Saturday, February 4, 2012

ரஜினியை வைத்து போட்டி கூட்டமா? இந்த ஈனப்பிழைப்புக்கு செத்து தொலைக்கலாம் - சாரு ஆவேசம்.

பொறாமை காரணமாக ரஜினியை வைத்து போட்டி கூட்டம் நடத்தி இலக்கிய முன்னோடிகளை சிலர் அவமானப்படுத்துகின்றனர். இப்படி ஈனத்தனமான நடந்து கொள்வதை விட செத்து தொலைக்கலாம் என சாரு நிவேதிதா வேதனையுடன் பேசினார்..

எக்ஸைல் விவாத அரங்கம் இன்று சென்னையில் நடந்தது. வழக்கமான கூட்டம் போல இல்லாமல் , மிக வித்தியாசமாக  நடந்தது. எதிர் கருத்து இருந்தாலும் தாரளமாக சொல்லலாம் என பேச்சளவில் இல்லாமல் , உளப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டது..

லக்கி, அதிஷா, ராஜ ராஜேந்திரன்,பஞ்சாட்ச்ரம் , சிவம் சங்கர் , பார்த்திபன் நெடுஞ்செழியன் , துரோகி ( மனுஷ்யபுத்திரன் அல்ல,, துரோகி என்ற பெயர் கொண்ட இனிய நண்பர் )  உள்ளிட்ட பலர் பேசினர். 

பெரும்பாலும் பாராட்டினாலும், எதிர்கருத்தையும் சொன்னார்கள்.  நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது சாருதான்.பாரம்பரிய் ஆடையில் இருந்தார். 

அடுத்தவரை பேச அழைக்கும் முன் , முந்தைய பேச்சாளர் பேச்சுக்கு பதில் அளித்தது சிறப்பாக இருந்தது.

க்வாண்டம் மெக்கானிக்ஸை வைத்து குறு நாவல் எழுத ஆவலாக இருப்பதாக சொன்னார். தன் எழுத்து தன் ரத்தம் போன்றது. இதில் ரிப்பீட் ஆவதௌ தவிர்க்க முடியாது என்றார்.

தான் காலேஜ் டிராப் அவுட் என்று சொன்னதை சில குமாஸ்தா எழுத்தாளர்கள் கிண்டலடித்தார்கள்..  டிகிரி முடிக்காமல் எப்படி டெல்லி வேலை கிடைத்தது என கேள்வி எழுப்பினார்கள்.. முட்டாக்***   என்ற வசனம் நினைவுக்கு வருகிறது..

அந்த காலத்தில் இந்த வேலைக்கு டிகிரி தேவையில்லை என்பது கூட தெரியாமல் பேசுவதைத்தான் குமாஸ்தா மனோபாவம் என்கிறேன்..  என்று விக்கி லீக்ஸ் விமலுக்கு சூடு வைத்தார் 

பத்ரி பேசுகையில், சாரு கிழக்கில் எழுத போகிறார் என்ற செய்தி வந்ததும்,  ஒருவர் ( மனுஷ் ?? )  இதை தடுக்க  முயன்றார் என்ற பகீர் தகவலை சொன்னார். 

மனோஜ் பேசுகையில் நாவலின் சிற்ப்பை சொன்னார்.

சீனிவாசன் தனக்கே உரிய பாணியில் , பட்டையை கிளப்பினானார்..

இதை எல்லாம் வீடியோவில் பார்க்கலாம் .. விரைவில் அப்லோட் செய்யப்படும்.

இதில் ஞானி பேசியதுதான் ஹைலைட்.. காதலில் பொசசிவ்னெஸ் என்பார்களே.. அதைப்போன்ற காதல் கலந்த பொசசிவ்னெஸுடன் பேசினார்..

இந்த அளவுக்கு அவர்கள் இடையே நட்பு இருப்பது இன்றுதான் தெரிந்தது..

சாரு இண்டர்னெட்டில் எழுதக்கூடாது.. பழைய காலம் மாதிரி,  எழுத்தாளர்களுக்காக மட்டும் எழுத வேண்டும் என்றார்.


கடைசியில் பேசிய சாரு, வழக்கத்துக்கு மாறாக ஆவேசமாக பேசினார்..

டிசம்பர் 6ல் , காமராஜ் அரங்கில் எக்சைல் விழா நடந்தது,,, அங்கு கூடிய கூட்டம் என் மேல் அன்பால் வந்தால் கூட்டம்.

இதை பார்த்து சிலருக்கு பொறாமை..  தூங்க முடியாமல் தவித்தார்கள்.. போட்டி கூட்டம் நடத்த ஆசை..ஆனால்  கூட்டம் எப்படி சேர்ப்பது.. 

கடைசியில் ரஜினியை காட்டி கூட்டம் சேர்த்தார்கள்.. ரஜினி எளிய மனிதர். போலியாக நடிக்க தெரியாதவர்.. 

தைரியம் இருந்தால் அவரை முதலில் பேச சொல்லியிருக்கலாமே. அப்படி பேசினால், அவர் முடித்ததும் கூட்டம் கலைந்து விடும்..

கூடி இருந்தவர்கள் ரஜினியை பார்க்க வந்தவர்கள்.. என்ன நிகழ்ச்சி , என்ன பாராட்டு என அவர்களுக்கு தெரியாது..

இப்படி செய்து இலக்கியத்தை வளர்க்க முடியுமா.. இப்படி கேவலமாக வாழ வேண்டிய நிலை வந்தால், நானாக இருந்தால் செத்து இருப்பேன்.

தான் இயக்குனர் காலில் விழ தயார் என்கிறார் ஜெயமோகன்..

இவர்கள் இப்படி கீழ்த்தரமாக நடந்து கொள்வதற்காகவா கரிச்சான் குஞ்சு, சி சு செல்லப்பா, வெ சா போன்றோர் அன்று தியாகம் செய்தார்கள்.. இலக்கியம் வளர்த்த முன்னோடிகளை இவர்கள் இழிவு செய்கிறார்கள்..

இவ்வாறு ஆவேசமாக பேசினார்...


4 comments:

 1. சண்டைகளாக மாறிப்போகிற சர்சைகள் சரி,சர்ச்சைகளாய் இன்னும் நிலை கொண்டு இருக்கிற சர்ச்சைகளுக்கு என்ன சொல்லுகிறார்கள்/

  ReplyDelete
 2. நடிகர்களை வைத்து இலக்கியம் வளர்க்கிறார்கள்....# நம்ம மட்டும் தேகம் வெளியிட்டு விழாவிற்கு குஸ்புவிற்கு அழைப்பிதல் வைக்கவில்லையா?

  ReplyDelete
 3. குஸ்புவிற்கு அழைப்பிதல் வைக்கவில்லையா?

  அவர் பார்வையாளராக அழைக்கப்பட்டார்.. தலைமை தாங்க அல்ல

  ReplyDelete
 4. இதெல்லாம் சப்பக்கட்டு, குஷ்பு பார்வையாளரா அழைக்கப்பட்டிருந்தால் எதுக்கு அத உங்க சாரு அவருடைய வலைத்தளத்தில் குஷ்பு வரார்னு விளம்பரபடுத்தனும்?

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா