Friday, February 17, 2012

பழச்சாறை ருசிக்க தெரியாமல், சக்கையை தின்னும் மாமல்லம்- சாரு வாசகர் பதிலடி


 சாரு வாசகர்கள் பல விதம்..  சாரு சொல்வதை வேத வாக்காக  நினைத்து அப்படியே ஏற்பவர்களும் உண்டு... அவரை எதிர்த்து விவாதிப்பவர்களும் உண்டு,,,

 நண்பர் ப்ரியமுடன் துரோகி அறிவு பூர்வமாக விஷ்யங்களை அணுகுபவர்.. எக்சைல் விவாத அரங்கில் சில எதிர் கருத்துகளை துணிச்சலாக சாரு முன்பே கூறியவர்.. தன்னம்பிகையும் , ( அறிவு ) திமிரும் கலந்த அவர் பாட் லாங்குவேஜை மிக ரசித்தேன்..

மாமல்லன் உளறலுக்கு அவர் கொடுத்த பதிலடி உங்கள் பார்வைக்கு 

******************************************************************

பைத்தியத்தின் உச்ச நிலை - 
தீராக்காதலி புத்தகத்தை எழுதுவதற்கு குறிப்புகளை தேடுவதற்காகவே சின்மயா நகரிலிருந்து இந்திரா நகரிலிருக்கும் ரோஜா முத்தையா நூலகத்திற்கு சென்றேன் என்று சொன்னாரே தவிர லஷ்மிகாந்தனின் அந்தமான் சிறை வாழ்க்கையை மட்டும் தேட என்று சொல்லவில்லையே.. மேலும் லஷ்மிகாந்தன் பற்றின பேச்சே இங்கில்லையே. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சாருவின் வீட்டில் இணைய வசதி இருந்திருக்குமா. அப்படியே இருந்திருந்தாலும் அவர் எதிர்பார்க்கும் குறிப்புகள் கிடைத்திருக்குமா என்று சந்தேகம் தான். ஏன் இப்பொழுது கூட எம்.கே.டி பற்றின குறிப்புகள் இணையத்தில் முழுதாக கிடைக்கிறதா என்ன?..

 எம்.கே.டி  சிறையிலிருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.. அதன் பின்னர் அவரின் படங்களின் தொடர் தோல்விக்குப் பின் என்ன நேர்ந்தது,கிட்டப்பா – கே.பி.எஸ் காதல் கடிதங்கள், பி.யூ.சி யின் வரலாறு இவையெல்லாவற்றுக்கும் தான் சாருவின் தேடல் இருக்கிறது.. வெறும் கொலைக் குற்றம் பற்றின பிட்டு தகவலை மட்டும் கொடுத்துவிட்டு இதைச் சொல்ல ஏன் அவ்வளவு கஷ்டப்படவேண்டும் என்று சொல்வது பைத்தியத்தின் முக்தி நிலையோ என்று தான் எண்ண வைக்கிறது..

 இவர்களெல்லாம் நுனிப்புல்லை மட்டுமே மேய்ந்து மேய்ந்து அடிப்புல்லின் வாசனையோ ருசியையோ கடைசிவரை தெரியாமல் காய்ந்த சருகையே நக்கி நக்கிச் செல்லும் மாட்டோடு தான் ஒப்பிடவேண்டும்.. சாரு சொன்னதுக்காக ராண்டார் கையின் குறிப்புகளை சம்மந்தமே இல்லாமல் கோர்த்துவிடும் இந்த மாதிரியான ஆட்களை முட்டளென்று சொன்னால் முட்டாள்கள் கோபித்துக்கொள்வார்கள். லஷ்மிகாந்தன் மர்டர் கேஸ் என்று ஒரு சுட்டியை இணைய தேடலில் தட்டிவிட்டு கிடைந்த தகவலை ஒட்டு வேலை செய்வதில் என்ன ஒரு பெருமை இந்த மூடனுக்கு. ( இவர் சுட்டிக்காட்டிய பத்தியில் லஷ்மிகாந்தனின் வரலாறு தான் இருக்கிறது. யாராச்சும் நம் ரசிக சிங்கங்கள் அந்த மடையனுக்கு போய் சொல்லுங்களேன் . அட லூசு.. பேசற விஷயம் எம்.கே.டி பற்றியென்று..).நாளை வேரொருவர் எம்.கே.டி தன் கடைசி காலத்தில் சுகமாக வாழ்ந்தார் என்று சொன்னால் இவர் சாருவின் தீராக்காதலி புத்தகத்தை தன் குறிப்புக்கு பயன்படுத்த தயங்க மாட்டார்.. 

இவர்களெல்லாம் தெருவில் உலாவும் பைத்தியங்கள். இவர்கள் செய்யும் சேஷ்டைகளை நின்று வேடிக்கைப் பார்த்தால் வேட்டியைத் தூக்கி தன் கோவக்காய் லிங்கத்தைதான் காண்பிக்கும்.. அவமானம் அதற்கில்லை. மானம் காக்க வேண்டுமானால் காணாமல் கடந்து சென்றுவிடவேண்டும்.. யானை சிங்கத்திடம் மோதலாம்.. சுண்டெலியிடன் மோதக் கூடாது. சுண்டெலி சாகும் என்பது உறுதியென்றாலும் பெருமை யானைக்கில்லை.. யானையிடம் மோதிய சுண்டெலிக்குத்தான்.. எதற்கெடுத்தாலும் ரசிக மணிகளாம்.. போயா யோவ்.. உனக்கு வக்கிருந்தா ஜீரோ டிகிரி போன்றோ அல்லது காமரூப கதைகள் போன்றோ ஒரு பத்து பக்கம் எழுது.. உனக்கு ரசிகனா ஆயிடறேன். அதச் செய்ய வக்கில்லாம இவன் கோழி பிரியாணீ தானே சாப்பிட்டான்.இவன் எடுத்த வாந்தியில எப்படி ரெண்டே முக்கா முந்திரி வந்துச்சினு சொல்லிக்கிட்டு திரியவேண்டாம்.. 

4 comments:

 1. சரியான எதிர்வினை, துரோகியைக் கூட நேசிக்கலாம் போல ! அவ்வளவு அருமையான பதிலடி ! பகிர்ந்த பிச்சுவிற்க்கு நன்றிகள் !

  ReplyDelete
 2. After so much hype created by you people, I bought exile and read, Rs.250 total waste.

  You people can criticize everything in the world, but you can't tolerate anybody criticize you...there is no direct explanation to to any of the criticisms...strange!

  ReplyDelete
 3. நல்ல வேலை தேகம் மாதிரியோ exile மாதிரியோ எழுத சொல்லலை....தப்பிச்சோம்டா சாமி..............

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா