Tuesday, February 21, 2012

சில்லரை- சில்லறை,பத்திரிகை-பத்திரிக்கை ,கருப்பு-கறுப்பு -- எது சரி?

தமிழில் சில சொற்கள் பல விதமாக எழுதப்படுகின்றன. இதில் எது சரி என புரியாமல் போகிறது.

உலவு - உளவு   இது போன்ற சொற்களில் குழப்பம் இல்லை.. இரண்டும் வேறு வேறு என எளிதாக புரியும்.. ஆனால் சில சொற்களில்தான் குழப்பம்.. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்...

சில்லரை- சில்லறை-

அரை என்றால் பாதி... அறுத்தல் என்றால் பகுதி..

ஐம்பது ரூபாய்க்கு சில்லரை ( றை ) கேட்கிறோம் என்றால், ஐம்பது ரூபாயில் பாதியை கேட்பதில்லை.. ஐம்பது ரூபாயின் பகுதிகளான பத்து ரூபாய்களோ , ஐந்து ரூபாய்களோ கேட்கிறோம்.

எனவே சில + அரை = சில்லரை தவறு.. சில + அறை = சில்லறை சரியானது.


பத்திரிகை , பத்திரிக்கை 

இரண்டுமே சரியான சொற்கள்தான்.. ஆனால் அர்த்தம் வேறு..

பத்திரிக்கை என்றால் கல்யாணத்துக்கு வைப்பது... பத்திரிகை என்றால் மேகசின் , இதழ் ( உதாரணம் ; உயிர்மை ஒரு மஞ்சள் பத்திரிகை )


கருப்பு , கறுப்பு

இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான்,,

ஆனால் கருப்பு என்பது வண்ணத்தை குறிப்பது.. கருப்பு என்பது ஒரு செயலை குறிப்பது..

அவன் கருப்பு நிறம் என சொல்ல வேண்டும்.. அவன் வெயிலில் கறுத்து விட்டான் என சொல்லலாம்.

சிவப்பு , சிகப்பு

இரண்டுமே சரிதான் என்றாலும் மிக சரியானது , முதலில் தோன்றியது என்று பார்த்தால் சிவப்பு எனப்தே மிக சரியானது..

கன்னம் சிவந்தது என்று சொல்கிறோமா சிகந்தது என சொல்கிறோமா? சிவம் , செவ்வானம் என்று யோசித்தால் புரியும்..

ஆனால் காலப்போக்கில் சிகப்பும் ஏற்கப்பட்டு விட்டது...


அருகில், அருகாமையில்...

ஆமை என்றாலே எதிர்பதம்தான்.. செய்யாமை , அடங்காமை என பல உதாரணங்கள் உள்ளன... எனவே அருகாமை என்பது  near என்பதற்கு நிகரான தமிழ் வார்த்தை கிடையாது.. அருகில் என்பதே சரி...கண்றாவி, கண்ணராவி..

கண் + அராவி... கண்ணை உறுத்தும் மோசமானவை கண்ணராவி .. கண்றாவி தவறு9 comments:

 1. சூப்பர் தல... அடுத்து ஒரு வாசகர் விருப்பம்... அருந்துவது, பருகுவது, குடிப்பது இந்த சொற்களின் பொருள், வேற்றுமை, பயன்பாடு ஆகியவற்றை விளக்கி ஒரு பதிவு போடுங்கள்...

  ReplyDelete
 2. உங்களது பதிவுகளை வாசிக்கும்போதெல்லாம் எனக்கு திருவிளையாடல் வசனம் ஒன்று ஞாபகத்திற்கு வரும்.

  பாலையா கேட்பார்: "நாளைக்கு என்னோடு போட்டியிட்டு பாடப்போவது யார் என்று தெரியுமா?"

  ஒரு பக்கவாத்தியம்: "ஏதோ புத்திரராங்க"

  இன்னொரு பக்கவாத்தியம் பலமாகச் சிரித்து விட்டு "தப்பாச் சொல்றானுங்க. ஏதோ பத்திரராம்" என்று அதுவும் தவறாகச் சொல்லும்.

  பின்குறிப்பு: முதலில் சாரு நிவேதிதாவை விமர்சித்து எழுதினீர்கள். பிறகு அவரை ஆதரித்து எழுதிய போதும் எதிர்வினைகளை அனுமதித்தீர்கள். பிறகு அவற்றையும் அனுமதிக்கவில்லை. உங்களை விமர்சிக்கும் பின்னூட்டங்களையாவது அனுமதிக்கிறீர்களா என்று பார்ப்போம்.

  ReplyDelete
 3. உதாரணம் ; உயிர்மை ஒரு மஞ்சள் பத்திரிகை//சாருவின் நாவல்களின் நிறம் என்ன பாஸ்?

  ReplyDelete
 4. மங்களம்....மங்கலம்....எது சரி?

  ReplyDelete
 5. மங்கலம்...மங்களம்...எது சரி?

  ReplyDelete
 6. மங்கலம்...மங்களம்...எது சரி?"

  இரண்டும் சரி.. அர்த்தங்கள் வேறு

  ReplyDelete
 7. அனைத்து நாளேடுகளிலும் "சில்லரை" என்ற வார்த்தையே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அதைப்பற்றி உங்கள் கருத்து?

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா

My photo

 நானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி