியிருக்கையில் இவர்கள் ஏன் இப்படி ஐரோப்பிய நாடுகளின் இல்லாத பெருமைகளையெல்லாம் சொல்லித்திரிகிறார்கள் என்று தெரியவில்லை.

  சாரு தன்னை நோக்கியதான எதிர்மறை விமர்சனங்களுக்கு எப்போதுமே வலுச்சேர்த்துக்கொண்டேயிருக்கிறார்.

  நன்றி
  திலீ

  ReplyDelete
 5. ஏண்டா...உங்களுக்கெல்லாம் வெக்கமே இல்லையா?

  ReplyDelete
 6. ஆனால் வீதிக்களவுகள் இரவு நேரங்களில் மிக சாதாரணமாக இருக்கின்றன"

  நண்பரே.. பாலியல் வறட்சி , பால் ரீதியாக பெண்களுக்கு பாதிப்பு குறித்துதானே விவாதம்... பொருளாதார குற்றங்களை தனியாக விவாதிக்க வேண்டும்

  ReplyDelete
 7. ஆனால் சாரு வாழும் காலத்தில் வாழ்கிறோம். இது நமக்கு பெரிய பெருமை”

  கண்டிப்பாக

  ReplyDelete
 8. ங்களுக்கெல்லாம் வெக்கமே இல்லையா?”

  அறிவில் பின் தங்கிய சூழலில் வாழ வெட்கமாகத்தான் இருக்கிறது,, வேறு வழி இல்லையே .. விசா கிடைக்கும் வரை என்ன செய்வது

  ReplyDelete
 9. ne of good post friend”

  நன்றி

  ReplyDelete
 10. ” Same Charu, was blasting Gopinath & Neeya Naana for treating him badly and now ”

  எழுத்தாளன் தன் கருத்தை சொல்ல வேறு நல்ல மேடையை நீங்கள் அமைத்து தருவீர்களா ?

  ReplyDelete
 11. நானும் அந்நிகழ்ச்சியை கண் விழித்துப் பார்த்தேன். அது சாருக்காக அல்ல டாக்டர் சாலினிக்காக... சாலினியின் தெளிவான சிந்தனை, வெளிப்படுத்தும் பாங்கு, உடல்மொழி என்று அனைத்தும் சிறப்பாக இருந்தது. ஆனால் சாரு ஆவேசமாக பேசுவது போல் பேசுகிறார் ஆனால் அதில் தெளிவில்லை. இங்கும் அங்கும் தாவுகிறார். உடல்மொழி சகிக்கவில்லை. சாரு விறுவிறுப்பான நடையில் எழுதுபவர்தான் படிக்க தூண்டும் எழுத்துதான்.. ஆனால் அவரின் பேச்சு ... அய்யோ.. முடியலடா சாமி... வாகை

  ReplyDelete
 12. அப்புறம் கோபிநாத்தின் அதிமேதாவித்தனத்தை பற்றி சொல்லியே ஆக வேண்டும்... நிகழ்ச்சி தொகுப்பாளார் என்ற நிலையில் அவர் பேசுவதே இல்லை.... இதற்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் தான் அதிமேதாவியாக கேட்ட கேள்விக்கு டாக்டர் சாலினி அவர்களின் சூடான கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தினறியதைப் பாக்கனுமே...அவர் கோட்டுசூட்டு தான் போட்டு இருக்கிறார்.. ஆனால் ஆலமரமோ அரசமரமோ,ஒரு சொம்பு, இது மட்டும் தான் பாக்கி....வாகை

  ReplyDelete
 13. பிச்சைக்காரன் நீங்கள் பெரியாரைப் பற்றி இதுவரை அறிந்திருப்பது என்ன என்பதை இவ்வளவு வெளிப்படையாக எழுதியிருப்பது பாராட்டுக்குரியது...மற்றபடி பெரியார் ஒரு நாத்திகவாதி என்பதுடன் பெண்ணியவாதி என்பதை அனைவரும் அறிவர். சாரு போன்ற (ஆ)சாமிகளின் பின்னால் சுற்றும் நபர்களைத் தவிர....வாகை

  ReplyDelete
 14. அனானி பின்னூட்டங்கள் எல்லாம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் போடப் பட்டட்தா? # ட்வுட்டு!

  ReplyDelete
 15. நானும் நீயா நானா பார்த்தேன்.ஆனால் நீங்கள் சொல்வதைப்போல் சாரு பேசுவதை யாரும் அவ்வளவு ஆர்வமாக எல்லாம் பார்க்கவில்லை.அவர் கருத்து சிறுபிள்ளைத்தனமானது . பெரியார் வாழ்ந்த காலத்தில் நாம் வாழவில்லை.. பாரதி வாழ்ந்த காலத்தில் வாழவில்லை .. ஆனால் சாரு வாழும் காலத்தில் வாழ்கிறோம். இது நமக்கு பெரிய பெருமை என்பதெல்லாம் உங்களுக்கு ஓவராகத் தெரியவில்லையா ?

  ReplyDelete
 16. பெரியாரின் சீடர் சாருவை வரவேற்கிறேன்.

  சாரு பெரியாரின் வாரிசாமே? அப்படியா?

  ReplyDelete
 17. அடடா, யாருமே யோசிக்காத, சொல்லாத கருத்துக்களை சாரு சொல்வதையும், பிச்சைக்காரன் உணர்ச்சிவசப்பட்டு அதற்கு ஒரு பதிவு போடுவதையும் பார்த்து நானே ஒரு மாதிரி உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். சாரு வாழும் காலத்தில் நானுமா வாழ்கிறேன். இது நிச்சயம் சோட்டாணிக்கரை பகவதியின் அருள்தான் என்பதில் சந்தேகமே இல்லை.

  ReplyDelete
 18. dear friends,
  i agree with girls.. in that program.
  most of the guys do not put proper -ves of city girls.
  one important issue with city girls is:
  1. they look low on village guys and their relatives.
  then how can they marry a cit girl.
  this is a one of the best psycological way city girls do.
  uncountable crime.

  ReplyDelete
 19. சாரு வாழும் காலத்தில் வாழ்கிறோம். நமக்கு இது பெருமை

  ReplyDelete
 20. அந்த ஷோவில் சிறப்பித்தது DR ஷாலினி தான் சாரு அல்ல

  ReplyDelete
 21. ஏதோ இந்தியாவில் மட்டும் தான் பெண்கள் rape செய்யப்படுகிறார்கள் என்றும் ஆனால் ஏனைய வளர்ந்த மேலைத்தேய நாடுகளில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக சாரு புலம்பியிருந்தார்.
  அமெரிக்காவில் நடப்பது என்ன?
  According to the U.S. Department of Justice's National Crime Victimization Survey --there is an average of 207,754 victims (age 12 or older) of rape and sexual assault each year.

  There are 525,600 minutes in a non-leap year. That makes 31,536,000 seconds/year. So, 31,536,000 divided by 207,754 comes out to 1 sexual assault every 152 seconds, or about 1 every 2 minutes.

  இந்தியாவை விட பல மடங்கு அதிகம்

  ReplyDelete
 22. vitta charu nivedita ku kovil kattiruveenga pola iruke pa..antha show la apdi onnum avaru persa pesave ilaye?just a common point..net chat problet ku pathil sola EXCILE a use panirkaru,atha niyayam vera padithirukaru.ethukuda antha novela vanginenu agiruchu..idai idaiye french words and sexa opena pesuna ultimate writtera?important writter list la lam avara vaika mudiyatu.but anyway antha manusharu kul etho oru center of attraction iruku.(athuku tan sexa use panraro?)

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா